Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

Status
Not open for further replies.

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -19

“நான் வேற ஒரு பொண்ணை லவ் பன்றேன். இதுதான் காரணம். அவளைத் தவிர என் மனசுல யாருக்கும் இடம் கிடையாது.”

இந்தப் பதிலைக் கேட்டதும் மறுமுனையில் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

ஆயாசத்துடன் இவனும் அழைப்பைத் துண்டித்தான்.

‘நாளைக்கு வரப் போறப் பிரச்சினையைச் சமாளிக்கனும். ஃபேஸ் பன்னுவோம். உண்மை இதுதான்.’

மீண்டும் ஒரு காபியை கலந்து அருந்தினான். காபியின் கசப்புச் சுவை அவன் மனதிலிருந்த கசப்பை மறக்க முடிந்ததா என்பதுதான் தெரியவில்லை.

சிறிது நேரம் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக அமர்ந்தான். பின்பு எதையோ யோசித்தவன் மீண்டும் டைரியை எடுத்தான். விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தான்.

நமக்கு வர எந்த ஒரு பிரச்சினையையும் இழுத்து அடிக்காமல் எதிர்கொள்வது சிறந்தது. நாட்கள் ஆக ஆக நம் மனமே நரகமாக மாறிவிடும். இதுதான் எனக்கும் நடந்தது. என்னுடைய பாஸ்ட் பத்தி உனக்குத் தெரியும். அதில் பிரசண்ட் லைஃப்பிலும் நிறைய பிரச்சினைகள் வந்தால் அது ஒன்று நம்மை வலிமையாக்கும். இல்லை பர்ன் அவுட் என்று நம்மை உடைக்கத் தொடங்கிவிடும். மூன்றாவது வருடம் படிக்கும் போது மனச்சோர்வு அதிகமாகியது. ஆனால் வெளியில் யாருக்கும் தெரியாது. என்னுடைய குடும்பத்திற்குத் தெரியாது. நண்பர்கள் அனைவருக்கும் என் எதிரி என்று ஒருவனை அடையாளப் படுத்தி அவன் தான் என் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று கூறிவிட்டிருந்தேன்.

சொல்லப் போனால் நான் சாக நினைத்த நாட்கள் அதிகம். எனக்கு மனித வாழ்க்கைப் பிடிக்கவில்லை. அப்போது என் லைஃப்பில் ஒருவன் குறுக்கிட்டான். தற்காலிகமாக என் கோபத்தை அவன் மீது செலுத்த உதவினான்.

அவன் என் பக்கத்து டிப்பார்மெண்ட் ஜீனியர். என் தோழி ஒருவள் மூலம் அறிமுகம் ஆனான். முதல் பார்வையிலே அவன் என்னை சீனியராக நினைக்க வில்லை என்பதைத் தெளிவாக உணர வைத்தது. அன்று மாலையே போன் நம்பர் கேட்டதாக தோழி சொன்னாள்.

அப்பவும் சரி, இப்பவும் சரி என்னுடைய போன் நம்பர் அதிகம் வெளியில் தர மாட்டேன். எவ்வளவு நபர்களை தெரிந்தாலும் ஏன் பக்கத்து வீட்டில் இருந்தாலும் கூட நான் போன் நம்பர் வாங்க மாட்டேன். இது என் வழக்கம். அப்படி இருக்கும் போது இவனுக்கு என் போன் நம்பர் கொடுத்து விடுவேனா? அதற்கு வாய்ப்பே இல்லை.

‘குட் அப்படித்தான் இருக்கனும்.’ தேவ் பாராட்டினான்.

ஆனால் நான் எங்காவது வழியில் அவனைச் கிராஸ் செய்யும் படி நேர்ந்தால் நண்பர்களுக்குக் காட்டி ஏதோ சொல்லுவான். பொதுவாக எவன் எக்கேடு கெட்டால் என்று நடைபாதையில் செல்லும் எனக்கே அவன் அப்படிப் பேசுவது மிகவும் உறுத்தியது. எனக்கு தெரியமாலாவது பேசியிருக்கலாம்.

இவற்றை எல்லாம் விட்டு விடலாம். என் சித்தி வீடும் கோவையில் இருப்பதால் நான் அவர்கள் வீட்டுக்கு அவ்வப்போது வெள்ளிக்கிழமை மாலை சென்று ஞாயிறு திரும்பவும் விடுதிக்குத் திரும்புவேன்.

இப்படி ஒரு நாள் சித்தி வீட்டுக்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். அன்று பார்த்து அவனும் அவன் நண்பர்களும் அதே பேருந்தில் பின்னாடி ஏறியிருப்பர் போலும்.

இதையெல்லாம் நான் கவனித்தால் தானே. பேருந்தில் பயங்கரக் கூட்டம் வேறு. ஒரு வழியாக பேருந்தை விட்டு இறங்கினேன். சித்தி ஊர் வரும் போது கூட்டம் குறைந்து விட்டது. நான் இறங்கியதும் பேருந்தில் பின் பக்கம் இருந்த அவனும் அவன் நண்பர்களும் கைகாட்டி ஏதோ சிரித்தனர். கிட்டதட்ட பேருந்தில் இருந்த அனைவரும் திரும்பி பார்த்துவிட்டனர். ஐ வாஸ் சோ எம்பராஸ்ட்டு.

வீட்டிலும் சொன்னேன். அதற்குப் பிறகு அவனைத் திரும்ப கல்லூரியில் பார்க்கவில்லை. சில நாட்கள் கழித்து ஒரு நாள் மாலைப் பார்த்தேன். நானும் ஜெய் அண்ணாவும் கேண்டின் சென்று திரும்பவும் வந்துக் கொண்டிருக்கும் வழியில் அவன் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தான். ஜெய் அண்ணாவிடம் “அண்ணா இவனை இந்த மாதிரி பிகேவ் பன்ன வேண்டாம்னு சொல்லுங்கனு” சொன்னேன்.

அவரும் பொறுமையாக எடுத்துச் சொன்னார். ஆனால் அவன் கேட்கவில்லை. கூட்டத்துடன் இருந்ததால் எகிற ஆரம்பித்தான். சீனியர் என்றும் பார்க்கவில்லை. அதிகப்படியாகப் பேச ஆரம்பித்தான்.

ஒரு கட்டத்தில் “ரோட்டுல போற பொண்ணை நாங்க என்ன வேணா செய்வோம்” என்றான். அதுதான் என்னோட பிரேக்கிங்க் பாயிண்ட். ஜெய் அண்ணாவை இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி வந்துவிட்டேன். பிறகு பன்னிரெண்டாம் வகுப்பில் நான் சிலரை வச்சு செஞ்சதின் விளைவு எனக்கு கல்லூரியில் பொறுமையாக இருக்கும்படி வீட்டினர் அறிவுரை வழங்கியிருந்தனர். அத அப்புறம் சொல்றேன்.

நானும் அண்ணாவும் , ராஜ் இருக்குமிடம் சென்றோம். நடந்த விஷயங்களைச் அவனிடமும் கூறினோம்.

இறுதியில் ஜெய் அண்ணாவின் அறிவுரை படி அவனைப் பற்றி கல்லூரி முதல்வருக்கு ஒரு புகார் எழுதிக் கொடுத்தோம். முதலில் எனக்கு புகார் கொடுக்கத் தயக்கம். சின்னப் பையனின் வாழ்க்கையை வீணடிக்க விருப்பமில்லை. ஆனால் ரோட்டுல போற பொண்ணை என்ன வேணா செய்வோம் என்ற மனநிலை ஆபத்தானது. அவனை விட வயதில் பெரிய எனக்கே இந்த நிலை என்றால் சிறியவர்களின் நிலை என்ன?

அந்த வாக்கியம் மட்டுமே புகார் கொடுக்க வைத்தது.

அதற்குப் பிறகு வரும் விஷயங்களை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அடுத்த நாள் காலையிலே விஷயம் என் டிபார்ட்மெண்ட் முழுக்கப் பரவி விட்டது. துறைத்தலைவர் , பேராசிரியர்கள் என அனைவரும் ஆதரவு கொடுத்தனர்.

ஒவ்வொரு காலேஜிலும் கேங்க்ஸ் இருக்கும். அப்படித்தான் என் கல்லூரியிலும் உள்ளது. அந்தப் பையன் எங்கள் வகுப்பு மாணவர்கள் இருக்கும் கேங்குக்கு எதிரி கேங்கைச் சேர்ந்தவன். என்னைக் காரணமாக வைத்து இரு கேங்க்குகள் மோதிக் கொண்டன. இது வெளியில் நடந்தது. கல்லூரியில் நடக்கவில்லை. இதற்கு என்னுடன் படித்த மாணவனும் காரணம். அவனால் என் விஷயம் வெளிப்பட்டு கேங்க் வாராக மாறியது.

கல்லூரி முதல்வர் என்னை நேரில் அழைத்தார். நானும் சென்று நடந்தவை அனைத்தையும் விலாவாரியாகக் கூறினேன்.

அடுத்த நாளே அவன் என் தோழியின் உதவியின் மூலம் போன் செய்து சாரி கேட்டான். நீங்க ஏத்துகலனா எனக்கு டிசி கொடுத்துடுவாங்க என்று கெஞ்சினான். எனக்கு குழப்பம். போன் செய்து ஜெய் அண்ணாவிடம் ஆலோசனை கேட்டேன்.

“எனக்கு எதாவது இதுக்கு மேல பிரச்சினை வந்தா போலீஸ்கிட்ட கம்பிளெய்ண்ட் செஞ்சுருவேன். இப்படி சொல்லிட்டு அவனை மன்னிச்சு விட்டுரு.”

எனக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. இந்தப் பிரச்சினை முடிந்து சில நாட்கள் ஆன பின்னரும் ஜெய் அண்ணா என்னுடன் ஹாஸ்டல் வரை மாலை நேரத்தில் துணைக்கு வருவார். எனக்கு பாடிகார்டு மாதிரி. ஆனால் எனக்கு என் துறையில் ஆசிரியர்கள் அளித்த ஆதரவுதான். விக்டம் பிளேமிங்க் இல்லை. இப்படி பாதிக்கபடற அனைவருக்கும் ஆதரவு இருந்தால் ஒரு பலம் தானே.

எங்கள் துறைத்தலைவர் “நீ குட்டியா இருக்க யாழரசி அதனால்தான் அவன் உன்னை சின்ன பொண்ணுனு நினைச்சுட்டான். “ என்று கலாய்த்தார்.

அவனுக்கு நான் சீனியர் என்பது தெரியும். அப்புறம் என் வீட்டினரும் எனக்குதான் சப்போர்ட். என் வீட்டு ஆளுங்கதான் எனக்கு பலமே.

நான் பன்னிரெண்டாம் வகுப்பில் என்ன செய்தேன் என்று உனக்குத் தெரியாது இல்லையா?.

பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பு ஒரு தனியார் பள்ளியில் படித்தேன். டென்த் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு சைக்கிள் டெஸ்ட் , சிலிப் டெஸ்ட் நடக்கும். வீட்டுக்கும் தாமதமாக விடுவர். எனக்கு டென்த் படிக்கும் போது ஒரு பொண்ணு பிரண்ட். நாங்கள் பேருந்தில் ஒன்றாகச் வீட்டுக்குச் செல்வோம்.

பேருந்தில் அமர்ந்திருந்தோம். ஐந்து மணிக்கு மேலாவதால் எல்லாருக்குமே பசி எடுக்கும். எங்களுக்கு தான். நான் சாப்பிடலாம் என்று அவளிடம் கூறினேன்.

“அக்கா வேணாம். ரொம்ப நேரமா அந்த காலேஜ் பசங்க நம்மள கிண்டல் செய்திட்டு இருக்காங்க. இப்ப சாப்பிட்டா அதுக்கும் எதாவது சொல்லுவாங்க. “

நானும் கவனித்தேன். அவளுடைய அசகவுரியத்தால் நான் “சரி மா. நாம டெஸ்ட் பேப்பர்ஸ் பார்ப்போம்.”

என்றதும் அவளும் சரி என்றாள். அவளும் நன்றாகப் படிப்பாள். அவள் அறிவியலில் ஐம்பது நாற்பத்தி எட்டு எடுத்திருந்தாள்.

நானும் எனக்கு கொடுத்திருந்த கெமிஸ்ட்ரிப் பேப்பரை எடுத்து அவளிடம் காண்பித்தேன். எழுபத்து ஐந்துக்கு எழுபத்தி நான்கு மார்க் எடுத்திருந்தேன்.

எங்களைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த இடியட்ஸ்ம் “ எங்களுக்கு கொஞ்சம் காட்டறது ?” என்று கமெண்ட் அடித்தார்கள்.

நான் எதுவும் செய்யவில்லை. எழுந்து அவர்களின் அருகில் சென்று “இந்தாங்க. பார்த்துக்கங்க” என்று எங்களது ஆன்சர் சீட்டை நீட்டி விட்டேன்.

அவர்களின் முகத்தில் தெரிந்த அதிர்வு …பிரைஸ்லஸ். அதை என்றுமே என்னால் மறக்க முடியாது. அவர்கள் பேசாமல் பேப்பரைப் பார்த்துவிட்டு “நல்லா படிங்க” என்று திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

பெண்களின் பயம் தான் அவர்களை சீண்ட தூபம் போடுகிறது.

அதற்குப் பிறகு அவர்கள் வாலாட்டவில்லை.

இதெல்லாத்தையும் விட இன்னொரு சம்பவம் எனக்கு ரொம்ப பிடிச்சது. ரிவெஞ்ச் மாதிரினு சொல்லலாம்.

பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத்தேர்வின் செய்முறைத் தேர்வு நடந்தது. எனக்கு இயற்பியல் செய்முறைத் தேர்வு. என் தோழிகளுடன் முடித்துவிட்டு

பேருந்தில் அமர்ந்திருந்தோம். நாங்க அனைவரும் மிகவும் களைப்பாக இருந்தோம். சில கல்லூரி மாணவர்களும் , வேறு ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் எங்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

என் தோழிகள் பேருந்து எடுத்த பத்து நிமிடங்களில் வீடு வந்து விடும் என்பதால் இறங்கி விட்டனர். அதற்குப் பிறகு அரை மணி நேரம் நான் பயணம் செய்ய வேண்டும். அவனுங்க நிறுத்தவே இல்லை. ஷீ வைக் கூட கழற்றி காண்பித்து விட்டேன். அடங்கவில்லை . ஊர் வந்ததும் நான் இறங்கும் போது முறைத்துக் கொண்டே இருந்தேன்.

கல்லூரி மாணவன் ஒருவன் “ என்னடா இறங்கும் போது முறைச்சுட்டு போகுது? எதாவது பன்னிருமோ?” என்று சந்தேகத்துடன் வினவினான்.

அதற்கு மற்றொருவனோ “நாம என்ன இனிமே இந்த பஸ்ல வரவா போறோம்டா?” என்று அலட்சியத்துடன் சிரித்தான்.

நானும் ‘ இந்த பஸ்ல வந்தாதான?’ என்று நினைத்துவிட்டு அவர்களின் முகங்களை மனதில் பதிய வைத்தேன். அன்று முழுக்க எனக்கு கோபம். வீட்டிலும் வந்து நடந்ததை எல்லாம் கூறிவிட்டேன்.

ஆனாலும் மனதில் கோபம் மறையவில்லை. அவர்கள் என்றாவது என் கண்ணில் சிக்குவார்கள் என்று நம்பினேன்.

அதற்குப் பலன் அடுத்த வாரமே கிடைத்தது. காலையில் நான் பள்ளி செல்ல ஏறிய பேருந்தில் பின் புறத்தில் அவன் இருந்தான். நான் மற்ற பெண்கள் மாதிரி பேருந்தில் கூட்டத்தில் தொங்கிச் செத்தாலும் முன்னால்தான் நிற்பேன் என்ற ரகத்தைச் சேர்ந்தவள் பேருந்தின் நடுப்பகுதிக்குச் சென்றேன். அங்கு எனது தோழி இருந்தாள். ஜீனியர் தான். அவளுக்கு அடுத்த சீட்டில் அவன் அமர்ந்திருந்தான்.

‘யெஸ் இன்னிக்கு நீ காலி’ என்ற உறுதியுடன் ஜீனியரிடம் “என்ன சொன்னாலும் கண்டுக்காத” என்று கூறிவிட்டு அவளருகில் அமர்ந்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் அவனை டிசைன் டிசைனாக கலாய்த்து எடுத்துவிட்டேன்.

“காக்கா மாதிரி குரலை வச்சுகிட்டு நீ எல்லாம் என்னை கலாய்க்கிறியா?” ஆரம்பித்து ……………………………………………………………………………………………………………………………………… முடித்தேன்.

கெட்டவார்த்தை எல்லாம் பேசவில்லை. என்னால மூச்சு விடாமல் கெட்ட வார்த்தை பேசாமல் அருமையாகத் திட்ட முடியும்.

அதற்குப் பிறகு அவன் என்னை கலாய்த்த பேருந்து மற்றும் அவனை நான் கலாய்த்த பேருந்து இரண்டிலும் பார்க்கவில்லை. இறங்கும் போது அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே….அடடா…

ஒரு வாரமாக இருந்த கோபம் அப்போது தான் தணிந்தது. பரம திருப்தியுடன் பள்ளிக்குச் சென்றேன்.

எனக்கு யாரா இருந்தாலும் ஒரு விஷயம் பிடிக்காது. முன்ன பின்ன தெரியாத பெண்களை வேண்டுமென்றே கேலி செய்வது. என்ன பத்தி பேச உரிமை இருக்கு?

உடனே ஒரு கேலி செஞ்சா கூட சீரியஸா எடுத்துக்குவியா? அப்படி இல்ல. எனக்கு நல்லா தெரிஞ்சவங்க என்னை செமையா கலாய்ப்பாங்க. அவங்களை எதுவும் சொல்ல மாட்டேன். அதுவும் வருந்துபடி சொல்லாமல் இருக்கும் வரை மட்டுமே.

“ரைட் இவள மட்டும் நான் முன்னாடி கலாய்ச்ச மாதிரி நேர்ல கலாய்ச்சா தொவைச்சு தொங்க விட்டுருவா. வொய் பிளட்? சேம் பிளட் ? கதையாகிடும். மண்டை பத்தரம் அப்படிங்கற மாதிரி காது பத்திரம் டா தேவ். “ நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டவன் இப்போது தண்ணீர் குடித்தான்.

சரி இப்ப நான் மூன்றாம் வருடம் முடித்துவிட்டேன். இருபது வயது முடிவதற்குள் இளங்கலை முடித்துவிட்டேன். அடுத்தது பி.ஜி.

அலைவான்.....................
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -20

சிறிது நேரம் குளிரில் இருந்தவன் தனக்குப் பிடித்த பாடல் ஒன்றை கைப்பேசியில் பிளே செய்தான். பாடல் காட்டின் நிசப்தத்தில் பெரும் சத்தமாகக் கேட்டது. சில நிமிடங்களுக்கு பிறகு தன் மனநிலையைச் சமன்படுத்தியவன் ‘டோண்ட் பி எமோஷனல் . ஸி இஸ் ஆல்ரைட். இதுக்கு எல்லாம் இவ்வளவு அப்செட் ஆக வேண்டிய அவசியம் இல்லை தேவா. டைரியை முடிச்சிட்டு அவளைக் கண்டுபிடிச்சுக் கொடுத்துட்டா வேலை முடிஞ்சது.’ நினைத்தபின் மீண்டும் படிக்கச் சென்றான்.

‘தெய் ஹேப்பண்ட்’ (they happened) என்று ஆரம்பித்திருந்தாள்.

2017 –ம் வருடம். நான் கல்லூரிப் படிப்பை இடை நிறுத்தியதால் என் அம்மா என்னிடம் கோபித்துக் கொண்டனர். நான் அம்மாய் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அங்கிருந்துதான் பிஸியோ சென்றேன்.

எனக்கு எப்பவும் வேகமாக நடக்கும் பழக்கம் உண்டு. என்றும் மெதுவாக நடந்ததில்லை. அந்த வருடம் எனக்கு அனைத்துமே மெதுவாகத்தான் நடந்தது. உலகமே ஸ்லோ மோஷன்ல போற மாதிரி இருந்தது. பார்ஸியலி ஹாண்டிஹேப்படு கண்டிசன் எனக்கு வெறுப்பை அளித்தது.

வாழ்வில் எப்போதும் முதலில் இருந்த நான் பின் தங்கிவிட்டேன். ஒரு வருடம் நிறைய மாற்றிவிட்டது. என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் எதுவுமே இல்லை என்று தோன்றியது. போரிங்கான லைஃப் வாழ்ந்த மாதிரி தோணுச்சு. So I decided to live in the moment. I wanted to have a lot of memories. ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு என்னுடைய படிப்பைத் தொடர விரும்பினேன். திரும்பவும் பல்கலைக் கழகத்துக்கோ இல்லை இளங்கலைக் கல்லூரிக்கோ போகவோ விருப்பமில்லை. இத்தனைக்கும் என்னுடைய கல்லூரியில் சீட் தர தயாராய் இருந்தனர். அது எல்லாத்தையும் மறுத்து விட்டு பனியன் சிட்டியில் ஒரு அரசுக் கல்லூரியில் இலக்கியம் படிக்க முடிவு செய்தேன். மதிய நேரம் வரை கல்லூரி அதனால் கிடைக்கும் நேரத்தை நூலகத்தில் செலவளிப்பேன்.

அதே நேரத்தில் தொலைதூரக் கல்வி முறையில் உளவியல் படித்தேன். ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி.

ஒரு வருடம் வீணாகியதிற்கு ஈடு கட்ட வேண்டாமா?

நல்ல நண்பர்கள் குழாம் அமைந்தது. அதே கல்லூரியில் என் சொந்தக்காரர்களின் பெண்களும் படித்தனர். அவர்களுடன் காலையில் பேருந்தில் பேசியபடி பயணம் செய்வேன். சொல்லப்போனால் ஆரம்ப நாட்களில் நான் யாருடனும் சரியாகப் பேசவில்லை. உடன் படிப்பவர்களுடன் பேசினேன். நான் கிராஸ் மேஜர் என்பதால் அவர்களும் நன்றாக என்னைப் பார்த்துக் கொண்டனர்,

என்னுடைய வெறுமை மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. ஒரு வருடத்தில் அதிக புத்தகங்கள் படித்தது எதுவென்றால் அது நிச்சயம் 2016 மற்றும் 2017 என்பேன்.

ஆங்கில புத்தகங்கள் அதிகம் படித்தேன். அது என்னுடைய மொழிவளம் , படிக்கும் வேகம் என அனைத்தையும் அதிகப் படுத்தியது. சொல்லப்போனால் என்னுடைய ரியாலிட்டியை புத்தகங்களில் தொலைத்தேன். சிறுவயதிலிருந்தே புத்தகங்கள் மற்றும் படங்களுக்கு அடிமை என்பதால் அது பெரிதாகத் தெரியவில்லை.

இப்படியே ஆறுமாதம் கழிந்தது. முதல் செமஸ்டர். இலக்கியத்தின் தேர்வுகள் முதல் வாரம் என்றால் அதைத் தொடர்ந்து உளவியல் தேர்வுகள். என்னோட வாழ்க்கையில் மிகவும் மோசமான நாட்கள் என்றால் இவைதான். தேர்வுகளா காரணம் என்றால் இல்லை.

தேர்வுகளுக்கு நாலு நாட்களுக்கு முன்பு தீவிரமான வைரஸ் காய்ச்சலில் விழுந்தேன். எனக்கு அவ்வளவு சீக்கிரம் காய்ச்சல் வராது. வந்தால் எழுந்து நிற்கக் கூட முடியாது. அப்போது வேறு டெங்கு பரவிக் கொண்டிருந்தது. பிளட் டெஸ்ட் எடுத்ததில் இரத்ததில் அணுக்கள் மிகவும் குறைவாக இருந்தது. காய்ச்சல் வருவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பே சம்பந்தமே இல்லாமல் சாப்பிட்டவுடன் பகலில் தூக்கம் வந்தது. நானும் யோசித்திருக்க வேண்டும். நான் பகலில் தூக்கம் வந்தால் ஏதோ உடலில் பிரச்சினை என்று . நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். அதன் விளைவு என்னை ஒரு வழியாக்கி விட்டது.

இரத்தத்தில் அணுக்கள் குறைவு என்பதால் தூக்கம் தூக்கமாக வந்தது. உடல்வலி வேறு பின்னி எடுத்தது. தூக்கத்தில் நினைவு தப்பி தப்பி வந்தது. எனக்கு மனதில் இருந்தது எல்லாம் தேர்வைப் பற்றித்தான்.

மனது முழுக்க என்னால் முடியும் என்று கூறிக் கொண்டே இருந்தேன். ஆனால் உடல் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை. மூன்றாம் நாள் மருத்துமனையில் அட்மிட் ஆகி குளுக்கோஸ் போட்டேன். பதினொரு வருடங்கள் கழித்து குளுக்கோஸ். அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆகி வந்தேன். அப்பவும் சில நர்ஸ்கள் நான் பேசண்ட் என்பதை நம்பவில்லை.

மறுநாள் தேர்வு. ஒரு மணி நேரம் படித்தால் ஒன்றரை மணி நேரம் தூங்கினேன். திரவ ஆகாரம் மட்டும்தான். அப்படி இப்படி என்று அடுத்தநாள் அடுத்தநாள் ஜீஸைக் குடித்துவிட்டு , இளநீரைப் பாட்டிலில் நிரப்பிக் கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டு விட்டேன். அம்மாய் , பெரிய சித்தி தேர்வுக்கு போக வேண்டாம் என்று சொன்னார்கள். நான் அட்லீஸ்ட் பாஸ் செய்தால் போதும் என்று புறப்பட்டு விட்டேன்.

ரூல்ச் சீட்டில் எழுத வேண்டும். மூணு மணி நேரம் முப்பது பக்கங்கள் , இலக்கியம் என்பதால் முப்பது பக்கங்களையும் முழுவதுமாக சிலர் எழுதுவர். என்னுடைய கையெழுத்தை மாற்றி வேகத்தை அதிகபடுத்த மாடல் எக்ஸாம் மற்றும் இண்டர்னல்ஸ் பழகி விட்டிருந்தேன்.

கை தூக்கி எழுத முடியவில்லை. சத்தே இல்லை. இதில் மூணு மணிநேரம் எழுத வேண்டும். இடையில் பசி வேறு. திக்கற்றவருக்கு டெய்ரி மில்க்கே துணை. அவ்வப்போது ஒரு சாக்லெட்டைச் சாப்பிட்டு பசியைப் போக்கிக் கொண்டே தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பினேன்.

காய்ச்சல் வந்ததை விட போஸ்ட் எபெக்ட்ஸ் தான் என்னை வருத்தி எடுத்திவிட்டது. இரண்டு வாரம் ஒன்பது தேர்வுகள். இலக்கியத் தேர்வுகள் ஒரு நாள் இடைவெளி விட்டு வேலை நாட்களில் வரும். சனி, ஞாயிறுகளில் உளவியல் தேர்வு. இலக்கியத்தில் ஐந்து தேர்வுகள். காய்ச்சல் மாத்திரையின் விளைவு அல்சர். சிவியர் அல்சர் வந்துவிட்டது. சளி வேறு இருந்தது. இரண்டுகெட்டான் நிலை. இன்னும் சில கூட. எனக்கு எழுத விருப்பமில்லை.

இலக்கியத் தேர்வுகள் திங்கள் கிழமையில் ஆரம்பித்து பத்தாவது நாள் முடியும். அந்த வாரத்தில் வெள்ளி கல்லூரியில் பட்டமளிப்பு விழா. மிகவும் ஆர்வத்துடன் பட்டம் வாங்க காத்திருந்தேன். அது வந்த டைமிங்க். அப்படி ஒரு டைமிங்க். இதற்காக கோவை வேறு செல்ல வேண்டும். முந்தைய நாளே சென்று ஓய்வெடுத்தேன். இதற்கு ஆசையாக ஒரு புடவை வேறு எடுத்து வைத்திருந்தேன்.

கல்லூரியில் நடந்த எந்த விழாவிற்கும் தாமதமாக சென்றதில்லை. ஆர்வமாகக் காத்திருந்த பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று தோன்றியது.

சித்திதான் தேற்றி அனுப்பி வைத்தார். நானும் சென்றேன். முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் என்று அசத்திவிட்டோம். பலநாள் பார்க்காத அனைவரையும் சந்தித்தோம். அன்று எடுத்த புகைப்படங்கள் இதற்கு முன்பு எடுத்ததை விட அருமையாக வந்திருந்தன. ராயல் பூளு சேரியில் சிரித்துக் கொண்டிருப்பேன்.

யார் பார்த்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். டிகிரி வாங்கியதும் அவசர அவசரமாக மீண்டும் திருப்பூர் வந்து என் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறி வீட்டுக்குச் சென்றேன்.

அதற்கடுத்த இரு நாட்கள் தேர்வு. அதையும் வெற்றிகரமாக எழுதி முடித்தேன்.

பட்டமளிப்பு விழாவில் எனக்கும் நவ்யாவுக்கு ஒரு பிரச்சினையாகி விட்டது. என்னுடைய கைப்பேசியில் ஒரு பிரச்சினை. அதனால் சரியாக போன் பேச முடியாது. விழாவன்று அவளை என்னால் பார்க்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம். நானும் சில நேரங்களில் அசதி என்று அமர்ந்து விடுவேன். ராஜ் தான் அருகில் இருந்தான்.

இதனால் அவள் கோபித்துக் கொண்டாள். அது அப்படியே முற்றி விட்டது. உனக்கு இதை நான் சொல்லவே இல்லை. அவளுக்கு டிப்ரசன் இருக்கிறது. நான் தான் லிசனர். அதாவது எப்போதும் நம்முடைய குடும்பத்தினர், நண்பர்களுக்கு கவுன்சிலிங்க் கொடுக்கக் கூடாது. நான் கவுன்சிலிங்க் கொடுக்க வில்லை. அவள் சொல்வதைக் கேட்டுக் கொள்வேன். என்னைப் பற்றியும் சொல்வேன்.

அவளைப் பற்றிப் பேசும் போது ஒரு நாள் “உனக்கெல்லாம் என்ன புரியும்? நீ அந்த மாதிரி சூழ்நிலையில் வளரல.” என்று கூறினாள்.

பட்டமளிப்பு விழாவிற்கு முன்பே அவள் இது மாதிரி இருமுறை கூறிவிட்டாள். மூன்றாவது முறை சொல்லும் போது அது என்னை மிகவும் வருத்தியது.

“அப்போது இவ்வளவு வருஷம் கூட இருந்தது வேஸ்ட் என்று தோன்றியது. என்னுடைய ஃபேம்லி பேக்ரவுண்டை வைத்து கம்பேர் செய்து பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. அவளுடைய நட்பு மேலும் என்னை ஹர்ட் செய்யும் என்று புரிந்தது. எனக்கும் லைஃப் கேக் வாக் கிடையாது. ஏதோ கொஞ்சம் சுதந்திரம் கொடுக்கற குடும்பத்தில் பிறந்தது என் தவறும் இல்லை. இப்படி ஒரு குடும்பம் எனக்கு கிடைத்திருப்பதை நான் பெருமைப் படுகிறேன். அவர்கள் என் மேல் வைத்திருப்பது அன் கண்டிசனல் லவ்.

அதுவே ஒரு தவறான விஷயம் மாதிரி பேசினாள். ஓப்பீடு வந்தால் அதற்குப் பின்பு நிம்மதியான உறவேது.

அவளுடைய நட்பை முறித்து விட்டேன். எனக்கும் வருத்தம் தான். ஒரு டாக்சிக்கான உறவில் இருப்பதில் விருப்பமில்லை.

அடுத்தது கல்லூரியில் கிளாஸ் ரெப்பாக இருந்தவர் டிஸ்கண்டியூ செய்ய சூழ்நிலை என்னை அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வைத்தது. தேர்வு முடிந்த அடுத்த வாரத்தில் இந்த இரு நிகழ்வுகளும் நடந்துவிட்டன.

அதற்கடுத்தது நிகழ்ந்தது அதை விட செமையான சம்பவம். நான் கோல்டு டிக்கர் ஆகிட்டேன். சாரி ஆக்கப் பட்டேன்.

அலைவான்................
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம்-21





நான் முன்பே சொல்லியிருப்பேன். அம்மா ஊரில் மே விடுமுறையை கழித்தால் அங்குள்ள இன்னொரு சித்தி வீட்டில் மாகாளியம்மன் கோவில் விஷேசத்திற்குச் செல்வேன் எனச் சொல்லியிருக்கேன். அங்க நான் மட்டுமில்லாமல் இன்னும் சில சொந்தக்காரர்களும் வருவர். அவர்களுள் எனக்கு ஒரு அத்தைப் பையனும் உண்டு. பெரியப்பா பையனும் உண்டு. அவர்கள் இருவரும் என்னை விட ஒரு வருடம் மூத்தவர்கள். ஆனால் ஓரே வகுப்பு தான். குழந்தையில் இருந்தே பரிச்சயம் என்றால் நன்றாக நினைவு தெரிந்து பழகியது நாலாம் வகுப்பு படிக்கும் போதிருந்துதான். பெரியப்பா பையன் ரொம்ப அமைதி. நான் வாயாடி. காலம் நகர நாங்கள் இருவரும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பெஸ்ட் பிரண்ட் ஆகிட்டோம். யாரு இல்லை என்றாலும் இருந்தாலும் எங்கள் நட்பு எப்போதும் இருக்கும். அடிக்கடி பேச மாட்டோம். எப்பாவதுதான். என்னுடையை முதல் இமெயில் ஐடி கிரியேட் பன்னனது அவன் தான். முகநூல் வரை என் பாஸ்வேர்டை நம்பிக் கொடுத்ததும் அவனிடம் தான்.

முதுகலை போனதுக்குப் பிறகும் அத்தைப் பையனிடமும் பேச ஆரம்பித்தேன். சேம் ஏஜ் குரூப் ரொம்ப வருசமாத் தெரியும். எப்படியும் ஏதாவது விழாக்கள் என்றால் பார்த்துக் கொள்வோம்.

இவனிடம் என்ன பேசினாலும் அதை அண்ணாவிடமும் சொல்லி விடுவேன். நவ்யாவை விட்டு பிரிந்த சில நாட்கள் கழித்து இவன் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ மெசேஜ் மூலம் பிரப்போஸ் செய்தான். வீடியோவில் உள்ள கண்டெண்ட் இதற்கு முன்பு ஸ்டேட்டஸில் இருந்ததால் பார்த்திருக்கிறேன். லோடு செய்யவில்லை. ஆனாலும் விஷயம் புரிந்தது.அடிக்கடி என்னை லூசு என அழைப்பான். உனக்குப் புரியுதா லூசு? என்று கேட்டான். நான் என்னை லூசுனு சொல்றியா? அப்படி இப்படினு டைவர்ட் செய்திட்டேன். விஷயத்தை பெரியப்பா பையனுக்கும் சொல்லி விட்டேன். அப்போது என்னதான் மனக் கஸ்டம் இருந்தாலும் அதை ஸ்கீரீன் சாட் எடுத்து அண்ணாவுக்கு அனுப்பி இருந்தேன். என்னுடைய கம்பூயூட்டரில் போனில் இருப்பவையை மாற்றி விடுவதால் அதிலும் ஒரு பேக் அப் உண்டு. அண்ணா உனக்கு விருப்பமா? என்று கேட்டார். நான் இல்லை என்று மறுத்து விட்டேன்.

இது நடந்த சில நாட்களில் என் போன் தண்ணீரில் போட்டு குளிப்பாட்டியதால் சோலியை முடித்து விட்டிருந்தது.

அதற்குப்பிறகு கல்லூரிப் பணிகள் , படிப்பு என்று மூழ்கிவிட்டேன். இரண்டு மாதம் கழித்துதான் புது போன் வாங்கினேன். அத்தைப் பையனின் காண்டாக்ட் சேவ் செய்யவில்லை. என் பிறந்தநாளுக்கு வாட்ஸ் அப்பில் பன்னிரண்டு மணிக்கு மெசேஜ் வந்தது. பார்த்து நன்றி கூறிவிட்டேன்.

எனக்குப் பிறகு அவன் பிறந்தநாள் ஒரு மாதத்தில் வந்தது. நானும் ஒரு கர்டசிக்காக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டு விஷ் செய்தேன். நோட் என்னோட பிரண்ட்ஸ் அனைவருக்கும் அப்படித்தான் விஷ் செய்வேன். என்னோட சர்க்கிளில் இருப்பவர்களும் அப்படித்தான். இதைப் பார்த்த என்னுடைய உறவினர்

அவனிடம் கேட்கவும் “ அவதான் அப்படி பன்னிட்டு இருக்கா?” என்று மாற்றிக் கூறிவிட்டான்.

ஒரு சின்ன விஷயம் . காலேஜ் படிக்கற அத்தனை பேரும் அப்படித்தான் விஷ் செய்வார்கள் என்று கூறியிருந்தால் முடிந்துவிட்டது. இவன் இப்படிக் கூறியது அந்த சித்தி வீட்டுக்கு தெரிந்து அவர்கள் என்னை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலப் படுத்தி இருக்கின்றனர். இது எனக்கு ஒரு வருடம் கழித்துதான் தெரிந்தது.

இது என் சித்தி காதுக்குப் போக அவர் எனக்கு அழைத்து “அவன் கூட பேசுவியானு ? “ கேட்டார். “இல்லை . எனக்கு பர்த்டே விஷ் பன்னதால் நானும் பதிலுக்கு விஷ் செய்தேன் “ எனக் கூறிவிட்டேன்.

“சரி இனிமேலும் பேச வேண்டாம் “ இப்படிக் கூறியதும் நானும் சரி என்று விட்டுவிட்டேன்.

பி.ஜி பிராஜக்ட் , சைக்காலஜி இப்படி நேரம் எனக்கு பறந்துவிட்டது.

காய்ச்சலும் அதைத் தொடர்ந்து நிகழ்வுகளும் என்னை ரொம்பவும் பாதித்திருந்தது. அதிலிருந்து ரெக்கவர் ஆக படிப்பு இருந்தது. முதல் செமஸ்டரில் இரண்டு டிகிரியிலும் அறுபத்தைந்து சதவீதத்திற்கு மேல் எடுத்துவிட்டேன். பாஸானா போதும் என்று நினைத்ததற்கு மேலே மார்க் வந்திருந்தது. முதல் செமஸ்டர் டிசம்பரில் நடந்து முடிய இரண்டாவது ஏப்ரல் ஆரம்பத்திலேயே வந்துவிட்டது. அதில் முதல் தரம் எடுத்தது என்னாலேயே நம்ப முடியவில்லை. மெலோ டிராமாவ இருந்த என் லைஃப்ல அது ஒரு பீல் குட் இன்சிடெண்டா இருந்தது.

அத்தைப் பையன் என்னை விட வசதியானவன் என்றதும் நான் சுலபமாக கோல்ட் டிக்கர் மாற்றப்பட்டு விட்டேன். இந்த விஷயங்கள் என்னை மிகவும் பாதித்தது. வெளியில் இருக்கும் ஒருவன் பிரப்போஸ் செய்து ரிஜக்ட் செய்தால் அவன் இப்படி பேசியிருந்தால் எனக்கு பெரிதாக பாதிப்பிருக்காது. ஆனால் சிறுவயதிலிருந்து பழகியவன் , சொந்தக்காரன் செய்தது பச்சைத் துரோகம்.

என் குடும்பத்தினர் என்ன செய்தார்கள் என்று கேட்கலாம். என் சின்ன சித்தி இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்ன பதில் இதுதான். “அவ எங்கள எப்படி வேணா எடுத்தெறிஞ்சு பேசுவா. சொல் பேச்சு கேட்க மாட்டா. ஆனால் எதையும் மறைச்சு செய்ய மாட்டா. அவ அப்படி லவ் பன்னியிருந்தா இன்நேரம் எங்களுக்கு சொல்லிருப்பா. அவ இதுக்கெல்லாம் பயப்படமாட்டா?”

என் சித்தி இப்படி ஸ்ராங்கா பேச இன்னொரு காரணம் இருக்கு. அத்தைப் பையன் சொன்ன வார்த்தைகள் கேட்ட பிறகு அவர் என்மேல் நிச்சயம் தவறு இருக்காது என்று முடிவு செய்ய உதவியது. இவ்வளவு காலம் தெரிஞ்ச பொண்ணை இவன் தவறாக சொல்லும் போதே என் சித்தி பிரெய்ன் அலார்ட் ஆகிவிட்டது. ‘ இது ஒரு சாதாரணமாக முடித்திருக்கலாம். இவன் ஏன் இப்படிப் பேசனும்?’ என யோசித்திருக்கிறார்.

ஆனால் இவங்க யாருக்கும் ஸ்கீரின் ஷாட் இருப்பது தெரியாது. எனக்கும் விஷயம லேட்டாகத் தெரிந்ததால்

என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. வெளியில் யாரவது என்னைப் பற்றி உன் பொண்ணு அப்படி இப்படி என்று கூறினால் என் வீட்டு ஆட்கள் எப்போதும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அவங்களுக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். என்னதான் அவங்க எனக்கு சப்போர்ட் செய்வாங்க. ஆனாலும் தன்னோட வீட்டுப் பொண்ணைப் பத்தி இப்படிப் பேசினால் வருத்தம் கண்டிப்பாக ஏதோ மூலையில் ஒருக்கும். ஒரு வருஷம் கழிச்சுதான் ஸ்கீரீன் சாட் சித்திகிட்ட காமிச்சுட்டேன். அதுவரைக்கும் எனக்கு இப்படி சில சம்பவங்கள் நடந்தது தெரியாது. ஆனால் அப்போது சரியான மெண்டல் ஸ்டேட்டில் நான் இல்லை என்றாலும் ஏதோ சப்கான்சியசா நான் ஸ்கீரின்சாட் எடுத்து அதை அண்ணாவுக்கு அனுப்பிட்டேன். எல்லாம் நல்லதுக்குத்தான்.

உனக்கு இன்னொரு சம்பவத்தைச் சொல்றேன். நான் டென்த் பப்ளிக் எழுதும் போது என்னோட நெருங்கிய உறவினரின் பெண் காதலனுடன் வீட்டை விட்டு ஓட முயற்சித்தார். இது ஊர் முழுக்க பரவிவிட்டது. அதன் விளைவுகளை நானும் அனுபவித்தேன்.

என் எதிர் வீட்டுப்பெண் என்னிடம் வந்து “பத்தாவது முடிச்சுட்டு என்ன பன்னலாம்னு இருக்க? ஸ்கூல விட்டு நின்னுட்டு சமைக்கக் கத்துக்க.”

இதற்கு எனக்குச் சரியான அர்த்தம் புரியவில்லை. பெற்றோர்களிடம் இதைக் கூறியவுடன் அவர்கள் பொங்கிவிட்டனர். “ ஒரு பொண்ணு போனா என் பொண்ணு படிப்பை நிறுத்தி கல்யாணம் செஞ்சு வச்சுருவாங்களா?”

அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு மீனிங்க் இருக்குனு. வாவ்…

திருமணம் செய்வதற்கு முதல் தகுதி ….இல்லை பெண்ணாகப் பிறந்தால் முதல் தகுதி சமைக்கத் தெரியனும். அப்புறம் வீட்டு வேலைகள் அனைத்தும் தெரிந்தால் தங்கமான பெண். அப்படியே நன்றாகப் படித்து வேலைக்குச் சென்று வீட்டு வேலைகளையும் செய்தால் ஐடியல் வுமன் அவள்தான்.

இதற்கு படிக்காமல் வீட்டிலேயே இருந்தால் கூட பணிச்சுமையாவது குறைவாக இருக்கும். ஒரு வேளை படித்தாலும் இப்படி ஒரு கட்டமைப்பைக் கொண்டுவந்தால் இதில் பாதியளவு பெண்களை மீண்டும் அதே இடத்திற்கு அனுப்பி விடலாம். அப்படி இருக்குமோ? என் பாட்டி, அம்மாய், அம்மா இவர்களைப் பார்க்கும் போதே எனக்குக் களைப்பாக இருக்கிறது. எப்படி இவ்வளவு மெண்டல் அப்யூஸ், பிசிக்கல் அப்யூஸ் தாண்டி வந்தார்கள் என்று கூட தோன்றுகிறது. என் வீட்டில் இவை குறைவுதான். ஆனால் அப்யூஸ் என்று உணரமாலே எங்கள் வீட்டு ஆண்களும் அதைச் செய்திருக்கிறார்கள். அதற்காக எனக்கு அருகில் இல்லையென்று கூற மாட்டேன்.

நான்காம் தலைமுறைப் பெண்ணான என்னையும் “போற வீட்டில் நீ எப்படித்தான் இருக்கப் போறயோ?” என்று கூறிதான் வளர்த்தார்கள். நாங்களும் மாடுகள் தான். காசு வாங்கிக்கொண்டு கல்யாண சந்தையில் விற்கப்படும் மாடுகள். போறவீட்டில் செய்யும் வேலைகளுக்காக , என்ன நடந்தாலும் ஆப்யூஸைப் பற்றி வாயிருந்தும் சொல்லக் கூடாத, தாலி என்னும் மூக்கணம் கட்டப்பட்ட மாடுகள். இரண்டு , நாலு டிகிரி வாங்கினாலும் எனக்கு வாழ்க்கையில் சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமை ஐம்பது சதவீதம் கூட கிடையாது. நிறைய பேருக்கு பத்து சதவீதம் கூட கிடையாது. எனக்கு கொஞ்சம் பிரிவிலேஜ் எங்கள் வீட்டில் உண்டு அவ்வளவுதான்.

I DO WANT TO MAKE CHOICES ABOUT MY LIFE. NOT BASED SOCIETY PRESSURE , NO UNWRITTEN RULES LIKE “YOU ARE A WOMEN . THIS IS YOUR ROLE. YOU MUST DO THIS.” PURELY BASED ON MY HEART. AFTERALL I KNOW WHERE TO DRAW LINE FOR MYSELF. இந்தச் சமூகம் விதித்திருப்பதற்கும் மேல் ஆசைப்பட்டால் அது பேராசை.

சுதந்திரம் ஒரு போதை. சிறிதளவு சுதந்திரம் கிடைத்துவிட்டால் இன்னும் உள்ளம் கேட்கும். நிராகரிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் இன்னும் ஏங்க வைக்கும். எனக்கும் சுதந்திர போதை பீடித்திருந்தது. வானத்தில் பறக்கும் பறவையாய் மனம் பறந்திடச் சொல்லுகிறது. சுதந்திர போதைக்கும் ஒரு விலை உண்டு. என்னுடைய சுதந்திரம் எப்போதும் வரையறுக்கப்பட்ட ஒன்று. என்ன வேணாலும் செய்து கொள்ளலாம். படிக்கலாம். வேலைக்குச் செல்லலாம். ஆனால் திருமணம் நிச்சயம். சொல்லப்போனால் பதினைந்து வயதிலிருந்தே எனக்குத் திருமணப் பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. ஆக்ஸிடெண்ட் ஆகி வீட்டில் இருந்த போதும் இருந்தது.

என்னை வற்புறுத்திச் செய்ய முடியாது என்பதால் வீட்டினர் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. முதுகலை வரை படிக்க அனுமதி கிடைத்தது. அதற்குப் பிறகு என்ன?

என்னோட இலட்சியம் என்ன? சொல்லப் போனால் எட்டு வயதில் என்று இதுதான் நான் ஆகனும் என்று சொல்லத் தெரிந்தவள்; மேல்நிலையில் எடுக்க வேண்டிய குரூப்பை ஆறாம் வகுப்பில் முடிவு செய்தவள்; கல்லூரிப் படிப்பை எட்டாவது படிக்கும் போது முடிவு செய்தவள் நான். உனக்கு எல்லாம் செய்ய வரும் எனும் போது எதைச் செய்ய வேண்டும் என்று தெரியாது. நானும் தடுமாறினேன். மிக நன்றாகத் தடுமாறினேன்.

ஆனால் சிறுவயது ஆசை விடவில்லையே.

யூ.பி.எஸ்.சி கோச்சிங்க் செல்ல வீட்டில் பர்மிஷன் கேட்டேன். வீட்டினரும் “கல்யாணம் எப்ப செய்வ?” எனக் கேட்டனர்.

“25 வயதாகும் போது பன்னிக்கிறேன்” இப்படி வாக்குறுதி கொடுத்து விட்டேன். கோச்சிங்க் செண்டர் கோவையில் உள்ளது.

வகுப்புகள் ஆரம்பித்தது. அங்குதான் அவர்களைச் சந்தித்தேன். என் வாழ்க்கையை மாற்றியவர்கள் அவர்கள். இதுவரை வேறு எங்கேயும் உணராத பிலாங்கிங்க்னெஸ் அப்படிங்கற உணர்வு அவர்களிடம் மட்டும்தான் தோன்றியது. இவங்க மூணு பேரும் எனக்கு முக்கியம். ஆனால் முதல்ல வெற்றியைப் பத்தி நாளைக்கு எழுதுறேன் பெக்கி.



அலைவான்.......























 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -22

‘என்ன ஓவர் பில்டப் கொடுக்கறா? யாரா இருக்கும்?’

தேவ்வுக்கு யோசனையாக இருந்தது. ‘ யூ.பி.எஸ்.சி கோச்சிங்காக
கோவை போறாங்க மேடம். செண்டர் பேரு மட்டும் சொல்லு. உன்னோட பயோடேட்டா நாளைக்கு என் கையில் இருக்கும்.’

தேவ் இப்போது ஆவலுடன் படிக்க ஆரம்பித்தான்.

‘கேண்டீன்’

நான் சேர்ந்த யூ.பி,எஸ்.சி கோச்சிங்க் அகாடமி இலவசமாக மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கக் கூடியது. அதற்கும் இண்டர்வியூ வைத்துதான் எடுத்தார்கள். நான் ரொம்ப கேசுவலா பேசி செலக்ட் ஆகிட்டேன். ஒரு மாதம் கழித்து வகுப்புகள் ஆரம்பித்தது. நானும் மகிழ்ச்சியுடன் செல்ல ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் புதிதாகத் தோன்றினாலும் பிறகு பழகிவிட்டது.

அங்கேயும் நான் பதில் சொல்ற பழக்கத்தை விடல. கிளாஸ்ரூம்ல் எனக்கு ஒரு பிரச்சினை. எனக்கு ஏ.சி என்றாலே ஆகாது. கிளைமேட் கொஞ்சம் மழை வர்ர மாதிரி ஆனாலே என் உடல் வெப்பம் குறையத் தொடங்கிவிடும். இதில் ஏ.சி வெண்ட் 16 டிகிரியில் என் தலை மேல் குளிரை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தது.

இது சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்ததால் நான் ஜீன்ஸிற்கு அணியும் ஹூட் உள்ள ஸ்வெட்டரை வாங்கி விட்டேன். இங்கே வந்தும் முதல் வரிசை முதல் ஆள் நான்.

நானூறு பேர் அமரும் அந்த ஹாலில் நான் முன் வரிசையில் ஹூட் அணிந்து பதில் சொல்லிக் கொண்டிருப்பேன். பின்புறம் இருப்பவர்களுக்கு என் முகமே தெரியாது.

நான் வகுப்பில் யாரிடமும் அதிகம் பேசவில்லை. ஆனால் அங்கும் ஒரு பதினாலு பேர் கேங்காக இருந்தோம். என் அருகில் அமர்ந்த ஒவ்வொருவரும் செம கேர்ள்ஸ். புத்திசாலிகள் , இரக்கமுள்ளவர்கள். குரூப் ஆக்டிவிட்டி இருப்பதால் நாங்கள் அனைவரும் குரூப் நம்பர் ஒன். நாங்க எல்லாமே பாஸ்டா முடிப்போம். அதே மாதிரி ஸ்னேக்ஸ் பயங்கரமாக சேர் செய்து சாப்பிடுவோம். செம ரகளையாக லைஃப் போய்க் கொண்டிருந்தது.

திருப்பூரில் கல்லூரி செல்லும் வரை விபத்துகள் பார்த்ததில்லை.

ஆனால் கோயம்புத்தூர் அப்படி இல்லை. வாகனங்கள் பறக்கும். யாருக்கும் எதுக்காகவும் நிற்காத மெட்ரோபாலிட்டன் சிட்டி. மூன்று வருடத்திற்கு முன்பு எதுவும் வேண்டாம் என்று தூக்கிப் போட்டுவிட்டு சென்ற கோவைக்கே அதே மாதத்தில் மீண்டும் படிப்பதற்காக வந்திருந்தேன்.

என்னால் தனியாக சாலையைக் கடக்க முடியாது. ஒவ்வொரு தடவை கடக்க முயற்சிக்க போதும் எனக்கு நடந்த விபத்து கண்முன்னால் வந்து செல்லும். பொதுவாக பிறர் சாலையைக் கடக்கும் போது அவர்களுடன் சேர்ந்து கடந்துவிடுவேன். கல்லூரி படிக்கும் போது எனக்குப் பிரச்சினை இருந்ததில்லை.

அகாடமியில் வகுப்புகள் முடிந்தது. பசியாக இருந்ததால் கேண்டீன் சென்று தோழிகள் அனைவரும் சாப்பிட்டோம். சாப்பிட்ட பிறகு ஒவ்வொருவராக விடை பெறத் தொடங்கினர்.

எனக்குப் பேருந்திற்குச் செல்ல நேரம் இருந்ததால் நான் தனித்து விடப்பட்டேன். அதனால் படிக்க ஆரம்பித்தேன். எனக்கு அருகே உள்ள டேபிளில் நாலு நண்பர்கள் அமர்ந்திருந்தனர்.

அவர்களும் பாடத்தைப் பற்றி ஏதோ டிஸ்கஸ் செய்து படித்துக் கொண்டிருந்தனர். நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்ததும் என் புத்தகங்களை பேக்கில் திணித்துவிட்டு கிளம்பினேன்.

கேண்டீனிலிருந்து வெளியே சென்றால் பார்க்கிங்க் இருக்கும். நான் பேக்கிலிருந்து பர்ஸை எடுத்துக் கொண்டே வந்ததால் எதிரில் வந்த ஆளைக் கவனிக்கவில்லை.

“மேடம் கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க.”

இந்தக் குரலைக் கேட்டு நானும் நிமிர்ந்து பார்த்தேன். எதிரில் ஒல்லியாக ஒருவன் நின்றிருந்தான். அகாடமியின் வான் நீல நிற ஐடி டேக்கை பார்த்தவுடன் பேட்ச் மேட் என்று தெரிந்துவிட்டது.

“சாரி தம்பி” இரு கைகளையும் உயர்த்தி காண்பித்துவிட்டு நான் நகர அவனும் வழிவிட்டான். நானும் அகாடமியின் முன்புறப் பகுதிக்கு வந்தேன். வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தது.

அருகில் யாருமில்லை. நான் மட்டும்தான் சாலையக் கடக்க வேண்டும். எனக்கு வேறு பதட்டமாக இருந்தது. கடப்பதாக வேண்டாமா? என்ற யோசனையில் பாதங்களை முன் வைப்பதும் பின் வைப்பதுமாக இருந்தேன்.

அப்போது என் அருகில் ஒரு உருவம் வந்து நின்றது.

“இன்னும் கிராஸ் பன்னலயா? வாங்க போலாம்”

என்று அந்த உருவம் கூறியது. நிமிர்ந்து பார்த்தேன். கேண்டீன் வாசலில் பார்த்தவன் தோளில் பேக்குடன் நின்றிருந்தான்.

ஒரு சிறிய புன்னகையுடன் தலை அசைத்தேன்.

இருவரும் சாலையைக் கடந்தோம்.

கடந்ததும் “ஹாய்..உங்க பேரு என்ன?” வலது கையை நீட்டினேன்.

“வெற்றிவேள் “ கையை அவன் குலுக்கினான்.

“யாழரசி. தேங்க் யூ. மறுபடியும் பார்க்கலாம்.”

பேருந்து வந்ததும் நான் ஏறிச் சென்றுவிட்டேன்.

இப்படித்தான் அவன் எனக்கு அறிமுகம். மறுபடியும் அவனைத் திரும்ப வகுப்பு இடைவேளையில் கேண்டீன் முன்னே பார்த்தேன். இருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தான்.

நேராகச் சென்று “ஹாய் வெற்றிவேள்”

‘யாருடா என்னைக் கூப்பிடறது ‘ என்ற தொனியில் திரும்பிப் பார்த்தான்.

“யாழரசி நீயா?” அவன் முகத்தில் குழப்பம் தெரிந்தது. நான் அணிந்திருந்த ஓவர் கோட்டைப் பார்த்தான்.

“யெஸ் “

“நீ அந்த பர்ஸ்ட் ரோ பொண்ணுதானே? ஹூட் போட்டுட்டு பதில் சொல்லும்ல”

எனக்கு சிரிப்பு வந்தது. “ஆமாம் நானே தான். வொய்?”

“இல்லை நான் எல்லாம் பின்னாடி ரோ. ரொம்ப நாளா உன் முகம் காட்டாம பதில் சொல்ற ஆளுனு டீஸ் பன்னிருக்கோம்.”

“ஏசி ஒத்துக்காது. அதனால் அப்படி.”

“என்ன ஆப்சனல் ?” நாங்கள் யூபிஎஸ்சி என்பதால் பாடம் பற்றிதான் பொதுவாக அனைவரும் பேசுவோம்.

“தமிழ் வெற்றி.”

“என்ன மீடியத்துல எக்ஸாம் எழுதற?”

“அதுவும் தமிழ்தான்.”

“வாவ். நானும் தமிழ்தான்.”

என் முகத்தில் ஆச்சரியம் பரவியது.

“அப்ப நாம டிஸ்கஸ் பன்ன நிறைய இருக்கு. ஆன்சர் ரைட்டிங்க் பிராக்டீஸ் செய்யறியா?”

“ஆமா. நீ”

“நானும் தான். அப்ப இரண்டு பேரும் ஆன்சர்ஸ் பார்த்துக்கலாமா?”

“ஓகே வெற்றி.” இப்படிப் பேசி இரண்டாம் சந்திப்பிலேயே அவன் போன் நம்பர் எனது கைப்பேசியில் ஏறியிருந்தது.

வாட்சப்பில் அவன் படிப்பைப் பற்றிக் கேட்டிருந்தேன். 2016 பாஸ்ட் அவுட் என்று சொன்னான். நானும் அதே வருடம்தான் என்று சொன்னேன்.

பிறகு பிறந்த வருடம் கேட்டேன் .

“1989 “ என்று மெசேஜ் வந்திருந்தது.

“வாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்? நான் என்னை விட சின்ன பையனு நினைச்சேன். நான் 96 தான் “

வாட்சப்பில் ஷாக் ஆகிவிட்டேன்.

சிரிக்கும் எமோஜியை அனுப்பிய வெற்றி “என்ன பன்றது நான் எல்லாம் பார்எவர் எங்க்!!!!” தம்பட்டம் அடித்தான்.

முகம் சுளிக்கும் எமோஜியைப் பதிலளித்து விட்டு

“உன்னைப் பேர் சொல்லி கூப்பிடலாமா? இல்ல வாங்க போங்கனு மரியாதையா பேசனுமா? நான் வேற என்னை விட சின்ன பையனு நினைச்சு இவ்ளோ நாள் பேசிட்டேன்.”

“உனக்கு எப்படித் தோணுதோ அப்படி கூப்பிடு.”

“சரி…நான் பழையபடியே உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்.”

இப்படித்தான் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனோம்.

அந்த வகுப்பில் உள்ள ஆண்களிடம் நான் அவ்வளவாக பேசியதில்லை. இவ்வளவு ஏன் அதிகம் பெண்களுடன் கூட பேசியதில்லை. என்னோட சோஷியல் சர்க்கிள் ரொம்ப குறைவாக இருக்கும் படி வைத்திருந்தேன். இதெல்லாம் தாண்டிப் பேசியது வெற்றியிடம் தான்.

என்னோட அன்யூசுவலா ஒரு பிகேவியர் வெளிப்பட்டுச்சு. நான் கைப்பேசியில் இவர்கள் மூவரிடம் மட்டும்தான் அதிகமாகப் பேச ஆரம்பித்தேன்.

வெற்றியும் நானும் தினமும் யூபிஎஸ்சி சம்பந்தமா பேசுவோம். அதற்குப் பிறகு அப்படியே பர்சனலாவும் பேச ஆரம்பிச்சோம்.

எனக்கு எப்பவும் நல்ல இண்டெலக்சுவலா ஆர்கீயூ செய்யப் பிடிக்கும். நானும் வெற்றியும் நிறைய விஷயங்களைப் பேசுவோம். வெற்றிகிட்ட பேசும் போது நிறைய தெரிஞ்சுக்கலாம்.

எப்பவாது நான் கோபப்பட்டாலும் அந்த இடியட் எப்படியும் சமாளிச்சு சமாதானம் செஞ்சுரும். நானும் பெரிசாக் கோபப்பட மாட்டேன். எப்பவும் என்னை காலாய்ச்சிட்டு இருப்பான். சிரிச்சுட்டே இருப்பான்.

‘மூங்கில் காடுகளே…’ என்ற தனது போனில் அழைப்பொலியில் தேவ் டைரியைப் படிப்பதை நிறுத்தி விட்டான். அவனது அம்மா அழைத்துக் கொண்டிருந்தார். ஒரு கையால் தலையைத் தேய்த்தவாறு அதை ஏற்றான்.

“டேய் தேவ் என்னடா இப்படி பன்னிட்ட?”

விஷயம் அதற்குள் அவர் காதை எட்டிவிட்டதை உணர்ந்தான்.

“மாம்..லிசன். உங்களுக்குத் தெரியும் எனக்கு இதில் இண்டர்ஸ்ட் இல்லை. நீங்களும் டாடும் தான் மினிஸ்டர் பொண்ணு, அவளுக்கு என் மேல விருப்பம் இருக்கறதால் பழகிப் பார்க்கச் சொன்னீங்க. எனக்கும் உங்க மனசை கஷ்டப்படுத்த விருப்பம் இல்லை. ஆனால் போலியான ஒரு அன்பை உருவாக்க முடியாது அம்மா. இதை இதுக்கும் மேலயும் கண்டினியூ பன்னா அவ இன்னும் ஹர்ட் ஆவாள். அதுதான் இப்பவே சொல்லிறது நல்லதுனு தோணுச்சு. “

“டேய் அது கரக்ட்தான். ஆனால் சஷ்மிதா அப்பா நரேந்தர் ஷர்மா ஒரு சென்ட்ரல் மினிஷ்டர். அவர் கோபத்துல எதாவது செஞ்சா என்ன செய்யறது?”

“மாம் விடுங்க. சஷ்மிதா ரொம்ப சென்சிபிளான பொண்ணு. அவ இப்ப இல்லைனாலும் கொஞ்ச நாள் போனா புரிஞ்சுக்குவா. ஷி இஸ் ஏ குட் சோல்.”

“ஏண்டா இப்படி அவளப் பத்தி நல்ல விதமா சொல்ற? அவள ஏண்டா உனக்குப் பிடிக்கல?”

“அம்மா அவள எனக்குப் பிடிக்கும். ஆனால் அது காதல் இல்லை. எல்லா குட் சோல் மேலேயும் காதல் வராதுமா.”

“டேய்…உன் தத்துவத்தை இராத்திரியும் ஆரம்பிக்காத. அம்மா காது பாவம் டா. சரிடா. வைக்கிறேன்.” பெருமூச்சு விட்டவாறே கூறினான்.

“மாம்..ஐ லவ் யூ.”

“லவ் யூ டூ. “

“லைஃப் ஈஸ் பிரிசியஸ் மாம். அதை நம்மள விட யாருக்கு நல்லா தெரியும்?”

“நீ நினைக்கறத செய்டா..வைக்கிறேன்.”

அழைப்புத் துண்டிக்கப்பட்டது. தனது தந்தை எதுவும் தாயை மீறிக் கூற மாட்டார். அவரைச் சமாளிப்பது தேவ்க்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.

தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரைப் பருகியவன் மீண்டும் படிப்பதை ஆரம்பித்தான்.



இப்படி எல்லாம் இருக்கற வெற்றியோட லைஃப் முட்களால் நிறைந்தது. அத அவன் எப்பவும் வெளியில் காட்டிக்க மாட்டான். அவனுக்காக நான் இது வரைக்கும் செய்யாத விஷயங்கள் செஞ்சேன். அவனோட பார்ட்னர் நான்.



அலைவான்...
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -23

இருமுகம்

அடர்ந்து உயர்ந்த மலை. சூரிய ஒளியின் குறைவான கவனிப்பினால் பனித் துனிகள் அந்தத் தேயிலைத் தோட்டத்தின் இலைகளில் உருண்டு விளையாடிக் கொண்டிருந்தது. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் ஒரு பகுதியில் லோன் டிரீ எஸ்டேட் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் காலத்தின் போது அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த எஸ்டேட் நாட்டின் விடுதலைக்குப் பிறகு ஒரு இந்தியர் கைவசம் வந்தது. ஐநூறு ஏக்கர் கொண்ட அந்த எஸ்டேட்டில்தான் அங்கு வேலை செய்பவர்களின் குவார்ட்டர்ஸ் அமைந்திருந்தது.

மேனேஜரின் குவார்ட்ஸ் என்பதால் சகல வசதிகளுடன் அமைந்திருந்தது. எண்பதுகளின் இறுதி என்பதாலும் , மலைச்சிகரம் என்பதாலும் பேருந்துகள் குறைவு. அதுவும் குறிப்பிட்ட நேரத்தில்தான் பேருந்து வரும்.

மதியம் வரும் பேருந்தின் ஓலி பாம் பாம் என்று கேட்டது.

வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த பையன் அதைக் கேட்டதும் ஆவலுடன் ஓடினான். பிரிட்டிஷ் காலத்தில் கட்டிய வீடு என்பதால் டிரைனேஜ் சிஸ்டம் சிறப்பாக இருக்கும். ஓடும் போது இதில் தடுக்கி விழுந்து எழுந்து ஓடிப் பேருந்தை பார்த்துவிட்டு மீண்டும் அம்மாவிடம் வந்தான்.

அவனை நிமிர்ந்து பார்த்தார் அவர்.

“என்னடா இது இரத்தம்?”

விழுந்ததில் கை நாடியில் அடிபட்டு இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. விழுந்த விஷயத்தைச் சொன்னான்.

அவன் அம்மா அருகில் உள்ள குச்சியை எடுத்து அவனை அடி வெளுக்க ஆரம்பித்தார். இவனும் கத்திக் கொண்டே அழுது ஓய்ந்து உட்கார்ந்தான். சிறிது நேரத்தில் அவன் தந்தை வந்தார்.

இவன் நிலையைப் பார்த்ததும் ஒரு குடையை எடுத்து அடித்தார். பிறகு அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை சேர்த்தனர். தையல் போடும் வரை அமைதியாக இருந்தவன் குளுக்கோஸ் போட ஊசியைக் கொண்டு வருகையில் கத்த ஆரம்பித்தான்.

பீரிஸ்…பெக்கி மீட் சைல்ட்குட் வெற்றி. டிபிக்கல் 90 கிட்ஸ் பேரண்டஸ். குழந்தைகளை அன்பால் அடித்து வெளுப்பவர்கள்.

வெற்றி சிறுவயதில் அழுமூஞ்சி குழந்தை. பெண்ணாகப் பிறக்கவில்லை. ஒரு ஜோசியரின் உபயத்தால் அவன் தந்தையின் அன்பைப் ஆண்பிள்ளை என்ற காரணத்தால் இழந்தவன். இதே ஜோசியரால் அவனது மூத்த அக்காவும் சிறு வயதிலேயே ஹாஸ்டல் சென்று படிக்கவும் காரணமானவர்.

அம்மாவுக்கு இவன் மேல் மிகுந்த அன்பு. அடித்தாலும் அன்னை அன்னைதான். ஒரு அக்கா, அண்ணன் , தம்பி என்று மூன்று உடன்பிறப்புகளை உடையவன் வீட்டில் மூன்றாவது பிள்ளை. நெர்ட் வகை குழந்தை எனலாம். வீட்டில் யார் எது செய்தாலும் அடிவாங்கும் அப்பாவிக் குழந்தை. அவன் எப்போதும் சொல்வான் . ‘ அகாடமியில் எல்லாரிடமும் சகஜமாகப் பேசிப் பழகும் இந்த வெற்றி வேற. சைல்ட்குட்ல இருந்த வெற்றி வேற. அந்த வெற்றி எப்போதும் புத்தகங்களில் மூழ்கியிருப்பான். பிறரிடம் பேசிப் பழகப் பதட்டப்படுவான். அடிக்கடி உடம்பு சரியில்லாம கஷ்டப் படுவான். அது வேற வெற்றி. இப்ப இருக்க வெற்றிக்கு அப்படியே ஆப்போஸிட். ‘ இப்படித்தான் சொல்வான்.

மனிதர்கள் எப்பவும் விந்தையானவர்கள். ஒரு மனிதன் நினைத்தால் எப்படி வேணாலும் மாறலாம். அகாடமியில் பார்த்த வெற்றிவேள்கிட்ட இப்படி ஒரு சைல்ட்கூட் இருக்கும்னா நம்ப முடியாத ஒன்றாக இருக்கும். வெற்றி பேசிப் பேசியே ரெடிமேடா ரீசன் வச்சுட்டு சுத்தற என்னையும் சமாதானம் செஞ்சுருவான். நல்லபடியா வளர்ந்துட்டான்.

கூச்சசுபாவம் இருக்கற ஆள் அப்படியே அவுட்கோயிங்க் பர்சானிலிட்டியா மாறிட்டான். எல்லாருக்குள்ளேயும் ஏதோ ஒரு சொல்லமுடியாத இரகியம் இருக்கும். ஒரு ஃபாஸ்ட் இருக்கும்.

இவனும் அப்படித்தான். பார்த்தால் தெரியாது.

அவனுக்கு அப்பாவுடைய அன்பு ஒரு சோதிடம் பார்ப்பவர் சொன்ன விஷயத்தால் கிடைக்காமல் போகும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டான். அவன் பெண்ணாகப் பிறக்கவில்லை. இதில் மூத்த பெண்ணையும் குடும்பத்திற்கு ஆகாது என்று ஹாஸ்டலில் தங்க வைத்துவிட்டனர். பிஞ்சு வயதில் என்ன தெரியும்? இப்படி ஜாதகம் , சோதிடம் என்று பலர் வாழ்க்கை வீணடிக்கப்படுகிறது.

இத்தனைக்கும் சிறிய வயது வெற்றி எலிகண்டா வாழ்க்கை வந்தவன் அப்படினு சொல்லலாம். அவன் அப்பா எஸ்டேட்டில் பெரிய பதவியில் இருப்பதால் வீட்டில் வேலையாட்களும் இருந்தனர். தேக்கு மரக் கட்டிலில்தான் தூங்கியவன்.

சரி அதை விடுங்கள். வெற்றியின் வீட்டுக்கு அருகில் ஒரு தமிழ்க்குடும்பம் இருந்தது. அங்கு ஒரு பெண்குழந்தை உண்டு. மோனிகா என்பது அவள் பெயர். வெற்றியோட விளையாட்டுத் தோழி.

வெற்றிக்கு படிப்பது என்றால் மிகவும் படிக்கும். பாலரமா போன்ற காமிக்ஸ் புத்தகம் படித்தே தானாக மலையாளம் கற்றுக் கொண்டவன். மோனிகாவிற்கு அவள் வீட்டில் பஞ்ச தந்திரம் கதை புத்தகம் வாங்கித் தந்திருக்கின்றனர். அவள் வீட்டுக்குச் சென்ற போது இவனும் அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு வந்து படித்து முடித்தாயிற்று.

அடுத்த நாள் பள்ளிக்குச் சென்ற போது பாடத்தில் அந்த கதை வந்திருக்கிறது. அவனது ஆசிரியை ஏதோ கேள்வி கேட்கவும் இவனும் ஆர்வத்தில் பஞ்சதந்திரம் புத்தகத்தை எடுத்துக் காட்டி அதற்குப் பதிலளித்திருக்கிறான்.

குழந்தைகள் என்றால் ஆர்வத்தோடு புத்தகத்தை வாங்கிப் பார்க்க அதில் மோனிகாவின் பெயர் இருந்திருக்கிறது. உடனே அவனுடன் படிக்கும் பையன்கள் வெற்றியைப் பார்த்து “ஒரு பொண்ணுகிட்ட போய் புத்தகம் வாங்கிப் படிச்சுருக்க?” “ என்று கேலி செய்துவிட்டனர். அவனுக்கு சப்போர்ட் செய்தவன் ஒரு மாணவன் மட்டுமே.

இரண்டாவது மூன்றாவது படிக்கும் குழந்தைகள் மனதிலேயே பெண்களிடம் போய் ஒன்றை வாங்குவது கேவலம் போல் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு மனநிலையில் குழந்தைகள் வளர்ந்தால் பிற்காலத்தில் பெண்களை மனிதியாகவாகப் பார்ப்பார்கள்? அந்தக் காலத்தில் அப்படித்தான் என்று சொல்லலாம். அதே தொண்ணூறுகளில்தான் நானும் பிறந்து வளர்ந்தேன்.

அத்துடன் மோனிகாவுடனான நட்பு முறிந்துவிட்டது. கரப்ட் சொசைட்டி கிரியேட்ஸ் கரப்ட் மைண்ட்டு பீபிள். சில விஷயங்களை தாண்டி நாம் சிந்தித்தால் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம்.

கலாச்சாரம் என்ற பெயரில் திணிக்கப்படுவபவை எல்லாம் உண்மையான கலாச்சாரமா? என்று சிந்திக்க வேண்டும்.

வெற்றி ஒன்றாம் வகுப்பிலேயே அவனுடைய அண்ணனின் மூன்றாம் வகுப்புப் புத்தகங்களைப் படிப்பானாம். இந்த விஷயங்களில் நானும் அவனும் ஒரே மாதிரி. அவன் அம்மா அவனுக்கு வயதுக்கு மீறிய அறிவு என்று கூறுவார்கள்.

சில சமயங்களில் இப்படித்தான் யோசிப்போம். அளவுக்கு மீறி யோசிப்பது சாபம். நம்முடன் இருப்பவர்கள் மாதிரி சிந்திக்க முடியாது. அது உடனிருப்பவர்களுக்கும் கஷ்டம். நமக்கும் கஷ்டம். அப்படிப்பட்ட வாழ்க்கைதான் என்னுடையது. ஆரஞ்சுப் பழத்தின் இடையில் ஒரு பல் பூண்டைப் செருகியது போல்தான் இருக்கும்.

இப்படி போயிட்டு இருக்கற வெற்றியோட லைஃப்ல ஒரு பூகம்பம் வந்தது. கேரளாவில் இயற்கைச் செழுமையுடன் வளர்ந்த அவனைப் பிடித்து மதுரையில் உள்ள பிரபலமான ஒரு ரெசிடென்சி பள்ளியில் நாலாம் வகுப்பிற்குச் சேர்ந்து விட்டனர்.

வெற்றி எப்போதும் “நினைவில் காடுள்ள மிருகம் நான்” என்று சொல்வான். விலங்குகள் நகரத்திற்குப் பிடித்து வந்து வளர்த்தாலும் அதன் நினைவில் காடு இருந்தால் அதனால் தகவமைத்து வாழ்வது என்பது இயலாத செயலாகிவிடும்.

அவனும் அப்படித்தான். அவனால் அந்த விடுதியில் ஒன்ற முடியவில்லை. அழுது அடம்பிடித்து அடுத்த ஒரு மாதத்தில் அந்த பள்ளியிலிருந்து கேரளாவிற்கே திரும்பிவிட்டான்.

எல்லா சூழ்நிலையிலும் ஒத்து வாழ முடியாது. ஆனால் எப்படி இந்த பெண்கள் அப்யூசைக் கூட அன்பு என்று சொல்கிறார்கள் என்றுதான் எனக்கும் இன்று வரை புரியவே இல்லை. ஒரு வேளை இப்படி இருப்பதுதான் இயற்கை என்று சிறுவயதிலிருந்தே கண்டிசனிங்க் செய்து விடுகிறார்கள் போலும்.

திரும்பவும் கேரளாவில் இருந்தே பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தான். அவன் நன்றாகப் படிப்பான் என்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை. முன்பெல்லாம் எந்த பஸ்ஸை பார்க்க ஓடி வருவானோ அதிலே பயணம் செய்து பள்ளி சென்றான்.

பேருந்தின் பெயர் கூட ஏதோ “கொண்டோடி “ என்று கூறுவான். கொண்டோடி மிக அழகான பெயர். இதுவரை அப்படி ஒரு வார்த்தையை நான் கேள்விப் பட்டதில்லை.

வெற்றியும் அடிக்கடி உடல் நலக் குறைவால் அவதிப்பட்டான். முதலில் இருந்தது போல்தான் இப்போதும் இருந்தான். இதற்கிடையில் அவன் அவனும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படத் தொடங்கியிருந்தது.

இருவருக்கும் நடக்கும் சண்டையில் இவன் ஒரு பார்வையாளர் தான். அவன் பெற்றோர்களுக்கு காதல் திருமணம். அவனது அம்மா கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

எந்த உறவும் நிலைக்க வேண்டும் என்றால் உன்னுடன் இருப்பது எனக்கு பிடித்தம் என்று அடிக்கடி செயல்களில் காண்பித்தல் வேண்டும். இது ஏற்பாடு செய்யும் திருமணமோ அல்லது காதல் திருமணமோ இரண்டிற்கும் பொருந்தும்.

இப்ப நான் சொன்னது இந்திய திருமணங்களுக்குப் பொருந்தாது.

எந்த வகைத் திருமணமாக இருந்தால் நம் சமூகம் சொல்வதைப் போல்தான் வாழ வேண்டும். உயிரே போனாலும் அந்தத் திருமண உறவில் நிலைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுதான் மரியாதை. எதற்கு இந்த போலி கவுரத்திற்காக வாழ வேண்டும் ? பிரிந்தால் குழந்தைகள் கஷ்டப்படும் என்றால் இப்படி நாளும் பொழுதும் சண்டை என்று வாழ்ந்தால் குழந்தைகள் மனது பாதிக்கப்படாதா?

சட்டத்தை யாரும் மதிக்கறதில்லை. ஆனால் சமூகத்தின் கோர வலையில் சிக்கித்தான் ஆக வேண்டும். ஆண் துணையில்லாமல் பெண் வாழ முடியாது என்று கூறுவர். ஆனால் அப்படி ஒரு பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்கியது இந்தச் சமூகம் தானே!!!

நான் முகநூலுக்கு வந்த முதல் இரு வருடங்கள் என்னுடைய புகைப்படங்களைப் பதிவிட்டது கிடையாது. ஏனென்றால் முகநூல் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று என் மனதிலும் பதிய வைக்கப்பட்டிருந்தது. காவல் துறை அதிகாரிகளும் அவ்வாறுதான் அறிவுரை வழங்குவர்.

நம்முடைய ஆண்ட்ராய்டு போன் எளிதாக யாராலும் ஹேக் செய்யப் படலாம். நம்முடைய தரவுகளை எத்தனையோ இடங்களில் வெளியில் கொடுக்கிறோம். அப்போதெல்லாம் பிரச்சினை வராமல் இருக்கிறதா? ஒரு முகநூலில் புகைப்படம் பதிவிட்டால் கூட பாதுகாப்பு இல்லாத சமூகத்தில்தானா வாழ்கிறோம்? என்று தோன்றியது.

ஆனால் யாருமே யார் தவறு செய்கிறார்களோ அவர்களைச் செய்ய விடாமல் தடுப்பதைப் பற்றிப் பேசவில்லை. இது குளோபலைசேஷன் நடக்கிற காலம். இதில் பெண்களுக்கு புகைப்படம் பதிவிட்டால் பாதுகாப்பில்லை. வாட் எவர்.
வெற்றி வாழ்க்கையே தலைகீழாக மாற்றும் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்திருந்தது.



அலைவான்..........
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -24

“எப்ப பாரு எதாவது டிவிஸ்ட் மாதிரியே எழுதறது?” தேவ் லேசாக முனுமுனுத்தான்.

‘பிளவுகள்’

என்ற தலைப்பில் அடுத்து யாழரசி எழுதியிருந்தாள்.

வெற்றிவேள் எவ்வளவு நல்ல பெயர். அடிக்கடி வெற்றிவேல் என்று இவன் பெயரைத தவறாக நினைத்துவிடுவர் பலர் என்று வெற்றி கூறுவான். இருந்தாலும் அவனுக்கு நான் ஒரு பெயர் வைத்திருந்தேன். “கோட்டைசாமி” என்பதுதான் அது. நாங்க ஒரு தடவை வாட்ஸ்ப்பில் வம்பு சண்டை போட்டிட்டு இருந்தோம். அப்ப சூட்டியதுதான் இந்த பட்டப்பெயர். அவன் என்னை எப்பவும் ‘யாழு’ னுதான் கூப்புடுவான்.

சரி இப்ப வெற்றி சின்ன வயசில் செஞ்சு வச்ச ஒரு வேலை இருக்கே….இரண்டாவது படிச்சுட்டு இருப்பான். பக்கத்து வீட்டிற்குச் சென்று எப்போதும் விளையாடுவான். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இவனென்றால் மிகவும் பிடிக்குமாம். அப்போது ரொம்பவும் கொழு கொழுவென இருப்பான். நானும் அவனோட குழந்தை போட்டாவைப் பார்த்துருக்கேன்.

தோட்டத்தில் விளையாடுவான். இவன் அப்படி ஒரு நாள் விளையாடிட்டு இருக்கும் போது பக்கத்து வீட்டு அக்கா வெண்ணீர் காய வைத்திருக்கிறார்கள். தோட்டம் என்பதால் அங்காங்கே கோழிக் குஞ்சுகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அந்த அக்கா வீட்டில் ஏதோ வேலையாக உள்ளே சென்றுவிட்டார். இந்த எருமைமாடு என்ன செஞ்சது தெரியுமா?

அங்கிருந்த கோழிக் குஞ்சுகளுக்கு வெண்ணீர் குளியல் போட்டுவிட்டான். பொம்மைகளைக் குளிப்பாட்டி விளையாடுவது போல் கோழிக் குஞ்சுகளையும் நினைத்துவிட்டான். இதக் கேட்டதுக்கு அப்புறம் எனக்கு சிரிக்கறதா? வருத்தப் படறதா தெரியல. வந்து பார்த்த அந்த அக்காவுக்கு அதிர்ச்சிதான்.

குழந்தை என்பதால் விட்டு விட்டார்.

மை நண்பன் பெரிய ஆளுதான். கோழியவே குளிப்பாட்டுன ஆளு. அவனுடைய தந்தையிடம் நல்ல உறவு இல்லை என்றாலும் உடன் பிறந்தவர்களுடன் இணக்கம் அதிகம். அவனுடைய அம்மா என்னதான் அடித்தாலும் வெற்றியைத்தான் அவருக்கு அதிகம் பிடிக்கும்.

அவன் அம்மாவைப் பற்றி அடிக்கடி சொல்லுவான். என்னைப் பொறுத்தவரை “என் அம்மா ரொம்ப பிரில்லியன்ட். அவங்க ஒரு ஸ்போர்ட்ஸ் மேன். எதையும் ரொம்ப சுலபமாக கத்துவாங்க. டாக்டர் ஆக ஆசைப்பட்டாங்க. ஆனா தாத்தா விடல. அதுனால பாட்டனி படிச்சாங்க. ரொம்ப அழகா எழுதுவாங்க.”

இப்படி அவன் அம்மாவைப் பத்தி ரொம்ப பெருமையாகப் பேசுவான். கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியின் வாழ்க்கை அவனுக்குத் தெரியாமலேயே மாற ஆரம்பித்திருந்தது.

அவனது அப்பா அம்மா இடையே அதிகம் சண்டைகள் ஆரம்பித்திருந்தது. சண்டை நடப்பது புரிந்தாலும் காரணம் புரியும் அளவுக்கு முதிர்ச்சி இல்லாத வயது. வெற்றியும் அவனது தம்பியும் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.

ஒரு நாள் அம்மாவை அடித்துபோட்டு விட்டு அவனது அப்பா வெளியில் சென்றுவிட்டார். தன் வாழும் வாழ்க்கைப் பிடிக்காமல் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். எஸ்டேட் என்பதால் களைக்கொல்லி மருந்துதான் உடனடியாக கிடைக்குமே.

அதை கிண்ணத்தில் ஊற்றி “வாங்கடா சாமிகளா..உங்கப்பன் வாழ விடமாட்டான். நாம ஒன்னா போய் சேர்ந்தரலாம்.” இப்படி அழுது கதறியிருக்கிறார். குழந்தைகளும் அழ ஆரம்பித்தனர். கடைசியில் வெற்றி அழுது புரண்டு கிண்ணத்தை தட்டி விட்டிருக்கின்றனர்.

என்னோட பர்ஸ்ட் பிரண்ட் சுஜித் அம்மா பிறந்து சில மாதங்கள் ஆன கைக்குழந்தையுடன் மாமியார் கொடுமை தாங்காமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சுஜித்தின் அம்மாவும் , தம்பியும் ஒரே நேரத்தில் இல்லாமல் போய்விட்டனர். சாதரணமாக ஒரு தாய் தன் குழந்தையைக் கொல்ல முயல்வதில்லை. குழந்தையுடன் சாக முயற்சி செய்கிறாள் என்றால் அதற்கு மேல் உலகில் வாழ அவர்களுக்குப் பிடித்தமில்லை என்று அர்த்தம். இதே மாதிரி சம்பவம் என் சொந்தத்திலும் நடந்திருக்கிறது. ஆனால் குழந்தையினால் அந்த பெரியம்மா தற்கொலை முடிவை கைவிட்டார்.

சொல்லப் போனால் பெண்களுக்கு தாங்கும் சக்தி அதிகம். அதனால்தான் அப்யூசைக் கூட இதுதான் எதார்த்தம் என்று ஏற்றுக் கொள்ளப் பழகி வாழ்கிறார்கள். நம் சமூகத்தில் ஆப்யூஸ் நார்மலைஸ் செய்யப்படுகிறது.

என்னைப் பார்த்து அடிக்கடி என் வீட்டில் சொல்லுவார்கள் “ இப்படி எல்லா இருந்தா போற வீட்டில் புருஷங்கிட்ட அடி வாங்கனும்.” இப்படி சொல்லி சொல்லியே ஆண்களிடம் அடிவாங்குவது இயல்பு என பெண்கள் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.

அதுவும் நல்லதுதான் தனக்கு நடக்கறது அநியாயம் என்று உணராத வரை யாருக்கும் பிரச்சினை இல்லை. உணர்ந்துட்டா அதில் இருந்து எப்படியாவது தப்பிக்கத் தோணும். எல்லா மனிதர்களுக்கும் சாக வேண்டும் என்று ஒரு தடவையாவது தோன்றும். எனக்கு தெரிந்து பெண்களுக்கு சிறுவயதிலிருந்தே அடிக்கடி தோன்றும். எனக்குமே நிறைய தடவை தோன்றியிருக்கிறது. என் சித்தி , அம்மாய் , அம்மா, பாட்டி இப்படி யாரும் விதி விலக்கல்ல.

இப்படி எல்லா பெண்களுக்கும் தோன்றி அவர்கள் சாக முடிவெடுத்துவிட்டால் என்ன நடக்கும்? என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

என்னோட சுசைட் தாட்ஸ விடு. எனக்கு மனித வாழ்க்கை அவ்வளவு பிடித்தமில்லை. பதினேழு வயதிலேயே எனக்கு துறவியாகும் ஆசை இருந்தது. வீட்டில் சொன்னா தூக்கிப் போட்டு மிதிப்பாங்க. எனக்கு எப்படா கல்யாணம் செஞ்சு வைக்கலாம்னு ஆர்வமா காத்துட்டு இருக்க என்னோட குடும்பம். நான் இந்த லைஃப்டைமில் அவங்க என்ன சொல்றாங்களோ அதை செய்வேன். எதாவது ஒரு சம்பவம் நடந்து என்னை மாற்றும் வரை. அந்த மாதிரி எதுவும் நடக்காது என நம்புகிறேன்.

‘ஆமாம். உண்மைதான். மனுசங்களுக்கு எதாவது ஒரு கால கட்டத்தில் சாகத் தோனும். எனக்கும் நிறைய தடவை தோனிருக்கு. அரசுகிட்ட போகலாம்னு நினைச்சுருக்கேன். ஆனா அப்பா எப்பவும் ‘மனுசனா பிறந்தா அதை வைச்சு நல்ல விஷயங்கள செய்யனும்னு ‘ தேவ் மனதில் நினைத்தவாறு அடுத்தப் பக்கத்தைப் புரட்டினான்.

வாழ்வது எந்த அளவுக்கு ஸ்கேரியோ அதே அளவுக்கு சாகறதும் ஸ்கேரியான விஷயம். மீனினி அடிக்கடி சொல்வாள் “எனக்கு சாகற அளவுக்கு தைரியம் இல்லை. அப்படி இருந்தா எப்பவோ செத்திருப்பேன் அக்கா.” அவளுக்கு எதிர்காலத்திலும் அந்த தைரியம் இல்லாமல் இருக்கட்டும். அநியாயமாக போகும் உயிர்கள் அதிகம்.

இப்படி ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவன் வெற்றி. எப்பவும் நம்ம வீட்டில் பெற்றவர்கள் இப்படிக் கூறுவார்கள் “புள்ளைங்க பெத்தவங்களைப் புரிஞ்சு நடந்துக்கனும்.” எப்படி குழந்தைகளால் தான் இன்னும் வாழ்ந்து பார்க்காத பெரியவர்கள் உலகத்தை புரிந்து கொள்ள முடியும். பெற்றவர்கள்தானே குழந்தைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஒரு வேளை குழந்தைகள் பிறந்தவுடனே பெற்றவர்களை புரிந்து கொள்வது எப்படினு? ஒரு சிப் செட் பன்னி வச்சுருவாங்க போல.

என்னவோ என்னால் சோ கால்ட் பெரியவர்கள் டிசைனை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.

வெற்றி , அவனோட தம்பி ரெண்டு பேராலும் எதையும் வெளியில் சொல்ல முடியவில்லை. இன்னும் அவன் அதை நினைவில் வைத்திருக்கிறான். அது அவன் மனதில் அழுத்தமாக இன்னும் பதிந்துள்ளது. “என்னால அம்மாவோட வலியை புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆனால் காரணம் மட்டும் தெளிவாகத் தெரியாது யாழு. வளர்ந்ததுக்குப் அப்புறம் தான் கொஞ்சமா கொஞ்சமா எல்லாம் புரிஞ்சது. எனக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாதுனு நான் எப்பவும் பிரே பன்னுவேன்.“ இப்படி என்னிடம் ஒரு நாள் கூறினான்.

இப்படியே நாட்கள் நகர வெற்றிவேள் ஐந்தாவதில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தான். அவனது பள்ளியில் ஐந்தாவதுக்கு மேல் வகுப்புகள் இல்லை.

இதற்கிடையில் தமிழ்நாட்டிலேயே வெற்றியைப் படிக்க வைக்கலாம் என்று அம்மா முடிவெடுத்து தமிழ்நாட்டுக்கே மாறி வந்து விட்டார்கள். சொந்த ஊரான திருநெல்வேலிக்கே திரும்ப வந்திருக்கிறார்கள்.

முதலில் தமிழ்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப மாற வெற்றிக்கு கொஞ்ச நாள் தேவைப்பட்டது. ஆறாம் வகுப்பில் ஒரு பள்ளியில் சேர்த்து விடப்பட்டான். அய்யாவும் ஜாலியாக பள்ளிக்கூடம் போயிட்டு வெயிலோட விளையாடினு ஜாலியா இருந்திருக்கார். அருகில் சொந்தக்காரர் வீடு இருந்ததால் அவர்களோடு சேர்ந்து விளையாடுவான், இவன் அண்ணனும் திருநெல்வேலியில் படித்ததால் அவரின் நண்பர்களும் சேர்ந்து ஒரு பட்டாளமே சுத்தியிருக்கின்றனர்.

ஆறு , குளம் , ஏரி , ஓடை என்று ஓரே ஆட்டம் பாட்டம்தான்.

அவனுக்கு ஓடையில் நண்பர்களுடன் விளையாடுவது ரொம்ப பிடிக்குமாம். சுத்தமான நீர் , கொஞ்சம் காடு மாதிரியான பகுதி. கேரளா மாதிரி இல்லை என்றாலும் இயற்கை அதிகம் உள்ள இடத்தை மிகவும் பிடிக்கும் என்று சொல்வான். பி.பிக்கும் , எனக்கும் கூட இயற்கை என்றால் மிகவும் பிரியம். வெற்றியும் எங்கள் போல்தான்.

ஓடையில் ஆழம் குறைவென்பதால் தண்ணீரில் நீச்சல் அடித்து நண்பர்களுடன் விளையாடுவது வெற்றி எருமையின் பொழுதுபோக்கு. ஹரிஹரா நதியில் நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டதாகச் சொன்னான். எப்பவும் நல்லா போய்கிட்டு இருந்தால் அது வாழ்க்கை இல்லையே.

வெற்றியும் ஒரு டிராஜடியில் மாட்டிக் கொண்டான். வெற்றியும் அவன் அண்ணனின் நண்பர்களும் சேர்ந்து ஒரு தோப்பில் மாங்காய் அடித்துத் தின்ன சென்றிருக்கிறார்கள். நன்றாக மாங்காய் அடித்துதின்னு ருசித்துக் கொண்டிருக்கும் போது சரியாக தோப்புக்காரர் வந்திருக்கிறார்கள்.

சிவனாண்டிகிட்ட போஸ்பாண்டி மாட்டுன கதைதான். கூட இருந்த எல்லாரும் ஜீட் விட்டு சிட்டா பறந்து விட்டனர். நம்ம வெற்றி சார் மட்டும் தோப்புக்காரர் கையில் சிக்கிவிட்டார். அவரும் பிடித்து மரத்தில் கட்டி வைத்துவிட்டார். (என்னோட மைண்ட் வாய்ஸ்: அப்படி போடு அப்படி போடு கையாலா..) தோப்புக்காரரும் “நான் அடிச்சா தாங்க மாட்ட “ அப்படினு நாலு சாத்து சாத்தியிருக்கிறார்.

அப்புறம் அவனோட அண்ணன் வந்து கெஞ்சி வெற்றியை வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கார். வீட்டில் அம்மாவுக்கு தெரிஞ்சு மறுபடியும் ஒரு ரவுண்டு வாங்குனது வேற கதை.

அதிலிருந்து வெற்றியோட அண்ணா அவனை விளையாட்டுக்கு சேர்த்துக்கறது இல்லை. ஆனால் பாரு பெக்கி, எல்லார் கிட்டேயும் டிசைன் டிசைனா அடி வாங்குற வெற்றி நம்ம தலைவர் வடிவேலு மாதிரி ரொம்ப நல்லவனு உனக்கே புரிஞ்சுருக்கும்.

அப்புறம் அவனுக்கு அண்ணாதான் கேரளாவில் இருக்கும் போது கிரிக்கெட் சொல்லித் தந்திருக்காங்க. ஆனால் அங்க வெற்றியால டீம் பார்ம் பன்னி விளையாட முடியலை. அது மலைப்பகுதி என்பதால் வீடு அங்காங்கே அமைந்திருக்கும். தமிழ்நாட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் இன்னும் நல்லா கிரிக்கெட் விளையாட கத்துக்கிட்டான். அதுவுமில்லாமல் கேரளாவில் புட்பாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்களாம். தமிழ்நாட்டில் கிரிக்கெட் அதிகம் விளையாடுவார்கள். இவ்வளவு ஏன் பொண்ணான நானே விளையாடிருக்கேன்.

நான் கிரிக்கெட் பழகறதுக்கு முன்னாடி நான் வெறுத்த விளையாட்டு அதுதான். ஏனோ எல்லாரும் கிரிக்கெட் மேல அப்செஸா இருக்கற மாதிரி தோணும். விளையாடுனதுக்கு அப்புறம் அதை லவ் பன்னேனு சொல்லலாம்.

உனக்கு இன்னொன்னு தெரியுமா? பத்தாம் வகுப்பு படிக்கும் போது புட்பால் டீமில் இருந்தேன். பிளஸ் ஒன் பிளஸ் டூ படிக்கும் போது கபடியும் , கோ கோ வும் விளையாடுனேன். எனக்கு சுட்டு போட்டாலும் வராத இறகுபந்தைக் கூட விளையாட காலேஜ் தேர்ட் இயர்ல கத்துகிட்டேன். ஒருத்தி ரொம்ப இன்சல்ட்டிங்கா என்னை பேசிட்டா. வெறியில கத்துகிட்டேன். ஆனால் ஆகிஸ்டெண்ட்க்கு அப்புறம் எல்லா ஸ்போர்ட்ஸ்ம் அவாய்ட் செய்ய ஆரம்பிச்சேன்.

என்னதான் ரெகவர் ஆகி வந்தாலும் உடம்புக்கு சில லிமிட்டேசன் இருக்கு. உடைஞ்சத ஒட்ட வைச்சா எப்படி பழயை மாதிரி இருக்காதோ அப்படித்தான் எனக்கும் பீல் ஆச்சு. எப்ப நம்மால் ஓட முடியலயோ அப்ப நின்னு சாமாளிக்கனும். தரையில் ஓட முடியிலனா என்ன? தண்ணீரில் நீந்தலாம். வானத்தில் பறக்கலாம்.



நான் இந்த வெற்றி மாதிரி எல்லாம் அட்வென்ஞ்சர் செஞ்சதே இல்லை. இப்படி திருடி சாப்பிட்டா நல்லா இருக்கும். நானும் ஒரு தடவையாவது இப்படி டிரை பன்னி பார்க்கனும்.

தேவ் தலையில் அடித்துக் கொண்டான். ‘அடிப்பாவி போற போக்குல மர்டர் , உன்னை கலாய்ச்சாங்கனு ரிவஞ்ச் இப்படி ரவுடித்தனம் பன்னிட்டு உனக்கு அட்வென்ஞ்சர் பத்தலைனு வேற சொல்ற. நான் இந்த டைரி மேல என் தலைய முட்டியே சாக வேண்டியதுதான்.’ அதன் பிறகு தானாகச் சிரித்துக் கொண்டான். ‘நாம பாரஸ்ட்டுல அதிக நேரம் இருக்கறதுனால திருட்டு மாங்காய் அருமை தெரியல போல’ என்று எண்ணிக் கொண்டான்.


அலைவான்...
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -25

டைரியை மேசையில் வைத்த தேவ் தான் படிக்கும் போது வந்த இடங்கள் பற்றிய குறிப்பை பார்த்தான். “சாலிடா ஒன்னு கிடைச்சுருக்கு. இறைவனிடம் கேட்டால் கிடைக்காதது கூட கிடைக்கும் சைபர் கடவுளான கூகுளா தேவியின் அசிஸ்டண்ட்டிடம் குறிப்பில் உள்ள இடத்தைச் சொன்னவுடன் அந்த இடத்தை தேடிப்பார்த்து பதில் சொல்லிவிட்டது.

தனக்கு தேவையான விஷயம் கிடைத்த மகிழ்ச்சியில் தேவின் முகம் ஒளிர்ந்தது. புன்னகை ஒன்று கன்னத்தில் உள்ள குழியை காட்டிச் சென்றது. “நாளைக்கு ஈவினிங்க் நீ யாருனு எனக்கு தெரிஞ்சுரும்னு நினைக்கிறேன். லெட்ஸ் வெய்ட் அண்ட் வாட்ச் யாழரசி. ஐ அம் கமிங்க் ஃபார் யூ. நீ கண்டிப்பா உயிரோட இருப்பனு என்னோட இன்ஸ்டிங்க்ட் சொல்லுது. இதுக்கு மேல உனக்கு நடக்கறதுக்கு எல்லாம் இந்த டைரிதான் காரணமாக இருக்கப் போகுது.” மெதுவாக தேவ் முனுமுனுத்தான்.

எழுந்து பேக் வைத்திருக்கும் இடத்திற்குச் சென்றவன் அதிலிருந்து ஒரு டப்பாவை எடுத்தான். அதிலிருந்த விலையுயர்ந்த வெளிநாட்டுச் சாக்லேட்டுகளில் தனக்கு பிடித்த டார்க் சாக்லேட் ஒன்றை எடுத்து வாயில் இட்டுக் கொண்டான்.

அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் போது இப்படித்தான். தனக்குப் பிடித்த சாக்லேட்டைச் சாப்பிடுவான். அந்தச் சாக்லேட் அவனுக்கு பிடித்தது என்பதை விட அவன் தம்பிக்கு மிகவும் விரும்பிச் சாப்பிடுவான். எப்போது அவன் தாத்தாவோ அப்பாவோ அந்த சாக்லேட்டை வாங்கி வந்து யாழரசனின் கையில் தரும் போதெல்லாம் “அண்ணா “ என்பதை சிறிது இழுத்துக் கொண்டே தேவ்வைத் தேடி ஓடி வருவான். சிரித்துக் கொண்டே அண்ணிடம் தருவான் அரசன்.

அவன் போன பிறகு இந்த சாக்லேட் அரசை தேவ்வுக்கு நினைவூட்டும். கொஞ்ச நாட்கள் அந்த சாக்லேட்டை வெறுத்தாலும் பிறகு அதை தனக்குப் பிடித்தமாக மாற்றிக் கொண்டான். தன்னுடையை சந்தேகத்தை தன் தம்பியிடம் போல் பகிர்வதைப் போல் மகிழ்ச்சியான தருணங்களில் இதை உண்ணுவான். சிலர் தனக்கு பிடித்தவர்கள் மறைந்த பின் அவர்களை நினைவூட்டும் எந்த ஒரு பொருளையும் அறவே வெறுத்து ஒதுக்குவர். சிலர் எந்தப் பொருள் தனக்குப் பிடித்தவரை நினைவூட்டுகிறதோ அதையே நேர்மறையான ஒன்றாக மாற்றி அமைதி அடைவர். “எதுக்கு வெறுத்து ஒதுக்கனும். அப்படி செய்தா நாம அவங்கள மறக்க முயற்சி செய்யறமாதிரி இருக்கும். நாம வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர மறக்கனும்னு அவசியம் கிடையாது. அந்த மெமரீஸ நம்ம முன்னேற்றத்தில் ஒவ்வொரு தடவையும் நம்ம லவ்ட் ஒன் கூட இருந்து வாழ்த்தற மாதிரி, சந்தோஷத்தை ஷேர் செய்யறதுக்கு கூட இருக்கிறது மாதிரி நினைச்சுக்கலாம். மனசும் அமைதியா இருக்கும். ஒருத்தர் இறந்துட்டா அவங்க நம்ம மனச விட்டு போயிடனுமா என்ன?’ என்று வீட்டில் இருப்பவர்களிடம் விளக்கம் கொடுப்பான் தேவ்.

சாக்லேட் சாப்பிட்ட பின் தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் டைரியை எடுத்துப் படித்தான்.

பெக்கி உனக்கு குருகுலம் பற்றித் தெரியுமா? குருகுலம் என்பது பழங்கால பள்ளி முறை. அதில் ஆஸ்மரத்தில் குரு மரத்தடியில் பாடம் சொல்லிக் கொடுப்பார் என்று நிறைய கதைகளில் நானும் படிச்சுருக்கேன்.

ஆனால் இப்போது பள்ளி நடத்தும் முறைகளில் ஆசிரியர் அருகில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெற்றி ஆறாம் வகுப்பு படித்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை என்பதால் மரத்தடியில் வகுப்பு எடுத்ததாகச் சொல்லுவான்.

தமிழ் சினிமாவில் வருவது போல் வேப்ப மரம். அதற்கு அடியில் சீருடை அணிந்த மாணவர்கள். ஒரு போர்டு. மண்ணை வாரி அடிக்கும் காற்று. இப்படி அம்சமாக வகுப்புகள் இருக்கும்.

இதை அடிப்படை வசதிக் குறைவு என்று கூறுவார்கள். அது உண்மைதான். ஆனால் மரத்தடி வகுப்பறைகள் போல் அருமையான கல்வி வேறு எங்கும் கிடைக்காதுனு சொல்லலாம். பொதுவாகவோ எனக்கு இந்த பார்க் , வீட்டுத் தோட்டம் இந்த மாதிரி இடங்களில் படிப்பது மிகவும் பிடிக்கும்.

இயற்கையும் அறிவும் சேர்ந்தே கிடைக்கும்.

வெற்றி ஏழாம் வகுப்புக்கு செங்கோட்டை பக்கத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் வீட்டில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். பையன் வாழ்க்கையை பாலைவனமா மாத்தீட்டாங்க. அவன் படித்த பள்ளியில் பெண்களும் , ஆண்களும் பேசக் கூடாது என்ற விதி உண்டு. இதுதான் பிரச்சனையா என்றால் அதுதான் கிடையாது. ஆண் மாணவர்கள் தெற்கு பக்கம் உள்ள கட்டிடத்திலும் , பெண் மாணவிகள் வடக்குப் பக்கம் உள்ள கட்டிடத்திலும் இருப்பர்.

ஏமிரா இதி ? அந்த மாதிரி ஆகிவிட்டது. சரி இந்த விஷயத்தில் நான் கமெண்ட் சொல்ல மாட்டேன். நான் டெலிபிரேட்டா கேர்ள்ஸ் மட்டும் படிக்கும் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தேன். அதனால் நான் பேச முடியாது.

செங்கோட்டை தாண்டி தென்காசி வந்தால் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பிரானூர் என்ற ஊர் இருக்கும். இந்த ஊரிலிருந்து குற்றாலம் அருவி நாலைரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பிரானூர் என்பது கிராமம். பிரனூர்க்கு இன்னொரு பேர் இருக்கு. அதுதான் “பார்டர்” . எஸ் பார்டர்தான். தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்கும் இடையில் 1956-ம் ஆண்டு வரை டோல் கேட் பிரானூரில் இருந்ததால் பார்டர் என்று செல்லமாக அழைக்கப்பட்டது.

ஹரிகரா நதி, குண்டாறு இந்த இரு ஆறுகளும் பிரானூருக்கும் செங்கோட்டைக்கும் நடுவே பாய்கிறது. ஓகே இப்ப எதுக்கு நீ யுபிஎஸ்சி எக்ஸாம்ல படிச்ச ஜியோகிராபிய இங்க வந்து எழுதிட்டு இருக்கனு கேக்கறது புரியுது பெக்கி. இனி நான் சொல்லப் போறதுதான் ஹைலைட். இப்படி குளு குளுனு குற்றாலத்துக்கு பக்கத்தில் இருக்கும் இது என்ன சாதாரண கிராமம்னு நினைச்சிட்டியா?

பராட்டோவுக்கு பேர் போன இடம். “பார்டர் ரகமத் புரோட்டா ஸ்டால் “ தி ஹிந்து நீயூஸ் பேப்பரில் வரும் அளவு பிரபலம். நேசஷல் லெவல். யாரு என்னனு தெரியாது. ஆனால் பக்கத்தில் உட்கார்ந்து கிரஸ்பியான பரோட்டாவுடன் நாட்டுக் கோழி குழம்புடன் மணக்க மணக்க உண்பார்கள். பிரியாணியும் தான்.

இது ஒன்னும் பெரிய கடை எல்லாம் கிடையாது. சின்ன கடைதான். 1974’ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பரோட்டா கடை இன்று வரை பிரபலம்.

வெற்றி இந்த கடையில் புரோட்டா சாப்பிட மிகவும் பிடிக்கும் என்பான். “யாழ் எனக்கு வேற எங்க சாப்பிட்டாலும் பரோட்டா சாப்பிடற மாதிரி இருக்காது. மண்ணை சாப்பிடற மாதிரி இருக்கும். சால்னா அப்படினா ரகமத் கடைதான். என்னால் அடிக்கடி அங்க போய் சாப்பிட முடியாது. அப்போ பினான்சியலா ரொம்ப டைட். சின்ன வயதில் நான் நினைச்சுது நிறைய நடக்காம போயிருக்கு. அதில் இதுவும் ஒன்னு. “

நிறைவேறாத ஆசைகள் எல்லாருக்கும் உண்டு. சிறு வயதில் ஆசைப்பட்டு ஒன்று எப்போதும் நடக்கவில்லை என்றால் அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

எனக்கு ஒரு ஆசை இருந்தது. ரொம்ப பெரிய ஆசை கிடையாது. ஒரு ரூபிக் கியூப் வாங்கனும். இந்த ஆசை எனக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து இருந்தது. அது கிடைத்தது எப்போது தெரியுமா? முதுகலை படிக்கும் போதுதான். என் சின்ன சித்தி கிப்டா கொடுத்தாங்க. இரண்டு வருஷம் அத யூஸ் பன்னாம பத்திரமா வேற வைத்திருந்தேன்.

தேவ் இதைப் படித்த பிறகு தலையில் அடித்துக் கொண்டான். ‘ஒரு ரூபிக் கீயூப் வாங்கறதுக்கு இத்தனை வருஷமா? நான் கூட

நான் கூட வெற்றி மாதிரி ஏதோ கஷ்டப்பட்டியோனு நினைச்சேன். ‘ இப்படி எண்ணினான்.

உன் ஆசை இப்படி அப்படி என எது வேண்டுமானலும் சொல்லலாம் பெக்கி. ஆனால் ஆசைகள் ஆசைகள் தான். நமக்கு எவ்வளவுவோ பெரிய விஷயங்கள் கிடைச்சிருக்கலாம். ஆனால் ஒரு சிறு ஆசை நிறைவேறியிருக்காது. அது நம்மைப் பல வருடங்களாக ஆட்டிப் படைத்திருக்கும். உறுத்திக் கொண்டே இருக்கும். என்ன இருந்தாலும் அது நடக்கவில்லையே என்று மனம் உருப்போட்டுக் கொண்டே இருக்கும். பெரியவர்களாக வளர்ந்திருப்போம். நம்மால் நமக்கு வேண்டிய விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆனால் அந்தச் சிறுவயதில் இழந்தவை எப்போதும் ஈடுகட்ட முடியாது.

ஏத்தனையோ பேர் சாப்பிட உணவு , உடுத்த உடை , தங்க ஒரு கூரை இவை இல்லாமல் கஷ்டப்படுவர். ஆனால் இன்னொரு பக்கம் இவ்வளவு பணத்தை வைத்து எப்படி செலவு செய்யலாம் என்று யோசிப்பவர்கள் வாழ்கிறார்கள். சில சமயம் ஏன் இப்படினு தோன்றும்? எல்லாருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்காதா? பெக்கி. பணம் , பாலினம் , சாதி, மதம் , பிராந்தியம் , மொழி இப்படி எத்தனை பிரிவுகள்? இதெல்லாம் அவசியமா என்று யோசிக்கனும்.

ஒரு நாள் வெற்றி ,பிபி, மீனு அப்புறம் நானு எல்லாரும் பிரானூர் போய் பரோட்டா சாப்பிடறோம். பார்க்கலாம் இது நடக்குதா இல்லை நிறைவேறாத ஆசையில் சேர்ந்திடுமா? காலம் பதில் சொல்லும்.

இந்த புரோட்டா ஸ்டால் இப்போது கோயம்புத்தூர் , மற்றும் சென்னையிலும் வந்து விட்டதாம். வாவ்,,

நிறைவேறாத ஆசைகள் கூட பரவாயில்லை. ஆனால் சிலரின் ஆசைகள் பலரின் வாழ்வைப் புரட்டி போட்டு பலியாக்கிவிடும்.

அலைவான்......
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம்-26

பொய்களும் மெய்களும்’

பெக்கி பொய்கள் மிகவும் வித்தியாசமானவை. உண்மையின் போலிகள். ஆனால் பெரும்பாலனவர்களுக்கு பொய் சொல்வது நன்றாக வரும். அதே சமயம் உண்மையாக இருப்பவர்களும் அதிகம். பொய்கள் உண்மையாக இருப்பவர்களின் அப்பாவித்தனத்தையும் அழித்துவிடும் வல்லமை வாய்ந்தவை. அது கூட பரவாயில்லை. வாழ்க்கையே சிக்கலாக்கி விட்டால்?

எனக்கு பிடித்த கொரியன் டிராமாவில் ஒரு கேள்வி வரும் நம்பிக்கை , காதல் , உண்மையாக இருத்தல் , இந்த மூன்றில் எது மிக முக்கியமான ஒன்று? எது தெரியுமா? உண்மையாக இருத்தல் தான் மிக முக்கியம். உண்மையாக இருக்கும் ஒருவரை மணந்து கொள்ள வேண்டும் என அந்த டிராமாவில் சொல்லி இருப்பார்கள்.

அது திருமண வாழ்வில் இல்லை என்றால்? காதல் திருமணம் முறிந்து போனால்? வெற்றியோட அப்பா அவன் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது திருப்பூரில் வேலை பார்த்தார். அங்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நாற்பது வயதிருக்கும். அந்த பெண்ணிற்கு இருபத்தி இரண்டு வயது. காதல் எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது. கணவன் வேறு ஒரு பெண்ணைத் தேடி போய்விட்டால் ஒன்று எப்படியாவது திரும்ப தன்னிடம் அழைத்து வர வேண்டும். இல்லை அதை ஏற்றுக் கொண்டு அவருடன் வாழ வேண்டும். ஏனென்றால் குடும்பத்திற்கு பாதுகாப்பு முக்கியம். வாழ்க்கை ஒன்னும் பழைய தமிழ் சினிமா இல்லை.

வெற்றியின் அம்மா இதற்கெல்லாம் அசையவில்லை. எந்தக் காதலுக்காக தனது குடும்பம் , படிப்பை உதறிவிட்டு வந்தாரோ அதே காதல் நான்கு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிறுத்திவிட்டுச் சென்றது.

சுயமரியாதை உள்ள அவர் தன் குழந்தைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். கிடைத்த வேலைகளுக்கு எல்லாம் செல்ல ஆரம்பித்தார். குழந்தைகளின் உணவு , படிப்பு இப்படி தேவைகள் தலைக்கு மேல் இருக்க கடனே வழி. வெற்றிக்கு விவரம் புரியத் தொடங்கிய வயது. சில சமயம் அவன் அம்மாவுடன் கடன் வாங்க அவனும் சென்றிருக்கிறான். ஆணாதிக்க சமூகத்தில் ஒரு முப்பத்தி ஐந்து வயதிருக்கும் போது கடன் கேட்டு சென்றால் நடப்பவைப் பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை. சில ஆண்களின் குணத்தைப் பார்த்து நானே ஆம்பளையாக இருக்க வெட்கப்பட்ட தருணம் என்று சொல்லியிருக்கிறான் வெற்றி. அவன் அம்மாவுக்கு இரண்டு வழிகள் கண் முன்னால் இருந்தது.

ஒன்று சமூகத்தின் வழியில் திசை மாறிச் செல்வது. இரண்டு தற்கொலை செய்து கொள்வது. இந்த வழிகளில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க இவ்வளவு நாள் வாழ வேண்டிய அவசியம் என்ன? அவன் அம்மா என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்று கிடைத்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்.

தேக்கு மரத்தில் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்த வீடு மழை நீர் ஒழுகும் சிறிய வீடாக மாறி விட்டது. மழைநீரை விட கண்ணீரின் அளவு அதிகமாயிருக்கும். வெற்றியோட தாத்தா பாட்டி பக்கத்தில் இருந்தாலும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. தன் மகள் தேடிய வாழ்க்கைதானே. பட்டும் படாமலும் இருந்தார்கள். ஆரம்ப கால கட்டத்தில் வெற்றியோட சித்தி வீட்டில் குடும்பம் முழுவதும் தங்கியிருக்கிறார்கள். “இரண்டே நாளில் பத்து கிலோ அரிசி தீர்ந்து விட்டதாக “ அவன் சித்தி குத்திக் காட்டி பேசிவிட்டார்.

இதுதான் தான் வாழ்க்கையில் விரைவில் முன்னேற வேண்டி பல தவறான முடிவுகளை எடுத்ததாகச் சொல்லுவான். அடிக்கடி வீடு மாறியிருக்கிறார்கள். சாப்பாடு ரேசன் அரிசி மட்டும்தான். அதுவும் சில நாட்களில் தீர்ந்து போகும். அவனது மூத்த அக்கா பல நாட்கள் சாப்பிடாமல் பள்ளி செல்வார்.

வெற்றிவேளின் அம்மாவை ஆண்ட்டினு கூப்பிடப் போறேன் பெக்கி. வெற்றியோட அம்மானு எழுத போர் அடிக்குது. இங்கிலீஷ், கொங்கு ஸ்லேங்க், நார்மல் தமிழ் இப்படி கலந்து எழுதிட்டு இருக்கேன். அந்த நேரத்துக்கு என்ன தோணுதோ அப்படித்தான் எழுத வருது பெக்கி. வெற்றி இதைப் பத்தி சொல்லும் போது கோட்டை சாமிக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு நினைச்சு பார்க்கவே இல்லை. புத்தகத்தை அட்டையை வச்சு எப்பவும் முடிவு செய்யக் கூடாது. வெற்றிக்கு முன்னாடி எல்லாம் தன்னோட வாழ்க்கையைப் பத்தி பேச கம்பர்பட்டளா இருக்காது. இப்ப எல்லாம் என்னால் வெளிப்படையா பேச முடியுதுனு சொன்னான். ஆனால் என்னால் இந்த லைஃப் டைமில் அப்படி செய்ய முடியும் என தோன்றவில்லை.

எல்லா மனிதர்களுக்கு சொல்ல முடியாத ரகசியம் இருக்கும். என்ன எனக்கு மற்றவர்களை விட அதிகமாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். அதுக்கேற்ற மாதிரி நான் சைக்காலஜி வேற படிச்சு வச்சுருக்கேன். எனக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் என்னிடம் மற்றவர்களிடம் ரகசியம் புதைந்திருக்கும். என்னோட ரகசியங்களும் சேர்த்து. என்னோட ரகசியங்கள் கூட வெளியில் வந்திடலாம். ஆனால் என்னிடம் இருக்கும் பலரின் ரகசியங்கள் என்னை புதைக்கவோ அல்லது எரிக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். நான் சாகும் போது இந்த டைரியும் இருக்காது.

‘இன்னும் என்ன ரகசியம் இருக்கப் போகுது? எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உன்னோட லைஃப்ல இருக்கற மேக்ஸிமம் விஷயங்கள் டைரியில் இருக்குதுனு தோணுது.’ தேவ்வின் மனதில் படிக்கப் படிக்க இவ்வாறு ஓடியது.

லாயல்ட்டி பற்றி முன்னாடி சொல்லி இருக்கேன். நான் பொய் சொல்ல மாட்டேன். அதுக்காக உண்மையை மறைக்கத் தெரியாதுனு கிடையாது. முகவரியற்ற சில உணர்வுகளை முகமூடி போட்டு மறைத்தே ஆக வேண்டும்.

வெற்றி சொன்னது போல் வறுமையை நினைத்து அவமானமாக உணர முடியாமல் இருக்க முடியாது. உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா பெக்கி? ஆண்ட்டி நிறைய கவர்மெண்ட் எக்ஸாம் , பேங்க் எக்ஸாம் அப்ளை பன்னி எழுதி பாஸ் பன்னிருக்காங்கலாம். ஆனால் வேலைக்குப் போக வேண்டும் என்று சொன்னால் வெற்றி அப்பா அடித்துவிடுவாராம். அதனால்

ஆண்ட்டி இருந்த நல்ல வேலைவாய்ப்புகள் அதிகம். இந்த மாதிரி மனப்பான்மையை எந்த வகையில் சேர்க்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் அறிவாளிகளின் செயல் அப்படித்தான் இருக்கும் . ஒரு பையன் படித்துவிட்டு வேலைக்குச் சென்றால் அது இயல்பான ஒன்று. அவன் சம்பாதிப்பதால் கருத்து சொல்ல முடியும் .

அதே ஒரு பெண் படிக்கும் போது எதாவது கருத்து சொல்லிவிட்டால் “படிக்க வச்ச திமிறு” , வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது ஏதாவது எதிர்த்துப் பேசிவிட்டால் “வேலைக்கு போறாளாம். சம்பாதிக்கற திமிறுல பேசறா.” இது எல்லாம் கூட விட்டு விடலாம். இவ்வளவு ஏன் படித்துவிட்டு வீட்டில் இருக்கும் போது எதிராக ஒரு கருத்து சொன்னாலும் “வீட்ல சும்மா இருந்துட்டு திமிறப் பாரு.” இப்படி வீட்டினர் திட்டுவார்கள்.

இதோட முடிவு என்னவென்றால் பெண்கள் எது செய்தாலும் விமர்சிக்கப் படுவர். நியாயம் என்று எதாவது பேசினாலும் சுயமரியாதையை திமிறாக வண்ணமடித்து காட்டி விடுவார்கள்.

அட பொண்ணுங்க யோசிக்கறதே தப்பு. இதுல சுயமரியாதை பத்தி எல்லாம் மூச்சு விடக் கூடாது. இப்படி நியாமாக எதாவது சுயமரியாதைனு பேசினால் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவள்னு லேபிள் செஞ்சுருவாங்க. கொஞ்சம் கலாச்சாரம் பற்றிப் பேசினால் சங்கினு முத்திரை குத்திருவாங்க. சூப்பர் மார்கெட்டில் இது காய்கறி, மளிகை சாமான் , பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் பிரித்து வைத்திருப்பது போல் இப்படி எதாவது ஒரு கருத்தை முன் வைத்தால் எதாவது அவர்களை காவிவேட்டி , வெள்ளை வேட்டி, பச்சை தொப்பினு வகைப்படுத்தி லேபிள் குத்தி விடுவார்கள். எல்லாம் சேர்த்திதான் நம்ம தேசியக்கொடியே இருக்கிறது.

ஆனால் அட் தி எண்ட் ஆஃப் தி டே யாருக்கும் வெற்றியோட அம்மா மாதிரி இருக்கறவங்கள பத்திக் கவலை இருப்பதில்லை. இந்த தலைமுறையில் வாழும் எனக்கே ஆறுமணிக்கு மேல் நிம்மதியாக வெளியில் போக முடியாத போது…….. ஆண்ட்டி தனியா நாலு குழந்தைகளோட எந்தப் பாதுகாப்பும் இல்லாமல், வேலை தேடி , கடனுக்கு அலைந்து பிழைப்பது எல்லாம் சிம்பா போய் ஹைனா கூட்டத்தில் மாட்டிய மாதிரி தான்,

ஆண்ட்டியும் என்னதான் ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் அது தன்னை விட்டுப் போனதுக்குப் பிறகு எப்படியோ தன்னை மீட்டுக் கொண்டு குழந்தைகளுக்காகத் வேலை தேடினார்கள். ஒரு நிதி நிறுவனத்தில் ரைட்டர் வேலை கிடைத்தது. அதைக் கொண்டு எப்படியாவது வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்தார்கள். அடர்ந்த காட்டில் இருண்ட நேரத்தில் தெரிந்த மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் போல் வாழ்க்கை நகர ஆரம்பித்தது. அதற்காக காட்டில் கல்லும் முள்ளும் பள்ளமும் இல்லை என்று ஆகிவிடுமா?

சில சமயம் வீட்டு வாடகை சரியாகத் தர முடியாததால் ஒரு நாளில் வீட்டைக் காலி செய்ய சொல்லிவிடுவார்கள். சண்டை எல்லாம் போட முடியாது. பேசாமல் காலி செய்து வேறு ஒரு வீட்டைத் தேடி அதில் குடிபுகுவார்கள். கடன் கொடுத்தவர்கள் ஒரு முறை வீட்டில் உள்ள பர்னிச்சர்ஸைக் கடனுக்குப் பதிலாக எடுத்துக் கொண்டார்கள். ஆண்ட்டி வேலை செய்த நிறுவனத்தில் மேனஜர் ஒருவன் பெரிய அளவில் பணத்தைக் கையாடல் செய்துவிட்டு ஓடிவிட்டான். நிறுவனத்தின் நிலை மோசமாகியது. ஆனாலும் அதே கம்பெனியில் சாமாளித்து இருக்கிறார். சம்பள பாக்கிக்கு பதிலாக வேலையை விடும் போது அலுவலகத்தில் உள்ள மேசை , நாற்காலிகளை எடுத்து வந்து வீட்டில் வைத்துவிட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் வெற்றியின் அக்கா பன்னிரண்டாவதில் தொள்ளாயிரத்து ஐம்பதிற்கும் மேல் மதிப்பெண் எடுத்தாலும் கணிதத்தில் பாஸ் செய்யவில்லை. இத்தனைக்கும் பத்தாம் வகுப்பில் நானூற்று ஐம்பதிற்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்.

யாராக இருந்தாலும் ஒரு பிரேக்கிங்க் பாயிண்ட் இருக்கும். டீனேஜில் தன்னுடன் படிப்பவர்களைப் போல் இல்லாமல் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு துன்பப்பட்ட நிலையில் இவ்வளவு மதிப்பெண் எடுத்ததே பெரிய விஷயம். தன்னை சுத்தி நடந்த விஷயங்களினால் அக்காவால் ஃபோக்கஸ் செய்ய முடியாம போயிருக்கும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதனால் அக்கா கல்லூரிப் படிப்பில் சேரவில்லை. இறையியல் கல்லூரியில் சேர்ந்து விட்டார். இத நான் சொல்லவே இல்ல பார்த்தியா? வெற்றி வீட்டில் எல்லாரும் தீவிரமான கிறித்துவர்கள். கன்வெர்ட் ஆனவர்கள். அதனால் அக்கா இறையியல் படிக்கச் சேர்ந்தார்கள். இவ்வளவு நேரம் மதத்தைப் பற்றி எழுதாமல் இருந்ததற்கு காரணம் உண்டு. எதுக்கு வீணா அதப் பத்தி எழுதிட்டு. வெற்றியும் ஆகட்டும் , நானும் ஆகட்டும் எல்லாக் கடவுளையும் கும்பிடுவோம். நான் இயற்கையையும் வணங்குவேன். புத்தர் என் போன் லாக் ஸ்கீரினில் இருப்பார். படிச்சது கிறிஸ்டியன் ஸ்கூல். அதே சமயம் ஊரில் நிறைய முஸ்ஸீம்களும் இருந்தார்கள். அதனால் ரம்ஜான் நோம்பு சமயம் பள்ளிவாசலில் நானும் என் தம்பியும் கஞ்சி வாங்கிக் குடிப்போம். மதத்தை விட மனிதர்கள் முக்கியம். அது மட்டுமில்லாமல் இயற்கைக்கு முன்னாடி நாம எல்லாம் ஒரு சிறு துரும்புதான்.

நாம இயற்கைய கேட்ச் பிடிச்சு கட்டுப்படுத்திட்டோம்னு நினைக்கும் போது அது நம்மள நாக் அவுட் செஞ்சுட்டு போய்விடும். முதல்ல கிரிக்கெட் பாக்கறத நிறுத்தனும் பெக்கி. அப்பதான் கேட்ச், விக்கெட்டுனு உளராம இருப்பேன்.

‘பேசறதுல பிளாபரிங்க் கேட்ருக்கேன். எழுதறதுல பிளாபரிங்க் இப்பதான் பார்க்கறேன். எங்க ஆரம்பிச்சு எதுல முடிப்பனு எனக்கும் தெரியல.’ கொட்டாவி விட்டவாறே தேவ் படிப்பதை விடாமல் தொடர்ந்தான்.

அலைவான்...
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -27

காதல் பிழை’

என்ற தலைப்பில் ஆரம்பித்திருந்தது அடுத்த பகுதி.

‘காதல் பிழை இல்லை. நி எழுதன அத்தனையும் தூக்கம் கெட்டு படிச்சுட்டு இருக்கற என் மேல்தான் பிழை.’ மனதில் கவுன்ட்ர் ஒன்றைக் கொடுத்தவாறே படிக்கத் தொடங்கினான் தேவ்.

பெக்கி வெற்றியை ஒன்பதாம் வகுப்புக்கு வேற பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட்டார்கள். ஆன்ட்டிக்கு தற்காலிகமாக அரசு வேலை ஒன்று கிடைத்திருந்தது. தமிழ்நாட்டில் அம்மா ஆட்சி நடைபெற்ற சமயத்தில் அரசு அதிகாரிகள் ஸ்டரைக் செய்ய அவர்களுக்குப் பதிலாக தற்காலிகமாக பணி நியமனம் செய்தது அரசு. அதில் ஆண்ட்டி சேர்ந்து விட்டார். பிற்காலத்தில் அவர்களுக்கு அரசு தேர்வு நடத்திய போது அதில் பாஸ் செய்து நிரந்தர அரசு வேலை வாங்கிவிட்டார். குடோஸ் டூ ஹெர்.

அவங்க வாழ்க்கையில் எடுத்த ஒரு முடிவு தப்பாக போயிருக்கலாம். அதற்கான விளைவையும் அனுபவித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இருக்கிறார்.

வெற்றி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவனது தாத்தா வீட்டுக்குப் பிடிக்காத ஒரு மாமா இருந்திருக்கிறார். அவர்தான் இவர்களுக்கு எல்லா உதவியும் செய்திருக்கிறார். தற்போது பாரஸ்ட் ரேஞ்சராக இருக்கிறார்.

வெற்றிக்கு புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். பள்ளி வாழ்க்கை மிகவும் ஜாலியாக சென்றது. விளையாட்டு பையன். முன்ன இருந்தத விட ரொம்பவே மாறிட்டான். நிறைய வேதனைப் பட்டுருப்பான். நானும் அதை எல்லாம் கேட்கவே இல்லை. டீனேஜில் காதல் வராமல் போகுமா?

முருகன், சதிஷ் இரண்டு பேரும் வெற்றியின் நண்பர்கள். சதிஷ் ரொம்பவும் ஜாலி டைப். ரொம்ப காமடியாகப் பேசுவான். இவர்கள் வகுப்பில் ஷீலா என்ற கேரளத்தைச் சார்ந்த பெண் படித்தாள். சும்மாவே கேரளா பொண்ணுங்கனா நம்ம பசங்களுக்கு பிடிக்கும். ஷீலா வேற ரொம்ப அழகு. முருகன் ஒரு நாள் புரோப்போஸ் செய்ய அது புஷ்வானமா போயிருச்சு. அதனால் வெங்காய வெடி மாதிரி புலம்பிட்டு இருந்துருக்கார் சார். இந்தப் பையன் புலம்பறதப் பார்த்த சதிஷ் வெற்றியைப் பார்த்து கேலியாக “டேய் நீ இந்த பொண்ண லவ் பன்னுடா” சொல்ல நம்ம கோட்டை சாமியும் சூப்பரா இரத்தத்தில் லெட்டர் எழுதி அந்தப் பொண்ணு பேக்கில் வைத்துவிட்டார்கள்.

காட்… பிளட்… இது நான் கண்டிப்பா சினிமால மட்டும் தான் பார்த்துருக்கேன். அதற்குப் பிறகு அந்த பொண்ணை நேரில் பார்த்தும் சொல்லிவிட்டான்.

தேவ்வும் “பிளட்டா?” என்று வாயைப் பிளந்தான்.

அந்த பொண்ணும் ஒரு லெட்டர் எழுதி ஒரு சின்ன பையனிடம் கொடுத்துவிட்டார். போல்டா புரோப்போஸ் செஞ்சுதனால் ஓகே சொல்லியிருக்கு. காதல் வளர்த்தேன்…காதல் வளர்த்தேன் இப்படினு இரண்டு பேரும் வளர்த்துருக்காங்க. ஒரு மாதம் ஆகிவிட்டது. நம்மளும் கட்டுனா ஒரு கேரளத்து சேட்டனதான் கட்றதுனு முடிவு எடுத்தறலாமா பெக்கி? ஜஸ்ட் கிட்டிங்க்.

இடைப்பட்ட காலத்தில் டிப்ளோ முடிச்சுட்டு, சீக்கிரம் வேலை தேடி லைஃப் செட்டிலாவது முதல் பேசி வைத்திருக்கிறார்கள். இதற்கிடையில் தேர்வு விடுமுறை வரவும் ஷீலா கேரளா கிளம்பிவிட்டது. இப்ப எப்படி பேசுறது. வேற என்ன லெட்டர்தான். இந்த எருமைமாடு வீட்டுக்கு பையன் பேர்ல லெட்டர் போடுனு சொல்லியிருக்கு. ஷீலா போட்ட முதல் லெட்டர் தான் இவங்க காதலுக்கு ஆப்பு .

எப்படி தெரியுமா? ஷீலா லெட்டர் முன்பக்கம் “உரியவர் தவிர உடைப்பது தவறு.” என்று ஒரு கேப்சன் எழுதிவிட்டாள். லெட்டர் வாங்கியது அவனுடைய அக்கா. இந்தக் கேப்சனால் அவங்க அதைப் பிரிச்சு படிக்க விஷயம் வீட்டு ஆளுங்களுக்கு தெரிஞ்சு வொய் பிளட் , சேம் பிளட் ரேஞ்சுக்கு திட்டவும் லவ் முடிந்தது.

தேவ்வுக்கு சிரிப்பு வந்தது. வாய்விட்டு சிரித்தும் விட்டான்.

வெற்றிக்கு அந்த பொண்ணு கிரஷ் கூட கிடையாது. அந்த வயசுல நானும் பன்றேன் லவ்னு லவ் பன்னிருக்கு பக்கி. அந்த பொண்ணு முகம் கூட நினைவில் இல்லையாம். கொரியன் டிராமாஸ் படி முதல் காதல் என்று நினைவில் இருக்கும். என்றும் மறக்காது. இந்தக் கோட்டைசாமிக்கு ஷீலா முகமே நினைவில் இல்லையாம். ஷீலா மனதில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஷீலாவுக்கு வெற்றியை ஏதோ ஒரு வகையில் பிடித்திருக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இப்படித்தான் வெற்றியோட முதல் காதல் பிழை ஆகி போனது.

அதற்கப்புறம் அய்யா பிளஸ் ஒன் போனார். இவன் அண்ணன் விளையாடக் கூட்டிச் செல்வதில்லை. கைவிடப்பட்ட ஏக்கம் மனதில் எப்போதும் இருந்திருக்கிறது. ஆனால் தானே பெரிய பையன் ஆனதும் கிரிக்கெட் விளையாட்டில் நண்பர்கள் நிறைய கிடைத்திருக்கிறார்கள். தான் எங்கு சென்றாலும் தம்பியை அழைத்துச் சென்றிருக்கிறான் வெற்றி, அவன் பீல் செய்த மாதிரி தம்பி பீல் ஆகக் கூடாது அதுக்குத்தான்.

வெற்றியின் தம்பி பற்றி எழுதும் போதெல்லாம் தேவ்விற்கு யாழரசன் நினைவுக்கு வந்தான். ‘இன்னிக்கு ரொம்பவே அரசப் பத்தி நினைக்கிறேன். அரசு இருந்திருந்தா நல்லாருக்கும்.’ என்று மனம் அலைபாய்ந்தது .

ஹரிஹரா நதியில் மீன் பிடித்தல் , கூட்டாஞ்சோறு ஆக்குதல் ,

கிரிக்கெட் விளையாடல் , நீச்சல் அடித்தல் ஒன்னும் விடாம விளையாடி ஊரையே கலக்கிருக்காங்க. மாங்காய் சுட்டு மாட்டுன மாதிரி கடலை திருடியும் மாட்டிகிட்டாங்க. கோட்டை சாமிக்கு குசும்புதான்.

ஆற்று நீச்சல் பழகிய கோட்டை சாமிக்கு கிணற்று நீச்சல் தெரியாது. ஆற்று நீச்சலில் நீரோட்டம் இருப்பதால் அடிப்பது சிரமம். ஆனால் கிணற்றில் நீரோட்டம் இருக்காது. அது நிலையான தண்ணீர். கிணற்றின் படிக்கட்டில் இறங்கி உள்ளே சென்று நீச்சலடிக்கலாம். இல்லை மேலிருந்து அப்படியே குதித்து நீச்சலடிக்கலாம். வெற்றிக்கு கிணற்று நீச்சல் பழக்கம் இல்லை என்பதால் நண்பர்கள் அவனை மேலிருந்து கீழே தள்ளி விட்டு விளையாடிவிட்டார்கள். அது ரொம்ப பயமாக இருந்ததாகச் சொல்வான். அதற்கப்பறம் கிணற்றில் எப்படி நீச்சல் அடிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் உள்நீச்சல் அடிக்க மட்டும் தெரியாது. உள் நீச்சலுக்கு மூச்சை அடக்க வேண்டும்.

‘நீச்சலடிக்க பயம் சொல்லிட்டு என்னமோ புரோ ரேஞ்சுக்கு நீச்சலுக்கு டெபனிசன் குடுக்கிறாப்பா. மிடிலட சாமி.’ தேவ் சலித்துக் கொண்டான்.

எனக்கும் தெரியாது. நானும் புது நீச்சல் லெவல்தான். அதாவது நீயூபி. நன்றாக நீச்சல் தெரிந்த ஆள் இல்லாமல் கிணற்றில் இறங்க விட மாட்டார்கள். எனக்கு பாம்பேறியைத் தொடும் நேரத்தில் பதட்டமாக இருக்கும். என்னோட ஹைட்ரோபோபியா முழுதாகப் போகவில்லை.

கொளுத்தும் கோடை வெயில். தென்னை மரத்தோப்பில் இருக்கும் கிணற்றில் பன்னிரண்டு மணிவாக்கில் குதித்து இரண்டு மணி வரை இருந்தால் அப்படி இருக்கும். நான் நிறைய நேரம் சும்மாவே கிணற்றுக்குள் நிற்பேன். மீனு வந்து கால கடிக்கும். ஃபீரியா ஃபிஷ் ஸ்பா பன்னிக்கலாம்.

‘வெற்றியாவது கத்துகிட்டான். நீ நீச்சல் அடிக்கற அப்படினு சொல்லிட்டு ஒபி அடிச்சுருக்க. கிளாஸ ஒபி அடிப்பாங்க. கிணத்துக்குள்ள போய் ஒபி அடிச்ச பெருமை உனக்குத்தான் சேரும்.’ தேவ் மனதில் கேலி செய்தான்.

இப்படி ஒரு வருஷம் போக அய்யாவும் பிளஸ் டூ போயிருக்கார். பப்ளிக் எக்ஸாம் வரவும் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறான். இங்க நடந்ததுதான் செம. நைட் ஸ்டடி இருக்கும். பொதுத் தேர்வு என்றால் ஹாஸ்டலில் கெடுபிடி அதிகம். பொதுவாக பசங்களுக்கு இந்த மாதிரி கெடுபிடிகள் பிடிக்காது. எப்படியாவது படிக்காம தப்பிக்கனும்னு பார்ப்பாங்க. ஸ்டடி இன்சார்ஜ் பாவம். நைட் ஸ்டடி அப்ப இப்படி ஒரு குரூப் பசங்க எஸ்கேப் ஆகி பள்ளிக் கூடத்தில் அங்காங்கே ஒளிஞ்சுக்குவாங்க. வெற்றி நல்லா படிக்கற பையன் என்பதால் அந்த டீச்சரும் நம்பி இவனை எஸ்கேப் ஆனவங்கள கண்டுபிடிக்க அனுப்பி இருக்காங்க.

வெற்றி போய் ரொம்ப நேரமாகியும் திரும்ப வரவில்லை.அதனால் டீச்சர் இன்னொரு ஆளை அனுப்பி இருக்கிறார். வெற்றியும் தேடிப் போய் சிலரை கண்டுபிடிச்சு இருக்கான். ஆனால் அந்த பசங்க இவனையும் சேர்த்து தன்னுடன் இழுத்துச் சென்று விட்டனர். பள்ளிக் கூடத்தின் டெரஸ் மேல் ஒளிந்து கொண்டனர்.

கடைசியில் டீச்சரும் வந்து தேடிக் கிடைக்கவே இல்லை.

அடுத்த நாள் பிடித்து அவனிடம் விசாரித்திருக்கிறார் அவர். வெற்றி “சத்துணவுக் கூடத்தோட டெரஸ்ல படிச்சேன் சார்” எனச் சொல்லவும் சார் அடி வெளுத்து வாங்கி விட்டார்.

ஏன் தெரியுமா? “நானும் நேத்து சத்துணவுக் கூடத்து டெரஸ்க்கு வந்தேன். என்னோட சீப்போட பல்லு கூட இருட்டுல தெரியல.” சொல்லிட்டு அவன் கூட ஒளிந்திருந்த ஆட்களுக்கு பனிஸ்மெண்ட் கொடுத்துவிட்டார். பொய் சொன்ன ஆளுக்கு அமாவாசை மறந்து போச்சு. அவன் என்னை கலாய்க்கறதுக்கு இது எல்லாம் நான் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கனும். என்ன செய்யறது ? இட்ஸ் ஆல் பேட்.

இப்படி ரணகளமா வளர்ந்திருக்கு நம்ம கோட்டை சாமி.அதற்குப் பிறகு எடுத்த சில முடிவுகள் அவன் வாழ்க்கையை மாற்றிவிட்டது.



அலைவான்........
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -28

‘கண்டிப்பாக ஏதோ டிவிஸ்ட் இருக்கு. இல்லைனா இந்த பக்கி இப்படி எழுத வாய்ப்பு இல்லை. இப்ப என்ன இருக்கோ?’

தேவ் மனதில் இந்த எண்ணம் ஓடியது.

கொண்டாட்டமா பிளஸ் டூ முடிச்ச வெற்றிக்கு குடும்ப நிலையும் தெரியும். அவனும் நிறைய அவமானங்களைச் சந்தித்தவன் தானே. சீக்கிரம் முன்னேற ஆசைப்பட்டான். ஆனால் இந்தப் பக்கம் அம்மா வெற்றியை கல்லூரிக்கு அனுப்ப ஆசைப்பட்டார். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடிவிட்டான்.

கையில் இருக்கும் காசைக் கொண்டு திருப்பூரை அடைந்திருக்கிறான். திருப்பூர் கார்மெண்ட்ஸ் சம்பந்தப்பட்ட தொழிலுக்கு பிரபலம். அப்போதும் சரி இப்பவும் சரி திருப்பூரில் வேலை வாய்ப்புத் தேடி வருபவர்கள் ஏராளம்.

திருப்பூரின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க நொய்யல் செத்துவிட்டது. என் தாத்தா ஊர் திருப்பூரில் இருந்து ஒரு மணி நேரத்தில் வந்து சேரும் தொலைவில் இருக்கிறது. விவசாய வளம் செழித்த பூமி. என் அம்மா காலம் வரை நன்றாக இருந்தது. ஈரோடு மஞ்சளுக்கு மிகவும் புகழ் பெற்றது. அப்ப எங்க ஊரும் ஈரோட்டுக் சேர்ந்தது. எங்கள் வயலில் விளைந்த மஞ்சள் ஒரு கிழங்கே ஐந்தாறு கிலோ வருமாம். கரும்பு ஆலைகள் நிறைய இருந்தன. ஒவ்வொரு வீட்டினரும் கரும்புப் பாகை காய்ச்சி வெல்லமாக மாற்றுவர்.

கரும்பு விளையும் என்றால் நினைத்துப் பார். நொய்யல் ஆறு எங்கள் வயல் காட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட வராது. ஒவ்வொரு வயலிலும் கிணறு இருக்கும். தூய நீர் குடித்து , மாசில்லாத காற்று , கம்பு , ராகி என்று ஆரோக்கியமான வாழ்வு .

அத்தனையும் மண்ணொடு மண்ணாகி விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நிலங்கள் மாறியது. ஆல் கிரடிட்ஸ் கோஸ் டூ திருப்பூர் டையிங்க் பேக்டரி வேஸ்ட் வாட்டர்.

கிணற்றுத் தண்ணீர் நான் பள்ளிக் கூடம் படிக்கும் போதெல்லாம் தண்ணீர் நாற்றம் அதிகமாக இருக்கும். அதே தான் கால்நடை , விவசாய நிலத்திற்கும் பாயும். நிலத்தில் சிலர் தென்னை நட்டுவிட சிலர் புற்கள் மட்டுமே வளர்த்தனர். சோளம் எல்லாம் நான் கல்லூரி படிக்கும் போதுதான் விளைவிக்க முடிந்தது. நொய்யல் ஆறு சீர்கெடவும் நிலத்தடி நீர் சொல்ல முடியாத அளவுக்கு மாசுபட்டது.

‘நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது சில நாட்கள் கிணற்றிற்குள் இறங்கி இருக்கிறேன். ஓ காட். டோன்ட் ஈவன் ஆஸ்க்.

அந்த தண்ணீரில் தினமும் இறங்கினால் தோல்வியாதி நிச்சயம்.

எனக்கு இருபத்தி மூன்று வயது இருக்கும் போது தண்ணீர் மாற்றமடைந்தது. ஏனென்றால் எங்கள் ஊர் குளம் மிகவும் பிரபலம். அதுவும் மாசுபட்டிருந்தது. குளத்தின் நீரை முழுமையாக வெளியேற்றினர். அந்த வருடம் மழை நன்றாக பேய்ந்ததால் குளம் நன்னீரால் நிரம்பியது. ஆற்றை விட குளம் மிகவும் பக்கம். அதனால் கிணற்று நீரின் தன்மை மிகவும் மாறியது.

அதற்கப் பிறகுதான் நான் நீச்சல் அடிக்க நான் கத்துகிட்டேன். திருப்பூரின் பொருளாதார வளர்ச்சி நொய்யலின் மரணப்படுக்கையில் எழுதப்பட்டது. நிவாரண நிதியாக பத்தாயிரம் கொடுத்தார்கள். வாவ் அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் ஆற்றை அழித்தற்கு விலை கொடுக்க முடியுமா?

அந்த நொய்யல் ஆற்றில் இருக்கும் மீனைப் பிடித்து சாப்பிடுகிறார்கள். கால்நடைகள் தண்ணீர் குடித்து , புல் மேய்கிறது. அதன் பால் விற்பனைக்குச் செல்கிறது. நான் ரொம்ப லக்கி. நான் பால் குடிக்க பழகியது பிஜி பர்ஸ்ட் இயர்தான்.

பயோ மேக்னிசத்தை என்னால் நினச்சுக் கூட பார்க்க முடியவில்லை.

லீவ் இட். நொய்யல் ஆற்றைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வருத்தமும் , கோபமும் ஒன்றாக எழும். கொட்டிய பாலைப் பற்றிப் பேசி என்ன பிரயோஜனம்.

திருப்பூரில் ஒரு கம்பெனியில் வேலைக் கேட்டுச் சென்றிருக்கிறான். அந்த கம்பெனி ஓனர் இவனைப் பற்றிக் கேட்கும் போது சரியா பதில் சொல்லவில்லை. அதன் பிறகு அவர் மேலும் தீவிரமாக விசாரிக்க வீட்டை விட்டு வந்தது தெரிந்திருக்கிறது.

அம்மாவின் போன் நம்பரை வாங்கித் தகவல் தெரிவித்துவிட்டார். அய்யா திரும்பவும் திருப்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு பார்சல் அனுப்பப் பட்டார்.

நானும் வீட்டை விட்டு ஓடிப் போகலாம் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். செய்ய சரியான சமயம் வாய்க்கவில்லை. டைமிங்க் ஒத்து வரல. வீட்டை விட்டு வெளியில் சென்று வேலைப் பார்த்துக் கொண்டே படித்தால் நன்றாக இருந்திருக்கும்.

‘உன்னை எல்லாம் நாடு கடத்தனும். இவ்வளவு நேரம் நல்லாதான எழுதிட்டு இருந்த. அப்புறம் என்ன இடையில் நட்டு கழண்ட மாதிரி எழுதுற?’ இவள வீட்டில் எப்படி வச்சு சாமாளிச்சாங்களோ ? தெய்வங்கள்!!!!’ தேவ் தனக்குள்ளே அலுத்துக் கொண்டான். பெருமூச்சு ஒன்றும் வெளியே வந்தது.

திரும்பி வந்ததும் ஒரு காலேஜ்ல சேர்ந்திருக்கான். ஆனால் டிராப் அவுட். அதற்கான காரணத்தை எனக்குச் சொல்லிட்டான். ஆனால் எக்காரணம் கொண்டு இந்த விஷயம் வெளியில் போகக் கூடாது என்று கேட்டுகொண்டதால் நானும் இங்கு எழுத மாட்டேன் பெக்கி.

ஆறு வருஷம் இடைவெளி விட்டு ஒரு கல்லூரியில் மின்னணுவியல் படித்தான். வெற்றியோட அப்பா அடிக்கடி எதாவது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சரிபார்த்துக் கொண்டே இருப்பாராம். அதனால் சின்ன வயதில் இருந்தே வெற்றிக்கு அந்தத் துறை சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரியும். நானும் வெற்றியும் யூஜி ஒரே வருடத்தில் படித்தோம். கோயம்புத்தூரில்தான் ஆனால் வேறு கல்லூரியில். இந்த காரணத்தால் அவனைச் சின்ன பையன் என நினைத்து அந்த டீயூப் லைட்கிட்ட இருந்து நான் ஜீரோ வாட்ஸ் பல்ஃப் வாங்கினேன். ஆனால் மரியாதை இல்லாம ஆரம்பத்தில் இருந்தே பேசிப் பழகியதால் வா போனு தான் பேசுவேன்.

வெற்றி யூஜி படிக்கும் போது அவனுக்கு தமிழ் துறையில் நல்ல ஆர்வம் இருந்தது. டிஜிட்டல் டிசைனிங்க் கூட செய்வான். சில தமிழ் புத்தகங்களுக்கு கவர் டிசைன் செய்து கொடுத்திருக்கான். தமிழ் ரொம்ப அருமையாக எழுதுவான். நாங்க பேச ஆரம்பிச்சதும் தமிழ் ஆன்சர் ரைட்டிங்கும் ஒரு காரணம். எங்கள் நட்பு வளர தமிழும் ஒரு காரணம்.

நிறைய புத்தகங்கள் பற்றிப் பேசுவோம். படத்தைப் பற்றிப் பேசுவோம். வெற்றிக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ரொம்ப நாலேஜ் இருக்கு அவனுக்கு.

மூன்றாம் வருடம் படிக்கும் போது நிறைய கேம்பஸ் இண்டர்வியூ வந்திருக்கு. வெற்றியும் அதில் கலந்து கொள்வான். இருபது கம்பெனிகள் அவனை ரிஜக்ட் செய்தது.

அதில் இந்தியாவில் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனி ஒன்றின் இன்ட்ர்வியூ. இரண்டு சுற்றிலும் செலக்ட் ஆகி மூன்றாவது நேர்காணல். அதில் ‘வெற்றி யூ ஆர் செல்க்ட்டு’ என்று கூறிவிட்டு அவனுடைய காலேஜ் டிகிரி மற்றும் பிளஸ் டூ முடித்த இடைவெளியைப் பார்த்து ‘ரிஜக்ட்டு’ என்று அவன் கண் முன்னாலே எழுதியிருக்கின்றார் அந்த பேனல் மெம்பர்.

அப்போதுதான் வெற்றிக்கு உரைத்திருக்கிறது. ஹி வாஸ் டீப்ளி ஹர்ட். தமிழ்த் துறையில் உள்ள பேராசிரியர் ஒருவர் அவனை யூபிஎஸ்சி படிக்கும் படி அறிவுரை வழங்கி இருக்கிறார்.

அவனுடைய திறமைக்கும் அறிவுக்கும் அது தகுந்த ஒன்று என்று என அவர் கருதி இருக்கிறார். இப்படித்தான் அய்யா யூபிஎஸ்சி கடலுக்குள் தொபுக்கடீர்னு குதிச்சார்.

அதோட காதல் கடலில் தலைகீழாகவும் குதித்ததுதான் பிரச்சினை. காதல் ஒரு கண்ணாம்பூச்சினு சும்மாவா சொன்னாங்க.

காதல் என்ற பெயரில் ஏதோ ஏதோ பார்க்கலாம் பெக்கி. ஆனால் என்னைப் பொறுத்த வரைக்கும் காதல் என்பது அன் கண்டிஷனல் லவ் எதுவும் எதிர்பார்க்காமல் ஒருவரின் மீது அன்பைச் செலுத்துவது. ரொம்ப ரேடிக்கல் கான்சப்ட் தான். ஆனால் பாலிங்க் பார் சம் ஒன் இப்படிப்பட்ட காதல் எனக்கு வேண்டாம். ஸ்டேண்டிங்க் இன் லவ் தான் வேணும்.

காதல் எந்த அளவுக்கு ஒருவனை இழுத்துச் செல்லும். சில காதல் நம்மை கட்டமைக்கும். ஆனால் சில காதல்கள் அழிக்கும். அன்கண்டிசனல் லவ் என்பதை ஒருவரிடம் வைத்தால் அது மிகுந்த ஏமாற்றங்களையும் அள்ளித் தரும். ரொம்ப மெச்சூரான வெற்றி எப்படி அந்த மாதிரி ஒரு பொண்ணை லவ் பன்னானு எனக்குப் புரியல. அப்கோர்ஸ் அவனை அவனோட பிரண்ட்ஸ் , நான் உட்பட எல்லாருமே விட சொல்லி திட்டினோம். ஆனால் அன்பைக் கட்டுப்படுத்த முடியாதில்லை. காதல் தவறில்லை. காதலிக்கப்படும் நபர் தவறாகப் போனால் ……….

அவனுக்கு ஷாலினி மீது அளவுகடந்த காதல். யூபிஎஸ்சி கோச்சிங்கில் தான் அவளை முதல் முறைப் பார்த்துள்ளான்.அவளிடம் என்ன பிடித்தது என்று தெரியவில்லை. ஒருவரை நேசிக்க காரணம் வேண்டுமா என்ன? ஆழமான காதல் . அவள் அதற்கான சரியான எதிர்வினை கொடுக்கவில்லை.

அவளின் வீட்டினருக்கும் வெற்றியைத் தெரியும். வீட்டுக்கு செல்வான். இவளுக்கு யூபிஎஸ்சிக்கு தேவையான அனைத்துப் பாடங்களையும் சொல்லித் தந்தான். வாய்ஸ் நோட் கூட உண்டு. இவன் காதலிப்பது தெரிந்ததும் தன் வீட்டினரிடம் சொல்லி நல்ல பேரும் வாங்கிக் கொண்டாள்.

மூன்று வருடமாகக் காதலித்திருக்கிறான். நான்காவது வருடத்தில்தான் நானும் வெற்றியும் அன்னை அகாடமியில் சந்தித்தோம். அந்த நாலாவது வருடத்தில் ஷாலினி அவள் வீட்டினரிடம் வெற்றி தன்னைக் காதலிப்பதை உரைத்துவிட்டாள்.

அவனை வீட்டுக்கு அழைத்து எச்சரிக்கை செய்தார்கள். வெற்றியின் நம்பர் பிளாக் செய்யப்பட்டது. அன்னை ஐஏஸ் அகாடமி ஒரு இலவசப் பயிற்சி மையம். இண்டர்வியூ வைத்துதான் எடுத்தார்கள். சிலர் நேரடி அட்மிஷனும் உண்டு. வெற்றியின் உதவியால் ஷாலினிக்கு அங்கே அட்மிஷன் கிடைத்தது. ஷாலினி வெற்றியிடம் பேசுவதை எல்லாம் நிறுத்தவில்லை. அகாடமிக்கு படிக்க வரும் முன்னே அவளுக்கு வேறு ஒருவனுடன் நிச்சயம் ஆகிவிட்டிருந்தது.

தன்னோட பிரன்ட்ஸ்களிடம் ஷாலினியை ரிலேட்டிவ் என்று சொல்லிவிட்டான். இப்படியே கதை போனது. வாட்ஸ் அப் , பேஸ்புக்கில் ஷாலினியிடம் பேச முடியாது. இவனுக்கும் நிலமை தெரியும். ஆனால் மேடம் சும்மா இருந்தால் தானே. டெலிகிராமில் தனக்குத் தேவையான டவுட்ஸ் எல்லாம் கேட்டு கிளியர் செய்து கொள்வாள்.

நம்மளுக்கு ஒருத்தர் புரோப்போஸ் செய்து அவர்களை நாம் நிராகரித்து விட்டால் என்னைப் பொறுத்த வரை அவர்களின் தொடர்பை துண்டிப்பது நலம். வீணாக எந்த வித நம்பிக்கையும் நாம் கொடுக்கக் கூடாது. அவங்க மூவ் ஆன் ஆகற வரை வெயிட் செய்யலாம். நாம்ம பிரண்ட்ஸா இருக்கலாம் என்று சொல்லிப் பழகுவதை விட நம்மை நேசித்த ஒருவருக்கு கொடூரமான ஒரு செயல் வேறு எதுவும் இல்லை. நாம் ஒரு பக்கம் சந்தோஷமாக இருப்போம். ஆனால் காதலித்த ஆள் தன் துக்கத்தை அடக்கிக் கொண்டு நம்முடன் சிரித்துப் பழக வேண்டும். தட்ஸ் குருயல்.

ஷாலினி மொத்ததில் மதில் மேல் பூனை மாதிரி வெற்றியை வைத்திருப்பதாகத்தான் எனக்கும் , மீனினிக்கும் தோன்றியது. என்னொட கருத்து தவறாக இருந்தாலும் மீனினி ரொம்ப தெளிவான ஆள். அவளும் அப்படித்தான் கூறுவாள். பச்சையா சொல்லனும்னா எவ்வளவு யூஸ் செஞ்சுக்க முடியுமோ அவ்வளவு யூஸ் செய்து கொண்டாள். இது வெற்றிக்கும் தெரியும். அவனுக்கும் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னோட காதலைத் திருப்பித் தரவில்லை என்றால் அந்த ஆளைத் தூக்கி எறிந்து விட வேண்டுமா? கண்டிப்பாக இல்லை. இதில் என்ன பிரச்சினை என்றால் அவள் நடந்து கொண்டது அடிக்கடி வெற்றிக்கு நம்பிக்கை கொடுக்கும்படி தான் இருந்தது. எவ்வளவு எடுத்துக் கூறினாலும் வெற்றி கேட்கமாட்டான்.

இது எல்லாம் நானும் வெற்றியும் சந்திக்கும் முன்னர் நடந்தது. நாங்க பிரண்ட்ஸ் ஆனதுக்குப் பிறகு அவனோட கதை முழுக்க என்னிடம் கூறினான். போகிற போக்கில் ஒரு உதவியும் கேட்டான். நான் இதுவரை அந்த மாதிரி யாருக்கும் உதவியது இல்லை.


அலைவான்..............
 
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom