NYD-70
அன்னை சென்ற பின், சிவா நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.
கங்கா அறையை விட்டு வெளியில் சென்றாள் .
என்னப்பா இதெல்லாம்?இத்தனை நாளா ஏன் எங்ககிட்ட எதுவுமே சொல்லல ?
எனக்கே தெரியாததை நான் எப்படி உங்க கிட்ட சொல்ல முடியும்பா ?
எனக்கு ஒருத்தர பிடிச்சிருந்தா அது தப்பாப்பா?எனக்கு அவளை புடிச்சிருக்கு. நான் அவளை காதலிக்கல. ஆனா அவளை மட்டுமே காதலிக்க விரும்பறேன் மனைவியா ! அவளை தவிர என்னால வேற யாரையும் நினைக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது. அம்மாகிட்ட சொன்னதேதான்ப்பா . நீங்களும் அம்மாவும் முழு சம்மதத்தோட எங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணனும்.,அப்பதான் எங்க கல்யாணம். அவன் கண்களில் மட்டும் இல்லை, அவன் குரலிலும் இருந்த தீவிரத்தை அவரால் உணர முடிந்தது.
அதெல்லாம் சரி, உங்களோட வயசு வித்தியாசம்?
எனக்கும் அந்த யோசனை இருக்குப்பா. ஆனா அதையும் தாண்டி ஏதோ ஒன்னு இருக்குன்னு எனக்கு தோணுது. ஆனா இது உடல் கவர்ச்சி சார்ந்தது மட்டும் இல்லையேப்பா , இது அதையும் தாண்டி, மனசு, அது என்னனு என்னால புரிஞ்சுக்க முடியல. ஆனா உங்களுக்கும் அம்மாவுக்கும் நடுல ஏதோ ஒன்னு இருக்குல்ல , அதுதான்னு தோணுது. ப்ச், எனக்கு சொல்ல தெரியல. புரிஞ்சுக்கோங்கப்பா!
சொல்லத் தெரியாமல் அவன் சொல்லும்போது, அவருக்கு அவன் சிறுவனாகவே தெரிந்தான்.
என்னவோ சிவா, பெரியவங்க உங்களை குழந்தைகளாவே பாத்துடறோம் . இல்ல நாங்க பெரியவங்களாகிட்டோம்னு நீங்க காட்டும்போது எங்களால தாங்க முடியல.
நான் மத்தவங்க மாதிரி இல்லப்பா ., நான் என்னிக்குமே உங்களோட கைபிடில, அம்மாவோட முந்தானைல இருக்கதாம்பா ஆசை படறேன் . அதுல கங்காவையும் சேர்த்துக்கோங்கன்னுதான் சொல்லறேன்.
எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியல சிவா. அம்மா சொன்னது எது எப்படியோ, ஆனா சத்யா விஷயத்துல நீ பண்ணறது ரொம்ப தப்புன்னுதான் எனக்கும் தோணுது.
சத்யாவை பத்தி எனக்கும் கவலைகள் இருக்குப்பா. என்னிக்குமே அவ என்னோட தேவதைதான். முத்துவை தவிர அவளால வேற யாரோடையும் வாழ முடியாதுப்பா. கொஞ்ச நாள் விடுவோம், அப்புறமா பார்த்துக்கலான்னு நாம் எல்லாரும் சேர்ந்து தானே முடிவெடுத்தோம். நான் அவளை அப்படியே விட்டுடுவேனா ? நீங்களாவது என்ன நம்புங்கப்பா. நீங்க அம்மா, சத்யா நீங்கல்லாம் என்னோட உறவுகள். கங்கா என்னோட கடமை. நீங்க எல்லாரும் அவளை நல்லா பார்த்துக்குவீங்கன்னுதான் அவளை வேற ஹாஸ்டலுக்கு கூட அனுப்பல . பட் இப்ப அவளை இந்த வீட்டை விட்டு வெளில அனுப்பப் போறேன்.. எனக்கு நீங்கதான் முக்கியம். அதேசமயம் அவளை நோகடிக்கறத என்னால ஒதுக்க முடியாது. இப்ப இருக்கற நிலைமைல அம்மா அவளை நிச்சயமா நல்ல விதமா நடத்த மாட்டாங்க.பாவம் அந்த பொண்ணுக்கு என்னிக்குமே ஒரு நல்ல குடும்பம் அமையாது போல.
நீங்க ., உங்களுக்கு எங்க கல்யாணத்துல சம்மதமா?
அம்மாவுக்கு என்னவோ ., அதேதான் எனக்கும்.
எனக்கு யாரையாவது புடிச்சுருக்குன்னா, உங்களுக்கு யாருக்குமே என்ன புடிக்காதில்லை?
இல்ல சிவா., நான்.,
பரவால்லப்பா . நான் புரிஞ்சுக்கறேன்.
மாலையில் வீட்டுக்கு வந்த சத்யாவுக்கு வீட்டின் அசாரதான அமைதி ஏதோ சரியில்லை என்று சொல்லியது. இவள் வண்டி சத்தம் கேட்டதுமே, வா வா என்று வரவேற்கும் அன்னையை காணவில்லை . பதிலுக்கு தந்தைதான் வந்தார். காலையில் நடந்த பிரச்னையில் அவள் உடலும் மனமும் சோர்ந்திருந்தது . தந்தையை பார்த்தவள்,
ஹாய் பா ,
அம்மா எங்க ?
தலைவலியாம், உனக்கு காப்பிதானே , நான் கொண்டு வர்றேன்.
எஸ் பா, நீங்க காபி தாங்க, நான் போய் கை கால் கழுவிட்டு வர்றேன். அப்புறமா குளிச்சுக்கறேன்ப்பா,
பிளீஸ்,
ஒகே டா .
காபி குடித்துக் கொண்டே, மெதுவாக பேச ஆரம்பித்தார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவள்,
எனக்கும் ஓரளவு விஷயம் தெரியும்பா, ஆனா அண்ணன்னுக்கு ஆரம்பத்துலேர்ந்தே வயசு வித்தியாசம் உறு த்திக்கிட்டே தான் இருந்தது. அதனலாதான் அவரு சுவேதாவுக்கே ஓகே சொன்னாரு. ஆனா அத தாண்டி அவர்களுக்குள்ளே ஏதோ ஒன்னு இருக்கு. ஆனா அது காதல் இல்லை . அதை தாண்டி வேற ஏதோ., அவங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு., அவங்க வாழ்க்கை நிச்சயமா சந்தோசமாதான் இருக்கும்.
அதே மாதிரி அம்மா நினைக்கிற மாதிரி கங்கா அமுக்குணி இல்லப்பா. அவ மனசுல உங்கள அப்பா அம்மாவாதான் பாக்கறா. அவ வந்து உங்ககிட்ட அண்ணனை லவ் பண்ணறேன். நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு எப்படிப்பா சொல்ல முடியும்? எல்லாத்தைவிடவும், அண்ணன் இத்தனை வருசமா வயசு காலத்துல வரவேண்டிய ஆசைகளைக்கூட ஒதுக்கிட்டுதான் வாழ்ந்துகிட்டு இருக்காரு. அவரோட வாழ்க்கை சரியா அமையாததுக்கு நானும் ஒரு காரணம்.
நான் அம்மாகிட்ட இப்பவே போய் பேசறேன்.அதுக்கு முன்னாடி நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு எனக்கு தெரியணும்.
எனக்கே தெரியல சத்யா. அம்மா என்ன சொல்லறாளோ அதுதான் எனக்கும். எனக்கு அவளோட வார்த்தைதான் ரொம்ப முக்கியம். அவளுக்கு எதிரா நான் எதுவுமே பேச மாட்டேன்.
ஆனா அண்ணனும் உங்களோட கடமைதான்ப்பா. நீங்க உங்க வைப்ஹ எங்கையும் விட்டுக் கொடுக்கவேண்டாம். ஆனா அவங்களுக்கு சரியானதை சொல்ல வேண்டியதும் உங்களோட கடமை தான்பா .
அப்போ சிவாவுக்கு கங்காதான் சரியான ஜோடிங்கரியா ?
ஆமாம்பா. என்னோட வாழ்க்கைதான் வீணா போச்சு. அட்லீஸ்ட் அண்ணனோட வாழ்க்கையாவது சரியாய் இருக்கணும்பா.
ஏம்மா இப்படிலாம் பேசற?
ப்ச் விடுங்கப்பா., என்னோட வாழ்க்கையை பத்தி இனிமே நான் யோசிக்க போகறதில்ல.
சத்யா, உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா ?
உனக்கும் அவருக்கும் என்னதான் பிரச்னை ?
எனக்கே தெரியலாப்பா ! இந்த நிமிஷம் அவரு ஒரு மாதிரின்னா அடுத்த நிமிஷம் வேற மாதிரி இருக்காரு. சேர்ந்து வாழறவங்கன்னா ஒரு மனைவியால ஹஸ்பெண்ட புரிஞ்சுக்க முடியும். ஆனா அவரு என்ன கிட்ட நெருங்கவே விடறதில்ல. எது எப்படியோ, அவரோட வாழ்க்கை , அண்ணன் , கௌசிக், எல்லாரோட வாழ்க்கையும் பாழாக நான்தான் காரணம்., சொல்ல கூட முடியாமல் வாயை பொத்தி அறைக்குள் சென்று அழுதாள்.
அவளும் தனிமையில் சிறிது நேரம் அழுது ஓயட்டும் என்று தந்தை காத்திருந்தார். அவருக்கும் மனம் தாங்கவில்லை. சிவா அறைக்கு சென்ற அவ ரூமுல போய் அழுதுகிட்டு இருக்கா . போய் சமாதானபடுத்து.
என்னப்பா இது, முதல்லயே சொல்ல கூடாது?
தங்கையின் அறைக்குள்ளே, சென்றவன் அவளை பார்த்தவனுக்கு , முதலில் அதிர்ச்சி. அதை மறைத்தவன், மெதுவாக தோள் தொட்டான். அதற்காகவே காத்திருந்தவள் போல, நீண்ட நாட்களுக்கு பின் சகோதரனின் தோள் சாய்ந்து அழுதாள். அவளுக்கு திருமணம் முடிந்து வந்த போதும், இவன் ஊரில் இல்லை . அவளுக்கு தேவையான எந்த சந்தர்ப்பங்களிலும் இருப்பதே இல்லை. என்னதான் அவன் ஊரில் இல்லை என்று காரணம் சொன்னாலும், அவனும் இப்போதெல்லாம் ஏதோ கற்பனைகளிலேயே வாழத் துவங்கி விட்டான். இப்போது அவனுக்கு அன்னையின் கோபம் புரிந்தது. அவன் குற்ற உணர்ச்சி அவனைக் கொன்றது. அவளின் தலையை மெதுவாக தடவிக் கொடுத்தான். சிறிது நேரம் அழுதவள், தன்னை படுத்திக் கொண்டாள் .
எதுக்கு இந்த அழுகை சத்யா ?
எல்லாத்துக்கும்தான். பொறந்த ஒடனே அம்மாவை முழுங்கினதுலேர்ந்து, இதோ வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கறேனே ! அது வரைக்கும்...... எல்லாத்துக்கும்தான். நீ அழுதா எல்லா பிரச்சனையும் சரியாய்டுமா ? நீ அழு, என்னோட தோள் இருக்கு. ஆனா உன்னோட எல்லா பிரச்சனையும் சரியாய்டனும்.
வெட்கப்பட்டு தலை குனிந்தாள் .
சாரி சத்யா, உன்னோட எந்த கஷ்டத்திலையும் நான் உன் கூட இருக்கவே இல்ல. நான் என்ன காரணம் சொன்னாலும் எதுவுமே மன்னிக்கவே முடியாது. பட் இனிமே உன்ன இப்படி தனியா விட மாட்டேன்.
நீதான் எங்கையோ இருக்க? உன்னால என்ன பண்ண முடியும் ?
அதெல்லாம் காரணம் இல்ல. நான் ரொம்ப சுயநலமியா மாறிட்டேன்.
ப்ச் அதெல்லாம் விடு, அப்பா உன்னோட விஷயத்தை சொன்னாரு. என்ன அம்மா கங்காவை ஏத்துக்க மாட்டேன்னுட்டாங்களா ? குனிந்து அவன் முகத்தை பார்த்தாள் . அம்மா கிட்ட நான் பேசறேன், சரியா?
ம்ம்.,
அம்மா எதுக்காக ஒதுக்கலன்னு உனக்கு ஏதாவது தெரியுமா ?
தெரியல சத்யா, அவங்கள இதுக்கு முன்னாடி நான் இத்தனை கோபமா பார்த்ததே இல்ல . அவங்களுக்கு கங்கா மேலே கோபமா இல்ல வெறுப்பான்னு எனக்கு தெரியல. எது எப்படியோ அவங்க சம்மதிச்சா மட்டும் தான் எங்க கல்யாணம். அது மட்டும் நிச்சயம்.
அது சரி, இத்தனை வயசு வித்தியாசத்துல நீ எதுக்கு கங்காவ சூஸ் பண்ண ?
நீ, அம்மா அப்பா எல்லாருக்காகவுந்தான் . கங்காவுக்காகவும்தான். அவ அம்மாவுக்கு கால்ல பிரச்னை வந்தபோது எப்படி பார்த்துக்கிட்டா ? பல நாள் நான் இங்க இருக்கறதே இல்ல. உன்னையும் கங்காவையும்தான் நான் நம்பிருக்கேன். என்னுடைய ரோலை அவ செய்யறா . சப்போஸ் எனக்கு கல்யாணம் ஆகி வர்றவ உன்னையும், அம்மா அப்பாவையும் சரியாய் நடத்தலன்னா ? சுவேதகிட்டையும் எனக்கு அந்த பயம் இருந்தது. அவள் அப்படி இல்ல. ஆனா அவங்க அப்பா என்ன வீட்டோட மாப்பிள்ளையா வச்சுக்க பார்த்தார். உங்க எல்லாரையும் நான் எப்படி விட முடியும்? நம்ம அப்பா அம்மாவையும் கூட அவர் சரியா மதிக்கல. எல்லாத்தையும் யோசிச்சுதான் நான் கங்காவை தேர்ந்தெடுத்தேன். ஆனா அம்மா என்ன புரிஞ்சுக்கவே இல்ல. மறைந்திருந்து தாயும் தந்தையும் அனைத்தையும் கேட்கிறார்கள் என்று தெரிந்தே தான் அவன் தன் மனதில் இருந்த எல்லாவற்றையும் கொட்டி தீர்த்தான். அவனுக்கு தன் பக்கத்துக்கு நியாயத்தை எப்படி அவர்களுக்கு விளக்குவது என்று தெரியவில்லை. அவன் சொல்லாத இன்னொரு விஷயம் , கங்காவுக்காக அவன் யோசித்தது. ஆம்! தான் இல்லாமல் அவளால் இருக்க முடியாது, என்று அவனுக்கு தெரியும்.
அதெல்லாம் சரி, கங்காவ நீ சூஸ் பண்ணது உனக்காக இல்லையா ?
எனக்காகவும்தான் சத்யா. அவளை கிராமத்துலேர்ந்து நான் இங்க அனுப்பும்போது, அங்க உனக்கு ஒரு நல்ல குடும்பம் இருக்குன்னு சொல்லித்தான் அனுப்பினேன். ஏனோ அவ கூட பழகினதுக்கப்புறம் அவளை எந்த சமயத்துலையும் விட்டுட கூடாதுன்னு தோணுச்சு. அவ எனக்குதான்னு தோணிச்சு.
எங்கண்ணன் ஹீரோதான்,எனக்கும் சரி அவளுக்கும்சரி, சிரிப்பாய் அவன்தோளில் சாய்ந்தாள்.
சிரித்துக் கொண்டே வெளியில் வந்தவர்களை சிரித்த முகத்துடனே, தந்தையும் எனக்கும் நீ ஹீரோதான்டா .,
அம்மா கிட்ட நான் பேசறேன்.
தேங்க்ஸ் பா .,
அப்புறம் என்ன ஹீரா நீங்க கனவு காண போகலாம்......
பல பிரச்சனைகளுடன் விடிந்த காலை விடிந்தாலும் மகிழ்வுடனே இரவு முடிந்ததும்
மீண்டும் வருவாள் தேவதை ................