Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed தீயாய் சுடும் என் நிலவு!

தீயாய் சுடும் என் நிலவு 10:

"இ..ல்..லை.. நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு சரியா புரியலை?" என்றாள் மிருதி அதிர்ந்த முகத்துடன்.

அவளை ஆச்சர்யமாய் பார்த்த டாக்டர் அமுதனிடம் திரும்பி,

"என்ன சார்? உங்க மனைவிக்கு அவங்க கற்பமா இருக்க விஷயம் தெரியாதா?" என்றார்.

மேலும் அதிர்ச்சியாய் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,

"மேடம்! இவர் என்னோட கணவர் இல்ல. இவங்க ரெண்டு பேரும் என்னோட ப்ரெண்ட்ஸ்" என்றாள் மிருதி தான் இருக்கும் நிலையை நினைத்து மிகவும் நொந்து போய்.

"அப்போ உங்க கணவர் எங்க?" என்றார் மருத்துவர்.

மிருதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, "தி" என்றான் அமுதன்.

அவனை ஒரு முறை நோக்கி மெல்ல சிரித்தவள்.

"அவர் ஊர்ல இருக்கார்." என்றாள் மிருதி.

"இதுக்கு முன்னாடி ஸ்கேன் எடுத்துருக்கிங்களா?" என்றார் மருத்துவர்.

"இல்ல ஆக்சுவலா எனக்கு லாஸ்ட் மந்த் அபார்ஷன் ஆகிடுச்சு" என்றாள் மிருதி.

மருத்துவர் ஒன்றும் புரியாமல் அவளை பார்க்க, "கொஞ்சம் தெளிவா சொல்றிங்களா?" என்றார் டாக்டர்.

மிருதி எதுவும் பேசாமல் கடந்த காலத்திற்கு செல்ல விரும்பாமல் தவிக்க.

அமுதன் ஸ்ரீஷாவை விழிகளால் வெளியே செல்லுபடி கூறினான்.

"தி. நீ பேசிட்டு கூப்பிடு. நாங்க வெளிய வெய்ட் பண்றோம்" என்று இருவரும் வெளியேறினர்.

"இங்க பாருங்க நீங்க என்ன நடந்ததுன்னு தெளிவா சொன்னா தான் நான் எதுவும் சொல்லமுடியும்" என்றார் டாக்டர்.

"அதுவந்து டாக்டர்." என்று ஆரம்பித்தவள் தான் கருவுற்றிருபத்தை மருத்துவமனை சென்று உறுதி செய்ததையும் பின் ஒரு விபத்தில் அடிபட்டு கரு கலைந்துவிட்டதையும் கூறினாள்.

"சோ, நீங்க கண்சிவா இருக்கிங்கன்னு தெரிஞ்சவுடனே அபார்ஷன் ஆகிட்டதுனால ஸ்கேன் எடுக்காம விட்டுட்டீங்க. என்ன நடந்துருக்கும்னா உங்களுக்கு இரட்டை குழந்தைகள் கரு தரிச்சிருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. அடி பட்டதுல ஒரு கரு மட்டும் கலைஞ்சிருக்கும். இன்னொரு கரு தான் இப்போ வளர்ந்திட்டு இருக்கு. எதுக்கும் நாம ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துடலாம். ஆனா, அபார்ஷன் ஆனப்ப உங்களுக்கு கொடுத்த மாத்திரைகளை நீங்க சாப்பிடலையா? ஏன்னா அதை சாப்பிட்டிருந்தா இந்த கருவும் கலைச்சிருக்குமே? " என்றார் மருத்துவர்.

"இல்ல டாக்டர். வெறும் விட்டமின் மாத்திரைகளை மட்டும் தான் போட்டேன் " என்றாள் மிருதி மிகவும் மெதுவான குரலில்.

என்ன சொல்வது? எப்படி உணர்வது? என்று தெரியாமல் திகைத்து நின்றிருந்தாள்.

வெளியே வந்த மிருதியை இருவரும் பார்க்க, "அமுதன். ஸ்கேன் எடுக்க சொல்லிருக்காங்க. ஆனா இன்னொரு நாள் எடுத்துக்கலாம். நாம வீட்டுக்கு போகலாம். எனக்கு டையர்டா இருக்கு." என்றாள் மிருதி.

அமுதன் மிருதியை ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்தவன். "சரி தி. நாம போகலாம்" என்று அனைவரும் வீடு திரும்பினர்.

வீட்டினுள் நுழைந்தவுடன் மிருதி இருவரையும் பார்த்து "நான் உங்ககிட்ட பேசணும்." என்றாள்.

"என்ன சொல்லு தி?" என்றான் அமுதன்.

"உக்காருங்க" என்றவள் தானும் அமர்ந்தாள்.

"அமுதன். என்னை பத்தி என்ன நடந்ததுன்னு இதுவரைக்கும் சொல்லவே இல்ல. நீங்களும் கேட்கலை. சொல்ல கூடாதுன்னுலாம் இல்ல." என்றாள் நிறுத்தி.

"நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே தி. உனக்கு சொல்லணும்னு தோணும் போது சொல்லு. எங்களுக்கு நீ நல்லா இருந்தா போதும்" என்றான் அமுதன்.

"இல்ல அமு. இன்னைக்கு என்னை பேச விடு. இவ்ளோ நாளா என் மனசை போட்டு அழுத்திக்கிட்டு இருக்க விஷயத்தை இறக்கி வைச்சா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்." என்றவள் வழிந்த விழிநீரை துடைத்து மீண்டும் தொடர்ந்தாள்.

"என் வாழ்க்கைல நான் எதிர்பார்க்காத விஷயங்கல்லாம் நடந்தது என் கல்யாணத்துக்கு பிறகு தான்." என்று திருமணத்திற்கு பிறகு நடந்த அணைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள்.

மனதில் இருந்த பாரம் இறக்க அழுதும் தீர்த்தாள்.

இருவரும் மிருதியின் இருபுறமும் அமர்ந்து எதுவும் பேச முடியாமல் அவர்களும் துக்கம் கொண்டனர்.

"தி" என்றான் அமுதன் மெதுவாய்.

"நான் யாருக்கும் எந்த கெடுதலும் நினைச்சதில்லையே அமுதா, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்?" என்றாள் மிருதி.

"அக்கா அழாதிங்க. எல்லாம் சரியாகிடும்" என்றாள் ஸ்ரீ.

"இல்ல ஸ்ரீ. எதுவும் சரியாகாது" என்றாள் மிருதி.

"எந்த பெண்ணும் வர போற புருஷன் தன்னை அன்பா பார்த்துக்கனும் ஆதரவா இருக்கணும் ரொம்ப நேசிக்கணும்னு தான் நினைப்பா. நானும் அதை எதிர் பார்த்தது தப்பா? இருந்தாலும் அவர் எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்னு அவரை விரும்ப ஆரம்பிச்சேன். அவர் எப்படி இருந்தாலும் அப்படியே ஏத்துக்க ஆரம்பிச்சேன். அவருக்காக என்னுடைய ஆசைகள் எல்லாத்தையும் எனக்குள்ள புதைச்சிக்கிட்டு வாழ ஆரம்பிச்சேன். ஆனா?" என்று முடிக்க முடியாமல் குலுங்கி அழ தொடங்கினாள்.

ஆதரவாய் அவளின் தலையை தடவ ஸ்ரீஷாவின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டவள் சிறிது நேரம் அமைதியாயிருந்தாள்.

"தி. நீ இப்போ என்ன முடிவெடுத்தாலும் நாங்க உனக்கு துணையா இருப்போம். நீ கவலைப்படாதே. அதுமட்டுமில்ல குழந்தை இருக்குன்னு தெரிஞ்சப்புறம் நீ அவரை பார்க்கணும் அவர்கிட்ட சொல்லணும் இல்ல அவரோட சேர்ந்து வாழனும்னாலும் நாங்க உனக்கு உதவுறோம் இப்போ நீ எடுக்குற முடிவு தான்." என்றான் அமுதன்.
 
தீயாய் சுடும் என் நிலவு 11:

அமுதா நீ என்ன நினைக்கிற? இப்போ எனக்குள்ள ஒரு உயிர் வளருது உண்மைதான். ஆனா இதோட இருந்த எதுவுமே அறியாத இன்னொரு உயிர் போயிருச்சே." என்றாள் கண்ணீர் சிந்தியபடி.

ஸ்ரீஷா "அக்கா நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் தான். ஆனா நாளைக்கு இந்த குழந்தை பிறந்தப்புறம், ஏன்மா எனக்கு மட்டும் அப்பா இல்லைனு கேட்டா என்னக்கா சொல்றது?" என்றாள் கண்கள் கசக்கியபடி.

"நீ சொல்றது உண்மை தான் ஸ்ரீ. என்னை அவர் விரும்பி இருந்து இப்படி நடந்திருத்தாலே தப்பு. ஆனா அவர் மனசுல நான் இல்லாம, வேற பொண்ணு இருக்க அதையும் வெளிப்படையா சொல்லாம என்னோட குடும்பம் நடத்திருக்காரு." என்றாள் மிருதி மெதுவாக.

"தி" என்றான் அமுதன் அவளின் துக்கம் தன்னையும் வாட்ட

"இல்ல. இன்னைக்கு நான் பேசிட்றேன். எந்த ஒரு பெண்ணும் வரப்போற புருஷன் தன்னை மிகவும் நேசிக்கணும்னு தான் ஆசைபடுவா. நானும் அப்படி தானே விரும்பினேன். அவர் என்கிட்ட ஆசையா நாலு வார்த்தை பேசணும் அன்பா நடந்துக்கணும்னு எவ்ளோ நாள் ஏங்கிருக்கேன். ஆனா அவருக்கு நான் ஒரு மனுஷியாவே தெரியலைன்னு அப்புறமா தான் தெரிஞ்சது." என்றாள் மிருதி.

"அக்கா வருத்தபடாதீங்க அக்கா. எல்லாம் சரியாகிடும்." என்றாள் ஸ்ரீஷா.

"அவர் வேற ஒரு பெண்ணை விரும்புறாருன்னு தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணம் நடந்திருக்காது. அவர் வேணா என்னை விரும்பாம இருந்திருக்கலாம். ஆனா, நான் அவரை உண்மையா நேசிச்சேன். அவர் இவ்ளோ நாள் செஞ்ச அட்டகாசத்தை எல்லாம் பொறுத்துக்கிட்டேன். அவர் என்ன கேட்டார் தெரியுமா? நான் வேற பெண்ணை விரும்புறேன்னு தெரிஞ்சப்புறமும் என்னை தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிருக்கியே உனக்கு வெட்க்கமா இல்லைன்னு கேட்டார். அந்த நிமிஷமே நான் செத்துட்டேன் அமுதா." என்று கதறினாள் மிருதி.

"இனி என் வாழ்க்கைல நானும் என் குழந்தையும் தான். அவ என்ன ஆசைபட்டாலும் அதை நிறைவேத்துறது தான். இனி அவர் எங்களுக்கு தேவை இல்ல.

நான் ஏற்கனவே உங்களுக்கு ரொம்ப தொந்தரவா இருக்கேன். இப்போ எனக்குள்ள இன்னொரு உயிரும் வளர்றதால சீக்கிரமா ஒரு நல்ல வேலைக்கு போகணும்." என்றாள் மிருதி.

"இப்போ உன் உடம்பு இருக்க கண்டிஷனுக்கு வேலை கொஞ்ச நாள் கழிச்சு போகலாம்." என்றான் அமுதன்.

"ஆமாக்கா! " என்றாள் ஸ்ரீ.

"இல்ல எனக்குன்னு ஒரு வேலை வேணும். அதுக்கு இப்போ முதல்ல ஏற்பாடு பண்ணனும்" என்றாள் மிருதி.

"தி. நீ சொன்னா கேக்க மாட்டியா? நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்குறோம்" என்றான் அமுதன் விடாபிடயாக.

"இல்ல அமுதா.." என்று அவள் முடிக்கும் முன் இடையில் புகுந்தாள் ஸ்ரீஷா.

"அக்கா நீங்க வந்தப்புறம் எனக்கு அக்கா தங்கை இல்லன்ற ஃபீலிங்க் இல்ல. இதே உங்க கூட பிறந்த தங்கச்சியா இருந்தா என் பேச்சை கேக்கமாட்டீங்களா?" என்றாள் ஸ்ரீஷா.

சிறிது நேரம் தயங்கிய மிருதி இறுதியில் ஒப்புக்கொண்டாள்.

"சரி இந்த ஒரு மாசம் உங்க ரெண்டு பேருக்காக வீட்ல இருக்கேன். ஆனா அடுத்த மாசம் என்னை தடுக்க கூடாது " என்றாள் மிருதி.

"சரி" என்று சிரித்தனர் அமுதனும் ஸ்ரீஷாவும்.

"ஆமா என்னை விடுங்க. நீங்க ரெண்டு பெரும் லவ் பண்ற விஷயத்தை எப்போ என்கிட்ட சொல்லலாம்னு இருக்கீங்க?" என்றாள் மிருதி ஒற்றை புருவம் உயர்த்தி.

சிரித்து கொண்டிருந்த இருவரின் முகமும் மறுநொடி திருவிழாவில் தொலைந்த குழந்தையை போல் முழித்தனர்.

அமுதனும் ஸ்ரீஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, வயிற்றை பிடித்துகொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் மிருதி.

"இப்போ எதுக்கு ரெண்டு பேரும் இந்த ரியாக்சன் தரிங்க?" என்றாள் மிருதி.

"இல்ல தி. சொல்ல கூடாதுன்னு எல்லாம் இல்ல..." என்று இழுத்தான் அமுதன்.

"ஹூம்.." என்று அவளும் ராகமாய் இழுத்து அமுதனை பார்க்க.

"ஆமாக்கா... நீங்களே ஏற்கனவே மனசு சரி இல்லாம இருக்கீங்க. அதுல இதை பத்தி இப்போ எதுக்கு சொல்ல வேண்டாம்னு தான் விட்டுட்டோம்." என்றாள் ஸ்ரீஷா.

"அப்படியா அமுதா? நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அது எனக்கும் சந்தோஷம் தானே? நானே இதை பத்தி உங்ககிட்ட கேக்கணும்னு வைட் பண்ணிட்டு இருந்தீங்களோ?" என்று இருவரின் காதையும் பிடித்து செல்லமாய் திருகினாள்.

"ஆஹ்... வலிக்குது" இருவரும் ஒரு சேர கத்தினர்.

"எப்படியோ எனக்கு ரொம்ப சந்தோஷம் அமுதா. எப்படி இருக்க போறேன்னு தெரியாம பித்துபிடிச்சவ மாதிரி வந்தேன். எனக்கு ஒரு சுட்டி தங்கைய கொடுத்திருக்க. அதுவுமில்லாம, அந்த தங்கச்சிக்கு இப்போ நீயே மாப்பிள்ளைன்னு தெரிஞ்சப்புறம் ரொம்ப சந்தோஷம். உன்னை விட யாராலையும் அவளை நல்லா பார்த்துக்க முடியாது" என்று சிரித்தாள் மிருதி.

"ஆமா நீ எப்படி கண்டுபிடிச்ச?" என்றான் அமுதன்.

"ஹ்ம்ம" என்று அவன் தலையில் செல்லமாய் குட்டினாள்.

"இதுக்கு என்ன சி. பி. ஐயா கூப்பிடனும்? அதான் உன் நெத்திலயே எழுதி ஒட்டி இருக்கே" என்றாள் மிருதி.

"என்ன தி? இப்படி சொல்லிட்ட?" என்று அப்பாவியாய் கேட்டான் அமுதன்.
 
தீயாய் சுடும் என் நிலவு 12:

தீயாய் சுடும் என் நிலவு 12

"டேய்! என் புருஷன் என்னை விரும்பாம இருக்கலாம். ஆனா நான் அவனை ரொம்ப லவ் பண்னேன். இன்னைக்கும் விரும்புறேன். என் உயிர் இருக்கிறவரைக்கும் அவரை மட்டும் தான் விரும்புவேன். நீ ஷ்ரீயை பார்க்கின்ற பார்வைல இருக்கிற அன்பை நான் வந்த அன்னைக்கே பார்த்துட்டேன். நீங்களா சொல்றிங்களான்னு பார்த்தேன். ரெண்டு பேரும் சொல்வேனான்னு அடம் பிடிக்கிறீங்க?" என்றாள் மிருதி.

"சாரி தி" என்றான் அமுதன் வருத்தமாய்.

"சரி விடுங்க" என்றாள் மிருதி.

"ஹப்பா! இன்னைக்கு ரெண்டு ஹாப்பி நியூஸ். ஒண்ணு நம்ம வீட்டுக்கு புது தேவதை வார போறாங்க. இன்னொன்னு எங்க விஷயம் தெரிஞ்சு அக்கா என்ன நினைப்பாங்களோன்னு பயந்திட்டு இருந்தேன். இப்போ தெரிஞ்சிருச்சு. சோ, ரெண்டுத்துக்கும் சேர்த்து இன்னைக்கு ஸ்பெஷல் ட்ரீட். என்ன வேணும் சொல்லுங்க அக்கா. நான் செஞ்சு தரேன்." என்றாள் ஸ்ரீ.

"நீ சொன்னது கரெக்ட் தான். ஆனா இன்னைக்கு நமக்கு நான் தான் சமைப்பேன்." என்றாள் மிருதி.

"நீங்களா?" என்றாள் ஸ்ரீ வியப்பாய்.

"நானே தான். ஏன் நான் சமைக்கிறேன்னு சொன்னவுடனே பயமா இருக்கா? நான் நல்லா சமைப்பேன். என் சமையலுக்கு ஒரு ஹோட்டல் வைக்கலாம்னு எங்க அப்பா சொல்வார். உன் உயிருக்கு ஒண்ணும் ஆகாது பயப்படாதே" என்றாள் மிருதி.

"சரிக்கா" என்றாள் ஸ்ரீ.

குழந்தையின் வரவா என்று தெரியவில்லை அன்றில் இருந்து மிருதி கலகலப்பாய் இருக்க அப்படியே ஒரு மாதம் கடந்திருந்தது.

இருவரையும் சமாளித்து அவளின் படிப்பிற்கேற்ப ஒரு வேலையை தேடி கொண்டாள் மிருதி.

நல்ல தோழமைக்கு தான் சுமையை கொடுக்க விரும்பவில்லை.

பதினைந்து தினங்கள் புது வேலையில் தெம்பாய் கடந்திருக்க, அன்று வீட்டிற்கு சோர்வாய் வந்தாள் மிருதி.

அவளை கவனித்த ஸ்ரீ. "என்னக்கா ஏன் ஒரு மாதிரியாய் இருக்கீங்க?" என்று அருகில் வந்து அமர்ந்தாள்.

"ஒண்ணுமில்லை ஸ்ரீ. தலை வலிக்கிற மாதிரி இருக்கு. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்" என்று தன்னறைக்குள் சென்றுவிட்டாள்.

ஸ்ரீயும் எதுவும் கேட்காமல் இருந்துவிட அந்த அறை பக்கம் செல்கையில் மிருதியின் அழுகுரல் கேட்க ஸ்ரீ உடனே அமுதனுக்கு போன் செய்தாள். "என்ன ஸ்ரீ?" என்றான் அமுதன்.

"எங்க இருக்க? உடனே வீட்டுக்கு வா" என்றாள் ஸ்ரீ.

"நான் ரூமுக்கு போய்ட்டு இருக்கேன். என்னாச்சு? தி நல்லா இருக்காள்ல? இல்ல உனக்கு உடம்பு சரி இல்லையா?" என்றான் டென்ஷனாய் அமுதன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை பா. அக்கா வேலைலர்ந்து வந்ததிலிருந்து வெளிய வரல. அவங்க ரூம் பக்கம் போனப்ப அழற மாதிரி இருக்கு. நான் கேட்கிறதை விட நீ கேட்டா தான் சொல்வாங்க உடனே வா" என்றாள் ஸ்ரீ.

"சரி வரேன்" என்ற அமுதன் வீட்டிற்கு வந்தான்.

மிருதியின் அறைக்கு வெளியே நின்றவன்.

"தி! வெளியே வா." என்றான் அமுதன்.

மிருதி வெளியே வராததால் அமுதன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

கட்டிலில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் மிருதி. அவளின் அருகில் சென்றமர்ந்த அமுதனும் ஸ்ரீயும் "என்ன தி என்னாச்சு? உடம்புக்கு எதுவும் முடியலையா? ஹாஸ்பிடல்கு போலாமா?" என்றான் அமுதன்.

"இல்ல அமுதா. உடம்புக்கு ஒண்ணும் இல்ல. மனசு தான் சரி இல்ல." எனும்போழுதே அவளின் விழிகளில் கண்ணீர் வழிய.

"என்னாச்சு? வேலைக்கு போன இடத்துல ஏதாவது சொன்னாங்களா?" என்றான் அமுதன்.

"வேற ஏதாவதுன்னா பரவால்ல அமுதா. ஆனா நான் என் புருஷன்கூட இல்லைன்றதை தெரிஞ்ச சில பேர் அவங்க முகத்தை தெளிவா எனக்கு காட்ட முயற்சிக்கிறாங்க" என்றாள் மிருதி.

"என்ன சொல்ற தீ? யாரு என்ன பண்ணா?" என்றான் அமுதன் கோபமாய்.

"அது..வந்து.. அவர் என்கூட இல்லைனு என்னை அவங்க ஆசைக்கு இணங்க சொல்லி என்கிட்ட தவறா நடக்க முயற்சி பண்றாங்க" என்றாள் கண்கள் கலங்கி.

"யாரு அது? நான் நாளைக்கு வரேன்?" என்றான் அமுதன் கோபமாய்.

"இல்ல அமுதா. அதுக்கு அவசியம் இல்ல. எனக்கு அங்க வேலை செய்ய பிடிக்கலை. ஒரு பொண்ணு அவ கணவனை விட்டு பிரிஞ்சிட்டா கட்டாயம் அவமேல தான் தப்புன்னு இந்த சமுதாயதுல நிறைய பேர் நினைக்கிறாங்க. அதை தனக்கு சாதகமா பயன்படுதிக்க நிறைய பேர் முயற்சியும் செய்றாங்க. அது அவங்க அவங்களோட கெட்டபுத்தி. எனக்கு அவங்களோட போட்டி போடவோ இல்ல இப்படி இருக்காங்களேன்னு உக்காந்து அழவோ நேரம் இல்லை. என் பிரச்சனையே எனக்கு நிறைய இருக்கு. அதனால வேலைய விட்டுட்டேன் அமுதா. சாரி. கூடிய சீக்கிரத்துல வேற வேலை பார்த்துட்றேன்." என்றாள் மிருதி.

"இங்க பாரு மிருதி. நல்ல வேளை நீ வேலைய விட்டுட்ட, இல்லன்னா நாளைக்கு அவன் உயிருக்கு நான் உத்திரவாதம் இல்லை" என்றான் அமுதன் மிகவும் கோபமாய்.

"நீ கவலையே படாத அமுதா. அவன் மூக்கை உடைச்சிட்டேன்" என்று சிரித்தாள் மிருதி.

"அப்படியா? செம சூப்பர்" என்றான் அமுதன்.

"ஆனா இனி நீ வேலைக்கு போக வேண்டாம்" என்றான் அமுதன்.

"ஒருத்தன் அப்படி இருக்கான்னு எல்லோரையும் நாம குறை சொல்ல முடியாது அமுதா. நான் வேற நல்ல வேலைக்கு போறேன்" என்றாள் மிருதி.

"இல்ல தி. நாளைக்கு ஒரு வழி சொல்றேன். நீ ரெண்டு நாளைக்கு வீட்ல ரெஸ்ட் எடு." என்றான் அமுதன்.

அடுத்த தினங்களில் அமுதன் "தி! நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும்" என்றான் அமுதன்.

"என்ன சொல்லு அமுதா?" என்றாள் மிருதி.

"இல்ல நான் இந்த கேஃப் ஆரம்பிச்சு ரெண்டு வருசம் நல்ல ஸக்ஸஸ் புல்லா போகுது." ஏற்று நிறுத்தினான்.
 
தீயாய் சுடும் என் நிலவு 13:


"ரொம்ப சந்தோஷம் அமுதா. இன்னும் நீ பெருசா வளரனும்" என்றாள் மலர்ந்த முகத்துடன் மிருதி.

"என்னால கண்டிப்பா முடியும் தி. ஆனா உன்னோட உதவி வேணும் எனக்கு" என்றான் அமுதன் தயக்கமாய்.

"என்ன உதவி அமுதா? எதுக்கு இப்பத் தயங்குற?" என்றாள் மிருதி.

"இல்ல.. இந்த கேப் நல்லா போய்ட்ருக்கு. எல்லா கடனும் ஆறு மாசதுக்கு முன்னயே அடைச்சிட்டேன். இப்போ இன்னொரு கேப் நல்ல விலைக்கு வருது" என்றான் அமுதன்.

"வாவ் அமுதா! சூப்பர். சோ, அதுக்கு பணம் இருக்கா இல்லை இன்னும் நிறைய தேவைபடுதா? நிறைய தேவைபடுமே? என்ன பண்ண போற?" என்றாள் நெற்றி சுருக்கி கவலையாய்.

அவளை பார்த்து மென்மையாய் புன்னகைத்தவன்.

"நீ அதை பத்தி எல்லாம் கவலை படவேண்டாம் தி. உண்மை தான். பணம் ஓரளவு இருந்தது. ஓரளவு பிரட்டிட்டேன். இன்னும் கொஞ்சம் தேவைபடுது. பட் அதையும் நான் சரி பண்ணிடுவேன். ஆனா உன்னோட உதவியாய் நான் கேட்டது நான் புது கேப் திறக்க அலைஞ்சிட்டு இருக்கேன். ஸ்ரீயும் அவ வர்க் ல இருக்கா. சோ இப்போ கேப்பை பார்த்துக்க யாரும் இல்லை. உன்னால பார்த்துக்க முடியுமா?" என்றான் அமுதன் கெஞ்சலாய்.

அவளை முறைத்த மிருதி, "இதுக்கு ஏன்டா இவ்ளோ யோசிக்கிற?" என்றாள் மிருதி.

"ஹ்ம்... நீ இனி என் கேப்கு மேனேஜர் உனக்கு சம்பளம் 20000" என்றான் அமுதன்.

"ஏய்! திருட்டு பயலே! நான் வேற எங்கயும் வேலைக்கு போக கூடாதுன்னு நீங்க ரெண்டு பேரும் செய்ற வேலையா இது?" என்றாள் மிருதி.

ஸ்ரீயும் அமுதனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள.

"எனக்கு நீ இந்த நிலமைல வெளிய வேலைக்கு போறது பிடிக்கலை தி. அது உனக்கு சேஃப்டி இல்ல தி. பிளீஸ், எனக்கும் இப்போ ஆள் தேவை. அது நீயா இருந்தா நான் கவலை இல்லாம என் வேலைய பார்ப்பேன்." என்றான் அமுதன்.

"ஆமாக்கா! சரி சொல்லுங்க" என்றாள் ஸ்ரீ.

"சரி! ஆனா ஒரு கண்டிஷன் " என்றாள் மிருதி.

"என்ன?" என்றனர் இருவரும்.

உள்ளே சென்று ஒரு பெட்டியுடன் வந்தவள் தன் கையில் இருந்த பெட்டியை அமுதனிடம் கொடுத்தாள்.

"என்னதிது தி?" என்றான் அமுதன் வாங்காமல். "இதை நீ வாங்கிக்கிட்டா தான் நான் வருவேன்" என்றாள் மிருதி.

வாங்கி திறந்து பார்த்தவன். "இல்ல தி. என்னால ஏற்பாடு பண்ண முடியும். உன் நகையெல்லாம் இருக்கட்டும். நான் கேக்காமயே நீ கொடுத்த பார்த்தியா அது போதும் எனக்கு." என்றான் அமுதன் சிரித்து.

"அமுதா! என்கிட்ட இந்த நகையெல்லாம் சும்மா தான் இருக்கு. உனக்கு இப்போ காசு தேவைப்படுது. இதை யுஸ் பண்ணிக்க" என்றாள் மிருதி.

"இல்ல தி" என்றான் அமுதன்.

"அப்போ என்னால வர முடியாது" என்றாள் கோபமாய் நெஞ்சிற்கு குறுக்கே கைகளை கட்டி கொண்டு.

சிறு குழந்தை போல் சண்டைக்கு நிற்கும் அவளை பார்த்து இருவரும் சிரிக்க, அமுதன் ஸ்ரீயை விழிகளால் கேட்க, 'வாங்கிக்க' என்றாள் ஸ்ரீ விழிகளை மூடி ஆதரவாய்.

"சரி தி. நான் எடுத்துக்குறேன்" என்றான் அமுதன்.

"அப்போ நானும் வரேன்" என்று அன்றில் இருந்து அமுதனின் கேப்பை கவனிக்க ஆரம்பித்தாள் மிருதி.

மாதங்கள் உருண்டோட, கேபும் நன்றாக ஓடியது.

மிருதிக்கு இது ஒன்பதாவது மாதம். அவளின் விழியில் ஒரு வித ஏக்கம் இருப்பதை கண்டு இருவரும் என்ன என்று கேட்க, ஒன்றுமில்லை என்றாள் மிருதி.

"ஸ்ரீ! அவளுக்கு வளைகாப்பு பண்ணலாமா?" என்றான் அமுதன்.

"நானும் அதையே தான் நினைச்சேன் அமுதன். அவங்களுக்கு அவங்க அம்மா அப்பா ஏக்கமும் இருக்கு. நாம அவங்களை வர சொல்லலாம்" என்றாள் ஸ்ரீஷா.

அடுத்த ஒரு வாரத்தில் இரண்டு கேபின் ஊழியர்கள் ஸ்நேகிதர்கள் என்று அனைவரையும் வரவழைத்து வளைகாப்பு ஏற்பாடு செய்யபட்டது.

"எதுக்கு டா இதெல்லாம்?" என்றாள் மிருதி வார்த்தைகளில் வேண்டாம் என்று சொன்னாலும் விழிகளில் ஒரு ஒளி மின்னியது. இதை கண்டு இருவரும் சிரித்தனர்.

"உன்னை பார்க்க ஒரு சிலர் வந்துருக்காங்க" என்றான் அமுதன்.

"யாரு?" என்றாள் மிருதி.

"இவங்க தான்." என்று விலகி நிற்க அங்கே அவளின் பெற்றோர் கண்ணீருடன் நின்றிருந்தனர்.

அவர்களை கண்டவுடன் மனதில் ஒரு இன்பம் இழைந்தோட, முகத்தில் மட்டும் வெறுமை காட்டி, "அமுதா! இவங்க எதுக்கு வந்துருக்காங்க?" என்றாள் மிருதி.

"அம்மாடி! நீ எங்க இருக்கன்னு தெரியாம எவ்ளோ தவிச்சு போனோம்னு தெரியுமா? இவ்ளோ நாள் கழிச்சு எங்க பொண்ணு இருக்க இடம் தெரிஞ்சு எவ்ளோ சந்தோஷமா உன்னை பார்க்க வந்துருக்கோம். எங்களை பார்த்து இப்படி கேக்குறியேம்மா?" என்றார் அவளின் தந்தை.

"நீங்க உங்க பெண்ணை வாழ வைச்சிருந்தா அவ ஏன் இப்படி கேக்க போறா? நீங்க உங்க தங்கச்சியோட கண்ணீருக்கும் அவங்க கவரவத்தை காப்பத்துறதுக்கும் என்ன ஏதுன்னு விசாரிக்காம என் வாழக்கைய தாரை வார்த்து கொடுத்துட்டிங்க." என்றாள் மிருதி.

"அம்மாடி இப்படி உன் வாழ்க்கை ஆகும்னு எனக்கு தெரியாதுமா. என்னை மன்னிச்சிரும்மா" என்றார் அவளின் அப்பா.

அடக்கி வைத்திருந்த துக்கம் அனைத்தும் வெளியே கண்ணீராய் வெளியே வர உடைந்து அழுதாள் மிருதி.

"அம்மாடி அழாதடா. எல்லாம் முடிஞ்சிருச்சி. அப்பா இருக்கேன்டா உனக்கு" என்று அவளை அணைத்து கொள்ள. அன்றில் இருந்து அவளின் பெற்றோர் அவளை அவ்வபொழுது வந்து பார்த்து சென்றனர். தான் இங்கிருப்பது அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருக்கும் சொல்ல கூடாது என்ற மிருதியின் கண்டிப்பின் பேரில்.

அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றேடுத்தாள் மிருதி.

அவளின் காதிலிற்கு சாட்சியாய் அவளின் கணவனின் மறு உருவமாய் இருந்தாள் அவளின் மகள்.

அதன்பிறகு மிருதியின் பெற்றோர் ஆறு மாதங்கள் இங்கேயே தங்கி மிருதியை கவனித்து கொண்டனர். மிருதி தேரிய பின் வீட்டிற்கு சென்றனர்.

மிருதியை தன்னோடு வருமாறு எவ்ளோ வற்புறுத்தியும் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

அமுதன் எவ்வளவு தடுத்தும் குழந்தையுடன் கேப்பிற்கு வந்தாள் மிருதி.

மிருதியின் ஆலோசனைபடி புது கேஃபை அவள் பொறுப்பெடுத்துகொண்டு அதில் சிறு மாற்றங்களை கொண்டு வந்து ரெஸ்டாரன்ட்டாய் மாற்றினாள்.

தன் கைவண்ணங்களை தினமும் ஒரு புதிய சமையல் என்று காட்ட, அவளின் உணவின் ருசிக்கு அடிமையான கஸ்டமர்கள் அதிகரிக்க நல்ல பெயரை எட்டியது ரெஸ்டாரண்ட்.

அமுதனுக்கு மிருதியின் திறமையை பார்த்து பெருமையாக இருந்தது.

"சத்தியமா சொல்றேன் தி. நான் ஓபன் பண்ணிருந்தா கண்டிப்பா கேப்பா தான் இருந்திருக்கும். ஆனா உன்கிட்ட பொறுப்பை கொடுத்தப்புறம் எவ்ளோ மாற்றங்கள். இவ்ளோ மாற்றங்கள் வரும்னு நான் எதிர்பார்கலை தி." என்றான் அமுதன்.
 

New Threads

Top Bottom