Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 57 ராகேஷ் சுக்லாவின் வார்த்தை நெஞ்சுக்குள் ஈட்டி போல் பாய்ந்தது. குரல் வேண்டுமானால் அவருடையதாக இருக்கலாம். ஆனால் கேள்வி அவளுடையது - ஆர்த்தியுடையது. ‘என்னுடைய இடத்தில் என்னை கொன்றவர்களின் மகளா!’ - அவள் ஆன்மாவின் அழுகுரல் செவியில் ஒலித்தது. நாணறுந்த வில் போல் விறைத்து நிமிர்ந்தான்...
  2. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 56 மிருதுளா கண் விழித்த போது அர்ஜுன் அறையில் இல்லை. ஒரு கனவு - அது எவ்வளவு பெரிய பயங்கரமான கனவாகவும் இருக்கட்டும். ஆனால் வெறும் கனவு அர்ஜுன் ஹோத்ரா எனும் ஆளுமையான மனிதனை இந்த அளவு பாதிக்கக் கூடுமா? நேற்று இரவு அவன் பதட்டப்பட்டதை அவள் பார்த்தாள். அவன் உடல் நடுங்கியதை உணர்ந்தாள். அவன்...
  3. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 55 அர்ஜுன் வீடு திரும்பும் போது நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. உறக்கம் வராமல் வாசலில் நடைபழகிக் கொண்டிருந்த டேவிட், நண்பனை கண்டதும் நிம்மதியடைந்தான். அர்ஜுன் காரை கராஜில் விட்டுவிட்டு வெளியே வந்த போது, “காலையிலிருந்து எங்க போயிருந்த?” என்றபடி அருகில் நெருங்கியவன் புருவங்கள் முடிச்சிட...
  4. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 54 என்ன முயற்சி செய்தும் அவளை பற்றிய எண்ணங்கள் அவனைவிட்டு விலக மறுத்தன. எந்த வேலையில் ஈடுபட்டாலும் கவனம் சிதறியது. அவளுடைய அழுகையும் கூக்குரலும் காதுக்குள் பேரிரைச்சலாய் ஒலித்துக் கொண்டிருந்தது. நெஞ்செல்லாம் பிசைவது போலிருந்தது. ஓரளவுக்கு மேல் அந்த கனத்த உணர்வை தாக்குப்பிடிக்க...
  5. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 53 முதல் நாள் நடந்ததெல்லாம் கனவோ என்று கூட தோன்றியது மிருதுளாவுக்கு. பாறையை வைத்து கட்டியது போல் கணக்கும் தலை மட்டும் சாட்சி கூறவில்லை என்றால் அனைத்தையும் கனவென்றே அவள் நம்பியிருக்கக் கூடும். ஆனால் அத்தனையும் உண்மை.. பொட்டில் அறைந்தது போல் கூறினானே! அவன் பக்கம் நிற்க அவனுடைய மனைவி...
  6. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 52 கதவை தாழிட்டு திரும்பிய அர்ஜுன் ஹோத்ராவின் பார்வை, அடிபட்ட மயில் போல் மெத்தையில் உணர்வற்று கிடந்தவள் மீது படிந்தது. கால்கள் வேரூன்றி போனவனாக ஓரிரு நிமிடங்கள் அவளை பார்த்துக் கொண்டே நின்றவன் பிறகு குளியலறைக்குள் சென்று இலகுவான இரவு உடையில் திரும்பினான். கட்டிலுக்கு அருகே சைட்...
  7. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 51 வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் சீறிப்பாய்ந்த அவன் கார் மெக்கானிக் ஷெட்டை கடந்ததும் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டது. கல்லில் செய்த சிலை போல் ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தபடி சாலையை வெறித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவன் வெளியேற்றிய மூச்சுக்காற்றின் வெப்பம் கார் ஏசியின்...
  8. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 50 அன்று காலை கண்விழித்ததுமே அவள் மனம் அவனை தேடியது. அவசரமாக குளியலறைக்குள் சென்று திரும்பி, படுக்கையறையிலிருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். சமையலறையில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். பூனை போல் மெல்ல நடந்துச் சென்று, ஒரு பக்க தோளை தட்டிவிட்டு மறுபக்கம் அவன் முகத்தை...
  9. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 49 திறமையானவனை பெண்ணுக்கு பிடிக்கும். பாதுகாப்பானவன் அவள் மனதில் ஆழப்பதிவான். இவன் இருக்கும் வரை என்னை அசைக்க முடியாது என்கிற நம்பிக்கையை கொடுப்பவனிடம் அவள் சரணடைய தயங்குவதில்லை. சரணடைந்துவிட்டால் அவனை நம்பி எந்த எல்லைக்கும் செல்வாள். மிருதுளாவும் நம்பினாள். வெளிப்படையாக...
  10. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 48 சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி இடமும் வலமுமாக தலையை ஆட்டியாட்டி உமிழ்ந்த காற்றில் அறையே குளிர்ந்திருந்தாலும் அவள் மட்டும் கொட்டும் வியர்வையில் குளித்திருந்தாள். மங்கலான வெளிச்சத்தில் மூழ்கியிருந்தது அந்த அறை. அங்கே நடுநாயகமாக போடப்பட்டிருந்த மர மேஜையின் ஒருபுறம் மிருதுளா...
  11. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 47 ‘காரில் எதை வைத்திருந்தான்? அல்லது... யாரை? ப்ரொஃபஸருக்கு ஏதேனும்.. இல்லை.. இருக்காது.. அப்படி எதுவும் நடந்திருக்காது. நடந்திருக்க முடியாது’ - மனம் பதைபதைத்தது. மேலே சிந்திக்கக் கூட அச்சமாக இருந்தது. திகைப்பும் அதிர்ச்சியுமாக அவனை வெறித்துப் பார்த்தாள் மிருதுளா. அவன் முகத்தில்...
  12. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 46 அர்ஜுன் தெருமுனையை கூட தாண்டியிருக்க மாட்டான். அதற்குள் அவளுடைய அலைபேசிக்கு அழைப்பு வந்தது. நம்பர் புதிதாக இருந்ததால் அழைக்கும் நபர் யாரென்று தெரியவில்லை. ‘உன்னுடைய அலைபேசிக்கு அழைப்பு வரும்’ என்று சற்று நேரத்திற்கு முன் அர்ஜுன் கூறியது நினைவிற்கு வந்தது. இது அந்த கொலைகார...
  13. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 45 தட்டிலிருக்கும் உணவை ஸ்பூனால் அளந்தபடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் மிருதுளா. ஜூஸ் நிறைந்த கண்ணாடி கோப்பையை அவளிடம் கொண்டு வந்து வைத்துவிட்டு எதிரில் அமர்ந்த அர்ஜுன், அவளுடைய இலக்கற்ற பார்வையை கவனித்துவிட்டு அவள் முகத்துக்கு நேராக கையை உயர்த்தி இருமுறை சொடக்குப்போட்டான்...
  14. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    திடீரென்று கடுமையாக மாறிவிட்ட அவன் முகத்தை திகைப்புடன் பார்த்த மிருதுளா, “அர்ஜுன்..” என்று தயக்கத்துடன் அழைத்தாள். அவன் திரும்பியே பார்க்கவில்லை. வெகு அழுத்தமாக அமர்ந்திருந்தான். பிறகு சாலையை பார்த்தபடியே, “நா உன்ன நம்பினேன்” என்று கூறியவன் மெல்ல அவள் பக்கம் திரும்பி, “நீயும் என்னை நம்பறேன்னு...
  15. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 44 அர்ஜுன் மற்றும் மிருதுளா இருவரின் உலகமும் மற்றவரை சுற்றியே சுழலத் துவங்கியிருந்தது. காலை நேர ஜாகிங்கில் ஆரம்பித்து காபி, டிபன் என்று தொடரும் அவர்களுடைய இணைந்த பயணம் மாலை வாக்கிங் வரை வந்து இரவு உணவு வரை நீளும். அதற்கு பிறகும் கூட இருவருக்கும் உறங்க செல்ல மனம் வராது. ஏதாவது கதை...
  16. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 43 தில்லி சர்வதேச விமான நிலையம் வழக்கம் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. பணியாளர்களும், பயணிகளும், வழியனுப்ப வந்தவர்களும் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். மேலோட்டமாக பார்த்தால் தெரியாது.. ஆனால் கண்களை சற்று கூர்மையாக்கினால் பொதுமக்களோடு மக்களாக காவல்துறையினரும் கலந்து...
  17. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 42 “உல்ஃப்” என்று போலீஸ் அதிகாரி கூறியதை கேட்டதும், “அவரா!” என்று வியந்தார் பகவான். அந்த மனிதரின் உண்மையான பெயரைவிட ‘ஓநாய்’ என்கிற அவருடைய பட்டப்பெயர் நிழல் உலகிலும், உளவு வட்டாரங்களிலும் மிகவும் பிரசித்தியானது. அவர் ஒரு வாடகை கொலையாளி. வாடகை கொலையாளி என்றால் லோக்கல் கூலிப்படை அல்ல...
  18. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 41 அர்ஜுன் ஹோத்ராவின் கார் மிருதுளா படிக்கும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது. நேற்று இருந்த அதே சங்கடத்துடனும் தயக்கத்துடனும் காரிலிருந்து கீழே இறங்கினாள். “எனக்கு என்னவோ போல இருக்கு அர்ஜுன்.. கிளாஸுக்கு போகவே பயமா இருக்கு.” “நா வேணுன்னா உள்ள வந்து பிரின்சிபால மீட் பண்ணி பேசவா?”...
  19. Nithya Karthigan

    கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    ஷிவானி, முத்து முத்தான தமிழ் எழுத்துகளில் நான்கு வரிக்கு மேல கமெண்ட்ஸை பார்க்கும் போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு! உன்னோட ஒவ்வொரு கமெண்ட்டும் கண்ணுல பார்க்கவே ஆனந்தமா இருக்கு! அப்போ படிக்க எப்படி இருக்கும்! ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி... நான் 40 எபிஸோட்ஸ் மொத்தமா போஸ்ட் பண்ண பெரிய பூஸ்ட்அப் உன்னோட...
Top Bottom