Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மல்லிச்சரம் -கதைப்பகுதி

அந்தக் குளிரூட்டப்பட்ட மீட்டிங் ஹாலில் கடைசியாக தன் பார்வையை செலுத்தினாள் மாதவி ,எல்லாஇருக்கைகளிலும் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள் . எல்லோருக்கும் ஒரு நோட் பேட் ஒருபேனா வைத்திருப்பதைப் பார்த்தாள் .திரைச்சீலைகளை ஒருமுறை நோக்கினாள் .அங்கு இருந்த ஜாடிகளின்பூக்களை சோதனைச் செய்தாள் .சிலவற்றை சரி செய்தாள் . கம்ப்யூட்டரை ஆன் செய்து வெல்கம் என்றவார்த்தையை திரையில் வரவழைத்தாள் . எல்லாம் மனதிற்கு திருப்தி தர தன் எம்டி பேச வேண்டிய குறிப்புகள்அடங்கிய பென் டிரைவை தன் கையில் கெட்டியாக பிடித்துக் கொண்டாள் . ஏற்கனவே அதனை போட்டுஸ்லைட்சை சரி பார்த்து விட்டதால் தைரியமாகவே இருந்தாள். எவ்வளவோ மறுத்தும் எம்டி அவளுக்கும் ஒருதலைப்பை கொடுத்து பேசச் சொல்லி விட்டார் ,அதனால் சிறு படபடப்பு அவளுள் இருக்கத்தான் செய்தது சரியாகபதினொன்றறைக்கு மீட்டிங் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது ,அதற்கு இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது அதனால்வாசலில் வந்து நின்று கொண்டாள் மாதவி.

வந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களை இருக்கையில் அமர வைத்தாள். எம்.டி.யும் அவரதுமகன் மட்டுமே இன்னும் வரவேண்டும் . அதற்குள் கண்ணாடி கதவினில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்துகொண்டாள் . அந்த நீல நிற சில்க் காட்டன் புடவையில் செழிப்பாகவே இருந்தாள். மெல்லிய தங்கச் செயின் ,சிறு தோடுகள் ,இரு வளையல்கள் ,சிறிய ஸ்டிக்கர் பொட்டு ,அதற்குக் கீழ் திருநீறு, என அம்சமாகவே இருந்தாள். காலடியோசை கேட்டு திரும்பியவள் சற்றே திகைப்படைந்தாள்.


‘ஐயோ ........இது என்ன ?சார் கூட அந்த கஞ்சி பார்ட்டி வருதே.இவர்தான் சத்யனோ ?’கடவுளே செத்தோம் ‘

“என்ன மாதவி எல்லாம் ரெடியா ?” என்ற கேள்விக்கு கூட பதில் அளிக்காமல் புதியவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மாதவி. அவன் உதடுகளில் அதே குறும்புச் சிரிப்புதவழ்ந்து கொண்டிருந்தது .

அதனை உணர்ந்த எம் டி

“ஓ ......இவன் தான் என்னோட ஒன் அண்ட் ஒன்லி சன் சத்யன் “என்று அறிமுகப்படுத்திவிட்டார்

“ஹலோ “என்று கைகளை நீட்டினான் சத்யன் ,சிரிப்பு மாறாமலே.

நிகழ்வுக்கு வந்தவள் போல் அவசரமாக “வணக்கம் சார் “என்று கைகளை கூப்பி னாள்

“இட்ஸ் ஓகே ....” என்று அவனும் பதிலுக்கு கைகளை கூப்பினான்.


இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தாள் மனம் இன்னும் கேன்டீனில் நடந்தவைகளையேஅசை போட்டது . ‘நான் எதுவும் மிக தவறாக கூறி விடவில்லையே ‘ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்தமுனைந்தாள். அவள் அவஸ்த்தையாய் நெளிவதை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யன் . இதற்குள்தயாநிதி முன்னுரையை ஆரம்பிக்க ,அவளது நினைவுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு ,அதில் கவனத்தைபதித்தாள் .ஆனால் சத்யனோ முழுக்க முழுக்க மாதவியையே கவனித்துக் கொண்டிருந்தான் .தயாநிதிபேசப்பேச லாவகமாக ஸ்லைடுகளை மாற்றிக் கொண்டே வந்தாள் . லேசாக தயாநிதி இருமினாலும் உடனேதண்ணீர் பாட்டில் மூடியைத் திறந்து அவர் புறம் தள்ளி வைத்தாள் .அவர் கூறுவதை உன்னிப்பாக கவனித்தாள்


அவள் பேசப்போகும் தலைப்பு வந்து விட அவளிடம் ஒப்படைத்து விட்டு அவர் இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவள் எழுந்து அனைவருக்கும் வணக்கம் கூறினாள் . பார்வை சத்யனிடம் இரண்டு வினாடி நீடித்துபின் அவசரமாக திசைதிரும்பியது. கம்ப்யூட்டரின் மௌசை தேவையே இல்லாமல் அசைத்து எந்த மாறுதலும்செய்யாமல் அந்த நேரத்தை தன் கவனத்தை ஒரு நிலை படுத்த துணையாக எடுத்துக் கொண்டாள்.அதற்குப்பிறகு சுத்த ஆங்கிலத்தில் அனைவருக்கும் புரியும் எளிமையுடனும், திருத்தத்துடனும் பேசியவளை நிஜமாகவேஆச்சர்யத்தோடுதான் பார்த்தான் சத்யன். ஆனால் தவறி கூட அவள் அவனது கண்களை சந்திக்கவே இல்லை.பேசி முடித்தவள் நன்றிதெரிவித்துக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தாள்.. பிறகு ஒவ்வொருவராகஅவர்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டனர். அதற்கு தயாநிதியும், மாதவியும்தேவைக்கேற்றாற் போல் பதிலளித்தனர். சாப்பிடும் நேரம் நெருங்க மாதவி சோனாவிற்கு மெசேஜ் மூலம் ‘தான்வர முடியாது’ என்று தெரிவித்து விட்டு நிமிர்ந்த போது சத்யன் இவளையே பார்த்துக் கொண்டிருப்பதுதெரிய‘என்ன ?’என்பதை போல் புருவத்தை உயர்த்தி என் கேட்டாள். அதற்கு அவனும் தோள்களைக்குலுக்கி‘ஒன்றுமில்லை ‘என்று தெரிவித்தான்.


சரவணபவனில் இருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டிருந்தது .அனைவரையும் அந்தத் தனி டைனிங்ஹாலுக்கு அழைத்துச் சென்று தேவையரிந்து கவனித்தாள் மாதவி

“நீயும் சாப்பிடு மாதவி “என்று தயாநிதி கூறினார்
“வேண்டாம் சார் நான் கொண்டு வந்திருக்கிறேன் ,பிறகு சாப்பிட்டு கொள்கிறேன் முதலில் நீங்கள் இந்தமாத்திரையை போட்டுக் போட்டுக் கொண்டு பிறகு சாப்பிடுங்கள் சார்" என்றாள் அவரது பேக்கில் கைவிட்டுமாத்திரைகளை எடுத்துக்கொண்டே,

“சூப்பர் டாட் பி.ஏ. கம் நர்ஸ் “என்று அவர் காதோடு கிசு கிசுத்தான் சத்யன்

"நீ சாப்பிட்டால் நான் சந்தோஷப்படுவேன் மாதவி" என்றார் தயாநிதி .

"ஆமாம் மாதவி பாயசம் சூப்பராக இருக்கிறது. அட்லீஸ்ட் அதையாவது சாப்பிடுங்களேன் " என்றான் அர்த்தம்பொதித்த புன்னகையோடு.அதன் பொருள் தெள்ளத் தெளிவாக புரிய சற்றே கன்றிச் சிவந்தது மாதவியின்கன்னங்கள் ,அதை ரசித்த வாறே தன் உணவை முடித்தான் சத்யன் .

தயாநிதி வற்புறுத்தலால் அவளும் ஏதோ பேருக்கு சாப்பிட்டு முடித்தாள். எல்லோரும் விடை பெற்று செல்லதயாநிதி சத்யன் மாதவி மட்டும் அந்த அறையில்,

"சார் எனக்கு சில வேலைகள் இருக்கிறது. நான் என் கேபினுக்கு கிளம்புகிறேன் " என்றவள் சத்யனை ஏறிட்டுஒரு முறை பார்த்து விட்டு வேகமாக நடந்தாள்.அவள் வெளியேறியதும்,

" ஒன் மினிட் டாட் " என்று அவனும் வெளியே விரைந்து மாதவியைதொடர்ந்தான் .


பின்னால் காலடி ஓசை கேட்கவும் திரும்பி பார்த்தாள். மாதவி சத்யனை பார்த்ததும் அவள் இதயம் தந்தியடிக்கஆரம்பித்து விட்டது ,கடவுளே இவனிடமிருந்து தப்பிக்கத்தானே இல்லாத வேலையை காரணம் காட்டி நான்வெளியேறினேன்.இவன் ஏன் இப்போது பின்னால் வருகிறான்? மனதில் கேள்வி எழ அவனை கண்டுகொள்ளாமல் முன்னேறினாள் மாதவி.

" மாதவி ஒரு நிமிஷம்" என்று வேக நடையுடன் வந்தவனை எப்படி அலட்சியப்படுத்துவது .
அதனால் நின்று என்ன என்பதைப் போல் முகபாவனையோடு அவனை நேக்கினாள் ." நாளைக்கு உங்கஅம்மாகிட்ட பாயசம் வைக்க சொல்றீங்களா?" குழப்பமாய் அவனை ஏறிட்டாள். " நாளைக்கு உங்க வீட்டுபக்கத்துல தான் விளையாடலாம்னு யோசனை செய்தேன். அதான் முன் கூட்டியே சொல்லி வைத்தால், நான்பந்தை தேட வரும் போது கொஞ்சம் பாயசம் அபிஷேகம் கிடைக்குமில்லையா " என்றான் குறும்பு மின்ன. சட்டென்று தன் உதட்டை கடித்து தன் தவறைவிழுங்கினாள் அவள் மனதைசமனப்படுத்திக் கொண்டபின்.

"பாருங்கள் சார், கேண்டினில் நடந்தவற்றுக்காக உங்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். ஏதோவிளையாட்டிற்காக பேசி விட்டேன். நன்றாக சரித்ததோடு அதனை மறந்தும் விட்டோம். நீங்கள் அதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன், எனக்கு வேலை இருக்கிறது நான் போகலாம் தானே?"என்றகேள்வியோடு அவனை ஏறிட்டாள்.


"கேரி ஆன்" என்று கைகளை கட்டிக் கொண்டு வராண்டாவின் சுவர் மீது சாய்ந்து நின்று கொண்டான்

“தேங்கி யூ" என்றவள் அவனை திரும்பிக் கூட பார்க்காமல் வேகமாக தன் அறைக்குச் சென்று ஒரு பாட்டில்தண்ணீரை ஒரே மூச்சில் குடித்தாள். அப்படி அவளது நாக்கு உலர்ந்து விட்டது.


‘ச்சே. ... இது என்ன உணர்வு அவனிடம் பேச நாக்கு எழ மறுக்கிறதே ஏன் ? கட்டுப்படுத்தி வரவழத்துக்கொண்டதைரியத்தோடு பேசி சமாளிக்க வேண்டியதாய் போயிற்று’தன்னைத்தானே கடிந்து கொண்டு தன்னைவேலையில் ஈடுபடுத்திக்கொள்ள முனைந்தாள் .

கம்ப்யூட்டரில் மூழ்கிப் போயிருந்த மாதவி தனக்கு முன்னால் அரவம் தெரியவும் தலையுயர்த்திப்பார்த்தாள்.அங்கே சத்யன் நின்றிருப்பதைப் பார்த்ததும் 'இன்னும் என்ன ? என்பதாக கண்களை சுருக்கிலேசானஅலுப்போடு பார்த்தாள் மாதவி.

"அய்யோ நான் பாயசம் பத்தி பேசவரலைங்க .உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன்"

தன் புருவ முடிச்சுகளை அவிழ்த்தவாறு தன் எதிரில் இருந்த இருக்கையைக் காட்டி" உட்காருங்கள் சார்" என்றாள்.அவன் அமர்ந்ததும்,

" எனக்கு எதுக்கு நன்றி !"அவனை நேரே பார்த்து கேட்டாள்.

" என் அப்பாவுக்கு ஒரு நல்ல பி.ஏ.வா மட்டும் இல்லாமல் ஒரு நல்ல வெல்விஷராகவும் இருக்கீங்களே அதுக்காக”


"ஓ ...அது நீங்க புகழற அளவுக்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை .அதுல என் சுயநலமும் இருக்கு"

"சுயநலமா ?"


"ம் .... எங்கள் சார் நன்றாக இருந்தால் தானே நாங்க நல்லா இருக்க முடியும்"

"ஸ்மார்ட் ஆன்சர் . ஐ லைக் இட்..... "

"தேங்க்யூ "

"ஐ லைக் யூ டூ " என்றான் தொடர்ந்து.

இந்த வார்த்தைகளில் அதிர்ந்து போனாள் மாதவி, இருப்பினும் அவன் கூறியது எதுவும் காதிலேயே விழாததுபோல்.

"எனக்கு இப்போ நிறைய வேலை இருக்கிறதே சத்யன் சார்" என்றவளின் பார்வை கதவைத் தொட்டுதிரும்பியது.

“ ஓ.... கே...ஓ...கே.. நான் கிளம்பறான் " என்றவன் வெளியேறினான். போன உயிர் திரும்பியது போல்உணர்ந்தாள் மாதவி. ஒரு பெருமூச்சுடன் வேலையைத் தொடர்ந்தாள் நாட்கள் நகர்ந்தன.


இதற்கிடையில் மாதவி சத்யனை மறந்தே விட்டாள் எனலாம் .எப்போதாவது தயாநிதி சத்யனை பற்றிபேசும்போது மட்டும் அவனது முகத்தை தன் நினைவுகளில் இருந்து தூசு தட்டி கண் முன் கொண்டு வர முயற்சிசெய்வாள் அவ்வளவே

இப்படியாக நாட்கள் ஓட ஒரு திங்கட்கிழமை காலை எம்.டி க்கு வழக்கம் போல குட் மார்னிங் சொல்ல ரூமிற்குள்நுழைந்தவளை சத்தியன் தான் எதிர் கொண்டான் .சற்றே விழி விரித்து தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியவள்அறையை முழுமையாக ஆராய்ந்தாள்


“அப்பாவை தேடறீங்களா மாதவி ?”என்ற சத்யனின் குரல் அவள் தேடலை நிறுத்தியது

“சார் வரலையா ?”என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்தாள்

"ம் ...... அப்பாவுக்கு உடம்பு சரியில்லை "

" ஏன் என்னாச்சு?"என்றவளின் குரலில் பதட்டம் தெரிந்தது.

" ஒன்றும் இல்லை மாதவி, நேத்து நைட் லேசாநெஞ்சு படபடன்னு இருக்குன்னு சொன்னார். அதான்அவரைஹாஸ்பிடல்ல வற்புறுத்தி சேர்த்து எல்லாடெஸ்டையும் எடுக்கச் சொல்லி இருக்கேன் "

"ஹஸ்பிட்டல் லையா? இப்போ எப்படி இருக்கார். பரவாயில்லையா நான் அவர் கூட பேசனுமே பேசலாமா?" என்றாள் அக்கரையாய்


“ம் ...செல்போன்அவர்கிட்டதான் இருக்கு. நீங்க பேசலாம்" என்றபடி மேஜையில் இருந்த லேண்ட்லைனைஅவள்புளம் தள்ளினான்..

" இல்ல சார் நான் அபீஸியலா பேசலைபர்சனலா பேசப்போறேன் என் மொபைலில் பேசிக்கறேன் தேங்ஸ் "என்றபடி ரூமை விட்டு வெளியேறினாள்.

அவளை ஆச்சர்யம் சுமந்த சத்யனின் கண்கள் தொடர்ந்தன.

அரை மணி நேரத்தில் வேகமாய் உள்ளே நுழைந்தாள் மாதவி “சார் இந்த கொட்டேஷனை மட்டும் கொஞ்சம் சரிபார்த்துட்டீங்கன்னா , நான் அனுப்பிடுவேன் சார். இன்னைக்கு தான் லாஸ்ட் டேட் " என்றபடி ஒரு ஃபைலைஅவனிடம் நீட்டினாள்


அதை வாங்கி பார்வையை ஓட்டியவன் சற்றே வியந்தான் . அழகான சொற்றொடர்கள் தெளிவான ஆங்கிலம்ஆங்காங்கே எழுத்துக்கள் பெரிதாக்கப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன

“இந்த அமௌன்ட் அப்பா சொன்னது தானா மாதவி ?”

“ம்......ஆமாம் சார் .மத்த விஷயம் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டீங்கன்னா அனுப்பிடுவேன் சார் “

“ம்......பர்பெக்ட் மாதவி “என்றவன் மாதவியிடம் ஃபைலை நீட்டினான்

“தேங்க்ஸ் சார் ,அப்புறம் இந்த வாரம் நம்ம ஆபீஸ் ஸ்டாப் வனிதாவுக்கு கல்யாணம் சார் “

" ஓ.... கிரேட்""

" அதுக்கு நம்ம ஸ்டாப்ஸ் எல்லோரும்போறதுக்கு ஒரு பஸ் அரேஜ் பண்ணனும் சார்"

“பண்ணிடுங்க எங்க சைன் போடனும்னுசொன்னீங்கன்னா போடுவேன்"

" ஓ.கே. சார் இந்த சாட்டர்டே ஈவினிங் சிசப்ஷனுக்கு பஸ் அரேஞ் பண்ணிடறேன். நீங்க தயாநிதி சார்கிட்டசொல்லி கொஞ்சம் அட்டண்ட் பண்ண சொல்றீங்களா? "

“ஏன் மாதவி நான் வரக்கூடாதா?"

" ஓ ... தாராளமா இப்போதுஎம்.டி. நீங்க தானே. நீங்களும் வரலாம் "என்றவள் அவனிடம் விடை பெற்றுக்கொண்டுசென்றாள்.


மாதவியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ரசித்தான் சத்யன் .அப்படி ஒரு சுறுசுறுப்பு அவனுக்கு அங்குவேலையே இல்லை எனலாம். கையெழுத்து போட மட்டுமே தான் இங்கே அமர்ந்திருக்கிறோமோ என்ற சந்தேகம்கூட வரும் .எல்லாம் தந்தை தயார்படுத்தி வைத்த விதம் .அவளே எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவெடுத்துஅதை அவனிடம் கூறி" இப்படி செய்யலாமா சார்" என்ற கேள்வியை வேறு கேட்ப்பாள். அவள் கூறுவதை நிச்சயம்மறக்கக் கூடியதாய் இருக்காது அதனால் சரி என்று தான் கூறுவான்.

அவள் வேலையில் மூழ்கி இருக்கும் போது அவளது முக பாவங்கள் மாறுவதை மென்மையாக ரசிப்பான் .அடிக்கடி புருவத்தை உயர்த்துவாள் உதட்டை சிழிப்பாள். அழகான விரல்களை காற்றில் அசைத்து ஏதோ கணக்குபோடுவாள் .ஏதாவது அவள் கோப்பில் தவறு செய்திருந்தால் அதை அவளே கண்டுபிடித்து நுனி நாக்கை கடித்துஅவள் தலையில் அவளை தட்டிக் கொள்வாள் .இதையெல்லாம் பார்த்து அதிகமாக சத்தம் வராமல் சிரிப்பான்.ஏதோ ஒரு சக்தி அவனை அவள் புறம் இழுத்தது .சில சமயம் அவன் தன் கண்களை கண்டிப்பதுண்டு .ஒருபெண்ணிற்கு தெரியாமல் அவளை ரசிப்பது மிகவும் தவறு என்று .ஆனால் அதை துளியும் சட்டைபண்ணவில்லை அவனது கண்கள்.

பழகிய ஐந்தே நாட்களில் ஒரு பெண் தன் மனதை இத்தனை தூரம் கவர முடியுமா ? என்பது அவனுக்கேஆச்சரியமாக இருந்தது

“சார் இன்னைக்கு நீங்க சைன் போட வேண்டிய பைல்கள் எல்லாம் டேபிள் மேல் வெச்சிருக்கேன்,ஒரு தடவைபார்த்து கையெழுத்து போட்டு விடுங்கள் இன்னும் அரை மணி நேரத்தில் பஸ் வந்திடும் நாங்க எல்லாரும் பஸ்லபோயிடறோம். நீங்களும் வந்துடுங்க சார் . அப்போ நான் கிளம்பறேன் “ என்று கூறியவள் அவன் தலையைஅசைக்கவும் கிளம்பிவிட்டாள்

இருபது நிமிடத்தில் தன் அறைக்குள் நுழைந்த மாதவியை ஏறிட்டுப் பார்த்த சத்யனுக்கு பேச்சே வரவில்லைகண்கள் அகலமாக விரிந்தது
 
3

வானின் நீல வண்ணத்தில் சின்ன ஜரிகை கொண்ட பட்டுப்புடவையில் தேவதையாக இருந்தாள் மாதவி. அடர்ந்த கருங்கூந்தலை ஒரு கிளப்புக்குள் அடக்க முடியாமல் அடக்கி இருந்தாள் .தலை குளித்ததாலோ என்னவோ நெற்றியில் இருந்த முடிகள் அவள் கட்டுப்பாட்டில் இல்லாமல் முகத்தில் விழுந்து அவளுக்கு தொல்லை கொடுத்தன. .இருப்பினும் முகம் கோணாமல் அவற்றை ஒதுக்கிய வண்ணமே அவள் நடந்து வந்தாள்.



"ஹும் . . . . அந்த முடிகள் கொடுத்துவைத்திருக்கின்றன" என்று பெருமூச்சுவிட்டான் சத்யன்.



துறுதுறுக்கும் அவளது விழியை பார்த்தால் தம் மதியை இழந்து விடுவோம் என்று நன்கு அறிந்து கொண்டான் - அதனால் கோப்புகளில் கவனம் இருப்பது போல் காட்டிக் கொண்டான் .







அவளது டேபிளில் போய் எதையோ தேடினாள் சிறிது நேரத்திற்கு பிறகு அவனது டேபிளின் அருகே வந்து நின்றாள்



"என்ன மாதவி ஏதாவது தொலைத்துவிட்டீர்களா ?" என்ற கேள்வியோடு அவளை பார்த்தான் .



ஆமாம் சார் என்னுடைய பர்சை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை ,அதான் கோப்புகளை வைக்கும் போது இங்கே கை தவறி வைத்து விட்டேனோ என்று பார்க்க வந்தேன் " என்று கண்களால் அவன் மேஜையை அலசினாள் .



அவளுக்கு உதவுவதற்காக அவனும் பேப்பர்களை தூக்கி அடியில் இருக்கிறதா என்று பார்த்தான். சில நொடிகள் கரைந்த பின் அந்த கருப்பு நிற பர்ஸ் அவன் கண்களில் சிக்கியது அதை சட்டென்று எடுத்தவன் எப்படிப் பிடிப்பது என்று தெரியாமல் தலைகீழாய் பிடித்து விட்டான் . அந்த பர்ஸ் திறந்தே இருந்ததால் அதிலிருந்த அனைத்தும் கீழே சிதறியது .



"சாரி மாதவி திறந்திருந்ததை கவனிக்கலை " என்று அவசரமாக குனிந்து சிதறியவற்றை சேகரித்தான் .மாதவியும் சேர்ந்தே சேகரித்தாள் . அப்போதுதான் சத்யன் அந்த புகைப்படத்தை பார்த்தான்



"இது யார் மாதவி?" என்று அவளிடமே கேட்டான் -



"என் அப்பா அம்மா சார் "



"சரி அப்போ இது யாரு ?" என்று இன்னொரு போட்டோவை காட்டினான். அதில் இருந்தது மாதவி தான் சிறிய வயதில் எடுத்தது ரெட்டை ஜடை போட்டு நிறைய பூ வைத்து கைகள் கொள்ளா வலையல் போட்டு எல்லா பல்லையும் காட்டி இளித்துக் கொண்டிருந்தாள்.



அதை பார்த்ததும் முகம் சிவந்து விட்டது மாதவிக்கு .



" ம் ...சொல்லுங்க யார் இது ?" என்றான் குறும்பாக சிரித்து.



நான்தான் சார் எல்கேஜி படிக்கும் போது எடுத்தது "என்றாள் அவன் கண்களை பார்க்காமலே .



"செம சூப்பரா இருக்கீங்க இதுல ,இப்போ இந்த அழகுல நீங்க பாதி கூட இல்லை . அது என்ன பெப்ஸோடண்ட் பேஸ்ட் விளம்பர மாடல் மாதிரி ? ஓ....இந்த சின்ன வயசிலேயே மாடலிங்கா ஓ..." என்று அவளை வம்புக்கு இழுத்தான் , அவள் இன்னமும் சிவந்தாள்



"ஐயோ சார் நீங்க வேற கொடுங்க அந்த போட்டோவை "என்று பிடுங்கிக் கொண்டு ஓடினாள்.



அவள் விரல்கள் அவனை தீண்ட உண்மையில் ஏதோ ஒன்று அவனுள் கரைந்தது



எல்லோரும் பஸ்சில் ஏறிவிட்டார்களா என்று சரி பார்த்தாள் மாதவி . எல்லோரும் சரியாக இருக்க கீழே இறங்கி அருகில் நின்றிருந்த டிரைவரை அணுகினாள் .



"எல்லோரும் வந்தாச்சு தாமஸ் அண்ணா கிளம்பலாமா ?" என்றாள்

"சரி கண்ணு "என்று தன் இருக்கைக்கு திரும்பினார் அந்த நாற்பதைத் தொட்ட தாமஸ்



"மாதவி "என்ற சத்யனின் குரல் கேட்டு வண்டியில் ஏறப்போன மாதவி நின்றாள்.



அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தான் சத்யன் .



"என்னாச்சு சார் ஏதாவது தப்பா டைப் செஞ்சுட்டேனா?" அவளுள் படபடப்பு தோன்றி கொண்டது .



"இல்லை மாதவி இப்போ அவசரமா ஒரு இடத்துக்கு போகணும் அதான் "



"எங்க சார் ?"



"அந்த மலர் பில்டர்ஸ் கொட்டேஷனை நான் நேர்ல போய் கொடுக்கிறது தான் நல்லதுன்னு நினைக்கிறேன் "



"சரி சார் அப்போ நீங்க ரிசப்ஷனுக்கு வரலையா ?"



"வரேன் மாதவி அந்தக் கொட்டேஷனை கொடுத்துட்டு "



"சரி சார் "என்று பேருந்தில் ஏற முயன்றவளை மறுபடியும் நிறுத்தினான் -



"எனக்கு தனியா போய் கொடுக்க ஒரு மாதிரியா இருக்கு உங்களுக்கு அவங்களை நல்லா தெரியுமே அதான் ..." என்று இழுத்தான் .

சில வினாடி மௌனத்திற்குப் பின் "சரி சார் ரெண்டு நிமிஷம் "என்று உள்ளே சென்று சோனாவிடம் பேசி விட்டு இறங்கினாள் தாமஸிடம்சென்று



"பத்திரம் அண்ணா மண்டபம் தெரியுமில்லையா ?"



"தெரியும் கண்ணு "



"சரி நீங்க கிளம்புங்க"



அனைவருக்கும் கையசைத்து விட்டு அவள் திரும்பவும் சத்யனின் கார் வந்து அவளை உரசி நிற்கவும் சரியாக இருந்தது .



அவள் பின்னால் செல்ல எத்தனிக்கும் முன் அவன் முன் கதவை திறந்து விட்டான் .



இதற்குப் பிறகு பின் இருக்கைக்கு சென்றால் அவனை அவமானப்படுத்துவதாகி விடும் . எனவே வேறு வழி இன்றி முன் இருக்கையில் அமர்ந்தாள் .



ஏனோ இதயம் திசைமாறி அடித்தது தயாநிதியுடன் எத்தனையோ முறை பணி நிமித்தமாக காரில் தனியே சென்றிருக்கிறாள் . அப்போதெல்லாம் இல்லாத ஏதோ ஒரு பயமா ? கிளிர்ச்சியா ? இப்படி இதுதான் என்று சொல்ல முடியாத உணர்வில் தவித்தாள் .காரணம் அவளுடன் பயணிப்பது அவள் வயதை ஒத்த ஒரு ஆண் என்பதாலா?. இவன் இருந்தால் நமக்கென்ன ? என்றும் நினைத்துக் கொண்டாள். இப்படி பல தரப்பட்ட குழப்பங்களினால் அவள் அமைதியாகவே இருந்தாள் .



இந்த மௌனத்தை கலைக்க வேண்டுமே என்பதற்காக,



" நீங்க இந்த சாரில ரொம்ப அழகா இருக்கீங்க மாதவி " என்று பேச்சை தொடங்க முயன்றான்.



"தேங்க்ஸ் சார் " என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.



அவன் விடுவதாக இல்லை "ஏன் காலையிலேயே இதை கட்டி வரவில்லை ?"



"பட்டுப்புடவை உடுத்திக் கொண்டு எப்படி சார் வேலை பார்க்க முடியும் ?"



"ஓ... நானும் பல நாள் யோசித்திருக்கிறேன் திருமணத்திற்கு சென்றால் பட்டுப்புடவை கட்டாயம் உடுத்த வேண்டுமா? என்று ,இன்றுவரை பதில் கிடைக்கவில்லை மாதவி "என்றான் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு



"அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை சார் .அம்மாவின் தொல்லை தாங்க முடியாமல் தான் என் வயதில் இருப்போர் பாதிக்கும் மேல் பட்டுப்புடவை உடுத்துகிறார்கள் "என்றாள் சாதாரணமாகவே



“ஓ ...... என்று அவளைப் பார்த்து கூறியவன் , சாலையின் குறுக்கே வந்த ஆட்டை கவனிக்கவில்லை ,அருகில் வந்தவுடன் தான் இருவருமே பார்த்தார்கள் .



“ஐயோ ! சத்யன் ஆடு “என்று கண்களை இறுக மூடிக் கொண்டாள்



சடன் பிரேக் போட்டு விட்டு சற்று வருத்தமாகவே தான் நிமிர்ந்து சாலையை பார்த்தான் சத்யன்



மிரண்டு போன ஆட்டுக்குட்டி “மே .......மே .......” என்று கத்தியபடி வேகமாக சாலையை கடந்து தாறுமாறாக ஓடியது .



சற்றே நிம்மதி அடைந்தான் சத்யன்



அப்போதுதான் உணர்ந்தான் மாதவியின் கைகள் அவன் தோள்களை பிடித்திருந்தன , பிடித்திருந்த கைகளின் மேல் அவள் தலை கவிழ்ந்திருந்தாள். இந்த சூழல் அவனை என்னவோ செய்தது . உடனே சூழலை மாற்ற வேண்டும் என்று அவன் அறிவு கூறியது .இல்லையேல் தவறாக ஏதேனும் நடக்கக் கூடும் . ஆனால் அவனது இதயத்திற்கோ, இப்படியே பல யுகங்கள் இருந்தால் என்ன ? என்று தோன்றியது .இந்த சில நொடிப் பொழுதில் நல்லவேளையாக அவனது அறிவு வென்றுவிட்டது .



“அந்த ஆடு ஓடிவிட்டது மாதவி “என்றான் அவள் காதருகே .



சூடான மூச்சுக்காற்று தன் காதில் பட சட்டென்று தலை தூக்கி சாலையைப் பார்த்தாள் அந்த ஆடு தூரத்தில் ஓடுவது தெரிந்தது



“அப்ப்....பா...... இப்பதான் நிம்மதியா இருக்கு “ என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். “போகலாம் சார் “என்றாள் அந்த ஆட்டை பார்த்தவாறே



“ம்௯ம்.....இப்படி கையை அழுத்திப் பிடித்திருந்தால் நான் எப்படி மாதவி கீர் போடுவது “ என்று கூறியவன் விஷமமாய் சிரிக்க சட்டென்று கைகளை எடுத்தவள் தன் முகச் சிவப்பை மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே வேடிக்கைப் பார்ப்பது போல நடித்தாள்.



“கடவுளே இந்த ரோட்டுல அடிக்கடி ஆடு கிராஸ் பண்ணனும் “என்று சத்தமாகவே வேண்டிக் கொண்டான்



“ஏன் ?” என்றவாறு அவனை புரியாமல் பார்த்தாள்



“நீ இப்படி பயப்படறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு “என்ற அவனை என்னவென்று சொல்வது .



அதற்குப் பின் அவன் கண்களை தவிர்த்தாள் மாதவி



ஏனோ அதற்குப் பின் இருவரும் பேசவில்லை



அவர் அவர்களது நினைவுகளில் மூழ்கி விட்டனர் போலும் .அதிரடியான பாட்டுச் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு சுற்றுச்சூழலை உணர்ந்தாள் மாதவி மண்டப வாசலில் கார் நின்று கொண்டிருந்தது .



புரியாமல் விழி விரித்து அவனை கேள்வியோடு நோக்கினாள்



‘ம்.....இந்த பார்வைக்கு ஒன்றும் குறைவில்லை, உன்னை பட்டுப்புடவையில் பார்த்த வினாடி உன்னை முழுதாகவே கடத்த வேண்டும் என்று தான் நினைத்தேன் .ஆனால் அது தான் முடியாதே !அதனால் ஒரு மணி நேரமேனும் உன்னுடன் சுற்றலாம் என்று தான் பொய் கூறினேன் ‘என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்



“கொட்டேஷன் ஃபைலை ஆபீஸ்லேயே விட்டுட்டு வந்துட்டேன் மாதவி. அதான் நேரே மண்டபத்துக்கே வந்துட்டேன் “என்றான் தோள்களை குலுக்கி சாதாரணமாக



தன்னைச் சுற்றி ஏதோ நடக்கிறது என்ற சிந்தனையை கலைக்க முடியாமல் மண்டபத்தினுள் சென்றாள்



கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் .அலுவலக நண்பர்களை காணவில்லை . பஸ் வந்திருக்காது ,சத்யன் ஏதோ குறுக்கு வழியில் புகுந்து சீக்கிரம் கூட்டி வந்து விட்டார் என்று நினைத்தபடி கச்சேரியில் தன் கவனத்தை திருப்பினாள்.



“ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே ...... என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே ......” என்று உருகி பாடிக்கொண்டிருந்தார் பாடகர்



சட்டென மாதவியின் கண்கள் சத்யனை தேடி நான்கே வினாடிகளில் அவன் கண்களைச் சந்தித்தன .அவனோ அவளுக்கு முன்பாக அவள் கண்களை கவனித்துக் கொண்டிருந்தான் . அவள் பார்க்கவும் உடனே இரு புருவத்தை உயர்த்தி மென்மையாக சிரித்தான்.



‘ச்சே......ச்சே......இது என்ன வெட்கம் கெட்ட கண்கள் ‘ என்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு இவனுக்கு உதடுகள் மட்டும் சிரிக்காமல் முகமே சிரிக்கிறது. அதுவும் அவன் மீசை அவன் உதடுகளை விட அதிகமாக சிரிக்கிறது .’சிரிப்பை பார் சிரிப்பை ‘என்று மனதினுள் இன்பமாய் கோபித்துக் கொண்டாள். என்னென்னவோ நினைவுகள்



“நம்ம பஸ் வந்து விட்டது மாதவி, தாமஸ் அண்ணா உன்னை அழைக்கிறார் “ என்ற சத்யனின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள்







“என்ன மேடம் இவ்ளோ ஷாக் ஆகறீங்க ? ஏதாவது அழகான கனவா ? அதுவும் இமைகளை மூடாமலே” என்று கேட்டவனை சட்டை செய்யாமல் வேகமாக வாசலுக்கு விரைந்தாள்.



சோனாவின் அருகே சென்று நின்று கொண்டாள். அவள் பின்னாலேயே வந்த சத்யன் அனைவருக்கும் வரவேற்பு கொடுக்கும் தோனியில் எல்லோரிடமும் பேசிக் கொண்டு உள்ளே செல்லுமாறு கூறிக் கொண்டிருந்தான்



“ஏய் மாதவி கல்யாணத்துக்கு வந்துட்டு இப்படி தலையில பூ இல்லாம இருக்கியே ? நாங்க எல்லாரும் அடம்பிடிச்சு பஸ்சை நிறுத்த சொல்லி பூ வாங்கி வெச்சுகிட்டு தான் வந்தோம் “



அதற்குள் சத்யன் இவர்களை நெருங்க



“ என்ன சார் நீங்க, எங்க மாதவி இவ்வளவு அழகா பட்டுப் புடவை எல்லாம் கட்டிக்கிட்டு தேவதை மாதிரி இருக்கா, தலையிலே பூ இல்லாம ஏதோ குறையற மாதிரி இருக்கு ,வழியில் நிறுத்தி இருக்கக்கூடாதா ?”என்று கோபமாகவே கேட்டாள்



“அவ்வளவுதானே சிஸ்டர் , வாங்கிட்டா போச்சு “என்று அருகிலிருந்த ஒரு கடையை நோக்கி நடந்தான்



“அதெல்லாம் வேண்டாம் சார் , வாங்க சார் “என்று கத்தியவளின் குரலை அவன் இப்போது சட்டை பண்ணவில்லை.

“என்ன சோனா நீ வேற “என்றவள் வேகமாக சத்யனை பின் தொடர்ந்து ஓடினாள்



“மல்லி கொடும்மா “ என்று நூறு ரூபாயை நீட்டினான்.



“எத்தனை முழம் தம்பி ?” என்ற பாட்டியின் உதடுகள் வெத்தலையின் உதவியால் சிவந்திருந்தது



எத்தனை முழம் ? என்று அவன் யோசிக்கும் போதே மாதவி அங்கே மூச்சிரைக்க வந்து நின்றாள்



“இதோ இவங்களுக்குத்தான் நீங்களே எவ்வளவு தோணுதோ கொடுங்க “ என்றான்



“ம்....பொண்ணு . அந்த அம்மன் கோயில் சிலை மாதிரி இல்ல இருக்கு .அடர்த்தியான முடி வேற அதனால ஒரு நாலுமுழம் தர்றேன் தம்பி”.



“ம்......கொடுங்க “ என்று நூறு ரூபாயை மறுபடியும் நீட்டினான்



“சார் .....ஒரு நிமிஷம் “என்ற அவள் குரலுக்கு திரும்பினான்



“பணம் நான் கொடுக்கிறேன் சார் “என்றாள் தயக்கமாய்



“ஏன் நான் கொடுத்தால் இந்த பூ உங்கள் தலையில் நிற்காதோ ?”



“அதற்கு இல்லை சார் என்னோட சென்டிமென்ட் சம்பந்தப்பட்டது... .அதான்.....” என்று இழுத்தாள்



“பூவுல என்னங்க சென்டிமென்ட் ?”



“அதெல்லாம் உங்களுக்கு புரியாது .தயவு செய்து நானே கொடுக்கிறேன் . ப்ளீஸ் சார்” என்றாள் மிகவும் கெஞ்சுவதுபோல்



ஏனோ அவளை பார்க்க பாவமாக இருந்தது .சென்டிமென்ட் என்று வேறு சொல்லிவிட்டாள். அதோடு இன்று அவளிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு இருக்கிறோமோ என்ற உறுத்தலும் வந்துவிட அமைதியானான் சத்யன்.



பாட்டி கொடுத்த பூவை வாங்கி தலையில் சூடிக்கொண்டாள்.



“ போகலாம் சார்” என்றவனை ஏறிட்டு பார்த்தவன் உண்மையில் சொக்கித்தான் போனான் . சோனா சொன்னது போல் இத்தனை நேரம் இந்தப் பூ இல்லாதது ஒரு மைனஸ் தான் .



“சரி பாட்டி வர்றேன்” என்று பூக்கார பாட்டியிடம் விடை பெற்றான்.



"சரி ராசா ... ..உங்க ஜோடிப் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்குப்பா" என்றாள் போனசாக வாய்விட்டு சிரித்து விட்டான் சத்யன்



" எதுக்கு இப்போ சிரிக்கறீங்க எத்தனை முறை நான் உங்களை சார் சார்னு கூப்பிட்டேனே .ஒருமுறை கூட வா அந்தப் பாட்டியின் காதில் விழவில்லை .இப்போ இந்த வாக்கியத்தை நாம் கேட்டோமா ?"

"நீங்கள் ஏன் இதற்கு இவ்வளவு கோபப்படுகிறீர்கள் .ஏதோ அவர்கள் வேலை நினைவில் நீங்க சொன்னதை கேட்காமல் இருந்திருக்கலாம். தினமும் நிறைய நபர்களிடம் கூறும் வாக்கியத்தை நம்மிடமும் உபயோகித்திருக்கலாம் . இதற்கெல்லாமா கோபப்பட வேண்டும்" என்று அவளை சமாதானப்படுத்தினான்.,



மண்டபத்தை நோக்கி இருவரும் மெதுவாகவே நடந்தனர்.



" அது என்ன பூ சென்டிமென்ட் மாதவி நான் தெரிஞ்சிக்கலாமா ?சொல்லக் கூடாது என்றால் வேண்டாம் " என்று அவளை கேட்டுக் கொண்டான்.



இவன் இப்படி கேட்டவுடன் எப்படி சொல்லாமல் இருக்க முடியும்.



" அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை சார். அப்பா, அண்ணா, தம்பி தவிர மூன்றாவது மனிதனிடம் பூ வாங்க வேண்டும் என்றால் ?" என்று கூறி நிறுத்தினாள்.



"வேண்டும் என்றால்?"அவனும் கேள்வியாகவே கேட்டான்.



"அவர் ....என்... கணவராக இருக்க வேண்டும் " என்று கூறியவள் வேகமாக மண்டபத்தினுள் சென்று மறைந்து விட்டாள்.



அதன் பொருள் சற்று தாமதமாக புரிய அவனுக்குள் சிரித்துக் கொண்டு அவளை பின் தொடர்ந்தான்.



பரிசு கொடுத்து விட்டு சாப்பாடு முடிந்து அனைவரும் கிளம்பும் வரை ஒரு சில விழி உரசல்கள் இருவருக்கும் நிகழத்தான் செய்தது..

மணமக்களிடம் விடை பெற்றுக்கொண்டு அனைவரும் பேருந்து இருக்குமிடத்தில் கூடினர்.



"சரி சார் நாங்க கிளம்புறோம் "மென் குரலில் கூறினாள்.



" எவ்வளவு தூரம் இந்த பஸ் போகும் மாதவி" என்று வினவினான் சத்யன்.



"ஆபீஸ் வரைக்கும் போகும் சார். நடுவில் யார் வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம்.ஏனெனில் ஆபீஸில் சிலர் அவர்களது வண்டியை வைத்திருக்கிறார்களே அதனால் " என்றாள் சோனா.



" நானும் உங்களுடன் பஸ்ல வரலாமா? ஆர்வமாகக் கேட்டான்.



"ம்.... வரலாம் ...... ஆனால் உங்கள் கார் ?" என்று இழுத்தாள்



"காரை வேண்டுமானால் கோவிந்தனிடம் கொடுத்து அலுவலகம் வரை ஓட்டி வரச் சொல்கிறேன் "



" அப்போ சரி "



“பஸ்சில் எனக்கு இடம் இருக்குமா?"



"கண்டிப்பா சார். நாங்க யாருமேசீட்டில் உட்கார மாட்டோம்"



" பின்ன, மேல்மாடிலயா ?என்றான் குறும்பாக.



" அதான் இல்ல,எங்களுக்குள்ள ஒருகொள்கை இருக்கு பங்ஷனுக்கு முன் பங்ஷனுக்கு பின் "



"அடேங்கப்பா கேக்கவே பயங்கரமா இருக்கே. அதற்குரிய விளக்கம் கிடைக்குமோ?"



" கண்டிப்பா பங்ஷனுக்கு முன் ஒப்பனை கலையக் கூடாதுன்னு அடக்காமா சீட்ல உட்கார்ந்து வருவோம். ஆனா பங்ஷனுக்கு பின் என்ன கவலை .தாமஸ் அண்ணா ஒரே குத்துப் பாட்டா போடுவார் நாங்க எல்லோரும் டான்ஸ் தான் " என்றாள் உற்சாகமாக .



"டான்சா .....!!!"ஆச்சர்யமாக விழிகளை விரித்தான்.



"ம் ...... பின்ன எதுக்கு வண்டி வைச்சிருக்கறவங்க எல்லாம் ஆபீஸ்லயே விட்டுட்டு பஸ்ல வராங்க .ஏன் கோவிந்தன் கூட உங்க காரை எடுத்துட்டு போறதுக்கு மனசுக்குள்ள நிச்சயம் உங்களை திட்டுவார்" என்றாள் ரகசியமாய் கூறுவது போல்.



"இது அப்பாவுக்கு தெரியுமா" என்று கேட்டான் அதே ரகசியக் குரலில் .



"அய்யோ அவ்வளவுதான் சாப்டர் குளோஸ் தெரியாது சார். அவர் சமர்த்தா கார்ல வந்து கார்லயே போயிடுவார் .உங்களை மாதிரி அடம்பிடிக்க மாட்டார்" என்றாள் துடுக்காகவே .



"ஸ்மார்ட் ஆன்சர்" என்று அவளை பாராட்டினான்.

எல்லோரும் வந்து விட்டார்களா என்று சரி பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி. அதற்குள் கோவிந்தனைப் பார்த்து தன் கார் சாவியைக் கொடுத்து விபரத்தைக் கூறினான் சத்யன். அவன் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.



" இந்த ஒரு தடவை கோவிந்த் ப்ளீஸ் " என்றான் கெஞ்சுவது போல்.



" அட என்ன சார் இது .உங்களுக்காக இது கூட வா செய்ய மாட்டேன் " என்று சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.



பேருந்து கிளம்பியது.ஆடியோ செட்டில் மெலடி பாடல்களே ஒலித்தன.



" என்ன தாமஸ் அண்ணா ஸ்ருதியே இல்ல சும்மா பட்டய கிளப்புங்க " என்று கத்தினாள் சோனா.



"சத்யா தம்பி இருக்கேன்னு தான் கண்ணு" என்று தயங்கினார்.



"எல்லா தம்பியும் இப்போ எங்க ஜோதில ஐக்கியம் ஆயாச்சி .நீங்க குத்து பாட்டு போடுங்க" என்று அவளும் உரக்கவே கூறினாள்.



பேருந்தில் இருந்த அனைவரும் "ஊ ......" என்று ஆரவார ஒலி எழுப்பினார்கள்.



சத்யனுக்குள் புல்லரித்தது. கடைசியாக கல்லூரி நாட்களில் தான் இப்படி கூச்சல் கும்மாளம் என்று நாட்களை கடத்தியது மறுபடியும் அந்தக் கனா காலத்திற்குள் நுழைந்தது போல் எண்ணிக் கொண்டான். பேருந்தில் இருந்த அனைவரும் நடைபாதையில் தான் நின்று கொண்டு இருந்தார்கள். அங்கு இருந்தவர்கள் யாரும் கலா மாஸ்டர் இல்லை தான் இருப்பினும், அவர்களுக்கு தெரிந்த நாட்டியத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். இங்கு தான் எத்தனை மோசமாக ஆடினாலும் கைத்தட்டல் கிடைக்கும்.



அன்றைய அதிரடி பாடல்களின் தொகுப்பு வீரிட்டுக் கொண்டிருந்தது. எல்லோரும் ஒருவரை ஒருவர் கேலிப்பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்தான் சத்யன் மாதவியும் அவளது இருக்கையில் அமர்ந்திருந்தாள். எல்லோரும் ஆடுவதற்கு ஏற்ப கைகளை தட்டிக் கொண்டிருந்தாள்.



சோனா அவளை கவனித்து விட்டாள்.



" என்ன தில்லானா மோகனாம்பாள் நீங்க டான்ஸ் ஆடமாட்டீங்களோ ? சரி உனக்கு ஏத்த பீட் கொடுக்க சொல்றேன் " என்று தாமஸ்ஸை நோக்கி நடந்தாள்.



"கலைவாணியே உனைத்தானே நினைத்தேன் " என்று நாட்டிய சங்கீதம் ஒலித்ததும் அனைவரும் அவர்களது இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.



"என்ன..... என்ன ...ஆச்சு ?" என்று விசாரித்த சத்யனிடம்



" இது மாதவி டைம் " என்று பதிலளித்தார்கள்.



"ஏய், சோனா இன்றைக்கு வேண்டாமே ப்ளீஸ் .நாட் பீலிங் வெல் "



"நோ ..... ரோ... அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. நீ ஏன் சொல்ற " என்று பிரகாஷ்ராஜ் பாணியில் கூற எல்லோரும் சிரித்து விட்டார்கள்.



லேசாக வெட்கப்பட்டு ஓரக்கண்ணால் சத்யனைப் பார்த்தாள்.



அவன் ஆச்சர்யமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.v
 
மல்லிச்சரம் -4

அனைவரும் ஒன்றுகூடி வற்புறுத்தவே முன்னேறிச் சென்று அபிநயம் பிடித்தாள். எல்லோரும் ஆவலாக ரசித்துக் கொண்டிருந்தனர் .நிஜமாகவே சத்யனுக்கு ஆச்சரியம் தான் அவள் நடனமாடுவதை அருகில் சென்று பார்க்க விரும்பினான்.



“எனக்கு இங்கே சரியாகத் தெரியவில்லை நான் முன் சீட்டிற்கு செல்கிறேன் “ என்று கூறி இரண்டு அடி எடுத்து வைக்கவும் ,தாமஸ் சடன் பிரேக் பிடிக்கவும் சரியாக இருந்தது இரண்டு கைகளையும் உபயோகித்து அபிநயம் பிடித்துக் கொண்டிருந்ததனால் சட்டென்று பிடிமானம் எதுவும் கிடைக்காமல் விழப்போனவள் அதிர்ஷ்டவசமாகவோ துரதிஷ்டசமாகவோ சத்யனின் மேல் ஒரு பூ மாலையைப் போல் விழுந்தாள். அவனும் ஒரு பூவை அணைப்பது போல் ஒரு கையால் அவளை அணைத்து மறுகையால் பஸ்சின் மேல் கம்பியை பிடித்து கால்களை ஊன்றி திடப்படுத்த முயற்சித்தான். அதற்குள் வண்டியும் தன்னை சரிப்படுத்திக் கொண்டது.



சட்டென்று விலகி நின்றாள் மாதவி. முகத்தில் பல்வேறு பாவங்கள். அதற்கு சத்யனால் விளக்கம் கண்டுபிடிக்கவே முடியவில்லை ."சாரி .... சார்" என்றாள் குரலே எழும்பாமல் .அவன் பதிலேதும் சொல்லாமல் அவளையே குறுகுறுத்துக் கொண்டிருந்தான்.



நல்லவேளையாக எல்லோருடைய கவனமும் சாலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று ஜன்னல் வழியேதான் இருந்தது. அதனால் இவர்களது பார்வை பரிமாற்றத்தை யாரும் கண்டிருக்க மாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள் மாதவி.



அதற்குப் பின் எல்லோரும் அரட்டைக் கச்சேரியில் ஈடுபட்டனர்.ஒருவரை ஒருவர் கலாட்டா செய்துகொண்டு கலாய்த்துக் கொண்டு அந்தப்பேருந்தே அதிரும்படி சிரித்து அவர்கள் கொட்டமடித்துக் கொண்டிருந்தார்கள்.



ஏனோ அவனது அணைப்பு அவளது உள் மனதை குறு குறுக்கச் செய்தது. மனம் அந்த நிகழ்ச்சியையே அசை போட்டுக்கொண்டு முகத்தின் ரத்தச் சிவப்பையும் , உதடுகளின் புன்னகையையும் குறைய விட மாட்டேன் என்று அடம் பிடித்தது. உள்ளத்தின் உணர்ச்சியை எவ்வளவு கட்டுப்படுத்தியும் முகத்தில் தெரியத்தான் செய்தது. சும்மாவா சொன்னார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று இப்படி பல்வேறு சிந்தனைகளில் மூழ்கி இருந்தாலும் சத்யனின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை மட்டும் தவிர்த்து விட்டாள். அப்படி பார்த்தால் தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ? என்ற பயம் அதிகமாகவே இருந்தது மாதவிக்கு .அவளை அடிக்கடி துளைத்தெடுக்கும் சத்யனின் பார்வையை அவள் உணராமல் இல்லை தான். இருப்பினும் தன்னை கட்டுப்படுத்தின் கொண்டாள்.



இறங்க வேண்டியவர்களை ஆங்காங்கே இறக்கி விட்டு பேருந்து அலுவலகத்தினுள் பிரவேசித்தது.



அனைவரும் இறங்க யத்தனிக்கையில் சோனா பேசினாள்.



“ யாரும் இறங்காதீர்கள் "



"ஏன் "" என்பது போல எல்லோரும் ஒரு வினாடி அவளை பார்த்தனர்.



" எல்லோரும் ஆடினோமே நம்ம சத்யன் சார் ஆடுவதைப் பார்க்க வேண்டாமா?" என்று அவள் கூறியது தான் தாமதம் கூட்டம் ஆரவாரித்தது.



சத்யனின் விழிகளில் ஆச்சர்யமா ! தயக்கமா பயமா என்று இனம் காண முடியாத ஒரு உணர்ச்சி இருந்தது.



எல்லோரும் ஆமாம் சாமி போட்டார்கள். அதற்குள் கோவிந்தனும் கார் சாவியுடன் பேருந்திற்குள் ஏறினான். சற்று நேரத்தில் அவனுக்கும் விஷயம் புரிந்தது தயங்கி மறுத்துக் கொண்டிருந்த சத்யனை நெருங்கினான்.



"சார், நான் இன்றைக்கு டான்சை மிஸ் பண்ணிட்டேன்ல அதனால் எனக்காக நீங்கள் கண்டிப்பாக ஆட வேண்டும் " என்றான் உத்தரவிடும் தோனியில்.



இதை கேட்டதும் சற்றே மனம் இறங்கி வந்தான் சத்யன். தாமஸ்சிடம் சென்று ஏதோ கூறி விட்டு பேருந்தின் நடைபாதையில் வந்து நின்றான்.



ஒரு நிமிடம் மாதவியை உரசி விட்டு சென்றன அவனது விழிகள் . அவளும் அவனைத்தான் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அன்றைய வெஸ்டர்ன் பாட்டு ஒன்றிற்கு அழகான ஸ்டெப்பைப் போட்டு அசத்தி விட்டான் என்றே சொல்லவேண்டும்.



அந்த ஐந்து நிமிடமும் யாரும் பேசவும் இல்லை .கண்களை சிமிட்டவும் இல்லை எனலாம். நிச்சயம் இவன் நடனம் முறைப்படி பயின்றவனாகத்தான் இருப்பான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் மாதவி. அவன் ஆடி ஒரு போஸ்சில் .சிலை போல நிற்கவும், கரகோஷம் அந்தப்பேருந்தையே அதிர வைத்தது.இதுவே ஏதேனும் நீதிபதிகளின் முன் நின்று அவன் ஆடியிருந்தால் சூப்பர்ப், மார்வலஸ் , மைன்ட்பிளோயிங் பர்பாமன்ஸ், இப்படி பல தரப்பட்ட கமென்ட்சுக்கு சொந்தக்காரனாகி இருப்பான் .இவர்களால் ஆரவாரிக்க மட்டுமே முடிந்தது.



அவனையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த மாதவியைப் பார்த்து சட்டென்று கண்சிமிட்டி சிங்கப்பல் தெரிய அழகாக சிரித்தான். “ஐய்யோ இவன் ஏன் தான் இப்படி சிரித்து தொலைக்கிறானோ ? இவனது சிரிப்பு என்னை என்னவோ செய்கிறதே என்று தனக்குள் பேசிக் கொண்டாள்..



அனைவரும் அவரவர்களது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.



மாதவி பக்கத்திலுள்ள பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள். சோனா அவளது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பின்னால் வந்தாள்.



“வா, மாதவி பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடுகிறேன் “என்றாள். இருவரும் பஸ் ஸ்டாப்பிற்குச் சென்றனர். மாதவியை இறக்கி விட்ட சோனா,



“புடித்தாலும் புளியங்கொம்பாய் பிடித்திருக்கிறாய்” என்றாள் சம்பந்தமே இல்லாமல்.

ஓரத்தில் அபாய மணி ஒலித்தது மாதவிக்கு .இருப்பினும் முகத்தில் எதையும் காட்டாமல் “நீ என்ன சொல்லுகிறாய் சோனா?”



“ஓகோ ஒன்றுமே தெரியாது தான். “



“ஐய்யோ, கொஞ்சம் புரியும்படி பேசுகிறாயா ?”



“சரி நேராகவே வருகிறேன். உனக்கும் சத்யன் சாருக்கும் ஏதாவது..?” என்று கண் சிமிட்டினாள்



"கண்டுகொண்டு விட்டாள் ....நாம் தொலைந்தோம் என்ற பதட்டத்தை ஓரம் தள்ளி,



"சேச்சே...அதெல்லாம் ஒன்றுமில்லை சோனா “



" இதை நான் நம்பனுமா?" என்றவள் மாதவியின் முகத்தை ஆராய்ந்தாள் .



" என் தோழியைப் பற்றி எனக்குத் தெரியாதா? இருப்பினும் நீ அவரது அந்தஸ்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள். பணக்காரர் .சொந்தத் தொழில் ஒரே பிள்ளை இப்படி பல விஷயங்களை யோசித்துக் கொள். மிக முக்கியமாக சத்யன் ஒரு பணக்காரா வீட்டு செல்லப் பிள்ளை. அவர் உன்னிடம் மட்டும்தான் இப்படி நடந்துகொள்கிறாரா என்பதையும் உறுதி செய்து கொள். இதற்கு மேல் என்னால் உன் அந்தரங்கத்தில் தலையிட முடியாதே ஆனால் ஒன்று. பின்னால் நீ வருத்தப்படுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அவ்வளவு தான் நான் சொல்வேன் !என்று கூறிவிட்டு ஸ்கூட்டியில் பறந்து விட்டாள்.



பேய் அடித்தாற்போல் நின்றிருந்தாள் மாதவி சோனா சொல்வதில் ஒரு கடகளவு கூட பொய் இல்லை. காதல் என் கண்களை மறைத்துவிட்டதா .அவர் மனதையும் நடவடிக்கைகளையும் பார்த்து மட்டுமே அவனுக்கு அவள் மனதில் இடம் கொடுத்தாள்.ஆனால் இந்தப் பணம் ,அந்தஸ்த்து ஆகியவற்றைப் பற்றி அவள் ஏன் யோசிக்கவில்லை .இப்படி பலவித எண்ணங்களில் நின்று கொண்டிருந்த மாதவியை யாரோ கண்முன் சொடக்கு போட்டு "ஹலோ... மேடம்" என்று கூறவும் திடுக்கிட்டு நினைவுக்கு வந்தாள்.



“என்ன நீங்கள் திடீர் திடீரென்று கனவுலகத்தில் புகுந்து கொள்கிறீர்கள். எதிரில் ஒரு ஐந்தே முக்கால் அடியுள்ள மனிதன் நிற்பது கூட தெரியாமல் ? என்று அவளை சீண்டினான்.



மற்ற நேரமாக இருந்தால் ‘ஆமாம் எனக்கு நைட் பிளைண்ட்னஸ் ‘ என்று துடுக்காகவே கூறியிருப்பாள் .ஆனால் மனம் இப்போது வம்பு பேச்சில் லயிக்கவில்லை .



“ஏ.... ஏதோ யோசனையில் இருந்து விட்டேன்.சொல்லுங்கள் சார்" என்றாள் வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன்.



இருப்பினும் அவளது முகவாட்டத்தை கவனித்து விட்டவன் போல்" ஏதேனும் உடம்புக்கு முடியவில்லையா? நான் வேண்டுமானால் வீட்டில் விடவா?" என்றான் அக்கறையான குரலில் .



அதெல்லாம் ஒன்றுமில்லை சார். நீங்கள் ஏதேனும் முக்கியமாக பேச வேண்டும் என்றால் பேசுங்கள் என் பஸ் வந்தாலும் வந்து விடும்" என்றாள் சாலையில் கவனத்தை பதித்து.



அவள் தன்னை புறப்பட சொல்கிறாள் என்பது மட்டும் அப்பட்டமாகத் தெரிந்தது. அவனது முகமும் சுருங்கியது.



"பெரிதாக ஒன்றுமில்லை மாதவி. திங்கள் முதல் உங்கள் பழைய எம்.டி வந்து விடுவார். இதற்குப் பிறகு எப்போதுபார்ப்போமோ ... அதான் .. உன்.. உங்களிடம் சொல்லலாம் என்று ......" முடிக்காமல் நிறுத்தினான்.



மாதவியின் முகத்தில் வரவழைத்துக் கொண்ட புன்னகையும் வினாடியில் மறைந்தது.. உடனே முக பாவத்தை மாற்றிக் கொண்டாள்.



"ஆகட்டும் சார்.அதோ என் பஸ் " ஓடிச்சென்று ஏறி விட்டாள். பஸ் தன்னை காப்பாற்றியதாகவே தோன்றியது மாதவிக்கு .புறப்பட்ட பஸ்ஸை வெறித்த வண்ணம் நின்றான் சத்யன். உள்ளே கண்ணீருடன் மாதவி.



படுக்கையில் விழுந்த மாதவி கதறி அழுதாள் ஏன் என்று புரியாமலே கண்ணீர் பெருகியது. தன்னை கட்டுப்படுத்த எவ்வளவு முயன்றும் அவளால் முடியவில்லை மனம் ஓய அழுது தீர்த்தாள்.அழுது முடித்தபின் சிறு தெளிவு கிடைத்தது.



"சத்யன் யார் ?" எம்டியின் மகன்.



பழக்கம்? ஆறு நாட்கள் .



குணம்? தெரிந்தவரை நலம்.



தெரியாமல்? கேள்விக்குறிதான்." இப்படி எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல், மனம் சலனம் கொண்டதால் அவனை காதலிக்கவோ, மணக்கவோ முடியுமா?ஒரு வேளை இப்படி எல்லாம் நான் தான் நினைக்கிறேனா ?அவன் வெறும் பொழுதுபோக்கிற்காக கூட பழகி இருக்கலாம்.செல்வச் சீமான் ஆயிற்றே. அப்படியானால் அவனது நோக்கம் தவறாக இருக்குமோ?" நினைக்கையிலேயே உள்ளம் பதறியது"சோனா கூறியது உண்மையானால்?மீண்டும் கண்ணீரே !!'



சே... இது என்ன தமிழ் சீரியல் ஹீரோயின் போல் நாம் அழுது தீர்க்கிறோம். காலத்தால் முடியாதது என்று எதுவும் உண்டோ? நிச்சயம் இல்லை .இனி அவனை பார்க்கும் தர்மசங்கடமான நிலை அவளுக்கு வரப் போவதும் இல்லை. பார்க்கவும் பேசவும் முடியவில்லை என்றால் மனம் சலனப்படாது என்பதைமுடிவாக நினைத்தவள் கண்களை மூடி உறங்க முயச்சித்தாள்​
 
மல்லிச்சரம்-5

டேய் பரணி ஏன்டா ரொம்ப அர்ஜன்ட்னு என்னை வரச் சொன்ன?"ஓங்கி பரணியின் தோளில் பின்புறமிருந்து தட்டினான் சத்யன்.



"சத்யன் ..... நீ எப்படா வந்த? ஆச்சர்யமாக விழி விரித்தான் பரணி .



" ஏன் சொல்ல மாட்ட? அப்பாகிட்ட என்னை அவசரமா கிளம்பி வரச் சொன்னியாமே?" என்றான் லேசான கோபம் காட்டி .



"என்னது ....நானா .....?" குழப்பமாக விழித்தான் பரணி .



" ஏய் உன்னை உன் அப்பா நன்றாக. ஏமாற்றி இருக்கிறார். நாங்கள் ஏன் உன்னை தொந்தரவு செய்யப் போகிறோம்/ அதுவும் நீ உன் தந்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிவித்த பிறகு ' இங்கு எல்லாச் சிக்கல்களையும் நானும் தருணும் சரி படுத்திக் கொண்டோம்"

"அப்பா ...அப்படித்தான் ....ஏதோ ..."என்று சிந்திக்கலானான்



"அப்படியே நீ வரவேண்டும் என்று நாங்கள் ஆசைபட்டால் அதை உன் செல்போனில் சொல்ல மாட்டோமா?" என்று இன்னும் தெளிவு படுத்தினான் பரணி



மாதவியின் நினைவில் சிக்கித் தவித்த அவன் இதயம் ,அதற்கு ஒத்துழைத்ததால் அவனது மூளையும் செயலிழந்து விட்டது போலும் ,என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான். அதுமட்டுமல்லாமல் மாதவியின் நினைவால் அவன் இதழோரம் இளநகை குடிகொண்டது



அதைத் துல்லியமாக கண்டுபிடித்தான் தருண்.



" என்ன மச்சான் மூளையை எங்கேனும் முடிந்து வைத்து விட்டாயா?" என்று சீண்டினான்



"அதெல்லாம் இல்லை டா" என்றவனின் கண்கள் சிரித்தன.



"அடடா நம்பி விட்டோம்" என்று ஒத்துக் கொள்வது போல் பரிகசித்தான் தருண்.



" அட தருண் உனக்கு இன்னுமா புரியவில்லை .சார் மூளையை முடிந்து விடவில்லை .இதயத்தை முடிந்து விட்டார்.என்று நினைக்கிறேன்." என்று அவன் பங்கிற்கு காலை வாரினான் பரணி.



" இன்று ரெண்டு பேரும் என்னிடம் உதை வாங்க வேண்டும் என்று உங்கள் ராசிபலன் சொல்கிறது போலும்" என்றான் அவனும் புன்னகை மாறாமலே ..



"விஷயம் இதுதான் என்று சொல்லிவிட்டு அடித்தால் நாங்கள் வாங்கிக் கொள்ள மறுக்க வா போகிறோம்" என்று அவன் வழிக்கே வந்தான் பரணி .



"அட, நீ வேற ஏன் சுத்தி வளைக்கிறாய் .மிஸஸ் சத்யனை தேர்ந்தெடுத்து விட்டாய் அல்லவா? எங்களுக்கு எப்போது காட்டுவாய்? அவர்கள் பெயர் என்ன? ம் ..... சொல்லுடா" நேரடியாகத் தாக்கி விட்டான் தருண்.



" அதெல்லாம் ஒன்றும் இல்லை .போய் உங்கள் வேலையை பாருங்களேண்டா." கெஞ்சும் தோணியில் கூறினான் சத்யன்.



" அது எப்படி கண்ணா விடுவது. உன் முகத்தையும் உன் படபடப்பையும் முக்கியமாக உன் அறிவீனத்தையும் வைத்துப் பார்த்தால், நிச்சயம் ஒரு பெண் தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும். பத்து வருடங்களாக, உன்னுடன் பழகி இந்த அளவுக்குக் கூட உன்னை புரிந்துகொள்ளாமல் எப்படி இருக்க முடியும்.. ம்.. சொல்லு" சத்யனை துரிதப்படுத்தினான் தருண்.



" என்னவென்று சொல்வது தருண், மாதவி ""என்று அவன் தொடங்கும் போதே இருவரும் இடை மறித்தனர்.



" ம் .... அப்படி வா வழிக்கு,மேலே சொல்லு..."



" அப்பாவுடைய பி.ஏ.. அவள் பார்க்கவும் அழகு, பழகவும் தான் " என்று நிறுத்தினான்

" அது சரி, உன் விருப்பத்தை சொல்லி விட்டாயா?"அவசரப்படுத்தினான் தருண்.



உதட்டைப் பிதுக்கினான் சத்யன்.



" ஏன்டா ,சொல்லி இருக்கலாமே ?"



" நான் யோசிப்பது வேறு ... அவளின் குடும்ப பின்புலம் " .



" அதாவது பணம், தகுதி இதுதானே !.... கடைசியில் நீ கூடாவா?" சற்றே கோபமானது தருணின் வார்த்தை ..



"ச்சே ...அதெல்லாம் இல்லை. இது ஒரு பெண்ணின் மனம் சம்பந்தப்பட்டது. நமக்கு நிச்சயம் இல்லாமல் அவளிடம் என் மனதை வெளிப்படுத்த யோசிக்கிறேன் "



"புரியவில்லை "- பரணி.



" அவள் குடும்பப் பின்னணி, அவளின் நிலை , நிச்சயம் என் காதல், திருமணத்தில் முடியும் என்ற நம்பிக்கை என்றைக்கு எனக்கு வருகிறதோ அன்று நிச்சயம் என் மனதை அவளுக்கு வலியுறுத்துவேன். அதற்கு பின் அவள் முடிவுதான்" என்று முடித்தான். இருப்பினும் அவன் மனம் எதையோ தீவிரமாக யோசிக்கத்தான் செய்தது.



ஒரு பெண்ணின் மனம் தன்னால் கலங்கக் கூடாது என்று உறுதி கொண்டிருக்கும் நண்பனை பார்க்க பரணி, தருண் இருவருக்கும் உள்ளுர பெருமையாக இருந்தது.

பரணி, தருண் , சத்யன் மூவரும் கல்லூரி தோழர்கள் பி.ஏ.எம்.ஏ.என்று ஐந்து வருட கல்லூரி வாழ்க்கையை ஒன்றாகக் கழித்தவர்கள் .இன்றும் மேலேமேலே நிறைய படித்து கொண்டேதான் இருக்கிறார்கள்.பரணிக்கும் , தருணுக்கும் பெரிய தொழில் பின்னணி இல்லாததால் அவன் தந்தை கூறிய கோவைக் கிளையில் அவர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தொழிலில் இறங்கினான். அந்த நிறுவனத்தின் லாபமும் இவர்களது நட்பும் இன்று வரை வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மூவரையுமே அங்கே உள்ளவர்கள் எம்டியை போலவே பாவித்து மரியாதை வழங்கினார்கள். மூவருக்கும் ஒரே சம்பளமும் கூட அதுவும் அவர்கள் உழைப்பு, கல்வி, அறிவு இவற்றை ஆராய்ந்து துளியும் குறையில்லாம் கொடுத்தார் தயாநிதி .மற்றபடி கம்பெனி பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாது. கணக்குகளை கண்டிப்புடன் சரி பார்த்தார் தயாநிதி . அது தன் மகனாக இருந்தாலும் சரி அவனுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் தான் அவனது செலவுகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதும் தயாநிதியின் தீர்ப்பு.



டிரிங் ...டிரிங் ...டெலிபோன் ஓயாமல் அடித்துக் கொண்டே இருந்தது. தயாநிதி இருக்கையில் இல்லாததால், வேறு வழியின்றி மாதவி எழுந்து சென்று ரிசீவரை எடுத்தாள்.



"வணக்கம் சத்யன் இன்டஸ்ட்ரீஸ் " என்றாள் மென் குரலில் .



"வணக்கம் மாதவி" என்ற சத்யனின் வார்த்தைகள் மின்சாரமாக தலைமுதல் பாதம் வரை எதிரொலித்தது.



"என்ன மாதவி பேச்சையே காணோம்" என்றான் மென் குரலில் .



" இ ....இல்லை சத்யன், சார் உங்கள் அப்பா வெளியே போயிருக்கிறார். இப்போது வந்து விடுவார்" என்றாள் படபடப்பான குரலிலேயே



" அட........ என் குரலை நினைவில் வைத்திருக்கிறாயே ! மிக்க மகிழ்ச்சி" குரலில் புத்துணர்ச்சி இருந்தது.



அட மடச்சியே, உன் உதடுகள், உன்னை காட்டிக் கொடுத்து விட்டன. இப்போது என்ன உளறப் போகிறாய் என்று அவள் யோசிக்கும் முன் அவனே அவளை காப்பாற்றினான்.



" அப்பா இல்லை என்று தெரியும் மாதவி .தெரிந்து தான் தொடர்பு கொண்டேன். நலமா மாதவி" என்றவனின் குரல் கனிந்து வந்தது.



"ம்.." "என்றாள் சன்னமான குரலில் முகம் சிவந்து விட்டது.



“என்னை கேட்க மாட்டீர்களா?" ஏக்கமாய் கோட்டான்.



" நீங்கள் நலமா?" என்றாள் வேறு வழியின்றி



"நிச்சயமா இல்லை "துளியும் தாமதிக்காமல் வந்தது பதில் .



"ஏன் ?" பதறினாள் மாதவி.



“பிறகு கூறுகிறேன்" என்றான் பூடகமாக



"வைத்து விடவா " என்று கேட்டவனின் குரலில் வைக்கும் ஆர்வம் துளியும் இல்லை.







"ம்....." என்றவளின் குரலும் தான். அவன் அங்கு வைத்து விட்ட பின்னும் கூட ரிசீவரை கீழே வைக்கவில்லை மாதவி.



ஏனோ, அவன் குரல் அவள் காதுகளை விட்டு அகலவே இல்லை .



இந்தக் காதல் மழையில் இருவரும் நனைந்து புளகாங்கிதம் கண்டது இதுவே கடைசி. அதற்குப்பின் எல்லாமே இடிகளாகத்தான் விழுந்தது.



தரையில் கால் படவில்லை மாதவிக்கு அத்தனை உற்காசம் .இது எல்லாம் சத்யனின் 'நலமா மாதவி?' என்ற ஒரே கேள்விக்குத் தான் என்று நினைக்கும் போது மாதவிக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. வீட்டிற்குச் செல்லும் போது தம்பிக்குப் பிடித்த பால்கோவாவும் அம்மாவுக்குப் பிடித்த முந்திரிப்பகோடாவும் வாங்கிப் போனாள்.



" அக்கா இன்று உனக்கு என்னவாயிற்று. மிகவும் குஷியாக இருக்கிறாய் ?" கேட்டே விட்டான் மணி .



லேசாக குழம்பி" இன்று ஆபீசில் என் வேலையை மிகவும் பாராட்டினார்கள் அதான் " என்று ஏதோ ஒரு பொய்யைக் கூறி சமாளித்தாள்.



படுக்கையில் விழுந்தவளுக்கு தூக்கம் எப்படி இருக்கும் என்று கண்கள் கேட்டன .தனக்குத்தானே எவ்வளவு தான் சமாதானப்படுத்திக் கொண்டாலும் அவன் பால் சென்ற மனதை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள். அவன் குரலும், அவன் பார்வையும் அவளை மயக்குவதை எண்ணி வியந்தாள். அப்படி ஒரு காந்தச் சக்திகொண்ட கண்களை நம்புவது சரிதானா. இப்படிப்பட்ட கண்கள் எத்தனைப் பெண்களை இழுத்திருக்கும். இப்படி பட்ட எண்ணமே அவளை துடிதுடிக்கச் செய்தது. அவளது இந்த அவஸ்தையை உணர்ந்ததனாலோ என்னவோ அதற்குப்பின் சத்யன் அவளை தொடர்பு கொள்ளவில்லை .​
 

New Threads

Top Bottom