வாவ்.. செம அப்டேட். ரொம்ப ரசிச்சு படிச்சேன்.
கௌதம் ஆன்டி ஹீரோவா மாறினா கூட அதையும் ரசிக்க தோணுதே. நீயே சொன்னாலும் நான் என் வேலையா முடிக்காம விட மாட்டேன்னு கௌதம்.. நீ நரகத்துக்கே போனாலும் அங்கேயும் நான் உன்னோடு தான் வருவேன்னு சஞ்சனா.. ஒரு வாரம் முன் பூங்கொத்து வாங்க யோசித்த பெண்ணை, திருமணமே செய்த ஆச்சரியம் கௌதமிற்கு மட்டுமல்ல . எங்களுக்குமே. நந்தாவை பழிவாங்க சஞ்சனா மேல் உள்ள காதல் மட்டுமே காரணம் அல்லன்னு சஞ்சனாவிற்கும் புரிந்தது. அவனின் மன நிலையை மாற்றுவாளா? இந்த அத்தியாயத்தில் சஞ்சனா கௌதம் காதல் வெளிபடுத்தின வார்த்தைகள் எல்லாம் சான்சே இல்லை.
"இந்த ஒரு முத்ததிலேயே உன்னோடு வாழ்ந்து முடிசுட்டேன். போனால் போயிட்டு போறேன் போடி "
"இப்போ என்ன ரெண்டு நாளிலே போயிடுவேன். அதானே சொல்லப் போறே . சரி போ..ய்யா. அது வரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போறேன் "
மொத்த அத்தியாயமும் இந்த ரெண்டு டயலாக்லே தெறிக்க விட்டுட்டீங்க..
சஞ்சனா , கௌதம் டயலாக்லாம் ரொம்ப ரசிச்சு படிச்சேன். & சஞ்சனா அப்பா தி க்ரேட். வாழ்க்கை வட்டம்ன்னு அவருக்கே திரும்ப வந்திருக்கா? சஞ்சனா பதினாறு அடி பாயுற குட்டியோ !!
நந்தாவை பழி வாங்கும் வேகம் இனி குறையுமா? தெரிந்து கொள்ள ஆவல். வத்சலாவின் மற்றொரு பரிணாமம்ன்னு தோணித்து