Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
ஊஞ்சல்
அத்தியாயம் 5
விடிய விடிய தூங்காமல் தூங்கி கொண்டிருந்த தேவியை பார்த்து கொண்டிருந்தனர் மூவரும். தன் கைகட்டை விரலை வாயில் வைத்தபடி உறங்கி கொண்டிருந்த தேவியை கண்களில் சிவப்போடு பார்த்து கொண்டிருந்தார் டாக்டர் ஹரிபிரசாத்.
"நான் பார்த்ததை என்னால கொஞ்சம் கூட நம்பமுடியலை" என்றார் டாக்டர் வியப்பு விலகாத குரலில்.
"நானும்தான் டாக்டர் .அவ எப்படி இந்தியில பேசுனான்னு எனக்கு புரியவேயில்லை" என்றான் மோகன்.
"நேத்து நைட் கூட டிவியிலஜீ இந்தி சேனல்தான் ஓடிட்டு இருந்துச்சு. அதிலிருந்து கூட சில இந்தி வார்த்தைகளை தேவி கத்துகிட்டு பேசியிருக்கலாம்!" என்றார் டாக்டர் .
"நீங்க சொல்றதே லாஜிக் படி சரின்னு வைச்சுகிட்டாலும் அவதேவின்னு தன்னோட பேரை இல்ல சொல்லியிருக்கனும்?ஏன் மா யான்னு வேறோரு பேரை சொன்னா?”
"இதுக்கு நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை.”
"ஓரு வேளை செத்துப் போன அந்த மாயா திரும்ப வந்துட்டாளோ?”
"சேச்சே! அப்படியெல்லாம் இருக்காது. வீணா கற்பனை பண்ண மன உளைச்சல் ஆகாதே?”
"டாக்டர்! என் பொண்ணுக்கு என்ன தான் ஆச்சு? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க" என்றாள் லீலா பதட்டத்துடன் .
" ஸ்லீப்பிங் இன்ஜெக்சன் போட்ருக்கேன். அவ எந்திரிக்கட்டும். பிறகு பேசலாம்”
" என் பொண்ணு பெட்லருந்து மிதந்ததை என்னால நம்பவே முடியலைடாக்டர் .ஒருவேளை காத்து கருப்பு எதாவது?”
"அவசரப்படாதே! பொறு !" என்றார் டாக்டர் .
வெளியே கதிரவன் கிழக்கே எட்டிப் பார்க்க துவங்கியிருந்தான்.
"டீ சாப்பிடலாமா?" என்றான் மோகன்.
டாக்டர் தலையசைத்தார்.
லீலா சமையலறைக்குள் நுழைந்தாள். சற்று நேரத்தில் தேவி எழுந்து உட்கார்ந்தாள்.
இரவு நடந்தவற்றின் அறிகுறி எதுவும் இல்லாமல் "குட் மார்னிங் டாட், டாக்டர் " என்றாள்.
அவளது மலர்ந்த முகத்தை பார்த்த மோகன் ஆண்டவா இந்த சின்னஞ் சிறு பிஞ்சுக்கா சோதனை? என்று மனதிற்குள் மருகினான்.
"ஆர் யூ பைன் பேபி ?" என்றார் டாக்டர் .
"பைன்" என்றாள் தேவி.
"நைட் நல்லா தூங்கினாயா?”
" அடிச்சு போட்ட மாதிரி தூங்கினேன். ஆமாம்’ அம்மா எங்கே?"
"டீ வைக்க போயிருக்கா! லீலா! பாப்பா எந்திரிச்சுட்டாள் .அவளுக்கும் சேர்த்து பால் கொண்டு வா”
“எந்திரிச்சுட்டாளா?” என்றபடி உள்ளே வந்த லீலா தேவியை கட்டி பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.
"ஏம்மா அழற?" என்றாள் தேவி குழப்பமாக,
"உஷ் “ என்று வாயில் விரல் வைத்து லீலாவை தடுத்த டாக்டர் "ஓன்னும் சொல்ல வேணாம். பால் கொண்டு வாம்மா!" என்றார்.
லீலா கொண்டு வந்த பாலை உதட்டின் மீது வெள்ளை மீசை படர குடித்த தேவி “அப்பா! நான் நேத்து மாதிரி அந்த ஊஞ்சல்ல கொஞ்ச நேரம் ஆடவா?" என்றாள்.
மோகனும் டாக்டரும் ஓருவரையொருவர் பார்த்து கொண்டனர்.மோகன் “அங்கெல்லாம் இனிமேல் நீ போகக் கூடாது" என்றான்.
"ஏன் போகக் கூடாது?" தேவியின் குரல் முற்றிலும் வேறாக கடுமையான தொனியில் ஒலித்தது.