Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஊஞ்சல்

ஊஞ்சல்​



அத்தியாயம் 5



விடிய விடிய தூங்காமல் தூங்கி கொண்டிருந்த தேவியை பார்த்து கொண்டிருந்தனர் மூவரும். தன் கைகட்டை விரலை வாயில் வைத்தபடி உறங்கி கொண்டிருந்த தேவியை கண்களில் சிவப்போடு பார்த்து கொண்டிருந்தார் டாக்டர் ஹரிபிரசாத்.



"நான் பார்த்ததை என்னால கொஞ்சம் கூட நம்பமுடியலை" என்றார் டாக்டர் வியப்பு விலகாத குரலில்.



"நானும்தான் டாக்டர் .அவ எப்படி இந்தியில பேசுனான்னு எனக்கு புரியவேயில்லை" என்றான் மோகன்.



"நேத்து நைட் கூட டிவியிலஜீ இந்தி சேனல்தான் ஓடிட்டு இருந்துச்சு. அதிலிருந்து கூட சில இந்தி வார்த்தைகளை தேவி கத்துகிட்டு பேசியிருக்கலாம்!" என்றார் டாக்டர் .



"நீங்க சொல்றதே லாஜிக் படி சரின்னு வைச்சுகிட்டாலும் அவதேவின்னு தன்னோட பேரை இல்ல சொல்லியிருக்கனும்?ஏன் மா யான்னு வேறோரு பேரை சொன்னா?”



"இதுக்கு நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை.”



"ஓரு வேளை செத்துப் போன அந்த மாயா திரும்ப வந்துட்டாளோ?”



"சேச்சே! அப்படியெல்லாம் இருக்காது. வீணா கற்பனை பண்ண மன உளைச்சல் ஆகாதே?”



"டாக்டர்! என் பொண்ணுக்கு என்ன தான் ஆச்சு? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க" என்றாள் லீலா பதட்டத்துடன் .



" ஸ்லீப்பிங் இன்ஜெக்சன் போட்ருக்கேன். அவ எந்திரிக்கட்டும். பிறகு பேசலாம்”



" என் பொண்ணு பெட்லருந்து மிதந்ததை என்னால நம்பவே முடியலைடாக்டர் .ஒருவேளை காத்து கருப்பு எதாவது?”



"அவசரப்படாதே! பொறு !" என்றார் டாக்டர் .



வெளியே கதிரவன் கிழக்கே எட்டிப் பார்க்க துவங்கியிருந்தான்.



"டீ சாப்பிடலாமா?" என்றான் மோகன்.



டாக்டர் தலையசைத்தார்.



லீலா சமையலறைக்குள் நுழைந்தாள். சற்று நேரத்தில் தேவி எழுந்து உட்கார்ந்தாள்.



இரவு நடந்தவற்றின் அறிகுறி எதுவும் இல்லாமல் "குட் மார்னிங் டாட், டாக்டர் " என்றாள்.



அவளது மலர்ந்த முகத்தை பார்த்த மோகன் ஆண்டவா இந்த சின்னஞ் சிறு பிஞ்சுக்கா சோதனை? என்று மனதிற்குள் மருகினான்.



"ஆர் யூ பைன் பேபி ?" என்றார் டாக்டர் .



"பைன்" என்றாள் தேவி.



"நைட் நல்லா தூங்கினாயா?”



" அடிச்சு போட்ட மாதிரி தூங்கினேன். ஆமாம்’ அம்மா எங்கே?"



"டீ வைக்க போயிருக்கா! லீலா! பாப்பா எந்திரிச்சுட்டாள் .அவளுக்கும் சேர்த்து பால் கொண்டு வா”



“எந்திரிச்சுட்டாளா?” என்றபடி உள்ளே வந்த லீலா தேவியை கட்டி பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.



"ஏம்மா அழற?" என்றாள் தேவி குழப்பமாக,



"உஷ் “ என்று வாயில் விரல் வைத்து லீலாவை தடுத்த டாக்டர் "ஓன்னும் சொல்ல வேணாம். பால் கொண்டு வாம்மா!" என்றார்.



லீலா கொண்டு வந்த பாலை உதட்டின் மீது வெள்ளை மீசை படர குடித்த தேவி “அப்பா! நான் நேத்து மாதிரி அந்த ஊஞ்சல்ல கொஞ்ச நேரம் ஆடவா?" என்றாள்.



மோகனும் டாக்டரும் ஓருவரையொருவர் பார்த்து கொண்டனர்.மோகன் “அங்கெல்லாம் இனிமேல் நீ போகக் கூடாது" என்றான்.



"ஏன் போகக் கூடாது?" தேவியின் குரல் முற்றிலும் வேறாக கடுமையான தொனியில் ஒலித்தது.
​
 
ஊஞ்சல்​


அத்தியாயம் 6




தேவியின் குரல் மாறிய திடீர் கேள்விக்கு மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.



“நீ இனிமேல் அந்த ஊஞ்சலில் ஆடக் கூடாது" என்றாள் லீலா கண்டிப்பான குரலில்.



"அந்த ஊஞ்சலில் இருந்துதான் எல்லா பிரச்சனையும் ஆரம்பமாகி இருக்கிறது" என்றான் மோகன் எரிச்சலான குரலில்.



" விடுப்பா! சின்ன குழந்தை தானே? அவள் மேல் ஏன் கோபத்தை காட்டுகிறாய்? பாரு தேவி. அந்த ஊஞ்சலுக்கு பக்கத்துல ஓரு பெரிய பாம்பை பார்த்தேன். நீ தனியா அங்கே போனால் அந்த பாம்பு உன்னை கடித்து விடும்" என்றார் டாக்டர் பயமுறுத்தும் தோரணையில் .



"சரி! நான் இனிமேல் அங்கே போகலை. ஆனா எனக்கு போரடிக்கு மே?" என்றாள் தேவி சிணுங்கலாக .



"போரடிச்சா டிவியில கார்டுன் சேனல் பாரு. அம்மாவோட செல்லுலகேம்ஸ் விளையாடு. விளையாட்டு சாமான் நிறைய அப்பாவாங்கி கொடுத்திருக்கேனே? அதையெல்லாம் வைச்சு விளையாடு." என்றான் மோகன்.



"சரிப்பா !" என்ற தேவியின் பார்வை ஊஞ்சலின் மீதே குவிந்திருந்தது.



"மோகன் நீ போய் ரெடியாகி ஆபிசுக்கு கிளம்பு. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன்" என்றார் டாக்டர்நெட்டி முறித்தபடி.



விளையாடுவதற்காக ஹாலை நோக்கி செல்லும் மகளை பார்த்து கொண்டிருந்த மோகன்" டாக்டர்! உண்மையை சொல்லுங்க! என் மகளுக்கு என்ன தான் நடக்குது? அவ எப்படி பெட்லருந்து அந்தரத்தில் தானாவே மிதந்தாள்? உங்களோட விஞ்ஞானம் இதைப்பத்தி ஏதாவது சொல்லுதா?" என்று ஏக காலத்தில் ஏராளமான கேள்விகளை கேட்டான் மோகன்.



"எனக்கு ஒன்னுமே புரியலை மோகன். ஓரு வேளை தேவி மிதந்ததை நான் பார்க்கலைன்னா நீ சொன்னதை சத்திய மா நான் நம்பியிருக்க வே மாட்டேன்" என்றார் டாக்டர் பரிதாபமாக .



"நீங்களும் உங்க கண்ணால தேவி மிதந்ததை பார்த்தீங்க. அப்ப நான் கனவு எதுவும் காண லைன்னு உறுதியா தெரியுது.”



இருவரின் பேச்சையும் கேட்டு கொண்டிருந்த லீலா " எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நான் பாஸ்டர் லாரன்சுக்கு போன் பண்றேன்" என்றாள்.



" போதும் நிறுத்து.அந்தாளு எப்படா மதம் மாத்தலாம்னு காத்துகிட்டு இருக்கான். எனக்கு பயந்து இந்த வீட்டுக்குள்ள அவன் வருவதில்லை. இப்ப கூப்பிட்டா இ தான்சாக்குன்னு உள்ள வந்து எல்லாரையும் மதம் மாத்தி விடுவான்.” என்றான் மோகன் கோபத்துடன் .



"உங்களுக்கு பொண்ணு முக்கியமா? சாமி முக்கியமா? என் பொண்ணுக்காக நான் சாத்தானை க் கூட கும்பிடுவேன்." என்றாள் கோபத்துடன் லீலா



"மி சினரி ஸ்கூல்ல சின்ன வயசிலிருந்து இவளும் இவ தம்பியும் படிச்சதோட விளைவு இதெல்லாம் " என்றான் மோகன் சலிப்பாக.



"இரண்டு பேரும் சண்டை போடுறதை நிறுத்துங்க.!அவங்கவங்க வேலையை பாருங்க.நைட் மீதியை பேசலாம்" என்றார் டாக்டர் சலிப்புடன்.



டாக்டர் வெளியேறி மாடிப்படி வழியாக மேலே ஏறிச் சென்றார்.



மோகன் குளித்து முடித்துவிட்டு சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.



அவன் ஆபிசில் தன் வேலையில் மூழ்கியிருந்த போது போன் அடித்தது.



எடுத்து "ஹாலோ " என்றான்.



மறுமுனையில் லீலா அழம் சத்தம் கேட்டது.



"என்னாச்சு லீலா?" என்றான் மோகன் பதட்டமாக.



"தேவியோடகையிலும், காலிலும் சிலுவை குறி சிகப்பு கலர்ல தானாவந்திருக்குங்க" என்றாள் லீலா.



"என்னம்மா சொல்ற?" என்றான் மோகன் அதிர்ச்சியுடன் .!
​
 
ஊஞ்சல்​



அத்தியாயம் 7



மோகன்தன் பைக்கை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு பதட்டத்தோடு வீட்டிற்குள் நுழைந்தான். பைக் சத்தத்தை கேட்டு வெளியே வந்த டாக்டர் ஹரிபிரசாத் "மோகன்.! கோபப்படாம உள்ள வந்து நடப்பதை பார்" என்று ஆதரவாக அவன் தோளில் கையை வைத்தார்.



அவரின் கையை தட்டிவிட்டு விட்டு வேகமாக ஹாலுக்குள் நுழைந்த மோகன் அழுதபடி நின்றிருந்த லீலாவை பார்த்து "என்னாச்சு லீலா? தேவி எங்கே?" என்றபடி படுக்கையறைக்குள் நுழைந்தான். அங்கே சுய நினைவு இன்றி படுத்திருந்த தேவியின் கையிலும் காலிலும் சிவப்பு நிற சிலுவைக்குறி இரத்தம் கன்றி காணப்பட்டது.



" லீலா என்ன? காலையில நல்லாத்தானே இருந்தாள்?" என்றான் மோகன் படபடப்பாக.



"நான் சமையல் வேலைல கவனமா இருந்துட்டேன். இவ வெளியே போகக்கூடாதுன்னு கதவை உள்புறமா பூட்டிட்டேன். இவ ஹால்ல தான் விளையாடி கொண்டிருந்தாள். நான் எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு வந்து பார்த்தப் போ மயக்கமா விழுந்து கிடந்தாள். இவளோட கையிலும் காலிலும் சிலுவை அடையாளம் இருந்துச்சு" என்றாள் அழுதபடி லீலா.



"இது சாத்தானின் சின்னம்" என்றபடி உள்ளே நுழைந்தார் பாஸ்டர் லாரன்ஸ் .அதுவரை அவர் ஹால் சோபாவில் உட்கார்ந்திருப்பதை மோகன் கவனிக்கவில்லை.



" இவரை யாரு உள்ளே விட்டது?" என்றான் மோகன் கோபத்துடன் .



"லீலா தான் எனக்கு போன் பண்ணி வரச் சொன்னாள். சின்ன குழந்தையோட உயிரோட விளையாடி என் மதத்தை பரப்புமளவிற்கு நான் கேவலமானவன் இல்லை. முதல்ல உன் மகளை அந்த சாத்தானிடமிருந்து காப்பாற்றும் வழியைப் பார்ப்போம்" என்றார் பாஸ்டர் லாரன்ஸ் .



"எவ்வளவு செலவானாலும் சரி.என்னோட குழந்தைய நான் காப்பாத்தி ருவேன். நீங்க முதல்ல வெளில போங்க" என்று கத்தினான் மோகன்.



"இது மருந்துகளாலோ மருத்துவத்தாலோ குணமாகிற விசயம் கிடையாது. அவளுடைய கையில் இருக்கும் சிலுவை குறியை நல்லா கவனிச்சு பாரு." என்றார் லாரன்ஸ் அமைதி இழக்காமல் .



மோகன் தேவியின் கைகளை விரித்து பார்த்தான். அதில் வழக்கமான. சிலுவை சின்னம் தலைகீழாக இருந்தது. அதை புரியாமல் பார்த்த மோகனிடம் "இது அந்தி கிறிஸ்தவனின் சின்னம். சாத்தானின் முத்திரை " என்றார் லாரன்ஸ் .



"எனக்கு புரியவில்லை." என்றான் மோகன்.



"நான் விளக்கமாக சொல்கிறேன். உலகின் இறுதி காலத்தில் ஒரு அவதாரம் தோன்றி உலக அழிவை துரிதப்படுத்தும் என்பது எல்லா மதத்திலும் இருக்கும் நம்பிக்கை. இந்துக்களுக்கு கல்கி அவதாரம். முஸ்லீம்களுக்கு தஜ்ஜால். எங்களுக்கு ஆண்டி கிறிஸ்து. சாத்தான். உன் பெண்ணை பிடித்திருப்பது அவ்வளவு பெரிய தீய சக்தியல்ல. சாதாரண ஒரு ஆவி தான். அதை சீக்கிரமாக வெளியே ஓட்டி விடலாம்.”



" என் பொண்ணை பிடித்திருப்பது யாரு?" என்றான் மோகன்.



" மாயா" என்றார் டாக்டர் .



"அவ கழுத்து இறுகி ஊஞ்சல்ல செத்த தா சொன்னீங்களே டாக்டர் "?



"இல்லை. அவ அப்படி ஒரு விபத்து லசாகலை. அவளை யாரோ விபத்து மாதிரி செட் பண்ணி கொலை பண்ணியிருக்காங்க “



" இதை யாரு சொன்னா?”



"தேவியோட உடம்புல இருக்கிற மாயா தான் “



"எனக்கு இந்தி தெரியும். நான் அவ கிட்ட பேசினேன். அப்பத்தான் இதை சொன்னாள். “



" என் பொண்ணுக்கு தமிழைத் தவிர வேற எந்த மொழியும் தெரியாதே?”



"அவ இந்தியில பேசுனது நிஜம் " என்றார் லாரன்ஸ் அழுத்தமாக.



"அவர் சொல்றது உண்மை தான் " என்றார் டாக்டர் .



"அவளை கொன்னது யாரு?" என்றான் மோகன்.



லாரன்சும் டாக்டரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

​
 
ஊஞ்சல்
​

அத்தியாயம் 8




"அந்த மாயாவை கொன்னது யாரு?" என்றான் மோகன்.



டாக்டரும் லாரன்சும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.தொண்டையை செருமிக் கொண்ட லாரன்ஸ்" பாருங்க மோகன். அவளை யார் சொன்னதுன்னு அவளுக்கு சொல்ல தெரியலை. ஒரு வேளை அடையாளம் தெரியாத நபராவோ பேர் தெரியாத அறிமுகம் இல்லாத ஆளாகவோ இருந்திருக்கலாம்." என்றார்.



"அப்படின்னா நாமமாயாவை கொலை செஞ்சிட்டாங்கன்னு போலீஸ்ல ரிப்போர்ட் கொடுப்போம். அவங்க கொலையாளியை கண்டுபிடிக்கட்டும் "



"அதை நாம எப்படி கொடுக்க முடியும்? நாம யாரும் மாயாவுக்கு ரத்த சம்மந்தமான உறவுகள் இல்லையே? மேலும் இதுக்கு ஆதாரமா எதை சொல்வது? மாயாவோட ஆவி இப்படி தேவி உடம்புல வந்து சொல்லுச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா?" என்றார் டாக்டர் .



"அப்படி நாம் ரிப்போர்ட் பண்ணினாலும் தேவிக்கு குணமாகுமா? நமக்கு அதுதானே முக்கியம்" என்றார் லாரன்ஸ் .



"இப்ப என்ன தான் செய்யலாம்னு சொல்றீங்க?" என்றான் மோகன் குழப்பமாக .



"நடக்கிற எந்த விசயத்துக்கும் என்னால் அறிவியல்பூர்வமான விளக்கம் எதையும் தர முடியலை. மாயாவுக்கு முன்னாடி என்னோட மருத்துவம் தோத்துப் போச்சு. தேவி என்னோட பேத்தி மாதிரி. அவ பழையபடி நல்லாகனும். அதுக்கு எதை வேணாமுயற்சி செய்து பார்க்கலாம்” என்றார் டாக்டர் .



"நானும் கிட்டத்தட்ட எத்தை தின்றால் பித்தம் தெளியும் கிற நிலைமை லதான் இருக்கேன். எனக்கு எல்லா கடவுளும் ஓன்னு தான். எனக்கு என் மகள் வேணும்" என்றான் மோகன்.



"என்னை நம்புங்க மோகன். உங்களையோ உங்க குடும்பத்தையோ மதம் மாத்தற எந்த எண்ணமும் எனக்கில்லை. ஓரு சின்ன குழந்தையை காப்பாத்த என்னால முடிஞ்ச சின்ன உதவியசெய்யப் போறேன். அவ்வளவுதான். நீங்க வீணா வேற எதையும் நினைச்சு பயப்படாதீங்க" என்றார் லாரன்ஸ் .



" நீங்க என்ன பண்ண போறீங்க?”



"நான் இதைப் Uத்தி என்னோட சுப்பீரியர் கிட்ட கலந்து பேசணும். கலந்து பேசிட்டு அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வோம்" என்றார் லாரன்ஸ் .



" நீங்க பேய் இருக்குன்னு நம்புறீங்களா?" என்றான் மோகன் லாரன்ஸை பார்த்து.



" கடவுளை நம்ப வைக்க அதற்கு எதிராக ஒரு பயமுறுத்தல் தேவைப்படுது. இல்லைன்னா கடவுளை நம்ப எந்த காரணமும் இல்லையே? கடவுள் யாரிடமிருந்து மனிதனை காப்பாற்றுவார்.? எல்லா கீழ்மையும் கெட்ட எண்ணங்களும் மனிதனிடமிருந்து வருபவை கானே?”



"அப்ப இது எங்கிருந்து வந்தது?" என்றான் மோகன்.



"ஆசை நிறைவேறாத ஆத்மாக்கள் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சில சமயம் திரும்ப வருவதுண்டு" என்றார் லாரன்ஸ் .



"அந்த மாயாவுக்கு இப்ப என்ன தான் வேணும்?”



"சீக்கிரமாகவே அது தெரிய வரும் ! இப்போதைக்கு நான் கிளம்புகிறேன்" என்ற லாரன்ஸ் வாயிலை நோக்கி நடந்தார்.

அவரை வழியனுப்ப டாக்டர் பின்னாலேயே சென்றார்.



"எம் பொண்ணுக்கு என்ன தான் நடக்குது?" என்றாள் லீலா.



"எனக்கு ஒன்னும் புரிய லைம்மா" என்றான் மோகன்.



அன்று இரவு தேவியின் படுக்கையை சுற்றி மூவரும் அரைத் தூக்கத்தில் உட்கார்ந்திருந்தனர்.

மூவரும் கண் சொக்கி தூங்கி விழுந்து கொண்டிருந்த போது ஹாலில் இருந்த கடிகாரம் விண்டர்ஸ்பிரிங் சத்தத்தை எழுப்பியபடி இரவு 12 மணியானதை அறிவித்தது.



தேவி சட்டென்று கண் விழித்தாள். அவளது உடம்பு முறுக்கேறிமுகம் விகாரமானது.



அதை கவனித்த டாக்டர் "மோகன்" என்று அவனை உசுப்பினார்.மோகன் கண்களை கசக்கி கொண்டு நிமிர்ந்த போது தேவி படுக்கையிலிருந்து மிதக்கத் தொடங்கினாள்.



மூவரும் படுக்கையிலிருந்து அந்தரத்தில் மிதக்கும் தேவியை தி கிலோடு பார்த்தனர்.

​
 
ஊஞ்சல்
​

அத்தியாயம் 9




சக்ரவர்த்தி தூங்கி எழுந்து கண்களைத் திறந்த போது சூரியன் கிழக்கில் உதித்துக் கொண்டிருந்தான்.

டாக்டர் ஹரிபிரசாத் கடைசியாக கொடுத்த மருந்துகளும், மாத்திரைகளும் நன்றாகவே வேலை செய்கின்றன என்பதன் அறிகுறியாக இரண்டு நாட்களாக நன்றாக தூங்கி எழுந்து கொண்டிருந்தார். அதற்கு காரணம்ஸ்டிராய்டு அதிகமான மருந்துகள் என்று அவரின் மனதுக்கு தெரியும்.

தன்னிலை மறந்த அவரின் தூக்கம் தான் அவனிடமிருந்து அவரை காப்பாற்றுகிறது என்பதையும் அவர் அறிந்தே இருந்தார். இரண்டு நாட்களாக இருளின் நடுவே வந்து சலனமற்ற விழிகளால் அவரை பேசாமல் முறைக்கும் அவனை பாராமல் இருப்பதே அவருக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.



அவரின் பிரம்மாண்டமாளிகையின் சத்தமில்லாத தனிமை அவரை பயமுறுத்தியது. கட்டிலிலிருந்து எழுந்து கொண்டவர் மெல்ல படிகளில் இறங்கினார். சமையலறையில் குஞ்சப்பன் பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது.



அவனை கூப்பிடாமல் மெலிதாக இருமினார். சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் "நான் வரும் போது நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. நீங்க அப்படி தூங்கி நான் பார்த்ததேயில்லை. அதான் எழுப்பாமல் வந்துட்டேன். காபியா? டீயா ? என்ன வேணும்னு சொன்னீங்கன்னா கொண்டு வருவேன்" என்றான் பணிவுடன் .



"காபியே கொண்டு வா" என்றபடி ஹாலில் இருந்த சோபாவில் சாய்ந்தார் சக்ரவர்த்தி . இப்போதெல்லாம் அவருக்கு தனிமை தான் துணையாக இருக்கிறது.



ஹால் மத்தியில் மரகதத்தின் போட்டோ மாலையுடன் அவரைப் பார்த்து சிரித்தது.



அவர் ஒரு காலத்தில் விரட்டி விரட்டி காதலித்த அழகுப் பெட்டகம். என்னென்னவோ செய்து அவளை திருமணமும் செய்து கொண்டார். அவரின் வாழ்க்கையில் சந்தோஷமான நாட்கள் என்பது அவளுடன் இருந்த நாட்கள் மட்டுமே.



எல்லாம் போச்சு என்று பெருமூச்சு விட்டு கொண்டார். அதற்கு காரணமும் அவன் தான். "எதற்காக இதை செய்கிறாயோ அதை அடையும் போது எல்லாத்தையும் இழந்திருப்பாய்." என்று அவன் சாகும் போது சொன்னது அவருக்கு நினைவு வந்தது.



மச்சநாக்குக் காரன். அவன் சொன்னது மாதிரியே நடந்து விட்டது. வயிற்றில் குழந்தையோடு செக்கப்புக்கு மரகதத்தை சக்ரவர்த்தி தான் காரில் அழைத்து சென்றார். திரும்ப வரும் போது நடந்த விபத்தில் மரகதமும் வாரிசும் இறந்து போய் விட அதிர்ஷ்டவசமாக சக்ரவர்த்தி மட்டும் பிழைத்துக் கொண்டார். அதோடு வாழ்வின் மீதான எல்லா பிடிப்புகளும் அவரிடமிருந்து விடைபெற்று விட்டன. அவன் சொன்னது தான் உண்மையானது.



அவரிடம் சொத்து, பணம் எல்லாம் இருந்தும் தனிமையாக அனாதை போல் உணர்ந்து கொண்டிருந்தார்.வயது 38 ஐ நெருங்கி கொண்டிருந்தாலும் பார்க்க 50 வயது போல் தெரிந்தார். முடி யெல்லாம் வெண்ணிறமாகி சீக்கிரமாகவே முதுமையின் வசம் போயிருந்தார். அவருக்கு சில சமயம் ஆச்சரியமாக இருக்கும். தன் கனவில் எப்போதும் ஏன் மரகதம் வருவதில்லை?நேசமும் பாசமும் கொண்டவளாயிற்றே? அவள் ஏன் ஓரு முறை கூட கனவில் வருவதில்லை? தன் மீது கோபமும் குரோதமும் வஞ்சமும் கொண்ட அவன் தினமும் கனவிலும் நேரிலும் வருகிறான். இது என்ன வினோதம் ? என்று அவர் நினைத்தபடி குஞ்சப்பன் எகாடுத்த காபியை குடித்து கொண்டிருந்தார்.



வாசலில் கூர்க்கா யாரோடோ மல்லுகட்டும் ஓசையை கவனித்தவர்" குஞ்சப்பா ! என்ன சத்தம் அங்கே ?" என்றார்.



"பாக் கிறேனுங்க" என்ற குஞ்சப்பன் வாசலுக்கு போய் விசாரித்து விட்டு திரும்பி வந்தான்.



“உங்களை பாக்க மகேந்திரனோட சம்சாரம் வந்திருக்கு. வரச் சொல்ல வாங்க" என்றான்.



சக்ரவர்த்தியின் முதுகெலும்பில் ஒரு பூரான் ஊறத் தொடங்கியது​
 

New Threads

Top Bottom