Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️....
உண்மையாவே என்ன சொல்றதுன்னு தெரியல. படிச்சு முடிச்சதும்.... கொஞ்ச நேரம் அமைதி. மாயவன் தனா ரெண்டு பேரும் சேர மாட்டாங்க'னு உறுதியாக நம்பினேன். அதே மாதிரிதான் முடிவும் இருந்துச்சு. ஆனா எதிர்பார்க்காத ஒண்ணு மகிழன் தான். எனக்கு மகிழன் பேரு ரொம்ப பிடிக்கும். மாயவன் குழந்தைக்கும் ஏற்ற பெயர்தான். மாயவன் மாதிரி... சிரிப்ப தொலைக்காம கடந்து போகனும்.
இந்த கதை ஆரம்பத்தில் சொன்ன மாதிரி முடிவு வரைக்கும் நான் இப்படித்தான்னு தனா இருந்து காட்டிட்டா. கதையில ரொம்ப பிடிச்ச விஷயம்... ஒரு இடத்தில் கூட தனா தன்னை நியாயப்படுத்தல. என்னைப் பொருத்தவரைக்கும் தனா மேலையும் நிறைய தப்பு இருக்கு. அதை அவளும் முழுசா உணர்ந்ததுக்கு அப்புறம் தான்... தனக்கான அடையாளத்தை தேடாம.... கொடுக்கப்பட்ட கஷ்டங்களுக்கு தண்டனை கொடுத்தா. ஒரு மனுஷனுக்குள்ள ஆசை வளர்ந்துட்டா அவன அடக்குறது ரொம்ப கஷ்டம். அதே தான் இந்த இரு பெண்கள் வாழ்க்கையிலும். அன்னைக்கு தனா நினைச்சிருந்தா வினய் கிட்ட இருந்து ஏதோ ஒரு வகையில வெளியே வந்திருக்க யோசிச்சிருப்பா. லேப்டாப் முன்னாடி அவளை உட்கார வெச்சி வினய் சொன்ன வார்த்தைக்கு அவனைத் திரும்பிப் பார்த்த நொடி தான் அவளுடைய வாழ்க்கை மாறின நொடி. இந்த கதையில நிறைய இடத்துல... வார்த்தைகள் வெளிப்படையா இருந்திருக்கு. ஆனா அத ஆராய்ச்சி பண்ணி பார்க்கிற அளவுக்கு மனச கொண்டு போகாம மாயவன் தனா பின்னாடி கொண்டு போன சாமர்த்தியம் எழுத்தாளரின் திறமையை காட்டுது. வார்த்தையை போல கூராயுதம் எதுவுமே இல்லை. அதே வார்த்தையை தான்.. முடிஞ்சு போன வாழ்க்கைக்கும் பிள்ளையார் சுழி போடுது. ஆணும் பெண்ணும் பேசக் கூடாத... அதுவும் சில சந்திப்புகளில் பழகிய இருவரும் பேசவே கூடாது பல விஷயங்கள் மாயா தனா குள்ள நிகழ்ந்து இருக்கு. அத ரெண்டு பேருமே இயல்பா கடந்து போகும் போது... பார்வையாளரா இருக்கிற வாசகியா நம்பமுடியாத பிரமிப்பு தான். பல இடங்கள்ல... எப்படி இதுன்னு யோசிச்சிருக்க. இப்படி நடந்திருக்க வேண்டாம்'னு பயந்து இருக்க. இதெல்லாம் உண்மையா நடக்குதுன்னு... மனசு ஓரத்துல ஒரு வலி. நல்லவளோ கெட்டவளோ... தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒரு நியாயத்தை தேடிக்கிட்டா. நான் இப்படிதான்னு கடந்து போக... நிறைய வலிகளை இந்த சமூக அனுப்பி விடும். அத்தனையும் சுமந்துகிட்டு போக வேண்டிய கட்டாயம். தனா அப்பா.. கேரக்டர் இயல்பா அடித்தட்டு மக்கள் சந்திக்கிற குணம் தான். பொண்ணு வசதியா இருக்கா ன்னு பார்க்காமல்... அப்பவும் பாரபட்சம் பார்க்காம திட்டுன அவருடைய குணத்துல கூட ஒரு அன்பை தான் நான் உணர்ந்தேன். அம்மாக்கள் எப்பவுமே தனி ரகம்... என்ன தப்பு செஞ்சாலும் தன் பிள்ளைனு அரவணைக்குற கடவுள். தனாவ பற்றி யார் என்ன பேசினாலும் இந்த தாய் உள்ளம் மட்டும் உண்மையான அன்பை கொடுத்து கிட்டே இருக்கும். அதுக்கு மற்றொரு சாட்சிதான் மகிழன். மத்த விஷயங்கள் அவங்க கண்முன்னே நடக்கல. ஆனா மகிழன்? சில உறவுகளுக்கு இந்த அம்மா கூட இல்லாம போகுது. அப்படி கிடைக்காம போனாலும் சரியான பாதையில போறவங்க ஒரு சிலர் தான். அதுல ஒருத்தன் தான் மாயவன். எங்கேயோ பிறந்து, யார்கிட்டயும் வளர்ந்து, தஞ்சம் புகுந்து தன்னுடைய அடையாளத்தை தேடிக்க, ஒவ்வொரு நாளும் தனக்குள்ள நம்பிக்கையை வளர்க்க, மாயவன் எவ்ளோ போராடி இருப்பான். தனா கண்ணுக்கு தெரிஞ்ச எதிரியோடு போராடி இருக்கானா...
மாயவன் யாருன்னே தெரியாத விதி கூட... இத்தனை நாள் போராடிட்டு இருந்திருக்கான்.

சாவித்திரியை கொன்னுட்டன்னு தனா பேசும்போது உச்சபட்ச இயலாமை. ஆண்களுக்கு பாலியல் தொந்தரவு நடக்கும்னு மாயவன் சொல்லும் போது வாழ்க்கையோட யதார்த்தம் புரிந்தது.
வதனி ஒரு இடத்தில் சொல்லி இருப்பா அழக பாத்து தான் காதலிச்சன்னு. என்ன பொறுத்த வரைக்கும் அந்த வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை. என்னதான் மனசுனு பேசினாலும்.. முதல்ல ஒருத்தர பார்க்க வைக்கிறது முகம் தான். எத்தனையோ பேர் அழகா இல்லைன்னு மனசை குத்தி கிழிக்கலையா? இங்கே பல பேரோட காதல்.. மனச பார்க்கிறது இல்லை. வாழ்க்கையோட யதார்த்தம் இதுதான். வெகு சிலருக்கே அந்த வாய்ப்பு வரமா அமையுது. தப்பு பண்ணி திருந்தி வாழும்போது கூட... உண்மையை சொன்ன வதனி குணம் நம்ம சராசரியா பார்க்கிற மனுஷங்கள் ல ஒன்னுதான்.

தனா மாதிரி திரும்பவும் குடும்பத்தை சந்திக்க துணிவு யாருக்கும் இருக்காது. அதே மாதிரி கூட பிறந்தவர்களும் கல்யாணம் பண்ணவங்களும் அவள சாதாரணமா விட்டிருக்க மாட்டாங்க. அந்தப் பதினேழு வயசு பையன் கேட்ட மாதிரியும், அக்கா புருஷன் பார்த்த மாதிரியும் இன்னும் ஆயிரம் கண்கள் ஆடையை தாண்டி வினய் பண்ணதை விட மோசமா கற்பனையில வாழ்ந்து இருக்கும்.

கதை ஆரம்பத்துல இருந்த குணமும் முடிவில் இருந்த குணமும் வேற வேற தனா உட்பட பலருக்கு. போலியான முகங்கள் அவிழ்ந்து உண்மையான முகம் பல வலிகளோடு வெளியே வந்து இருக்கு. ஆனா ஒருத்தன் மட்டும் தான்... தன்னுடைய இயல்பையும் வார்த்தையையும் மாற்றாம இது உண்மையா கற்பனையான்னு கடைசி வரைக்கும் மாய உலகத்தில் தங்க வைச்சிட்டான். அப்படி ஒரு அழுத்தம். இயல்பா அவனோட வாழவும் முடியாது. சரி போன்னு விடவும் முடியாது. அழகா ரசிக்கிற இயற்கை மாதிரி... அதுக்குள்ளேயும் சின்னதா ஒரு சீற்றம் இருக்கு. எப்ப வேணா அதுல நம்ம சாகலாம். சிந்தாத கண்ணீருக்கு விலை அதிகம். யார் வேணா மாறட்டும் என்னோட பார்வை கூட மாறாதுன்னு பிடிவாதமா நிகழ்த்திக் காட்டிடான். 30 வயசுக்கு மேலயும்... இல்லற வாழ்க்கையை தேடி போகாம இருக்க எப்படித்தான் மனசு வருதோ. ரொம்ப இயல்பா சாதாரணமா... அதான் குழந்தைகளுக்கு மகிழன் இருக்கான். சொல்லிக்க இந்த ஆசிரமம் இருக்குன்னு சொல்றத கேட்டதும்.. அவ்வளவுதான் அந்த வாழ்க்கை! ஒண்ணுமே இல்லையா? இதுக்கா இவ்வளவு போராட்டம்'னு ஒரு நிமிஷம் யோசிச்சேன். ஆனா உங்க கிட்ட ஒன்னு சொல்லி ஆகணும்... மாயவன் மாயாவி தான். அவனை மாதிரி அவன் மட்டும்தான். ஆனா என்ன என்னோட மதுக்கு தம்பி இவன் இல்ல 🙈🙈🙈.

இவங்க ரெண்டு பேர் நடுவுலையும் நிச்சயமா காதல் இல்லை. இல்லற வாழ்க்கை தேவையும் இல்லை. வாழ்க்கை முழுக்க இவர்களுடைய சந்திப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ரெண்டு பேருக்கும் பிரிவே இல்லாத பாலம் மகிழன். வாழ்க்கை முழுக்க நான் இருக்கேன்னு ஒரு நம்பிக்கை. உண்மையான அன்பு. எந்த நேரத்திலும் பாதுகாக்கிற அரவணைப்பு. நல்ல தோழமை. இன்னும் இந்த உறவு குள்ள என்னைமோ இருக்கு. அவங்கவங்க பாதையில.. அவங்க அவங்க போய்க்கிட்டு இருக்காங்க. நிச்சயமா இந்த பாதை மறைமுகமா இன்னோரு ஆள் வர தான்.

இப்பதான் முதல் அத்தியாயம் படிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள முடிவே வந்துடுச்சு. சில விஷயங்கள் கண்ணு இமைக்கிற நொடிக்குள் நடந்து முடிச்சிருது. அதுவும் உங்களுடைய எழுத்து நடை... அரை நொடி ஆச்சரியம். நிதானமா மனச கட்டுபாட்டுல வச்சிட்டு படிக்கனும். இல்ல'னா நிச்சயமா நீங்க எழுதுற தீவிரவாத இயக்கத்துல சிதைந்து போய்டுவோம். மெல்ல மெல்ல ... உங்க எண்ணங்களை எங்களுக்குள்ள விதைக்கிறிங்க... அதும் பெர்மிஷன் கேட்காம. ஓவரா புகழ்ந்தா பொங்கல் வைக்கிறாங்க🤣🤣🤣🤣🤣🤣 எதுக்கு வம்பு. ஆனாலும் மனசுல உங்காந்துட்டு சடுகுட ஆடுற உங்க கிட்ட மயங்கி விழுந்தத ஒத்துகிட்டு தான் ஆகணும் . இந்த போட்டியில உங்க படைப்பு நிச்சயம் பெருசா பேசப்படும். இந்த கதை வெற்றி பெறனுன்னு ரொம்ப விரும்புறேன். நிச்சயமா நடக்கும் நான் நம்புறேன்.

தொடர்ந்து.. ஊசியாய் இதயங்களை கிழிக்கும் கதாபாத்திரங்களை எழுத்துலகில் பிறக்க செய்யுங்கள். பேசட்டும் உங்க கதை வளர்ப்பு மரணம் இல்லாமல்.

லவ் யு சோ மச் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sema sema👌👌👌👌👏👏👏.
 
Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18

கதைக்கு விமர்சனம் குடுக்கலாம்னு வந்தேன் உங்க விமர்சனம் பார்த்ததும் உங்க விமர்ச்சனத்துக்கு விமர்சனம் பண்ணணும்னு தோனுனது. ரெம்ப அழகான மற்றும் ஆழமான விமர்சனம்👌🏼👌🏼👌🏼👌🏼👏👏👍👍👍
 
Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
வாவ் சூப்பர் எண்டிங். மாயவனும் தனாவும் அவங்க அவங்க நிலைல இருந்து கடைசி வரை மாறல👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼. மகிழன்னு ஒரு கதாபாத்திரம் வரும்னு எதிர்பார்க்கல. அதும் மாயவன் சாயல்ல நிச்சயமா எதிர்பார்க்கல👏👏👏. தனா வீட்டுல அவளோட அக்கா கணவன் நடந்துகிட்டதை பார்த்தா தெரியுது அவங்க எவ்வளவு அழுக்கு நிறைஞ்ச மனுஷன்னு. தனா அண்ட் மாாயவன் பேசுறது எப்பவும் போல நல்லா இருக்கு.
கதை முதல் அத்தியாயம் படிக்கும் போது இது நந்தினி சிஸ் ஜானர் இல்லையேனு நினைச்சேன். இப்ப கடைசி அத்தியாயம் படிச்சுட்டு இதுவும் நந்தினி சிஸ் ஜானர்தான்னு தோனுது. எவ்ளோ அழகா வார்த்தைகளை கோர்த்து ஒவ்வொருத்தரோட உணர்வுகளையும் எழுதி இருக்கிங்க👏👏👌🏼👌🏼👌🏼. பேசும் போதும் படிக்கும் போதும் முகம் சுழிக்க வைக்கும் விஷயங்களை வெளிப்படையாக மாயவனும் தனாவும் பேசிய பொழுது வித்தியகமாக தெரியவில்லை. காரணம் நீங்கள் வாரத்தை கோர்வையில் பண்ணிய ஜாலம்👏👏👏. தனா வேங்கையாய் மாறி அவளை ஏமாத்துன நரேன் அண்ட் வினய்க்கு அவளோட பாணில தண்டனை வழங்குனது சிறப்பு👍👍👏👏. மாயவன் என்ன சொல்றது பேசுறது,சிரிக்குறது, செய்யுற செயல் எல்லாமே ஒருத்தனுக்கு ரசிக்கும்படியா இருக்குமானு யோசிக்க வச்சவன். மாயவன்😍😍😍😍😘😘😘😘😘😘😍😍😍. நான் ஒன்னு கவனிச்சேன் மதுரவன், மதியன், மனோ இப்ப மாயவன்(பேரு சதிஷா இருந்தாலும் மாயவன்தான்) இவங்க எல்லாருமே லைட் கேரக்டரா இருக்காங்க. தேவைப் படும்போது கோபப்படுறாங்க மற்ற நேரம் எல்லாம் புன்னகை முகமா மற்றும் அழுத்தமா இருக்காங்க. எல்லாரோட பெயரும் ம வரிசைல வந்துருக்கு. இதுக்கு எதாவது காரணம் இருக்கா இல்லை எதார்த்தமா வந்ததா?.
கண்டிப்பா வண்ணங்கள் நாவல் போட்டில இந்த கதைக்கு பரிசு கிடைக்கும். வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐.
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
வாவ் அக்கா மிக அழகான கதை... சொல்லவார்த்தைகளே இல்லை... முதல் பகுதியில மாயவன் நம்ம மனசை எப்படி கவர்ந்தானோ அது கடைசிவரையும் நீடிச்சுது.... சந்தனா ஆரம்பமே பிரம்மிப்பா ஆன்ட்டி ஹீரோயினா நமக்கு அறிமுகம் ஆகுறாள்... சாவித்திரியா அவ கடந்து வந்த வாழ்க்கையும், சினிமா எவ்வளவு அவ வாழ்க்கையை மொத்தமா மாத்துச்சு. வினை பிடித்தவனின் வினையால் வந்த பாதகம்..... ஒவ்வொரு விசயத்தையும் ரொம்ப அழகா செதுக்கிருக்கீங்க அக்கா..... பிற்பகுதியில தனா மனசு தொட்டுட்டா அக்கா.... மாயவன் தனா சந்திப்புல தொடங்கி ஒவ்வொரு இடமும் இருவரது கவிதை பேச்சுக்களும் சரி, இறுதிவரை எப்படி தொடர்ந்தார்களோ அதே நிலை மாறாது ஒரு எண்டிங்க்.... ப்பா வேறலெவல் அக்கா. 😍😍😍😍😍
கடைசி பகுதி படிக்கும் போது, சந்தோசம் வலி பாரம் எல்லாமே கலந்த மிக்ஸ்டு எமோசன்ஸ் இருந்துச்சு😍😍😍😍😍😍😍 நான் முழுவதுமா படிச்ச உங்க கதை இதுதான்.... நந்தினி அக்காவோட வார்த்தை ஜாலத்துல மதி மயங்கி போயிட்டேன் சீரியஸ்லி😍😍😍😍😍😍

மனதில் பதியும்
மாயவனே...
திரையில் மறைந்த
பெண்ணவளின்
பிழைகளை
திருத்தி....
புது உலகத்தை
காட்டிய நீயும்
அவளின் ஆசானே.....

மாயவன்😍 தனா..... ( என்றும் தொடரும் இவர்களின் பந்தம்)
 
Mrs. Prabha Sakthivel

Active member
Messages
115
Reaction score
103
Points
43
23 to இறுதி அத்தியாயம் வரை மிக அருமை. உங்கள் எழுத்துக்கள் எப்பவுமே உணர்வு பூர்வமாகவும், நடை முறை வாழ்க்கையோடு தொடர்புடையதாக தான் இருக்கும். அது போல தான் இந்த கதையும். " பிழையாய் நீ திருத்தமாய் நான் " மிக அருமை. திரைத்துறைக்கு பின் நடக்கும் சில செய்திகள் ஊடகம் மூலம் அறிந்தாலும், சந்தனா போல பல பேர் வாழ்கை அமைந்துள்ளதோ என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது.
திரை துறை கனவில் மிதந்து நிதர்சனம் தெரியாமல் வதனி போல கனவில் இருக்கும் இன்றைய தலைமுறைக்கு சிறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கதை.மாயன் ஒரு மாயாவி தான். அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட மாயக்காரன்.
மொத்தத்தில் மிக அருமை 👌👌👌👌👌போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
 
Ruby

Member
Messages
48
Reaction score
45
Points
18
வித்தியாசமான முடிவு...

மாயவன் வித்தியாசமான ஆள் தான்... அவளுக்காக செஞ்சாலும் வளைந்து குடுத்தும் குடுக்காது என அவனோட நிலையில் அழகா நிக்கிறான்... இருவருமkkum இடையில் என்னவோ ஆனால் அழகான பந்தம்... ஒருவருக்கு ஒருவர் துன்பத்திலோ/இன்பத்திலோ, தேவையிலோ தோள் கொடுக்கும் பந்தம்...

அவள் குடும்பத்தோடு சேர்ந்தது சூப்பர்.. அம்மா அப்பா கூட வச்சுட்டு, அவளுக்கான ஒரு வாழ்வை அமைசசுக்கிட்டா.. சூப்பர்...

தவறாக பயன்படுத்தப்பட்ட போதிலும் நிமிர்ந்து நின்னுட்டா... தப்பே செய்த போதிலும் நிமிர்வை விடலை... அந்த தன்னம்பிக்கையை கெட்டியா பிடிச்சு இருக்கா.. that's so nice sis...
 
Ruby

Member
Messages
48
Reaction score
45
Points
18
சந்தனா

தவறுகள் இழைக்கப்பட்ட போதும் தடுமாறிடவில்லை
தவறிழைத்த போதும் தயங்கிடவில்லை
துரோகங்கள் சூழ்ந்த போதும்
வீழ்ந்திடவில்லை
சூலே சூழ்ச்சியான போதும்
சுருண்டிடவில்லை
நட்பே நம்பிக்கை கொன்றபோதும்
நடுங்கிடவில்லை
துரோகம் துரத்திட துன்பம் நீக்கிட துணிந்த மனம் துவண்டிடவில்லை
கன்னியவான் கண்ட போதும் கரைந்திடவில்லை
கணமும் மாறா புன்னகையில் கனம் கரைந்த போதும் மயங்கிடவில்லை
நம்பிக்கையற்ற மனம் யாரென்று தெரியாது நம்பியபோதும் கசிந்திடவில்லை
துரோகம் வெல்ல தோள் கொடுத்த துணை விலகிய போதும் கலங்கிடவில்லை
பாதகம் செய்து முகம் காண முன் நின்ற போதும் நீ வெறுத்திடவில்லை
காலம் ஓடி தனிமை தின்ற போதும் தாய் மடி திகட்டிடவில்லை
தந்தையின் வசவுகள் தொடர்ந்த போதும் கசங்கிடவில்லை
கருக்கொலை செய்தும் கருவேந்த யாசித்தபோது நீ யோசித்திடவில்லை
பிழைகளே வாழ்வான போதும் திருத்தும் வரமாய் நீ வந்த போது தயங்கிடவில்லை
மழலையை மடியேந்திய பின் உன் முதல் ஒற்றை நெற்றி முத்தம் :oops:அப்போதும் நான் திகத்திடவில்லை😉
 
kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
வாவ் அருமையான கதை.தனா, மாயா அருமையான காரெக்டரஸ். தவறி பிழையான தனாவை திருத்தும் மாயா சூப்பர். கவிதைகள் அருமை. வெற்றி பெற வாழ்த்துகள் மா💐💐💐💐👌👌👌👌
 
Top Bottom