Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

Status
Not open for further replies.

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 26

பொள்ளாச்சி சப் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் தனது பைக்கைக் கொண்டு வந்து நிறுத்தினான் அமுதன். கூடவே வந்தவன் இறங்கிய போது,

“ஆங்க்.. உங்க பேர் கேட்கவே மறந்துட்டேன். உங்க பேர் என்ன.?” என்று அமுதன் கேட்க,

“என் பேர் வளையாபதி சார்.” என்று அவன் சொன்னதும், அமுதன் சிரிப்பொன்றை உதிர்த்தபடி கேட்டான்,

“இப்போ கூட, இந்த மாதிரி பேர் வைக்கறாங்களா.?” என்று கேலி செய்ய, அவனோ, “அது எங்க கொல்லு தாத்தா பேர். அதை எனக்கும் வைச்சுட்டாங்க சார். என்ன பண்ணச் சொல்றீங்க.? இந்தப் பேரால கொஞ்சம் அவஸ்தையா தான் இருக்கு.” என்றான்.

“இல்ல, நான் சும்மா தான் கேட்டேன். நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க. பேர்ல என்ன இருக்கு.? மனசு தான் முக்கியம்.” என்று சொல்ல, அவனும் புன்னகைத்தான்.

“சரி, வாங்க மேல ஃபர்ஸ்ட் ஃப்ளோர் போகணும். அங்க தான் ஆஃபீஸ் இருக்கு.” என்று அவனை அழைத்துச் சென்றான்.

ஒரு சிறிய இடத்தில் அமைக்கப்பட்ட ஆஃபீஸ். அங்கே, இருவர் மட்டுமே அமரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒன்று சீனியர் லாயர் செங்குட்டுவனுக்கான டேபிள் மற்றும் ஃபைல்கள் அடங்கிய ரேக் ஒன்று இருந்தது.

மற்றொன்று அமுதனுக்கான டேபிள், அதில் சில ஃபைல்கள் இருந்தன. அவர்கள் உள்ளே நுழைந்ததும், செங்குட்டுவன் ஏதோ ஒரு ஃபைலை புரட்டிக்கொண்டிருந்தவர், நிமிர்ந்து பார்த்ததும் ஆச்சர்யத்துடன் புன்னகைத்தபடி பார்த்தார்.

“டேய்.. வளையாபதி. எப்படி இருக்க.? எவ்ளோ வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து. கடைசியா உங்கப்பா, அம்மாவோட காரியத்தப்போ பார்த்தது. நீ எங்க இங்க.?” சற்று உற்சாகமாய் பேசிக்கொண்டிருக்க, அமுதனுக்கு ஒரு மாதிரி ஆனது அவனைப் பார்த்து.

“இல்ல மாமா. வரவேண்டிய அவசியம்னால இங்க வரணும் நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள என்னை சில பேர் துரத்தினாங்க. அப்போ இவர்தான் என்னை வந்து காப்பாத்தினார்.” என்றான் இன்னும் அந்த நிகழ்வில் இருந்து மீளாமல்.

“அமுதா, உன்னோட அடிதடி சண்டைய இங்கயும் காமிச்சிட்டியா.?” என்றார் செங்குட்டுவன்.

“சார், ஆபத்துல இருக்குறவங்களுக்கு உதவுறது தானே நல்ல பண்பு. அதைத்தான் செஞ்சேன். பாருங்க, அவர் கரெக்டா உங்களைப் பார்க்கணும்னு என்கிட்ட சொன்னார். அதான், நேரா கூட்டிட்டு வந்துட்டேன்.” என்றான் அமுதன் சாதாரணமாக.

“ஹூம்ம்.. அதுசரி. என்ன பிரச்சினை வளையாபதி.? எதுக்கு ஆளுங்க எல்லாம் உன்னைத் துரத்தி வரணும்.? நீ என்ன பண்ண.?” என்றார் அவர்.

“உங்களுக்கே தெரியும் தானே மாமா. அப்பா சாகறதுக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னாடியே எல்லா சொத்தையும், என்னோட பேர்லயும், தேனு பேர்லயும் மாத்தி எழுதினாரு. ஆனா, அவர் ஏன் அப்படிப் பண்ணாருன்னு உங்களுக்கும், அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். அது நடந்து கொஞ்ச நாள்லயே அப்பா, அம்மா தற்கொலை பண்ணிட்டாங்க. இப்போ வரைக்கும் அதுக்கான காரணம் என்னன்னு எனக்குத் தெரியாது. அதை ஆராய்ச்சி பண்ணவும் எனக்கு மனசு வரல. ரெண்டு புள்ளைங்கள அநாதையா விட்டுட்டுப் போறோமேன்னு கொஞ்சம் கூட யோசிக்காதவங்களைப் பத்தி நாம என்ன பண்ண முடியும்னு விட்டுட்டேன். ஆனா, இப்போ சில நாட்களுக்கு முன்னாடி தான் எனக்கு சில விஷயங்கள் புரிய ஆரம்பிச்சுது. எங்க மாமாவும், அத்தையும் எவ்வளவு பெரிய சுயநலவாதிகன்னு எனக்குத் தெரிய ஆரம்பிச்சது. அவங்க ரெண்டு பேரும் அம்மா, அப்பா கூடவே இருந்து எல்லா சொத்தையும் அபகரிக்கணும்னு ஆசைப்பட்டிருக்காங்க. தங்கச்சிக்காக எதையும் பண்ணனும்னு நினைச்ச அப்பாவுக்கு, ஒரு கட்டத்துல அவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரிய ஆரம்பிச்சுது. அதனால, அவங்கள வீட்டை விட்டு வெளியேத்தனும்னு நினைச்சார். ஆனா, அத்தை அழுது அப்படி, இப்படின்னு சொல்லி சமாதானம் பண்ணிட்டாங்க. அப்பா, அம்மா போனதுக்கப்பறம் அவங்க எங்க ரெண்டு பேரையும் ஏமாத்தி சொத்த எப்படியாவது எழுதி வாங்கணும்னு நினைச்சாங்க. ஆனா, அப்பா ரொம்ப கவனமாத்தான் உயில் எழுதி வைச்சிருக்கார். இந்த சொத்து நாங்க கல்யாணம் பண்ணி எங்களுக்கான வீட்டுல நாங்க வாழ ஆரம்பிக்கும்போது தான் செல்லுபடியாகும்னு. அதைத் தெரிஞ்சுக்கிட்ட அத்தையும், மாமாவும் தேனுக்கு அவங்க பையனக் கல்யாணம் பண்ணி வைக்கணும், அதுதான் எங்க அப்பாவோட கடைசி ஆசைன்னு சொல்லி, கல்யாணம் ஏற்பாடு பண்ணாங்க. தேனுக்கு இது இஷ்டமே இல்ல. இருந்தாலும், அப்பாவோட ஆசைன்னு நினைச்சுத்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சோம். ஆனா, கல்யாணம் ஆன, அன்னைக்கு நைட்டே அப்பா, அம்மா இறந்த அதே ரூம்ல, அதே மாதிரியே அத்தை பையனும் தூக்கில தொங்கிட்டு இருந்தான். எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி. பாவம் தேனுதான். அவளோட வாழ்க்கை ஒரே நாள்ல கேள்விக்குறி ஆயிடுச்சு. வாழாத வாழ்க்கைல தேவையில்லாம விதவையாயிட்டா. அவ வாழ்க்கை அப்படியே போயிடக்கூடாதுன்னு அவளை நான் படிக்க வைச்சேன். என்னதான் சொத்து இருந்தாலும் இப்போ, கவர்மெண்ட் ஸ்கூலுக்கு வேலைக்குப் போறா. அவளுக்குன்னு ஒரு சுயம் வேணும்னு நினைக்கிறா. அதனால தான் சம்மதிச்சேன். இப்போ பாருங்க எங்க அத்தை, மாமாவுக்கு இன்னும் சொத்து ஆசை குறையல. அவ பேர்ல இருக்கற சொத்தையாச்சும் அபகரிக்கணும்னு நினைச்சு, அவ பேர்ல இருக்கற சொத்தை அவங்க பேர்ல எழுதித் தரச் சொல்லி அவள அடிச்சு, உதைச்சு ரொம்பக் கொடுமைப்படுத்தினாங்க. அதுக்கப்பறம் நான் விஷயம் கேள்விப்பட்டு அதைக் கேட்டப்போ, எங்க மாமா என்னையும் அடிச்சார். அவங்க எவ்ளோ மோசமானவங்கன்னு அப்போதான் எனக்குத் தெரிஞ்சது. எங்க பேர்ல இருக்கற சொத்துப் பத்திரம் எல்லாம் என்கிட்ட தான் இருந்தது. அப்பா, அதை ஒரு ரகசிய அறைல பாதுகாத்து வைச்சிருந்தார். அது எனக்கு மட்டும் தான் தெரியும். அதையும் அவங்க எடுக்க முயற்சி பண்ணாங்க. ஆனா, நான் அதுக்குள்ள வெற இடத்துல மாத்தி வைச்சுட்டேன். இதுக்கும் மேலயும் என்னால பொறுக்க முடியாமத்தான், தேனு பேர்ல இருக்கற சொத்துல அவளுக்கு இருக்கற உரிமைய வேற யாரும் பறிக்கக் கூடாதுன்னு அந்தப் பத்திரத்த உங்க மூலமா பாதுகாத்து, அவங்க இப்படிப் பண்ணதுக்காக அவங்க மேல ஒரு கேஸூம் போடணும்னு இன்னைக்கு காலைல கிளம்பினேன். இதையும், எப்படியோ தெரிஞ்சுக்கிட்டுத்தான் என்னை ஆளுங்கள விட்டு துரத்தி அதைப் பறிக்க நினைச்சாங்க. சொல்லப்போனா, இத்தனை நாளும் நானும், தேனும் உயிரோட இருக்கறதே அதிசயம். அவங்க சொத்துக்காக எல்லாத்தையுமே செய்யற அரக்கர்கள்.” என்று முழுக்கதையையும் சொல்லி முடிக்க,

அனைத்தையும் இமை கொட்டாமல் அதிர்ச்சியாய்ப் பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்தான் அமுதன். அதைப் பொறுமையாய்க் கேட்டபடி அமர்ந்திருந்தார் செங்குட்டுவன்.

“ச்சே.. அந்தப் பொண்ணுக்கு ஏன் இந்த சின்ன வயசுலயே இப்படி ஒரு சோதனை.? கடவுளுக்கு இரக்கமே இல்லையா.?” என்று பரிதாபப்பட்டார் செங்குட்டுவன்.

“அப்படி என்ன சார் உங்க பேர்லயும், உங்க தங்கச்சி பேர்லயும் சொத்து இருக்கு.?” என்று அமுதன் கேட்க,

“அமுதா, அவங்க ஜமீன் பரம்பரை. அவங்களுக்கு அவங்க ஊர்ல பாதிக்கு மேல சொத்து இருக்கு. அவங்க இருக்கற வீடு எப்படி இருக்கும் தெரியுமா.? ஜமீன் வீடு பார்த்திருக்க, இந்தப் படத்துல எல்லாம் வருமே, அந்த மாதிரி இருக்கும். அதுபோக, ஏக்கர் கணக்குல தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, ஏன் இன்னொரு வீடும் இருக்கு. கணக்குப் போட்டா, கோடிக்கணக்குல இருக்கும். அதனால தான், இவங்கள அவங்க கொல்ல முயற்சி பண்றாங்க. இவங்க ரெண்டு பேரையும் மிரட்டிப் பணிய வைக்க முடியும். இல்லன்னா, அவங்க இல்லாதப்போ, அவங்களுக்கும் அவங்க சொத்துக்கும் காவலா இருந்தவங்கங்கிற பேர்ல, இந்த சொத்த எப்படியாவது பறிக்கலாம்னு நினைக்கிறாங்க. ஏன்னா, சொத்து அப்படித்தான் முதல்ல எழுதியிருந்துச்சு. அதுக்கப்பறம் தான், அன்னைக்கு இவங்க அப்பா, அதுவும் அவசர அவசரமா வந்து, என் மூலமா உயில மாத்தி அவன் பேர்ல இருந்த எல்லாத்தையும், இவங்க பேர்ல மாத்தி எழுதிட்டுப் போனான். ஆனா, அதுக்கப்பறம் அவன் கொஞ்ச நாள்லயே அவன் மனைவியோட தூக்குல தொங்கிட்டான்னு கேள்விப்பட்டதும், எனக்கு ரொம்ப ஷாக் ஆயிடுச்சு. அவனுக்கு ஏற்கனவே தன்னோட உயிர் என்னைக்கிருந்தாலும் ஆபத்துல இருக்குன்னு தெரிஞ்சு தான் முன்னெச்சரிக்கையா எல்லாத்தையும் பண்ணிருக்கான்னு தோணுச்சு. ஆனா, இவ்வளவு பெரிய விஷயம் அதுக்குள்ள இருக்குன்னு அதுக்கப்பறம் தான் தெரிஞ்சது.” என்றார் அவர்.

“இப்போ வரைக்கும் எதனால அப்பா, அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு தெரியாமயே போயிடுச்சு.” என்று கவலையுடன் வளையாபதி சொல்ல,

“எனக்குத் தெரிஞ்சுடுச்சு.” என்றான் அமுதன்.

“என்ன.? உனக்குத் தெரியுமா.? எப்படி.? இன்னைக்கு தான் இவன நீ மொதல்ல பார்க்கற, இப்போதான் இவன் கதையக் கேட்கற.? அப்பறம் எப்படி.?” என்றார் செங்குட்டுவன் அவனைப் பார்த்து.

“சார், இதுல மறைஞ்சு இருக்கற விஷயத்த உங்களால கண்டுபிடிக்க முடியல.? அவர் சொல்லும் போதே என்னால அஷ்யூம் பண்ண முடிஞ்சது.” என்றான் அமுதன்.

“என்னங்க சொல்றீங்க.? என்ன கண்டுபுடிச்சீங்க.?” என்றான் வளையாபதி.

“மிஸ்டர். வளையாபதி, உங்க அப்பா, அம்மா தற்கொலை பண்ணிக்கல. அவங்கள பிளான் பண்ணி கொலை பண்ணிருக்காங்க. உங்களையே கொலை பண்ண முயற்சி பண்றாங்கன்னா, அதுகூட உங்களால தெரிஞ்சுக்க முடியலையா.?” என்று அமுதன் சொன்னதும், அதிர்ச்சியாய்ப் பார்த்தான் வளையாபதி.

“அமுதா, என்ன சொல்ற.? அதெப்படி உனக்கு உறுதியாத் தெரியும்.?” என்றார் செங்குட்டுவன்.

“சார், நீங்களே நல்லா யோசிச்சுப் பாருங்க. இவரோட அத்தை, மாமா சொத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாங்கன்னு முதல்லயே தெரிஞ்சு தான், அவர் அவசரமா உயில மாத்தி எழுதி வைச்சுட்டார். அப்போவே, தங்களோட உயிருக்கு உத்திரவாதம் இல்லன்னு முடிவு பண்ணிட்டார். அவர் நினைச்ச மாதிரியே அவங்க ரெண்டு பேரையும், தற்கொலை பண்ணிக்கற மாதிரி அவங்களே ஏன் கொலை பண்ணிருக்கக் கூடாது.?” என்று சொல்ல, வளையாபதிக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டது.

“சார், நீங்க நிஜமாலுமே இதுதான் நடந்திருக்கும்னு சொல்றீங்களா.?” என்று கேட்டான்.

“அப்படித்தான் என் உள் மனசு சொல்லுது வளையாபதி. ஏன்னா, அவங்ககிட்ட அந்த சொத்து இருந்த வரைக்கும் அவங்களால எதுவும் பண்ண முடியல. ஆனா, அதையெல்லாம் உங்க பேர்லயும், உங்க தங்கச்சி பேர்லயும் மாத்தியதுமே அவங்களுக்கு அவங்க தேவையில்லாதவங்க ஆயிட்டாங்க. அதனால தான் அவங்க அப்படிப் பண்ணிருக்கனும். இல்லைன்னா உங்க அம்மாவும், அப்பாவும் தற்கொலை பண்ணிக்க என்ன அவசியம் வந்தது.? அவங்களுக்கு ஏதும் கடன் பிரச்சினை அது, இதுன்னு ஏதும் இருந்ததா.?” என்றான் அமுதன்.

“அமுதா, அவங்க கோடிக்கணக்குல சொத்து வைச்சிருக்காங்க. அவங்களுக்கு என்ன கடன் பிரச்சினை இருக்கப் போகுது.?” என்றார் செங்குட்டுவன்.

“அப்போ, சிம்பிள். நான் சொன்னதுதான். அவங்க நிச்சயம் கொலை தான் பண்ணிருக்காங்க. அதுமட்டுமில்ல, எனக்கு அவங்க பையன் தற்கொலைல கூட சந்தேகம் இருக்கு. அதுவும் ஒரு வேளை கொலையா இருக்கலாம்னு.” என்று அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கும் படி தன் சந்தேகத்தால் இருவரையும் உள்ளாக்கினான் அமுதன்.

“ஆமா, அமுதா. நீ இப்போ சொன்னதுக்கப்பறம் தான், எனக்கும் சந்தேகம் வருது.” என்றார் செங்குட்டுவன்.

“சார், இந்த சந்தேகத்தை நாம இப்படியே விட்டுடாம எல்லாத்தையும் முதல்ல இருந்து கிளறனும். அப்போதான், எல்லா விஷயங்களும் தெரிய வரும்.” என்றான் அமுதன்.

“சார், நீங்க எப்படியாவது இந்த விஷயத்தைக் கண்டுபுடிச்சிட்டீங்கன்னா, நான் உங்களுக்கு நன்றியுள்ளவனா இருப்பேன். உங்களுக்கு எல்லாமே செய்யறேன்.” என்றான் வளையாபதி.

“ஓ.. நல்லது வளையாபதி. நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா.? இது மாதிரி நிறைய கேஸ் நான் ஃப்ரீயா இவருக்கு பண்ணிக் குடுத்துட்டேன். ஆனா, இவரு இப்போ வரைக்கும் எனக்கு சம்பளம் தரமாட்டிங்கறார். நீங்க தான் அதுக்கு ஏற்பாடு பண்ணனும்.” என்று செங்குட்டுவனைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தபடியே சொல்ல,

“ஏன் மாமா, இவருக்கு சம்பளமே குடுக்கறது இல்லையா.? பாவம் அவரு.? நமக்கு நல்லது பண்றவங்களுக்கு நம்மளால முடிஞ்ச உதவிய செய்ய வேண்டாமா.?” என்று வளையாபதி அவரிடம் சீரியஸாகப் பேச,

இருவரும் சிரித்து விட்டனர். “டேய் வளையாபதி. அவனே கிண்டலுக்குச் சொல்லிட்டிருக்கான். அதையும் நீ நம்பிக்கிட்டு என்கிட்ட பேசிட்டிருக்க. நீ ஏண்டா இவ்வளவு வெகுளியா இருக்க.?” என்று கேட்டதும் தான், அது அவன் வேண்டுமென்றே சொன்னது தெரிந்தது அவனுக்கு.

“ஓ.. அப்படியா.? எனக்கு நிஜமாலுமே தெரியல மாமா. அவர் கஷ்டப்படாறார்ன்னு தோணுச்சு. அதனால தான் சொன்னேன்.” என்றான் வளையாபதி திரும்பவும்.

அவனின் வெகுளித்தனத்தால்தான் அவனின் அத்தையும், மாமாவும் அவனை நன்றாக ஏமாற்றியிருக்கிறார்கள் என்று தோன்றியது அவர்களுக்கு. இப்போதாவது உண்மையைப் புரிந்துகொண்டானே என்று நினைத்து சந்தோஷப்பட்டனர். அதே போல், அமுதன் அவனுக்காக கண்டிப்பாக இந்த விஷயத்தை ஆராய்ந்து, உண்மையைக் கண்டுபிடித்து நியாயம் வழங்க வேண்டுமென்று மனதில் உறுதி பூண்டான்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1213

உங்களின் விமர்சனங்களை கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...


 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 27

நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி. அன்று வழக்கம்போல் மாலை பள்ளி முடிந்து அனைத்து மாணவிகளும், சில ஆசிரியர்களும் கிளம்பி விட்டனர். ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே பணி இருக்கும் பட்சத்தில் தங்கள் பணி முடிந்த பிறகு மட்டுமே கிளம்புவர்.

பொதுவாக தமிழினி வேலைகள் இருந்தால் அதை முடித்துவிட்டுத்தான் கிளம்புவாள். கூடவே, சிலரும் அவளுடன் பேருந்தில் வருவதால் அவர்களோடு சேர்ந்து கிளம்பிவிடுவாள். அன்றும் பணி இருந்ததால், வேலைகளை முடிக்கும் மும்முரத்தில் இருந்தவளுக்கு, அருகே விசும்பல் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தவளுக்கு, அருகில் இருக்கும் தேன்மொழி டீச்சர் அங்கே அழுதுகொண்டிருப்பது தெரிந்தது. பார்த்தவள் பதறிவிட்டாள்.

“தேன்மொழி என்னாச்சு உங்களுக்கு.? எதுக்கு அழறீங்க.?” என்று பதட்டத்துடன் விசாரித்தாள்.

“ஒண்ணும் இல்ல தமிழ். விடுங்க.” என்று ஒருமாதிரியாகப் பேசினாள்.

“தேன்மொழி. ஏன் என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டீங்களா.? நான் அப்படியா உங்ககிட்ட பழகறேன்.? நான் அவ்ளோ சீக்கிரம் யார்கிட்டயும் ரொம்ப க்ளோஸா பழகமாட்டேன். ஆனா, நான் உங்ககிட்ட நல்லாத்தானே பழகறேன். அப்பறமும் ஏன், நீங்க சொல்லத் தயங்கறீங்க.? எதுவானாலும் சொல்லுங்க தேன்மொழி.” என்று அவளது அருகில் வந்து அமர்ந்தபடி கேட்டாள் தமிழினி.

அவளும் வேறு வழியில்லாமல் சொல்ல ஆரம்பித்தாள். “எங்க மாமா, அத்தையால வீட்டுல தினமும் ஏதாவது பிரச்சினை ஆயிட்டே இருக்கு தமிழ். எனக்கும், எங்க அண்ணாவுக்கும் ரொம்பக் கஷ்டமா இருக்கு. அவங்கள எதிர்த்துப் பேசவும் முடியல, அவங்கள வீட்ட விட்டுப் போங்கன்னு சொல்லவும் முடியல. அப்பா, அம்மா இருந்தவரைக்கும் அவங்களப் பத்தி எங்க ரெண்டு பேருக்குமே எதுவும் தெரியல. ரொம்ப நல்லவங்க மாதிரிதான் இருந்தாங்க. ஆனா, அவங்க போனதுக்கப்பறம் தான், அவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரிஞ்சது. ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாங்க. நானும், என் அண்ணாவும் நிறைய விஷயங்களைப் பொறுத்துட்டோம். இன்னும் மேல போய் தேவையில்லாம எனக்கும், அவங்க பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைச்சு, என்னை விதவையா ஆக்கிட்டாங்க. நேத்து பாரு எங்கண்ணா, எங்க பேர்ல இருக்கற சொத்துப் பத்திரத்த வேற எங்கயாவது பத்திரமா வைக்கணும்னு நினைச்சு, அதை எங்க குடும்ப வக்கீல் கிட்ட கொடுத்து வைக்கணும்னு போனார். ஆனா, அவர சில அடியாளுங்களை வைச்சு மிரட்டி, துரத்தி அதை வாங்க முயற்சி செஞ்சிருக்காங்க.”

“அய்யய்யோ அப்பறம் என்னாச்சு.? அவருக்கு எதுவும் ஆகலையே.?” என்றாள் தமிழினி.

“நல்லவேளை அண்ணாவுக்கு எதுவும் ஆகல. ஒரு நல்ல மனுஷன்தான் வந்து காப்பாத்திருக்காங்க. அவர் யாருன்னு பார்த்தா, எந்த வக்கீல அண்ணா பார்க்கணும்னு நினைச்சாரோ, அவரோட ஜூனியர் லாயர்ன்னு சொன்னாங்க.” என்று தேன்மொழி சொன்னதும், தமிழினிக்கு சட்டென்று மனதில் தோன்றியவன் அமுதன் தான்.

“அந்த ஜூனியர் லாயர் பேர் அமுதனா.?” என்று கேட்க, அவளோ விழித்தாள்.

“யார் அது.? எனக்குப் பேரெல்லாம் தெரியாது. ஆனா, அவர் மூலமா நிறைய விஷயங்கள் தெரிய வந்துச்சுன்னு அண்ணா தான் சொன்னார். அவர்தான் விசாரிச்சு எல்லாத்தையும் பண்றதா சொல்லியிருக்கார்ன்னு அண்ணா ஒரு நம்பிக்கையோடு சொன்னதைக் கேட்டேன்.” என்றாள் தேன்மொழி.

“நீங்க சொல்றதப் பார்த்தா, அது கண்டிப்பா அமுதனாதான் இருக்கும். என்னுடைய சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். அவன் தான் லாயரா இருக்கான். செங்குட்டுவன்னு சீனியர் லாயர்கிட்ட ஜூனியரா இருக்கான்.” என்று தமிழினி சொன்னதும், முகம் மலர்ந்தாள் தேன்மொழி.

“ஆங்க்.. செங்குட்டுவன் மாமா தான். அவர் அப்பாவோட ஃப்ரெண்ட். நீங்க சொன்னதும்தான் அவரா இருக்கும்னு எனக்கும் தோணுது. எப்படியோ, அண்ணாவைக் காப்பாத்தினதுக்கு அவருக்கு நன்றி சொல்லணும்னு நினைச்சேன். உங்க மூலமா சொல்லிக்கறேன். நீங்க சொல்லுங்க தமிழ், இந்த உலகத்துல எனக்குன்னு இருக்கற ஒரே ஜீவன் எங்கண்ணா மட்டும் தான். அவரும் இல்லன்னா நான் என்ன பண்றது.? காப்பாத்திக் கொடுத்த அவர்தான் எனக்கு தெய்வம் மாதிரி. அவருக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். நேர்ல பார்க்கும் போது கண்டிப்பா என் நன்றிய சொல்வேன். இப்போதைக்கு நீங்க என் சார்பா சொல்லிடுங்க தமிழ்.” என்றாள் தேன்மொழி.

“ம்ம். கண்டிப்பா சொல்றேன் தேன்மொழி. ஆனா, உங்க அண்ணா ஏன் எல்லாத்தையும் பொறுத்துட்டு இருக்கார்.? அவங்கள உண்டு, இல்லன்னு ஆக்க வேண்டியது தானே.?” என்றாள் தமிழினி.

“அப்படியில்ல, அவர் ரொம்பப் பாவம் தமிழ். அவர ஈஸியா ஏமாத்திடலாம். அவருக்கு உலகம் தெரியாது. அந்த அளவுக்கு வெகுளி. இப்போ தான் நான் கொஞ்சம் கொஞ்சமா சொல்லி சொல்லி மாத்தியிருக்கேன். இல்லன்னா, அத்தையும், மாமாவும் அண்ணாவை எப்பவோ ஏமாத்தி எல்லாமே பண்ணிருப்பாங்க. இப்போ தான் எல்லாத்தையும் அண்ணா புரிஞ்சுக்கிட்டார். எனக்கு வேலைக்கு வரணும்னு அவசியமே இல்லை. ஆனாலும், எனக்குன்னு ஒரு சுயம் வேணும்னுதான், இப்போ வரைக்கும் எல்லா எதிர்ப்பையும் மீறி அவர் படிக்கலைன்னாலும், என்னைப் படிக்க வைச்சார், வேலைக்கும் அனுப்பி வைச்சார். இப்பவும், எங்களுக்கு ஆபத்து வீட்டுலயே இருக்குன்னு தெரிஞ்சும் அவர் கொஞ்சம் பொறுமையா தான் எல்லாத்தையும் செஞ்சிட்டிருக்கார். ஆனா, அவங்கள அப்படி ஒரேடியா வீட்டை விட்டுப் போகச் சொல்ல முடியாது. ஏன்னா, அம்மா, அப்பாவோட ஆரம்பத்துல இருந்தே அவங்க இருந்திருக்காங்க. அவங்கள வெளிய அனுப்பினா, ஏதோ ரகசியத்தையெல்லாம் வெளிய விட்டுடுவேன். அப்பறம், உங்க அப்பா மானம் தான் போகும்னு சொல்லி மிரட்டியே அந்த வீட்டுல இருந்திட்டிருக்காங்க.” என்று தன் மனக்குமுறலைக் கொட்டினாள் தேன்மொழி.

“அந்த வீட்டுக்குப் போகணும்னு நினைச்சாலே பயமா இருக்கு தமிழ். இப்போ, எல்லாத்தையும் மீறி அண்ணா, அந்தப் பத்திரத்த செங்குட்டுவன் மாமாகிட்ட குடுத்தது தெரிஞ்சு, நேத்து ரொம்பப் பெரிய சண்டையே ஆயிடுச்சு. அண்ணாவ அடிச்சிட்டார் மாமா. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது. அம்மா, அப்பா இருந்திருந்தா இந்த மாதிரி நடக்க விட்டிருப்பாங்களான்னு தோணுச்சு. அழுது, அழுது எனக்கு தலைவலிச்சது தான் மிச்சம். இன்னும் அந்த நினைவிலிருந்து மீளவே முடியல. திரும்பவும் போனா அங்க என்ன நடக்குமோன்னு கவலையா இருக்கு.” என்று தன் பயத்தையும் சொன்னாள் தேன்மொழி.

“ஹூம்ம்.. என்னதான் சொத்து, பணம் எல்லாமே இருந்தாலும் தினம், தினம் செத்துப் பொழைக்கிற வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டிருக்கீங்க இல்ல.?” என்றாள் தமிழ்.

“ம்ம்.. நிதர்சனமான உண்மை தமிழ். ஆனா, நாங்க இதெல்லாம் வேணும்னு ஒண்ணும் வரம் கேட்டுட்டு வரலையே. கடவுளா கொடுத்தார். ஆனா, நிம்மதியைப் பறிச்சுக்கிட்டார். என்ன பண்றது.?” என்றாள் தேன்மொழி.

“சரி, நீங்க ரெண்டு பேரும் கவலையே பட வேண்டாம். என்னோட அமுதன் எல்லாத்தையுமே சரிபண்ணிடுவான். யாருக்கு எந்தப் பிரச்சினைன்னாலும் தீர்த்து வைச்சிடுவான். அதுக்காகத்தான் அவன் லாயராகணும்னு நினைச்சதே. அவன் இருக்கான். சரியா.? நீங்க தைரியமா கிளம்புங்க தேன்மொழி.” என்று சொன்ன பிறகு தான் அவளுக்கு கொஞ்சம் தைரியம் வந்து கிளம்பினாள்.

அன்று இரவு, அமுதனைப் பார்க்க அவனது வீட்டுக்குச் சென்றாள் தமிழினி. இப்போது, அவர்களும் தமிழினி வீட்டுக்கு சற்று அருகில், வீடு வாங்கி அதில் குடிபெயர்ந்தனர். அருகில் வந்தாலும், அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வது மிகவும் அரிதானது.

அன்று அவனைச் சந்தித்து, அனைத்தையும் கேட்கவும் வேண்டும், சொல்லவும் வேண்டும் என்று நினைத்து வந்தாள். அப்போது அழகேசன் மட்டுமே இருந்தார் வீட்டில்.

“ஆஹா.. தமிழ் அதிசயமா இருக்கு. இன்னைக்கு வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கணும்னு தோணிடுச்சா.? எப்படி இருக்க.?” என்று கேலியாய்க் கேட்க,

“இல்லங்க அய்யா. இன்னைக்கு அமுதனப் பார்க்கணும்னு தோணுச்சு. அவன்கூட கொஞ்சம் பேசணும். அவன் இன்னும் வரலையா.?” என்றாள்.

“ஹூம்ம். நானும், அவனைத்தான் எதிர்பார்த்துட்டிருக்கேன். இன்னும் வரல. வக்கீலா ஆனதுக்கப்பறம் அவன் ரொம்ப பிஸியாயிட்டான். அவனோட வேலை அப்படி. சரின்னு நானும், விட்டுடறேன். நீ என்ன விஷயமா அவன் கிட்ட பேச வந்த.? என்கிட்ட சொல்லணும்னு தோணுச்சுன்னா, சொல்லு.” என்றார் அழகேசன்.

“உங்க கிட்ட சொல்லாம இருப்பேனா அய்யா.” என்று சொன்னவள், தேன்மொழி சொன்னவற்றை அவரிடம் சொன்னாள்.

“ம்ம்.. இதைப்பத்தி நேத்தே என்கிட்ட அமுதன் சொன்னான். பாவம் அவங்க ரெண்டு பேரும். பார்க்கப் போனா, அவங்க ஒரு நெருப்பு வளையத்துக்குள்ள வாழ்ந்துட்டிருக்காங்கன்னு தான் சொல்லணும். இப்படியும் மனுஷங்க இருக்காங்களான்னு தான் தோணுது. எப்படியாவது அவங்களைக் காப்பாத்திடுன்னு அமுதன்கிட்ட சொன்னேன். அவனுக்கு இந்த விஷயத்துல எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்யணும்னு இருக்கேன்.” என்றார் அழகேசன்.

“கண்டிப்பா அய்யா. நாம தான அவனுக்கு உறுதுணையா நிக்கணும். அவன் ஜெயிச்சா கண்டிப்பா சந்தோஷம் தான்.” என்று தமிழினி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அமுதன் வெளியே வண்டி நிறுத்தும் சத்தம் கேட்டது.

உள்ளே வந்த அமுதன், தமிழினியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான். “ஏய்.. தமிழு. நீ எப்போ வந்த.? அப்பா, எவ்ளோ நாளாச்சு உன்னைப் பார்த்து.” என்றபடி ஷோஃபாவில் வந்து அமர்ந்தான்.

அழகேசன் அவனுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். அதைக் குடித்தவன், “ம்ம். அப்பா, என்ன விஷயம் தமிழு நம்ம வீட்டுக்கு விஜயம்.?” என்றான் கிண்டலாக.

“அதை நீ அவகிட்ட தான் கேக்கணும். சரி, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் அரிசி மாவரைக்க குடுத்துட்டு வந்திருக்கேன். போயிட்டு அதை வாங்கிட்டு வந்திடறேன்.” என்று சொன்னபடி கிளம்பினார்.

அவர்கள் இருவரும் தனியாகப் பேசுவர் என்று இங்கிதம் தெரிந்தவராகக் கிளம்பினார்.

“அப்பா பாத்தியா, நாம ரெண்டு பேரும் பேசுவோம்னு காரணம் சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.” என்று சொல்ல, அவளும் “ம்ம்..” என்று தலையாட்டினாள்.

“சரி டீ போட்டுத் தரட்டுமா.?” என்றாள்.

“ஆமா தமிழு.. ரொம்ப டயர்டா இருக்கு. இன்னைக்கு கொஞ்சம் சுத்தல் அதிகம். ஏலக்காய் போட்டு கொஞ்சம் ஸ்ட்ராங்கா. ஒகே.?” என்று கேட்க,

“ஹூம்ம். பாவமாச்சேன்னு டீ போட்டுத் தரவான்னு கேட்டா, ஏலக்காய் போட்டுத்தான் சார் குடிப்பீங்களோ.?” என்று அவனைச் செல்லமாய்த் திட்டிக்கொண்டே டீ போட்டு எடுத்து வந்தாள். ஒரு டம்ளரை அவனுக்கு நீட்டியவள், இன்னொரு டம்ளரில் அவளுக்கு வைத்திருந்தாள். இருவரும் குடித்துக்கொண்டே பேச ஆரம்பித்தனர்.

“நண்பா, ரொம்ப முக்கியமான விஷயம் எங்கிட்ட சொல்ல மறந்துட்டியா.?” என்றாள்.

“உன்கிட்ட சொல்லாம இருக்க முடியுமா.? உன்னைப் பார்க்கவே சான்ஸ் கிடைக்கல. அப்பறம் எப்படி சொல்றது.?” என்றான்.

“ஆனா, உனக்குத் தெரியுமா.? நீ சொல்லமலேயே எனக்குத் தெரியும்.” என்றாள்.

“என்ன தெரியும்.?” என்றான்.

“நேத்து ஒரு கேஸ் உன்னோட கைக்கு வந்திருக்கே, அதுதான்.” என்றாள்.

“ஓ.. அதுவா, சிம்பிள் அப்பா சொல்லி உனக்கு தெரிஞ்சிருக்கும்.” என்றான்.

“அதுதான் இல்ல. இந்த கேஸ்ல சம்பந்தப்பட்டவங்க மூலமா தான் தெரிஞ்சது.” என்று அவள் சொன்னதும், புருவங்களைச் சுருக்கி அவளைப் பார்த்தான்.

“தேன்மொழி.” என்று சொன்னதும் தான் அவனுக்கு உடனே நினைவுக்கு வந்தது.

“அவங்கள உனக்கு எப்படித் தெரியும்.?” என்றான்.

“நானும், தேன்மொழியும் ஒரே ஸ்கூல்ல தான் வொர்க் பண்றோம். இன்னைக்கு ஈவினிங்தான் அவங்க எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொன்னாங்க. கேட்கவே ரொம்பக் கஷ்டமா இருந்தது. அவங்க ரெண்டு பேரும் ரொம்பப் பாவம் டா நண்பா. அவங்க எல்லாத்தையும் சொல்லிட்டிருக்கும் போதுதான், அந்த லாயர் நீயா இருக்குமோன்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. செங்குட்டுவன் சாரோட ஜூனியர்ன்னு சொனத்துக்கப்பறம் கன்ஃபார்மா அது நீதான்னு தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களுக்கு உன்னோட பேர் தான் தெரியல. ஆனா, ரொம்ப ரொம்ப நன்றின்னு உன்கிட்ட சொல்ல சொன்னாங்க. ரொம்ப எமோஷனலாயிட்டாங்க.” என்று அவள் சொல்ல,

“பாவம் அவங்க விடோன்னு தெரிஞ்சதும், ரொம்ப ஃபீல் பண்ணேன். எதுவும் அறியாம அவங்க என்னத் தப்புப் பண்ணாங்கன்னு தோணுச்சு. அதே மாதிரி அந்த வளையாபதியும் பாவம் தான். ரொம்ப இன்னோசெண்ட். எதையும் சீக்கிரம் நம்பிடறார். அதனால தான், அவங்க அத்தையும், மாமாவும் இவர நல்லா யூஸ் பண்ணிக்க நினைச்சிருக்காங்க. ஆனா, கடவுள் தான் ஏதோ நல்ல வழியக் காமிச்சிட்டாரு போல, எங்ககிட்ட வந்துட்டார். அதுவும், அவர நாலஞ்சு ரவுடிங்க துரத்தினாங்க. அதுல இருந்துதான் நான் காப்பாத்தினேன்.” என்றான்.

“ம்ம்.. எல்லாமே தெரியும். ஆனாலும், இவ்ளோ மோசமானவங்களை நான் கேள்விப்பட்டது இல்ல டா. இவங்கள எப்படியாவது காப்பாத்திடுடா நண்பா.” என்றாள் தமிழினி.

“ம்ம். ஆமா தமிழு அவங்க அப்பா, அம்மா தற்கொலைல கூட எனக்கு சந்தேகம் இருக்கு. அது கொலையா இருக்குமோன்னு. எல்லாத்தையும் தீர விசாரிக்கணும்னுதான் நாள் ஃபுல்லா வண்டிலயே சுத்திட்டிருந்தேன். அதான் ரொம்ப டயர்டா இருக்கு.” என்றான்.

“சுத்தினது எல்லாம் சரி. பிரயோஜனமா ஏதாவது கலெக்ட் பண்ண முடிஞ்சதா.?” என்றாள்.

“ம்ம்.. பின்ன, அது இல்லாம விடுவேனா.? இன்னும் கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணல. நாளைக்குத்தான் பண்ணனும். ஆனாலும், முன்னாடியே இதுல கொஞ்சம் இறங்கி செயல்படணும்னு என்னோட உள்மனசு சொல்லுச்சு. அதனால தான், கோதாவுல இறங்கிட்டேன். சில விஷயங்களை தெரிஞ்சுக்கவும் செஞ்சேன். அதுல நிறைய விஷயங்கள் ரொம்ப ஷாக்கிங்கா இருந்துச்சு.” என்றான்.

“ஏன், என்ன விஷயம் அது.?” என்றாள்.

“இப்போதைக்கு என் மனசோட வைச்சிருக்கேன். ஏன்னா, இன்னைக்கு விசாரிச்சதுலயே நிறைய பேருக்கு என் மேல சந்தேகம் வந்தது. அதனால, இனிமேல் நான் ரொம்ப கவனமா இருக்கணும். பேசற பேச்சுலயும் சரி, செய்யற செயல்கள்லயும் சரி. அதனால, இப்போதைக்கு சஸ்பென்ஸ்...” என்று சொன்னதும், தமிழினி அவனைப் பார்த்து முறைத்து விட்டுக் கிளம்பினாள்.

அவன் மனதில் நினைத்திருப்பது என்ன.? இந்த வழக்கில் என்ன நடக்கும்.? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1294

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லின்கில் தரவும் தொழமைகளே...
 
Last edited:

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 28

நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஷயம் வளையாபதியின் மாமா ராமைய்யாவுக்குத் தெரிந்தது. வெறி பிடித்த மிருகம் போல், அவனிடம் சண்டை போட்டார்.

“உனக்கு எங்க மேல கேஸ் போடற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா.? வர வர என்னென்னமோ பண்ற.? யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ற.? உனக்கு இவ்ளோ தைரியம் குடுக்குறவங்க யாரு.? லூசுப் பயலுக்கு இந்த அளவுக்கு இப்படியெல்லாம் செய்ய துணிச்சல் வந்தது.?” என்று திரும்பத் திரும்ப அவனை மட்டம் தட்டியவாறே பேசிக்கொண்டிருந்தார்.

“டேய்.. என்ன அமைதியா நிக்கற.?” என்று அவனின் சட்டையைப் பிடித்துக் கேட்டார். அப்படிக் கேட்டவரின் கையை தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துவிட்டு, “எதுவா இருந்தாலும் கோர்ட்ல பாத்துக்கலாம்.” என்று ஒரே வார்த்தையில் சொன்னான் வளையாபதி.

“டேய்.. நீ எங்கள சந்தேகப்படறியா.? அண்ணா, அண்ணிய நாங்க கொன்னுருப்போம்னு, எங்க மேல அபாண்டமா பழியப் போட்டிருக்க.? உனக்கு மனசாட்சியே இல்லையா. இப்படி ஒரே வீட்டுல இருந்துட்டு கேஸ் போடறியே உனக்கு வெட்கமா இல்ல.? அந்த அளவுக்கு நாங்க மோசமானவங்களா.?” என்று அவனின் அத்தை மங்கலம் கூறினாள்.

“இத்தனை வருஷமா உங்களை அன்பா பார்த்துட்டவங்களுக்கு நீங்க துரோகம் பண்ணும் போது வெட்கப்பட்டீங்களா, இல்லையே. அது மாதிரி தான் இதுவும். ஒரே வீட்டுல இருந்துட்டு கொலையே பண்ண நினைக்கும் போது, கேஸ் போடறதெல்லாம் ரொம்ப சாதாரணமான விஷயம். இன்னும் நிறைய விஷயங்கள் தெரியும். இப்போ, நீங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்கன்னு கூட தெரியும். அதனால, வீணா என் கூடப்பேசி கலைப்பாகாம, கேஸ எப்படி எதிர்கொள்ளனும்னு யோசிங்க. இன்னைக்கு மதியம் நீங்க கோர்ட்டுக்கு வந்தாகணும்.” என்று சொன்னபடியே அவன் கிளம்பினான்.

அவன் போவதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், “ஹூம்ம். உனக்கு ஒரு ஆளு கிடைச்சான்னா, எனக்கும் ஒருத்தன் கிடைக்காமயா போயிடுவான். இருக்கட்டும் பார்த்துக்கறேன்.” என்று சொன்னவர் உடனே டெலிபோன் ரிசீவரை எடுத்துக் காதில் வைத்து ஒரு நம்பருக்கு டயல் செய்தார்.

பொள்ளாச்சி சப் கோர்ட் வாசலில் செங்குட்டுவன் அமுதனுக்காகவும், வளையாபதிக்காகவும் காத்திருந்தார். அவர்கள் இருவரும் வந்துவிட்டனர்.

வந்தவுடனேயே, “எங்க வளையாபதி உங்க அத்தையும், மாமாவும் வந்துடுவாங்களா.?” என்று சந்தேகமாக அவனைப் பார்த்துக் கேட்க,

“வந்துடுவாங்கன்னு தான் நினைக்கிறேன் மாமா. காலைலயே சண்டைய ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, நான் எதுக்கும் அசரல. தைரியமா அவங்க முன்னாடி நின்னு சொல்லிட்டுத்தான் வந்தேன். அதுலயே கொஞ்சம் ஆடிப் போயிட்டாங்க.” என்று அவன் சொன்னான்.

“சபாஷ் வளையாபதி. அப்படித்தான் இருக்கணும். இனிமேல் உங்க மேல அவங்களுக்கு கொஞ்சம் பயம் வரும். பயத்துலயே தப்பு மேல தப்பு பண்ணுவாங்க. அதுல நமக்கு நிறைய விஷயங்கள் தெரிய வரும். அதனால இனிமேல் நீங்க அப்படியே இருங்க.” என்று அவனைப் பாராட்டியதோடு இல்லாமல், சற்று ஊக்கப்படுத்தினான் அமுதன்.

சிறிது நேரத்திலெல்லாம் அவர்களும் வந்தனர். நீதிமன்றத்தில் நீதிபதியும் வந்துவிட்டார். வழக்கு சம்பந்தமான கோப்புகளை சில நிமிடங்கள் ஆராய்ந்தார்.

“எந்த சந்தேகத்தின் அடிப்படைல இங்க குறிப்பிடப்பட்டு இருக்கறவங்க தற்கொலை பண்ணிக்கல, கொலை செய்யப்பட்டிருக்காங்கன்னு சொல்றீங்க.?” என்று நீதிபதி கேட்க,

செங்குட்டுவன் எழுந்து சொன்னார். “ஆமா, யுவரானர். இந்த வழக்கில் நிறைய சந்தேகங்கள் இருக்கு. தற்கொலை செஞ்சுக்கிட்டதா சொல்லப்பட்டவங்களோட மகன் அதை உறுதிப்படுத்தறார். அதுக்கு சம்பந்தமான சில தகவல்களும் கிடைச்சிருக்கு. ஆனால், அதுவும் சந்தேகத்தின் அடிப்படையில் தான் உள்ளது.” என்று சொல்ல,

“எதிர்த்தரப்பு வாதத்தைச் சொல்லலாம்.” என்று நீதிபதி வளையாபதியின் மாமாவிடம் சொல்ல,

“அய்யா.. எங்களுக்கும், இதுக்கும் சம்பந்தமே இல்லைங்க. எங்க மேல சுமத்தியிருக்கற பழி ரொம்ப அப்பட்டமானது. நாங்க இத்தனை வருஷமா அவங்களுக்கு ஒரு விசுவாசிகளாத்தான் இருந்திருக்கோமே தவிர, எங்களுக்கு எதுவும் தெரியாது. அவங்க தற்கொலை பண்ணிக்கிட்ட காரணம் கூட இப்போவரைக்கும் தெரியாது.” என்று முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டு பேசினாலும், அவரின் தோரணையே அவர் ஏதோ தப்பு செய்திருப்பார் என்று நீதிபதிக்கே உணர்த்தியது.

“ஆனா, அவங்க வழக்கு தொடர்ந்துட்டதால நீங்க உங்க மேல இருக்கற குற்றத்தை இல்லன்னு நிரூபிச்சாகணும். உங்க தரப்புல வாதாட யாராவது இருக்காங்களா.?” என்று நீதிபதி கேட்க,

“இல்லைங்கய்யா. ஆனா, கண்டிப்பா ஒருத்தர பார்த்து எங்க சார்பா வாதாட வைக்கறோம். அதுக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்.” என்றார் ராமைய்யா.

“ரொம்ப அவகாசம் கொடுக்க முடியாது. வேணும்னா இன்னைக்கு ஒரு நாள் தரேன். நாளைக்குக் காலைல உங்க வக்கீலோட ஆஜராகணும்.” என்று கோர்ட்டை அடுத்த நாளுக்கு ஒத்திவைத்தார்.

ராமைய்யா, வளையாபதி செங்குட்டுவனோடு இருப்பதைப் பார்த்து முறைத்தார். அவர்களோ அவரைச் சட்டை செய்யவில்லை. இப்போதைக்கு அமுதன் அவர்களோடு இருப்பதை வெளிப்படுத்தாமலேயே இருந்தான். அதற்க்கும் ஒரு காரணம் இருந்தது.

அன்று ஒரு நாள் இருப்பதால் அமுதன் அவர்களிடம் சொன்னான்.

“சரி, வளையாபதி. நீங்க பார்த்து பத்திரமா இருங்க. இன்னும் நேரம் இருக்கு எனக்கு ஒரு விஷயமா திண்டுக்கல் வரைக்கும் போக வேண்டியதிருக்கு. நான் உடனே கிளம்பறேன். அப்போ தான் நைட் ரிட்டர்ன் வர முடியும்.” என்றான்.

“என்ன அமுதா, தேடுதலின் அடுத்த கட்டமா.?” என்று செங்குட்டுவன் கேட்க, “ஆமா, சார். வந்து விளக்கமா சொல்றேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

“எதுக்கு இவர் இப்போ, திண்டுக்கல் வரைக்கும் போகணும் மாமா.?” என்று வளையாபதி புரியாமல் கேட்க,

“அமுதன் உன்னோட கேஸ பிரிச்சு மேய்ஞ்சுட்டிருக்கான் வளையாபதி. அந்த விஷயமாத்தான் போறான்னு நினைக்கிறேன்.” என்று அவரும் சந்தேகமாகவே சொன்னார்.

திண்டுக்கல் மாவட்டம், பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி சிறிது தூரம் ஆட்டோவில் பேகம்பூர் என்ற இடத்திற்க்குச் சென்றான் அமுதன். அவன் செல்லும் போதே மாலை ஐந்து மணி இருக்கும். சுற்றும், முற்றும் அதைச் சுற்றியுள்ள நிறைய இடங்களுக்குச் சென்று அவனுக்குத் தேவையான விவரங்களைச் சேகரித்தான்.

அதிலேயே இரண்டு மணி நேரங்கள் கழிய, அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலுக்குச் செல்லலாம் என்று தோன்ற, வெளியே முகம், கை கால் கழுவிவிட்டு வந்தவன் உள்ளே நுழைந்து அம்மனை தரிசித்து அவளது ஆசி பெற்றான்.

அம்மனை சந்தித்த உத்வேகமும், சேகரித்த சில தகவல்களும் மனதை ஓரளவு சந்தோஷப்படுத்த, வெளியே வந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

அங்கே, கோலாகலம் அப்போதுதான் வந்து காரில் இருந்து இறங்குவதைப் பார்த்தான். அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. சரியாக ஒரு வருடம் இருக்கும் அவளைப் பார்த்து. கடைசியாக, அவளது நிச்சயதார்த்தத்தில் பார்த்தது.

வாழ்க்கை பல விஷயங்களைப் புரட்டிப் போட்டு விடுகிறது. அப்படித்தான் இங்கும். நடேசன் சொன்ன ஒரே காரணத்துக்காக குமரேசனும், கோலாவும் நிறைய மாறியே விட்டிருந்தனர்.

சிறிது உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு, நடேசன் மொத்தமாய் வீட்டிலேயே முடங்கிவிட, ஒட்டுமொத்த பொறுப்பையும் குமரேசனும், கோலாவும் ஏற்றுக்கொண்டனர்.

அப்பாவின், நாடகத் தெருக்கூத்தில் இவர்கள் இருவரும் அவருக்கு பதிலாக பங்கேற்று மக்களை மகிழ்வித்தனர். அப்பனுக்கு சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என்று நிரூபித்து விட்டனர். அதில் அவர்கள் குடும்பத்திற்க்கான பொருளாதாரப் பிரச்சினையை ஓரளவுக்குத் தீர்க்க முடிந்தது.

அவர்களின் நிலைமையை உணர்ந்த அழகேசனும், அவரின் தந்தையும் அவ்வப்போது பணம் கொடுத்து உதவி செய்தனர். இதற்க்கிடையில் ஊர் ஊராக நாடகக் கூத்துக்களில் பங்கேற்று நடிக்கும் போது, கோலாவைப் பார்த்த ஒரு பண்ணையாரின் மகன் அடம்பிடித்து, “கட்டினால் அவளைத்தான் கட்டுவேன்.” என்று ஒற்றைக் காலில் நின்று, கோலாவின் வீட்டிலும் பேசி அனைவர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் போன வருடம் தான் இனிதே நடந்து முடிந்தது.

கோலாவுக்கு அதில் துளியும் விருப்பமில்லை என்றாலும், நல்ல வசதியான இடத்து மாப்பிள்ளை வரும் போது அதை ஏன் விடவேண்டும்.? என்று வீட்டில் உள்ளவர்களின் பேச்சால், மனதை அடக்கிக் கொண்டு சம்மதித்து திருமணம் செய்து கொண்டாள்.

நிச்சயதார்த்தத்தில் அமுதன் சென்ற போதே, கோலாவின் ஏக்கப் பார்வையில் இருந்து அமுதன் தப்பிக்க முயன்றதே பெரும்பாடாய் ஆனது. இதில் திருமணத்திற்க்கு வேறு சென்று, தன்னால் ஏதும் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று, அவன் கேஸ் விஷயமாய் வர முடியவில்லை என்று காரணம் சொல்லி தப்பித்து விட்டான்.

அதன் பிறகு, இன்று தான் கோலாவைப் பார்க்கிறான். அதுவும் அவளை ஒருத்தியாய்ப் பார்க்கவில்லை. அவளுக்குள் இன்னொரு உயிரும் இருந்தது நன்றாகவே தெரிந்தது அமுதனுக்கு. மேடிட்ட வயிறால் சேலையை சற்று தூக்கிக் கட்டியிருந்தாள்.

இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்போம் என்று அவன் நினைக்கவே இல்லை. அவள் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தபடி வேண்டிக்கொண்டு கீழே பார்த்த போது, அவளும் அமுதனைப் பார்த்து விட்டாள். அவளும் ஆச்சர்யமாகத்தான் பார்த்தாள்.

அவள் பார்க்கவில்லை என்றால் கூட அப்படியே கிளம்பியிருப்பான். அவள் பார்த்தும் விட்டாள். இப்போது பேசாமல் சென்றால் நன்றாக இருக்காது என்று கையில் வைத்திருந்த திருநீறை அவசரமாய்த் தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த காகிதத்தில் மடித்து வைத்து விட்டு, புன்னகைத்தவாறு அவளை நோக்கி வந்தான்.

அவளும் அதை எதிர்பார்த்தவாறு அவர்களின் குடும்பத்தினருடன் வந்தாள். அருகில் வந்ததும் தான், “எப்படி இருக்க கோலா.?” என்று கேட்க, அவளுடன் அவளது கணவன் மட்டும் நின்றான்.

“நல்லா இருக்கேன் மாமா. நீ எப்படி இருக்க.? பெரிய மாமா நல்லா இருக்காரா.?” என்று நலம் விசாரித்தாள்.

“எல்லாரும் நல்லா இருக்கோம்.” என்று அவர்களைப் பார்த்து சிரித்தபடி நின்றான்.

“இது, என்னோட மாமா பையன் அமுதன். வக்கீலா இருக்கார். நம்ம கல்யாணத்தப்போ இவரால வர முடியல. அதனால உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது.” என்று அவளது கணவனுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தாள்.

அவனும், “ஓ.. அப்படியா.? வணக்கம்.” என்று கைகளைக் குலுக்கினான்.

அவர்களது குடும்பத்திலிருந்தவர்கள் உள்ளே சென்று அவர்களை அழைக்க, “இதோ வரோம் மா.” என்று சொன்னவன் கோலாவைப் பார்த்து கண்களால் போகலாம் என்று சொல்ல, அவளோ “ஒரே நிமிஷம் பேசிட்டு வந்திடறேன். நீங்க போங்க.” என்றாள்.

அவனும், சரி என்று சென்றான். அதன் பிறகு தான் அவளுக்கு அவனிடம் பேசுவதற்க்கான சுதந்திரம் கிடைத்ததாய் உணர்ந்தாள்.

“வாழ்த்துக்கள் கோலா.” என்றான் அமுதன்.

“எதுக்கு மாமா.?” என்று தன்னிலை மறந்து கேட்டாள் அவள்.

“நீ அம்மாவாயிட்ட இல்ல. அதுக்குத்தான்.” என்றான்.

“ஓ.. ஆமா. திடீர்னு சொன்னதும் எனக்கு சட்டுன்னு தோணல.” என்றாள்.

“நீ எல்லாத்தையும் மறந்துட்டு இப்போ சந்தோஷமா தான இருக்க.?” என்று ஒரு தயக்கத்தோடு கேட்டான் அமுதன்.

“பார்த்தா தெரியல.? சந்தோஷமாத்தான் இருக்கேன் மாமா. ஆனா, எல்லாத்தையும் மறக்கல.” என்றாள்.

“ஏன், அப்படி சொல்ற.? பழச மறந்துட்டு சந்தொஷமா இருக்கேன்னு சொல்லு.” என்று அமுதன் சொன்னதுக்கு, அவள் விரக்தியாய் சிரித்தாள்.

“சரி, மாப்பிள்ளை உன்னை நல்லா பாத்துக்கறார் தானே.? அவங்க குடும்பத்துல உள்ளவங்க எல்லாம் எப்படி.?” என்றான் சந்தேகத்துடன்.

“அவருக்கென்ன மாமா. அதெல்லாம் என்னை ராணியாட்டம் வைச்சுத் தாங்கறார். இப்போ, மாசமா வேற இருக்கேனா சொல்லவே வேண்டாம். நான் எதுவுமே இல்லைன்னு சொல்லக்கூடாதுன்னு எல்லாத்தையும், பார்த்துப் பார்த்து செய்யறார். அவங்க வீட்டுல உள்ளவங்களுக்கு என்னை ஆரம்பத்துல புடிக்கல. ஆனா, நான் குழந்தை உண்டானதும் இப்போ நல்லாத்தான் பாத்துக்கறாங்க.” என்றாள்.

“ம்ம். இந்த மாதிரி புருஷனும், குடும்பமும் அமைய நீ கொடுத்து வைச்சிருக்கனும். அதை நினைச்சு சந்தோஷப்படறத விட்டுட்டு தேவையில்லாத நினைப்பையெல்லாம் தூக்கி தூரப் போடு. அதுதான் உனக்கும், உன்னோட வயித்துல வளர்ற குழந்தைக்கும் நல்லது. எல்லாம் ஒரு நாள் சரின்னு உனக்கே புரியும்.” என்றான் அமுதன்.

“சரி, மாமா. ரொம்ப நேரம் ஆச்சு. அவங்க எனக்காகக் காத்திட்டிருப்பாங்க. நான் கிளம்பறேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

தான் சொல்வதைக் கேட்க விரும்பாதவாறு அவள் செலவதைப் பார்த்து என்ன நினைப்பதென்று தெரியவில்லை அமுதனுக்கு.

“கடவுளே, நீதான் அவளின் மனதை மாற்றி அனைத்தும் நல்லதுக்காகவே நடப்பதை உணர்த்த வேண்டும். அதே போல், அவள் நல்லபடியாக குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்.” என்று கோவில் கோபுரக் கலசத்தை ஒருமுறை பார்த்து வேண்டிக்கொண்டுவிட்டுக் கிளம்பினான்.

கிட்டதட்ட மூன்று மணி நேரப் பயணம். பொள்ளாச்சி வந்ததும், நேராக செங்குட்டுவன் வீட்டிற்க்குச் சென்றான்.

“அமுதா, நீ இந்தக் கேஸூக்காக எவ்ளோ பாடுபடற.? உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனாலும், நீ கொஞ்சம் உன் உடம்பையும் பார்த்துக்கோ.” என்றார் சற்று அக்கறையுடன்.

“அதெல்லாம் இருக்கட்டும் சார். நாளைக்கு கோர்ட்ல என்னென்ன விஷயங்களை நம்ம சைட்ல இருந்து சொல்லணும்னு நான் எல்லா பாயிண்ட்ஸயும் நோட் பண்ணிருக்கேன். நாளைக்கு ஒரு ஃபைல்ல உங்களுக்கு எல்லாத்தையும் நீட்டா டைப் பண்ணிக் கொண்டு வரேன். இப்போதைக்கு இந்த ரஃப் பேப்பர்ல இருக்கறத வைச்சு மேனேஜ் பண்ணிக்கங்க.” என்றான் கருத்தாய்.

“உன்னோட கடமை உணர்ச்சிய நான் என்ன்ன்னு சொல்ல.? சரி விடு. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, நாளைக்கு வளையாபதியோட மாமா சைட்ல வாதாட வக்கீலப் பார்த்துட்டாங்க.” என்றார் செங்குட்டுவன்.

“ஓ.. பரவால்லயே. அதுக்குள்ள எப்படியோ தேடிப் புடிச்சிட்டாங்களா.? யாரு.?” என்று அசால்ட்டாகக் கேட்க,

“வீரபத்ரன்...” என்று சொன்னதுமே, கண்களை அகல விரித்துப் பார்த்தான் அமுதன்.

“எப்படி சார்.? அவர்கிட்ட கேஸ் போகுதுன்னா துட்டு நிறைய வேணுமே.? இவங்களே அவங்க தயவுல வாழ்ந்துட்டு இருக்காங்க. மொதல்ல அவர் எப்படி ஒத்துக்கிட்டார்.?” என்று கேட்டான்.

“அதெல்லாம் அரசியல் அமுதா. நமக்கெல்லாம் அது சுட்டுப் போட்டாலும் வராது. அவங்ககிட்ட பணம் இல்லாமையா வீரபத்ரன்கிட்டப் பேசி வாதாட வைக்கறாங்க. இருக்கும், ஏதாவது இருக்கும். ம்ம். அப்பறம் இன்னொரு விஷயம். நாளைக்கு அவருக்கு எதிரா வாதாடப் போறது யார் தெரியுமா.?” என்றார்.

“நீங்க தானே.?” என்றான்.

“ம்ஹூம்ம். இல்ல, நாளைக்கு வளையாபதிக்கு ஆதரவா வாதாடப் போறது நீ தான் அமுதா. நான் கோர்ட்ல சப்மிட் பண்ணிட்டேன்.” என்று சொல்ல, அவனுக்கு அதிர்ச்சியானது.

“சார்.. நானா.?” என்றான்.

“ஆமா, அமுதா. இது உனக்கு நான் அளிக்கிற பெரிய சம்பளம்னு நினைச்சுக்கோ. உன்னை நீ நிரூபிக்க உனக்குக் கிடைச்ச பெரிய வாய்ப்பு இது. நீ சேகரிச்ச எதுவுமே எனக்குத் தேவையில்ல. அது இனி உனக்குத்தான் தேவைப்படும். அப்பப்போ கூட இருந்து உனக்கு உதவியா இருக்கறது மட்டும் தான் என் வேலை. நாளைக்கு நீ தயாரா வந்துடு. அதனால தான் முதல்லயே சொன்னேன்.” என்றார் செங்குட்டுவன்.

அவர் தன் மேல் நம்பிக்கை வைத்து அத்தனை அழுத்தமாய்ச் சொல்லும் போது, அவனால் மறுக்க முடியவில்லை.

“ஓகே சார். நானே இந்தக் கேஸ எடுத்துக்கறேன்.” என்று உறுதியாய்ச் சொல்லிக்கொண்டு அவர் வீட்டில் நிறுத்தியிருந்த தனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். செல்லும் போதெல்லாம் அவனுக்கு இதே யோசனை தான். நாளைய நாள் தனக்கு என்னவெல்லாம் தரப் போகிறதோ.? என்ற யோசனையுடனேயே சென்றான் அமுதன்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1423

உங்களின் விமர்சனங்களை கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...
 
Last edited:

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 29

அன்று பொள்ளாச்சி நீதிமன்றம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. காரணம், வீரபத்திரன் போன்ற பெரிய வக்கீல் இன்று இந்த சின்ன நீதிமன்றத்தில் வாதாடப் போகிறார் என்ற காரணத்தினால்.

இந்த நீதிமன்றம் தான் அவர் வளருவதற்க்குக் காரணமாக இருந்தது. அவரின் சொந்த ஊரும் இதுவே. ஆரம்ப காலங்களில் இந்த நீதிமன்றத்தின் சின்னச் சின்ன வழக்குகளில் பங்கேற்றுத்தான் அவர் இவ்வளவு பெரிய கிரிமினல் லாயராக வளர்ந்திருக்கிறார்.

அதே போல், வீரபத்திரனும், செங்குட்டுவனும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். ஏனென்றால் இவர்கள் இருவரும்தான் அவர்கள் ஊரிலேயே, கோவை அரசு சட்டக் கல்லூரிக்குச் சென்று பயின்ற மாணவர்கள்.

படிப்பு முடிந்து இருவரும் ஒரே வழக்கறிஞரிடம் தான் ஜூனியராக பணியாற்றி வந்தனர். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல வீரபத்திரன் தான் ஒரு பேரும், புகழும் நிறைந்த வழக்கறிஞராக மாற வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாய் மனதில் பதித்து விட்டார்.

சீனியர் லாயரை விட்டு விலகி, சில கேஸ்களை அவரே எடுத்து நடத்தினார். அதன் பிறகு அவர் வாழ்க்கையையே மாற்றியமைத்தது, அந்த ஒரே ஒரு வழக்கு தான். அதுதான், அவருக்கு இத்தனை பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. ஒரு பெண் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பெரிய ஜமீந்தாரின் வாரிசுக்காக எல்லா சாட்சிகளையும் மறைத்து, அதைப் பொய்யாக்கி அவனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றினார். அதற்க்குப் பரிசாய் அந்த ஜமீந்தார் தன் ஐந்து ஏக்கர் நிலத்தையும், தனக்குச் சொந்தமான ஒரு வீட்டையும் அவருக்குப் பரிசாய்க் கொடுத்து விட்டார்.

அவரின் மனைவி மற்றும் மக்கள் அனைவரும் அதில் தான் வாழ்ந்து வருகின்றனர். இவர் அவ்வப்போது மட்டுமே அங்கு வந்து போகிறார். ஜமீந்தார் கொடுத்த ஐந்து ஏக்கர் நிலத்தில் தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு அமைத்து அதில் பண்ணையம் செய்து வருகிறார்கள் அவரின் வாரிசுகள்.

அதன் பிறகு, அதிகமாய் இவர் கோவை நீதிமன்றத்தில் தான், தொடர்ந்து சில பெரிய வழக்குகளை எடுத்து அதில் வெற்றியையும் கண்டு அதிலிருந்து பெரிய வழக்கறிஞருக்கான அந்தஸ்த்தைப் பெற்று விட்டார். அனைத்தும் கொலை, கொள்ளை சம்பந்தமான வழக்குகள்.

எவர் அதில் பணக்காரரோ அவருக்கே இவரின் ஆதரவு இருக்கும். அவருக்குச் சாதகமாகவே வழக்காடுவார். அப்படிச் சேர்ந்தது தான் இந்தப் பணமும், புகழும், பேரும்.

அதே போல், இவரின் புகழைக் கண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாட அழைப்பு கூட வந்தது. ஒரே ஒருமுறை மட்டுமே சென்று வாதாடியவர் தோற்றுப் போனார். அங்கு அவரைப் போல் திறமையாய் வாதாடும் பல பேர் இருப்பதைக் கண்டார்.

அதன் பிறகு அங்கே செல்வதைக் கைவிட்டார். ஏனென்றால், பேரரசுக்கு மந்திரியாக இருப்பதை விட, சிற்றரசுக்கு ராஜாவாக இருப்பதே மேல் என்று நினைத்துவிட்டார் போலும். அதன் பிறகு, கோவையிலேயே வழக்குகளுக்கு வாதாட ஆரம்பித்தார். அவ்வப்போது தான் இந்த நீதிமன்றத்துக்கு வருவதாய் இருந்தது.

இப்போது கூட, சில விதிமுறைகளுக்குப் பிறகே இந்த வழக்கில் கூட ராமைய்யாவுக்காக ஆஜராகிறார். அதற்க்குப் பேசப்பட்ட பணமும் அதிகம். ஆனால், அதை அவரால் எப்படிக் கொடுக்க முடியும் என்பது சந்தேகம் தான். இவை அனைத்தையும் கமுக்கமாக செய்துகொண்டிருக்கிறார்கள் ராமைய்யாவின் ஆட்கள்.

கோர்ட் வாசலில் அனைவரும் காத்திருந்தனர். முன்னரே நீதிபதியும் வந்துவிட்டார். அதன் பிறகே வீரபத்திரன் வந்தார். அவர் காரில் வந்து இறங்கும் போது ஏகபோக வரவேற்பு. மாலை, மரியாதை முதற்கொண்டு அனைத்தும் அரங்கேறியது.

அதையெல்லாம் எதையும் சட்டை செய்யாதவராக அவர் நீதிமன்றத்தில் அவரது ஜூனியர்கள் படைசூழ நுழைந்தார். பின்னாலேயே ராமைய்யாவும், அவரது மனைவியும் சென்றனர். அவர் உள்ளே செல்லும் முன்பு, அங்கே நின்றிருந்த செங்குட்டுவனைப் பார்த்தார். அவரோடுதான் அமுதனும், வளையாபதியும் நின்றிருந்தனர். அவர்களை ஏளனமாய்ப் பார்த்தபடி வந்தார்.

“என்ன செங்குட்டுவா.? இன்னும் அப்படியே தான் இருக்கியா.? கொஞ்சமாவது முன்னேறி இருப்பன்னு நினைச்சேன். ஹூம்ம்.. நீயும், நியாயம், தர்மம்னு சொல்லி அப்படியே தான் இருக்க.? அது உனக்கு என்ன கொடுத்துச்சு.? பேசாம நீயும் என் வழி வந்துடு. அதுதான் சம்பாதிக்க ஒரே வழி.” என்று நக்கலாக அவரிடம் பேச,

“சம்பாதிக்கணும்னா என்ன வேணும்னாலும் பண்ணலாம் இல்லையா சார்.?” என்றான் அருகிலிருந்த அமுதன்.

அவன் சொன்னதைக் கேட்டதும் அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தார்.

உடனே அருகிலிருந்த அவரது ஜூனியர் ஒருவர், “சார், இவர் தான் உங்க கூட இன்னைக்கு கேஸ்ல ஆப்போசிட்டா வாதாடப் போறவர்.” என்று சொல்ல,

“ஓஓ.. அதானே. செங்குட்டுவா, நீ இதுவரைக்கும் என்கிட்ட எப்பவும் தோத்துதான போயிருக்க. இப்பவும் தோத்துட்டா அவமானமா இருக்கும்னு நினைச்சு உன்னோட ஜூனியர ஆஜராகச் சொல்லி நீ தப்பிச்சுட்ட.” என்று சொல்லி நக்கலாய்ச் சிரித்தார்.

அதற்க்கு செங்குட்டுவனோ, “சரி நீ எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோ. ஆனா, இந்த முறை நீ நினைக்கறது எதுவும் நடக்காது.” என்றார் உறுதியுடன்.

“ஹூம்ம்.. இது என்ன சின்னக் குழந்தைகளுக்குள்ள நடக்கற போட்டின்னு நினைச்சுட்டியா.? இது ஒரு கேஸ். அத எப்படி ஹேண்டில் பண்ணனும்னு தெரியாத ஒரு பையன்கிட்ட ஏதோ பொம்மையைக் கொடுத்த மாதிரி இந்தக் கேஸ கொடுத்திருக்க.? இதுலயே நீ பாதி தோத்துட்ட. இன்னும் என்ன மிச்சம் இருக்கு.?”

“சரி அப்படியே இருக்கட்டும். ஆனா, இப்போ நடக்கறது உனக்கும், எனக்குமான போட்டி கிடையாது. நியாயத்துக்கும், அநியாயத்துக்குமான போட்டி. அதுல எது ஜெயிக்கும்னு அந்தக் கடவுளே முடிவு பண்ணட்டும்.” என்று சொல்ல,

வீரபத்திரனோ, ஒரு கேலிப் புன்னகை ஒன்றை உதிர்த்தவாறு, “நீ தோக்கறத அந்த ஆண்டவனால கூட தடுக்க முடியாது. அவமானப்பட ரெடியா இருங்க.” என்று சற்று மிரட்டலாகவே அவர்களிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

“மாமா, இவர் என்ன இப்படி மிரட்டறார். எங்க மாமா அவரை மாதிரியே ரொம்ப மோசமானவர்கிட்ட தான் கேஸைக் கொடுத்திருக்கார். இப்போ என்ன பண்ணப் போறோம்.?” என்றான் வளையாபதி சிறு பதட்டத்துடன்.

“மிஸ்டர்.வளையாபதி, நீங்க எதுக்கு டென்ஷன் ஆகறீங்க.? நாங்க கூட இருக்கோம். எல்லா பாரத்தையும் அந்தக் கடவுள் மேல போடுங்க. அவரே எல்லாத்தையும் பார்த்துப்பார். இப்போ, உள்ள போலாமா.?” என்று எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் அமுதன் சொல்ல, ஏதோ ஒரு நம்பிக்கையில் அவன் அவர்களுடன் உள்ளே சென்றான்.

உள்ளே சென்றதும், அனைவரும் அவரவர் இருக்கையில் அமர, செங்குட்டுவன் அமரும் இடத்தில் இன்று அமுதன் அமர்ந்தான். எப்பொழுதும் உதவியாக அவரின் இருக்கைக்குப் பக்கத்தில் மட்டுமே அமர்ந்திருப்பவன், இன்று அவரது இருக்கையில் அமரும் போது, அது மிகவும் அற்புதமான ஒன்றாக நினைத்தான்.

மனதுக்குள் ஒரு நிமிடம் தியானம் செய்தான். முதன் முதலில் தான் வாதாட இருக்கும் இந்த வழக்கில் நியாயத்துக்கு முன்பாக நின்று அதைப் போராடித் தர வேண்டும் என்ற நினைப்பை மனதில் வைத்துக்கொண்டு அங்கே இருந்த நீதிதேவதையை வணங்கி, சபதம் எடுத்தான்.

வீரபத்திரன் அவனை ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் நீதிபதி வந்துவிட்டார். அவர் அமர்ந்ததும் வழக்கு ஆரம்பித்தது.

“மிஸ்டர். ராமைய்யா உங்க சார்பா வாதாட வழக்கறிஞர கூட்டிட்டு வந்திருக்கீங்களா.?” என்றார். அவர் கூண்டில் நின்றபடி தலையாட்ட, வீரபத்திரன் எழுந்து நின்று,

“அஃப்கோர்ஸ் மை லார்ட். நான் தான் இவரோட கேஸ வாதாட வந்திருக்கேன். நல்லா இருக்கீங்களா.?” என்று நீதிபதியை நலம் விசாரித்தார்.

அப்போதுதான் கவனித்தார் அந்த வயதான நீதிபதி. “ஓ.. வீரபத்திரன். நீங்களா.? ஆச்சர்யமா இருக்கே.!! இந்த மாதிரி சின்ன கோர்ட்டுக்கு நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சேன். பரவாயில்லை வந்திருக்கீங்க. எனிவே வெல்கம்.” என்று சிறு புன்னகை மற்றும் தன் இயல்பான வார்த்தைகளில் அவரை மிரள வைத்தார்.

சொல்லப்போனால், அந்த வயதான நீதிபதி நிறைய வருட அனுபவம் உள்ளவர். அதே போல், ஆரம்ப காலங்களில் இருந்தே வீரபத்திரன் வாதாடிய பல வழக்குகளில் இவரும் ஒரு நீதிபதியாக இருந்துள்ளார். அவரின் பொய்ப் பித்தலாட்டங்கள் அனைத்தையும் நன்கு தெரிந்து வைத்திருப்பவர். ஆனால், சட்டம் என்ன செய்ய முடியும்.? ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அனைத்தும் செல்லும் என்னும் ஒரு நிபந்தனை இருக்கும் போது, நீதிபதி என்ற ஒரு காரணத்தினால் மட்டும் உடனே எந்த ஒரு முடிவையும் எடுத்து, அதை வைத்துத் தீர்ப்பு வழங்க முடியாத நிலை. அதனாலேயே பல வழக்குகளுக்கு நியாயமான முறையில் தீர்ப்பு வழங்க முடியாமல் போகிறது.

வீரபத்திரன் சொல்வது பொய்யே என்றாலும், அதை அவர் ஆதாரத்தின் மூலமாக நிரூபிக்கும் போது, அதை ஏற்க முடியாது என்று கூற முடியாது. அதனாலேயே பல நியாயமான வழக்குகளுக்குத் தப்பான தீர்ப்பை அளித்தாக வேண்டிய கட்டாயத்திற்க்கு நீதிபதிகள் தள்ளப்படுகின்றனர்.

அந்த ஒரு குற்ற உணர்ச்சி அவர்கள் வாழ்நாள் முழுதும் தொடரும். ஆனால், அவர்களுக்கு அது பழகிவிட்டது. அதனால் தான் நீதிபதியாய் இருந்தவர் அவரைப் பிடிக்காவிட்டாலும், பேச வேண்டுமே என்று கேட்டார்.

“சார்.. என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க. இதுதானே என்னோட இடம். இங்க தானே நான் வளர்ந்தேன், ஜெயிச்சேன். இதை எப்படி என்னால் மறக்க முடியும்.? அதனால தான் வாதாடனும்னு சொன்னதும் ஓடி வந்துட்டேன். அதுக்கு நான் ராமைய்யாவுக்குத்தான் நன்றி சொல்லணும்.” என்று சிரித்தார்.

அவரின் சிரிப்பை ரசிக்கப் பிடிக்காதவர், “ஆப்போஸிட் லாயர் நீங்க இன்னைக்கு ஆஜராகி இருக்கீங்க.?” என்று கேட்டதும்,

“யெஸ். மை லார்ட். இந்தக் கேஸ நான் எடுத்து வாதாடுவதற்க்கான பர்மிஷன நேத்தே நாங்க கோர்ட்ல சப்மிட் பண்ணிட்டோம். நான் தான் வளையாபதிக்காக வாதாடப்போறது.” என்று அமுதன் எழுந்து தைரியமாகவும், அதே சமயம் சற்று பணிவுடனும் சொல்ல, அது ஏனோ அந்த நீதிபதிக்கு பிடித்துப் போனது.

“யெஸ், ப்ரொசீட் மிஸ்டர்.அமுதன்.” என்று முதலில் அவனை வாதாடச் சொல்ல, எதிரே வீரபத்திரனுக்கு எரிச்சலானது. இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார்.

அமுதன், “தேங்க் யூ மைலார்ட். இந்த கேஸ்ல முக்கியக் குற்றவாளியா கருதப்படற ராமைய்யாவின் மனைவி மங்கலம்ம நான் விசாரிக்கணும்னு நினைக்கிறேன்.” என்றார்.

அவரும், “யெஸ்.” என்று சொல்ல, மங்கலம் வந்து கூண்டில் நின்றார்.

“சொல்லுங்க மங்கலம். நீங்க நிஜமாலுமே உங்க அண்ணா, அண்ணியக் கொலை பண்ணலையா.?” என்று கேட்க, அவளோ அதிர்ந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசினார்.

“ஏன் தம்பி, இப்படி அநியாயமா என் மேலயும், என் புருஷன் மேலயும் பழி போடறீங்க.? அவங்க தான் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. என்னோட சொந்த அண்ணாவ கொலை பண்ண எப்படி எனக்கு மனசு வரும்.? அதுமாதிரி என்னால யோசிக்கக் கூட முடியாது.” என்று நீலிக்கண்ணீர் வடித்தார் மங்கலம்.

“ஓகே, ஓகே.. உங்க அண்ணா, அண்ணிய கொலை பண்ணல சரி. ஆனா, உங்க பையன நீங்க தானே கொலை பண்ணீங்க.?” என்றதும், அவர் ஒரு நிமிடம் ஆடிவிட்டார்.

“அய்யோ. இது அநியாயம். இப்படியெல்லாம் சொல்லி பாவத்த சம்பாதிச்சுக்காதீங்க.” என்றார்.

“ஓ.. நீங்க கொலை பண்ணி பாவத்த தேடிக்கல. ஆனா நான் சொல்றதால தான் பாவம் வருதோ.?” என்று கொஞ்சம் எரிச்சலாகிக் கேட்டான் அமுதன்.

“அப்ஜெக்‌ஷன் மை லார்ட். இந்த கேஸூக்கு தேவைபட்டத மட்டும் தான் அவர் கேட்கணுமே தவிர, தேவையில்லாததெல்லாம் கேட்டு அவங்கள கஷ்டப்படுத்தக் கூடாது.” என்றார் வீரபத்திரன்.

“அமுதன் வழக்குக்கு சம்பந்தமானத மட்டும் விசாரிங்க.” என்று நீதிபதி சொல்ல.

“இருக்கு மை லார்ட். இதுல அவங்க பையனோட கொலையும் சம்பந்தப்பட்டிருக்கு. அதெப்படி ஒரு தற்கொலை ஒரே மாதிரி, ஒரே வீட்டுல, ஒரே அறைல, அதே மாதிரி நடக்கும். அதுவுமில்லாம பிரேதப் பரிசோதனைல நிறைய விஷயங்கள் தெரியவந்திருக்கு. ஆனா, அது எதுவுமே போலீஸோட கண்ணுக்கு எப்படி தெரியாமப் போச்சுன்னு எனக்கு இன்னும் தெரியல. இல்ல, கண்ணுக்கு தெரியாம மறைச்சுட்டாங்களான்னு தெரியல.” என்று சொல்ல,

“நீங்க என்ன சொல்ல வரீங்க மிஸ்டர்.அமுதன்.? போலீஸூம் இந்த தற்கொலைக்கு உடந்தைன்னு நினைக்கிறீங்களா.? ஐ மீன் நீங்க சொல்ற மாதிரி கொலைக்கு.” என்று வீரபத்திரன் கேட்டார்.

“அஃப்கோர்ஸ். அதுதான் உண்மை. அது தெரியாம இந்த வழக்குல நான் அதை சொல்ல முடியாது. சம்பந்தப்பட்டதால தான் நான் இதை சொல்றேன். மை லார்ட் உங்க பெர்மிஷனோட, இன்னும் சில முக்கியமானவங்கள நான் விசாரிக்கணும்னு நினைக்கிறேன். அப்போதுதான் உங்களுக்கு உண்மை புரியும்.” என்றான்.

“பெர்மிஷன் கிரான்டட்.” என்றார் நீதிபதி.

“தேங்க் யூ மை லார்ட். மங்கலம் அவங்களோட சொந்தங்கள்ல சிலர் திண்டுக்கல் பகுதியில் இருக்காங்க. ஐ மீன் மங்கலம்மோட சித்தி பேச்சியம்மாள். அதாவது அவங்க அம்மாவோட கூடப் பிறந்த தங்கச்சி. அப்பறம், அவங்க ஹஸ்பெண்ட் மாரிமுத்து. அப்பறம் அவங்க பசங்க ரெண்டு பேர், ஒருத்தர் ராஜா. திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ யா இருக்கறவர். ரெண்டாவது பையன் கந்துவட்டி கந்தன். கந்துவட்டி பிஸினெஸ் பண்றவர். இவங்கள தீர விசாரிக்கணும்னு நினைக்கிறேன்.” என்று சொல்ல,

நீதிபதியும், “ஓகே. அவர் சொல்றவங்க நாளைக்கு கோர்ட்ல ஆஜராகும்படி கேட்டுக்கொள்கிறேன். வீரபத்திரன் உங்களுக்கு எதுவும் அப்ஜெக்ஷன் இருக்கா.?” என்று அவர் கேட்க,

“நோ மை லார்ட். வரட்டும் அவங்கள விசாரிக்க நானும் தயாரா இருக்கேன்.” என்றார் வீராப்பாக.

“ஓகே. கோர்ட் நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.” என்று சொல்லி எழுந்து சென்றார்.

“என்ன சார், இன்னைக்கு உங்களால எதுவும் பேசவே முடியலன்னு ரொம்ப கடுப்பா இருக்கா.?” என்று அமுதன் வேண்டுமென்றே கேட்டான் வீரபத்திரனிடம்.

“ஹூம்ம். சின்னப் பையனெல்லாம் என்கிட்ட நக்கலா பேசற அளவுக்கு வந்துட்ட. ஏதோ, வளர்ற பையன்னு பேச விட்டேன். நாளைக்குப் பாரு வேடிக்கைய.” என்று சொன்னபடி சென்றார்.

அவர் போனதும் அருகே வந்த செங்குட்டுவன், “அமுதா, இந்த நக்கலெல்லாம் எதுக்கு உனக்கு.? அவன்கிட்ட அதெல்லாம் வைச்சுக்காத.” என்றார்.

“சும்மா விளையாட்டுக்குத்தான் சார். பாத்துக்கலாம் வாங்க.” என்றான்.

“ஹூம்ம்.. ஆனாலும், இன்னைக்குக் கொஞ்சம் உனக்குத்தான் பேசறதுக்கு அதிகமா வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுக்காக அவன நீ தப்பா எடை போட்டுடாத. ஏன்னா, அவன் பதுங்கறதே பாயறதுக்குத்தான். அதையும் மனசுல வைச்சுக்கோ.” என்றார்.

“சார். அதெல்லாம் பாத்துக்கலாம். சும்மா பில்ட் அப் கொடுத்துக்கிட்டு..” என்று அசால்ட்டாக கோட்டைக் கழட்டி மாட்டிக்கொண்டு போனான் அமுதன்.

ஆனால், இதற்க்குப் பிறகு எல்லாமே அவன் நினைப்பதைப் போல் நடக்குமா.? என்றுதான் தெரியவில்லை...

(தொடரும்...)

வார்த்தைகளின் எண்ணிக்கை : 1378

உங்களின் விமர்சனங்களை தவறாமல் கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...
 
Last edited:

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 30

வழக்கு நடந்த நாள் மாலை அமுதன், வளையாபதிக்கு போன் செய்தான். டெலிபோன் மணி அழைக்க, வீட்டில் இருந்த வளையாபதி போனை எடுத்தான். அதை ராமைய்யாவும், அவனது மனைவி மங்கலமும் ஒட்டுக்கேட்டபடி ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தனர்.

“சொல்லுங்க அமுதன் சார்.” என்று வளையாபதி சொல்ல,

“ஆங்க்.. வளையாபதி, நீங்க தப்பா நினைக்கலன்னா, நீங்களும், உங்க தங்கச்சியும் என்னோட வீட்டுக்கு சாயங்காலம் வர முடியுமா.? ஒரு சின்ன என்கொயரி தான்.” என்றான்.

“அதுக்கென்ன சார். தாராளமா வந்துட்டாப் போச்சு. என் தங்கச்சி பள்ளிக்கூடத்துல இருந்து வரும் போது அப்படியே உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடறேன்.” என்றான் வளையாபதி.

“சரி, அப்படியே பண்ணுங்க. நான் வீட்டுல தான் இருக்கேன். உங்களுக்கு வீடு தெரியுமா.?” என்றான் அமுதன்.

“இருக்கட்டும் சார். நான் விசாரிச்சு வந்திடறேன்.” என்றான் வளையாபதி.

“சரி வாங்க..” என்று போனை வைத்துவிட்டான் அமுதன்.

வளையாபதி பேசிமுடித்து போனை வைக்கும் முன்னரே, ராமைய்யாவின் மனதில் பல யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தன. அதை செயல்படுத்தவும் திட்டமிட்டார்.

மாலை பள்ளி முடிந்து தமிழினியும், தேன்மொழியும் அன்று நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே வந்துகொண்டிருந்தனர். அப்போது வளையாபதி தேன்மொழிக்காக வெளியே காத்திருந்தான்.

முதன் முறை தேன்மொழியோடு பேசிக்கொண்டு வரும் பெண்ணைப் பார்த்தான். மனதிற்க்குள் ஏனோ திடீரென படபடப்பு. அவர்கள் நெருங்கி வர வர, ஏதோ ஒரு உணர்வு அவனைக் கட்டிப் போட்டது. தேன்மொழி அவனைப் பார்த்துவிட்டாள்.

“அண்ணா.. நீ எங்க இங்க.?” என்று அவள் அருகே வந்து கேட்டது கூடத் தெரியாமல் தலையைக் குனிந்தவாறு நின்றான்.

அதைப் பார்த்த தமிழினி வேண்டுமென்றே, “ஹலோ.. சார்.. என்னாச்சு.? உங்க தங்கச்சி கூப்பிடறது கூடத் தெரியாம கீழ ஏதாவது புதையல தேடிட்டிருக்கீங்களா என்ன.?” என்று அவன் முன் சொடுக்குப் போட்டுப் பேச, அவனோ வாயடைத்துப் போனான்.

ஏற்கனவே அவளால் தான், அவன் படபடப்புடன் அமைதியாய் நின்றான். இப்போது அவளே வந்து நேரடியாக அவனிடம் பேச, அவனுக்கு இப்போது வியர்த்துக்கொட்ட ஆரம்பித்தது.

“என்னாச்சு அண்ணா உனக்கு.? ஏன் இப்படி வேர்க்குது.? யாராவது ஏதாவது பண்ணிட்டாங்களா.?” என்று பயத்துடன் தேன்மொழி கேட்க,

“அதெல்லாம்... ஒண்ணும்... இல்ல.. தேனு... வக்கீல் சார் உன்னையும், என்னையும் வரச் சொன்னார். அதான் உன்னை அப்படியே கூட்டிட்டுப் போலாம்னு வந்தேன்.” என்றான். அதைச் சொல்லவே மிகவும் சிரமப்பட்டான்.

“யாரு அமுதனா.?” என்று தமிழினி கேட்க,

அவளை நிமிர்ந்து பார்க்க திராணியில்லாமல் வெறும் தலையை மட்டுமே ஆட்டினான். அப்போதும் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. அதை அடக்கிக்கொண்டாள்.

“அய்யோ.. நான் எதுக்கு ணா.? நான் வரல. நீ மட்டும் போயிட்டு வா.” என்றாள்.

“இல்ல, முக்கியமான விஷயம் கேட்கணும்னு சொன்னார் தேனு. நீயும் வரணும். அப்போதான் அவருக்கு உதவியா இருக்கும்.” என்றான் வளையாபதி.

“தேன்மொழி, உங்கள என் ஃப்ரெண்ட் ஒண்ணும் பண்ணிட மாட்டான். நீங்க ஏன் இவ்ளோ பயப்படறீங்க.? நான் கூட இருக்கேன். சரியா.?” என்று தமிழினி சற்று தைரியம் கொடுக்க, சரியென்று இருவரும் வளையாபதி வந்திருந்த காரில் சென்றனர்.

முதலில், தமிழினி அவளுடைய வீட்டுக்கு தேன்மொழியை அழைத்தாள்.

“வளையாபதி சார். உங்க தங்கச்சிய நான் கூட்டிட்டு வரேன். வக்கீல் சார்கிட்ட போய் சொல்லுங்க. என்ன.?” என்று காரில் இருக்கும் அவனிடம் சொல்ல, அவன் அதற்க்கும் தலையை மட்டுமே ஆட்டிவிட்டு நேரே அமுதனுடைய வீட்டுக்குச் சென்றான்.

அதைப் பார்த்த தேன்மொழி, “தமிழ், நீங்க என்னோட அண்ணாவ ரொம்பத்தான் மிரட்டறீங்க.” என்று சொல்ல,

“ஹூம்ம். பின்ன, ஸ்கூல் பையன் தப்பு பண்ண மாதிரி நின்னுட்டிருக்கார். நிமிர்ந்து பேசக்கூட மாட்டிங்கறார். அதனால தான் அப்படிப் பேசினேன். ஏன் இவ்ளோ பயந்துக்கறார்.? நான் என்ன அவரக் கடிச்சா திங்கப் போறேன்.?” என்றாள் தமிழினி.

“அப்படியில்ல தமிழ். அண்ணா, எந்தப் பொண்ணையும் அவ்ளோ சீக்கிரம் பார்க்க மாட்டார். என்னைத் தவிர எந்தப் பொண்ணுங்க கிட்டயும் பேசவும் மாட்டார். கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம். அதனால தான் அவர் அப்படி நடந்துக்கறார்.” என்றாள் தேன்மொழி.

“ஹூம்ம்...” என்று தலையாட்டிவிட்டு வீட்டிற்க்குள் அழைத்துச் சென்று அவளை அமரச் சொன்னாள் தமிழினி. கோகிலாவுக்கு அறிமுகம் செய்தாள். இருவரும் முகம், கை, கால் அலம்பி வரும் போது, தட்டில் முறுக்கும், டீயும் ரெடியாக இருந்தது.

இருவரும் அதைச் சாப்பிட்டு முடித்து, அமுதனின் வீட்டிற்க்கு கிளம்பினர். அங்கே போகும் போதே தேன்மொழியின் கண்களில் ஒருவித பதட்டத்தை உணர்ந்தாள் தமிழினி.

“என்னாச்சு தேன்மொழி.? ஒரு மாதிரி பதட்டமா இருக்க மாதிரி தெரியுது.” என்றாள் தமிழினி.

“இல்ல, நான் அவ்ளோ சீக்கிரம் எந்த ஆம்பிளைங்ககிட்டயும் பேச மாட்டேன் தமிழ். ஸ்கூல்லயே பார்க்கறீங்க தானே, எந்த சார்கிட்டயும் அவ்ளவா பேசினதில்ல. அப்படி இருக்கும் போது, திடீர்னு வக்கீல் சாரப் பாக்கணும், பேசணும்னு நினைச்சாலே ஒரு மாதிரி பயமா இருக்கு.” என்றாள் தேன்மொழி.

“ஹூம்ம்.. அண்ணன், தங்கச்சி ரெண்டு பேரும் இப்படி மத்தவங்க கிட்ட பேசறதுக்கே பயந்துக்கிட்டா, அப்பறம் எப்படி வாழ்க்கைய நடத்த முடியும்.? அமுதன் எப்படிப்பட்டவன்னு எனக்கு நல்லாத் தெரியும். அவன் என்னோட நண்பன் தானே, அவனப் பார்த்து நீங்க வீணா பயப்படத் தேவையில்ல. நானும் கூட இருக்கேன் இல்ல. தைரியமா வாங்க போகலாம்.” என்று அவளை தைரியப்படுத்திக் கூட்டிக்கொண்டு போனாள் தமிழினி.

அவள் என்னதான் தைரியப்படுத்தினாலும், ஏனோ ஒருவித பதட்டம் தேன்மொழியை ஆட்டுவித்தது அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

அமுதன் அவன் வீட்டில் உள்ள ஷோஃபாவில் அமர்ந்தபடி வளையாபதியுடன் பேசிக்கொண்டிருந்தான். அதே போல், அழகேசனும் அங்கே தான் இருந்தார்.

தமிழினி கேட்டைத் திறந்துகொண்டு முன்பு வர, உள்ளே நுழைந்த தேன்மொழியைப் பார்த்த அமுதன் ஒரு கணம் திகைத்து நின்றான். இவள் தான் தேன்மொழி என்று தெரிந்ததும் அவனுக்குத் திகைப்பே போகவில்லை. இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளை வரவேற்றான்.

“இதுதான் தேனு, என் தங்கச்சி சார். இவங்களும், அவங்களும் ஒரே ஸ்கூல்ல தான் டீச்சரா வேலை பார்க்கறாங்கன்னு எனக்கு இன்னைக்குத்தான் தெரியும்.” என்றான் வளையாபதி.

“டேய்.. அமுதா, அவங்க ரொம்ப பயப்படறாங்க. நீ ஏதோ அவங்கள மிரட்டி கேள்வி கேட்கப் போறியோன்னு நினைக்கறாங்க. நீ கொஞ்சம் பார்த்துப் பேசு.” என்று அவர்கள் முன்னிலையிலேயே அவனிடம் உரிமையாய்ப் பேச, அவர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சர்யம்.

“ம்ம்.. அப்படியா.? ஆமா, நீ சொன்ன மாதிரி நான் அவங்கள மிரட்டி தான் எல்லா உண்மையையும் வர வைக்கப் போறேன்.” என்றான் அமுதன் வேண்டுமென்றே.

அதுவரை கீழே குனிந்தபடி அமர்ந்திருந்த தேன்மொழி, அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் இருந்த பயத்தையும், பதட்டத்தையும் அவனால் உணர முடிந்தது.

“ப்ச்.. அமுதா.. சும்மா இரு..” என்று அவனை அடக்கிய அழகேசன், தேன்மொழியிடம் திரும்பி, “அவன் சும்மா சொல்றான் மா. நீ ஒண்ணும் பயப்படாத. நாங்க எல்லாரும் இருக்கோம் இல்ல. நீ தைரியமா இருக்கலாம். ரெண்டு பேரும் ஒரு மாதிரி பதட்டமா இருக்கறது நல்லாவே தெரியுது. நாங்க உங்களோட குடும்பம்னு நினைச்சுக்கோங்க. எதிரியோட பலவீனம் தெரிஞ்சுட்டா, அவன ஈஸியா ஜெயிச்சிடலாம். உங்களோட பலவீனம் தைரியமில்லாமை. யாரும் உங்களுக்காக இல்லைங்கற உணர்வு. அது ரெண்டும் தான் அவங்களோட பலம். அதனால தான் உங்களை உங்க மாமாவும், அத்தையும் இவ்ளோ கஷ்டப்படுத்தறாங்க. இனிமேல் நாங்க இருக்கோம்னு ஒரு தைரியத்துல நீங்க இருந்து பாருங்க. அதுக்கப்பறம் அவங்க உங்ககிட்ட கொஞ்சம் பார்த்து தான் நடந்துப்பாங்க.” என்று அழகேசன் அறிவுரை வழங்கினார்.

“உண்மைதான் பா. உங்களை மாதிரி எங்க வீட்டுல எங்களை தைரியப்படுத்த யாராவது இருந்திருந்தா நாங்களும் இப்படி இருந்திருக்க மாட்டோம். எங்க அப்பா, அம்மா உயிரோட இருந்த வரைக்கும், அவங்களும் நிறைய விஷயங்களுக்காக பயந்து பயந்து வாழ்ந்த வாழ்க்கையைத்தான் நாங்க இதுவரைக்கும் பார்த்திருக்கோம். அதனால்தானோ என்னவோ, நாங்களும் அப்படிப்பட்ட வாழ்க்கைக்கே பழக்கப்பட்டுட்டோம். அமுதன் சார் எப்படி இவ்ளோ தைரியமாவும், எந்த ஒரு விஷயத்தையும் யோசிச்சு பண்றார்ன்னு உங்க பேச்சுலயே தெரிஞ்சுக்க முடியுது.” என்று வளையாபதி ஒரு ஏக்கத்துடன் சொல்லி முடித்தான்.

அவன் பேசுவதைக் கேட்ட போது, தமிழினிக்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்கள் இருவரையும் நினைத்து மிகவும் வருந்தினாள்.

“அதனால் என்ன வளையாபதி.? அதுதான் அப்பாவே சொல்லிட்டாரே, இது உங்க குடும்பம் மாதிரின்னு. இனிமேல் தைரியமா எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணுங்க. நாங்க கூட இருக்கோம்.” என்றான் அமுதன்.

“ஆமா, வளையாபதி சார். தைரியமா இருந்தா பேயக் கூட விரட்டலாம். இல்லன்னா நாய் கூட நம்மள மதிக்காது. அதனால நீங்க ரெண்டு பேரும் எந்த அளவுக்கு தைரியத்த வரவழைக்கறீங்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு வாழ்க்கைல நம்பிக்கையும் வரும். அதுக்கு நானே உதாரணம். இதோ, அழகேசன் அய்யாவும், அமுதனும் இல்லைன்னா என்னால படிச்சிருக்கவும் முடியாது, இந்த அளவுக்கு வந்திருக்கவும் முடியாது.” என்று சொல்ல,
அவளுடைய கதையை அழகேசன் தான் சொன்னார். அதே போல், அவர்களுக்கிடையில் இருக்கும் நட்பைப் பற்றியும் கூறினார். அதைக் கேட்டதும் இருவருக்கும் ஆச்சர்யம் தான்.

“இந்தக் காலத்துலயும் இந்த மாதிரி ஆண், பெண் நட்புங்கறது ரொம்ப அபூர்வமான விஷயம். அதுவும் சின்ன வயசுல இருந்தே இருக்கறது இன்னும் ஆச்சர்யமா இருக்கு. நீங்க எப்பவும் இதே மாதிரி இருக்கணும்.” என்றான் வளையாபதி.

அதைச் சொன்னதுமே தமிழினிக்கு அவன் மேல் ஒரு பெரிய மரியாதையே வந்தது. அதே போல், தேன்மொழியும் சொன்னாள்.

“நீங்க அன்னைக்கு உங்க நண்பன்னு சொன்னப்போ, நான் இந்த அளவுக்கு உங்களோட நட்பு இருக்கும்னு நினைக்கல தமிழ். இப்போதான் எனக்கு அதோட ஆழம் தெரியுது. அண்ணா சொன்னது போலவே, உங்களோட நட்புக்கு எந்த ஒரு இடையூறும் வரக் கூடாது. அதே போல இது கடைசி வரைக்கும் தொடரணும். அதுதான் எங்களோட ஆசை.” என்று சொன்னாள்.

இந்த வார்த்தைகளைக் கேட்கத்தான் அமுதன், தமிழினி இருவரும் இத்தனை வருடங்களாக காத்துக் கொண்டிருந்தனர். தங்களின் புனிதமான நட்பை மதிப்பவர்களைத்தான் அவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையாக ஏற்க வேண்டும் என்றும் சபதம் எடுத்திருந்தனர்.

இன்று இவர்கள் இருவரும் அதைச் சொன்னதும், அவர்கள் இருவர் மனதில் ஓடிய எண்ணங்கள் பொதுவானவையே. ஆனாலும், எதையும் சட்டென்று முடிவெடுப்பவர்கள் அல்ல இருவரும். அதனால், தங்கள் உணர்வுகளை சிறிது கட்டுப்பாட்டுடனே வைத்திருந்தனர் இருவரும்.

“சரி எங்க கதையெல்லாம் இருக்கட்டும். நான் உங்க ரெண்டு பேரையும் எதுக்காக வரச் சொன்னேன்னே மறந்துடப் போறேன். நாளைக்கு நடக்கப் போற கேஸ்ல நிறைய விஷயங்கள் இருக்கு. அதுல இருக்கற சின்னச் சின்ன சந்தேகங்களைத்தான் நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் கேட்கணும்னு நினைச்சிருந்தேன்.” என்று ஆரம்பித்த அமுதன், அவர்களிடம் தனக்கிருந்த சந்தேகங்கள் அனைத்தையுமே கேட்டறிந்தான்.

ஒன்று, இரண்டு அவர்களுக்கே புரியாத புதிராய் இருந்தாலும், அதில் இருக்கும் உண்மையை அமுதன் அறிந்து கொண்டான். அவனால், ஒரு முடிவுக்கு வர முடிந்தது.

“சரி வளையாபதி. எனக்கு இந்தத் தகவல்கள் போதும். நான் கூப்பிட்டதுக்கு நேரம், காலம் பார்க்காம ரெண்டு பேரும் வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். நாளைக்கு நீங்க கோர்ட்டுக்கு சரியான நேரத்துக்கு வந்துடுங்க.” என்று சொன்னான் அமுதன்.

“எங்களுக்காக நீங்க இவ்ளோ தூரம் மெனக்கெடறதுக்கு நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் சார்.” என்று வளையாபதி சொல்ல,

“அதெல்லாம் எதுவும் சொல்லத் தேவையில்ல வளையாபதி. உங்க பக்கம் நியாயம் இருக்கு. அதனால தான் நான் உங்க பக்கம் இருக்கேன்.” என்றான் அமுதன் பெருந்தன்மையாக.

“சரி, நாங்க அப்படியே கிளம்பறோம் அமுதன் சார்.” என்று எழுந்தான் வளையாபதி. அப்போது, தேன்மொழி, “அண்ணா ஒரு நிமிஷம்.” என்று அமுதனைப் பார்த்து,

“உங்களுக்கு ரொம்ப நன்றி. எங்க அண்ணனோட உயிரைக் காப்பாத்துனது நீங்க தான்னு தெரிஞ்சப்போ உங்களுக்கு அப்போவே சொல்லணும்னு நினைச்சது. தமிழ்கிட்ட தான் சொன்னேன். இப்போ உங்கள நேர்ல பார்க்கற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதனால தான் சொல்றேன். எனக்கு இருக்கற ஒரே ஆதரவு அண்ணா மட்டும் தான். அவரும் இல்லைன்னா நான் என்ன ஆயிருப்பேன்னே தெரியல.?” என்று கையெடுத்துக் கும்பிட்டு அழுதாள்.

அவள் அப்படி அழும் போது, அவளைத் தன் மார்போடு அணைத்து “அழாதே. நான் இருக்கிறேன்.” என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது அமுதனுக்கு. ஆனால், அவனால் அது முடியாது என்பதால், தமிழினியிடம் கண்களால் செய்கை காண்பித்தான்.

“சரி தேன்மொழி. நன்றி தான் அன்னைக்கே சொல்லியாச்சே.? அப்பறமும் ஏன் திரும்பவும் சொல்லி அழறீங்க. அவனுக்கு பொண்ணுங்க அழறதப் பார்த்தா மனசு தாங்காது. அதனால கண்ணைத் துடைச்சுக்கோங்க.” என்று சொல்லி அவள் கண்களைத் துடைத்து விட்டாள்.

அதைப் பார்த்த வளையாபதிக்கு அவள் மேல் அளவுக்கு அதிகமான ஒரு வித உணர்வு ஏற்பட்டது. இதுவரை தனக்கென்று இந்த உலகத்தில் இருக்கும் ஒரே ஜீவன் தன் தங்கை மட்டுமே. அவள் இதுவரை அழும் போது தன் கைகள் மட்டுமே துடைப்பதற்க்கென்று இருந்தது. தமிழினி அந்தச் செயலைச் செய்ததும், அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இருவரும் சொல்லிவிட்டுக் கிளம்ப, அப்போதே சற்று இருட்டி விட்டது. தமிழினியும் கிளம்புவதாய்ச் சொல்லிவிட்டு நடந்தே செல்ல, அவர்களோ காரில் கொண்டு வந்து விடுவதாய்ச் சொல்ல, அவள் நடந்தே சென்று விடுவேன் என்று சொல்லிவிட்டு முன்னே நடந்து சென்றாள்.

எப்பொழுதும் வீதியில் உள்ள விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அன்று ஏனோ எரியாமல் அந்த இடமே கும்மிருட்டாய் இருந்தது. காரில் செல்வதற்க்கே வளையாபதிக்கும், தேன்மொழிக்கும் சற்று பயமாய் இருக்க, முன்னே நடந்து செல்லும் தமிழினி பயப்படாமல் செல்வது அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவள் சென்ற சிறிது நேரத்தில் யாரோ இருட்டில் மூச்சுவிட முடியாமல் திணறுவது போல் ஒரு சத்தம். அதை அவர்களால் நன்கு கேட்க முடிந்தது.

“தேனு, ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகுதோன்னு தோணுது. நான் மெல்ல இறங்கிப் போய் அங்க இருட்டுல என்ன நடக்குதுன்னு பார்க்கறேன். நீ ஒண்ணு பண்ணு, ஏதாவது ஆபத்துன்னு தெரிஞ்சா உன்னால முடிஞ்ச அளவுக்கு யாரையாவது காப்பாத்த சொல்லி கத்து. அந்தச் சத்தம் இந்த ஊருக்கே கேட்கணும். புரிஞ்சுதா.?” என்று வளையாபதி சொல்ல,

“அண்ணா, எனக்கு பயமா இருக்கு ணா. நீ போகாத.” என்று நடுங்கினாள் தேன்மொழி.

“இனியும் நாம பயப்பட்டுட்டே இருந்தா எதுவும் பண்ண முடியாது தேனு. நாம தைரியமா இருப்போம். பயப்படாத. நம்மகூட எல்லாரும் இருக்காங்க.” என்று அவளுக்கு தைரியம் சொல்லிவிட்டு, எங்கிருந்தோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இருட்டில் சென்றான் வளையாபதி.

என்ன ஆகுமோ.? என்ற பயத்துடனேயே உயிரைக் கையில் பிடித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தாள். பயத்துடன் இருந்தவளின் தோள்களை ஒரு கை தொட, நடுக்கத்துடனே திரும்பிப் பார்த்தாள் அவள்...

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1442

உங்களின் விமர்சனங்களை கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...
 
Last edited:

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 31

அந்த இருட்டில் போன தனது அண்ணனைக் காணவில்லை என்ற அச்சத்தில் இருந்த தேன்மொழியின் தோளில் யாரோ கை வைக்க, அவள் பயத்தில் உறைந்தே போனாள். ஏதோ ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சட்டென்று திரும்பினாள்.

அங்கே அமுதன் நின்று கொண்டு அவளை அதிர்ச்சியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். “என்னாச்சு தேன்மொழி.? எதுக்கு இங்க நின்னுட்டிருக்கீங்க.?” என்றான்.

அப்போதுதான் அவளுக்கு உயிரே வந்தது. இருந்தாலும் பயம் போகவில்லை அவளுக்கு. சட்டென்று அவன் மேல் சாய்ந்து அழுதாள். அவனுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. தான் அவள் மேல் கையை வைக்கவே மிகவும் யோசிக்க, அவளோ தன் மேல் சாய்ந்து அழுவதை நினைக்கும் போது, அவள் மீதான காதல் அவனை இம்சைப்படுத்த, நிலைமையை உணர்ந்தவன் கேட்டான்.

“தேன்மொழி, நீங்க என்னன்னு சொன்னா தானே தெரியும். வளையாபதி எங்க.? அவர் இந்த ஃபைல விட்டுட்டுப் போயிட்டார். அதனால தான் நான் பின்னாலேயே வந்தேன். தயவுசெய்து என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.” என்றான்.

அவள் தன்னை சற்று நிதானித்துக்கொண்டு, நடந்ததைச் சொன்னாள். அதைக் கேட்ட அமுதன் சற்றும் தாமதிக்காமல் உடனே காரில் ஏறி, வண்டியை ஆன் செய்து ஹெட்லைட்டை நன்றாக எறிய விட்டான்.

அவளிடம், “கார்ல ஏறுங்க.” என்றான்.

அவளும் ஏறிக்கொள்ள, கார் வேகமெடுத்து செல்ல ஆரம்பித்தது. அந்த கும்மிருட்டில் அந்தக் காரின் வெளிச்சம் மட்டுமே இருந்தது. சிறிது தூரத்தில் பார்த்த போது, வளையாபதி கீழே விழுந்து கிடந்தான்.

அவசரமாய் காரை அப்படியே நிறுத்தி விட்டு அவனைத் தூக்கினார்கள் இருவரும். அவனுக்கு நன்றாக அடிபட்டிருந்தது. “அய்யோ.. அண்ணா...” என்று கதறினாள் தேன்மொழி.

“வளையாபதி, என்னாச்சு.? எப்படி அடிபட்டுச்சு.?” என்று அமுதன் கேட்க, பாதி மயக்கத்தில் அவன், “தமி...ழ்... த.. மி.. ழ்... அவ...ங்க.. ளக் கா..ப்பா..த்து..ங்க...” என்று தட்டுத்தடுமாறி சொல்லிவிட்டு மீண்டும் மயங்கினான்.

“தமிழா.. தமிழுக்கு என்னாச்சு.? ப்ளீஸ் வளையாபதி.. சொல்லுங்க..” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுக்கு குரல் தழுதழுத்தது.

“தேன்மொழி ஒரே நிமிஷம் உங்களால எந்த அளவுக்கு கத்த முடியுமோ கத்தி ஊரைக் கூட்டுங்க. நான் அந்தப் பக்கம் போய் பார்க்கறேன்.” என்று சொல்லிவிட்டு ஓடும் போதே அவனது தவிப்பை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

அவன் சொன்னதைப் போல், “காப்பாத்துங்க... காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.......” என்று விடாமல் சுற்றிலும் சென்று தன் தொண்டையிலிருந்து கத்தினாள் தேன்மொழி.

அவள் கத்திய சத்தம் அருகே இருந்த தமிழினியின் அப்பா ரங்கனுக்கும், கோகிலாவுக்கும் நன்றாகவே கேட்டது. இருவரும் உடனே ஓடி வந்தனர். அதே போல், சிலரும் அவள் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்தனர்.

சிறிது தூரம் சென்றதும் அமுதனுக்கு அங்கே நடப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது. ஒருவன் தமிழினியைப் பிடித்து இழுத்துக்கொண்டு செல்வது தெரிந்தது. அவளால் கத்த முடியவில்லை. அவள் வாயைத் துணியைக் கொண்டு கட்டியிருந்தனர்.

வந்த கோபத்திலும், வேகத்திலும் அமுதன் ஓடிச் சென்று அவளை இழுத்துச் சென்றவனை ஓங்கி ஒரே அடி தான் அடித்தான். அவன் “அம்ம்ம்மாமாமாமா.....” என்ற அலறல் சத்தத்தோடு அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தான்.

அமுதன், அங்கே அவனால் கீழே விடப்பட்ட தமிழினியைத் தூக்கினான். அவளால் பாவம் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. அவன் மேல் சாய்ந்து கொண்டாள். அதற்க்குள் நாலைந்து அடியாட்கள் அவன் முன்னே ஒடி வந்து நின்றனர்.

கையில், பெரிய பெரிய ஆயுதங்களும், கட்டைகளும் இருந்தன. அதையெல்லாம் சட்டை செய்யாமல் அவன் தமிழினியின் வாயைப் பொத்தியிருந்த துணியைக் கழட்டி விட்டான். அதன் பிறகு தான் அவளால் முழுதாய் மூச்சுவிட முடிந்தது.

“தமிழு.. இப்போ எப்படி இருக்கு.? இவனுங்க எதுக்கு உன்னை இழுத்துட்டுப் போறாங்க.? யார் இவங்க.?” என்றான். அவளால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் அவன் மேல் சாய்ந்திருந்தாள் தமிழினி.

“அதை நான் சொல்றேன். நீதான் வக்கீலா.? உன்னை அடிச்சா முதல்ல சரியாகும். ஒழுங்கா அந்தப் பொண்ண விட்டுடு. இல்லன்னா உன்னைக் கொன்னுட்டு தான் நாங்க அந்தப் பொண்ணத் தூக்கிட்டுப் போவோம்.” என்றான் ஒருவன்.

அமுதனோ அவர்களை முறைத்தவாறே, “டேய்.. எவ்ளோ தைரியம் இருந்தா என் தமிழ இழுத்துட்டுப் போவீங்க.? இதுல அவள விடச் சொல்றீங்க.? என்ன மீறி நீங்க அவளக் கூட்டிட்டுப் போக முடியுமா.? முடிஞ்சா கூட்டிட்டுப் போங்க பார்க்கலாம்.” என்று சவால் விட்டான்.

“டேய்.. இதப் பாருடா வக்கீல் சவால் விடறாரு. ஏன் உனக்கு உயிர் மேல ஆசை இல்லையா.? ஒழுங்கா விட்டுட்டுப் போ.. இல்லன்னா அவ்ளோ தான்.” என்றான் அவன் திரும்பவும்.

அதற்க்குள் அங்கே வந்த ரங்கனும், சிலரும் அந்த அடியாட்களுடன் சண்டை போட்டனர். அவர்கள் கையில் இருந்த கட்டையைக் கொண்டு அடியாட்களிடம் சண்டையிட்டனர்.

அப்போது ரங்கனிடம், “அப்பா, நீங்க தமிழக் கூட்டிட்டுப் போய் கொஞ்சம் தண்ணி கொடுத்து முதலுதவி செய்யுங்க. இவங்கள நான் பார்த்துக்கறேன்.” என்று அவளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அங்கே இருந்த ஒரு நீலக் கம்பை எடுத்துக்கொண்டான் அமுதன்.

முடியாமல் இருந்த தன் மகளின் கன்னத்தைத் தட்டியவாறே, “தமிழ் மா.. தமிழ் மா.. என்னாச்சு டா உனக்கு.? அப்பாவப் பாருமா..” என்று அழுதபடியே அவளைக் கூட்டிச் சென்றார். அதற்க்குள் கோகிலாவும் அவ்விடம் வந்துவிட்டார். இருவரும் அவளைத் தாங்கிப் பிடித்து கூட்டிச் சென்றனர்.

அமுதன் சிலம்பமும் கற்றிருக்கிறான். கம்பை வைத்து பலமுறை வேகமாக சுழற்றினான். அவ்வளவுதான், அந்த அடியாட்களிடம் இருந்த ஆயுதங்களும், கட்டைகளும் எங்கே போனதென்று தெரியவில்லை. இப்போது அவர்களுக்கு பலவாறு அவனிடமிருந்து அடிகள் விழுந்தன. அடியின் வலி தாங்காமல் அலறியவர்கள் இருட்டில் ஓடி மறைந்தனர்.

இரவு 9 மணி, அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி. தீவிர சிகிச்சைப் பிரிவில் நன்றாக அடிபட்டிருந்த வளையாபதிக்கும், மயக்கமான நிலையில் இருந்த தமிழினிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் தான் இருந்தனர். விஷயம் கேள்விப்பட்டதும் அங்கே செங்குட்டுவனும் வந்துவிட்டார்.

தேன்மொழி தன் அண்ணனுக்காக கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தமிழினிக்காக அவளது பெற்றோரும், அமுதனும், அழகேசனும் கவலையுடன் இருந்தனர். அமுதன் கிட்டத்தட்ட அழுதுகொண்டிருந்தான்.

அழகேசன் தான் அவனைச் சமாதானம் செய்துகொண்டிருந்தார். “அமுதா, நீ அழக்கூடாது. தைரியமா இருக்கணும் டா. பெத்தவங்க தான் அழுதுட்டு இருக்காங்க. நீயும் அழுதா, யார் அவங்களுக்கு ஆறுதல் சொல்றது.? தமிழுக்கு ஒண்ணும் ஆகாது.?” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

“அப்பா, என்னால முடியல. ப்ளீஸ். புரிஞ்சுக்கோங்க. அவள நான் எப்படிப்பட்ட நிலைல பார்த்தேன் தெரியுமா.? அப்படிப் பார்த்ததும் என்னால தாங்கவே முடியல பா. பாவம் பா தமிழு. அவளுக்கு இந்த கேஸ்ல எந்த சம்பந்தமுமே இல்ல. ஆனா, அவள ஏன் இப்படிப் பண்ணாங்கன்னு எனக்குத் தெரியல.? யார்ன்னு தெரிஞ்சுதுன்னா, கண்டிப்பா அவங்கள நான் சும்மா விடமாட்டேன். பாருங்க.” என்று சொன்னபடி தன் கண்களில் இருந்து வந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.

“எனக்கு யார்ன்னு தெரியும் அமுதா. வேற யாரு, இந்தக் கேஸ்ல நீ ஜெயிக்கக் கூடாதுன்னு நினைக்கிற ரெண்டே பேர், அந்த ராமைய்யாவும், வீரபத்திரனும் தான் இப்படிப் பண்ணிருக்கணும்.” என்றார் செங்குட்டுவன்.

“அதுக்கு, சம்பந்தமே இல்லாம தமிழ ஏன் சார் இழுத்துட்டுப் போகணும்.? அவ என்ன சார் தப்புப் பண்ணா.?” என்றான் அமுதன்.

“உன்னோட கவனத்த திசை திருப்ப நினைச்சிருக்கலாம். உன்னோட ஃப்ரெண்ட்க்கு ஒண்ணுன்னா உன்னால தாங்க முடியாதுன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதனால அப்படிப் பண்ணிருப்பாங்கன்னு என்னோட அசம்ஷன். பட், எக்ஸாக்ட்டா என்ன நடந்ததுன்னு அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். யாராவது ஒருத்தர் கண்ணு முழிச்சு சொன்னா கூட அது மூலமா நமக்குத் தெரிய வரும்.” என்றார் செங்குட்டுவன்.

“தெரிய வரட்டும் சார். நான் அவங்களை ஒரு வழி பண்ணிருவேன். அவங்க என்ன நினைச்சாங்க என்னைப் பத்தி.? இந்த மாதிரி பண்ணா நான் பயந்துடுவேன்னா.? கிடையாது. எனக்குள்ள தூங்கிட்டிருக்கற குணத்த அவங்க சீண்டிட்டாங்க. அதை முழுசா அவங்ககிட்டக் காட்டப் போறேன்.” என்று கோபமாகவும், தைரியமாகவும் பேச,

“ம்ம்.. இந்த மன உறுதி தான் வேணும் அமுதா. நீ மனசொடிஞ்சு போயிட்டா அது எதிரிகளுக்கு சாதகமாப் போயிடும். அதனால, நீ எதிர்த்துப் போராடு. அதுக்கு நாங்க எல்லாருமே உனக்கு உறுதுணையா இருப்போம்.” என்றார் செங்குட்டுவன்.

“ஆமாடா தம்பி. நீ தைரியமா இரு. எல்லாத்துக்கும் அந்த ஆண்டவனும், நாங்களும் உனக்குத் துணையா நிப்போம்.” என்றார் அழகேசன்.

இவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, ஒரு நர்ஸ் வெளியே வந்து, “அந்தப் பொண்ணு கண்ணு முழிச்சிட்டாங்க.” என்று சொல்ல, அனைவரும் தமிழினியைப் பார்க்கச் சென்றனர்.

ஒருபக்கம் அவளது பெற்றோரும், மறுபக்கம் அமுதனும், அழகேசனும் நின்றுகொண்டிருந்தனர். ஆவலோடு அவளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் மெல்ல கண் அசைவில் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“தமிழ் மா.. இப்போ எப்படி இருக்கு.? என்னாச்சு மா உனக்கு.? எப்படி ஆச்சு.?” என்று ரங்கனும், கோகிலாவும் அழுதுகொண்டே கேட்டனர்.

“அது... அது.... என்ன....” என்று அவள் பேச முயலும் போது களைப்பில் அப்படியே மயங்கினாள். திரும்பவும் அவள் மயங்கியதைப் பார்த்து அவர்கள் அனைவரும் பயந்து விட்டனர்.

அப்போது அங்கே வந்த டாக்டர், “ஏங்க, இப்படி சுத்தி நின்னுட்டு, அழுதுட்டு அவங்களைப் பார்த்தா எப்படி இருக்கும்.? அவங்க ரொம்ப டயர்டா இருக்காங்க. இப்போதான் குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு. அவங்கள யாரும் இப்போதைக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்க. வெயிட் பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டுப் போக, அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர்.

பொள்ளாச்சியில் உள்ள அந்த பெரிய பங்களாவில் சத்தம் கூடமானவரை வாசல் வரைக்கும் கேட்டது. பின்னே வக்கீல் என்றால் சும்மாவா, பேச்சும், குரலும் சற்று அதிகமாகத்தானே இருக்கும். வீரபத்திரன் தான் கத்திக்கொண்டிருந்தார்.

“நான் உன்கிட்ட என்ன சொன்னேன்.? கேஸ் முடியற வரைக்கும் என்னோட அனுமதி இல்லாம எதுவும் பண்ணக்கூடாதுன்னு சொல்லிருந்தேன்ல. அப்பறம் எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலையப் பண்ணிட்டு வந்து நிக்கற.? உன்னையெல்லாம் ஒரு மனுஷன்னு நினைச்சு, உனக்காக இங்க வந்து இந்தக் கேஸ எடுக்க நினைச்சேன் பாரு, என்னையத்தான் செருப்புலயே அடிச்சுக்கணும். இது இப்போ எவ்ளோ பிரச்சினைல போய் முடியும்னு தெரியுமா.? நாளைக்கு கோர்ட்ல, தேவையில்லாம இதுக்கும் நான் விளக்கம் கொடுக்கணும்.” என்று தலையில் கை வைத்தபடி கோபத்தில் அமர்ந்திருந்தார் வீரபத்திரன். எதிரில் ராமைய்யா நின்றிருந்தார்.

“இதுக்கு எதுக்குங்க நீங்க விளக்கம் கொடுக்கணும்.? வேற யாரோ செஞ்சுட்டாங்கன்னு சொன்னாப் போதாதுங்களா.?” என்றார் ராமைய்யா சாதாரணமாக.

“யோவ்.. நீ என்ன நினைச்சுட்டு இருக்க.? இது எல்லாருக்குமே இந்நேரம் தெரிஞ்சிருக்கும். அவனுங்க எல்லாருமே நான் தான் பண்ணிருப்பேன்னு என்னைத்தான் சந்தேகப்படுவானுங்க. அதுவும், அந்த செங்குட்டுவன் இருக்கானே, அவனே போதும். கன்ஃபார்மா நான் தான் பண்ணியிருப்பேன்னு அவனோட ஜூனியர்கிட்ட சொல்லி வைச்சிருப்பான். அவன் நாளைக்கு இதப்பத்தி கேள்வி கேட்பான். நீயா பதில் சொல்லப் போற.? நான் தானே ஏதாவது சொல்லி சமாளிக்கணும். உனக்கென்ன.? கடவுளே, உன்னை என்ன பண்ணனும் தெரியுமா.?” என்று ராமைய்யாவை கடிந்து கொண்டார்.

ராமைய்யாவோ அவர் முன்பு வேறு எதுவும் பேச முடியாமல் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டிருந்தார். அனைத்து வேலைகளையும் அரங்கேற்றியது அவரே. வீரபத்திரனிடம் எந்த ஒரு முன்னறிவுப்பும் இல்லாமல் சில ஆட்களை வைத்து வளையாபதியை அடிக்கவும், தமிழினியைக் கடத்தவும் திட்டமிட்டார்.

“தயவுசெய்து என் கண் முன்ன நின்னு என்ன டென்ஷன் பண்ணாதய்யா. போய்த் தொலை. நாளைக்கு கோர்ட்ல பார்க்கலாம்.” என்று வெறுப்பாய் சொல்லி அவரைத் துரத்தினார்.

அவமானம் தான் ராமைய்யாவுக்கு. ஆனால், வேறு வழியில்லையே, இந்த கேஸில் தன்னைக் காப்பாற்ற அவர் நம்பியிருக்கும் ஒரே ஒரு ஆள் அவர் மட்டுமே. அவரையும் பகைத்துக் கொண்டால், தன்னை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று நினைத்துத்தான் அனைத்தையும் தாங்கிக் கொண்டு சென்றார்.

அவர் சென்றதும், வீரபத்திரனின் இளைய மகன் அருகே வந்து கேட்டான். “அப்பா, எதுக்கு இந்த மாதிரி ஆளுகளோட கேஸெல்லாம் ஹேண்டில் பண்றீங்க.? நீங்க எப்பவுமே உங்க கிளையண்ட்ஸக் கூட பார்த்துதான சூஸ் பண்ணுவீங்க. எதுக்கு வீணா இந்த ஆளுகிட்ட எல்லாம் கத்திட்டு, நீங்களும் டென்ஷன் ஆயிட்டு, இதெல்லாம் தேவையா பா.” என்றான்.

“டேய், சின்னவனே எனக்குத் தெரியும்டா. யாரோட கேஸ எடுக்கணும், எடுக்கக் கூடாதுன்னு. ஒருத்தன் என்கிட்ட வந்திருக்கான்னா, அவன் கொட்டி கொட்டி என்கிட்ட கொடுத்தாத்தான் முடியும். இவனும், அப்படி மாட்டிக்கிட்டவன் தான். இந்தக் கேஸ ஜெயிச்சுக் கொடுத்தா என்ன கொடுப்பன்னு கேட்டேன். எதுவா இருந்தாலும் தரேன்னு சொன்னான். அதான், அவனுக்கு கிடைக்க இருக்க சொத்துல, பாதி பங்க அப்படியே கொடுத்துரு, நான் இந்தக் கேஸ உனக்கு சாதகமா முடிச்சுக் கொடுக்கறேன்னு சொன்னேன். அவனுக்கு வேற வழியில்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்னை மாதிரி வேற யாரையும் அவனால தேடிப்பிடிக்க முடியாது. அதனால, சரின்னு தலையாட்டிட்டான். அதனால தான் இந்தக் கேஸ எடுத்திருக்கேன்.” என்றார் மகனிடம்.

“ஓ.. அதுதான் விஷயமா பா. நான் கூட எதுக்கு இவரோட கேஸெல்லாம் எடுக்கறீங்கன்னு நினைச்சேன். இப்போ புரியுது பா.” என்றான் சிரித்துக்கொண்டே.

“தெரிஞ்சுக்கோ டா. நான் அப்படிப் பண்ணலன்னா நாம இன்னைக்கு இந்த மாதிரி வசதியா இருக்க முடியுமா.? நமக்கெல்லாம் எந்தத் தாத்தா சொத்து சேர்த்து வைச்சிருந்தாரு.? எல்லாம் சுத்தம். ஹூம்ம்.. நானா, எல்லாத்தையும் வாங்கி சேர்த்தேன். எனக்கப்பறம் என் குழந்தைங்களுக்கு எந்த ஒரு குறையும் வந்திடக் கூடாதுன்னு தான் இதெல்லாம் பண்றேன். நீங்களும் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.” என்று அறிவுரை வேறு வழங்கினார் வீரபத்திரன். அவர் மகனும் சிரித்துக்கொண்டு நன்றாகவே தலையாட்டினான்.

அநியாயத்தின் மூலமாக ஜெயித்த விஷயங்கள் எத்தனை நாளுக்கு நிலைக்கும்.? அப்போதைக்கு அனைத்துமே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் அனைத்தும் பொய் என்று தெரியவரும் போது, நம் நியாயங்களைக் கேட்க நமக்கென்று இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

சாகும் போது எதையும் கொண்டு செல்லப் போவதில்லை. நாம் செய்த பாவங்களும், புண்ணியங்களும் தான் நம் கூடவே வரும் என்று இவருக்கு யார் சொல்லி புரியவைப்பது.? எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதற்க்கான பதில் சொல்லும் காலமும் வரும்...

(தொடரும்...)

வார்த்தைகளின் எண்ணிக்கை : 1380

உங்களின் விமர்சனங்களை கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...



 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 32

வெறி கொண்டு எழுந்த சிங்கம் போல் அமுதன், அனைத்து ஆதாரங்களையும் ராமைய்யாவுக்கு எதிராக சேகரித்துக்கொண்டிருந்தான். அடுத்த நாள் நீதிமன்றத்தில் அமுதன் சொல்லியிருந்த அனைவரும் ஆஜராகி இருந்தனர்.

அமுதனின் கண்களில் கோபம் தீ விட்டு எரிந்து கொண்டிருந்தது. அனைவரையும் தனது கேள்வியான அம்புக் கணைகளைத் தொடுத்து மிரட்டக் காத்திருந்தான். வீரபத்திரனே அவனது முகத்தில் நேற்றைக்கும், இன்றைக்குமான வித்தியாசத்தை உணர்ந்தார். அவரே கொஞ்சம் பயந்து தான் போயிருக்கிறார். ஆனால், அதை வெளிக்காட்டவில்லை.

நீதிபதி வந்ததும், அதுவரை இருந்த சலசலப்பு குறைந்து அமைதி உருவானது. அவர் அமர்ந்த உடனே, இன்றும் அமுதனையே பார்த்தார்.

“மிஸ்டர். அமுதன், நீங்க சொன்னவங்க எல்லாரும் வந்துட்டாங்களா.?” என்றார்.

“ஆமா யுவரானர். எல்லாரும் வந்திருக்காங்க.” என்றான் அமுதன் சற்று உயரிய குரலில்.

“ஓகே, நீங்க உங்க தரப்பு வாதத்தை ஆரம்பிக்கலாம்.” என்று நீதிபதி சொன்னதும், “தேங்க் யூ மை லார்ட். நான் மிஸ்டர்.மாரிமுத்துவ முதல்ல விசாரிக்கணும்னு நினைக்கிறேன்.” என்றான்.

“யெஸ்..” என்று அவர் சொல்ல, மாரிமுத்து வந்து கூண்டில் நின்றார்.

அவர் நிற்கும் தொணியையே ஒரு பார்வை பார்த்தவாறு வந்த அமுதன் அவரைப் பார்த்து, “சொல்லுங்க மாரிமுத்து, நீங்க என்ன பண்றீங்க.? உங்க பிஸினெஸ்ஸெல்லாம் எப்படிப் போகுது.?” என்று கேட்க, அனைவரின் மனதிலும், இவன் எதற்க்குத் தேவையில்லாத கேள்விகளைக் கேட்கிறான் என்பது போல் ஒரு எண்ணம்.

“நான் ஆட்டுப் பண்ணை வைச்சிருக்கேன். நல்லாத்தான் போயிட்டு இருக்கு பிஸினெஸ்.” என்றார் அவர்.

“ஓ.. பரவால்ல. நீங்களும் நல்ல பிஸினெஸ் பண்றீங்க. அதே மாதிரி உங்க பசங்கள்ல ஒருத்தரை எஸ்.ஐ ஆக்கீட்டீங்க, இன்னொரு பையன் கந்து வட்டி பிஸினெஸ் பண்ண ஏற்பாடு பண்ணிட்டீங்க. ஒரு நல்ல அப்பாவா எல்லாத்தையும் அவங்களுக்காகப் பண்ணிருக்கீங்க. ஆனா, ஒரு விஷயம் தான் எனக்குப் புரியல. இதுக்கெல்லாம் ஏது மூலதனம்.?” என்றான்.

அவன் அப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்காதவர், “அதென்ன தம்பி அப்படிக் கேட்டுட்டீங்க.? என்னோட உழைப்பு தான் மூலதனம். அதனால தான் இந்த அளவுக்கு வந்திருக்கோம். என்னோட கஷ்டம் என் பசங்களுக்கும் வந்திடக் கூடாதுன்னு தான் அவங்கள்ல ஒருத்தனுக்கு போலீஸ் வேலையும், வட்டிக்கு கடன் கொடுக்கற பிஸினஸையும் பண்ணிக்கொடுத்தேன்.” என்றார் பெருமிதமாக.

“ஓ.. நீங்க அப்படி சொல்றீங்க. ஆனா, நான் விசாரிச்சதுல, நீங்க ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்ததாகவும், அதுக்கப்பறம் திடீர்னு இந்த மூணு வருஷத்துல தான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கறதாகவும் கேள்விப்பட்டேனே.? அது உண்மையா, பொய்யா.?” என்றான் அமுதன்.

அவரோ எதுவும் பேசாமல் திருதிருவென்று விழித்தார். உடனே வீரபத்திரன் எழுந்தார். “யுவரானர், இந்தக் கேஸூக்கு எந்த சம்பந்தமும் இல்லாத இவரைக் கூட்டிட்டு வந்து எதுக்கு அமுதன் டைம் வேஸ்ட் பண்றார்ன்னு எனக்குப் புரியல. ஏதாவது பிரயோஜனமான சாட்சியா இருந்தாக் கூட பரவால்ல. எதுவும் சம்பந்தமில்லாத இவரை எதுக்கு விசாரிக்கக் கூப்பிடணும். எல்லாரையும் குழப்பணும். பாவம், முதன்முதலா வாதாடறதால எங்க, எப்படி சாட்சிகளையும், ஆதாரத்தையும் கையாளணும்னு அவருக்குத் தெரியலன்னு நினைக்கிறேன்.” என்றார்.

“அமுதன், வீரபத்திரன் சொல்ற மாதிரி இந்தக் கேஸூக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்.?” என்றார் நீதிபதி.

“இருக்கு யுவரானர். நான் இன்னும் முழுசா யாரையும் விசாரிக்கல. இறுதியில உங்களுக்கே புரியும் நான் எதுக்காக இவங்கள விசாரிக்கணும்னு நினைச்சேன்னு. அடுத்து நான் எஸ்.ஐ யா இருக்கற மிஸ்டர். ராஜாவ விசாரிக்கணும்னு நினைக்கிறேன்.”

“யெஸ் ப்ரொசீட்..” என்று நீதிபதி அனுமதியளிக்க, அந்த எஸ்.ஐ வந்து கூண்டில் நின்றார்.

“வணக்கம் மிஸ்டர். ராஜா. நீங்க ஒரு எஸ்.ஐ. நிறைய கேஸ் விஷயமா பல இடங்களுக்குப் போக வேண்டி வரும், இல்லையா.?” என்று அமுதன் கேட்டதற்க்கு, “ஆமா..” என்று தலையாட்டினார்.

“கரெக்ட்.. அப்போ, மே மாசம் 16 அன்னைக்கு, அதாவது வளையாபதியோட அப்பா, அம்மா தற்கொலை பண்ணிக்கிட்ட நைட், நீங்க உங்க ஸ்டேஷன்ல முக்கியமான ஒரு கேஸ் வந்தப்போ கூட அங்க இல்லாம நீங்க எங்க போனீங்க.? ஏன்னா, அடுத்த நாள் அவங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டதும் முதல் ஆளா அங்க நீங்க, உங்க தம்பி, அப்பா எல்லாருமே அங்கே இருந்ததா எனக்குத் தெரிய வந்துச்சு. அதனால தான் கேட்டேன்.” என்றான் அமுதன்.

அவன் இப்படிக் கேட்பான் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. “நான் ஒரு முக்கியமான விஷயமா பொள்ளாச்சிக்கு வந்திருந்தேன். வேலை முடிக்கவே எனக்கு ரொம்ப டைம் ஆயிடுச்சு. அதனால, அங்கேயே தங்கிட்டு அடுத்த நாள் போகலாம்னு இருந்தேன். அதுக்கப்பறம் தான் வளையாபதியோட அப்பா, அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டு அங்கே போனேன்.” என்றார் அவர்.

“ஓ.. சரி. நீங்க போகலாம்.” என்று அவன் மனதிற்குள் எதையோ நினைத்தவாறே சொன்னான். அடுத்து அவன் விசாரிக்கக் கேட்டது, கந்துவட்டி கந்தன். மாரிமுத்துவின் இளைய மகன். அவர் கூண்டில் வந்து நின்றதும்,

“சொல்லுங்க மிஸ்டர். கந்தன். கந்துவட்டி பிஸினெஸ்ஸெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு.? எல்லார்கிட்டயும் கடன வசூல் பண்ணிடறீங்களா.?” என்றான் அமுதன்.

“ஆமா, சார். பின்ன, எல்லாரும் சிரிச்சுக்கிட்டே பணத்தை மட்டும் வாங்கிக்கிடுறாங்க. மாசமானா வட்டியைக் கொடுக்கறதுக்கு கசக்குது. கொஞ்சம் கறாரா இருந்தாதான் வசூல் பண்ண முடியுது.” என்றார் சலித்துக்கொண்டே.

“ஹூம்ம்.. ஆமா நீங்க கறாரா இருந்தாதான் உங்க பணத்த வசூல் பண்ண முடியும். ஆனா, நீங்க திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டாதான் கொலையே பண்ணிடுவீங்க. இல்ல.?” என்று கேட்டதும், அவர் அதிர்ச்சியானார்.

“சார், என்ன இப்படியெல்லாம் பேசறீங்க. நான் யார்கிட்டயும் பணம் வாங்கலையே.?” என்றார்.

“ஹூம்ம்.. நீங்க வாங்கல. உங்க ரெண்டு பேருக்காகவும் உங்க அப்பா வாங்கிருக்காரு. அதுவும் வளையாபதியோட அப்பாகிட்ட. அவர் அந்தப் பணத்த திருப்பிக் கேட்டிருக்கார். அதைத் தர முடியாதுன்னு சொல்லி அவர் திமிரா பேசிருக்கார். அவரும் இதுக்காக கோர்ட், கேஸூன்னு போவேன்னு மிரட்டிருக்கார். அதனால தான் கோபத்துல நீங்களும், உங்க அப்பா, அண்ணா அப்பறம் ராமைய்யா எல்லாரும் சேர்ந்து வளையாபதியோட அப்பா, அம்மாவக் கொன்னுட்டீங்க. கொலைய தற்கொலையா மாத்தியிருக்கீங்க.” என்று ஆவேசமாய் அமுதன் கத்த,

“இல்ல, இல்லங்க. இவர் சொல்றது பொய். எங்களுக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. மங்கலம் எங்களோட அக்கா. ராமைய்யா எங்களோட மாமா. அவ்ளோதான். மத்தபடி எங்களுக்கும் வளையாபதியோட அப்பா, அம்மாவுக்கு எந்த சம்பந்தமும் இல்ல.” என்று கந்தன் சற்று பதட்டமாய்ப் பேசினான்.

வீரபத்திரனே அமுதனின் பேச்சில் சற்று ஆடித்தான் போனார். இருந்தாலும், தான் ஏதாவது இந்த இடத்தில் பேசித்தான் ஆக வேண்டும் என்று எழுந்தார்.

“யுவரானர் இந்தக் கேஸ்ல நான் முதல்ல இருந்தே சொல்லிட்டிருக்கேன். அமுதன் தேவையில்லாம கேஸ்ல சில சாட்சிகள விசாரிக்கணும்னு நினைச்சார். இப்போ, என்னடான்னா திடீர்னு அவங்களும், என்னோட கிளையண்ட் மிஸ்டர். ராமைய்யாவும் சேர்ந்து தான் இந்தக் கொலைய பண்ணிருக்காங்கன்னு சொல்றார். இன்னும், யாரையெல்லாம் இந்தக் கேஸ்ல இன்வால்வ் பண்ணி அவங்க மேலயும் கொலைப் பழியப் போடுவாருன்னு தெரியல. இது ஏதோ இவர் நினைக்கற மாதிரி திருடன், போலீஸ் விளையாட்டுன்னு நினைச்சிட்டார். இது யாருமே சம்பந்தப்படாத தற்கொலை கேஸ். இதைத் தேவையில்லாம எடுத்து, என்னோட டைம், உங்க டைம் இதெல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிட்டிருக்கார் மிஸ்டர். அமுதன். அப்படி இவர் சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு யுவரானர்.?” என்று கேட்க,

“அமுதன், எதை வைச்சு நீங்க இதெல்லாத்தையும் சொல்றீங்க. இதுக்கு எல்லாம் என்ன ஆதாரம்.?” என்றார் நீதிபதி.

“இருக்கு யுவரானர். அதுக்கு முன்னாடி நான் பேச்சியம்மாளை விசாரிக்கணும்னு நினைக்கிறேன்.” என்று அவன் அப்பொழுதும் எதுவும் சொல்லாமல் நீதிபதியைக் கேட்கவே, இவன் எதன் அடிப்படையில் அனைத்தையும் சொல்கிறான் என்ற குழப்பத்தினிடையே அவர் “யெஸ்..” என்றார்.

பேச்சியம்மாள் சற்று பயந்தபடியே வந்து கூண்டில் நின்றார். கூண்டில் ஏறியதும் பயத்துடன் தன் கணவரைப் பார்த்தார். அவரோ தன் உருட்டைக் கண்களால் ஏதோ சைகையில் சொல்ல அவர் திரும்பினார். அந்த நேரம் அமுதன் அவரைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவர் தயங்கியபடியே அவனைப் பார்த்தார்.

“சொல்லுங்க பேச்சியம்மாள். நீங்க என்ன சொல்றீங்க.? இந்தக் கேஸூக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னா.?” என்று அமுதன் கேட்க,

“ஆமாங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீங்க இங்க வரணும்னு என் பையன் சொன்னான். அதுக்குத் தான் வந்தேன்.” என்றார் அப்பாவியாய்.

“ஆனா, நான் அதைக் கேட்கறதுக்காக உங்கள இங்க கூப்பிடல. எனக்கு இன்னொரு விஷயம் கேட்கணும் உங்ககிட்ட.” என்றான்.

அவரோ முழித்துக்கொண்டே நிற்க. அமுதன், “நீங்களும், உங்க அக்காவும் இந்த ஜமீன் பரம்பரையச் சேர்ந்தவங்களா.?” என்றான்.

“ஆமாங்க.” என்றார் அவர்.

“நிச்சயமா.? உண்மையைத்தான் சொல்றீங்களா.?” என்றான்.

அவரும், ஆமாம் என்றே தலையாட்டினார். “அதாவது உங்க அக்கா வளையாபதியோட பாட்டின்னு சொல்றீங்க.?” என்றான்.

“ஆமா..” என்றார்.

“பொய். நீங்க சொல்றது எல்லாமே பொய். உங்களுக்கும் அவங்களுக்கும் ஏணி வைச்சாக் கூட எட்டாது. உங்களைப் பெத்தவங்க வேலையாட்களா வளையாபதியோட ஜமீன்ல நுழைஞ்சு அவரோட தாத்தாவ உங்க அக்கா மூலமா மயக்கி, அவரைத் திருமணம் செய்ய வைச்சிருக்காங்க. ஆனா, அவருக்கு ஏற்கனவே இன்னொரு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவங்களோட திருமணம் ஆகி இருந்தது. அவங்களுக்குப் பிறந்தவர் தான் வளையாபதியோட அப்பா, ரத்தினவேல். அவருக்கு அதற்க்குப் பிறகு ஒரு தங்கை பிறந்தார். ஆனால், அவருடைய அம்மாவிற்கு அல்ல. அவரை மயக்கிய இரண்டாம் மனைவியான இவரின் அக்கா மணியம்மாளுக்கு. அவர் தான் மங்கலம். ஆனால், இந்த ரகசியம் அந்த ஜமீன் பரம்பரைக்கு மட்டுமே தெரியும். ஏன்னா, ஒரு ஜமீந்தார் இது போல் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் என்றாலோ, இல்லை குழந்தை பிறந்தது என்றாலோ அது அவர்களுக்கு கவுரக் குறைச்சலாக மாறி விடும். தங்கள் பரம்பரையை யாரும் மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில், அப்படி ஒரு விஷயமே நடக்காத படி மறைத்து விட்டார்கள். ரத்தினவேலின் அம்மாவோ, மங்கலத்தை தன் குழந்தை தான் என்று சொன்னது மட்டுமல்லாமல் அவரைப் பெற்ற பிள்ளை போலவே வளர்த்தார். ஆனால், நாளடைவில் அவருடைய அம்மா வீட்டிற்க்கு அது சரியாகப் படவில்லை. என்ன இருந்தாலும், அவள் உன் அம்மா இல்லை என்றே சொல்லி வளர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் தன் அம்மாவும் இறந்துவிட, தனது சித்தியின் ஞாபகம் அவரை விடவில்லை. அவரது வீட்டிற்க்குச் செல்லும் போதெல்லாம் பேச்சியம்மாள் அவரது ஏழ்மை நிலையைச் சொல்லி சொல்லி ரத்தினவேலிடம் இருந்து பணத்தை வாங்கி வரும்படி மங்கலத்திடம் சொல்லியிருக்கிறார். மங்கலமும், அதையே செய்திருக்கிறார். ஊதாரியான மாரிமுத்து அந்தப் பணத்தை குடித்தே அழித்துள்ளார். பிள்ளைகள் பெரிதாக ஆனதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அலைமோத, ரத்தினவேலிடம் திருப்பித் தருவதாகச் சொல்லி அவரிடம் கிட்டத்தட்ட பதினைந்து லட்சத்தை வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் உடனடியாக வட்டியைத் திருப்பிக் கொடுத்தவர் அதன் பிறகு மெல்ல மெல்ல அதைத் தராமல் விட்டிருக்கிறார். மாதங்கள் வருடங்கள் ஆக, அதை மங்கலத்திடம் கேட்டுள்ளார் ரத்தினவேல். ஆனால், இவர்களுக்குத் திருப்பித் தரும் எண்ணம் இருந்தால் தானே தருவார்கள். அதை முடியாது என்றே சொல்லிவிட்டனர். அதுவே அவருக்குப் பெரிய சங்கடம். அடுத்து தன் தங்கை விரும்பியவரான ராமைய்யாவையே திருமணம் செய்து வைத்தார் ரத்தினவேல். ஆனால், ராமைய்யாவோ பேராசைக்காரர். எப்படியாவது இந்த மொத்த சொத்தையும் அபகரிக்கும் திட்டம். மங்கலத்தின் மூலமாக ஜமீன் இத்தனை வருடங்கள் காத்து வந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டார் ராமைய்யா. இதுதான் வாய்ப்பு என்று, ரத்தினவேலிடம் அவரது ஜமீன் ரகசியத்தைக் கூறிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். பலமுறை பயந்த ரத்தினவேல், இந்த முறை பயப்படவில்லை. சொத்தைத் தரவில்லை என்ற கோபத்தில் இவர்களை முதலில் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று எத்தனையோ நாட்கள் நினைத்திருக்கிறார். முடியவில்லை. அதற்க்குள் தன் உயிருக்கு என்றைக்கிருந்தாலும் ஆபத்து உண்டு என்பதையறிந்த ரத்தினவேல் தனது பால்ய நண்பரான வழக்கறிஞர் திரு. செங்குட்டுவனை நாடி அனைத்து சொத்தையும் தனது பிள்ளைகளான, வளையாபதிக்கும், தேன்மொழிக்கும் மாற்றி உயிலை எழுதியுள்ளார். அது நடந்த சில தினங்களிலேயே ராமைய்யாவுக்கு இந்த உண்மை தெரிந்துள்ளது. இவர்களால் இனி எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்தவர், மாரிமுத்து மற்றும் அவர்களது மகன்களின் உதவியுடன் ரத்தினவேல் மற்றும் அவரது மனைவியை தற்கொலை வடிவில் கொலை செய்துள்ளார். இது மங்கலத்திற்க்கும், பேச்சியம்மாளிற்க்கும் நன்றாகவே தெரியும்.” என்று தன் நீண்ட உரையைக் கூறி முடித்தான் அமுதன்.

வீரபத்திரனுக்கு ஆச்சர்யம். இவன் எப்படி இத்தனை ஆதாரங்களைத் தேடினான்.? விட்டால் இன்றே இவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவான் என்று நினைத்தவர்,

“அப்ஜெக்‌ஷன் யுவரானர். அமுதன் ஏதோ படத்திற்க்காக கதை எழுதுகிறார் என்று நினைக்கிறேன். ஏதோ அவரே நேரில் அனைத்தையும் கண்டதைப் போல் எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் எப்படி இத்தனை ஆணித்தரமாக அனைத்தையும் கூறுகிறார் என்றுதான் தெரியவில்லை. ராமைய்யாவுக்கும், இவர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த சாட்சிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். வேண்டுமென்றே இந்த வழக்கை திசை திருப்ப அமுதன் போட்டிருக்கும் திட்டம் தான் இது யுவரானர். இது வெறும் தற்கொலை தான். இது எந்த விதத்திலும் கொலையாக இருக்க முடியாது. ஏனென்றால் பிரேதப் பரிசோதனையிலும், இது முழுக்க முழுக்க தற்கொலை தான் என்று ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. கைரேகைகளும், அவர்கள் இருவருடையது மட்டுமே என்று உள்ளது. இதற்க்கு மேல் இந்த வழக்கில் என்ன ஆதாரம் வேண்டும் யுவரானர். என்று வீரபத்திரன் தன் தரப்பு வாதத்தை முன் வைக்க,

“மிஸ்டர். அமுதன், இந்த வழக்கில் நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால் அதை நேரில் பார்த்த சாட்சி, அல்லது வேறு ஏதேனும் ஆதாரம் போன்றவற்றை நீங்கள் எங்களுக்குக் காட்ட வேண்டும். ஏனென்றால் வீரபத்திரன் சொல்வதைப் போல், இது தற்கொலை தான் என்பதற்க்கான அனைத்து ஆதாரங்களும் ராமைய்யாவின் தரப்பில் உள்ளது.” என்றார் நீதிபதி.

“எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் நான் இதைச் சொல்ல மாட்டேன் யுவரானர்.” என்றான் அமுதன்.

“சரி, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு அதைப் பற்றி பேசுவோம்.” என்று நீதிபதி எழுந்தார்.

வீரபத்திரன் அமுதனையே முறைத்தார். அவனோ செய்கையாலேயே தன் கையை கழுத்துக்கு அருகே உயர்த்தி, “நீங்கள் அனைவரும் அவ்வளவுதான்.” என்பதைப் போல செய்கை காட்டினான்.

அதுவே அவருக்கு ஒரு மாதிரியானது. எந்த ஒரு ஆதாரத்தை மிக உறுதியாய் வைத்துக்கொண்டு இவன் இத்தனை ஆட்டம் ஆடுகிறான் என்று எண்ணினான். அதே போல், இத்தனை குறுகிய காலத்தில் இவன் எப்படி இத்தனை விவரங்களை சேகரிக்க முடியும்.? என்றும் நினைத்தார் வீரபத்திரன்.

தனது தோல்வி, ராமைய்யா என்கிற ஒரு முட்டாளால் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதோ என்று நினைத்தவர், அதை ஏற்றுக்கொள்ள முடியாதவராய் வேகமாய்ச் சென்றார்.

(தொடரும்...)

வார்த்தைகளின் எண்ணிக்கை : 1437

உங்களின் விமர்சனங்களை கமெண்ட்ஸ் லிங்கில் பதிவிடவும் நட்புக்களே...

 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 33

அமுதனின் அதிரடி ஆதாரங்களால் திக்கற்றுப் போயிருந்தார் வீரபத்திரன். சில நிமிடங்கள் ராமைய்யாவுக்கு நல்ல அர்ச்சனைகள் அவரிடமிருந்து விழுந்துகொண்டிருந்தன.

“ஏய்யா. அவனால எந்த சாட்சிகளையும் கொண்டு எதுவும் பண்ண முடியாதுன்னு ஆணவமா பேசினியே.? இப்போ என்னாச்சு.? அவன் கிட்டத்தட்ட நம்மள நெருங்கிட்டான். எந்த உண்மையையும் யார்கிட்ட இருந்தும் கறக்க முடியாதுன்னு நானும் நினைச்சா, இப்போ அந்தப் பொடிப் பையன் என்னை மாதிரி எல்லார்கிட்ட இருந்தும் எப்படி அவங்க வாயாலயே உண்மையை வரவைக்கறதுன்னு எல்லா வித்தையையும் கத்துட்டு வந்து எப்படி கேள்வி கேட்கிறான் பாரு.? நானே ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன். ஆனா, இதை இப்படியே விட்டா இன்னும் அவன் என்னெல்லாம் சொல்வானோ.? இப்போ வரைக்கும் எந்த சாட்சி, ஆதாரத்த அடிப்படையா வைச்சு அவன் பேசிட்டு இருக்கான்னு தெரியல. அவன் கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணப்போற சாட்சிகள் எல்லாரையுமே விசாரிச்சாச்சு. ஆனா, அவங்கள வைச்சு இவன் என்ன கணக்குப் போட்டிருக்கான்னு தான் இன்னும் எனக்கு புரியவே இல்ல. எல்லாம் உன்னால தான். ஏண்டா இந்தக் கேஸ் எடுத்தோம்னு இருக்கு. உன்னால தான்யா இன்னைக்கு என்னோட மானமே போகுது. இதுல அந்த ஜட்ஜூம் வேற அவனுக்கே எப்பவும் ஆர்கியூ பண்ற சான்ஸ் தராரு. என் நேரமே சரியில்ல.” என்று எல்லாவற்றையும் இழுத்து வைத்து புலம்பிக்கொண்டிருந்தார் வீரபத்திரன்.

தொண்டையில் சாப்பாடு கூட இறங்கவில்லை அவருக்கு. தனது தோல்வி முடிவாகிவிட்டதோ என்று தோன்றிய பயத்தை அடக்கிக்கொண்டு சாப்பிட்டு முடித்தார்.

மதிய உணவு வேளை முடிந்து அனைவரும் திரும்பவும் ஆஜராகி இருந்தனர். இப்போதும் அமுதனைப் பார்த்தபடி நீதிபதி கேட்டார்.

“சொல்லுங்க அமுதன், நீங்க எதன் அடிப்படைல இத்தனை விஷயங்களை உண்மைன்னு சொல்றீங்க.? அதுக்கான தக்க ஆதாரங்களை நீங்க இன்னும் வெளிப்படையா சொல்லல.” என்றார்.

“கண்டிப்பா இப்போ சொல்றேன் யுவரானர். அதுக்கு முன்னாடி நான் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராமைய்யாவை திரும்பவும் விசாரிக்க வேண்டும்.” என்றான்.

“யெஸ்.” என்றார் நீதிபதி.

ராமைய்யா வந்து நிற்க, அமுதன் அவரைப் பார்வையால் எரித்து விடுவதைப் போல் பார்த்தபடி ஆரம்பித்தான்.

“ராமைய்யா, உங்களுக்குப் பிறந்தது ஒரே பையனா.? இல்ல வேறு குழந்தைகள் இருக்காங்களா.?” என்றான் சந்தேகப் பார்வையோடு.

“என்ன இப்படி சந்தேகமா கேட்டுட்டீங்க, எனக்கு ஒத்த புள்ள தான். அவனையும் இப்போ பறிகொடுத்துட்டு வந்து நிற்கறேன்.” என்று தழுதழுத்தபடி பேசினார்.

“பறிகொடுத்துட்டு நிக்கறீங்களா.? இல்ல, பலிகொடுத்துட்டு நிக்கறீங்களா.?” என்று அமுதன் கேட்க, ராமைய்யா அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தார்.

அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு நீதிபதியிடம் திரும்பியவன், “ராமைய்யா சொல்றது அப்பட்டமான பொய் யுவரானர். ஏன்னா, அவருடைய குழந்தை பிறந்த உடனேயே இறந்து போயிடுச்சு. இந்த உண்மை ராமைய்யாவுக்கும், வளையாபதியின் அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். மங்கலத்துக்குக் கூட இந்த விஷயம் தெரியாது.” என்று அமுதன் சொல்லிக்கொண்டிருந்த போதே மங்கலம் அதிர்ச்சியாய் கூண்டில் நின்று கொண்டிருந்த ராமைய்யாவைப் பார்த்தார். அவரின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தார் ராமைய்யா.

“இந்த விஷயம் தெரிந்தால் தன் தங்கைக்கு என்னாகுமோன்னு நினைச்ச வளையாபதியோட அப்பா, அதே மருத்துவமனையில் அன்னைக்கே பிறந்த வேறொருவரின் குழந்தையை, லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி தன் தங்கைகிட்ட இதுதான் உன்னோட குழந்தைன்னு சொல்லிட்டார். அந்தக் குழந்தை தான் இறந்து போன இவங்களோட பையன்னு சொல்லப்படற ராமு என்கிற ராமலிங்கம். அவரைப் பெத்தவங்க யாருன்னு வளையாபதியோட அப்பாவுக்கு மட்டும் தான் தெரியுமே தவிர, அவங்களை ராமைய்யா கூட பார்த்தது கிடையாது. அது தெரியாம இருக்கறதே நல்லதுன்னு நினைச்சார். என்னதான் பணம் வாங்கினாலும், ஒரு நாள் இல்ல ஒரு நாள் பெத்த மனசு பிள்ளையைப் பார்த்தா ஏங்கும் தானே, அப்படித்தான் ராமுவோட நிஜ பெற்றோர்கள் அப்பப்போ மறைவா இருந்து ராமுவ அங்கங்க பார்த்துக்குவாங்க. அவர் இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டதும் தாங்க முடியாம அழுதாங்க. ஆனா, அது தற்கொலை இல்ல கொலைன்னு நாங்க போட்ட கேஸத் தெரிஞ்சுக்கிட்டு என்னை வந்து பார்த்தாங்க. அதோ அங்க உட்கார்ந்திருக்காங்களே அவங்க தான் அவரோட உண்மையான பெற்றோர். அதுக்கான தக்க ஆதாரங்கள் இதோ.” என்று அமுதன் நீதிபதியிடம் ஒரு பேப்பரை நீட்டினான்.

அது ஒரு மெடிக்கல் ரிப்போர்ட். அவர்களிடம் பேசியபடி அழுதுகொண்டிருந்தார் மங்கலம். அதே சமயம் ராமைய்யாவின் மீது கோபமும் இருக்க, அவரை முறைத்தபடி பார்த்தார்.

“சரி யுவரானர். இவர் சொல்ற மாதிரி ராமு அவங்க பையன் இல்லைன்னாலும், இப்போ எதுக்கு இதைப் பத்தி அவர் சொல்லணும்.? அவரும் இப்போ உயிரோட இல்ல. சொல்லப்போனா, இந்தக் கேஸ்ல வளையாபதியோட அப்பா, அம்மா கொலை செய்யப்பட்டிருக்காங்கன்னு சொன்னவர், இப்போ என்னடான்னா தேவையில்லாத ஏதேதோ விஷயங்களைக் கொண்டு வந்து நுழைச்சுட்டு இருக்கார். முன்பே இது போல நிறைய விஷயங்களை சொன்ன அமுதன் இப்போ வரைக்கும் வெறும் வாய்ச்சவடாவில் தான் இருக்காரே தவிர எந்த ஒரு சாட்சியையும் காட்டவில்லை. தேவையில்லாத நேரத்தை வீணடிக்கும் நோக்கோடு இந்தக் கேஸ் போய்க்கொண்டிருப்பதாக நினைக்கிறேன் யுவரானர்.” என்று பெருமையாய்த் தன் வாதத்தை முன் வைத்தார் வீரபத்திரன்.

“அமுதன். நீங்க இன்னமும் எந்த சாட்சியையும் இங்க காட்டல. ஆனா, விஷயங்களை விளக்கறதால மட்டும் அனைத்தையும் உண்மைன்னு எடுத்துக்க முடியாது.” என்றார் நீதிபதி.

“ஆமாம் யுவரானர். ஆனால், எல்லாத்துக்கும் முன்னால் இன்னொரு விஷயத்தையும் நான் சொல்லணும்னு நினைக்கிறேன். ராமுவும் தற்கொலை பண்ணிக்கிட்டதா தான் எல்லாரும் சொல்றாங்க. ஆனா, எனக்கு என்ன சந்தேகம்னா, வளையாபதியோட அப்பா, அம்மா தற்கொலை பண்ணது மாதிரியே அதே ரூம்ல, அதே மாதிரி தற்கொலை பண்ணிக்கிட்டது தான் என்னை சந்தேகத்தோட உச்சிக்கே போக வைச்சது. அதைப் பத்தி ஆராய்ச்சி பண்ணப்போ தான் இன்னொரு முக்கியமான விஷயம் தெரிய வந்தது. தேன்மொழியை நல்ல ஒரு தோழி போல பார்த்த ராமு அவரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல. ஆனா, ஏதேதோ காரணம் சொல்லி எப்படியோ இருவருக்கும் கல்யாணம் முடிச்சாங்க. ஆனா, அதுக்கு முன்னாடியே ராமுவுக்கு இவங்களோட கொலை விஷயம் எப்படியோ தெரிஞ்சிருக்கு. அதனால எங்க அவர் இந்த விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லிடுவாரோன்னு பயத்துல அவரையும் தற்கொலைங்கற பேர்ல கொலை பண்ணிருக்காங்க. இந்த இடத்துல என்ன ஒரு விஷயத்தைப் பார்க்கணும்னா, என்ன இருந்தாலும் ராமு தன்னோட பையன் இல்லைங்கற எண்ணம் ராமைய்யாவோட அடி மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு. இந்த சொத்த எப்படியாவது அவங்களுக்கு சாதகமா வர அவர தேன்மொழிக்கு கல்யாணம் பண்ணி வைச்சு எல்லாத்தையும் அபகரிக்கணும்னு திட்டம் தீட்டினாங்க. ஆனா, அதுக்கப்பறம் என்ன நடந்ததோ கல்யாணம் ஆன நைட்டே அவரும் கொலை செய்யப்பட்டிருக்கார்ன்னு எனக்கு ஒரு சந்தேகம் அடிமனசுல இருந்திட்டிருக்கு.” என்று அமுதன் சொல்ல,

“இல்லைங்க. இது பொய். இவர் சொல்றதெல்லாம் உண்மையில்லைங்க.” என்று ராமைய்யா உடல் முழுதும் வேர்த்து பதட்டப்பட்டவாறு சொல்ல,

“உண்மை என்னன்னு நான் சொல்றேங்கய்யா” என்றவாறே எழுந்து நின்றார் மங்கலம்.

அவர் அப்படிச் சொன்னதும், ராமைய்யாவின் பதட்டம் இன்னும் அதிகமானது. வேண்டாம் என்றவாறு சைகையில் அவரை மிரட்டினார். ஆனால், அதற்க்கெல்லாம் அசராமல் நின்றார் மங்கலம்.

அதே போல், மறுபக்கம் வீரபத்திரனும் அதிர்ச்சியுடனும், பதபதைப்புடனும் உட்கார்ந்திருந்தார். இது என்ன ஒரு புது குழப்பம் என்றவாறே அந்த நீதிமன்றத்தில் ஒரு சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

“நீங்க எதை சொல்றதா இருந்தாலும், இந்தக் கூண்டுல வந்து சொல்லுங்க மா.” என்றார் நீதிபதி.

அவர் சொன்னதும் வந்து நின்றார் மங்கலம்.

“முதல்ல என்னை மன்னிச்சிடுங்க அய்யா. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். யாரை நம்பணுமோ அவங்களை நம்பாம இத்தனை நாளா இந்த ஆள் பண்ண அயோக்கியத்தனத்துக்கு கூட உடந்தையா இருந்துட்டேன். குழந்தை இறந்தது தெரிஞ்சா நான் தாங்க மாட்டேன்னு தெரிஞ்சு தான் என்னோட அண்ணன் எனக்கு எவ்ளோ பெரிய விஷயத்தைப் பண்ணிருக்காரு. யாருக்கோ மாசா மாசம் பணம் அனுப்பறாரு. உன்னோட சொத்த எல்லாத்தையும் அவர் வேற யாருக்கோ தாரை வார்த்துக் கொடுக்கறாருன்னு இந்த ஆள் தான் என்கிட்ட தப்பு தப்பா சொல்லி என் மனச அப்படியே மாத்திட்டாரு. ஆனா, இப்போ கொஞ்சம் முன்னாடி தான், என் பையனை உண்மையாலுமே பெத்தவங்க என் முன்னாடி வந்து என்னைக்குமே நின்னுடக் கூடாதுன்னு தான் என்னோட அண்ணா இவங்களுக்குப் பணம் அனுப்பிருக்காருன்னு அவங்க சொல்லித் தெரிஞ்சுக்கிட்டேன். அதே மாதிரி, என்னோட அண்ணனையும், அண்ணியையும் சொத்துக்காக கொலை பண்ணத் திட்டம் போட்டதும் இந்த ஆள் தான். ரொம்ப வருஷமா என்னோட மனசுல விஷத்த விதைச்சதுல என்னோட மூளையும் மழுங்கிப் போச்சு. என்ன இருந்தாலும் என்னோட கூடப் பிறந்த அண்ணா இல்லையேன்னு அதுக்கும் தலையாட்டினேன். சொத்து எல்லாத்தையும் அவரோட பசங்க பேருக்கே மாத்திட்டாரு, இனிமேல் நமக்கு எந்த வழியும் இல்ல, நாம நடுரோட்டுல தான் நிக்கணும்னு சொல்லி தான் இந்தக் கொலைய தற்கொலை மாதிரி மாத்திட்டாங்க. அதுக்கு உடந்தையா என்னோட சித்தப்பா மாரிமுத்து, அவங்க பசங்க ராஜா, கந்தன் எல்லாத்தையும் கூட்டு சேர்த்துக்கிட்டாரு. ஏன்னா, அவங்க என்னோட அண்ணன்கிட்ட தரவேண்டிய பணத்தை அவர் திருப்பிக் கேட்கக் கூடாதுங்கற எண்ணத்துல அவங்களும் இதுக்கு சம்மதிச்சாங்க. அன்னைக்கு ராத்திரி எப்பவும் போல அண்ணாவும், அண்ணியும் பால்ல தூக்க மாத்திரை போட்டு குடிச்சிட்டுப் படுத்தாங்க. அவங்க ரெண்டு பேருமே தூக்க மாத்திரை போடலன்னா தூக்கம் வராது. ஆனா, எப்பவும் ஒரு மாத்திரை தான் போட்டுக்குவாங்க. அவங்க குடிக்கறதுக்கு முன்னாடியே அதுல நான் இன்னும் நாலு சேர்த்துப் போட்டுட்டேன். அதனால அவங்களால எழுந்திரிக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான் போட்டோம். அவங்க நல்லா தூங்கினதுக்கப்பறம் எங்க சித்தப்பாவும், அவரோட பசங்களும் இவரும் கையுறை எல்லாம் போட்டுக்கிட்டு, ஒரு பெரிய தூக்கு கயிற வைச்சு, காத்தாடி மேல போட்டு ஒருத்தர் கயிற அவங்க கழுத்துல மாட்ட, இன்னொருத்தர் அந்தக் கயிற மேல புடிச்சு இழுத்து அந்த இடத்துலயே அவங்க ரெண்டு பேரும் தூக்குல துடிதுடிக்க செத்தாங்க. அவங்க தற்கொலை பண்ணிக்கிட்ட மாதிரி இருக்க, ராஜா தான் அவங்க கைரேகைய கயிறுலயும், அப்பறம் அவங்க ரெண்டு பேரும் ஏறின மாதிரி ஒரு நாற்காலியையும் வைச்சான். அதனால, இது யாருக்குமே கொலைன்னே தெரியாதுன்னும் சொன்னான். ஆனா, இந்த விஷயம் எப்படியோ என் பையனுக்குத் தெரிஞ்சு தான் அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அதுக்கப்பறம் எங்கள உண்மைய வளையாபதிகிட்டயும், தேன்மொழிகிட்டயும் சொன்னாத்தான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்னு சொன்னான். இவரும், நீ முதல்ல கல்யாணம் பண்ணு அடுத்த நிமிஷமே சொல்லிடறேன்னு சொல்லி சமாளிச்சுட்டார். ஆனா, அவர் கல்யாணம் முடிஞ்சு சொல்லலன்னு தெரிஞ்சதும் அவனுக்கு கோபம் வந்து நானே எல்லார்கிட்டயும் உண்மைய சொல்லப் போறேன்னு சொல்லிட்டிருந்தான். நான் தான் அப்படியெல்லாம் சொல்லாத டான்னு சமாதானம் பண்ணி வைச்சிருந்தேன். அதுக்கப்பறம் அண்ணா, அண்ணியோட ரூம்ல அவன அதே மாதிரி தூக்குல தொங்குனதப் பார்த்ததும், என்னோட இதயமே சுக்கு நூறா வெடிச்சிடுச்சு. அப்போ கூட, இந்த ஆளு நம்ம பையன் நாம உண்மைய சொல்லலன்னு தான் பழிவாங்க அதே மாதிரி தற்கொலை பண்ணிக்கிட்டான்னு சொல்லி என்னை சமாளிச்சார். ஆனா, இப்போ தான் எனக்கு இந்தத் தம்பி சொன்ன மாதிரி அவனையும் கொலை பண்ணிட்டாங்கன்னு தெரியுது. என்னோட பாவத்துக்கு சரியான தண்டனைய கடவுள் தந்துட்டாருன்னு என் பையன் செத்தப்பவே நினைச்சேன். ஆனா, இந்த ஆள் அப்போ கூட அதை, இதையும் சொல்லி என் மனச மாத்தி சொத்த பறிக்கறதுல தான் நம்ம குறிக்கோள் இருக்கணும்னு சொல்லி சொல்லியே அந்தப் பிள்ளைங்க ரெண்டு பேரையும் கொடுமைப்படுத்த சொன்னாரு. அவருடைய பேச்சக் கேட்டு கேட்டு தான் நான் இப்படி ஆயிட்டேன். ஆனா, இப்போ கூட நான் சொல்லலன்னா என்னோட பையனோட ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காது. என்னோட தப்புக்கு தகுந்த தண்டனைய நான் அனுபவிக்கத் தயாராயிட்டேங்கய்யா. என்னோட உயிரே போனாலும் சரி. இந்தப் பாவிங்களுக்கும் சரியான தண்டனையக் குடுங்க.” என்று அழுதபடி தன் வாக்குமூலத்தை சொல்லி முடித்தார் மங்கலம்.

“தட்ஸ் ஆல் யுவரானர். என்கிட்ட எந்த ஆதாரத்தை அடிப்படையா வைச்சு இதெல்லாம் சொல்றீங்கன்னு கேட்டீங்களே. இந்த ஆதாரங்களை சொன்னா கண்டிப்பா மங்கலம் வாயிலிருந்தே எல்லா உண்மைகளும் வரும்னு என்னோட அஸம்ஷன். அதனால தான், நான் உங்களை காத்திருக்கச் சொன்னேன். இனி, குற்றம் செய்த குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையைத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவரானர்.” என்று அமுதன் பேசி முடித்து அவனுடைய இருக்கையில் அமர்ந்ததும் நீதிபதியே அவனது புத்திசாலித்தனத்தை நினைத்து புன்னகைத்தார்.

வீரபத்திரனோ இந்த வழக்கு அப்படியே தலைகீழாக மாறியதை நினைத்து அதிர்ச்சியானார். அதே போல், அமுதனின் புத்திசாலித்தனத்தால் தன்னுடைய பக்கம் இருப்பவரே உண்மையைத் தானாக சொல்லும்படி செய்தது அவருடைய இத்தனை வருட வழக்குகளில் யாருமே துணிந்து செய்யாத ஒன்று.

தான் செய்த பெரிய முட்டாள்தனம் ராமைய்யாவைப் போன்ற முட்டாளை நம்பி இந்த வழக்கை எடுத்தது. அது இப்போது தனக்கே திரும்பி பெரிய அளவில் சதி செய்துவிட்டதை நினைத்து நொந்து கொண்டார்.

“வீரபத்திரன், மிஸ்டர். வீரபத்திரன்...” நீதிபதி அழைப்பதைக் கூட காதில் கேட்காமல் யோசனையாய் இருந்தவர் சட்டென்று, “யெஸ் யுவரானர்..” என்றார்.

“உங்க சைட்ல இருந்தவங்களே தானா முன்வந்து வாக்குமூலம் கொடுத்துட்டாங்க. இதுல உங்க கேள்விகள் எதுவும் இருக்கா.?” என்று கேட்க,

“இல்லை யுவரானர்.” என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டு நொந்தவராய் அப்படியே இருக்கையில் அமர்ந்தார் வீரபத்திரன். வேறு என்ன சொல்ல முடியும். வழக்கை ஒரே நிமிடத்தில் முடித்து விட்டான் அமுதன். இதற்க்கு மேல் கேட்பதற்க்கு என்ன கேள்விகள் இருக்க முடியும்.?

“அமுதனின் ஆதாரங்களின் அடிப்படையிலும், திருப்புமுனையாய் மங்கலத்தின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் இந்த வழக்கில் இருந்து வளையாபதியின் பெற்றோர் மற்றும் ராமு தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது ஊர்ஜிதமாகிறது. இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்த முக்கியக் குற்றவாளி ராமைய்யாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், மாரிமுத்து, அவரது மகன்கள் ராஜா, கந்தன் ஆகியோருக்கு இருபது ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மங்கலம், பேச்சியம்மாள் ஆகியோருக்கு ஏழு வருட சிறை தண்டனையும் விதித்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மங்கலம் தானாகவே முன் வந்து இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாலேயே அவருக்குத் தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது. உறவுகளின் மதிப்பு தெரியாமல் இது போல் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடும் ராமைய்யாவைப் போன்றோருக்கு இதுவே தக்க பாடமாக இருக்கட்டும்.” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அவர் சொல்லி முடித்த நிமிடம் அந்த நீதிமன்றமே கைத்தட்டலால் அதிர்ந்தது. அமுதனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

“டேய்.. அமுதா... சூப்பர் டா. கங்க்ராட்ஸ் மை பாய்.. உன்னோட ஹார்ட் வொர்க் மட்டுமில்ல, அதோட ஸ்மார்ட் வொர்க்கும் சேர்ந்துதான் ஜெயிச்சிருக்கு. உன்னை நீ நிரூபிச்சிட்ட. இனிமேல் உனக்கான இட்த்தை நீ தக்கவைச்சுக்குவ. ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்று அமுதனைக் கட்டிப்பிடித்து பாராட்டிக்கொண்டிருந்தார் செங்குட்டுவன்.

அதே போல், அனைவரின் வாழ்த்து மழை அவனை நனைத்துக் கொண்டிருந்தாலும், அவனின் கவனம் முழுக்க மருத்துவமனையில் இருக்கும் தமிழினி மீதும், வளையாபதி மேலும் தான் இருந்தது. அவர்களைக் காணும் ஆவலில் உடனே கிளம்பியவனின் முன் வந்து நின்றார் வீரபத்திரன்.

அவரால் எதுவும் பேச முடியாவிட்டாலும், “ரொம்ப ஸ்மார்ட்டா எல்லாத்தையும் மடக்கிட்ட. கங்க்ராட்ஸ்.” என்று சொன்னபடி அங்கிருந்து நகர்ந்தார்.

அவரைப் பார்த்துக்கொண்டிருந்தவனிடம், “இதுதான் ஃபர்ஸ்ட் டைம் அவனோட தோல்விய ஒத்துக்கிட்டதும், தான் தப்பு செஞ்சத நினைச்சு ஃபீல் பண்றதும். பேரதிசயம் தான். எல்லாமே உன்னால தான் அமுதா. உன்னை நினைச்சு எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு.” என்று திரும்பவும் செங்குட்டுவன் பாராட்ட,

“சார்.. நாம உடனே ஹாஸ்பிடல் போகணும். நான் போய் தமிழப் பார்க்கணும். இந்தக் கேஸ இன்னைக்கு ஜெயிச்சுட்டுத்தான் அவ முகத்துல முழிப்பேன்னு நான் அவ மேல சத்தியம் செஞ்சிருக்கேன். இப்போ அது நிறைவேறிடுச்சு. கிளம்பலாம் சார்.” என்றபடி செங்குட்டுவனை அழைத்துக்கொண்டு அந்த நீதிமன்றத்தை விட்டு விரைந்தான் அமுதன்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1558

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...





 

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 34

வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட தமிழினியைக் காணப்போகும் ஆவல் தான் அமுதனுக்கு அதிகமாய் இருந்தது. ஏனென்றால், அவளும், அழகேசனும் தான் அமுதனின் சகலமும். இவன் வாழ்வில் அவள் வரவில்லையென்றால் அமுதன் இந்நேரம் உயிரோடு இருந்திருக்கவும் முடியாது, அதே போல் இந்த வெற்றியைக் கண்டிருக்கவும் முடியாது.

முந்தைய நாள் இரவு அவனுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. தமிழினியையும், வளையாபதியையும் மருத்துவமனையில் சேர்த்திருந்த போதுதான், எதேச்சையாய் ராமுவின் பெற்றோரைக் காண முடிந்தது.

தேன்மொழியிடம் பேசிக்கொண்டிருந்தவர்கள், திடீரென அமுதனிடம் வந்தனர். அவன் தான் வளையாபதியின் வழக்கை எடுத்திருக்கும் வக்கீல் என்று தெரிந்துதான் அவனிடம் வந்து அனைத்து உண்மைகளையும் சொன்னார்கள்.

கெட்டதிலும், ஒரு நல்லது போல் அந்த நிமிடம் தான் அவனுக்கு அனைத்து விஷயங்களும் மூளைக்குள் போய் அவனை சிந்திக்க வைத்தது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் யோசனையிலேயே எப்படி இந்த வழக்கை திசை திருப்பி இவர்களை மாட்ட வைக்கலாம் என்றெல்லாம் யோசித்தான்.

அதன் முடிவில் அவனுக்குத் தோன்றிய யோசனைதான் மங்கலம். அதுதான் அவன் யூகத்தின் உச்சம். அவன் யூகித்ததைப் போலவே மங்கலம் தன் வாயாலேயே அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டார். வழக்கை வென்றும் விட்டான்.

இந்த வழக்கை வெல்லாமல் அவள் முகத்தைப் பார்க்கக் கூடாது என்று சபதமெடுத்திருந்தான். அந்த சபதம் நிறைவேறி விட்டது. இதோ இப்போது அவன் உயிர்த்தோழியைக் காணும் ஆவலில் தான் போய்க்கொண்டிருக்கிறான் மருத்துவமனைக்கு.


செங்குட்டுவனும், அமுதனும் மருத்துமனைக்குச் சென்றனர். வெளியே காத்துக்கொண்டிருந்த அழகேசன் ஆவலில் ஓடிவந்தார். அவரைப் பார்த்ததும் ஓடிச்சென்று கட்டிக்கொண்டான் அமுதன்.

“அப்பா, தமிழு இப்போ எப்படி இருக்காப்பா.? நான் கேஸ்ல ஜெயிச்சிட்டேன் பா. அவளப் பார்க்கணும்னு தான் ஓடி வந்தேன்.” என்றான் அமுதன் சிறிது கண்களில் கண்ணீர் சிந்தியவாறே.

அவன் சொன்னதும், அவனை நினைத்து சந்தோஷமும், பெருமையும் பட்ட அழகேசன், “ரொம்ப சந்தோஷம் டா தம்பி. தமிழுக்கு எதுவும் ஆகல. அவ இப்போ நல்லாதான் இருக்கா. இன்னைக்கு காலைல கண் முழிச்சதுல இருந்து அவ உன்னைத்தான் கேட்டுட்டே இருக்கா. நீ வா, அவள பார்க்கப் போலாம்.” என்று அவனை அழைத்துக்கொண்டு போனார்.

“வளையாபதிக்கு எப்படி இருக்கு பா.?” என்றான்.

“ம்ம்.. அந்தத் தம்பியும் கண் முழிச்சிடுச்சு. நல்லாதான் இருக்கு. ரெண்டு பேரையுமே பார்த்துடுவியாம் வா.” என்றார் அழகேசன்.

அவன் சென்ற போது, இருவரும் நார்மல் வார்டில் அவரவர் பெட்டில் எழுந்து அமர்ந்தபடி இருந்தனர். அமுனைப் பார்த்ததும் வளையாபதி புன்னகைத்தான்.

“எப்படி இருக்கீங்க வளையாபதி.? இப்போ நல்லா இருக்கீங்களா.?” என்று நலம் விசாரித்தான்.

“இப்போ ஒண்ணும் பிரச்சினை இல்ல அமுதன். பரவால்ல. பாவம், தேனு தான் என்னை நினைச்சு அழுதுட்டே இருக்கா.” என்றான்.

தேன்மொழியை ஒரு கணம் பார்த்தபடி, “பயப்படாதீங்க. நான் இருக்கேன். அண்ணாவுக்கு எதுவும் ஆகாது.” என்று ஆறுதலாய்ப் பேசியவன் இரண்டு பெட் தள்ளிப் படுத்திருந்த தமிழினியைப் பார்த்தான்.

தமிழினியோ, “அமுதா....” என்று மெல்லிய குரலில் சொன்னவாறே, கூப்பிட அவளைப் பார்த்ததும், திரும்பவும் ஆனந்தக் கண்ணீர் வடித்தபடியே வந்தான் அமுதன்.


அவளது அருகில் வந்து அமர்ந்தவன், “எப்படி இருக்க தமிழு.? உன்னை இப்படிப் பார்க்கவே முடியல.” என்று அவள் கையை தன் கண்ணில் ஒற்றியபடி அழுதான்.

“டேய்.. இங்க பாரு அமுதா.. எனக்கு ஒண்ணும் இல்ல டா. நீ இருக்கும் போது எனக்கு எதுவும் ஆகாது. நீ ஆகவும் விடமாட்ட. அன்னைக்கு நீ வருவன்னு நம்பினேன். அதே மாதிரி வந்து என்னைக் காப்பாத்திட்ட. அந்த நம்பிக்கைல தான் இருந்தேன். எனக்கு அதுவே போதும். இப்போ நான் நல்லா தான் இருக்கேன் டா. நீ அழாத. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.” என்றாள் தமிழினியும் அழுதவாறே.

“சரிப்பா.. ரெண்டு பேரும் இப்படி அழுதா என்ன பண்றது.? அதுதான் எல்லாம் சரியாயிடுச்சே. இனிமேல் தான் நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்.” என்று செங்குட்டுவன் சொல்ல,

“எப்படி மாமா சந்தோஷமா இருக்கறது, இந்தக் கேஸ்ல நாம ஜெயிச்சாத்தான் உண்மையான சந்தோஷமே.” என்றான் வளையாபதி.

“வளையாபதி, இந்தக் கேஸ்ல நாம ஜெயிச்சாச்சு. அமுதன் இன்னைக்கு என்னமா வாதாடி எல்லாத்தையும் வசமா சிக்க வைச்சுட்டான் தெரியுமா.?” என்று அவர் அமுதனின் தோள்களைப் பெருமையாய்த் தட்டியவாறே சொன்னார்.

“அப்படியா மாமா.? நிஜமாவா.? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்க.” என்று கேட்டதும், செங்குட்டுவன் கோர்ட்டில் நடந்ததை ஒன்றுவிடாமல் சொன்னார்.

கேட்டதும் அனைவருமே சந்தோஷப்பட்டனர். வளையாபதிக்கும், தேன்மொழிக்கும் அழுகையே வந்துவிட்டது. அமுதனின் கைகளைப் பிடித்துக்கொண்டு பேசினான் வளையாபதி.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு அமுதன். எங்க பக்கம் இருக்க நியாயம் எங்க செத்துப்போயிடுமோன்னு நினைச்சேன். ஆனா, அது இப்போ உங்க மூலமா எங்களுக்கு உயிரோட வந்திருக்கு. எத்தனை அநியாயங்கள் எங்களுக்குத் தெரியாம அந்த வீட்டுல நடந்திருக்கு.? எதுவுமே தெரியாம நாங்க பாவப்பட்ட ஜென்மங்களா இருந்திருக்கோம். இப்போதான் உண்மையெல்லாம் தெரிஞ்சிருக்கு. அதுவும் எங்க அத்தை மூலமாவே எல்லா உண்மையையும் சொல்ல வைச்சதுதான் ரொம்பப் பெரிய விஷயம். சொத்துக்காக எங்க மாமா மாதிரி சில ஆளுங்க பண்ற விஷயத்துக்கெல்லாம் முற்றுப்புள்ளியா இது இருக்கணும். உங்களுக்கு என்னோட நன்றியை மட்டும் சொன்னாப் பத்தாது. நான் அதுக்கும் மேல ஏதாவது செய்யணும் அமுதன். உங்களுக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க.” என்று உணர்ச்சிவசத்தில் கேட்டான் வளையாபதி.

“நன்றியெல்லாம் எதுக்கு வளையாபதி, நான் என்னோட கடமையத்தானே செஞ்சேன். உங்க பக்கம் நியாயம் இருந்துச்சு. அதனால தான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணேன். அப்பறம், எனக்கு வேணும்னு நினைக்கறதை அப்பறமா கேட்கறேன். அப்போ நீங்க மறுக்காம எனக்குத் தரணும்.” என்று தேன்மொழியை ஓரப்பார்வையால் பார்த்தவாறே அவனிடம் கேட்டான்.

“கண்டிப்பா அமுதன். உங்களுக்கு எவ்வளவு வேணும்னாலும் செய்யலாம்.” என்று திரும்பவும் சொன்னான்.

“என்ன தமிழு, இப்போ ஓகே வா நான் ஜெயிச்சுட்டேன். கேஸ்ல மட்டும் இல்ல, மக்களோட மனசுலயும் தான். எல்லாமே உன்னால தான். நீ என்னை என்கரேஜ் பண்ணலன்னா நான் இவ்ளோ தூரம் வந்திருக்க மாட்டேன்.” என்ற அமுதனைப் பார்த்து சிரித்த தமிழினி,

“ரொம்ப சந்தோஷமா இருக்குடா அமுதா. உன்னோட வெற்றியைப் பார்க்கணும்னு தான் நான் இவ்ளோ நாள் காத்துட்டிருந்தேன். இப்போ அது நிறைவேறிடுச்சு. அதுவே எனக்குப் போதும்.” என்றாள்.

“சரி, சரி ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் இப்படியே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பேசிட்டே இருந்தா எப்படி.? நீங்க ரெண்டு பேருமே உங்க ரெண்டு பேருடைய வெற்றிக்குக் காரணம். ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க கிடையாது. அதுதான் உண்மை. போதுமா.?” என்றார் அழகேசன்.

வளையாபதியும், தேன்மொழியும் அவர்களின் நட்பின் ஆழத்தைக் கண்டுவிட்டார்கள். இவர்களுக்குள் இவர்கள் வைத்திருக்கும் பாசமும் வெளிப்பட்டது.

ஒரு மாதம் கடந்தது. இப்போது, வளையாபதி அதற்க்குள் ஒரு பெரிய முடிவை எடுத்திருந்தான். தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் அவன் சில ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்கும் கொடுத்துவிட்டான்.

தனக்கென்று ஒரே ஒரு இடத்தை மட்டும் எடுத்துக்கொண்டான். அது அவனுடைய அப்பாவின் சொந்தக் காசில் வாங்கிய தோட்டமும், அதைச் சேர்ந்ததாய் ஒரு சிறிய அளவான வீடு.

அவ்வப்போது, அவர்கள் அங்கே வந்ததுண்டு. சிறிய வயதில் வளையாபதியையும், தேன்மொழியையும் கூட்டிக்கொண்டு வந்து அவர்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்துக்கொண்டு செல்வர் அவர்களின் பெற்றோர்.

அந்த ஜமீன் வீட்டில் இல்லாத ஒரு சந்தோஷமும், நிம்மதியும் ஏனோ, அந்த வீட்டில் கிடைப்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இப்போது அங்கேயே சென்று விட்டார்கள் இருவரும். தோட்டத்தைப் பராமரித்து அதைப் பார்த்துக்கொள்ள சிலரையும் வைத்தான் வளையாபதி. தேன்மொழி வழக்கம் போல் எந்த ஒரு பயமும், வேதனையும் இல்லாமல் நிம்மதியாய் பள்ளிக்குச் சென்று வந்தாள்.

அன்று விடுமுறை நாள் மாலை, அமுதனும், தமிழினியும் தாங்கள் சிறிய வயதில் செல்லும் தோட்டத்தில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இதுபோல் அமர்ந்து பேசி, வருடங்கள் ஆனது.

குறிப்பிட்ட படிப்பு, மற்றும் வேலைப்பளுவால் அவர்களுக்கு பேசக்கூட நேரம் இல்லாமல் போனது. ஆனால், இப்போதோ ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசவே இருவரும் அங்கே சென்றிருந்தனர்.

“அமுதா, நாம ஒரு நாள் இதே இடத்துல ஒரு விஷயத்தைப் பத்தி பேசிட்டிருந்தோமே ஞாபகம் இருக்கா.?” என்று முதலில் ஆரம்பித்தாள் தமிழினி.

“ம்ம்ம்.. நம்ம வாழ்க்கையோட முக்கியமான கட்டத்தைப் பத்தி முடிவெடுக்கும் போது, நாம ரெண்டு பேரும் சேர்ந்து முடிவெடுக்கணும்னு சொன்னோம்.” என்றான் அமுதன்.

“ம்ம்.. அதைப்பத்தி தான் பேசறேன்.” என்றாள் தமிழினி.

“நானும்தான் தமிழு, உன்கிட்ட அதைப்பத்தி பேசணும்.” என்றான் அமுதனும்.

“ அப்படியா.? சரி.. நீயே சொல்லு..” என்றாள் அவள்.

“இல்ல, நீயே சொல்லு..” என்றான் இவன்.

“ப்ச்.. எனக்கு ஒரு மாதிரி இருக்குடா. எப்படி சொல்றதுன்னு தெரியல.?” என்று சிறிது வெட்கத்துடன் கூறிய தமிழினியைப் பார்ப்பதற்க்குப் புதிதாய்த் தெரிந்தாள் அமுதனுக்கு.

“நீ வெட்கப்படறியா தமிழு. அய்யோ.. அம்மாடி.. ஆச்சர்யம் தான். நான் பார்த்த வீரமங்கை நீ. உனக்கு வெட்கப்படத் தெரியும்னு நான் இன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். யார் உன்னுடைய வெட்கத்திற்க்குக் காரணம்.?” என்றான் அமுதன்.

ஒரு நிமிடம் அமுதனைப் பார்த்தவள், “டேய்.. நீ கண்டுபுடிச்சிட்டியா.?” என்றாள்.

“ம்ம்ம்.. ஓரளவு கெஸ் பண்ணிருக்கேன். ஆனா, நீதான் சரியான்னு சொல்லணும்.” என்றான்.

“நீயே யாரா இருக்கும்னு சொல்லு. நீ கெஸ் பண்ணது சரியான்னு நானே சொல்றேன்.” என்றாள் தமிழினி.

“வளையாபதி தானே.?” என்றான் சர்வ சாதாரணமாக.

கண்களை அகல விரித்துப் பார்த்த தமிழினி, “டேய்.. எப்படி டா.? சரியா சொன்ன.” என்றாள்.

“ம்ம்.. எல்லாம் தெரியும். உனக்கு அவர் மேல ஒரு அபிப்ராயம் இருக்கறதை நான் கவனிச்சேன்.” என்றான் அமுதன்.

“ம்ம்.. அதே மாதிரி அன்னைக்கு அந்த ரௌடிங்ககிட்ட இருந்து என்னைக் காப்பாத்த எவ்ளோ முயற்சி பண்ணார் தெரியுமா.? ஒருத்தன அடிச்சார். நாம நினைச்ச மாதிரி வெகுளி இல்ல அவர். அவர்கிட்டயும் ஒரு தைரியம் இருக்குன்னு புரிஞ்சுது. அதுவே எனக்கு அவர் மேல விருப்பம் வரக் காரணமா இருந்துச்சு.” என்று சொன்னபடி வெட்கத்தில் நெளிந்துகொண்டிருந்த தமிழினி, “சரி, நீ ஏதோ சொல்லணும்னு நினைச்சியே, என்ன அது.?” என்றாள்.

குழைந்த அவனை செல்லமாய் முறைத்தவாறே, “ம்ம்.. திருட்டுப் பயலே.. நீயும் தானா.?” என்றாள்.

“ம்ம்.. ஆமா தமிழு. எனக்கு ஒரு பொண்ணு மேல காதல் வந்திருக்கு.” என்றான்.

“என்னது, காதலா.? இது எப்போ இருந்து டா.?” என்றாள்.

“அது எப்போன்னு எனக்கே தெரியல. ஆனா, அது கன்ஃபார்ம் பண்ணது ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான்.” என்றான்.

“ஹூம்ம்.. எனக்குத் தெரியாம பல வேலை பார்த்திருக்க போலயே.?” என்றாள் தன் இடுப்பில் கை வைத்தபடி.

சிரித்த அமுதன், “அப்படியெல்லாம் இல்ல தமிழு. எனக்குத் தோணுச்சு. அவ்ளோதான். அது யார்ன்னு உனக்குத் தெரியுமா.?” என்றான்.

“உன்னை மாதிரி என்னால டக்குன்னு கெஸ் பண்ண முடியல டா. ம்ம்ம்...” என்று வானத்தைப் பார்த்தபடி யோசித்தவள், கடைசியில், “ம்ஹூம்ம்... பேசாம நீயே சொல்லிடு..” என்று கை விரித்தாள்.

“நீ யாரை விரும்பறியோ அவரோட தங்கச்சி தான்.” என்றதும், ஆச்சர்யமாகப் பார்த்தாள் தமிழினி.

“யாரு தேன்மொழியா.? நீ நிஜமாலும்தான் சொல்றியா.? சும்மா விளையாடாத.” என்றாள்.

“ஏய்.. தமிழு. நான் என்னோட வாழ்க்கையோட முக்கியமான முடிவப் பத்தி பேசிட்டிருக்கேன். ஆனா, நீ என்னடான்னா விளையாடறியான்னு கேட்கற.?” என்றான் அமுதன்.

“இல்லடா. அவங்க விடோன்னு தெரிஞ்சுதான் நீ இதைச் சொல்றியா.?” என்றாள் தமிழினி.

“ஏன்.? விடோவா இருந்தா என்ன.? அதுல என்ன இருக்கு.? எனக்குப் புடிச்சிருக்கு. அவ்ளோதான்.” என்றான்.

“ஆனா, இதை தேன்மொழி எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலையே.?” என்றாள் தமிழினி.

“ம்ம்ம்.. இதுக்குத்தான் ஒரு ஃப்ரெண்ட் வேணும்ங்கறது. நீதான் எப்படியாவது தேன்மொழிக்கிட்ட பேசி சம்மதம் வாங்கணும். உன்கிட்ட நான் முதல் முதலா கேட்கற ஒரு விஷயம் தமிழு. நீதான் பேசணும்.” என்று தன் காதலைச் சொல்ல தோழியிடம் தூதனுப்பினான்.

“ஹூம்ம். சரி, சரி... பாத்துக்கலாம் விடு. உன்னை நினைக்கும் போது ரொம்ப்ப் பெருமையா இருக்கு டா. ஒரு விதவைப் பொண்ணுக்கு வாழக்கை கொடுக்கறது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்ல. ரொம்ப சந்தோஷம்.” என்று அவன் தோள்களைத் தட்டிக்கொடுத்தாள்.

“அப்பறம், நீயும் தான் எனக்காக வளையாபதிகிட்ட பேசணும். என்னால இந்த விஷயத்தை அவர்கிட்ட உடனே சொல்ல முடியாது. அதனால நீதான் ஹெல்ப் பண்ணனும்.” என்றாள்.

“கண்டிப்பா தமிழு. நான் பேசறேன்.” என்றான்.

“சரி போலாம் வா.. அப்பா நமக்காகக் காத்துட்டிருப்பார்..” என்றபடி இருவரும் கிளம்பினர்.

இருவரின் எண்ணங்களும் ஒரு வீட்டில் உள்ளது. ஆனால், அவர்கள் இருவரின் மனதில் என்ன உள்ளது என்று தெரியாமலே விருப்பம் கொள்ளும் இந்த நண்பர்களின் எண்ணம் ஈடேறுமா.?

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை:1247

உங்களின் விமர்சனங்களை கமென்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...
 
Last edited:

Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அத்தியாயம் 35

அன்றைய தினம் அமுதனுக்கும், தமிழினிக்கும் மிக முக்கியமான நாள். ஏனென்றால் அவர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தைப் பற்றி இருவரும் பேச வேண்டிய நாள். ஆனால், அதற்க்கு முன்னர் தங்கள் வீட்டில் பெற்றோரின் சம்மதமும் இருக்க வேண்டும் என்று பிரியப்பட்டனர்.

அவர்கள் எதிர்பார்க்காமல் அழகேசனும், ரங்கா-கோகிலா தம்பதியினரும் உடனே தங்களது சம்மதத்தைத் தெரிவித்தனர்.

“எங்களுக்கு பரிபூரண சம்மதம். முதல்ல போய் அவங்க ரெண்டு பேர்கிட்டயும் உங்க விருப்பத்தைச் சொல்லுங்க. ஒரு நல்ல நாள் பார்த்துடலாம்.” என்றார்கள் மூவரும்.

இருவரும் திருப்தியாகவும், சந்தோஷமாகவும் தங்கள் வாழக்கைத் துணையோடு பேசப் புறப்பட்டனர். பொள்ளாச்சி, மசாணி அம்மன் கோவில். மிக சக்தி வாய்ந்த தெய்வம்.

படுத்திருக்கும் நிலையில் வீற்றிருக்கும் அம்மனை தரிசித்தால் தாங்கள் நீண்ட நாளாக மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் சீக்கிரமே நிறைவேறும். அதனால் தானோ என்னவோ, அவர்கள் இருவரையும் அங்கேயே வரச் சொல்லியிருந்தனர் அமுதனும், தமிழினியும்.

இருவரும் பேசிக்கொண்டே அம்மனை தரிசித்து முடித்து ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்க, சரியாக வளையாபதியும், தேன்மொழியும் வந்தனர். இருவரையும் அம்மனை தரிசித்து விட்டு வருமாறு கூறியவர்கள், அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்று தங்களுக்குள் சிறிது ஒத்திகை பார்த்துக்கொண்டனர்.

அவர்கள் வந்ததும், அமுதன் வளையாபதியைக் கூட்டிக்கொண்டு போனான். தமிழினி தேன்மொழியைக் கூட்டிக்கொண்டு போனாள். அந்தப் பேச்சை ஆரம்பிப்பதற்க்கே அவர்களுக்கு நீண்ட நேரம் ஆனது. முதலில் அமுதன்.

“வளையாபதி, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னுதான் இங்கே வரச் சொன்னேன். நீங்க என்னோட ஃப்ரெண்ட் தமிழினியப் பத்தி என்ன நினைக்கறீங்க.?” என்றான் அமுதன்.

அவன் அவளைப் பற்றிக் கேட்டதும் வளையாபதிக்கு உள்ளூர ஒரு சந்தோஷம், மற்றும் ஒருவித சொல்ல முடியாத உணர்வும் உண்டானதை அவனால் உணர முடிந்தது.

“அவங்க ரொம்ப தைரியமான பொண்ணு. தேனு என்கிட்ட அவங்களப் பத்தி நிறைய சொல்லிருக்கா. அன்னைக்கு அந்த ரௌடிங்க கிட்ட அவங்க போராடிட்டு இருந்தத நினைச்சா இன்னும் ரொம்பப் பாவமா இருக்கு.” என்று உணர்ச்சிவசத்தில் பேசினான் வளையாபதி.

“விடுங்க. அந்த டைம் நீங்க தான போய் அவளுக்காக சண்டை போட்டீங்க. அதுக்கப்பறம் தானே நான் வந்தேன். சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ ஒரு விஷயம் ஃப்ரான்க்கா சொல்லணும்னா தமிழுக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. அவளை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா.?” என்று பட்டென்று விஷயத்தை உடைத்தே கேட்டு விட்டான் அமுதன்.

வளையாபதிக்கு வானத்தில் பறப்பதைப் போன்றிருந்தது. ஆனாலும், ஏதோ ஒரு விஷயத்தால் அவனின் முகம் வாடியது. அதைப் பார்த்த அமுதன் கேட்டான், “ஏன் என்னாச்சு வளையாபதி.?” என்றான்.

“ஒரு விஷயம் அமுதன், உங்க ஃப்ரெண்ட்க்கு நான் சரியான ஆளான்னு எனக்குத் தெரியல. ஏன்னா, அவங்க டீச்சர். ரொம்பப் படிச்சவங்க. நான் டென்த் கூட பாஸ் பண்ணல. அப்படி இருக்கும் போது இது எப்படி ஒத்து வரும்னு அவங்க நினைக்கறாங்க.?” என்றான் திடீரென்று.

“வளையாபதி, இதெல்லாம் ஒரு விஷயம் கிடையாது. அவளுக்கு அது பிரச்சினை இல்லைன்னு தானே, உங்களத் தேர்ந்தெடுத்திருக்கா. அப்படியே, உங்களுக்கு எது கேட்கணும்னாலும் அதை நீங்களே நேரடியா தமிழு கிட்ட கேளுங்க. எல்லாமே தெளிவாயிடும். சரியா.? என்றான். அவனுக்கும் அதுவே சரியென்று பட்டது.

அப்படியே இருவரும் பேசிக்கொண்டிருக்க, அங்கே தமிழினியும், தேன்மொழியும் வந்தனர்.

“அதோ அவங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்க.” என்று புன்னகை சிந்திய அமுதன், தேன்மொழி ஏனோ வேகமாய் வருவதைப் பார்த்தான்.

வந்தவள் வளையாபதியின் அருகே வந்து, “அண்ணா, வா போலாம்.” என்றாள் ஒரு மாதிரியாக. அவள் அமுதனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவனைக் கிட்டத்தட்ட இழுத்துச் சென்றாள்.

அதைக் கண்டு ஏதோ சரியில்லை என்று நினைத்த அமுதன், தமிழினியைப் பார்க்க அவளோ செய்கையால், “பொறு..” என்று மட்டும் சொன்னாள்.

வளையாபதிக்கே தேன்மொழி செய்தது மிகவும் சங்கடமாக இருந்தது. அப்படி என்ன நடந்த்தென்று இவள் தன்னை இப்படி இழுத்துக்கொண்டு போகிறாள் என்று ஒரு மாதிரியாக ஆனான். தமிழினியைப் பார்த்து ஒரு வார்த்தைக்கு கூட பேச முடியவில்லை. வீட்டிற்க்குச் சென்றதும் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாய் வண்டியைக் கிளப்பினான்.

அவர்கள் சென்றதும் அமுதன், “என்னாச்சு தமிழு.? ஏன் தேன்மொழி கோவமா போறாங்க.?” என்றான்.

“தேன்மொழிகிட்ட உன் விஷயமா பேசினேன் அமுதா, அவங்களுக்கு இதுல விருப்பம் இல்லையாம். நீன்னு இல்ல, வேற யாரா இருந்தாலுமே இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்களாம். நானும், எவ்வளவோ பேசிப் பார்த்தேன். அவங்க ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க. நான் என்னடா பன்றது. இதுக்காகத்தான் கூப்பிட்டீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்னு கோவமா பேசிட்டுப் போறாங்க. எனக்கே கொஞ்சம் சங்கடமா இருந்தது. இப்போ என்ன பண்றது சொல்லு.?” என்றாள் தமிழினி கவலையாக.

“சரி விடு, அதனால என்ன.? ஆனா, நான் உன்கிட்ட ரொம்ப சந்தோஷமான விஷயம் சொல்லப் போறேன். வளையாபதிக்கும் உன் மேல விருப்பம் இருக்கு தமிழு. ஆனா, அவர் படிக்காதவர்ன்னு கொஞ்சம் ஃபீல் பண்றார். உன்கிட்ட பேசச் சொன்னேன். ஆனா, பாசிட்டிவான ரியாக்‌ஷன் தான்.” என்று சொன்னவன் முகத்தில் மகிழ்ச்சி.

ஆனால், தமிழினியோ சோகமாய் இருந்தாள். அவளின் கவலையைப் புரிந்துகொண்டவன், “ஏய்.. விடு தமிழு. நானே ஃபீல் பண்ணல. நீ ஏன் இவ்ளோ ஃபீல் பண்ற.? இந்தத் தேன்மொழி இல்லன்னா, வேற ஏதாவது ஒரு மொழி. இதுக்குப் போய்..” என்று அவன் அவள் தோள்களைப் பிடித்தவாறே பேச, அவள் அவனது முகத்தை உற்று நோக்கினாள்.

அதைப் பார்த்தவன் அந்தப் பக்கமாய் தலையைத் திருப்பிக் கொண்டான். தன் தோள்களைப் பிடித்திருந்த அவன் கையை உதறி விட்டவள், “இங்க பாரு அமுதா, நீ என்னை சமாதானப்படுத்தறேன்னு உன்னையே நீ ஏமாத்திக்காத. நீ என்ன பண்ணுவியோ தெரியாது, தேன்மொழிய எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி அவங்கள மேரேஜ்க்கு சம்மதிக்க வை. இல்லன்னா நானும் வளையாபதிகிட்ட பேசப் போறதும் இல்ல, கல்யாணம் பண்ணிக்கப் போறதும் இல்ல.” என்று உறுதியாய்ச் சொன்னபடி முன்னே நடந்தாள் தமிழினி.

இதென்ன சோதனை அம்மா.? என்று அந்த மாசாணி அம்மனைப் பார்த்தவாறே மனதில் எதையோ நினைத்துக்கொண்டு பின்னே சென்றான் அமுதன்.


*******************

வந்ததிலிருந்து எதுவுமே பேசாமல் அமைதியாக சமையல் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள் தேன்மொழி. பொறுமை இழந்து வளையாபதி கேட்டான்.

“தேனு, என்னதான் நடந்தது.? எதுக்கு அவங்க முன்னாடி அப்படி என்னை இழுத்துட்டு வந்த.? அவங்க நம்மள என்ன நினைச்சிருப்பாங்க.? சொல்லு.” என்றான்.

அவள் பேசவில்லை. அப்பொழுதும் அமைதியாகவே இருந்தாள். “அதை நான் சொல்றேன் வளையாபதி.” என்றவாறே திறந்திருந்த கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்தார் செங்குட்டுவன். கூடவே அமுதனும் வந்திருந்தான்.

அவர்களைப் பார்த்ததும் வளையாபதி, “மாமா.. வாங்க. அமுதன் வாங்க.” என்று அவர்களை வரவேற்றான். ஆனால், தேன்மொழி ஏனோ அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.

இதை எதிர்பார்த்தவர்களாக, “நீ அவகிட்ட எது பேசினாலும் அவ எதுவும் சொல்லமாட்டா. நாங்களே விஷயத்துக்கு வரோம். அமுதனுக்கு தேன்மொழியைப் பிடிச்சிருக்கு. அவள கல்யாணம் பண்ண சம்மதமான்னு தமிழ் கிட்ட சொல்லிக் கேட்டிருக்கான். ஆனா, அவ அதுக்கு கோவிச்சுக்கிட்டு முடியாதுன்னு பட்டுன்னு சொல்லிட்டு உன்னை இழுத்துட்டு வந்துட்டா. இதுதான் விஷயம். நீதான் இனி சொல்லணும்.” என்று செங்குட்டுவன் அனைத்தையும் சொன்னார்.

ஒரு நிமிடம் சந்தோஷப்பட்ட வளையாபதி, “இதுல சொல்றதுக்கு என்ன மாமா இருக்கு.? ராமு இறந்ததுக்கப்பறம், அவளோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு நான் நினைச்சு வருத்தப்படாத நாளே இல்ல தெரியுமா.? அமுதன் மாதிரி ஒருத்தர் என் தங்கச்சிய ஏத்துக்கறார்ன்னா அத நான் நிச்சயம் தடுக்க மாட்டேன். ஆனா, இதுல தேனுவோட சம்மதமும் முக்கியம்.” என்றான்.

“தேனு... தேனு... இங்க வா..” என்று அவன் அழைக்க, அங்கே பேசிக்கொண்டிருந்தவற்றை உள்ளேயே கேட்டுக்கொண்டிருந்தவள், வெளியே வந்து அவர்கள் முன்பு நின்றாள்.

“தேனு.. ஏன் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லல.? அமுதன் சார் எவ்ளோ நல்லவர். அவர மாதிரி ஒருத்தர் உன்னை ஏத்துக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும். ஆனா, நீ ஏன் வேணாம்னு சொல்ற.?” என்றான் வளையாபதி.

அமைதியாய் இருந்தாள். “ஆமாம் மா தேனு. அமுதனுக்கு அவ்ளோ சீக்கிரம் யாரையும் பிடிக்காது. ஆனா, பிடிச்சிருச்சுன்னா அவங்களுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவான் தெரியுமா.? ஏன் என்னோட பொண்ணு அஞ்சலி, அமெரிக்கால இருக்காளே, அவகூட அமுதனக் கல்யாணம் பண்ணிக்க இண்ட்ரஸ்ட் காமிச்சா. ஆனா அமுதனுக்கு என்னோட பொண்ணு மேல இண்ட்ரஸ்ட் இல்ல. சரி, என் பொண்ணுக்கு அமுதனக் கல்யாணம் பண்ணிக்க குடுப்பனை இல்லன்னு நினைச்சுக்கிட்டேன். நீ என்னடான்னா தானா வர நல்ல வாழ்க்கைய வேண்டாம்னு சொல்ற.?” என்றார் செங்குட்டுவன்.

“போதும் மாமா, எனக்கு யாரும் வாழ்க்கை குடுக்கவும் வேண்டாம், என்னை யாரும் ஏத்துக்கவும் வேண்டாம். இந்த வீட்டுல நான் பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டுப் போறேன். எங்க அண்ணனுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா நான் தானா ஒதுங்கிப்பேன்.” என்று தேன்மொழி சொல்ல,

“உங்க அண்ணனுக்கு வர வாழ்க்கையையும் சேர்த்துதான் நீ வேண்டாம்னு சொல்ற தேன்மொழி. தமிழினி உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிருக்கா. ஆனா, நீ அமுதனோட விருப்பத்தை ஏத்துக்கலன்னா, உங்க அண்ணனை தமிழினி ஏத்துக்க மாட்டா.” என்றார் செங்குட்டுவன்.

அதைக் கேட்டதும், தேன்மொழி வளையாபதியை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். அவள் உண்மையாலுமா.? என்பதைப் போல் பார்க்க, அவனும் “ம்ம்..” என்று தலையாட்டினான். உடனே தேன்மொழி யோசிக்க ஆரம்பிக்க, அமுதன் உடனே கூறினான்.

“சார். இதென்ன மார்க்கெட் வியாபாரமா.? ஒன்னைக் கொடுத்து தான் ஒன்னை வாங்கணும்னு. இது வாழ்க்கை. பிடிக்காம ஏத்துக்கிட்டா, ரொம்பக் கஷ்டமாயிடும். தேன்மொழி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்கப்பறம் உங்களுக்கு எல்லாமே புரியும்.” என்றான்.

அவன் அவ்வளவு தூரம் சொல்லும் போது அவளால் மறுக்க முடியவில்லை. அதே போல், வளையாபதியும் கண்களால் கெஞ்ச, வேறு வழியில்லாமல் அவனுடன் பேச தனியே சென்றாள்.

“தேன்மொழி நீங்க நினைக்கற மாதிரி நான் ஒண்ணும் உங்களோட இந்த நிலைமையைப் பார்த்து உங்கள ஏத்துக்கணும்னு நினைக்கல. உங்கள நான் காலேஜ் படிக்கும் போதே ரெண்டு மூணு தடவை பொள்ளாச்சில பஸ் ஏற வரும் போது, அங்கங்கே பார்த்திருக்கேன். அப்போவே உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, அந்த டைம்ல அந்த ஃபீலிங்க்ஸ்க்கு பேர் என்ன்ன்னு தெரியல. ஒரு பொண்ணப் பார்க்கறோம், பிடிக்குதுன்னா உடனே அதை காதல்ன்னு முடிவு பண்ற அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. அது ஒரு அற்புதமான உணர்வு. அதை நான் முழுசா உணரும் போதுதான் உண்மைன்னு அப்போ நினைச்சேன். ஆனா, அது நடக்கும்னு நான் நிஜமாலுமே நினைச்சதில்ல. அன்னைக்கு உங்கள எங்க வீட்டுல பார்த்த போதே நான் பார்த்த பொண்ணு நீங்க தான்னு நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, உங்க மேல இருக்கற காதல் தான்னு நான் உணர்ந்தது எப்போ தெரியுமா.? அந்த இருட்டுல, நீங்க பயத்துல என் மேல சாஞ்சுக்கிட்ட போதுதான். அப்போவே முடிவு பண்ணிட்டேன், உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு. இதுவரைக்கும் இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்லல. ஏன், தமிழுகிட்ட நான் எந்த விஷயத்தையும் மறைச்சதில்ல. ஆனா, அவகிட்ட கூட நான் இதை நேரடியா சொல்லல. அப்பறம், அவ கண்டிப்பா உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்குவா. அதுக்காக, நீங்க என்னைக் கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியம் இல்ல. அதையும் நீங்க தெரிஞ்சுக்கணும்.” என்று தன் தெளிவான முடிவை அவளிடம் சொன்னான் அமுதன்.

“என்ன இருந்தாலும் நான் ஒரு விதவை. உங்களுக்கு இப்போ ஏத்துக்க மனசு இருக்கலாம். ஆனா, நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழும் போது, ஏதாவது ஒரு வார்த்தை தேவையில்லாததப் பேசிட்டா, அப்ப்றம் என்னால தாங்க முடியாது.” என்று தேன்மொழி கண்ணீர் விட,

அவளுக்கு அருகே வந்த அமுதன், அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டுச் சொன்னான்.

“உனக்கு நடந்தது ஒரு பொம்மைக் கல்யாணம். அது உன்னோட அத்தையும், மாமாவும் தங்களோட லாப நோக்கத்துக்காக செஞ்ச ஒரு சதிச் செயல். அதுல பலியானது ராமு. நீ என்ன தப்பு செஞ்ச.? நீயா எதுவும் கற்பனை பண்ணிக்க வேண்டாம். என்னைப் பார்த்தா நான் அப்படியெல்லாம் பேசறவன்னு உனக்குத் தோணுதா.? நான் தமிழு அழுதாலே தாங்க மாட்டேன். இதுல, நீ அழுக விட்டுடுவேனா.? நான் உனக்கு உண்மையா இருப்பேன். நீ என்னை முழுசா நம்பலாம்.” என்று அவள் கைகளைப் பிடித்தான்.

திரும்பவும் அழுதவள், தன்னை அறியாமலேயே அவன் மேல் சாய்ந்துகொண்டாள். தன் ஏக்கத்தையும், துக்கத்தையும் போக்க தோள்கள் கிடைத்ததாய்த் தோன்றியது தேன்மொழிக்கு.

பரிதாபப்பட்டு தனக்கு வாழ்க்கை கொடுக்க யாரும் முன்வர வேண்டாம் என்றொரு எண்ணத்திலேயே இத்தனை நாட்களும் வாழ்ந்தாள் தேன்மொழி. அப்படிச் சொன்னாலும், அவளுக்கு அமுதன் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது.

அவன் உண்மையைச் சொன்னதன் மூலமாக, அமுதனின் உண்மையான அன்பைப் புரிந்துகொண்டாள். ஒரு வழியாக தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

இது ஒருபுறமிருக்க, வளையாபதி இன்னும் தமிழினியிடம் நேரடியாகப் பேசவில்லை. அவர்கள் சந்தித்த போது,

“உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே.? என்ன இருந்தாலும் நான் படிக்கல. நீங்க ரொம்பப் படிச்சவங்க. உங்களுக்கு நான் ஒத்துவருவேனான்னு தெரியலங்க.” என்றான் பாவமாய்.

“அட நீங்க என்னங்க, படிப்பெல்லாம் ஒரு விஷயமா.? நீங்க படிக்காத மேதை. உங்க தங்கச்சிய இந்த அளவுக்கு படிக்க வைச்சிருக்கீங்க. எத்தனை நல்ல நல்ல காரியங்கள் பண்ணிருக்கீங்க. அதெல்லாம் எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா.? எல்லாராலும் இந்த மாதிரி இருக்க முடியுமா.? எனக்கு இதெல்லாம் தான் தெரியுது. படிப்பு தானே, நான் சொல்லித்தரேன். அவ்ளோதான்.” என்றாள் தமிழினி.

“இல்லைங்க...” என்று வளையாபதி இழுக்க, “இங்க பாருங்க, இப்போ கூட உங்களுக்கு நான் ஒத்து வருவேனான்னு நீங்க யோசிக்கல. அப்படி யோசிச்சிருந்தாதான் அது சுயநலம். நான் உங்கள விரும்பறதுக்குக் காரணமே உங்க மனசு தான். அதுதான் எனக்கு வேணும். எப்போ நானும், அமுதனும் கடைசி வரைக்கும் நட்பா இருக்கணும், எங்க நட்புக்குள்ள எந்த ஒரு பிரச்சினையும் வந்திடக்கூடாதுன்னு நீங்க நினைச்சீங்களோ, அப்போவே நீங்க தான் என் வாழ்க்கைத் துணைன்னு முடிவு பண்ணிட்டேன். இன்னும் என்னங்க வேணும்.?” என்று உறுதியாய்ச் சொன்னாள் தமிழினி.

அவன் யோசித்துக்கொண்டே இருக்க, சட்டென்று அவனது கையைப் பிடித்தவள், “இந்தக் கையைப் பிடிச்சுத்தான் நான் என்னோட வாழ்க்கையைத் தொடங்கணும், வாழ்க்கை முழுக்க பிடிச்சுக்கிட்டே நடக்கணும்னு ஆசைப்படறேன். அதை நிறைவேத்துவீங்களா.?” என்று அவள் காதலுடன் பார்த்த பார்வையில் மயங்கியே போனான் வளையாபதி.

அவ்வளவுதான், இனிதே அனைத்தும் ஆரம்பித்தன. அழகேசனும், ரங்கா-கோகிலா தம்பதியினரும் இவர்கள் சம்மதம் தெரிவித்ததும் முகூர்த்த நாள் பார்ப்பது, மண்டபம் பார்ப்பது என்று அடுத்தடுத்த நாட்களில் பரபரப்பாக இருந்தனர்.

இரண்டு ஜோடிகளுக்கும் ஒரே நாளில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது. பத்திரிக்கை அடித்தும் விட்டார்கள். அவர்களின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இதற்க்கிடையில் பஞ்சாயத்துக்கு ஒரு நாள் அமுதனையும், தமிழினியையும் அழைத்திருந்தார் அழகேசன்.

இப்போது பஞ்சாயத்தில் நிறைய விஷயங்கள் மாறியிருந்தன. நியாயமற்ற முறையில் தொடர்ந்து பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறி அமுதன் வழக்கு தொடர்ந்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

மாணிக்கமும், பெரியசாமியும் இனி பஞ்சாயத்தின் எந்த ஒரு விஷயத்திலும் தலையிடக்கூடாது என்று கோர்ட்டில் சொல்லிவிட்டார்கள். அதனால், இருவரும் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை.

இப்போது பஞ்சாயத்தில், சாத்தப்பன் தான் தலைவர். அதே போல், அழகேசனின் அறிவுரையிலேயே முக்கிய முடிவுகளை எடுக்கிறார். அதனால், இப்போது பஞ்சாயத்தில் நியாயத்துக்கான வழி கிடைத்துள்ளது.

அவர்கள் வந்திருப்பதை அறிந்து ஒட்டுமொத்த ஊரே பஞ்சாயத்தில் கூடியிருந்தது. நீண்ட வருடங்கள் கழித்து பஞ்சாயத்தில் நிற்க்கும் போது ஒருவித சந்தோஷம் உண்டானது அவர்கள் இருவருக்கும்.

“இப்போ நம்ம பஞ்சாயத்து எதுக்கு கூடியிருக்குன்னு பாத்தீங்கன்னா, யாரை ஒரு காலத்துல எந்த ஒரு விஷயத்துக்கும் லாயக்கு இல்லைன்னு நினைச்சு ஒதுக்கி வைச்சாங்களோ, அவங்க பொண்ணு இன்னைக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியரா இருக்கா. அவ காப்பாத்துன அமுதன் தான் இன்னைக்கு வக்கீலா இருக்கான். இருவரும் இப்போ வரைக்கும் நட்பா தான் இருக்காங்க. அதைக் கூட தப்புத் தப்பா இந்த ஊர் முழுக்க எப்படியெல்லாம் பேசிருப்போம். இப்போ அவங்க தங்களோட வாழ்க்கைத் துணையத் தேர்ந்தெடுத்திருக்காங்க. நம்ம அழகேசன் வாத்தியாருக்காக நம்ம ஊர் மக்கள் கூடியிருந்து அவங்க ரெண்டு பேரோட கல்யாணத்த சிறப்பா நடத்திக் கொடுக்கணும்னு இந்த பஞ்சாயத்து சார்பா உங்க எல்லாரையும் நான் வேண்டிக் கேட்டுக்கறேன்.” என்று தன் உரையைச் சொல்லி முடித்தார் சாத்தப்பன்.

அனைவரும் அதைக் கேட்டு மகிழ்ந்தனர். அவர்களை ஆசீர்வாதித்தனர். அனைவருடைய இல்லத்திற்க்கும் சென்று பத்திரிக்கை வைத்தனர் அமுதனும், தமிழினியும்.

உறவே இல்லை என்று இருந்த ரங்கா-கோகிலா தம்பதியினருக்கு, அவர்களின் திருமண நாளாம் இன்று ஊரே ஒன்று திரண்டு வந்திருப்பதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அனைவரும் அவர்களின் இல்ல திருமண விழா போல், அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தனர்.

வாழைப் பந்தல் கட்டுவதில் இருந்து, பந்தி பறிமாறுவது, வந்தவர்களை கவனிப்பது, இன்ன பிற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்று அனைத்தையும் அவர்களே செய்தனர்.

அதே போல், அமுதனின் தாத்தா-பாட்டி, மாரி-சாமிநாதன் மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளோடு வந்திருந்தனர். பிறகு சங்கடங்களை புறம் தள்ளி விட்டு அழகேசனும், அமுதனும் வேண்டிக்கொண்டனதன் பேரில் நடேசன்-விசாலாட்சி, அவர்களோடு குமரேசன் புதிதாய்த் திருமணமான தன் மனைவியுடனும், கோலாகலம் தன் ஒரு வயது பெண் குழந்தையுடனும் வந்திருந்தனர்.

மணமக்கள் அமுதன்-தேன்மொழி, வளையாபதி-தமிழினி, தங்கள் திருமணத்திற்க்கு அனைவரும் வந்து சென்ற நிகழ்வை நினைத்துப் பரவசமடைந்தனர். அனைவரும் மணமக்களை இன்று போல் என்றும் நலமுடன் வாழ ஆசிர்வாதித்தனர். நால்வருடைய திருமணம் ஒரு திருவிழா போல் இனிதாக நடைபெற்று முடிந்தது.


******************
 
Status
Not open for further replies.

Latest Episodes

New Threads

Top Bottom