Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Nee en devadhai

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-79
முகம்,கை, கால் கழுவிக் கொண்டு வந்தவன், பூ போல உறங்கும் மனையாளின் முகத்தை பார்த்தான். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. யாருக்கும் கிடைக்காத பெரிய புதையல் எனக்கு கிடைச்சிருக்கு. யாருக்குத்தான் இத்தனை அன்பான அழகான மனைவி கிடைப்பாள்? என்னை மாதிரி படிக்காத ஆளுக்கு ? அவனுக்கு வியப்புதான், அதிலும் அவள் , ஒன்றுமே இல்லாத நான் கட்டாயமாக தாலி கட்டிய பின்னும் என்னை நீ எப்படி ஏத்துக்கிட்டிங்க ? உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சா இல்ல, ஏரோ ப்ளேன் வச்சா கூட எட்டாது, நீங்க என்ன எப்படி ஏத்துக்கிட்டிங்க? பணம், குணம், படிப்பு எதுவுமே இல்லாத நான் எங்க, எல்லாமே இருக்கற நீங்க எங்க ?

அவளருகில் அவளின் வந்து உட்கார்ந்து கொண்டு அவளின் தலையை லேசாக கோதினான். அவளின் மென்மையான உதடுகளை பார்த்தான், அழகான கன்னங்களைப் பார்த்தான். லேசாக தொட்டான். குழந்தையின் ஸ்பரிசம் போலவே இருந்தது. கூரான மூக்கு , கண்ணுக்கு கீழே தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் மச்சம், ஓரத்தில் இருந்தாலும் அதற்காக இருக்கும் காது என்று பார்த்துக் கொண்டே இருந்தான். அவளை பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு, உன் தேவி தரிசனம் போதும், இப்போது நான் இருக்கிறேன் என்று நித்ரா தேவி அவனை உறங்கச் சொன்னாள், லேசாக கண்ணை இழுத்தது போல இருந்தவனுக்கு அவனை அறியாமலேயே ஆழந்த உறக்கத்திற்கு சென்று விட்டான்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு இடது கை வலிப்பது போல இருந்தது சத்யாவுக்கு, ஆனால் கையை அசைக்க முடியவில்லை. லேசாக கண் விழித்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. ஆம்!அவள் கை மேல்தான் இத்தனை நேரம் படுத்து உறங்கி கொண்டிருந்தான் முத்து. அவனை அசைக்காமலே மெதுவாக கையை இழுத்துக் கொண்டாள் . அவனுக்கு தலைக்கு தலையணை வைத்தவள் சத்தமின்றி எப்போதும் போல தன்னை சுத்தம் செய்துக்க கொண்டு வந்தாள் . அன்னை வைத்திருந்த பாலை மெதுவாக நிலவின் வெளிச்சத்தில், குடித்து முடித்தாள் . மீண்டும் வந்து படுக்க போகுமுன் அவன் முகத்தை பார்த்தாள் . சிறு பிள்ளை போல தூங்கும் கணவனின் முகத்தை பார்த்தவளுக்கு அவனை பார்த்துக் கொண்டே வேண்டும் போல இருந்தது. அவனிடம் அவளுக்கு கேட்க நிறைய கேள்விகள் இருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருந்தாலும், அவள் கேட்டாள் .

ஏன்டா என்ன இப்படி படுத்தற ? எதை வச்சு என்ன நீ மயக்கின ? இந்த கோபக்கார பார்வையா ? என்ன திட்டடிகிட்டே இருக்கற இந்த உதடா !! என்ன திட்டறதுக்கு பதில் ஒரே ஒரு கிஸ் குடுத்தா ஏதேதோ நினைத்தாள் எண்ணங்கள் கட்டுப்பாடில்லாமல் போவது அவளுக்கே தெரிந்தது. தன்னை தானே நெற்றியில் லேசாக அடித்துக் கொண்டாள் . அவள் ரசிக்கும் இதே முத்து கொஞ்ச நாளைக்காவது என் மூஞ்சில முழிக்காதே என்று சொல்லி விட்டால்? அவளால் தாங்க முடியாது.அவன் சொல்லாமலே இருக்கட்டும். இப்போது அவள் சந்தோஷமாகவே இருக்கிறாள் . எத்தனைதான் அவன் இவளை வேண்டாம் என்று ஒதுக்கினாலும், அவளுக்கு அவன் மீது எனோ வெறுப்பு வரவில்லை. அதற்கு பதில், வேண்டாம் என்று கோபித்துக் கொள்ளும் முரட்டு சிறுவனாகவேதான் தெரிந்தான். அதற்கு காரணம், எப்போதுமே அவன் இவளை உறங்கும் நேரத்தில் அன்னையாகவே நினைப்பதினாலா ? (அவன் உன்ன பொண்டாட்டியா நடத்தினா எப்படி தங்கப்போற சத்யா 💕-----ஒரே மீனிங்😜 )

இவளுக்கு முன்பாகவே எழுந்து கொண்டவன், வேகமாக தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டான். அதற்குள் இவளும் எழுந்து விட்டாள் . குளியறையில் தண்ணீர் சத்தம் கேட்கவும் இவள் மற்றொரு அறைக்கு சென்று தனது வேலைகளை முடித்துக் கொண்டாள் . அவன் திருமணத்திற்கு கிளம்ப வேண்டுமே என்று வேகமாக தனது வேலைகளை முடித்துக் கொண்டு இருவருக்கும் காபி கலக்கினாள் . அவர் என்ன கல்யாணதுக்கு ஏன் கூப்பிடவே இல்ல? கூப்பிடுவாரா ? யோசனையா, இல்ல ஏக்கமா கண்ணு ?

அதற்குள் சிமியும் வந்து விட்டார்.

என்ன மாப்பிள்ளை நீங்க எத்தனை மணிக்கு கிளம்பனும் ?

9-10.30தான் முஹூர்த்தம். அதான் காபி குடிச்சுட்டு கிளம்பலான்னு .

மணி இப்பதானே 6 ஆகுது. நீங்க இங்கையே குளிச்சுட்டு நிதானமாவே கிளம்பலாமே !!!

என்ன சத்யா ? உனக்கு ஓகே வா ??

ம்ம்!! எனக்கு ஓகே.

புது துணி இருக்கா ? இல்ல இவங்க அப்போவோடது தரவா ???

அதெல்லாம் இருக்குங்க... பை வண்டிலதான் இருக்கு.

நீ எப்ப கிளம்பனும் ?

நோ மா , ஈவினிங் வந்தா போதுன்னு சார் சொல்லிட்டார்..

அப்புறம் என்ன ???

மாப்பிள்ளை கிளம்பியதும் நீ கொஞ்சம் தூங்கு,. நான் போய் குளிச்சுட்டு, மாப்பிள்ளைக்கு டிபன் பண்ணறேன்.

அவசரமாக காபியை குடித்துவிட்டு குளிக்க சென்றார். நாம இவ்ளோ சொல்லறோம், இவரு சத்யாவையும் கூட்டிட்டு போனா என்ன ?? என்ற இயல்பான கேள்வி அவர் மூளையை குடைந்தது. இருப்பினும், தான் ஏதாவது சொல்லி ஏதாவது பிரச்னை வந்து விடுமோ என்று வாயை மூடிக் கொண்டார். மூளையை குடைந்த கேள்விக்கு பதில் கிடைத்தது போல கௌசிக் வாங்கி தந்த புடவையை கட்டிக் கொண்டு வந்தவளை அவள் தாயே கண்ணை விரித்து பார்த்தார். மகள் ஏற்கனவே பேரழகிதான், இருப்பினும், மகளும் மருமகனும் சேர்ந்து வரும்போது இன்னும் முகத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும், கூடி இருந்தது.

மாப்பிள்ளையின் முகத்தில் ஏதோ ஒன்று... சின்ன புன் முறுவல்.

மார்னிங் பா ,

ஹாப்பி மார்னிங் சத்யா... காதருகில் மெதுவாக கிசுகிசுத்தார் . இவள் முகம் சிவந்தது. மகளை சந்தோசமாக பார்க்க பார்க்க அவர்களுக்கு திகட்டவில்லை .

என்னதான் நடந்தது? தெரிந்து கொள்ளவில்லை என்றால் சிமிக்கு தலை வெடித்து விடும்.

மகளை தனியே அழைத்து சென்று கேட்டார்., நீங்க கொஞ்ச நேரம் சஸ்பென்ஸோடையே இருங்க, நான் போயிட்டு வந்து சொல்லறேன் மை டியர் மம்மி..

நீயும் போகறியா சத்யா . இயல்பாக கேட்டார் தந்தை .

ம்ம்!! ஆமாம்பா.

ஒகே டா!! கண்ணா, ரெண்டு பேரும் ஜாக்கிரதை.

எஸ் பா , மாப்பிள்ளை உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல.. பார்த்து போங்க.

சரிங்க மாமா..

இருவரும் கிளம்பினர் . சிமிக்கு இப்போதுதான் மூச்சே வந்தது.

எந்த பிரச்சனையும் வராம நீங்கதான் பார்த்துக்கணும் கடவுளே !! என்று முத்துவின் மேல் இருந்த பயத்தினால், பய பக்தியுடனே வேண்டிக் கொண்டார்.

அதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது.

இருவரையும் ஜோடியாக பார்த்த செல்விக்கும் சரவணனுக்கு ஏக அதிர்(மகிழ்)ச்சி. வாடா வா வா , வாங்க அண்ணி...கை கூப்பி அழைத்தனர். அதற்குள் பெண்ணின் அம்மாவும் அப்பாவும், வாசலுக்கு வந்தனர். வா முத்து , இவங்க...

இவங்கதான், அண்ணி... சத்யா.. செல்வி முந்திக் கொண்டாள் .

மற்ற பெண்களும் ஒவ்வொருவராக அங்கே சேர்ந்தனர். அடியாத்தி எம்புட்டு அழகு ?! அதான் யாருக்கும் சொல்லாம இந்த கருவாயன் டபக்குனு தாலிய கட்டிட்டானா ? என்றார் ஒருவர்,

மற்றொருவர், உங்கள பார்த்தா பொண்ணுங்களுக்கே ஆசை வரும். முத்துவுக்கு வராதா என்ன ?

இவர்கள் பேச பேச அவளுக்கு கன்னம் சிவந்தது. அதையும் அவர்கள் புகழ்ந்தார்கள்.

கல்யாணத்துக்கே யாருக்கும் கன்னம் சிவக்கறதில்ல. உங்களுக்கு என்ன இதுக்கே இப்படி சிவப்பாயிட்டுது??

உங்கள பார்த்தா பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கு, வேல கிடக்கு என்று சொல்லி நகர்ந்தவர், அடுத்த சில நொடிகளிலேயே கையில் பெரிய மல்லிகை சேர்த்துதான் வந்தார். இந்தம்மா பூ வச்சுக்கோ. இந்த முத்து , அவன் கையில் திணித்து விட்டு போனார்.

இவை அனைத்தையும் இரு விழிகள் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தன . இத்தனை நாட்களாக தன்னை பேரழகி என்று கொண்டாடியவர்கள் இப்போது வேறு ஒருத்தியை புகழ்வது அவளுக்கு பொறுக்க வில்லை . ஆம்! அது கயல் விழிதான் . மற்றவர் முன்பு பூ வைக்க கூச்சம் கொண்டவன்,
டாக்டரு நீங்களே வச்சுக்கோங்களேன். ம்ம் ,அதெல்லாம் முடியாது நீங்க தான் வைக்கணும் செல்வி அடம் பிடித்தாள் . இருவருக்குமே ஏதோ சொல்ல முடியாத உணர்வு...
சரி, திரும்புங்க... சத்யாவுக்கு மூச்சடைத்தது . அவன் பூ வைத்தது தலையில்தான் என்றாலும், ஏனோ காதுகள் குறுகுறுத்தன.கன்னங்கள் தானே சிவப்பை பூசிக் கொண்டன.. பின்னிருந்து செல்விதான் சொல்லிக் கொடுத்தாள் .எப்படி பூ வைக்க வேண்டுமென்று!!! மற்றவர்களை பார்க்க சென்ற சரவணன், தூரத்தில் இருந்து அவன் மனையாளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இப்போது இந்த சில நாட்களாக அவன் மனைவி சில நாட்களாக இன்னும் அழகாக இருப்பது போல தெரிந்தது. அதான் ரீசன் தெரிஞ்சுருச்சே சரவணா, இன்னும் என்ன சைட் அடிச்சுகிட்டு?

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், என்ன இது அவங்கள தனியா விடாம இதுவே பேசிக்கிட்டுருக்கு?

பார்த்தீங்களா ? சும்மாவே என் பின்னாடி சுத்தறேன்னு சொல்லுவிங்களே ? இப்ப இவங்களும் சொன்னாங்க பார்த்தீங்களா ??? தலையை ஆட்டி ஆட்டி அவள் சொன்ன விதம், இவளுக்கு சிரிப்பாகத்தான் இருந்தது. அவள் இவளுக்கு ஒரு வளர்ந்த குழந்தையாகத்தான் தெரிந்தாள் . அதிலும் அவள் பிள்ளை உண்டாகி இருப்பதில் மகிழ்ச்சியும் குதூகலமும் அப்பட்டமாகவே அவள் முகத்தில் தெரிந்தது .

ப்ச்! செல்வி சும்மா ஏதாவது சொல்லாத, காற்றில் கையை பறக்க விட்டாள். என்ன விட நீதான் அழகு !!

என்ன சரவணன், நான் சொல்லறது சரிதானா ?

சட்டென்று கணவனை பார்த்தவளுக்கு , முகத்தில் சட்டென வெட்கம் வந்தாலும்,அவன் என்ன சொல்லி திட்டுவானோ என்று பயமும் சேர்ந்தே வந்தது.அதை மறைத்தவள் , அவசரமாக அண்ணி வாங்க சாப்பிடலாம்.

எங்க இப்பதானே இட்லி கேசரி எல்லாம் முழுங்கின , நீ எங்க போற ? என்று அவளின் கையை பிடித்துக் கொண்டான்...

இருங்க சரவணன், நான் எதுக்கு உங்களுக்கு இடைஞ்சலா நான் போய்டறேன், நீங்களாச்சு உங்க பொண்டாட்டி ஆச்சு , சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டாள் .

பின்ன என்ன ? செல்வியை முழுங்குபவன் போல பார்த்துக் கொண்டிருந்ததை அவளும் அறிவாள் தானே??

இப்போது காலை சிற்றுண்டிக்கு கணவனுடன் செல்ல போகிறாள் தேவதை..........













 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18

NYD-80

யாருக்கும் தெரியாமல் சரவணன் செல்வியை தனியாக அழைத்து சென்றான். அவன் தன்னை வசை பாடுவதற்குத்தான் அழைத்து செல்கிறான் என்பது செல்விக்கு நன்றாகவே தெரியும். பயந்து கொண்டேதான் சென்றாள் .
ஏய்! எருமை! அவங்களே இப்பதான் சிரிச்சு பேச ஆரம்பிச்சருக்காங்க, அவங்களுக்கு நடுவுல போய் நிக்கற ?
இல்ல, முத்தண்ணன் அவங்கள ஏதாவது சொல்லிடுவாங்களோன்னுதான்,
அது அவங்க புருஷன் பொண்டாட்டி விஷயம். ஒனக்கென்ன ?
இல்ல, டாக்டருக்கு பூ வைக்க ரொம்ப ஆச , அதோட பூ வச்சுக்கிட்டா அவங்க ரொம்ப அழகா இருப்பாங்க அதான்.......
பூ வச்சுக்கிட்டா எல்லா பொண்ணுங்களுமே அழகுதான் ... அவனை முடிக்க விடாமல், அவள் முந்திக் கொண்டாள் .
அப்ப நானும் அழகுதானா !!!!
ஏ! ஜில்லு... பூ வைக்கலானும் நீ அழகுதாண்டி, லேசாக கன்னத்தில் விழும் குழியில் விரல் தடவி சொன்னான்..
அவளின் அந்த மாநிற கன்னத்தில் செம்மை படர்ந்தது. மற்றவர்கள் என்னதான் நீ அழகா இருக்க, இந்த கலர் ஒனக்கு பொருத்தமா இருக்கு , என்று எத்தனையோ புகழாரங்களை கொடுத்தாலும், கணவனின் ஒரு பார்வைக்குத்தான் பெண்கள் மயங்குகிறார்கள். கணவன் சொல்லும்போது மட்டுமே கன்னத்தில் செம்மை பூக்கிறது.....
ஒனக்கு என்ன வேணுமோ கேளு ,,
இனிமே என்ன திட்ட கூடாது.
நேற்று அவள் பட்ட பாடில் இருந்தே அவன் மனதில் நினைத்துதான், ஏனோ அவனையும் அறியாமல் ஏதோ அதிகாரம் செய்து விட்டான்.
அவனின் காதலும் அன்பும் ஆசையும் அக்கறையும் அவளுக்கு தெரியாதா என்ன? நடுவில் தான் ஏதேதோ இருவருக்குள்ளும் சில பிரச்சனைகள்...அதுவும் இப்போது சரியாகி விட்டது .
சரி,இனிமே உன்ன திட்ட மாட்டேன், என்று நெஞ்சில் சாய்த்து கொண்டான். இதே செல்விதான் அவனை இனி அழவைக்க போகிறாள், அவன் காதலே அவன் கண்ணீருக்கு காரணமாக போகிறது... என்பது அவனுக்கு தெரியாது பாவம்......

முத்துவும் சத்யாவும் காலை சிற்றுண்டிக்கு சென்றனர். வழியில் முத்துவை தெரிந்தவர்கள் வந்து பேச்சு கொடுக்கும்போது , இவள் நகர்ந்து நின்று கொண்டாள் . இளையவர்கள் ஒன்றும் சொல்லாமல் சென்றாலும், வயதில் மூத்தவர்கள் வாயை விட்டே தனது சந்தேகத்தை கேட்டு தீர்த்துக் கொண்டார்கள்,
என்ன?
அதான்,
இவதான் உன் பொண்டாட்டியா ?
சிலருக்கு நின்று நிதானமாக அறிமுக படுத்தினான், சிலருக்கு ம்ம் என்று சிரிப்புடனே பதில் கூறி நகர்ந்து விட்டான் . அதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு அவனுக்கு முக்கியம் என்பதை காட்டி விட்டான்.
கணவனின் பதவிசான பேச்சில் இவள் மயங்கித்தான் போனாள் .இவனை எப்படி முரடன் என்று சொல்ல முடியும் ? யோசனையுடனே நடந்து சென்றாள் .
இவள் மனதை படித்தவன், என்ன டாக்டரு என்ன யோசனை ?
ம்ம்!! இந்த கலரு உங்களுக்கு ரொம்ப நல்லா பொருந்துதுன்னு நினச்சேன் சட்டென்று அவள் சமாளித்தாலும், காலையில் , அவன் உடை மாற்றும் போது,
பட்டனை சரியாக போடவில்லை. ஆனால் அந்த மெரூன் கலர் சர்ட்டும் வெள்ளை வேட்டியும் அவனுக்கு மிக பொருத்தமாகத்தான் இருந்தது.
ப்ச்! என்ன இது இப்படி தப்பா போட்டுருக்கீங்க ? என்றவள் அதை சரியாக போட்டு விட்டாள் .அதில் அவன் மயங்கித்தான் போனான்.
டாக்டர்... மெதுவாகத்தான் குரல் வந்தது.
ம்ம்... பட்டன் போடுவதில் கவனமாக இருந்தாள் .
நீங்களும் இப்போ என்னோட கல்யாணத்துக்கு வறீங்களா ??
அவங்க என்ன கூப்பிடலையே ???
யாரு சொன்னா ?
உன்னோட பொண்டாட்டிய நாங்க பாக்கணும், நீ அவளோடதான் வரணுன்னு கண்டிப்பா சொல்லிருக்காங்க !!!
அப்போ நீங்களா கூப்பிடலையா ???
கூப்பிடவேண்டான்னுதான் இப்படி நிக்கறேனா ???
அப்போதுதான் அவள் அவனை ஒட்டி நிற்பதையே அவள் கவனித்தாள் .
சட்டென நகர்ந்து கொண்டவள் இதோ ரெடியாயிட்டு வந்துடறேன், என்று அவசரமாய் குளியல் அறைக்கு சென்றாள் .
என்ன கொல்லறியேடி , மனதை கட்டு படுத்திக் கொண்டு
கதவை தட்டியவன், நான் வெளில காத்திருக்கேன், நீங்க உடுப்பு மாத்திட்டு வந்துருங்க...
இந்த புது புடைவையில் வந்தவளை பார்த்து மயங்கியவன் தானே அவளது நெற்றி பொட்டை சரி செய்தான். இவளுக்குத்தான் ஒரு நொடி மூச்சு நின்று திரும்பியது.
எல்லாம் சரியா இருக்கா ? கிளம்பலாமா ? கண்ணை அகல விரித்து கேட்டாள் .
மௌனமாக தலையை மட்டும் ஆட்டினான்.
லூசு லூசு, அழகா இருக்கன்னு சொன்னாத்தான் என்னவாம் ?? உனக்கெல்லாம் நான் கிடைச்சேன் பாரு !!! உனக்கெல்லாம் ....இன்னும் ஏதேதோ மனதில் நன்றாகவே திட்டினாள்.
ஆனால் மண்டபத்தின் மின்தூக்கி கண்ணாடியில் தன்னையும் அவளையும் பார்த்தவன், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க டாக்டர், நான்தான் உங்களுக்கு பொருத்தம் இல்ல.
பரவல்லடா ஆணழகா என்றவள் சட்டென எம்பி கன்னத்தில் முத்தமிட்டாள், கதவு திறந்து கொண்டதும் ஒன்றும் தெரியாதவள் போல,
வாங்க என்று முன்னாடி எடுத்து வைத்து சென்றாள் .

சத்யா... என்னாலையே முடியலையே,, அந்த பையன் எப்படிம்மா !!!

இப்போதைக்கு அவர்கள் காலை சிற்றுண்டிக்கு செல்லட்டும் .

மதியம் மருத்துவமனைக்கு

மீண்டும் வருவாள் தேவதை..........



 

Mrs. Prabha Sakthivel

Active member
Messages
94
Reaction score
83
Points
43
கொஞ்சம் பெரிய epi போட்டா என்ன. இப்படி பண்ணிட்டீங்க. 🤔🤔🤔👌👌👌👌💐💐💐 Lovely epi💞💞💞
 

Barani Usha

Saha Writer
Team
Messages
67
Reaction score
37
Points
18
NYD-81

அது சரி, நம்ம சத்யாவுக்கு இந்த மாதிரி விஷயமெல்லாம் தெரியாதே? யாரு ட்ரைனர் ? அப்படியே யோசிச்சுகிட்டே இருங்க.....
கொஞ்ச நாளா சீனுக்கே வராத சில பல சீரியஸ் கேரக்டர்ஸ் இருக்கு , அவங்கள போய் பார்த்து வந்துடுவோம்….

சீரியசுன்னா யாரை பத்தி சொல்லறது ? வசந்தியை பத்தி சொல்லலாமா ?
---------------------------------
ம்ம். ஓகே,கௌசிக் ஆடர் பண்ண புது கார் வந்துடுச்சு. பழைய வஸந்தியாக இருந்தால், கொண்டாட்டம் போட்டிருப்பாள். ஏனோ வசந்தியிடம் இருந்த பழைய கலகலப்பு இப்போது மிஸ்ஸிங். ஆனால் அதை கௌசிகால் ஏனோ புரிந்து கொள்ள முடியவில்லை.
அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தாலும், அவரவர் அவர்களின் வேலைகளையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால் தானோ என்னவோ கௌசிகால் அதை தெரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், இருவரும் ஒன்றாக வெளியில் சென்று சாப்பிட்டனர். ஷாப்பிங் சென்றனர், சினிமாவுக்கு அழைத்துப் போனான். இன்னும் ஒரு நாள் இரு நாள் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி அன்னையை தன்னுடனே வைத்துக் கொண்டான். அதற்கு அவன் அருகாமையில் அன்னை இருக்க வேண்டும் என்பதும் தவிர அவனுக்கு இன்னொரு மிக முக்கியமான விஷயம் ஒன்று பேச வேண்டி இருந்தது. அதற்காகத்தான் அவளை வெளியில் அழைத்து சென்றான். ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை பேச வேண்டி வாய் எடுப்பான். ஆனால் எங்கே அது அவள் உள்ளத்தை புண்படுத்துமோ என்று பயந்து வாயை மூடிக் கொண்டு விடுவான். நாளை அவள் ஊருக்கு செல்ல போகிறாள். இதை பற்றி பேசியே ஆக வேண்டும். அதற்க்கான சந்தர்ப்பத்தை அவளே தந்தாள்.
மாலையில் கையில் தேநீர் கோப்பையுடன், ஆதவன் மறையும் அழகை ரசித்தாள்.
ஆம்! இப்போதெல்லாம் அவனும் அவளும் அமர்ந்து சேர்ந்து தான் தேநீர் குடிக்கின்றனர். இத்தனை வருடங்களாய் அவள் இதை எல்லாம் அனுபவித்ததே இல்லை . இந்த சில நாட்கள் அவள் மகனின் அருகாமையை மிகவும் தேட தொங்கி இருந்தாள் . இனி மும்பை சென்றவுடன் அவளுக்கு தனிமை பழகி கொள்வது மிகவும் சிரமமாகத்தான் இருக்க போகிறது. அதுவேதான் அவள் மகனின் வாழ்க்கையையும் மாற்ற போகிறது.
அந்த மாலை மயங்கும் நேரம் அவளுக்கு சத்யாவின் அழகிய வதனம் நினைவில் வந்தது. தானே உதட்டில் லேசாக சிரித்துக் கொண்டாள் .
வாட் மாம் ? அன்னையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவன் கேட்டான்.
சத்யா ரொம்ப நல்ல பொண்ணு ரைட் ?
எஸ் மாம்,
உனக்கும் அவளை மாதிரியே ஒரு நல்ல பொண்ணு கிடைக்கணுண்டா...
மாம்! திருப்பியும் ஆரம்பிச்சுடீங்களா?
ஏண்டா !!
மாம் எனக்கு இன்னும் வயசே ஆகல!
அதனால என்ன? MBA படிச்ச . படிக்கும்போதே ஆபிஸ் பார்க்க ஆரம்பிச்ச. இப்போ இவ்ளோ பெரிய ஹாஸ்பிடலோட மனேஜ்மென்ட் பார்க்கறியே . அந்த மாதிரிதான்.
இது அந்த மாதிரி இல்ல மாம்.சும்மா ஏதோ ஒரு பொண்ண கல்யாணம் பண்ணறதுக்கெல்லாம் எனக்கு இஷ்டம் இல்லை . பாக்கணும், பழகணும், மனசுக்கு புடிக்கணும். இவதான் எனக்கு மனைவியா வரணுன்னு எனக்கு தோணனும் . அவன் சொல்லாத இன்னொரு விஷயம் வேறு ஒன்று உண்டு. அவன் தந்தையை பற்றிய பயம்தான் அது. அதை பற்றி எதற்காக அவன் கவலைபடுகிறான் என்பது அவனுக்கே புரியவில்லை. அதை பற்றி வசந்தியிடம் அவன் எப்படி சொல்லுவான்? அவனும் 25 வயது நிரம்பியவன்.அவனுக்கும் அந்த பெண்ணை கண்ட நிமிடங்களில் இருந்து மனதில் ஏதோ ஒரு புது உணர்வு. அது காதலா ? ம்.ம்ம் நிச்சயம் இல்லை. ஆனால் திருமண ஆசையின் விதை. அதை யாராலும் நிச்சயம் மறுக்க முடியாது.
எல்லாத்துக்கும் மேல எனக்கு இன்னொரு முக்கியமான கடமை இருக்கு மாம். சில வினாடிகள் , அவன் பேச தன்னை தயார் படுத்திக்க கொள்ள தேவை பட்டது. அவன் வார்த்தைகளுக்காக அவள் காத்துக் கொண்டிருந்தாள்.
ஐ அம் வைடிங் கௌசிக்,
மாம்.... அது வந்து சத்யாவை பத்தி …….
விஷயத்தை சொல்லு.
மாம் டாட் தன்னோட சொந்த சம்பாத்தியங்களை முழுக்க சத்யாவுக்குத்தான் கொடுத்திருக்கார் .
ம்ம்!
அவளின் குரலில் இருந்து அவன் பழைய வசந்தியை மீண்டும் காண முடிந்தது. அதற்கான காரணம் என்ன ?அது அவளுக்கே தெரியாது.
இப்போ அதுக்கு என்ன ?
அந்த பணத்தை சத்யா தனக்கு வேண்டான்னு சொல்லிட்டா.
அதுக்கு நாம என்ன பண்ண முடியும் ?
பழைய கௌசிக் இப்போது மீண்டும் வெளி வந்தான்.
ம்மா, நாம ஏதாவது செஞ்சுதான் ஆகணும்.
நீ யாரோ அவ யாரோ அவளை பத்தி உனக்கென்ன ?
மாம், அவளோட உண்மையை , உரிமையை அப்பா எனக்கு கொடுத்தார், இல்ல நான் தட்டி பறிச்சுக்கிட்டேன்.
அப்பிடின்னு நீதான் நினைக்கறே ?
மாம் நீங்க தப்பா பேசறீங்க?
இப்போ என்ன ? முதல்ல உங்கப்பா யாருன்னு கேட்டு எங்கிட்ட சண்டை போட்ட . இப்போ அவன் பொண்ணுக்காகவா ? சோ நீ எப்பையுமே எனக்காக இல்ல, சரிதானே ?
மாம், அப்பிடில்லாம் இல்ல. நான் எப்பையுமே உங்களுக்காகத்தான். பட் கொஞ்ச மாசம் மட்டும் என்ன விட்டுடுங்க.ப்ளீஸ்........
சரி, உன்னோட இஷ்டம் தோளை குலுக்கினாள்.
மாம். நீங்க முழு மனசோடத்தானே சொல்லறீங்க ?
அதப்பத்தி உனக்கென்ன ?
இந்த ஒரு பேச்சு வார்த்தையே அவள் மனதை முழுவதுமாக ஆக்ரமித்து கொள்ளும் என்பது கௌசிக்கிற்கு தெரிந்திருந்தால், மிக நன்றாகவே இருந்திருக்கும். அவன் கயல் விழியை கட்டாய திருமணம் செய்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
பொதுவாக பேச்சு வழக்கில்,
எல்லாம் நேரம், எதுவும் நம்ம கையில இல்ல என்று கூறுவார்கள். நேரம் மட்டுமா நம் கையில் இல்லை ? நம் மனதும்தான் நம் கையில் இல்லை. அது வசந்திக்கு மட்டும்தானா ? நம் அனைவருக்குமே பொருந்தும். சில நேரங்களில் வேண்டும் என்று தோன்றுவது அடுத்த சில மணி நேரங்களில் வேண்டாம் என்றே தோன்றும். என்றுமே இது எனக்கு வேண்டாம் என்று தோன்றுவது அடுத்த சில நொடிகளில் வேண்டும் என்று தோன்றும். நாம் யாரும், முற்றும் துறந்தவர்கள் இல்லை என்று நம் மனமே நமக்கு அறிவுரை கூறும். மூளைக்கும் மனதிற்கும் நடக்கும் பல சண்டைகளில் மனமே ஜெயிக்கும். அதே நிலைதான் இப்போது வசந்திக்கும் . அவள் மூளை இது நாள் வரை கௌசிக்கை தான் தனிமை படுத்தியது போதும் என்று சொன்னாலும், மனமோ, அவன் எனக்கு மட்டுமே சொந்தம். அவனை நான் யாருக்கும் தர மாட்டேன் என்று கூறியதில், வழக்கம் போல அவள் மனமே வெ(கொ)ன்றது.

கௌசிக்கும் தான் கொஞ்சம் விட்டு கொடுத்திருக்க வேண்டுமோ ? ஆனால் அவன் எந்த தவறும் செய்ய வில்லையே ? அவன் தவறுகளை திருத்தி கொள்ள நினைத்தான். முடியவில்லை. அதற்காக பிராயச்சித்தம் கூடவா செய்யக் கூடாது ? அவன் நிலையில் அவன் சரியாக இருப்பதாகவே தோன்றுகிறது.
இனிமையாக ஆரம்பித்த அன்றைய மாலை பொழுது , மிக கொடுமையாகவே முடிந்தது. அழகிய மாலை பொழுது சத்யாவின் அழகிய தோற்றத்தை தந்த வசந்திக்கு, இரவின் கருமையும், சத்யாவாகவே தோற்றம் தந்ததுதான் ஆச்சர்யம். இரவில் தூக்கம் வராமல் இருவருமே புரண்டு புரண்டு படுத்திருந்தனர்.

கங்காவுக்கும் இங்கு அதே நிலை தான். வாரம்தோறும் இரவில் வந்துவிடும் சிவாவின் நினைவு அவளை மெல்ல மெல்ல மூழ்கடித்தது.
என்ன பத்தி நீக்க ஏன் நினைக்கவே இல்லை என்று மனம் கதறியது. அவள் அறியாதது அல்லது அவள் வயதிற்கு புரிந்து கொள்ள முடியாதது ஒன்று உண்டு. சிவாவால் என்றுமே அவளை ஒதுக்க முடியாது. அவன் அவளை ஒதுக்கவில்லை. அதற்க்கு பதிலாக சில காலம் இடம் மாற்றி வைத்திருந்தான் அவ்வளவே. ஒரு சாதாரண பெண்ணாக அவன் அவளை தன் வீட்டில் வைத்திருக்க விரும்பவில்லை. தன் மனத்திலும், வீட்டிலும் அவளை மாகாராணியாகவே வைக்க விரும்பினான், பெற்றோரின் சம்மதத்துடன்.
அவன் நினைவு வந்தவளுக்கு அழையா விருந்தாளியாக வந்தது, கண்ணீரும், மனா சோர்வும்தான்.
அதுவே மறு நாள், சிவாவை பார்த்தவுடன், மாயமாகி போனது.

அவன் தன் இயல்பான புன்னகையுடன் அவளை பார்க்க வந்தான். ..................விரைவிலேயே அவன் அவளுக்கு ஒரு நல்ல செய்தியை தர போகிறான், ஆனால் அவள்............பார்க்கலாம்.


மீண்டும் வருவாள் தேவதை..........
 

Latest Episodes

New Threads

Top Bottom