Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed தீயாய் சுடும் என் நிலவு!

தீயாய் சுடும் என் நிலவு 14:

14.

“அப்படியெல்லாம் எதுவுமே இல்லை அமுதா. என்னை முழுசா நம்பி நீ பொறுப்பை கொடுத்த. நான் நம்மளோட தொழில்னு முழுவீச்சா செஞ்சு முடிச்சேன். அவ்ளோ தான்.” என்று சிரித்தாள் மிருதி.

“ஹ்ம்.. நீ ஈஸியா சொல்லிட்ட தி. ஆனா, உன் கை சமையலுக்கு இங்க எவ்ளோ பேர்அடிமைன்னு உனக்கு தெரியாது. எவ்ளோ ஃபேர் சாப்பிட்டு உன்னை பாராட்டுறாங்க தெரியுமா?” என்றான் அமுதன்.

“அப்டியா சொல்ற? எதுவும் நம்புற மாதிரியே இல்லையே?” என்றாள் மிருதி.

“அதுமட்டுமா? அதோட பிராஞ்சு தான் இது. அப்போ இங்கயும் நல்லா இருக்கும்னு எவ்ளோ கஸ்டமர்ஸ் வராங்க தெரியுமா?” என்றான் அமுதன்.

“சரி சரி சும்மா புகழறதை விட்டுட்டு வேற வேலையை பாரு போ” என்று விரட்டினாள் மிருதி.

“ஹிம்.. தி.. இன்னொரு ஹாப்பியான விஷயம். இங்க பக்கத்துலையே இன்னொரு ஷாப் நல்ல விலைக்கு வருது. வாங்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். நீ என்ன சொல்ற?” என்றான் அமுதன்.

“சூப்பர் நல்ல விஷயம் அமுதா. கங்கராட்ஸ்.” என்றாள் மிருதி மனமகிழ்வோடு.

இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தவன்.

“உன்கிட்ட முக்கியமா பேசணும் தி.” என்றான் அமுதன் ரெஸ்டாரன்ட்டில் புது உணவை எப்படி தயாரிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்தவளிடம்.

”ஹிம்.. இதோ முடிஞ்சது அமுதா. வரேன்” என்று வெளியில் வந்தவள்.

“என்ன சொல்லுப்பா?” என்றாள் கைகளை புடவையில் துடைத்தபடி.

“புதுசா ஷாப் சொன்னேன்ல.. அதை பத்தி தான்.” என்று நிறுத்தினான் அமுதன்.

“ஏன் ஏதாவது பிரச்சனையா?” என்றாள் மிருதி.

“ஆமாம் சின்ன பிரச்சனை தான். ஆனா அதுக்கு ஒரு முடிவு பண்ணிருக்கேன்.” என்றான் அமுதன்.

“என்ன முடிவு?” என்றாள்மிருதி புருவம் சுருக்கி.

“இல்ல.. ஏற்கனவே இருக்க ரெண்டும் ஷாப்பும் என் பேர்ல இருக்கு. நான் அஞ்சு ஆறு வருஷமா உழைக்கிறேன். ஆனா இந்த மூணு வருஷமும் நீ எடுத்துக்கிட்ட சிரத்தைக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அதுக்கு உனக்கு நான் தர வெகுமதி. இந்த மூணாவது ஷாப் உன் பேர்ல தான் ரெஜிஸ்டர் பண்ண போறோம்” என்றான் மெதுவாய் மிருதியை பார்த்து.

“என்ன விலையாட்றியா அமுதா?” என்றாள் மிருதி.

“நான் சொல்றத முதல்ல முழுசா கேள்” என்றான் அமுதன்.

“அமுதா! நீ என்ன வேணா சொல்லு. இதுக்கு என்னால சம்மதிக்க முடியாது. நீ கஷ்ட்டபட்டு உழைச்சதை என் பேர்ல எதுக்கு வாங்கணும். முடியாது” என்றாள் மிருதி முடிவாக.

“இல்ல... நான் சொல்றதை இப்போ கேக்க போறியா இல்லையா?” என்றான் அமுதன் அதட்டலாய்.

எதுவும் பேசாமல் அமைதியாய் முறைத்தாள் மிருதி.

“அப்டி முறைக்காத.” என்றவன்.

“இங்க பாரு. இதுக்கு இன்னொரு ரீசனும் இருக்கு. ஏற்கனவே ரெண்டு ஷாப் என் பேர்ல இருக்கிறதனால டாக்ஸ் பிரச்சனை பெருசா வரும். அதுவும் இல்லாம நான் ஒண்ணும் என் பணத்துல இந்த கடையை வாங்க போறதில்லை.“ என்றான் அமுதன்.

எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மிருதி.

“ரெண்டாவது ஷாப் வாங்க பணம் தேவை படுதுணு சொன்னப்ப வேணாம்னு சொல்லியும் கேக்காம உன் நகையை என்கிட்ட கொடுத்து வித்துக்க சொன்ன, ஞாபகம் இருக்கா? அதை நான் எதுவும் செய்யாமல் அப்படியே லாக்கர்ல வச்சிருந்தேன். இப்போ அதை வித்து தான் அட்வான்ஸே கொடுத்திருக்கேன்.

“அடப்பாவி.” என்றாள் மிருதி.

“அதோட, மாசாமாசம் குறைஞ்ச பணத்தை எடுத்துகிட்டு முழு சம்பளமும் வாங்காம இருந்த. அந்த பணத்தை உனக்கு தெரியாம உன் பேர்ல ஒரு அக்கௌண்ட் ஓபன் பண்ணி போட்டு வந்திருந்தேன். ரெண்டு வருஷ சம்பளம் முழுசுமா இப்போ நிறைய இருக்கு. அதையும் சேர்த்தா இன்னும் கொஞ்சம் பணம் தான் மேற்கொண்டு தேவை படும். அதுக்கு நான் லோன் அரெஞ்ச் பண்றேன். நீ அடைசிக்க” என்றான் அமுதன்.

“எனக்கு என்ன சொல்றதுணு தெரியலை அமுதா” விழிகளில் கண்ணீரோடு.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் சொல்றதை கேட்டா மட்டும் போதும். உனக்கு சேர வேண்டியதை தான் சேர்த்து வச்சிருக்கேன் தி. இப்போ நீ மட்டும் தனி ஆள் இல்ல. உனக்காக தேவதை மாதிரி ஒரு குழந்தை இருக்கா. இனி அவளுக்கும் சேர்த்து அவளோட எதிர்காலத்தை நோக்கி நீ ஓடனும். அதுக்கு இது ரொம்ப தேவை தி. நான் சொல்றதை கேளு. எதுவும் பேசாம நாளைக்கு என்கூட வா. உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணி முடிச்சிடலாம்.” என்றான் அமுதன்.

“ஸ்ரீகிட்ட பேசினியா? அவ என்ன நினைப்பா?” என்றாள் மிருதி.

“சொல்ல போனா, ‘உன் பேர்லயே எல்லாம் ரெஜிஸ்டர் பண்றியே இதை அக்கா பேர்ல பண்ணலாம். அவங்களும் ஒரு பிடிப்பு கிடைக்கும்’ ன்னு இந்த ஐடியாவை கொடுத்ததே உன் தொங்கச்சி தான்” என்றான் அமுதன்.

“நீங்க ரெண்டு பேரும் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சுருக்கனும் அமுதா” என்றாள் அழுதபடி.

“போதும் அழுதது. நாளைக்கு ரெடி ஆகிடு” என்றான் அமுதன்.

“சரி சரி.. நீ கிளம்பு எனக்கு வேலை இருக்கு” என்றாள் மிருதி.

“ஹிம்.. போறேன். அதுக்கு முன்னாடி என் டார்லிங் எங்க? ஒரு முறை பார்த்துட்டு போறேன்” என்றான் அமுதன்.

“பேபி” என்று மழலை மொழியில் தேவதையின் குரல் கேட்க பின்னால் திரும்பினான் அமுதன்.

“டார்லிங் “ என்று குழந்தையை தூக்கி தட்டாமாலை சுற்றினான் அமுதன்.

கன்னங்களில் மாறி மாறி மூத்த மழை பொழிந்தது அந்த பிஞ்சு இதழ்கள்.

“ஏன்... எத்..தை பா..ர்ர்...க்க பர..லை..” என்றது மழலை மொழியில் பாவமாக.

“சாரி! என் இளவரசிக்கு கோபமா?” என்றான் இவனும் பாவமாய்.

‘ஆமாம்’ என்றது சிறுகுழந்தை தலையை ஆட்டி.

“சரி.. நாம ஸ்ரீகிட்ட வீட்டுக்கு போலாமா?” என்றான் அமுதன் கொஞ்சலாய்.

“ஒஹ்! போ...தாம்ம்.. ஹை.. திதி ..கித்த போதாம்” என்றது குழந்தை கைகளை தட்டி.

இவர்களின் உரையாடலை பார்த்துக்கொண்டிருந்த மிருதி புன்னகைத்து தலையில் அடித்து கொண்டாள்.

“போய் திருட்டு தனமா ஐஸ்க்ரீம் தின்றதுக்கு இவ்ளோ அலப்பறை.. திருடுங்க... டேய்.. வீட்டுக்கு போயி ஸ்ரீயை டிஸ்டர்ப் பண்ணிங்க தொலைச்சிருவேன். அவ நைட் ஷிப்ட் போய்ட்டு வந்து டைர்யடா தூங்கிட்டு இருப்பா” என்றாள் மிருதி இருவரிடமும் ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரிக்கும் தொனியில்..

“நாங்க கூட தான் நைட் ஷிப்ட் பகல் ஷிப்ட் னு கடையை பார்த்துக்குறோம். எங்களை எங்க தூங்க விடுறாங்க” என்று முணுமுணுத்தான் அமுதன்.

”என்ன முணுமுணுப்பு?” என்றாள் மிருதி முறைத்து.

“ஹிம்.. ஒண்ணுமில்லை உன் தங்கைக்கு வாழ்க்கை. எங்களை சொல்லு” என்றான் அமுதன்.

அவன் பேசி கொண்டிருக்கும் பொழுதே மிருதி வயிற்றை பிடித்து கொண்டே சுருண்டு விழுந்து துடித்தாள் மிருதி.

“என்னாச்சு தி?” என்று வேகமாக ஓடி வந்தான் அமுதன்.

அனைவரும் ஓடி வர, மிருதியை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தான் அமுதன்.

தனது தாய் வலியில் துடித்தது சிறுக்குழந்தையின் மனதில் பதிந்துவிட,

“அம்மா ஏன் அது..தா” என்றது குழந்தை விழிகளில் மிரட்சியுடன்.

“இல்ல ஒண்ணுமில்லடா? அம்மாக்கு ஜுரம். டாக்டர் பார்க்குறாங்க. எல்லாம் சரியாகிடும்” என்று அணைத்துகொண்டான்.

“அம்மா வேணும்” என்றது குழந்தை பாவமாய்.

“ஒண்ணுமில்லைடா. அம்மாக்கு கொஞ்சம் டையர்ட்டா இருக்குனு உள்ள தூங்கிட்டு இருக்காங்க. சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்” என்று சமாதானம் படுத்திக்கொண்டு இருக்கும் போதே, ஸ்ரீ வேகமாக உளே வந்தாள்.

”என்னப்பா ஆச்சு? அக்காக்கு எப்படி இருக்கு?” என்றாள் பதட்டமாய்.

“திதி..” என்று அவளிடம் தாவிக்கொண்டது குழந்தை.

“ஒண்ணுமில்லை டா. சித்தி இருக்கேன்ல. நீ என் மேல சாஞ்சு தூங்கு” என்றாள் ஸ்ரீ குழந்தையை லேசாக முதுகில் தடவி.

அவளின் பேச்சுக்கு கட்டுபட்டது போல் ஸ்ரீயின் தோளில் சாய்ந்து உறங்க தொடங்கியது.

“தாங்க் காட். நீ வந்த ஸ்ரீ. இல்லன்னா பாப்பாவை சமாளிக்கிறது ரொம்ப் கஷ்டமாகிருக்கும்” என்றான் அமுதன்.

“டாக்டர்ஸ் செக் பண்ணிட்டு இருக்காங்க. என்னன்னு தெரியலை நல்லா தான் பேசிட்டு இருந்தா. திடீர்னு ரொம்ப ஆழ ஆரம்பிச்சிட்டா” என்றான் அமுதன் கவலையாய்.

“அமுதன். அக்காக்கு எதுவும் ஆகாது. நாம இருக்கோம்ல பார்த்துக்கலாம்” என்றாள் ஸ்ரீ.

“நம்மளை நம்பி வந்துருக்கா. அவங்க அப்பாவும் அம்மாவும் நம்மளை நம்பி இங்க விட்டுட்டு போய்ருக்காங்க. தீக்கு எதுவும் ஆகக்கூடாது. பாவம் ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டு இப்போ தான் கொஞ்சம் சரியானா அதுக்குள்ள..” என்றான் அமுதன் நா தழுதழுக்க.

“ஒண்ணும் ஆகாதுன்னு சொல்றேன்ல” என்றாள் ஸ்ரீ.
 
தீயாய் சுடும் என் நிலவு 15:

15.

ஒரு மணிநேரம் எந்த தகவலும் இல்லாமல் இருவரும் அல்லாடி நிற்க, மருத்துவர் வெளியே வருவதை கவனித்து அவரை நோக்கி ஓடினர்.

பேஷண்டுக்கு நீங்க யாரு?" என்று கேட்டார்.

"சார்! அவங்க என் அக்கா. அவங்க எப்படி இருக்காங்க?" என்றாள் ஸ்ரீ அமுதன் திணறுவதை பார்த்து.

"உங்ககிட்ட பேசணும் வாங்க" என்று அறைக்கு செல்ல, இருவரும் பதறிய இதயதோடு பின்னே சென்றனர்.

பத்து நிமிடத்திற்கு பின் வெளியே வந்த இருவரின் முகமும் வெளிறி போய் இருக்க, பேயரைந்ததை போல் இருந்தனர் இருவரும்.

"அமுதா அவங்க பேரன்ஸ்கிட்ட சொல்லிடலாமா?" என்றாள் ஸ்ரீ.

"இல்ல ஸ்ரீ. அவசர படவேண்டாம். அவ முதல்ல கண் முழிக்கட்டும். அப்புறம் அதை பத்தி பேசலாம்" என்றான் அமுதன் முடிவாக.

அதன் பின் ஏகபட்ட போராட்டங்கள் அமுதன் அடமாய் நின்று பெயரில் புது ஷாப்பை ரெஜிஸ்டர் செய்து ஆரம்பித்தான். ஆறு மாதங்கள் ஓடிட மிருதி புது ஷாப்பை ரெஸ்டாரண்டாய் மாற்றி இருந்தாள். அவளின் அயராத உழைப்பால் நல்ல முன்னேற்றம் இருக்க, மிருதியின் உடல் நிலையில் அவ்வபொழுது தேய்வும் காணப்பட்டது.

அவள் உடல்நிலையால் குழந்தையை கணவனிடம் கொடுத்துவிட முடிவு செய்திருந்தாள்.

அதன் விளைவு தான் இன்று தீரனை சந்தித்தது.

அவனின் விழிகளில் இதற்கு முன் தெரியாத ஒரு உணர்வு தனக்காக ஒளிர்வதை அவள் கண்டுகொண்டாலும் தான் இருக்கும் நிலையும் கடந்து வந்த காலங்களும் அவளின் மனதை கல்லாக்கியது.

ஆயிரம் தான் அவனிடம் கோபம் இருந்தாலும் அவளின் மனம் கவர்ந்த ஒருவன் அவன் மட்டும் தானே.

அவனின் அருகாமையை அவளின் பெண்மை உணர்ந்து அவனுக்காக ஏங்கதான் செய்தது.

விடாபிடியாக அவளும் அவனிடம் இருந்து தன்னை காத்து கொண்டு வெளியேறினாள்.

வீட்டிற்கு வந்தவளிடம் இருவரும் கேள்விகளை அடுக்கி கொண்டே போயினர்.

"என்ன தி உங்க அவரை பார்த்தியா? பேசுனியா? எனி ரொமான்ஸ் நாங்க மிஸ் பண்ணிட்டோமா? பரவால்ல வந்துட்டியே எங்க அவரோட போய்டுவியோன்னு நாங்க இங்க யோசிச்சிட்டு இருந்தோம்" என்றான் அமுதன் கிண்டலாக.

இருவரையும் முறைத்தவள்.

"எருமை அறிவே கிடையாதா? உனக்கு வேற வேலையே இல்லையா? ஒழுங்கு மரியாதையா போய்டுங்க ரெண்டு பேரும்" என்று அருகில் இருந்த தலையணை எடுத்து பொய் கோபத்தோடு அமுதன் மேல் வீசினாள்.

"என்னம்மா அடிக்கிற? உங்க மாமாவை பார்க்க போனியே? என்ன ஆச்சுன்னு தானே கேட்டேன்?" என்றான் அமுதன்.

வெளியே கோபம் காட்டினாலும் அவளின் முகத்தில் மறைந்து இழைந்து ஓடியது ஒரு மெல்லிய நாணம்.

"நீங்க நினைக்கிற மாதிரில்லாம் அங்க எதுவும் நடக்கலை" என்று நடந்ததை கூறினாள் மிருதி.

"அப்போ மாம்ஸ்கிட்ட நாளைக்கு பாப்பாவை கூட்டிட்டு போகனுமாக்கா?" என்றாள் ஸ்ரீ.

"ஆமாடா. ஆனா.." என்று இழுத்தாள் ஸ்ரீ.

"என்னக்கா?" என்றாள் ஸ்ரீ.

"உங்க ரெண்டு பேரையும் கேக்காம நான் ஒரு முடிவு பண்ணி ஒரு விஷயத்தை சொல்லிட்டு வந்துட்டேன்." என்றாள் மிருதி.

"என்ன சொல்லிட்டு வந்த?" என்றான் சுவரில் சாய்ந்து நின்றபடி.

"அது நான் கட்டிக்க போறவருடன் வரேன்னு சொல்லிட்டேன்" என்றாள் மிருதி.

"என்னது கட்டிக்க போறவரா? அது யாரு? ஏன் அப்படி சொன்ன?" என்றான் அமுதன்.

"எதுக்காக குழந்தையை இப்போ தரேன்னு கேட்டார். என்கிட்ட வந்துடு என்கூட நீ இல்லாம நரகமா இருக்கு. வந்துருவல்ல? ன்னு கேட்டார். அதனால தான் நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டேன்" என்றாள் மிருதி.

"அடிப்பாவி ஏன் அப்படி சொன்ன? இப்போ என்ன பண்ண போறே?" என்று கேட்டான் அமுதன்.

"அதுக்கு தான் எனக்கு ஹெல்ப் பண்றதுக்கு நீ இருக்கியே?" என்று சிரித்தாள் மிருதி.

"நான் என்ன பண்ணனும்? என்னால எப்படி உதவமுடியும்?" என்றான் அமுதன்.

"உங்களை விட்டா நான் யாரை நம்புவேன். அதனால.." நிறுத்தி இருவரையும் பார்த்தாள் மிருதி.

"அதனால...?" என்று இருவருமே கேட்க.

"நாளைக்கு நீ தான் என்கூட வரபோற" என்றாள் பட்டென்று.

"என்னது நான் உன் பிரென்ட் டி. அதுவுமில்லாம எனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் ஆகபோகுது. உனக்கே கொஞ்சம் இது ஓவரா தெரியலை" என்றான் அமுதன்.

"இது எதுவுமே எனக்கு தெரியாது பாரு. நீ புதுசா சொல்ற?" என்று முறைத்தாள் மிருதி.

"தி சீரியசா தான் சொல்றியா?" என்றான் அமுதன் அமைதியாக.

"ஆமா" என்றாள் மிருதி.

ஸ்ரீ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,

"தி நீ அவர்கூட சேர்ந்து வாழனும்னு நினைக்கலையா?" என்றான் அமுதன்.

"இப்போதைக்கு முடியாது" என்றாள் மிருதி.
 
தீயை சுடும் என் நிலவு 16:

16.

எதுவும் பேசாமல் அவளின் வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடினான் மிருதியின் விழிகளில்.

"நான் பொய் சொல்லமாட்டேன்" என்றான் அமுதன்.

எதுவும் பேசாமல் அவனின் விழிகளையே பார்த்துக்கொண்டிருக்க.

"சரி அமுதா. அப்போ நான் நாளைக்கு உண்மையை சொல்லிட்றேன்" என்று தன்னறைக்கு சென்றாள்.

மிருதியின் பின்னே சென்ற அமுதன்.

"என்ன உண்மை தி?" என்றான்.

"அவர் மனசுல இப்போ என்னை பத்தி என்ன அபிப்ராயம் இருக்குன்னு எனக்கு தெரியல. அதுவுமில்லாம மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்துக்கு இன்னும் எந்த விளக்கமும் இல்ல. அதுக்குள்ள நேரா வந்து என்கூட வான்னா போய்டனுமா? நான் ஒண்ணும் கடைல கிடைக்கிற பொம்மை இல்லை. ரத்தம் சதை உள்ள ஒரு மனுஷி. எனக்கு ஆசைகள், கனவு எல்லாம் இருக்கு " என்றாள் அமுதனை பார்த்து.

"அதுக்கு முதல்ல நீ அவர்கிட்ட பேசணும் தி" என்றான் அமுதன் அவளை சமாதானபடுத்த .

"என்னோட ஹெலத்தை பத்தி உனக்கு தெரியும். சோ தேவையில்லாம அவருக்கு நம்பிக்கை வார்த்தை கொடுக்க முடியாது. அதோட நீ ஏன் வரமாட்டன்னு சொல்ட்றேன்னு எனக்கு தெரியும்" என்று முறைத்தாள் மிருதி.

அமுதன் எதுவும் பேசாமல் இருக்க, "நாளைக்கு நான் ஒருவேளை அவர்கூட சேர்ந்துட்டேன்னா அப்போ இது எனக்கு பிரச்சனையா வரும்னு நினைக்கிற? " என்றாள் மிருதி.

எதுவும் கூறாமல் தன் மனதில் இருப்பதை கூறும் தோழியை பார்த்து புன்முறுவல் பூத்தான்.

"தெரிஞ்சிகிட்டே என்னை நடிக்க சொல்ற தி?" என்றான் அமுதன்.

"இந்த பேச்சை மாற்றும் வேலைல்லாம் வேணாம். நாளைக்கு நீ வர அவ்ளோ தான்." என்றாள் மிருதி இறுதியாக.

"சரி வரேன். உன் பிடிவாதத்துக்கு முன் நான் தோர்த்துட்டேன் போதுமா?" என்றான் அமுதன்.

“நீ வேற நான் என் வாழ்க்கைலயே முதல் தடவை தோர்த்துட்டேன். இப்போ ரெண்டாவது தடவையும் தோர்தித்துடுவேன் போல இருக்கு.” என்றாள் விழிகளில் வழியும் கண்ணீரை சுண்டி விட்டு.

“தி” என்றான் அமுதன்.

“இல்ல அமுதா. நான் கொஞ்சம் தனியா இருக்கணும். ரொம்ப தாங்க்ஸ் வரேன்னு சொன்னதுக்கு” என்றாள் மிருதி.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினான் அமுதன்.

“என்ன சொல்றாங்க அக்கா?” என்றாள் ஸ்ரீ.

அவளை சில நொடிகள் கூர்ந்து பார்த்தவன்.

“உனக்கு தி மேல கோபம் வரலையா ஸ்ரீ?” என்றான் அமுதன் அன்பாய்.

“கோபமா? எதுக்கு?” என்றாள் ஸ்ரீ ஒன்றும் புரியாமல்.

“என்னடி இப்படி கேக்குற? நான் நீ கட்டிக்க போறவன். என்னை அவளுக்கு வருங்கால புருஷனா நடிக்க சொல்றா. உனக்கு அவமேல கோபம் வரலையா?” என்றான் அமுதன் ஆழமாய் நோக்கி.

“அமுதா அக்கா நம்மகூட வந்து மூணு வருஷமாச்சு. இந்தனை நாள்ல ஒரு நாள் கூட உன் மேல ஃப்ரெண்ட்டுன்ற எல்லை தாண்டி ஒரு பார்வை பார்த்தது கிடையாது. நீயும் அப்படி தான். அப்படி பட்டவங்க இன்னைக்கு திடீர்ன்னு நடிக்க சொல்றாங்க. அதான் ஏன்னு எனக்கு புரியலை?” என்றாள் ஸ்ரீ.

என்ன சொல்வது என்று தெரியாமல் அவளை இறுக அணைத்துகொண்டான்.

“என்..ன.. அமு..தா..?” என்றாள் திக்கி திடீரென்ற அவனின் அணைப்பில் திணறியவள்.

ஸ்ரீயின் நெற்றியில் லேசாக தன் இதழை ஒற்றியெடுத்தவன் அவளை விடுவித்து.

“நான் அவளுக்காக பிரெண்ட்ன்ற முறைல என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்க என்னிடம் இதுவரைக்கும் எதுவுமே கேக்காதவ தி. அவ என் ஃப்ரெண்ட்னு தெரிஞ்சு அவமேல உனக்கு அக்கான்ற மரியாதை குறைஞ்சதே கிடையாது. எனக்கு நீங்க ரெண்டு பேரும் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும் ஸ்ரீ.” என்றான் அமுதன் நெகிழ்ச்சியில்.

“இருந்தாலும் தி க்கு போதும் இந்த வனவாசம். எப்படியாவது இந்த முறை அவர்கூட அவளை சேர்த்து வைக்க போறேன்.” என்றான் அமுதன்.

“எப்படி?” என்றாள் ஸ்ரீ.

“அது நாளைக்கு நானும் அவரை சந்திக்க போறேன். அதுக்கப்புறம்...” என்று தன் திட்டத்தை கூறிமுடித்தான்.

“இது சரியா வருமா அமுதா? அக்கா அவங்க மேல கோவமா இருக்காங்களே?” என்றாள் ஸ்ரீஷா.

“உண்மை தான். அவர்மேல அளவுகடந்த காதல்னால தான் அப்படி இருக்கா. ஆனா அவர் இப்போ முதல்ல மாதிரி இல்ல. தி அவரை விட்டுட்டு வந்ததுக்கப்புறம் ரொம்ப மாறிட்டார். தி அவரை சந்திக்க போறேன்னு சொன்னப்பயே என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அவரை பத்தி விசாரிச்சுட்டேன்.” என்றான் அமுதன் மெல்ல புன்னகைத்து.

“இது அக்காக்கு தெரியுமா?” என்று முறைத்தாள் ஸ்ரீ.

“தெரியாது. தெரிஞ்சா சாமியாடிடுவா” என்றான் அமுதன் மெதுவாய்.

“நான் அக்காகிட்ட சொல்ல போறேன்” என்று தியின் அறைப்பக்கம் திரும்பி “அக்கா..” என்று முடிக்கும் முன் அவளின் இதழை கைகளால் பொத்தியவன் வேகமாக ஸ்ரீயின் அறைக்குள் இழுத்து சென்று கதவை தாளிட்டான்.

“இப்போ எதுக்குடா கதவை சாத்தின திற” என்றாள் ஸ்ரீஷா.

“எய் நான் தான்டி உன் புருஷன். என்னையே காட்டி கொடுத்திடுவியா?” என்றான் குறும்பாக.

“நீ என் வருங்கால புருசன். சோ கல்யாணம் முடியர வரைக்கும் இந்தமாதிரி தனியா ஒரே ரூம்ல இருக்கிறதுல்லாம் தப்பு. முதல்ல கதவை திற.” என்றாள் ஸ்ரீ.

“ஹேய் ஸ்ரீ. அவ என் பிரெண்ட்டி அவளுக்கு போய் நான் கெட்டது நினைப்பேனா? அவ நல்லா இருக்கணும் அவ புருஷனோட. அதுக்கு தான் இதெல்லாம். வெளிய போய் எதுவும் சொல்ல கூடாது தி கிட்ட சரியா ?” என்றான் அமுதன்.

“நான் முடியாதுன்னா? ஏற்கனவே அந்த ஆளால அக்கா ரொம்ப கஷ்டப்பட்டு இப்போ தான் அதுல இருந்து வெளிய வந்துருக்காங்க. நீ ஏதாவது செய்றேன்னு சொதபிட்டா?” என்றாள் ஸ்ரீ.

“முடியாதுன்னு சொன்னா அப்புறம்...” என்று அவள் காதினில் கிசுகிசுத்து ஸ்ரீயை பார்த்து கண்ணடித்து புன்னகைக்க, விழிகள் விரிய அமுதனை பார்த்து சிணுங்கியவள் அவனின் நெஞ்சத்திலேயே தஞ்சம் கொண்டாள்.

“என்னை நம்பு ஸ்ரீ. நிச்சயமா தி நல்லா இருப்பா” என்றான் அமுதன்.
 
தீயாய் சுடும் என் நிலவு 17:

17

“ஹிம்.. அதெல்லாம் இருப்பேன். நீ எது பண்ணாலும் அக்காவோட எதிர்காலத்தை ஞாபகத்துல வச்சிக்கிட்டு யோசிச்சு பண்ணு அமுதா. அவ்ளோதான் நான் சொல்வேன்.” என்றாள் ஸ்ரீ.

“நிச்சயமா ஸ்ரீ. அதுக்காக தான் நான் அவரை பார்க்க போறேன். இனி அவ நல்லா இருக்கணும்.” என்று சிரித்தான்.

மறுநாள் அமுதன், மிருதி, குழந்தை என்று மூவரும் தீரணை சந்திக்க சென்று கொண்டிருந்தனர்.

“பேபி” என்றது தனது சின்ன சிறிய பிஞ்சு குரலில் குழந்தை.

“என்ன டார்லிங்?” என்றான் அமுதன் சிரித்தபடி.

“நா...ம்... எ...த போ...தோம்... ?” என்றாள் மிதிஷா.

மிதியின் குழந்தை மிருதியின் முதல் எழுத்து தீரனின் முதல் எழுது என்று சேர்த்து மிதிஷா என்று வைத்திருந்தாள் மிருதி.

மிதிஷாவை சில நொடி நோக்கியவன் மிருதியை பார்த்து, “அம்மா சொல்லுவாங்க டார்லிங். எனக்கும் தெரியலை” என்றான் அமுதன் கிண்டலாய் சிரித்து.

அமுதனை முறைத்த மிருதி.

“மிதி குட்டி.. நாம இப்போ அப்பாவை பார்க்க போறோம்” என்றாள் ஒரு பெருமூச்சை விட்டு.

அம்மாவையே பார்த்து கொண்டிருந்த குழந்தை, “ஹை... அப்பாவை பா..த போ..தோம்.. “ என்றது கை தட்டி.

அவளை ஒரு நொடி வியப்பாய் பார்த்த இருவரும் பின் மெல்லிய புன்னகைத்தனர்.

அவர்களுக்கு முன்னே கூறிய நேரத்திற்கு முன் வந்து நின்றிருந்தான் தீரன்.

தீரனின் அருகில் செல்ல செல்ல மிருதிக்கு இதயம் வேகமாய் துடிக்க படப்படப்போடு முன்னேறினாள்.

அவளின் பரிதவித்து புரிந்தாலும் தன் தோழியை கிண்டல் செய்யாமல் இருக்க முடியவில்லை.

"ஏய் தி! எதுக்கு இப்படி டென்சன் ஆகுற? உன் புருஷன் தான? ரிலாக்ஸ்.. உன்னை ஒன்னும் முழுங்க போறதில்லை." என்றான் அமுதன்.

"வாய மூடுடா எருமை. கிண்டல் பண்ற நேரமா இது?" என்று அவனிடம் கிசுகிசுத்தாள்.

மூன்று வருடத்திற்கு முன் எதிரில் இருப்பவள் பார்க்க மனமில்லாமல் போனவனுக்கு, இன்று தூரத்தில் வரும் தன்னை விழிமூடாது நோக்கும் தன்னவனின் பார்வைக்குள் தொலையாமல் இருக்க தவித்தாலும் அவனின் பார்வை மேனியில் தகித்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாது அருகில் சென்றாள்.

அவர்களை எதிர்நோக்கி இருந்தவனின் பார்வை மிருதியின் மேல் பட வேகமாக புன்சிரிப்புடன் எழுந்து நின்றான். அவளின் பின்னால் வரும் அமுதனை கண்டவுடன் நெற்றி சுருக்கி கேள்வியாய் நோக்கி பின் மிருதியிடம் நின்றது.

"வந்து ரொம்ப நேரம் ஆச்சா? " என்றாள் மிருதி பார்வை போரை முடிக்க.

"ஹு க்கும்.." என்று செருமினான் விழிகளில் வலியும் ஆத்திரமும் ததும்ப, "இல்ல இப்போ தான் வந்தேன். பை மினிட்ஸ் தான் ஆச்சு. உக்காருங்க" என்று அமர்ந்தான் தீரன்.

அவனின் விழிகள் மிருதியின் பார்வை தரிசனத்துக்கு ஏங்க, அவளோ அவன் வேண்டுதலுக்கு செவி சாய்க்காமல் இருந்தாள்.

"ஹ்ம்ம்... இது என்.. ஹ்ம்.. நம்ம பொண்ணு மிதிஷா. இவர் அமுதன். எனக்காக கடவுள் அனுப்புன தூதுவர். நான் சொன்னேன்ல கல்யாணம் நடக்க போகுதுன்னு..." என்றாள் அவனை மட்டும் பார்க்காமல்.

"ஹெலோ!" என்று ஸ்நேகிதமாய் அமுதன் கரம் நீட்ட தீரனின் பார்வையில் தீஜுவாலைகள் பறந்தன. மறுநொடி மிருதியை பார்த்தவன் தன்னை கட்டுப்படுத்தி "ஹெலோ" என்றான் மரணவாக்கியமாய்.

'தி உன்னால இவருக்கு நான் பெரிய வில்லனா தெரியுறேன். எரிக்கிற சக்தி இருந்தா இந்நேரத்துக்கு நான் பொசுங்கிருப்பேன். ஆனாலும் ரொம்ப தான் உன் மாமனுக்கு. இவ்ளோ நாள் நீ எங்கே இருக்கேன்னு கூட கேட்கலை. இப்போ மட்டும் இவ்ளோ உரிமை வருது.' என்று உள்ளுக்குள் புலம்பினான் அமுதன்.

அவனின் குரல் தோனியில் மிருதியின் உடலில் சிலிர்ப்பு தட்டியது.

அவளின் கவனத்தை திசை திருப்பியது குழந்தையின் குரல்.

"தி.. எனக்கு அங்க இருக்கிற சாக்லேட் வேணும்" என்றது அருகில் வைக்கப்பட்டிருந்த சாக்லெட்டை கை காட்டி.

அம்மாவும் மகளும் அங்கே கவனத்தை செலுத்த இது தான் சமயம் என்று தான் வலகரத்தை மேசையின் மேல் வைத்து தீரனின் புறம் நகர்த்தினான்.

இவன் செய்வது ஒன்றும் புரியாமல் பார்த்த தீரன் அவன் முன் வந்தவுடன் தன் கரத்தினை எடுத்துக்கொள்ள அங்கே இருந்த அட்டையை வேகமாக எடுத்து மேசையின் அடியில் ஆர்வமாய் நோக்கினான் தீரன்.

அது அமுதனின் விசிட்டிங் கார்ட் என்பதை புரிந்துகொண்டவன் அமுதனை ஓரவிழியில் பார்க்க அட்டையை திருப்புமாறு அமுதன் சைகை செய்தான். உடனே தீரன் திருப்பி பார்த்து முகம் மலர்ந்தான்.

'ஹப்பா இப்போ தான்யா இவர் மூஞ்சி நல்லாருக்கு. இவ்ளோ நேரம் யாரையோ இல்லல்ல என்னை கொலை பண்ண போற மாதிரில்ல இருந்துச்சு. தப்பிச்சேன்டா சாமி.' என்று உள்ளுக்குள் பெருமூச்சுவிட்டான் அமுதன்.

அதில், 'தி'ஸ் மை பிரென்ட் ஒன்லி. மீ பாவம் சோ நோ கோவம்' என்று எழுதி இருந்தது.

அதை படித்த தீரனின் முகத்தில் மகிழ்ச்சி கூத்தாட அமுதனை நோக்கினான். அந்த பார்வையில் ஸ்நேகித புன்னகை இருந்தது.

மகளிடம் பேசி முடித்த தி இருவரையும் நோக்க எதுவும் நடக்காதது போல் அமைதியாய் இருந்தனர்.

"என்ன?" என்றாள் மிருதி.

"என்ன?" என்றனர் இருவரும் ஒரே நேரத்தில்.

"இல்ல ஒன்னுமில்ல" என்றாள் மிருதி.

"பேபி" என்றது குழந்தை.

"யெஸ் டார்லிங்" என்றான் அமுதன் மென்மையாய் புன்னகைத்து.

"இபா..ர்... தா..ன்.. தா..தியா..?" என்றது மழலை மொழியில்.

விழிகளில் ஒளிமின்ன தீரன் நோக்க, "எஸ் டார்லிங். இவர் தான் உன் அப்பா. போ போய் பேசுடா" என்றான் அமுதன்.

"ஓகே பேபி" என்று இறங்கி தீரனிடம் வந்தாள் மிதிஷா.





.
 
தீயாய் சுடும் என் நிலவு 18:

18

தீரனை நெருங்கிய மிதிஷா சில நிமிடங்கள் உற்று பார்த்து கொண்டிருந்தாள்.

தீரனுக்கோ தரையில் கால் படாமல் வானத்தில் பறப்பது போல இருந்தது.

தன் உயிரில் உருவான ஒரு பிஞ்சு மொட்டு தனக்கு தெரியாமல் மலர்ந்து இகழ்கள் விரித்து சிரித்தபடி தன்னிடம் வருவதை போல் இருக்க மகிழ்ச்சியில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.

"நீ..க.. எத.. அப்பா..பா.." என்றாள் மழலை மொழியில்.

அதன் பிஞ்சு குரலில் உருகி போனவன் மெல்ல குழந்தையை தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

"ஆமாடா" என்றான் சிரித்து.

"எதி...குப்..பா.. அ.த..த ?" என்று கேட்டக.

"இல்லடா. கண்ல தூசி விழுந்துடுச்சு. அதான்." என்றான் தீரன்.

"ஏன் இவதோ..நாதா வதத?" என்றது அவன் கன்னத்தை தடவி.

கண்களில் கண்ணீர் வழிய மிருதியை பார்த்தான் தீரன்.

அவளோ பதிலேதும் கூறாமல் முகத்தை திருப்பி கொண்டாள்.

"டார்லிங்! அப்பா இவ்ளோ நாள் ரொம்ப தூரத்துல வேலை செஞ்சிட்டு இருந்தார். இப்போ தான் வந்துருக்காரு அதுவும் என் டார்லிங்கை பார்க்க." என்றான் அமுதன் மிதிஷாவிடம்.

"ஆமா...பா.பா.." என்றது குழந்தை ஆர்வமாய் தீரனிடம்.

"ஆமாம்" என்று நெகிழ்ச்சியாய் தலையாட்டியவன் மிதிஷாவை தூக்கி கண்ணீருடன் முகத்தில் மூத்த மழை பொழிந்தான்.

"சாரி டா. அப்பாவால சில காரணங்கலால வரமுடியலை. அதான் இப்போ வந்துட்டேனே. உனக்கு என்ன பிடிக்கும் அப்பாக்கு சொல்லு?" என்றான் தீரன் செல்லமாய்.

"எத...க்கு.. அம்மா..வை தா..ன் பிதி.. க்கும்.." என்றாள் மிதிஷா.

விழிகள் விரிய ஆச்சர்யமாய் பார்த்தாள் மிருதி.

'எனக்கும் தான்..' என்று மனதில் கூறிக்கொண்ட தீரன் மிருதியை ஓரவிழியால் பார்த்துக்கொண்டு, "ஓஹ் அப்படியா? என் செல்லக்குட்டிக்கு அம்மாவை தான் பிடிக்குமா? சூப்பர். வேற என்ன பிடிக்கும்? " என்று நெற்றியில் முத்தமிட்டான்.

"ஹ்ம்.. " என்று கன்னத்தில் கை யோசித்த குழந்தை, "திதி பிதி.. க்கும்.. பேபி பிதி..க்கு..ம் .." என்றாள்.

"ஹுக்கும்.. போலாமா? டைம் ஆகுது" என்றாள் மிருதி.

ஏக்கமாய் தீரன் மிருதியை பார்க்க, ஒரு நொடி அவன் முகத்தை பார்த்தாலும் மறுநொடி அவன் கரங்களுக்குள் சரணடைய துடிக்கும் மனதை திசை திருப்பி கட்டுபடுத்தினாள்.

"போலாம் தி" என்றான் அமுதன்.

அவன் முகத்தை நேராக பார்க்க முடியாமல் "நாங்க கிளம்பறோம்" என்றாள் மிருதி.

'இந்த நொடி மீண்டும் தொடர வேண்டும். இப்போ போயிட்டா அதுக்கப்புறம் மிருதியை பார்க்க சான்ஸ் கிடைக்காம போய்டுச்சுனா? யோசி தீரா' என்று மனது கூற யோசித்தவன்.

"இன்னும் கொஞ்ச நாள் இங்க தான் இருக்க போறேன். குழந்தையை பாரக்கணும்னா பார்க்கலாமா?" என்றான் தயங்கி தயங்கி.

ஒரு நொடி அவன் விழியோடு கலந்தவள் உயிர் வரை சென்று அவன் ஸ்வாஸம் தீண்டுவது போல் இருக்க அதில் கரைய தொடங்கினாள்.

"ஹுக்கும்.." என்று அமுதன் செரும இருவரும் சொல்ல முடியாத உணர்வில் விழிகளை மீட்டெடுத்தனர்.

"ஹ்ம்.. நீங்க சொல்லும்போது தாராளமா பார்க்கலாம்" என்றாள் மிருதி.

"அம்மா.. அப்பா.. நம்..ம கூ..த வத..த்தும்.." என்றாள் மீதுஷா.

அவளின் சொற்களில் இருவரும் ஒரு நொடி திணறி விழிகள் மீண்டும் சந்திக்க "ஹுக்கும் .. போலாம் தி" என்றான் அமுதன்.

அவன் குரலில் இருந்த எண்ணத்தை கண்டுகொண்டவள் அமுதனை முறைக்க குறும்பு மின்ன சிரித்தான் அவன்.

'போதும் உங்க அத்தானை சைட் அடிச்சது போதும்' என்பது போல் இருந்தது அது.

அவனின் மனக்குரலை கண்டு கொண்டானோ இல்லையோ அமுதனை விழிகளை உருட்டி முறைக்க அந்த காட்சி ரம்யமாய் பதிந்து போனது தீரனின் மனதில்.

"அப்பாக்கு கொஞ்சம் வேலை இருக்குடா. நாளைக்கு அப்பா உன்கூட இருப்பேன்" என்றான் தீரன்.

"ஹை .." என்று கைதட்டி குதித்தது குழந்தை.

"போலாம்" என்று குழந்தையுடன் சென்றாள் மிருதி.

அவளே அறியாமல் தீரனின் மனதையும் எடுத்து சென்றாள்.

மிருதியை சீண்ட நினைத்த அமுதன்.

"ஒருத்தங்க சும்மாவே எனக்கு பிடிக்காது பிடிக்காதுன்னு சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா நேர்ல அவங்க அத்தானை பார்த்தவுடன் கண்ணை கூட மூட்ரதில்லை அப்படி ஒரு சைட். ரொம்ப ஜாலியா இருக்காங்க போல" என்றான் மிருதியை ஓரக்கண்ணால் பார்த்து.

அவனை முறைத்த மிருதி, "வண்டி ஒட்ற வேலையை மட்டும் இப்போ ஒழூங்கா பார்க்கலை அவ்ளோ தான்" என்றாள் மிருதி

"ஓஹ் அப்படியா?" என்றான் அமுதன் சிரித்து.

"நான் கொலை பண்ணிட்டு ஜெய்லுக்கு போக விரும்பலை. சோ அதனால வாய மூடிட்டு வண்டியை மட்டும் ஓட்டு." என்றாள் மிருதி.

வாய் விட்டு சிரித்தான்.

"டார்லிங். நான் கேட்டதிலயே இது தான் மிக பெரிய ஜோக்" என்று சிரித்தான் அமுதன்.

மறுநாள் அமுதன் போன் அடிக்க, "ஹலோ" என்றான்.

"நான் தீரன் பேசுறேன்" என்ற குரலை கேட்டவுடன் அமுதனின் குரலில் புன்னகை மலர்ந்தது.

"நல்லா இருக்கீங்களா?" என்றான் அமுதன்.

"நல்லா இருக்கேன். நான் உங்களை பார்க்கணும் இன்னைக்கு" என்றான் தீரன்.

"கண்டிப்பா நானும் அதைபத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்" என்ற அமுதன் தீரனை சந்திக்க முடிவு செய்தான்.

********

“வணக்கம்” என்று இருவரும் கை குலுக்கி அமர்ந்தனர்.

“நான் அமுதன். என்னை நேத்தே தி கூட பார்த்துருப்பிங்க. ஆக்சுவலா தி யும் நானும் ஸ்கூல் ல இருந்து பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். அவங்க பேரண்ட்ஸ்கு அடுத்து அவ நம்புறது என்னை தான். இவங்க ஸ்ரீஷா” என்று ஸ்ரீஷாவை அறிமுகபடுத்தினான்.

“வணக்கம் மாமா” என்று ஸ்ரீஷா கூப்பிட தீரன் ஆச்சர்யமாய் பார்த்தான்.

“என்ன அப்படி பார்க்குறிங்க? அக்கா வேணா என்கூட பிறக்காம இருக்கலாம். ஆனா அக்கா மூணு வருசத்துக்கு முன்னாடி எப்போ எங்க வீட்ல காலடி எடுத்து வச்சாங்களோ அப்பவே எனக்கு அவங்க அக்கா ஆகிட்டாங்க. அப்போ நீங்க எனக்கு மாமா தான? அதான் சொன்னேன்.” என்றாள் ஸ்ரீஷா.

“ஓஹ்” என்று தன்னவளை நினைத்து கன்னத்தில் குழிவிழ சிரித்தான்.

“மாமா” என்று ஸ்ரீஷா உரக்க கூப்பிட அவளிடம் திரும்பி ஒற்றை புருவத்தை உயர்த்தி கேள்வியாய் நோக்கினான்.

"என்ன அக்காவை பத்தி கனவா?” என்றாள் கிண்டலாய்.

லேசான வெட்கம் கலந்த சிரிப்பில் தலையாட்ட.

“சொல்லுங்க. எதுக்கு வர சொன்னிங்க?” என்றான் அமுதன்.

“உங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியும்னு தெரியலை. ஆனா இந்த மூணு வருஷமா நான் ஒரு நாள் கூட நிம்மதியா தூங்கனது இல்ல. எனக்கு ... நான் ... நிறைய தப்பு பண்ணிருக்கேன். ஏத்துகிறேன் ஆனா, இப்போ அப்படி இல்ல. என் தப்பையெல்லாம் உணர்ந்துட்டேன். எனக்கு மிருக்கூடவும் என் பொண்ணுகூடவும் இருக்கணும். எனக்கு ஒரு குழந்தை இருக்கிறதே ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் தெரியும். எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்ததுன்னு சொல்ல வார்தகைலே கிடையாது. இவ்ளோ நாளா மிருவை மட்டும் நினைச்சிட்டு இருந்தேன். எனக்கு அவ கன்சிவா இருக்க விஷயமே தெரியாது. அவளும் அதை பத்தி சொல்லலை" என்றான் மிகவும் உடைந்து.
 

New Threads

Top Bottom