NYD-78
கௌசிக் வாங்கி தந்த அந்த புடவையை பார்த்தவளுக்கு மிக மகிழ்ச்சி. அவளுக்கு அந்த நிறம் மிகவும் பிடித்திருந்தது. ஒரு நல்ல நாளா பார்த்து கட்டிக்கறேன், தேங்க்ஸ் டா ! கண்ணா ! அன்பாக சொன்னாள் .
நீ எப்பையுமே இப்படியே ஹாப்பியா இரு சத்யா.
ம்ம்!! என்று சிரித்துக் கொண்டே தலையாட்டினாள் . லேசாக பல் தெரிய சிரித்தாள். அடுத்த ஒரு சில நாட்களிலேயே அவள் அதைக் கட்டிக்க கொள்ளப் போவது அவளுக்கு தெரியாது,
சரவணனின் தங்கை வீட்டு திருமணத்திற்கு அவர்கள் சென்னை வந்தனர். திருமணம் முடிந்ததும் சத்யாவை பார்க்கலாம் என்று சரவணனும் செல்வியும் நினைத்திருந்தனர். இத்திருமணத்தில் முத்துவுடன் சத்யாவும் ஜோடியாக நிற்க வேண்டும் என்று அவர்களுக்கும் ஆசைதான். ஆனால் அதற்க்கு முத்துவிடம் பேசினால் அவன் நான் வரமாட்டேன் என்று முருங்கை மரத்தில் ஏறிவிட்டால் அல்லது வேறு ஏதாவது பிரச்சனை வந்து விட்டால் என்ன செய்வது என்று இருவருமே அமைதியாகவே இருந்தனர். அவர்கள் அறியாதது வேறு ஒன்று உண்டு .
சரவணனும், செல்வியும் மண்டபத்திற்கு வெளியில் சும்மா வந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே யூ டர்ன் போட்டு வண்டியை திருப்பும் பொது இவர்களை கண்டு விட்டாள் . மருத்துவமனைக்கு செல்ல இன்னும் நேரம் இருந்தது. அதனால் சரவணன் என்று அழைத்தாள் . திரும்பி பார்த்தவர்களுக்கு அளவில்லா ஆனந்தம். செல்வி ஓடி வந்தாள் . அவள்தான் சத்யாவிடம் பைத்தியம் பிடித்தவள் ஆயிற்றே?
எப்படி இருக்க செல்வி ? இவளுக்கும் அவர்களை பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி.
நல்லாருக்கேங்க .
இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க? ஒரு போன் கூட பண்ணல ?
நாங்களே இப்பதான் வந்து இருங்கினோம். ஊருக்கு போகறதுக்கு முன்னாடி உங்கள பார்த்துட்டு போகலாமுன்னு ...
ஓ! இன்னும் எத்தனை நாள் இங்க இருப்பீங்க ?
இவரோட தங்கச்சி நாத்தனார் கல்யாணம். அதான் கொஞ்சம் முன்னாடியே வந்துடலான்னு வந்தோம்.நாளைக்கு கல்யாணம். எப்படியும் இன்னும் மூணு நாளாவது இங்க இருப்போம்.
எனக்குதான் உங்கள பாக்கலையேன்னு மனசு அடிச்சுகிச்சு. உங்கள பாக்க வரலான்னா முத்தண்ணன் என்ன சொல்லுவாங்களோன்னுதான் என்று அவள் உளர ஆரம்பித்தவுடன், நறுக்கென அவள் கையில் கிள்ளினான் அவள் கணவன்.
பரவால்ல விடுங்க சரவணனன். அவளை போய் அதை இவளும் கண்டு கொண்டாள் .
அவரு எங்க சரவணன்?
அவன் உள்ள இருக்கான் போல.... இருங்க நான் போய் கூப்பிடறேன் ,
இல்ல பரவால்ல இருக்கட்டும் சரவணன் நான் ..எனக்கு.. லேட்டாயிடுச்சு. நீங்க எப்ப ப்ரியா இருக்கீங்களோ அப்ப கூப்பிடுங்க......
நீங்க வேலை செய்யற இடம் எங்க இருக்கு ? செல்வி ஆர்வமாக கேட்டாள் . இரவு தான் அங்கே தான் இருக்க போகிறோம் என்பது அவளுக்குத் தெரியாது பாவம்.
அதோ அந்த பில்டிங்குதான் செல்வி என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களின் சொந்தங்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
என்ன செல்வி, யாரிது ?
பிரண்டு, அதோ அங்கதான் வேல செய்யறாங்க. பெரிய டாக்டரு....
பிரண்டுங்கற! கல்யாணத்துக்கு வருவாங்கல்ல ?
இல்ல மா, என்னால கல்யாணதுக்கு வர முடியாது, எனக்கு டூட்டி இருக்கு, இப்பயும் லேட்டுதான் நாம் அப்புறம் பாக்கலாம், பாந்தமாக விடை பெற்றவளை அந்த அம்மாளுக்கு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.
வரேன் செல்வி, வரேன் சரவணன்.
இவர்களின் சம்பாஷணையை முத்து கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவன், வேண்டுமென்றே உள்ளே சென்று விட்டான். அது சத்யாவுக்கு யாரோ முகத்தில் ஓங்கி அடித்தது போல இருந்தது. சட்டென திரும்பி சென்று வண்டியில் ஏறி மருத்துவமனைக்கு சென்றவள், தனது அறையில் சென்று குளியல் அறையில் முகத்தை நன்றாக நீர் அடித்து கழுவிக் கொண்டாள் . அன்று மாலை மிக முக்கியமான ஒரு ஆபரேஷன் டாக்டர் பாஷ்யத்திற்கு இருந்தது. அதற்காக அவளும் அவளது டீமில் இருந்த இன்னும் இரு மருத்துவர்களும் சேர்ந்து நிறைய விஷயங்களை தயாரித்து வைத்திருக்கச் சொன்னார். அதற்காக அவர்கள் கடந்த ஒரு வாரமாக நிறைய ஆராய்ச்சி கட்டுரைகளை விரிவாக அலசி இருந்தார்கள். அதற்க்கு ஏற்ற பலன் அன்று கிடைத்தது.
ஆம்! அன்று காலையிலேயே அவரும் வந்து விட்டார், அவருக்காக தேநீர் கலக்க இவள் போனாள் . இவள் முகத்தை பார்த்தவருக்கு என்ன தோன்றியதோ அவரே இவளுக்கும் சேர்த்து தேநீர் கலந்து கொண்டு வந்தார். இவளுக்குத்தான் மிகவும் கூச்சமாக இருந்தது.
இட்ஸ் ஓகே மீ டியர் என்று தோளில் தட்டிக் கொடுத்தார்.
அவரும் நிறைய யோசனைகளுடனே இருந்தார் என்பது அவர் முகத்தை பார்த்தாலே தெரிந்து விடும். பொதுவாக எத்தனை பதட்டம் இருந்தாலும் அதை அவர் காண்பித்துக் கொள்ள மாட்டார். மருத்துவம் தவிரவும் பல விஷயங்கள் அவரிடம் இருந்து சத்யா நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. கற்றுக் கொண்டாலும் பல விஷயங்களை அனுபவம்தான் தரும் என்பது அவளுக்கும் தெரிந்ததிருந்தது. இருப்பினும் ஒவ்வொரு நிமிடமும் அவரது உடல் அசைவுகளைக் கொண்டே அவர் என்ன யோசிக்கிறார் என்பதை அவள் அறிந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். அது அவளுக்கு உதவியாகவே இருந்தது.
அவளுக்கும் அந்த சிறு நிமிடங்களின் ஆசுவாசம் தேவைதான். அதனால்தானோ என்னவோ அன்று முழுவதுமே அவளால் அன்றைய தினத்தில் முழுவதுமாக ஈடுபட முடிந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இந்த உலகத்தில் என்ன நடந்தது என்று கேட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்காது. இவர்கள் மூவரும் சொன்ன செய்திகள் பலதும் பாஷ்யம் அறிந்திருந்தார். எப்போதுமே தன்னை அப்டேட்டடாக வைத்து கொண்டிருப்பவர் அவர். அதனால் இவர்கள் கூறியது எல்லாம் ஏதோ பெரிய தொழிலதிபருக்கு அவர் குழந்தைகள் ஒரு ருபாய் இரண்டு ரூபாய் பற்றி சொல்லிக் கொடுப்பது போலத்தான் இருந்தது. இருந்தாலும் அவர்களுடைய பல சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். அவர்கள் வாயாலேயே பல பதில்களையும் வரவழைத்தார். ஒரு தொழில் முறையான உறவை தாண்டியும் ஒரு சிறந்த ஆசிரியராகவும் அவர் அவர்களுக்கு பாடம் நடத்தினார். இதற்க்கு மேலும், மதியம் அவர் செய்ய வேண்டிய மிக பெரிய அறுவை சிகிச்சைக்கும் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அவருடைய அறிவும் ஆற்றலும் இளையவர்களுக்கு ஆச்சர்யம்தான்.
மதியம் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போதே ஒரு அமைச்சரின் மகனுக்கு விபத்து ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் அட்மிட் செய்திருந்தார்கள். மற்ற மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின், பாஷயத்தின் க(வ)னிப்பு தேவை என்று தீர்மானித்தார்கள். அவர் அந்த அறுவை சிகிச்சையை முடித்தவுடன் இதற்க்கு ஓடி வந்தார். வந்திருப்பது பெரிய தலையாயிற்றே !!! உட்கார கூட முடியவில்லை, பாவம் அவர். நல்ல வேளையாக அடுத்த சில மணி நேரங்களில் அவனுக்கு மூச்சு சீராக வரத் தொடங்கியது. அன்று காலையிலேயே வந்தவர்களுக்கு இரவு வரை மூச்சு விடக் கூட நேரம் இல்லாமல் பறந்தது. அதனால் நல்ல வேளையாக இவளால் முத்துவை பற்றி யோசிக்க கூட முடியவில்லை . இல்லை என்றால் அவள் மிகவும் தவித்து போயிருப்பாள்.
பாஷ்யம் கிளம்பியவுடன் இவளும் மற்றவர்களும் வீட்டுக்கு கிளம்பினர் .எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு இவள் கிளம்பும் போது சரவணன் கால் செய்திருந்தான். செல்விக்கு திடீரென வாந்தி வந்து அதை தொடர்ந்து மயங்கி இருந்தாள் . அதற்காக இவன் அழைத்தான்.
ஓகே! சரவணன், ஒன்னும் பிரச்னை இல்லை. ஏதாவது சாப்பிட்டது ஒதுக்காம கூட இருக்கலாம். நீங்க பேசாம இங்க ஹாஸ்பிடல் வந்துடுங்களேன். நான் இங்க காத்திருக்கேன்.
சரிங்க டாக்டர், அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வந்து விட்டார்கள், அதற்குள் செல்வியும் கண் விழித்திருந்தாள், ஆனால் மிகவும் சோர்வாக இருந்தாள்.
என்ன செல்வி என்னாச்சு ? பதட்டம் இருந்தாலும், சத்யா அதை காட்டிக் கொள்ளவில்லை.
ஒண்ணுமில்ல, ஏதோ திடீர்னு தல சுத்தல் வாந்தி அவளவுதான் . இவங்க தான் ஏதோ பயம் காட்டறாங்க.
என்ன சாப்பிட்ட ?நாடி பிடித்து பார்த்தாள் .
அவள் முகம் வெளிறி இருந்தது. சத்யாவுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது.
எப்ப தீட்டு குளிச்ச ?
ஒரு நிமிஷம், யாருக்கோ போன் செய்தாள் ,
உமா நீங்க கிளம்பிடீங்களா ?
நோ சத்யா! வைட்டிங் பார் மை பிரதர் ,
உமா ஒரே ஒரு ஹெல்ப், பண்ண முடியுமா ?
சொல்லு சத்யா.
என்னோட சிஸ்டர் வந்துருக்காங்க , அவங்களுக்கு கொஞ்சம் செக் பண்ண முடியுமா ?
ஒகே வாங்களேன்,
உடனே உமாவின் அறைக்கு சென்றனர். இவளை பார்த்ததுமே என்னாச்சு என்ன சாப்டீங்க?? என்பது போன்ற கேள்விகளை கேட்டாள் , எப்போது கடைசியாக உடல் உறவு கொண்டார்கள், எத்தனை நாட்களுக்கு முன் தலைக்கு குளித்தாள் , இன்னும் சில விவரங்களை கேட்டவள் , மகப்பேறு அறிந்து கொள்ளும் கிட்டை கொடுத்து நர்ஸுடன் அனுப்பினாள் . அதற்குள் முத்துவும் அங்கே வந்து விட்டான். சரவணன் மிகவும் பதட்டமாக இருந்தான்.
கூல் மிஸ்டர்... சரவணன் . நான் பாத்துக்கறேன். பதட்டப்படாதீங்க. அமைதியாக சத்யா அவன் தோளில் கை வைத்து அழுத்தினாள் .
அவனின் பதட்டம் உமாவிற்கு புரிந்தது. பேச்சை மாற்றும் விதமாக, சத்யா எனக்கு என்ன பீஸ் தருவ ?
எதுவானாலும் தர்றேன் டாக்டர்,
என்னோட ஊகம் சரியா இருந்தா நீ எனக்கு ஸ்வீட் வாங்கி தரணும்.
கிருஷ்ணா சுவீட்ஸ் மைசூர் பா !!
எஸ்! என்று கையில் சொடக்கு போட்டு அவள் முகத்துக்கு நேரே ஆள் காட்டி விரலை காண்பித்தாள் .
அதற்குள் கையில் கிட்டுடன் செல்வி வந்தாள் ,
ஆனா ஸ்வீட்ஸ் உங்களுக்குத்தான் தேவையோ?
வாட் உமா ?
ஏசி ரூமுல அப்படி அந்த பொண்ணுக்கு வேர்க்கும்போதே நான் நினைச்சேன். எஸ், ஷி இஸ் பிரக்நண்ட் . எதுக்கும் ஒரு வாட்டி ஸ்கேன் பண்ணிடலாம், என்று தலையுடன் உடலையும் சேர்த்து ஆட்டிக் கொண்டே செல்வியை அழைத்துக் கொண்டு ஸ்கேனிற்கு சென்றாள் .
சரவணனுக்கு இன்னும் பதட்டம் அதிகமாகத் தான் இருந்தது. அவனுக்கு பிள்ளை பேறு வேண்டும்தான். ஆனால் அதையும் தாண்டி அவனுக்கு செல்விதான் இந்த உலகம். அவளுக்கு எதுவும் வந்து விடக் கூடாது என்பதில்தான் அவன் யோசனை முழுவதுமே இருந்தது.
டென்ஷன் ஆகாதீங்க சரவணன், மெதுவாக அவன் கைகளை பிடித்தபடி சொன்னாள் .
இல்ல மேடம், உங்களுக்கே தெரியும், எனக்கு அவதான் எல்லாம். அவளுக்கு ஒன்னும் வரக் கூடாது.
ம் ஆ!! ஒண்ணுமே வராம எப்படி புள்ள பெத்துக்கறது ?நிறைய சந்தோஷம் வேணும், ஆனா கொஞ்சம் கூட கஷ்டப்படக் கூடாதா ? பேசிக் கொண்டிருக்கும்போதே உமா வந்தாள் .
வாழ்த்துக்கள் சரவணன். நீங்க அப்பா ஆகப் போறீங்க !!! வாட் சத்யா ..நீயும் பெரியம்மா ஆகப் போற !!
தேங்க்ஸ் உமா! உண்மையிலயே இது ரொம்ப பெரிய சந்தோசம்தான்... வாய் நிறைய, நன்றி சொன்னாள் .
டேய் சரவணா! என்னடா இது சின்ன புள்ள மாதிரி.. அவனை பார்த்த செல்விக்கும் கண்களில் நீர் வரத் தொடங்கியது.
மெதுவாக கண்களை துடைத்துக் கொண்டான் .
இல்லடா இதுக்கு இந்த புள்ளைய எங்க ஆளுங்க எத்தனை பாடு படுத்தி......வாயில் வார்த்தை வர வில்லை.அந்த இன்பத்தை பார்க்கும்போது உமாவுக்கே ஆச்சர்யம்தான். எத்தனையோ பெண்களையும், பிரசவங்களையும் பார்த்தவள்தான். ஆனால் நகரத்தில் யாரும் இப்படி வெளிப்படையாக மகிழ்ச்சியை காட்டுவதில்லை. இவர்கள்தான் வித்தியாசமாக தெரிந்தார்கள்.
புன்னகையுடன், ஓகே சரவணன், நீங்க எங்க இருக்கீங்க, டெலிவரி எங்க பாக்கபோறீங்க , எல்லாத்தையும் வீட்டுல பேசிக்கோங்க, இந்த மருந்துகளை அவங்க கட்டாயம் சாப்பிடணும்..என்று மருந்துகளை எழுதிக் கொடுத்தாள் .
ரொம்ப தேங்க்ஸ் உமா இந்த நேரத்துலையும்....
ஏய்! எனக்கு இந்த தேங்க்ஸ்செல்லாம் வேண்டாம். இன்னொரு குட் நியூஸ் இருக்கு,
என்ன உமா ?
ஆ !அவ்ளோ ஈஸியா எங்கிட்ட விஷயத்தை வாங்க முடியாது . அதுக்கு வேற பீஸ் தரணும்.
என்ன ? எதுவா இருந்தாலும் ஓகே, முதல்ல விஷயத்தை சொல்லு.
எனிதிங் ?
எஸ்,
டாக்டர் ருத்திராவோட ஒரு டீ ன்னா கூடவா?
நோ உமா!! அது என்னால முடியாது.
ஓகே! என்னால அந்த குட் நியூஸ் சொல்ல முடியாது, கைகளை விரித்து தோளைக் குலுக்கினாள்.
உமா ப்ளீஸ்.....
நீ ஓகே சொல்லு.
நாட் ஓகே, பட் நான் சார்கிட்ட பேசறேன்.
நீ என்ன சொன்னாலும் சார்தான் ஓகே சொல்லிடுவாரே!!
உன்னோட கனவு கற்பனைல்லாம் நல்லாத்தான் இருக்கு, முதல்ல விஷயத்தை சொல்லு. அதான் சொன்னேனே! நீ முதல்ல ஓகே சொல்லு.
உனக்கேன் அவ்ளோ பிடிவாதம்!
அந்த வளந்தவன் அதன் என்னோட தம்பி, அவன் ரொம்ப ஓவரா பன்றான் , எப்பப்பாரு அந்த ருத்ராவை பத்தித்தான் பேச்சு. அதுக்குதான். அவன்கிட்ட போய் இன்னிக்கு நானும், ருத்ராவும் டி குடிச்சோன்னு சொல்லணும். அவ்வளவுதான் .
நான் சார்கிட்டதான் கேட்கணும்.
சரி, அந்த விஷயம், இவங்களுக்கு ஒன்னு இல்லை ரெண்டு குழந்தைங்க பொறக்கப் போறாங்க....அட்டகாசமாக சொன்னாள் . யாராலும் நம்ப முடியவில்லை.
இத்தனை நேரம் மனையாளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த முத்து,
டேய் என்னடா இது? எப்டிரா ? நண்பனை கட்டி கொண்டான். இவளும் செல்விக்கு வாழ்த்துக்கள் சொன்னாள். ஓகே!ஓகே! இதெல்லாம் அப்புறம். முதல்ல நீங்க இவளை நல்லா பாத்துக்கணும். ரொம்ப நல்லா பாத்துக்கணும். இவங்க ஆளு கொஞ்சம் சின்னதா ஐ மீன் ஹைட் கம்மியா இருக்கறதுனால, இது கொஞ்சம் கஷ்டம்தான். வீட்டுல யாரவது பெரியவங்க இருந்தா கூப்பிட்டு வச்சுக்கோங்க. இனிமே இவங்களுக்கு வாந்தி தல, சுத்தல் மயக்கம் எல்லாமே கொஞ்சம் அதிகமாவேதான் இருக்கும், மத்தவங்களை விட கூடுதலாவே இருக்கும். அவங்களோட மனசுக்கும் நிறைய கவனிப்பு தேவை . உடல் உபாதைனால மனசாலையும் ரொம்ப சோர்ந்து போய்டுவாங்க, இவங்கள ரொம்ப பத்திரமா பாத்துக்கணும். முதலில் ஹாஸ்யமாக பேசினாலும், இந்த விஷயங்களை தீவிரமாகவே சொன்னாள் . அதே மாதிரி எந்த விதமான காரணத்தை கொண்டும், இந்த மருந்துகளை நிறுத்தவே கூடாது. ஒரு நாள் மாத்திரை இல்ல கிடைக்கல எதுவும் சொல்ல கூடாது. உடல் உழைப்பு தேவை. சிட்டில இருக்கறவங்கன்னா நிச்சயம் நடை பயிற்சி தேவைன்னு சொல்லி இருப்பேன். நீங்க கிராமத்துல இருக்கறவங்க. சொல்லவே தேவை இல்லை . வாய்க்கு என்ன புடிக்குதோ சாப்பிடுங்க, ரொம்ப எண்ணெய், காரம், சேர்க்க வேண்டாம்... இன்னும் பல அறிவுரைகளை வழங்கி அனுப்பினாள் . அனைவரும் அவளுக்கு நன்றி உரைத்து கிளம்பினர் .
சத்யா மிகவும் சோர்ந்து காணப் பட்டாள். அங்கே ரிசெப்ஷனில், என்னோட வண்டி இங்கையே இருக்கட்டும் நான் நாளைக்கு எடுத்துக்கறேன், இப்போ நான் வண்டி புக் பண்ணி போய்க்கறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது சரவணன், டேய் முத்து ஒன்னு நீ போய் அவங்கள வீட்டுல விடணும் இல்ல நான் போகிறேன். இப்படி தனியா ராத்திரில அனுப்ப கூடாது என்றான். அதுவும் முத்துவுக்கு சரியாகத்தான் பட்டது. சரி நான் அவங்க கிட்ட பேசிட்டு வரேன்.
டாக்டர் ஒரு நிமிஷம்,
நீங்க தனியா போக வேணாம். நான் உங்களை கொண்டு விடறேன். அவள் இருந்த இருப்புக்கு அவளால் மறுக்க கூட முடியவில்லை. தன்னுடைய ஜீப்பில் முதலில் அவர்களை மண்டபத்தில் விட்டவன், பின்னர், சத்யாவின் வீட்டுக்கு சென்றான். செல்லும் வழியில் சிக்னலில் வண்டியை நிறுத்தியவன் எதேச்சையாக மனைவியின் முகத்தை பார்த்தான். அவளோ தலையை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. அவள் தலையை மெதுவாக தனது தோளில் சாய்த்துக் கொண்டு அவர்கள் வீடு சென்றான்.
சத்யாவுக்காக அவள் அன்னையும் தந்தையும் காத்துக் கொண்டிருந்தனர். வருவதற்கு தாமதமாகும் என்று அவள் ஏற்கனவே குறுந் செய்தி அனுப்பி இருந்தாள் . வண்டி சத்தம் கேட்கவும் அன்னை மெதுவாக கதவை திறந்தார். வண்டியை நிறுத்தியவன் மெதுவாக ஒரு பூவாய் போல கையில் ஏந்திக் கொண்டான்.
ஒன்னும் இல்லங்க, ரொம்ப அசதி போல , அதான் தூங்கிட்டாங்க என்று சொல்லிக் கொண்டே அவளது அறைக்கு சென்று மெதுவாக கட்டிலில் கிடத்தினான்.
அதற்குள் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தி சாவியை கொண்டுவந்து கொடுத்தார் தியாகு .
தம்பி, நீங்க இங்கையே இருந்துட்டு காலைல போகலாம். அந்த குரலில், தந்தையின் பரிவும், கண்டிப்பும் இருந்தது.
ஏனோ அவரின் வார்த்தையை இவனால் தட்ட முடியவில்லை.
நீங்க என்ன சாப்படறீங்க தம்பி என்று கேட்டுக் கொண்டே சிவகாமி வந்தார்,
இல்லங்க ஒன்னும் வேண்டாம்.
சரி பால் தரேன் என்று சற்று இளம்சூட்டில் பால் தந்தார். அவங்க இன்னும் ஒன்னும் சாப்பிடல,
அங்க அவளுக்கும் பால் வச்சுருக்கேன்.
சரிங்க,
அத்தைன்னு சொல்லுங்க.
சரிங்க அத்தை ..
நீங்களும் அங்க அவ ருமுலையே படுத்துக்கோங்க.
சரிங்க ...
அவளது அறைக்கு வந்தவன், மீண்டும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த நிலவொளியில் அவள் பேரழகியாகத்தான் இருந்தாள் . அந்த முகத்தில் மயங்கியவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள்....
அதைத் தெரிந்து கொள்ள
மீண்டும் வருவாள் தேவதை............