திகில் நிறைந்த திருப்பங்களை கொண்டு பரபரப்பாக கதை செல்கிறது. கிராமத்து நிகழ்வுகளை எல்லாம் தத்ரூபமாக, வெகு இயல்பாக படம் பிடித்து நேரில் காட்டுவது போல் எழுதக்கூடிய அற்புதமான திறமை இந்த கதாசிரியருக்கு இருக்கிறது!
ஒப்பாரி சூப்பர். பாச உணர்வுகளை அப்படியே சிதைக்காமல் இலக்கிய நயத்துடன் காட்டும் கண்ணாடி போல அந்த ஒப்பாரி இருக்கிறது! இவைகள் எல்லாம் கிராமத்து கலாச்சாரங்களை காட்டும் கால கண்ணாடி.
ஆமா... எப்படி போலீஸ் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுத்தார்கள்? போலிஸுடனான இளைஞர்களின் தர்க்கம் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.
எப்படியாயினும், கதையில் வரும் உரையாடல்கள் எல்லாம் மனதில் நல்ல பசுமையாக நிற்கிறது.