Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீயாய் சுடும் என் நிலவு!

dharshini chimba

Saha Writer
Team
Messages
287
Reaction score
182
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 38

மேலும் சிறிதுநேரம் காத்திருந்தவள் 'இப்போ வேற வழியே இல்லை. நானே தான் போய் பார்க்கணும்' என்று மெதுவாய் தயங்கியபடி உள்ளே சென்றாள்.

வீடு தாழிடாமல் சாத்தியிருக்க கதவை தட்டாமல் லேசாக திறக்க அது நன்கு திறந்துகொண்டது.

அந்த வீடே யாரும் இல்லாதது போல் நிசப்தமாய் இருக்கவும், 'எங்க இவரை காணமே?' என்று ஒவ்வொரு இடமாக தேடியபடி நடந்தாள்.

கடைசியாக இருந்த அறையை பதட்டத்துடன் திறக்க, அங்கே எதுவுமே தெரியாமல் சுயநினைவு இல்லாமல் படுத்திருந்தான் தீரன்.

"ஐயையோ! என்னாச்சு இவருக்கு?" என்று பதட்டத்துடன் தீரனிடம் ஓடியவள் அவனின் நெற்றியில் கரம் வைத்து பார்க்க, மிகவும் காய்ச்சலில் கொதித்தது.

"என்ன இப்படி கொதிக்குதே?" என்று வேகமாக காட்டன் கர்ச்சீப்பை ஈரத்தில் நனைத்து அவனின் நெற்றியில் பத்து போட்டாள்.

ஸ்ரீஷாவிற்கு போன் செய்து, "ஸ்ரீ உங்க மாமாக்கு ரொம்ப ஜுரம் அடிக்குது. நீ சீக்கிரம் கொஞ்சம் கிளம்பி வாயேன்" என்றாள் விழிகளில் நீரோடு.

"அய்யய்யோ! மாமாக்கு என்னக்கா ஆச்சு?" என்றாள் ஸ்ரீஷா பதட்டமாக.

"உடம்பு ரொம்ப அனலா கொதிக்குதய. அதான் நீ கொஞ்சம் வா" என்றாள்.

"அக்கா நிச்சயமா நான் ஓடி வந்துருவேன். ஆனா எங்களுக்கு ஹாஸ்ப்பிட்டல் டீனோட ரொம்ப முக்கியமான மீட்டிங். எல்லோரும் கான்பிரன்ஸ் ரூமுக்கு தான் போய்ட்டு இருக்கோம். இப்போ போன் சுவிட்ச் ஆப் பண்ண போறேன். அதான் அட்டெண்ட் பண்ணேன். மீட்டிங் முடிஞ்சு வெளிய வர வரைக்கும் பேச முடியாது. சரிக்கா. நீங்க மாமாவை பார்த்துக்கோங்க. நான் அப்புறம் பேசுறேன். ஆஹ்ன். சொல்ல மறந்துட்டேன் அமுதன் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் பேசினான். திஷாகுட்டி அவன்கிட்ட தான் இருக்காளாம்கா. சரி வரேன்கா. கூப்பிடறாங்க" என்று அவளின் பதிலுக்கு காத்திராமல் வைத்துவிட்டாள் ஸ்ரீஷா.

"பிசாசு! பிசாசு! நேரம் பார்த்து காலை வாறுதுங்க பாரு." கோபத்தில் முனகியபடி அமுதனுக்கு போன் செய்தாள்.

அவனுடைய போன் ஸ்விச் ஆப் ஆகியிருந்தது.

'இவனும் நேரம் பார்த்து ஸ்விச் ஆப் பண்ணி வச்சிருக்கானே? இவங்க ரெண்டு பேரும் இப்போ கிடைச்சாங்க அவளோ தான். ' என்று மீண்டும் முயற்சித்தாள்.

********

சிறிது நேரத்திற்குமுன்,

"ஏன்டி இந்த மிரட்டு மிரட்டுற?" என்றான் பாவமாக அமுதன்.

"அடேய்! சும்மா பாவமா மூஞ்சை வச்சிக்கிட்டு இப்போ அக்கா போன் பண்ணும்போது அங்க போன தொலைச்சிருவேன்." என்றாள் ஸ்ரீஷா.

"அவ எதுக்கு போன் பண்ணி வர சொல்லுவா? அது எப்படி உனக்கு தெரியும்? அவ கூப்பிட்டா நான் ஏன் போக கூடாது? முதலில் என்ன விஷயம்னு சொல்லு? எனக்கு தலையும் புரியலை காலும் புரியலை." என்றான் அமுதன்.

"எதுக்குடா இத்தனை கேள்வி அடுக்கிற? அயோ உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு..." என்றாள் ஸ்ரீஷா.

"இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லலை நீ" என்றான் அமுதன் சற்று கடுப்பாகி.

"டேய் மாமா நேத்து மழைல நனைஞ்சிருக்காங்க..." என்று நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.

"அய்யய்யோ! தி பாவம். தனியா என்ன பண்ணுவா? நான் உடனே போறேன்" என்றான் அமுதன் பரபரப்பாய்.

"அடேய் முட்டாள் இவ்ளோ நேரம் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றேன். எல்லாத்தையும் கேட்டுட்டு திரும்பி போறென்ற? டேய் நீ போக கூடாது. நாமளும் என்னென்னவோ செஞ்சு பார்த்துட்டோம். அக்கா மாமாகூட சேர்ந்து வாழாம சும்மா ஒன்னுமில்லாத தண்ட கோவத்தை தூக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க. ஆனா, மாமா இப்போ கொஞ்ச நாளா அக்காவ மாத்த முயற்சி செய்றார். அதுக்கு நல்ல பலனும் கிடைக்குது. மாமா எதிர்வீட்டுக்கு வந்ததே அக்காக்கு அதிர்ச்சி. இதுல மாமாவும் பாப்பாவுக்கு அவங்களை கண்டுக்காம அவங்க பார்வைல பட்ரமாதிரியே இருக்கிறது அக்காக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துது." என்றாள் ஸ்ரீஷா.

"எதுக்கு இந்த தீரன் இப்படி செய்றான். அவனை மண்டை மேலே போடறேன்" என்று கூறிய அமுதனை, "அவரை இல்ல... உன் தலைய கழுட்டி மூளையை கொஞ்சம் சுத்தம் செஞ்சுருவேன் பார்த்துக்கோ. மாமா செய்றது கரெக்ட் பக்கி. இப்போ தான் அக்கா அவங்க ரெண்டு பேரை அதிகமா தேட ஆரம்பிச்சிருக்காங்க. என்ன நடந்தாலும் நம்ம ரெண்டு பேரும் நடுவில போக கூடாதுனு மாமா சொல்லிருக்கார். அதனால அதை செய்றேன் இதை செய்றேன்னு எதையாவதய செஞ்ச... உன் தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்ருவேன் பார்த்துக்க. நான் ஏற்கனவே டாக்டர் அனுப்பிட்டேன். " என்றாள் ஸ்ரீஷா.

"ரொம்ப பேசுறடி. இப்போ நான் என்ன பண்ணனும்?" என்றான் அமுதன் அப்பாவியாய்.

"நீ எதுவுமே பண்ணாத. அக்கா போன் பண்ணா எடுக்காத. எடுத்தாலும் போகாத. அக்கா தான் மாமாவை பார்த்துக்கணும். இது ஒரு நல்ல சான்ஸ். நீ உன் டார்லிங் கூட நல்லா என்ஜாய் பண்ணு" என்று வைத்துவிட்டாள்.

"என்ன பேச்சு பேசுறா? இவங்க அக்காளுக்குன்னா உடனே பொங்கிடறா. அவளுக்கு ஒன்னு மறந்து போச்சு. தி முதல்ல எனக்கு தான் பிரென்ட்" என்று தலையில் அடித்துக்கொண்டு.

'இப்போ தி போன் பண்ணா என்னால எடுக்காம இருக்க முடியாது. எடுத்தா போகாம இருக்க முடியாது. போனா இந்த பிசாசை சமாளிக்க முடியாது. பேசாம போனை ஸ்விச் ஆப் செஞ்சுச்சுட்டு நாமும் என் டார்லிங் கூட படுத்து தூங்கிடுவோம்" என்று ஸ்விச் ஆப் செய்து வைத்தவன் திஷாவுடன் மீண்டும் தூங்கிப்போனான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
287
Reaction score
182
Points
43
தீயாய் சுடும் நிலவு -39

"இந்த பிசாசுங்க என் உயிரை இப்படி எடுக்குதுங்களே? என்ன பண்றது?" என்று கவலையாய் தீரனின் நெற்றி முடியை கோதியவள் தன் கணவனின் தோற்றத்தை ஒரு சில நிமிடங்கள் தன் விழிகளுக்குள் படம் பிடித்துக்கொண்டாள்.

காலிங் பெல் சத்தம் கேட்கவும் தீரனுக்கு நன்றாக போர்த்திவிட்டு வாசலுக்கு சென்றாள்.

"ஸ்ரீஷா போன் பண்ணிருந்தா. அவங்க மாமாக்கு ரொம்ப காய்ச்சல்னு வீட்டுக்கு வர சொன்னா" என்றாள் ஒரு இளம்பெண்.

நிம்மதி பெருமூச்சுவிட, "வாங்க!" என்று தீரன் இருந்த அறைக்கு அழைத்து சென்று காண்பித்தாள்.

"இவருக்கு நீங்க என்ன வேணும்?" என்ற மருத்துவரை ஒரு முறை பார்த்துவிட்டு, ' இப்போ இது தேவையா?' என்று மனதிற்குள் திட்டினாலும், "இவர் என் ஹஸ்பண்ட்." என்றாள் தெளிவாக.

"ஒஹ் ஓகே. மாமா தனியா இருக்காங்க. யாரும் பார்த்துகிறதுக்கு இல்லன்னு ஸ்ரீ சொன்னா அதான் கேட்டேன்." என்று தீரனை பரிசோதித்துவிட்டு, "பீவர் ரொம்ப அதிகமா இருக்கு. மழைல நனைஞ்சாரா?" என்று கேட்டார்.

"ஆமா.. நேத்து நைட் மழைல நனைஞ்சாரு." என்றாள் மிருதி.

"கொஞ்சம் இல்ல... ரொம்ப நேரம் மழைல நனைஞ்சிருக்காரு. ட்ரிப்ஸ் போடணும். இன்னைக்கு முழுக்க கூட இருந்து ரொம்ப கவனமா கவனிச்சுகனும். முடியுமா இல்ல ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போய்டலாமா?" என்றார் டாக்டர்.

பதறியவள், "இல்ல கூட இருந்து நானே பார்த்துக்குறேன். இங்கயே போடுங்க" என்றாள் மிருதி.

"ஹ்ம். நீங்க பார்த்துப்பிங்க. ஆனா என்னால இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது. ஒன்னு செய்யலாம். அதுவும் ஸ்ரீ என்னோட பிரென்ட் அதான். ட்ரிப்ஸ் முடிய போறதுக்கு கொஞ்ச நேரம் முன்ன போன் பண்ணுங்க. சின்ஹா பக்கத்துல தான் என் ஹாஸ்ப்பிட்டல் இருக்கு. நான் நர்ஸ் ஒருத்தங்களை அனுப்புறேன். அவங்க செக் பண்ணிட்டு எனக்கு சொல்லுவாங்க. " என்றாள்.

"சரி டாக்டர். ரொம்ப நன்றி"

"இருக்கட்டும். " என்று தீரனுக்கு ட்ரிப்ஸ் போட்டு பின், "இவருக்கு கஞ்சி, பால், இட்லி கொடுங்க. காரம் வேண்டாம்" என்று சென்றுவிட்டாள்.

யோசனையாக தீரனின் அருகில் அமர்ந்து நெற்றியை தொட்டு பார்த்தவள், "இன்னும் குறையல. அப்படி என்ன அவ்ளோ பிடிவாதம். நேத்து டவல் கொடுத்தா வாங்கி துடைக்கவேண்டியது தானே? என் மேல இருக்க கோவத்துல மறுபடியும் மழைல வண்டில வீட்டுக்கு வந்துருக்கிங்க. இப்போ பாருங்க இப்படி முடியாம படுத்திருக்கிங்க. அப்பா பொண்ணு ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான். அவளுக்கும் இதது பிடிவாதம்" என்று திட்டிக்கொண்டிருந்தவள் ஒரு நொடி தீரனின் முகத்தை உற்று பார்த்தவள் மெல்ல குனிந்து அவனின் நெற்றியில் இதழ் பதித்தாள்.

"சீக்கிரம் குணமாகிடும். இப்படி படுத்திருந்தா நல்லாவே இல்ல. என்னை முறைச்சாக்கூட அந்த தீரனை தான் பிடிக்கும்." என்றாள் லேசாக புன்னகைத்து.

'இவருக்கு கொஞ்சம் அரிசி வறுத்து கஞ்சாவது செய்துவைப்போம்.' என்று எழுந்து சமையலறை நோக்கி நடந்தாள்.

விழிகளை மெதுவாக திறந்த தீரன்.

முடியவில்லை என்றாலும் லேசாக முறுவலித்தான்.

'என்கிட்ட நீ வந்து தான் ஆகணும். அதுக்காக என்ன வேணாலும் செய்வேன் மிரு.' என்று நினைத்தவன் தலை கோத கரத்தை இழுக்க ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்ததால் வலிக்க ஆரம்பித்தது.

'ஆஹ்' என்று தலைதிருப்பி பார்க்க, "ட்ரிப்ஸா எதுக்கு? எப்போ போட்டது. ஆஹ்... வலிக்குது" என்று மெல்ல முனகியதில் சமையலறையில் இருந்து ஓடி வந்தாள் மிருதி.

"எந்திரிச்சிட்டீங்களா? " என்று அவன் அருகில் வர, மனம் உருகினாலும்... முகத்தில் உணர்வுகளை கட்டுப்படுத்தி அருகில் வரவேண்டாம் என்று கையமர்த்தினான்.

பொறுமையாக எழ முயற்சி செய்ய முடியாமல் தடுமாறி மீண்டும் கட்டிலில் சாய்ந்தான்.

"அயோ" என்று நெருங்கினாள் மிருதி.

மீண்டும் கையமர்த்தி படுத்தபடியே அவளை நோக்காமல், "நீ இங்க என்ன பண்ற? எனக்கு யார் ட்ரிப்ஸ் போட்டது" என்றான்.

அவனின் கேள்வியில் ஒரு நொடி ஆடிபோனாலும் "உங்களுக்கு ரொம்ப ஜுரம் காயுது. நா வரும்போது. மூச்சு பேசில்லாம மயக்கத்துல இருந்திங்க. அதான் டாக்டர் வந்து பார்த்துட்டு உங்களுக்கு ட்ரிப்ஸ் போட்டுட்டு போயிருக்காங்க." என்றாள்.

எதுவும் பேசாமல் விழிகளை அழுந்த மூடியவன்.

" என்னை பத்தி எப்போலர்ந்து கவலை உனக்கு? நான் யார் உனக்கு? எனக்கு யாரோட உதவியும் தேவையில்லை. இருந்தாலும் நீ... சாரி... நீங்க செஞ்ச உதவிக்கு நன்றி. நீங்க போகலாம்". என்றான்.

அவனின் வார்த்தைகள் மிகவும் கூர்மையான ஆயுதமாய் அவளை தாக்க, என்ன சொல்வதென்று தெரியாமல் விழிகளில் நீர் சுரக்க அங்கேயே நின்றாள்.

சில நொடிகள் கடந்த பின் கண்ணீரை துடைத்துக்கொண்டு சமையலறை சென்று தஞ்சை ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்தவள். "இந்தாங்க இந்த கஞ்சிய குடிச்சா உடம்பு கொஞ்சம் தேரும்." என்றாள் கஞ்சியை நீட்டியபடி.

விழிகளை திறந்து அவளையும் கஞ்சியையும் மாறி மாறி பார்த்த தீரன்.

வேகமாக வாங்கி அவளின் சமையலை ருசிக்க ஆசையிருந்தாலும்

"எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க இங்க இருக்கிறதை பார்த்தா யாராவது எதாவது சொல்லுவாங்க. நீங்க கிளம்புங்க" என்றான்.

"ஹ்க்கும் இது வேலைக்கு ஆகாது." என்று தனக்குள் முணுமுணுத்தவள்.

"இங்க பாருங்க டாக்டர் என்னை நம்பி தான் இங்கே வச்சு ட்ரிப்ஸ் போட்ருக்காங்க. அதனால நான் இங்கே தான் இருப்பேன். வேணாம்னா சொல்லுங்க ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்துவிட்டுட்டு போறேன்" என்றாள் மிரட்டலாக.

அவளின் மிரட்டலும் அவனுக்கு ரசிக்க தோன்ற, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

'அப்படி வா வழிக்கு. உனக்கு ஊசினாலே பயம். அதைவிட ஹாஸ்பிட்டல்லனா அலர்ஜி' என்று உள்ளுக்குள் புன்னகைத்தாள் மிருதி.

"இந்தாங்க இந்த கஞ்சிய குடிங்க" என்று நீட்டவும் எழ முயற்சித்தான்.

"இருங்க" என்று அவனை மெல்ல எழுப்பி அமர வைத்தாள்.

சற்று தள்ளி கட்டிலில் அமர்ந்தவள் மெல்ல கஞ்சியை ஸ்பூனால் புகட்ட ஆரம்பித்தாள்.

உள்ளுக்குள் குதுகளித்தாலும் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாது அமைதியாய் உண்டான்.

மாத்திரையை போட்டுகொண்டு அசதியில் கண்மூடினான்.

"உடம்புக்கு முடியலைன்னாலும் இந்த கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல." என்று சிரித்தாள்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
287
Reaction score
182
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 40:

உறங்கியவன் கண் விழித்ததும் தேடியது மிருதியை தான். அவனை ஏமாற்றாமல் எதிரில் வந்து நின்றாள்.

"இப்போ எப்படி இருக்கு?" என்றாள் மெதுவாய்.

பதில் கூற மனம் விழைந்தாலும் எதுவும் பேசாமல் எழுந்து நின்றான், ஆனால் களைப்பில் மீண்டும் தள்ளாடியபடி மெத்தையில் அமர,

"என்னாச்சுங்க பார்த்து?" என்று நெருங்கியவளை தடுத்தது அவனின் வார்த்தைகள்.

"எனக்கு இப்போ பரவால்ல. நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி. இனி உங்க உதவி வேண்டாம். நீங்க போகலாம்." என்றான் குனிந்த தலை நிமிராமல்.

அவனின் வார்த்தையில் சம்மட்டியடித்தாற்போல் மிருதி நின்றுவிட விழிகள் லேசாய் கலங்கியது.

"இன்னும் முழுசா நீங்க குணமாகல... பார்த்துக்கோங்க" என்று திரும்பிப் பாராமல் வேகமாய் வெளியேறினாள்.

அவள் சென்றவுடன் மனம் தவிக்க ஆரம்பித்தது.

'அவ பார்க்க மாட்டாளான்னு ஏங்க வேண்டியது. இப்போ உனக்காக இங்க இருந்தா போ போன்னு துரத்த வேண்டியது.' என்று மனம் கடிந்து கொள்ள.

'எனக்கு மட்டும் ஆசையா என்ன? மிருவை என் உள்ளங்கைல பொத்தி வச்சுக்கணும்னு மனசு கிடந்து அல்லாடுது... ஆனா என்ன செய்ய? அதுக்கு இன்னும் நேரம் வரலை. எங்ககூட இருக்க முடியலைன்னு அவ வருந்தனும். அப்போ தான் இதெல்லாம் சரியாகும்.' என்று தனக்குள் தர்க்கம் நடந்து கொண்டிருக்க அவனுக்கு வந்த அலைபேசியின் செய்தி அதை தலைகீழாக்கி நிலைகுலைய செய்தது.

"நல்லா செக் பண்ணிட்டீயா? உண்மை தானே?" என்றான் முக இறுக்கத்துடன்.

"ஆமா. நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும். எவ்ளோ சீக்கிரம் முடியமோ அவ்ளோ சீக்கிரம்." என்ற எதிர்முனையின் பரபரப்பில் இவன் ஆட்டம் கண்டு தான் போனான்.

"சரி. இன்னைக்கு ஈவ்னிங் அஞ்சு மணிக்கு பார்க்கிறேன். எனக்கு இப்போவே எல்லாத்தையும் மெயில் பண்ணு" என்றான்.

"ஸ்ரீஷா" என்றவனின் குரலில் தெரிந்த மாற்றம் அவளை கவலை கொள்ள செய்தது.

"மாமா! என்ன மாமா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அக்கா அழாத குறையா டென்ஷனா பேசினா? நீங்க இப்போ திடீர்னு போன் பண்றிங்க? அக்கா எங்க?" என்றாள் ஸ்ரீஷா.

"எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன். நான் உன்கிட்டயும் அமுதன்கிட்டயும் பேசணும். இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ள நீ அமுதன் வீட்டுக்கு வந்துடும்மா." என்றான் தீரன்.

தூக்கி வாரி போட்டது ஸ்ரீஷாவிற்கு.

"என்ன மாமா? ஏதாவது முக்கியமான விஷயமா? நீங்க இவளோ சீரியசா பேசி நான் பார்த்தது இல்லையே." என்றாள் பதட்டமாக.

"அதெல்லாம் ஒன்னுமில்லைடா. ஆமா ரொம்ப முக்கியமான விஷயம் தான். நேர்ல சொல்றேன் வா. உங்க அக்காக்கு எதுவும் தெரியக்கூடாது இப்போ வைக்கிறேன்." என்று வைத்தான்.

அடுத்து அமுதனுக்கு போன் செய்தவன்.

"அமுதா! ரொம்ப முக்கியமான விஷயம். ஸ்ரீஷாவும் வரா. உன் பிரெண்டுக்கு எதுவும் சொல்லாத. நானும் வரேன்." என்று வைத்தான்.

அமுதனும் ஸ்ரீஷாவும் தான் என்னவாக இருக்கும் என்று குழம்பி போயினர்.

******

'அவருக்கு எப்படி இருக்கு தெரியலையே?' என்று வீட்டுக்குள் நடை நடந்து கொண்டிருந்தாள் மிருதி.

"ஹலோ! ஸ்ரீ. உன் மீட்டிங் முடிஞ்சுதா?" என்றாள் மிருதி.

"முடிஞ்சுதுக்கா. மாமாக்கு எப்படி இருக்கு? சாப்பிட்டாரா? நீங்கி சாப்பிட்டீங்களா?" என்றாள் ஸ்ரீஷா அங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள.

"ஹம். கொஞ்சம் குறைஞ்சிருக்கு. சாப்பிட்டார். ஆனா.." என்று முடிக்காமல் இழுத்தபடி நிற்க.

"ஆனா என்னக்கா?" என்றாள் எதுவோ நடந்திருக்கு என்பதை.

"ஹ்ம்ம்.. கொஞ்ச தேறினவுடன் உன் மாமனுக்கு திமிர். எனக்கு உடம்பு சரியாகிடுச்சு. நீ போடின்னு சொல்லிட்டாரு." என்றாள் மிருதி சிறுகுழந்தை குற்றம் சாட்டுவது போல்.

"அப்படியா சொன்னாரு?" என்று சிரித்தாள் ஸ்ரீஷா.

"என்னடி சிரிக்கிற? உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. நீ உன் மாமனுக்கு தான சப்போர்ட் பண்ணுவ." என்றாள் வெடுக்கென்று.

"ஆமா ஆமா. சரி அமுதன் வீட்டுக்கு போறேன். வர லேட் ஆகும்கா. அதை சொல்லத்தான் போன் பண்ணேன்." என்றாள்.

"சரி போய்ட்டுவா. பத்திரம்" என்று வைத்தாள் மிருதி.

*******

அஞ்சு மணி தீரன் அமுதன் வீட்டில் ஸ்ரீஷாவிற்காக காத்திருந்தான்.

"சாரி மாமா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு." என்று உள்ளே நுழைந்தாள் ஸ்ரீஷா.

"எப்படி மா இருக்க?" என்று புன்னகைத்தான் தீரன்.

"நல்லா இருக்கேன் மாமா. எங்க இவங்க ரெண்டு பேரையும் காணமே?" என்றாள் விழிகளை சுழலவிட்டபடி அமுதனை தேடிக்கொண்டே.

"அவங்க ரெண்டு பேரும் கிச்சன்ல என்னவோ பண்றாங்க." என்றான் மகளை பற்றி நினைத்து லேசாக புன்னகைத்து.

அவன் வீட்டிற்கு வந்ததும், "அப்பா!" என்று ஓடி வந்து கட்டிக்கொண்ட மகளை கண்டதும் கவலைகள் சிலநொடி ஒட்டமெடுத்தது.

"உங்களுக்கு இப்போ பீவர் எப்படி இருக்கு தீரன்?" என்று அமுதன் கேட்கவும், "அப்பா! உங்க... ளுக்கு என்ன... பா?" என்று தந்தையின் நெற்றியையும் கழுத்தையும் மாற்றி மாற்றி தொட்டு பார்த்த மகளின் அன்பில் விழிகள் கலங்க உள்ளம் குளிர்ந்தது தீரனுக்கு.

"எனக்கு இப்போ பரவால்ல டா." என்று கூறினாலும் தீரனின் லேசான தள்ளாட்டத்திலும் முக சோர்வையும் கண்டு கொண்ட அமுதன். வெந்நீர் வைத்து குடிக்க வைத்தான்.

"இவ்ளோ உடம்பு முடியல உங்களுக்கு. ரெஸ்ட் எடுத்துருக்கலாம்ல? நாளைக்கு பேசியிருக்கலாமே? என்ன அவ்ளோ அவசரம் தீரன்? இல்ல கண்டிப்பா பேசியே ஆகணும்னா நான் வந்திருப்பேன்ல?" என்றான் தீரன்.

வறட்சி புன்னகை ஒன்றை உதிர்த்த தீரன்.

"ரெஸ்ட்டா? நான் இப்போ இருக்க மன நிலைமைக்கு எதுவும் சொல்றதுகில்ல அமுதன். நாளைக்கு இல்ல.. இந்த ரெண்டு மணி நேரம் நான் தள்ளி போட்டதே தப்பு. அவ்ளோ சீரியஸான விஷயம். அங்கயே வர சொல்லிருக்கலாம். ஆனா, அங்க பேச வேண்டாம்னு தான் இங்கே வரசொன்னேன்." என்ற தீரனை ஆழமாய் நோக்கினான் அமுதன்.

"என்ன விஷயம் தீரன்?" என்றான் ஒருவித புரிதலுடன்.

"ஸ்ரீயும் வரட்டும்." என்றான் பார்வையில் முடிவுடன்.

"அப்பா சாப்...பிட்டியா?" என்ற மகளை உச்சி முகர்ந்தவன்.

"நான் சாப்பிட்டேன் டா தங்கம்" என்று புன்னகைத்தான்.

"சரி. நீங்க இருங்க நாங்க ஏதாவது சாப்பிட செய்றோம்" என்று திஷாவை பார்த்த அமுதன்.

"பேபி! நாம அப்பாக்கு ஏதாவது சாப்பிட செய்லாமா?" என்று கண்ணடித்து கேட்டான்.

"ஓகே பேபி" என்று மழலையில் புன்னகைத்து அமுதனிடம் தாவியது குழந்தை.

"உட்காருங்க தீரன்" என்று சமையலறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

பத்து நிமிடம் கழிந்திருக்கும் உள்ளே நுழைந்தாள் ஸ்ரீஷா.

"மாமா எப்படி இருக்கு உங்களுக்கு?" என்றபடி உள்ளே நுழைந்தாள்.

"ஹம் நல்லா இருக்கேன்டா" என்று புன்னகைத்தான்.

வேண்டாம் என்று தீரன் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் சாப்பிட வைத்து அனைவரும் சாப்பிட்டு முடித்து அமர்ந்தனர்.

"என்ன விஷயம் இப்போ சொல்லுங்க?" என்றான் அமுதன்.

"திஷா குட்டி! போங்க உங்களுக்கு பிடிச்ச டிவில சேனல் பாருங்க. நாங்க கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும்" என்றான் தீரன்.

"ஓகே பா" என்று உள்ளே ஓடியது குழந்தை.

இருவரையும் ஒருமுறை பார்த்தவன். தன் கைப்பையில் இருந்த ஒரு பைலை எடுத்து முன்னிருந்த மேசையின் முன் வீசினான்.

"எடுத்து பாருங்க" என்றான்.
 

govarthani

Member
Messages
33
Reaction score
18
Points
8
super sister . na full story update panidinganu parthen.it's ok .next episode eppo update panuvinga sollunga sister. dheeranum muruthiyum eppo onna seruvanga sister . please konjam fasta story update panunga sister .
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
287
Reaction score
182
Points
43
super sister . na full story update panidinganu parthen.it's ok .next episode eppo update panuvinga sollunga sister. dheeranum muruthiyum eppo onna seruvanga sister . please konjam fasta story update panunga sister .
Okma seekirama mudichuruvom. Please read and comment my other story also. Thank you
 
Top Bottom