Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

சுவராஸ்யமாக படித்துக் கொண்டே வந்தேன்... நிறைவு பகுதிக்கு வந்ததும்..
குளத்துக்குள் எதோ தட்டுபடுது என பயந்தவர்கள் அந்த காளையர்கள் மட்டுமல்ல... நானும்தான்!

ஷோபாவில் சாய்ந்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்த நான், திடுக்கென பயத்தில் ஷோபாவில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்!

என்னம்மா இப்படி பயமுறுத்துறீங்க!
நன்றி...நன்றி ..😜😜😜😜...
 
திகில் நிறைந்த திருப்பங்களை கொண்டு பரபரப்பாக கதை செல்கிறது. கிராமத்து நிகழ்வுகளை எல்லாம் தத்ரூபமாக, வெகு இயல்பாக படம் பிடித்து நேரில் காட்டுவது போல் எழுதக்கூடிய அற்புதமான திறமை இந்த கதாசிரியருக்கு இருக்கிறது!

ஒப்பாரி சூப்பர். பாச உணர்வுகளை அப்படியே சிதைக்காமல் இலக்கிய நயத்துடன் காட்டும் கண்ணாடி போல அந்த ஒப்பாரி இருக்கிறது! இவைகள் எல்லாம் கிராமத்து கலாச்சாரங்களை காட்டும் கால கண்ணாடி.

ஆமா... எப்படி போலீஸ் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுத்தார்கள்? போலிஸுடனான இளைஞர்களின் தர்க்கம் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

எப்படியாயினும், கதையில் வரும் உரையாடல்கள் எல்லாம் மனதில் நல்ல பசுமையாக நிற்கிறது.
 
Last edited:

நன்றி நன்றி..அதுதான் தண்ணில மூழ்கி இறந்ததா முடிவு பண்ணிட்டாங்களே..😜😜..பிரேத பரிசோதனை பண்ணல..
 
நன்றி நன்றி..அதுதான் தண்ணில மூழ்கி இறந்ததா முடிவு பண்ணிட்டாங்களே..😜😜..பிரேத பரிசோதனை பண்ணல..
ஓகேதான். தண்ணீரில் மூழ்கி இறந்ததாக ஸ்பாட்டுக்கு வரும் போலீஸ் முடிவு செய்வது மட்டும் போதாது, சட்டப்படி.

எனவ, வழக்கமான சம்பிரதாய நிகழ்வுகளை செய்துவிட்டு உடலை கொடுத்ததாக ஒருவரி சேர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இயல்பாக இருந்திருக்கும்.

நான் சொல்வது ஒருவேளை தவறாக தெரிந்தால் பொறுத்தருளவும்!
 
Last edited:
மூக்காயின் அழுகையையும் அவளின் மனத்தாங்கல் சாபமாய் வெளியேறுவது என அனைத்தையும் கிராமிய பாஷையில் அச்சுப்பிசாகமல் சொல்லியது👌👌காட்சிகள் கண்முன்னே வலம் வந்தது...தங்கத்தின் அறியாமையை என்னவென்று சொல்ல...பெற்றவர்களுக்கு பிறந்தநாள் தெரியாதாம்...அவன் கிப்ட் எல்லாம் வாங்கிருக்கானாம்🤦‍♀️பருவவயது உண்மைக்கும் போலி க்கும் வித்தியாசம் தெரிவதில்லை...ஜோதியிடம் தயாளனும் எச்சரித்திருக்கிறான்...
 
New Threads

Top Bottom