Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நிலவுக்கு ஏன் கோபம்? - இந்திரா செல்வம்

6​

சான்ட்ரோ சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஆனால் செல்வாவின் மனம் சீராக இல்லை. எண்ணங்கள் சூழ்ந்து புகைந்து கொண்டிருந்தது. ‘ஏன் குருகிட்ட மறைக்கணும்’ செல்வாவின் உள்மனது கேட்டது’

‘எப்படி அப்பாவைப் பத்தி தப்பா சொல்ல முடியும். அதான் பழியை நான் ஏத்துகிட்டேன்’ வெளிமனம் சமாதனப்படுத்த முயன்றது.

உள்மனம் ’இதுல என்ன இருக்கு. அவன் உன் உயிர்த்தோழன் தானே?’

வெளிமனம் ‘எப்படி மறக்க முடியும். நான் நம்பி ஏமாந்த நாள். செல்வா சிந்திக்கலானான். குருவிடம் அவன் கூறியது பாதித்தான் உண்மை, மீதியை இப்போது அவன் மனம் அசைப் போட்டது’

அதிகாலையில் தந்தையிடம் வாக்குவாதம் செய்தது உண்மைதான். நான்கு நாளில் பணத்தை சுந்தரேசன் கொடுக்கவில்லை என்றால் தானே அவரைப் போலீஸிடம் பிடித்துக் கொடுப்பதாக செலவ சொன்னதும் வேணுகோபால்.’சரி என்னமோ செய், நான் தலையிடலை’ என்று விலகிக் கொண்டார்.

காலை 8.30 சுந்தரேசன் வீட்டு திருமணத்திற்கு ரெடியானான் செல்வா. தன் தாயிடம் கொடுத்து வைத்திருந்த மோதிரத்தை வாங்கிக் கொண்டான். அது அழகாக பேக் செய்யப்படிருந்தது. வெளியில் இறங்கி காரருகில் வந்தவனை வேணுகோபாலின் குரல் தடுத்தது.

‘கடையில் ஒரு சின்ன லேபர் பிரச்சனைப்பா.. கொஞ்சம் என்னன்னு பார்த்துட்டு வாயேன்’

‘அது..அப்பா அங்கிள் வீட்டு கல்யாணத்துக்கு போயிக்கிட்டு இருக்கேன்பா’

‘ஆபீஸ்லயிருந்து அப்படியே போயிட்டு வாடா’

‘இல்ல..9.௦௦-10.30 முகூர்த்தம்....’

’10.30க்குள் வந்துடலாம்டா. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. உனக்கு ரொம்ப அவசரம்னா.. நானே போறேன்’ என்று தன் காரை நோக்கி நடந்தவரைத் தடுத்தான்.

‘இல்லப்பா... நானே போறேன்’

அவனை வழியனுப்பிவிட்டு வேணுகோபால் தொலைபேசியை எடுத்து 100 ஐ தட்டினார்.

*****​

டிராபிக் அதிகப்படியாக இருந்ததால் கார் ஊர்ந்து சென்று கடையை அடைந்தபோது 10.00 மணி. உள்ளே சென்ற செல்வா மணிவண்ணனை அழைத்து விசாரித்தான்.

எந்தப் பிரச்சனையும் இல்ல தம்பி’ என்றார் சர்வசாதாரணமாக, செல்வா குழம்பினான். ஏதோ உள்ளுக்குள் உறுத்த, வேகமாக காரை எடுத்தான். அவன் மண்டபத்திற்கு செல்லும் போது மணி 11.00 மண்டப்பத்தில் ஓரிரண்டு பேரே இருந்தனர். அந்த காட்சி, செல்வாவின் அடிமனதைப் பிசைந்தது. வாசலில் நின்ற ஒருவரிடம் விசாரித்தான். கல்யாணம் நின்னு போச்சு தம்பி, சுந்தரேசன் ஏதோ ஆபீஸ் பணத்தை கையாடி விட்டதாக. போலீஸ் வந்து கையில் விலங்கு மாட்டினாங்க. தன் பொண்ணு கல்யாணம் முடிந்த பிறகு வரேன்னு சொன்னாரு. அவனுங்க கேட்கவேயில்லை. உறவினர்கள் கூட்டத்துல தன் மானம் போய்விட்டதை நினைத்து நெஞ்சுவலி வந்ததா. இல்ல பொண்ணு கல்யாணம் நின்னு போச்சுன்னு வந்ததான்னு தெரியல. நெஞ்ச பிடிச்சிக்கிட்டு உட்கார்ந்தவர் தான். அப்படியே அதிர்ச்சியில் இறந்துவிட்டார். பாவம், இன்னும் மூணு மணி நேரம் கழிச்சு அந்த போலீஸ் வந்திருக்கக் கூடாதா...’ தன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டு போனார் அந்த பெரியவர்.

அதிர்ச்சியில் உறைந்தான் செல்வா, கண்கள் கலங்கின. அங்கிள் என்னை நம்பினீங்களே, உங்க நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியலையே. பதறிய உள்ளத்தோடு அவர் வீட்டை நோக்கி வண்டியை விட்டான்.

அவனைக் கண்டதும் கற்பகம் புலம்பியதும், அங்கு நடந்த அனைத்தும் செல்வா குருவிடம் கூறியதுதான் நடந்தது.

சுந்தரேசனின் உடல் அருகில் நின்று மனதார பேசினான். ‘அங்கிள் என்ன மன்னிச்சிடுங்க. உங்க முன்னாடி நம்பிக்கைத் துரோகியா நிக்கிறேன். உங்க குடும்பத்துக்கு நான் பொறுப்பேத்துகிறேன். இப்போ நான் எது சொன்னாலும் கேட்கக் கூடிய மனநிலைல இங்க யாரும் இல்ல. ஒரு வாரம் கழிச்சு வந்து பேசுறேன் அங்கிள். என் அப்பா ஸ்தானத்துல இருக்கிறவரு நீங்க, உங்க மானசீக மகனா நான் இருப்பேன். இதுக்கு மேல நான் இங்கே இருக்கிறத இங்க யாரும் விரும்ப மாட்டாங்க. நான் கிளம்புறேன் அங்கிள்’

விருட்டென்று சென்றுவிட்டான்.

அவன் கோபத்தைப் போலவே விர்ரென்று கார் வராண்டாவில் வந்து நின்றது. அவசரமாக இறங்கியவன், செருப்பை பறக்க விட்டுவிட்டு வீட்டினுள் நுழைந்தான்.

‘அப்பா!!!’ கிட்டத்தட்ட அலறினான்.

இரண்டு நிமிடத்தில் வேணுகோபால் செல்வாவின் முன் நின்றார்.

‘ஏம்பா இப்படி செஞ்சீங்க...’ அழுகை, கோபம் ,பதட்டம், ஏமாற்றம்.. இப்படி பற்பல உணர்ச்சிகள் அவன் முகத்தில் வினாடிக்கு ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது.

‘ஓ... சுந்தரேசன் விஷயத்தைப் பத்தி கேட்கறியா? தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கிறான்’

‘போதும்பா.. ப்ளீஸ்.. நேத்து எனக்கு வாக்கு கொடுத்துட்டு இப்படி செஞ்சிட்டீங்களேப்பா’

‘டேய்.. ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோ, வேலைக்காரனை எந்த இடத்துல வைக்கனுமோ அப்படித்தான் வைக்கனும்’

‘வேலைக்காரன் மாதிரியா அங்கிள் நம்ம பேமிலிக்கு உழைச்சார்... இது தப்புப்பா... நாலு நாள் பொருத்திருக்கலாமே’

‘உனக்கு விவரம் பத்தல செல்வா. பண விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கனும். இந்த எடுத்துக்காட்டே போதும். இனி நம்ம கடையில எல்லோரும் நாணயமாக நடந்துப்பாங்க’

‘அட்லீஸ்ட் ஒரு மூணு மணி நேரம் கழிச்சு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கக் கூடாதா. அந்த அப்பாவி பெண்ணோட கல்யாணம் நின்னதுக்கு என்ன நியாயம் சொல்லப் போறீங்க’

வேகமாக பொரிந்து தள்ளினான். இவர்கள் வாக்குவாதத்தை பயத்தோடு பார்த்துக் கொண்டு நின்றாள் செல்வாவின் தாய் தனலட்சுமி.

‘வேலைக்கார நாயோட குட்டியை பத்தி எனக்கென்ன கவலை. நாய் தப்பு செஞ்சது சாவடிச்சிட்டேன், குட்டியப் பத்தி எனக்கென்ன கவலை, குட்டிய வேணும்னா ஏதாவது வண்டில விழுந்து சாகச் சொல்லு’ கொடூரமாக வந்த வார்த்தைகளைக் கேட்டு அருவருத்துப் போனான் செல்வா.

‘ஸ்டாப் இட்.. இதுக்கு மேல பேசி என்ன கொலைகாரனா ஆக்கிடாதீங்க. நம்பிக்கைன்னா என்னன்னு தெரியாத உங்ககிட்ட, ஒரு உயிரை துச்சமாக மதிக்கிற உங்ககிட்ட என் உயிர் உள்ளவரை பேசமாட்டேன், இது சத்தியம்’

பேசியவன் விருட்டென்று அவன் அறையை நோக்கி நடந்தான். இதயம் கனப்பதைப் போல் இருந்தது. படுக்கையில் விழுந்தான். தன் படபடத்த இதயத்தை அடக்க முயன்றான். கண்களை மூடினான், சுந்தரேசன் கலங்கிய முகத்துடன் தெரிந்தார். உங்களை மலை போல நம்பினேனே தம்பி இப்படி செய்துட்டீங்களே. சட்டென்று கண்களை திறந்தான். அவரது ஆத்மா கூட என்னை மன்னிக்காது. கடவுளே! மறுபடியும் கண்களை மூடினான். ஒரு முகம் தெரியாத பெண் மணக்கோலத்தில் விசும்பி அழுது கொண்டிருந்தாள். ‘என் வாழ்க்கையை அழித்த பாவி நீ. எனக்கு என்ன பதில் சொல்லப் போற’ நீதி கோரி வாதாடினாள். மீண்டும் கண்களைத் திறந்தான். கடவுளே இனி என் வாழ்வில் நிம்மதியே கிடையாதா? எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. கனவுகள் பயங்கரமாக வந்தது. அலறி எழுந்து மணியைப் பார்த்தான். காலை 6.30 வேகமாக எழுந்து கிளம்பினான். தன் சர்டிபிகேட்ஸ் எடுத்துக் கொண்டு, காரை எடுக்காமல் நடந்தே சென்றான்.

பேங்க் பேங்காக ஏறி இறங்கினான். ஸ்சூரிட்டி போட யாராவது வேண்டும் என்றார்கள். யாரிடம் சென்று கேட்பான், பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எதற்கு கடன் என்று யோசிக்க மாட்டாங்களா? இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது.. சுந்தரேசன் வீட்டை நோக்கி நடந்தான் செல்வா. மனசு பதைபதைத்தது. அவர்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். எப்படிப் பேசப் போகிறோம் என்று ஓர் குழப்பமாக நடந்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. வீட்டில் ஒரு பெரிய பூட்டு தொங்கியது.

பக்கத்தில் விசாரித்தான்.

‘நேத்து நைட்டோட நைட்டா காலி பண்ணிட்டு போயிட்டாங்க தம்பி. பாவம் அவங்களும் எவ்வளவு தான் மோசமான பேச்சைத் தாங்குவாங்க. ஊரே அவர்களைத் தப்பா பேசியது. அதான் யாரிடமும் சொல்லிக்காம கிளம்பி போயிட்டாங்க’

கனத்த மனதுடன் வீடு திரும்பினான். சோபாவில் சரிந்து அமர்ந்திருந்தவனை தனலட்சுமியின் குரல் எழுப்பியது.

‘காப்பி குடிக்கிறியாப்பா’

‘வேண்டாம்மா’

‘ஏன்பா ஒரு மாதிரியா இருக்க’

‘அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா...’ சிறிது யோசித்தவன் ஏதோ பொறிதட்ட அம்மாவை ஏறிட்டான்.

‘சுந்தரேசன் அங்கிள் வீட்டேலிருந்து யாராவது வந்தாங்களா?’

‘ம்.. ஆமாம்பா, நேத்து ஒரு பொண்ணு வந்துச்சு’

‘யாரும்மா பிரியாவா?’ கேட்டான்.

‘இல்லப்பா அந்தக் கல்யாணப் பொண்ணு ஓவியா. பொண்ணாப்பா அவ.. உங்க அப்பாகிட்ட எப்படி பேசுனா தெரியுமா? வயசுக்குக் கூட மரியாதை கொடுக்கலை’

‘இந்தாங்க உங்க ரெண்டு லட்சம். எங்க அப்பா சொன்ன வாக்கை நான் காப்பாத்திட்டேன். உங்கள மாதிரி நம்பிக்கைத் துரோகம் பண்றவங்க நாங்க இல்ல. உங்க மகன் கிட்ட சொல்லிவைங்க, நாங்க சொன்ன சொல்லை மீற மாட்டோம்னு. பணக்காரங்கன்னா, தலைல என்ன கொம்பா மொளச்சிருக்கு. மனசுன்னு ஒன்னு இருக்கா இல்லையா, இதயமே இல்லாத உங்க மகனை பார்க்க கூட எனக்கு விருப்பம் இல்லை. நீங்கல்லாம் பெரிய மனுசுங்க,ச்சே.. ‘ என்றவள் விருட்டென்று கிளம்பிவிட்டாள்.

முகம் கன்றிப் போயி அமர்ந்திருந்தான் செல்வா, நிறைய பேரிடம் சொல்லி வைத்தான். இருப்பினும் அவர்களைப் பற்றி ஒரு விபரமும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

அந்த ஊரில் இருக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. உடனே குருவின் நினைவு வந்தது. புறப்பட்டான் சென்னைக்கு. குருவின் அப்பாவிடம் தான் அப்பா துணையின்றி தன் காலில் நிற்க ஆசைப்படுவதாக கூறி வங்கிகளில் லோன் வாங்க உதவி கேட்டான். செல்வாவின் தன்னம்பிக்கையும், சுயகவுரவத்தையும் பார்த்து வியந்தவர். அவனுக்கு ஸ்சூரிட்டி போட்டார். கிடைத்த லோனை வைத்துக் கொண்டு தி.நகரில் ஒரு கடையை லீசுக்கு வாங்கினான். அதில் துணிகளை வாங்கிப் போட குருவின் அப்பா பணம் கொடுத்து உதவினார். இந்த மூன்று வருடத்தில் அல்லும் பகலும் உழைத்து, கடையை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தான். இப்போது அவனது கடைக்கு என்று ஒரு நல்ல பெயர் எடுத்துவிட்டான். வங்கிக்கடனும் முடியப் போகிறது. குருவின் அப்பாவிடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டான். தனக்கென்று தனி வீடும், காரும் வாங்கிவிட்டான். இடையில் திருச்சியில் உள்ள நண்பர்களிடம் சுந்தரேசன் குடும்பத்தைப் பற்றி விசாரிக்காமல் இல்லை. எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
 
7​

‘ஏய் பிரியா என்னடி பண்ற?’ அடுக்களையிலிருந்து குரல் கொடுத்தார் கற்பகம்.

‘என்னம்மா... பரீட்சைக்கு படிக்கிறேன்ல. என் இப்படி கத்தற’

‘கொஞ்சம் இங்க வர்றியா?

‘இரு வரேன்’ சலிப்போடு எழுந்தாள்.

‘நீ படி பிரியா நான் பார்க்கிறேன்’ குரல் கொடுத்த ஓவியா அடுக்களையை நோக்கி நடந்தாள்.

‘என்னம்மா ஏன் படிக்கிற பொண்ண டிஸ்டர்ப் பண்ற’

‘இல்லடி, இந்த ஹார்லிக்ஸ் கொடுக்கத்தான் வரச் சொன்னேன்’ இழுத்தார்

‘சரி,சரி கொடு நானே கொண்டு போய் கொடுக்கிறேன்’

ஹார்லிக்சை பிரியாவிடம் கொடுத்துவிட்டு, அம்மாவிடம் வந்தாள்.

‘நாளைக்கு அந்த கல்யாணத் தரகரை வரச் சொல்லும்மா ஜாதகமும்,போட்டோவும் தரனும்’

‘உன் போட்டோவையும், ஜாதகத்தையும் தான் ஏற்கனவே கொடுத்தாச்சேம்மா’

‘என்னோடது இல்லம்மா, நம்ம பிரியாவோடது’

ஒரு வினாடி அதிர்ந்தார் கற்பகம்.

‘என்னாடி உளர்ற, உனக்கு முதல்ல முடியட்டும் அப்புறம் பார்க்கலாம்.

‘இல்லம்மா அவ படிப்பு முடிஞ்சதும் அவளை சீக்கிரமா ஒரு நல்ல இடத்துல பேசி முடிக்கனும். அப்பத்தான் எனக்கு நிம்மதி’

‘உனக்கு சித்தம் கலங்கி போச்சா ஓவியா. அவளை விட மூணு வருஷம் மூத்தவடி நீ’

‘அம்மா ஏற்கனவே திருமணம் வரைக்கும் வந்து நின்னு போன வலியே எனக்கு ஆறலை. அதுவுமில்லாம கல்யாணம் நின்னு போன பொண்ணுன்னா அவ்வளவு சீக்கிரம் வரன் அமையாது. அப்பா ஸ்தானத்துல இருந்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தரனும்ன்னு ஆசைப்படுறேன். அதுக்கப்புறமா நிச்சயமா எனக்கும் ஒரு வாழ்க்கையை அமைச்சுப்பேன்மா. நீ கவலைப்படாதே. இப்போதைக்கு பிரியா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேட சம்மதம் சொல்லு’ என்று கெஞ்சியவளை பெருமையோடு பார்த்தார் கற்பகம்.

தன் வயிறு நிரம்பினால் போதுமென்று நினைக்கும் மனிதர்கள் மத்தியில் தன் மகள் தனித்து இருக்கிறாள் என்ற மகிழ்ச்சி.

‘என்னவோ.. உனக்கு நான் சொல்லித்தான் நல்லது கெட்டது தெரியனும்னு இல்ல. உன் இஷ்டம்’

‘அம்மான்னா அம்மாதான், அப்போ நாளைக்கே நாள் நல்லா இருக்கு. அந்த தரகர் கிட்ட பிரியாவோட ஜாதகமும், போட்டோவும் கொடுத்துடலாம். அவளுக்கு மாப்பிள்ளை எங்காவது நிச்சயம் பிறந்திருப்பாரு’ உற்சாகமாக கூறினாள்.

ஹார்லிக்ஸ் தம்ளரை வைக்க வந்த பிரியா அங்கு அக்கா கடைசியாக பேசியது காதில் விழுந்தது. நாணம் பற்றிக் கொண்டது. ஏனோ அந்த பெயர் தெரியாத மனிதனின் முகம் அவள் கண் முன் வந்து நின்றது. வேகமாக தன் அறைக்குள் ஓடி ஒளிந்தாள். கல்யாணப் பேச்சைக் கேட்டதும். ஏன் அவன் முகம் என் கண் முன் தோன்றியது. நான் அவனை காதலிக்கிறேனா? குழம்பினாள் பிரியா.

எவ்வளவுதான் குழப்பம் இருந்தாலும் பிரியா படிப்பில் வெகு சுட்டி நன்றாக பரிட்சை எழுதினாள். இறுதித் தேர்வை எழுதிவிட்டு, வெளியே வந்தவளுக்கு ஆச்சர்யம்! அவனேதான். இன்னும் தன்னை மறக்கவில்லை. இருப்பினும் அவனைக் கண்டு கொள்ளாதது போல், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டாள். அவள் அருகில் வந்தவன்.

‘எக்ஸாம்ஸ் எல்லாம் நல்லா எழுதினியா பிரியா’ உரிமையுடன் ஏதோ பல ஆண்டுகள் பழக்கம் உள்ளவன் போல் கேட்டான்.

ஏனோ வெட்கம் அவளைப் பற்றிக் கொண்டது. தரையைப் பார்த்தாள். ’ம்.. எழுதியிருக்கேன்’ சன்னமாக வந்தது குரல், கைகளில் வைத்திருந்த புத்தகத்தை இறுக அணைத்தாள். உள்ளம் படபடத்தது.

இவளின் உணர்வுகளை மென்மையாக ரசித்தவன் உதட்டோரம் தோன்றிய சிரிப்புடன்.

‘எப்பவுமே படபடன்னு கோபப்பட்டு பேசுவீங்க இன்னைக்கு என்ன பேச்சையே காணும்’ சீண்டினான்.

‘ம்... அதெல்லாம் ஒன்னுமில்ல அப்புறம்...’ புருவங்களை உயர்த்தி கேட்டாள்.

‘என்னங்க என்ன கேக்கறீங்க. நீங்கதான் பதில் சொல்லனும், ஆறு மாசம் கழிச்சு வரச் சொன்னீங்க. இதோ வந்துட்டேன், அதே காதலோட,

இந்த ஆறு மாசத்தில் ஒரு நாள் கூட வந்து அவளை தொந்தரவு செய்யாத கண்ணியம் அவளுக்கு பிடித்திருந்தது. இருப்பினும் அவனைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் எப்படி...? யோசித்தவள்.

‘உங்கள.. பத்தி..’ இழுத்தாள்.

‘நான் எம்.ஏ படிச்சிருக்கேன். சொந்தமா பிஸ்னஸ் பண்றேன். மாச சம்பளத்தை விட கண்டிப்பா அதிகம் வரும். சொந்த வீடு கிண்டில இருக்கு. எங்க அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே செல்லப் பிள்ளை. தம்.. அடிக்கிற பழக்கம் கிடையாது. தண்ணி மட்டும் என்னிக்காவது பார்ட்டின்னா குடிப்பேன். அதுவும் அளவோடதான். இதுவரைக்கும் எந்த பொண்ணு பின்னாடியும் போனதில்லை. முதல் முறையாக பிரியான்னு ஒரு தேவதைக்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன்..., போதுமா என்னைப் பத்தி இல்ல வேற ஏதாவது சொல்லனுமா?’ கைகளிக் கட்டிக் கொண்டு அவள் கண்களை ஊடுருவினான்.

அவன் பார்வையின் குறும்பு தாங்காமல் தலை கவிழ்ந்தாள். அவனின் வெளிப்படையான பேச்சு பிடித்திருந்தது. பிடித்திருக்கிறது என்று சொல்லி விடலாமா? யோசித்தாள். உள்மனம் எச்சரித்தது. உன் குடும்ப நிலை உனக்கு தெரியாதா? அக்கா இருக்கும் போது நீ திருமணத்திற்கு முந்தலாமா? அதுவுமில்லாமல் இவனைப் பார்த்தால் பணக்கார வீட்டுப் பையன் போல் இருக்கிறான். ஏற்கனவே அக்காவின் திருமணம் வரதட்சனையால் நின்றது. இவர்களுக்கு இணையாக அக்காவால் செய்ய முடியாது. என்ன செய்வது குழம்பினாள். இந்த விஷயத்தில் நான் முடிவெடுப்பது சரியல்ல. அக்காவிடமே விட்டுவிடலாம். ஒரு தீர்மானத்திற்கு வந்தவளை நிமிர வைத்தது அவனின் குரல்.

‘என்ன பயங்கிற யோசனை போல். வேணும்னா யோசிக்க கொஞ்ச நாள் எடுத்துக்கறீங்களா?’

இளமையின் கிறக்கத்தில் இருந்து மீண்டாள் பிரியா. தெளிவாக அவன் கண்களை பார்த்து பேச ஆரம்பித்தாள்.

‘இங்க பாருங்க நீங்க நினைக்கிற மாதிரி காதல் கத்திரிக்காய்னு திரிய எனக்கு இஷ்டமில்லை. எனக்கு அம்மா, அக்கான்னு ரெண்டு பெரியவங்க வீட்டுல இருக்காங்க. நீங்க, அவங்ககிட்ட வந்து பேசுங்க, ஏன்னா இது வாழ்க்கை விஷயம், எனக்கு அனுபவம் பத்தாது. பஸ் வந்துடுச்சி நான் கிளம்புறேன்’ வேகமாக நகர்ந்தவளின் கையிலிருந்து ஒரு சின்ன புக் விழுந்தது.

‘’உங்க புக் விழுந்துடுச்சி’ குனிந்து எடுத்தான்.

‘அது காலேஜ் டைரிதான் .இனி வேண்டாம். குப்பைல போட்டுடுங்க’ திரும்பாமலே பதிலளித்தாள்.

‘வீட்டு அட்ரஸ் தராம எப்படி வீட்டுக்கு வர்றது’ உரத்து கத்தினான். அது அந்த டைரியிலேயே இருக்கு’ ஓடிச்சென்று பஸ்சில் ஏறினாள்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி வாசல் கதவுகளை தண்ணீர் தொட்டு துடைத்துக் கொண்டிருந்தாள் பிரியா. வாசலில் கார் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தாள். காரிலிருந்து இரண்டு வாலிபர்கள் இறங்கினார்கள். அதில் ஒருவனை பார்த்ததும் பிரியாவுக்கு கைகால் உதறல் எடுத்துவிட்டது. அடப்பாவி சொல்லி மூணு நாள் கூட ஆகலையே அதுக்குள்ளே வந்து நிக்கிறான். கடவுளே! என்ன நடக்கப் போகுதோ... ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தவளை அவன் குரல் தான் கலைத்தது. கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன்.

‘டேய், நான் சொன்ன பொண்ணோட வீடு இதுதான்டா, நீதான்டா எப்படியாவது பேசி சம்மதிக்க வைக்கனும்’ வேண்டுமென்றே உரத்த குரலில் கூறினான்.

உடனே பிரியாவிடம்,

‘என்ன பிரியா, உள்ள வாங்கன்னு கூப்பிட மாட்டியா?’

‘ம்.. உள்ள வாங்க...’ தடுமாறினாள்.

அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

படபடத்த இதயத்துடன் அவர்கள் பின்னாலேயே நுழைந்தாள் பிரியா.

‘உட்கார சொல்ல மாட்டியா..ம்.. எல்லாமே நான் சொல்லித் தர வேண்டியதாய் இருக்கு. நீ உட்காருடா, அவங்க கொஞ்சம் ரிசர்வ் டைப்’ தன் நண்பனை அமர வைத்தான்.

ஆனால் அவன் நண்பன் உட்காரவில்லை. சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தை வெறிக்க பார்த்துக் கொண்டு அதனருகில் சென்றான். இருவருக்கும் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது கதவருகில் வந்த ஓவியா, அவனை பார்த்துவிட்டாள் செல்வா....

‘ஏய் பிரியா கண்டவங்களை ஏன்டி உள்ள விட்ட அறிவில்ல உனக்கு’ அலறினாள்.

அப்போதுதான் பிரியா செல்வாவை உற்றுப் பார்த்தாள், சகலமும் புரிந்தது அவளுக்கு.

ஓவியாவை ஏறிட்ட செல்வாவின் கண்கள் கசிந்திருந்தது. அதைப் பார்த்ததும் ஓவியா அதிகம் சூடானாள்.

‘நல்லா நடிக்கிறீங்க.. செய்றதையும் செஞ்சிட்டு ஏன் நல்லவன் மாதிரி வேஷம் போடுறீங்க.. ப்ளீஸ் கெட் அவுட்..’ கத்தினாள்.

வேகமாக வெளியேறினான் செல்வா. அப்போது தான் சோபாவில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள் ஓவியா

குரு நீங்க எப்போ வந்தீங்க.. நான்.. செல்வா..’ தடுமாறினாள்.

‘கூல் டவுன் ஓவியா.. வாங்க வந்து இந்த சோபாவில் உட்காருங்க, பிரியா போய் தண்ணீர் எடுத்துட்டு வா’

இயந்திரமாய் உள்ளே சென்றவள். வந்திருந்தவர் செல்வா தான் என்பது ஓவியா கத்தும்போது தான் தெரிந்தது. அதுவரை அவள் குருவைத்தான் கவனித்துக் கொண்டிருந்தாள். மனதில் பல கேள்விகள் எழுந்தன. இவரை அக்காவுக்கு முன்பே தெரியுமா? இவருக்கும் செல்வாவிற்கும் என்ன உறவு? குழம்பினாள்.

அவள் கொண்டு வந்த தண்ணீரை ஓவியா பருகினாள். இதயம் சீராக இயங்கியது. தன் முதலாளியின் முன் தான் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டதில் அவளுக்கு வெட்கமாக இருந்தது.

‘குரு அது.. செல்வாகிட்ட...’

‘ஒரு நிமிஷம் ஓவியா, அது உங்க சொந்த விஷயம் அதுல தலையிட நான் விரும்பலை.என் விஷயத்திற்கு வர்றேன்..’ இழுத்தான்.

‘சொல்லுங்க குரு என்ன விஷயம்?’

‘அது, அம்மா இல்லையா ஓவியா?’

‘பக்கத்து வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் குரு. அதான் திண்டுக்கல் வரைக்கும் போயிருக்காங்க. என்ன விஷயம். என்கிட்டயே சொல்லுங்க’

‘நான் வெளிப்படையா சொல்லிடறேன்’ நிறுத்தினான். பிரியாவைப் பார்த்தான். படபடத்த இதயத்துடன் நின்றிருந்தாள். பிரியா மனதிற்குள் பல தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தாள்.

தொடர்ந்தான் குரு.

‘நான் சொல்லும் போது குறுக்கிடாம கேளுங்க ஓவியா, நான் முடிச்சதுக்கப்புறம் நீங்க பேசலாம். நான் உங்க தங்கையை முதன் முதலா தி.நகர்ல பார்த்தேன். அப்போ நான் செல்வா கடையில் இருந்தேன். அப்பாவுக்கு உடம்பு சரியிலைன்னு போன் வந்தது வேகமா நடந்து வந்துக்கிட்டிருந்தபோது, தெரியாம அவங்க மேல மோதிட்டேன்.அப்போதான் அவங்கள முதன் முதலா பார்த்தேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன். இவங்க தான் என் மனைவின்னு அப்புறம் இவங்க காலேஜை கண்டுபிடிச்சு. இவங்களோட பேசினேன். உறுதியா சொல்லிட்டாங்க. காதல் வேண்டாம்ன்னு. அப்புறம் நான் தொடர்ந்து வர்றதை பார்த்துட்டு, ஆறு மாசம் கழிச்சு என் பரீட்சை முடியுது. அப்புறம் வாங்கன்னு தட்டிக் கழிச்சுட்டாங்க. அவங்க பரீட்சை முடிஞ்சு போய் நின்னா, எனக்கு அனுபவம் பத்தாது எதுவானாலும் என் அக்கா, அம்மாகிட்ட பேசுங்கன்னு சொல்லிட்டாங்க. அதான் செல்வாவை கூட்டிட்டு பேச வந்தேன். என்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்ச என் ஒரே நண்பன் அவன்தான். ஆனா இது உங்க வீடுன்னு நாக இருவரும் சத்தியமா எதிர்பார்க்கல. தெரிஞ்சிருந்தா செல்வா கண்டிப்பா வந்திருக்க மாட்டான்’ நண்பனை விட்டுக் கொடுக்காமல் பேசி முடித்தான் குரு.

அவன் பேசும் போது ஓவியாவின் முகத்தில் பற்பல உணர்ச்சிகள் தோன்றியது. அவ்வப்போது பிரியாவை பார்த்தாள். அவள் தரையைப் பார்த்துக் கொண்டு கண்கள் கசிய நின்றாள். பிரியாவின் மனம் அதிகமாக பாதித்திருந்தது. குருவை வரச் சொல்லிவிட்டாளே தவிர அவன் இவ்வளவு சீக்கிரம் வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அக்கா தன்னைப்பத்தி என்ன நினைப்பாள். அவள் இருக்கும் போது நமக்கு என்ன அவசரம் என்று நினைக்க மாட்டாளா? கடவுளே! மானமே போச்சு.

குரு கூறியதை முழுதாக கேட்டு முடித்த ஓவியாவுக்கு தங்கையைப் பற்றி பெருமையாக இருந்தது. தன்னையும் அம்மாவையும் நினைத்து பார்த்து பேசியிருக்கிறாள். தங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறாள். குரு மிகவும் நல்லவர் தான். அது ஓவியாவிற்கு நன்றாகவே தெரியும். எனவே சந்தோஷம் தான். ஆனால் பணக்காரர். அவருக்கு சமமாக தன் தங்கைக்கு செய்ய தன்னால் முடியுமா? மெல்ல பேச ஆரம்பித்தாள்.

‘குரு.. வீட்டுல...’ இழுத்தாள்.

‘எங்க வீட்டுல பேச வேண்டியது என் பொறுப்பு. உங்களுக்கு சம்மதமா?’ பேச்சை மேலும் வளர்ப்பதை தவிர்த்தான் குரு.

‘அது.. உங்களை பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எனக்கு சம்மதம்தான். ஆனா அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்கனுமே’

‘ஓ.. தாராளமாய் கேளுங்க. பெரியவங்களை கேட்கிறது நியாயம்தானே. அப்புறம் என்ன பிரியா. உங்க அக்காவே சொல்லிட்டாங்க. அப்போ நான் கிளம்பவா’ எழுந்தான் குரு.

‘குரு இருங்க. நல்ல விஷயமா வீடு தேடி வந்திருக்கீங்க..ஒரு கிளாஸ் ஜூஸாவது சாப்பிட்டு போங்க. அப்பத்தான் எனக்கு சந்தோஷம்’ என்றாள் ஓவியா.

‘குடிச்சிட்டா போச்சு..’ எழுந்தவன் மறுபடி அமர்ந்தான்.

ஓவியா வேகமாக சென்று எலுமிச்சம் பழம் பிழிந்து ஜூஸ் தயாரித்து எடுத்து வந்தாள். அவள் வரும் வரை பிரியாவையே பார்த்துக் கொண்டிருந்தான் குரு. அவளிடமிருந்து விம்மல் மட்டும் வந்தது.

ஜூஸை பெற்றுக் கொண்டு கதவு வழியே ரோட்டைப் பார்த்தான். அப்போது தான் ஓவியாவுக்கு செல்வாவின் நினைவு வந்தது.

‘நான் போய் கூட்டிட்டு வரேன் குரு. நீங்க உட்காருங்க..’’ என்றவள், வாசலை நோக்கி நடந்தாள். அவள் கதவைத் தாண்டி சென்றதும் பிரியாவிடம் வந்தான் குரு அவள் தரையையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் தாடையை தன் ஒற்றை விரலால் நிமிர்த்தினான். கண்கள் கலங்கி இருந்தன.

‘பிரியா..பிரியா.. எதுக்கு நீ இப்போ அழற..’

‘அழாம.. நீங்க செய்யறது உங்களுக்கே நல்லாயிருக்கா. அக்கா கல்யாணம் பண்ணிக்காம இருக்கும் போது இவளுக்கு என்ன அவசரம்னு, அக்காவும் அம்மாவும் என்னைப் பத்தி தப்பா நினைக்க மாட்டாங்களா, என் மானமே போச்சு’ வெடித்து அழுதாள்.

அவளின் தலையை மெல்ல வருடியவன்.

‘பிரியா ப்ளீஸ் அழாத.. இங்க பாரு, என் விருப்பத்தை உங்க வீட்டுல சொல்லி சம்மதம் வாங்கலாம்னு தான் வந்தேன். நம்ம கல்யாணம் உங்க அக்கா கல்யாணத்துக்கு அப்புறம் தான் சரியா?’

அவள் முகத்தை இருகைகளிலும் ஏந்திக் கொண்டு கேட்டான்.

‘நிஜமாதான், இப்ப நீ சொல்லவேண்டியது ஒன்னே ஒன்னுதான்’ என்ன என்று புருவம் உயர்த்தினாள்.

‘உனக்கு என்ன பிடிச்சிருக்கான்னு சொல்லவே இல்லையே பிரியா’ அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

சிரித்துவிட்டாள் பிரியா.

‘ஏன், திருமணமாகி இரண்டு குழந்தை பிறந்தவுடன் கேளுங்களேன் இந்த கேள்வியை ஆளைப்பாரு. வீட்லயே சொல்லி சம்மதம் வாங்கியாச்சு அப்புறம்தான் கேட்கனும்னு தோணுச்சாக்கும்’

‘உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு, உன் கடைசி பரிட்சையப்பவே நான் தெரிஞ்சுகிட்டேன்’

‘எப்படி?’

‘எப்பவும் என்னைப் பார்த்தால் முகத்தை சுழிப்ப, ஆன அன்னைக்கு வெட்கப்பட்ட, அப்பவே தெரிஞ்சிடுச்சு உன் மனசுல நான் நுழைஞ்சிட்டேன்னு’

‘குறும்பு தான்’ அவன் காதை லேசாக பிடித்துத் திருகினாள்.

‘உங்க அக்கா பார்த்தா என்ன நினைப்பாங்க. நான் சோபால சமர்த்த உட்கார்ந்துக்கிறேன்’ சோபாவில் அமர்ந்து கொண்டான். காரின் ஸ்டியரிங்கில் கவிழ்ந்திருந்தான் செல்வா. கண்ணாடியை ஒற்றை விரலால் தட்டினாள். சத்தம் கேட்டு விழித்தவன். அவளைப் பார்த்து தயங்கினான். கண்கள் சிவந்திருந்தது. கோபம், துக்கம், அவமானம் இப்படி பல உணர்ச்சிகள் அவன் முகத்தில மாறி மாறி தெரிந்தது.

அவள் சன்னமான குரலில் ‘உள்ள வாங்க...’

‘இல்ல பரவாயில்லை, குருவை அனுப்பி வைங்க’

‘நல்ல விஷயம் பேச வந்திருக்கீங்க. அது தெரியாம நான்.. என்னை மன்னிச்சிடுங்க’

‘அய்யய்யோ.. மன்னிப்பு கேட்க வேண்டியது நான்தான். என்னால்தான்...’

‘இப்போ எதைப் பத்தியும் பேச வேண்டாமே நான் என் தங்கை விஷயமா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீங்க உள்ள வந்து ஒரு வாய் ஜூஸ் சாப்பிட்டு போனீங்கன்னா சந்தோஷப்படுவேன்’ அவனைப் பேச விடாமல் பேசி முடித்தாள்.

அதற்கு மேல் தான் மறுத்தால் அசிங்கமாக இருக்கும் என்று எண்ணி உள்ளே சென்றான்.

இருவரும் ஜூஸ் குடித்துவிட்டு கிளம்பி விட்டார்கள். இரு பெண்களும் சந்தோஷமாய் வழியனுப்பி வைத்தார்கள்.
 
8​

‘என்னடா சொல்ற’ ஆச்சர்யமாக கேட்டான் குரு.

‘ஆமான்டா, நான் ஓவியாவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இந்த ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுலயிருந்து.. உன் கல்யாண விஷயமா பேசப் போறாங்கல்ல. அப்போ அப்படியே என்னைப் பத்தியும் பேசச் சொல்லுடா’

‘என்ன விளையாடுறியா?’

‘இல்லடா உண்மையைத்தான் சொல்றேன், சுந்தரேசன் அங்கிள் குடும்பத்துக்கு ஏதாவது செய்யனும்டா’

‘டேய், அனுதாபத்திலேயோ, இல்லை கைமாறாகவோ செய்ய கல்யாணம் ஒன்னும் விளையாட்டு இல்லடா’

‘இது அனுதாபத்துல வந்த முடிவு இல்லடா, எனக்கு ஓவியாவ பிடிச்சிருக்கு. அவ எப்பவோ என் மனசுல வந்துட்டா. அவ சுந்தரேசன் அங்கிளோட பொண்ணுன்னு தெரிஞ்சதும் அவதான் என் மனசு புல்லா நெறைஞ்சு இருக்க’

‘அவங்க உன்ன பார்த்தாலே பத்திரகாளியா மாறிடறாங்களேடா’

‘பேசிதான்டா புரிய வைக்கனும். அவங்க மனசு மாறுற வரைக்கும் நான் காத்திருப்பேன்டா’ குரல் தழுதழுத்தது.

‘ஏய் கவலைபடாதடா, எல்லாம் நல்லபடியா நடக்கும். நான் பேசறேன் ஓவியாகிட்ட, பொண்ணு பார்க்கும் போது சொன்னா. ஓவியா எல்லார் முன்னாடியும் வெச்சு உன்ன அசிங்கபடுத்திட்டா என்ன செய்யறது? என்னால் தாங்கிக்க முடியாது. நாளைக்கு ஆபீஸுக்கு வா. நான் அவங்கிட்ட பேசிடுறேன். நீயும் பேசு. முடிவு பாசிடிவ்னா அம்மாவ பேசச் சொல்றேன். ரெண்டு பேர் கல்யாணத்துக்கும் சீக்கிரம் நாள் குறிக்க சொல்லலாம். இல்லைன்னா அவங்க மனசு மாறும் வரைக்கும் வெய்ட் பண்ணலாம்’

*****​

ஓவியாவின் கண்கள் கணினியில் மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தன. சட்டென்று அவளது கண்கள் அகலமாக விரிந்தது. உடனே பேப்பர் பேனாவை எடுத்து குறிப்பு எழுத ஆரம்பித்தாள். எழுதி முடித்து உடனே குருவின் அறை நோக்கி விரைந்தாள்.

‘மே ஐ கமின் சார்’

‘வாங்க ஓவியா’

அவளின் முகத்தைப் பார்த்தவன்

‘என்ன ஓவியா ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க, ஏதாவது விஷேசமா’

‘ஆமாம் சார். விஷேசம்தான் . இங்க பாருங்க சார். கோவைல ஐம்பது ஏக்கர் நிலம் விலைக்கு வருதாம். அடுத்த மாசம் ஐந்து நாள் கான்பரன்ஸ் இருக்காம். கடைசி நாள் ஏலம் விடுறாங்களாம். நாம கண்டிப்பா போகணும் சார். இந்த மாதிரி ஆப்பர்சுனிட்டி கிடைக்கிறது கஷ்டம். அதுவுமில்லாம இப்போ ஐ.டி.டவுன்ல இருக்கிறதால நிலத்தோட விலை குறைஞ்சிடுச்சு. ஆனா இன்னும் ஒரு வருஷத்துல செமயா எகிறிடும். அப்புறம் பிளாட் போட்டு வித்தா செம பணம்’ கண்கள் பளபளக்க நிறுத்தாமல் பேசினாள். அவளின் ஆர்வத்தை அதிகமாக கவனித்தான் குரு.

‘கிரேட் ஓவியா. உங்களோட இன்வால்வ்மென்ட்டை பாராட்டுறேன். கண்டிப்பாக நாம் போகலாம்’

‘நாமளா’

‘ஆமாம் எனக்கு பர்சனல் அட்வைசர் நீங்கதானே.அப்புறம் நீங்க வராம?’

‘ம்.. சரி சார். அடுத்த மாசம் 10ம் தேதி மறந்துடாதீங்க சார், நான் சீட்டுக்கு போறேன்’

‘ஒரு நிமிஷம் ஓவியா இப்பவே கோவைக்கு ரெண்டு டிக்கெட் புக் பண்ணிடுங்க’

‘ஓகே சார்’

கடிகாரம் ஐந்து முறை அடித்தது. வீட்டிற்கு கிளம்ப தயார் செய்து கொண்டிருந்தாள் ஓவியா. போன் அலறியது எடுத்து காதுக்குக் கொடுத்தவள்.

‘சொல்லுங்க சார்’

‘ஓவியா ரெப்ரெஷ்மென்ட் ரூமுக்கு வர்றீங்களா, கொஞ்சம் பர்சனலா பேசனும்’

‘என்ன சார்,பிரியாவை பத்தியா?’

‘வாங்க சொல்றேன்’

போனை வைத்தவள் விரைவாக நடந்தாள். மனதில் குரு என்ன பேசப் போகிறான் என்ற கேள்வியோட அவசரமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளின் கண்களில் முதலில் பட்டது செல்வாதான். முகத்தை சுருக்கினாள். பின்பு குருவை நோக்கி நடந்தாள்.

‘வாங்க ஓவியா உட்காருங்க’ நாற்காலியை காட்டினான் குரு.

அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.

;’சொல்லுங்க குரு’

‘ஏய் செல்வா கொஞ்சம் வெளியே இருடா, பேசிவிட்டு கூப்பிடுறேன்’

‘இல்ல குரு, இது என் விஷயம். நான் தான் பேசனும்னு தோணுது’

‘அடப்பாவி இவ்வளவு நேரம் வராத தைரியம் இப்போ வந்துடுச்சா, சரிதான் போ, நீயாச்சு , ஓவியாவாச்சு, நடுவுல நான் யாரு. எனக்கு வேலை மிச்சம். நான் கிளம்புறேன்டா. கிளம்புறேன் ஓவியா’ கதவருகில் சென்றான் குரு.

‘சார் நானும் வரேன்...’ எழ முயன்ற ஓவியாவை.

‘ஐந்து நிமிஷம் ஓவியா ப்ளீஸ்’ என்ற செல்வாவின் குரல் நிறுத்தியது.

என்னதான் சொல்ல போறார்னு கேட்டுத்தான் வைப்போம் என்று அமர்ந்தாள்.

மேஜையைப் பார்த்தவன்.

‘நான் சொல்லப் போற விஷயத்தை நீங்க எப்படி எடுத்துக்கப் போறீங்கன்னு தெரியல ஓவியா. ஆனா சொல்லாம என்னால இருக்க முடியல’ நிறுத்தினான்.

பீடிகை எல்லாம் பலமா இருக்கே. என்னதான் சொல்ல வர்றார் இவர் என்று எண்ணியவள் அவன் கண்களை ஊடுருவினாள்.

அவள் கண்களை நேராகப் பார்த்தவன்.

,மூணு வருஷத்துக்கு முன்னாடியே முகம் தெரியாத உன்னை நேசிச்சிருக்கேன் ஓவியா’

ஏதோ பேச முயன்றவளை,

‘ப்ளீஸ் ஓவியா, நான் பேசிடறேன், நீ என் அப்பா மூஞ்சில பணத்தை வீசிட்டு போனதா அம்மா சொன்னப்பவே உன் தைரியம் எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா உன்ன சென்னையில பார்த்ததும். உன் கோபமான முகம் என்னை வாட்டி வதச்சது. அப்புறம்தான் நீ சுந்தரேசன் அங்கிளோட பொண்ணுன்னு தெரிஞ்சதும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவே பண்ணிட்டேன்’

மறுபடியும் குறுக்கிட முயன்றாள். அப்போதும் விடவில்லை செல்வா.

‘செய்த தப்புக்கு இது பிராயச்சித்தமான்னு நீ நினைக்கலாம். ஆனா அதுக்கு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு அவசியமில்லை. சுந்தரேசன் அங்கிள் ஸ்தானத்துல இருந்து உங்க இரண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தந்தாலே போதுமே. ஆனா என் மனசுல நீ இருக்க மனசு முழுக்க காதல் இருக்கு. இதெல்லாம் எனக்கே தெரியாம எனக்குள்ள வந்துடுச்சு. அது சுகமாகவும் இருக்கு. சுமையாகவும் இருக்கு. நீ எனக்கு முழுசா கிடைச்சா வாழ்க்கை முழுதும் பொக்கிஷமா பாதுகாப்பேன். இப்பகூட நான் உன்னை என்னோட மனைவியாத்தான் பார்க்கிறேன். ஏதோ ரொம்ப நாள் தொடர்பு இருக்கிற மாதிரி இருக்கு. என் மனசுல இருந்த சுமையை இறக்கி வெச்சுட்டேன். இனி நீதான் சொல்லனும்’ பெருமூச்சோடு நிறுத்தினான்.

ஐந்து வினாடி மௌனம் நிலவியது.

நிமிர்ந்து அமர்ந்தவள், அவன் கண்களை நேருக்கு நேர் நோக்கினாள்.

‘நீங்க சொல்றதெல்லாம் புரியது செல்வா. ஆனா நம்ம கல்யாணம் நடக்கனும்னா உங்க காதல் மட்டும் போதுமா? எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கனும் தானே?’

‘கண்டிப்பா ஓவியா, அதுக்காகத்தானே இவ்வளவு தூரம் பேசறேன்’

‘ஆனா எனக்கு உங்கள பிடிக்கலை...’ முடித்துவிட்டாள்.

‘காரணம்?’

‘உங்களுக்கு தெரியாதா..?’ புருவத்தை உயர்த்தினாள்.

‘அது நான் விவரம் தெரியாத வயசுல செஞ்ச தப்பு ஓவியா.... தெரியாம நடந்துடுச்சு..’

‘ஆனா.. அதுக்கு பலி எங்க அப்பா’

‘ஓவியா.. இதைத்தவிர வேற காரணம் சொல்லு...’

‘இதுவே பெரிய காரணம். வாழ்க்கை முழுக்க உங்களைப் பார்த்தாலே வெறுப்புதான் வரும் எனக்கு. அப்புறம் எப்படி கல்யாணம் நெவர். எனக்கு டைம் ஆயிடுச்சு. மறுபடியும் இப்படி உளறாம இருந்தீங்கன்னா சந்தோஷம். தயவு செய்து என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க. நான் மூணு வருஷத்துக்கப்புறம் இப்பதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன். அதை கெடுத்துடாதீங்க குட் பை..’

இவன் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறிவிட்டவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா

அந்த ஞாயிறன்று பெண் பார்க்கும் படலம் முடிந்தது. இரு குடும்பத்தினருக்கும் பரம சந்தோஷம். ஆனால் ஓவியாவின் திருமணம் முடிந்தவுடன் தான் தன் திருமணம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள் பிரியா. அந்த நிகழ்ச்சி முழுவதும் செல்வாவின் கண்கள் ஓவியாவை வட்டமிட்டன. அவளின் அலட்சிய பார்வை மட்டுமே அவனுக்கு கிடைத்தது

*****​

இரவு 10.00 மணி, சென்ட்ரல் இரயில் நிலையம், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கடைசி நேரத்தில் இரயிலைப் பிடிக்க கூட்டம் மூட்டை முடிச்சுக்களுடன் ஓடிக்கொண்டிருந்தது. சலவை செய்து வெள்ளையுடையில் டியுட்டிக்கு வரும் இரயில் ஓட்டுனர்கள். இரயிலைக் கண்டுபிடிக்க அங்கும் இங்கும் படபடக்கும் பயணிகள். நடுஇரவு இரயிலுக்காக முன்னமே வந்து துணி விரித்துப் படுத்திருக்கும் பயணிகள், மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு ஓடும்போர்ட்டர்கள் ஆக இரயில் நிலையம் அல்லோலக்கல்லோலப் பட்டுக் கொண்டிருந்த்து.

குருவும், ஓவியாவும் பெட்டிகளுடன் நுழைந்தனர். அவர்களுக்கு பின்னால் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்தான் செல்வா. அவர்களின் கோச்சைக் கண்டுபிடித்து பெட்டிகளை வைத்துவிட்டு ஓவியா இருக்கையில் அமர்ந்து கொண்டாள். குரு வெளியில் செல்வாவிடம் பேசிக் கொண்டிருந்தான். குருவின் கைப்பேசி அலறியது. எடுத்துக் காதுக்கு கொடுத்தவனின் முகம் மாறிவிட்டது. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா.

போனை வைத்தவன் செல்வாவின் கையை பிடித்து இழுத்துச் சென்றான். ஓவியாவிடம் சென்றதும். ‘எங்கப்பாவிற்கு உடம்பு முடியலையாம். அதனால் நான் உடனே போகனும்’

‘சரி சார், நாம கிளம்பிடலாம்...’

‘நாம இல்ல ஓவியா, நான் மட்டும்தான் . செல்வாவை உன் கூட துணைக்கு அனுப்புறேன்...’

இதைக் கேட்டவள் பதறினாள்.

‘சார் வேண்டாம்.. சார்.. உங்களுக்குத்தான் தெரியுமே...’ இழுத்தாள்.

‘பர்சனல் விஷயத்தை பேச இது நேரமில்லை. இது நம்ம ஆபீஸ் விஷயம். நீங்கதான் என் சார்பா இருந்து அந்த ஏலத்துல கலந்துக்கனும். உங்க துணைக்கு செல்வாவை கூட்டிட்டு போங்க. அவன் ஒரு ஜென்டில்மேன். இந்தப் பயணத்துல உங்களுக்கு கண்டிப்பாக தொந்தரவு தரமாட்டான் போதுமா...’

‘டேய் நான் கிளம்புறேன்டா.. நீ ஓவியாவ பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வாடா....

‘டேய் நான் ட்ரெஸ் கூட எடுக்கலையேடா...’ மழுப்பினான் செல்வா.

‘என் ட்ரெஸ் எல்லாம் உனக்கு சரியாத்தான் இருக்கும். இதோ ரயில் புறப்படப்போகுது. நான் இறங்குறேன். ஹேப்பி ஜெர்னிடா...’ இறங்கிவிட்டான் குரு.

ஓவியா பேந்த பேந்த விழித்தாள். அவளுக்கும், அவனுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் தன் பர்த்தில் ஏறி படுத்துவிட்டான் செல்வா. ஓவியா தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.

இருவரும் அப்பர் பர்த் எதிரெதிரில், இவளை கவலைப்படுத்த வேண்டாம் என்று எண்ணினான் போலும். சுவற்றின் புறம் திரும்பிப் படுத்திருந்தான். இவள் புறம் திரும்பவேயில்லை. இரவில் குளிர் அதிகரித்தது. அவளால் உறங்கவே முடியவில்லை. சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திப் பார்த்தாள். அப்போதும் குளிர் அடங்கவில்லை. மின் விசிறி வேறு ஓடிக்கொண்டிருந்தது. நிறுத்தவும் பயமாக இருந்தது. மற்றவர்களுக்கு காற்று தேவைப்பட்டால் என்ன செய்வது?

செல்வாவிற்கு விழிப்பு வந்துவிட்டது. இறங்கி கழிப்பறை நோக்கி சென்றவன், மூன்று நிமிடம் கழித்து திரும்பினான். தன் பர்த்திற்கு ஏற எத்தனித்தவன், அவளை ஒரு வினாடி பார்த்தான். அவளின் குறுக்கிய உடம்பையும், சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திய விதத்தையும் கவனித்தவன். மினி விசிறியை நிறுத்தினான். வேகமாக தன் பர்த்தில் சென்று படுத்துவிட்டான். அவளுக்கு உயிர் வந்தது போல் இருந்தது.

மனித உடம்பின் அமைப்பு தான் விசித்திரம். அதிகமான வெப்பத்தையும் தாங்குவதில்லை. அதிகமான குளிரையும் தாங்குவதில்லை என்று எண்ணியவள் மனதிற்குள் செல்வாவிற்கு நன்றி சொன்னாள். சிறிது நேரத்தில் இரயிலின் கூச்சிக்..சிக்.. தடதட.. சத்தம்... எங்கோ பாதாளத்தில கேட்பது போல் இருந்தது. கண்ணயர்ந்தாள்.

மென்மையாக தன் கைகளை யாரோ தொடுவது போலிருந்தது. உறக்கம் கலைந்து விழித்தாள். செல்வாதான் நின்றிருந்தான்.

‘கோவை வரப்போகுது ஓவியா. போய் பேஸ்வாஷ் பண்ணிட்டு வந்துடுங்க...’ தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

முக்கால்வாசி பயணிகள் எழுந்துவிட்டனர். தங்கள் உடைமைகளை சரி பார்த்து எடுத்துக் கொண்டிருந்தனர். முகம் கழுவி வந்தவளை சூடான டீ கப்புடன் எதிர்கொண்டான் செல்வா. கப்பை அவள் புறம் நீட்டினான். மறுப்பு சொல்லாமல் பெற்றுக் கொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்த வண்ணம் டீயைப் பருகினாள். கோவையின் குளிர் காற்றில் தெரிந்தது.

பக்கத்து சீட்டிலிருந்த சிறுமியிடம் விளையாடிக் கொண்டிருந்தான் செல்வா. அந்த சிறுமியும் அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.

‘தனியாவா அங்கிள் வந்தீங்க...?’

‘இல்லம்மா.. அந்த ஆன்ட்டி என் கூட வந்தாங்க’ என்று ஓவியாவை சுட்டிக் காட்டினான்.

அது யாரு அங்கிள்...? உங்க ஆன்ட்டியா...’

உங்க மனைவியா என்று கேட்கத் தெரியாத குழந்தை அப்பாவியாய் கேட்டது.

‘இல்லம்மா.. எனக்குத் தெரிஞ்சவங்க..’சிறுமிக்கு தெரிந்த வகையில் பதிலளித்தான் செல்வா.

இவர்களின் உரையாடல் அவளின் செவிகளில் விழாமலில்லை. இருப்பினும் எந்தவொரு உணர்வையும் முகத்தில் காட்டாமல் வெளியில் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தாள்.

இரயில் நின்றது. குருவின் பெட்டியையும், ஓவியாவின் பெட்டியையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான் செல்வா. அவன் பின் இறங்கிய ஓவியா, ‘என் பெட்டியை நானே எடுத்துக்கிறேன்....’ என்றாள்.

அப்பா இப்போதாவது பேசினாளே.. என்ற நிம்மதி அவன் முகத்தில் தெரிந்தது. பெட்டியை அவள் புறம் நீட்டினான். ஒரு கால்டாக்ஸியை மறித்து ஒரு ஹோட்டலின் பேரைச் சொன்னான். அந்த வெள்ளை டாடா இண்டிகா இருவரையும் சுமந்து கொண்டு சத்தமில்லாமல் நகர்ந்தது.
 
9​

கோவை.. அழகான ஊர். சென்னைக்கும், கோவைக்கும் அதிக வேறுபாடு இல்லை. முன் பின் தெரியாதவர்களையும் அன்பாக ‘கண்ணு’ என்று அழைக்கும் பெரியவர்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ங்க’ போட்டு பேசும் மரியாதை. அதிகமான கூட்டத்துடன் சென்றாலும் ஆண் பெண் பேருந்தின் சரிபாதியை எடுத்துக் கொண்டனர். முன்பாதியில் பெண்களும் பின்பாதியில் ஆண்களும் என்று கண்ணியமாக இருக்கும் பேருந்து பயணம். அதிக வெயில் இருந்தாலும் அது தெரியாத வண்ணம் காற்று அடித்துக் கொண்டேயிருக்கும்.

இப்படிப்பட்ட கோவையை மிகவும் ரசித்தாள் ஓவியா. முதல் நாள் கான்பரன்ஸுக்கு ரெடியாகி, இருவரும் டாக்ஸியில் பயணித்தனர். அந்த கான்பரன்ஸ் கோவையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஓர் ஊரில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஊரிலிருந்து ஒரே பெரிய அடுக்கு மாடி வீட்டில்தான் நடைபெற்றது. அதில் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவில்லை. காரணம் இதற்கு அதிகம் விளம்பரமில்லை. இன்டர்நெட்டில் விளம்பரப்படுத்தியதோடு சரி.

முதலில் இவர்களுக்கு வெல்கம் டிரிங்கஸ் கொடுக்கப்பட்டது. பிறகு புரொஜெக்டரில் அவர்கள் விற்க விரும்பும் இடத்தின் வரலாறு. அதன் நிலவளம், நீர்வளம், காற்று வசதி, பசுமை என்று அனைத்தையும் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர். விளக்கம் முடிந்ததும், ஏதேனும் சந்தேகமிருந்தால் கேட்கலாம் என்றார் விளக்கமளித்தவர்.

எழுந்து நின்ற ஓவியா, ‘இந்த நிலத்தோட இ.சி. கொடுப்பீங்களா?’ என்றாள்.

‘கண்டிப்பா இப்போ லஞ்ச் முடிஞ்சதும் டாக்குமெண்ட்ஸ் வெரிபிகேஷன்தான். எல்லோருக்கும் டாக்குமெண்ட்ஸ் ஜெராக்ஸ் கொடுத்துடுவோம். நீங்க உங்க வெரிபிகேஷனை ஆரம்பிக்கலாம். உங்களுக்கு திருப்தியா இருந்தால் நாளைக் காலையில் இடத்தைப் பார்க்கலாம். மதியம் ஏலம் .நைட் பார்ட்டி இதுதான் பிளான் ஓகே...’

‘ஓகே தேங்க்ஸ்...’ என்று ஓவியா அமர்ந்தாள்.

மதிய உணவு பஃபே சிஸ்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது சைவம் அசைவம் என்று பிரித்து வைத்திருந்தார்கள். அவரவர்களுக்கு வேண்டிய உணவை பீங்கான் தட்டுகளில் நிரப்பிக் கொண்டு அங்கிருந்த சேர்களில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். ஒரு சிலர் நின்றுக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்.

‘ஹாய்.. என் பேரு சங்கர். ஊட்டிலயிருந்து வந்துருக்கேன்’ என்று செல்வாவின் முன் ஓர் இளைஞன் நின்றான்.

‘நான் செல்வா.. சென்னையிலிருந்து...’ என்றான் பதில் மரியாதைக்கு.

‘உங்க சொந்த யூஸிற்கு இந்த இடம் வாங்குறீங்களா, இல்லைன்னா விற்பனைக்கா...?’

‘எனக்கு அதைப்பத்தி எதுவும் தெரியாதுங்க.. அதோ அவங்கதான் வாங்கப் போறாங்க. நான் சும்மா துணைக்கு வந்தேன்’ என்றவன் ஓவியாவை சுட்டிக் காட்டினான்.

தன்னை சுட்டிக் காட்டித்தான் பேசுகிறான் என்று உணர்ந்த ஓவியா, அவர்கள் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வந்தாள்.

‘நீங்க சென்னைல என்ன சார் செய்றீங்க?’ ஒரு சிக்கன் 65ஐ கடித்தப்படி கேட்டான் சங்கர்.

பிஸ்னஸ் பண்றேன் சார்... தி.நகர்ல ஒரு துணிக்கடை வெச்சிருக்கேன்...’

‘ஓ.. நல்ல தொழில் சார்...’

‘இந்த சார் வேண்டாமே சங்கர், செல்வான்னு கூப்பிடுங்க..’

‘ஓகே செல்வா’

‘நீங்க என்ன பண்றீங்க சங்கர்?’

‘டீ எஸ்டேட் வச்சிருக்கேன் செல்வா...’

அதற்குள் ஓவியா இவர்கள் அருகில் வந்துவிட்டாள்’

‘இவங்கதான் ஓவியா.. இந்த இடத்தை வாங்க வந்திருக்காங்க..’

‘இவர் சங்கர். ஊட்டில டீ எஸ்டேட் வெச்சிருக்காரு.... பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தான் செல்வா.

இருவரும் சினேகமாய் புன்னகைத்து கொண்டனர்.

‘ஓவியா.. இவருக்கு நிலத்தைப் பத்தி உங்ககிட்டே ஏதோ பேசனுமாம்.. நீங்க பேசுங்க.. என்றவன் அவர்களை விட்டு நாசுக்காய் நகர்ந்தான்.

இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, கான்பரன்ஸ் ரூமிற்கு விரைந்தனர்.இப்போது ஓவியா செல்வாவின் அருகில் அமராமல், சங்கர் அருகில் அமர்ந்துக் கொண்டாள். மனதில் கவலையிருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான் செல்வா.

சிறிது நேரம் கழித்து ஓவியாவை கவனித்தவன் முகத்தில் குழப்பம். அவள் இருக்கைகளில் நெளிந்து கொண்டிருந்தாள். என்ன நினைத்தாளோ சட்டென்று எழுந்து வெளியில் சென்றாள். இருப்புக் கொள்ளவில்லை செல்வாவிற்கு. ஐந்து நிமிடம்... பத்து நிமிடமாகியும் ஓவியா உள்ளே வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாய் வெளியே சென்றான். வாசலிலேயே அவள் கையில் செல்போனுடன் தவிப்பாய் நின்று கொண்டிருந்தாள். அவளின் கலவரம் பார்த்தவன் அவளருகில் விரைந்தான்.

‘என்னாச்சு ஓவியா...?’

அவன் குரலில் பதட்டம் இருந்தது.

‘ரூமுக்கு போகணும், டிரைவர் போன் நம்பர் உங்ககிட்டதான் இருக்கு’

‘என்னாச்சு உடம்புக்கு ஏதாவது’ என்றவன் தன்னிச்சையாக அவள் நெற்றியில் கை வைத்தான். ஷாக்கடித்ததைப் போல் இருந்தது ஓவியாவிற்கு உடனே இரண்டடி பின்வாங்கினாள். தான் செய்தது அப்போதுதான் செல்வாவிற்கு புரிந்தது.

‘சாரி ஓவியா...’தலை கவிழ்ந்தான்.

‘ரூம்ல ஏதாவது விட்டுடீங்களா?’

‘இல்ல... அது.. வந்து.. வயித்து வலிதான்...’ மென்று விழுங்கினாள்.

உடனே டிரைவருக்கு போன் செய்து வரச் செய்தான்.

‘நானும் உங்க கூட வரட்டுமா ஓவியா?’ அக்கறையாய் கேட்டான்.

‘இல்ல... வேண்டாம், நீங்க இருந்து டாக்குமெண்ட் வாங்கிட்டு வந்துடுங்க. ஏதாவது சந்தேகமிருந்தால் நாளைக்கு கேட்டுக்கிறேன்...’

‘சரி ஓவியா..’ ’என்றவன் அவளை வழியனுப்பினான்.

‘என்ன மனிதன் இவன். இவனை புரிந்து கொள்ளவே முடியவில்லையே.. நான் பதற்றமாக இருந்ததும் அவன் முகத்தில் தெரிந்த கவலை பொய்யில்லையே.. பெண்களைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவன் போலும். இது என்ன மனம்? நேற்று வரை அவனைக் கண்டாலே கொதித்தது உள்ளம்.. இப்போது அவனுக்கு சிபாரிசு செய்கிறதே? ஒருவேளை அவன் என் இதயத்தில் நுழைகிறானோ? கூடாது.. அந்த நினைப்பை உடனே அழிக்க வேண்டும். என் தந்தையைக் கொன்றவன் மீது என்ன கரிசனம்?’

இப்படி பல எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தது ஓவியாவின் உள்ளம்.

ரூமிற்கு சென்று குளித்து முடித்தவளுக்கு உறக்கமும் வர மறுத்தது.
 
10​

இரவு 8.30 மணிக்குத்தான் செல்வா ரூமிற்குள் நுழைந்தான். அவனுடன் சங்கரும் இருந்தான். முதலில் பேசியவன் சங்கர் தான்.

‘என்ன ஓவியா ஃபீவர் இப்போ பரவாயில்லையா?’

செல்வாவைப் பார்த்துக் கொண்டே, ‘ம்..பரவாயில்லை..’என்று மழுப்பினாள்.

‘டின்னர் சாப்பிட்டாச்சா?’

‘இல்ல சங்கர்.. இனிமேதான். கீழே போய் சாப்பிடனும்...’

‘நாங்க அங்கேயே சாப்பிட்டோம் ஓவியா...’

‘அப்படியா... நீங்க போய் உங்க ரூம்ல படுத்துக்குங்க... நான் போய் சாப்பிட்டு வந்து படுத்துக்கிறேன்...’

‘செல்வா நீங்க சரியா சாப்பிடலையே... சும்மா ஓவியா கூட போய் ஒரு பால் குடிச்சிட்டு வந்து படுத்தாத்தான் தூக்கம் வரும். நான் கிளம்புறேன். குட் நைட்...’ சங்கர் சென்று விட்டான்.

டாக்குமெண்ட்ஸ் அவளிடம் கொடுத்தவன் ‘வாங்க ஓவியா சாப்பிட்டு வரலாம்’

அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்றான்.

வேறு வழியின்றி அவனைப் பின் தொடர்ந்தாள்.

மிதமான குளிரிலும் சன்னமான வெளிச்சத்திலும் இருந்த அந்த உணவறையை, கண்களால் நோட்டமிட்ட செல்வா, ஒதுக்குப்புறமாக இருந்த இருக்கையில் அமர்ந்தான். அவளும் அவன் எதிரில் அமர்ந்தாள். பேரர் வந்து நின்றான்.

‘என்ன சாப்பிடறீங்க ஓவியா...’

ஒரு பிளேட் இட்லி போதும்...’

‘இங்க சுடற இட்லி ஒரு வாய்க்குகூட பத்தாது. இருங்க நானே ஆர்டர் பண்றேன்’

‘ரெண்டு செட் இட்லி, ஒரு பிளேட் பட்டர் நான். ஒரு பன்னீர் பட்டர் மசாலா, ஒரு பிளேட் சப்பாத்தி அவ்ளோதான். கொஞ்சம் சீக்கிரமா கொண்டு வாங்க...’

‘ஓகே சார்..’ பேரர் சென்றுவிட்டான்.

ஆர்டர் கொடுத்துவிட்டு, அங்குமிங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்

‘ரொம்ப தேங்க்ஸ்..’ என்றவளின் குரல் அவனைக் கலைத்தது.

‘எதுக்கு இப்போ தேங்க்ஸ்...?’

‘சொல்லனும்னு தோணிச்சு..’

‘ஓகே..’ முடித்தவன் மறுபடியும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். செல்வா சொன்னதுபோல் அத்தனையும் சாப்பிட்டதும் தான் வயிறு நிரம்பியது.

ரூம் வாசலை அடைந்த இருவரும் ஒரே சமயத்தில் திரும்பி சினேகமாய் புன்னகைத்துவிட்டு அறைக்குள் சென்றனர்.

அறைக்குள் நுழைந்த செல்வாவிற்கு குத்தாட்டம் போடவேண்டும் போல் இருந்தது. இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை. ஓவியாவுடன் மூன்று நாட்கள்.. அவன் வாழ்வின் பொன்னான நேரம். அதிலும் இப்போது அவளின் சினம் சற்று தணிந்திருப்பது போல்தான் தோன்றுகிறது. மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தான். எப்போது உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.

ஓவியாவின் மனமோ அவளைத் துளைத்தெடுத்துவிட்டது. மறக்க வேண்டுமென்று நினைக்கும் போதெல்லாம் அவன் முகமே மனதில் தோன்றியது. அவனின் கம்பீரத்தையும், பரந்த தோள்களையும், நேர் பார்வையையும் புகழ்ந்து தள்ளியது. இது என்ன அவஸ்த்தை என்று புரண்டு கொண்டிருந்தவளை உறக்கம் மெல்லத் தழுவியது.

காலிங் பெல் அலறியது. தூக்கிவாரிப் போட்டு எழுந்தான் செல்வா. கதவை திறந்தவன் புன்னகை முகத்துடன் நின்ற ஓவியாவைப் பார்த்ததும் கண்களை அகல விரித்தான். தலை குளித்து லூஸ்ஹேர் விட்டிருந்தாள். பச்சை நிறக் காட்டன் சில்க் சாரியில் அழகுப் பதுமையாக விளங்கினாள். ஒரு நிமிடம் கிறங்கினான்.

உடனே சுதாரித்தவன், ‘என்ன ஓவியா, டைம் ஆயிடுச்சா... இதோ குளிச்சிட்டு வந்துடறேன்...’

பதறிய செல்வாவை இடைமறித்தாள். ‘டைம் ஆகலை செல்வா. காலையில் சீக்கிரம் எழுந்து டாக்குமென்ட்ஸ் வெரிபை பண்ணினேன். ரொம்ப பசிக்குது. வாங்களேன் காபி குடிச்சிட்டு வரலாம்’

‘இதோ டூ மினிட்ஸ்..உள்ள வந்து உட்காருங்க. பிரஷ் பண்ணிட்டு வந்திடுறேன்..’ அவளை ஒரு சேரில் அமர வைத்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

அவன் அறையை மெல்ல ஆராய்ந்தாள். பெரிய கிங் சைஸ் கட்டில், அதில் வெள்ளை மெத்தை விரிப்பு. இரண்டு தலையணை இரண்டு போர்வைகள். ஒன்று மடிப்பு கலையாமலிருந்தது. இன்னொன்று சுருட்டிப் போடப்பட்டிருந்தது. அதை இரவு போத்தியிருப்பான் போலும், தலைமாட்டில் ஒரு புத்தகம் கண்ணில்பட்டது. அதனருகில் சென்று பார்த்தாள். ‘டாவின்சி கோட்’ என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது. ஆர்வத்தில் அதை கைகளில் எடுத்தாள். பாதி புக்கிற்குள் ஒரு புக்மார்க் இருந்தது. அந்தப் பக்கத்தைப் பிரித்தாள். கொட்டை, கொட்டையான எழுத்துகளில் ஓவியா என்று எழுதபட்டிருந்ததைப் பார்த்ததும் முதலில் வெட்கப்பட்டவளின் முகம், பின்பு மெல்ல இறுகியது. எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அமர்ந்து கொண்டாள். அதன் பிறகு மனம் எதிலும் அதிகமாக செல்லவில்லை.

பதினைந்து நிமிடத்தில் குளித்து முடித்து வெளியே வந்தான். ’ஒரு டூ மினிட்ஸ் ஓவியா’ என்றவனை ஏறிட்டவள். அவனின் கம்பீரத்தில் தடுமாறத்தான் செய்தாள். சட்டென்று எழுந்தவள் ‘நான் வெளில இருக்கேன் செல்வா. நீங்க ட்ரெஸ் பண்ணிட்டு வாங்க. அதுக்குள்ள முடிஞ்சா சங்கரையும் கூப்பிடறேன்...’ பேசிக் கொண்டே வெளியே சென்றுவிட்டாள்.

பெண்களின் முகமலர்ச்சிக்கும், முக சுருக்கத்திற்கும் காரணம் கூற நம்மை படைத்த கடவுளாலும் முடியாத காரியம்தான் எனும்போது. இந்த செல்வாவால் மட்டும் எப்படி முடியும்? பாவம் ஓவியாவின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாமல் அவஸ்த்தைப் பட்டான்.

ஓவியாவிற்கு அதிக வேலை வைக்காமல் எதிர்ப்பட்டான் சங்கர். அவளை ஒரு முறை பார்த்தவன். ‘ஹாய்.. ஓவியா.. யூ ஆர் லூகிங் சோ கிரேட்.. என்ன செல்வா எழுந்துட்டாரா?’

‘ம்.. ட்ரெஸ் பண்றார்..’

‘அதுக்குள்ள கிளம்பிட்டீங்க.. மணி 8 தானே ஆகுது. 10 மணிக்கு தானே கான்பிரன்ஸ்?’

‘இல்ல.. காபி குடிக்க கீழே போகலாம்னு.. அடுத்து உங்களைக் கூப்பிடத்தான் ரூமைத் தேடினேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க..’

‘ஓ .. போகலாமே..’ என்று சங்கர் கூறவும் செல்வா வெளியே வரவும் சரியாக இருந்தது. மூவரும் ரெஸ்டாரெண்டை நோக்கி நடந்தனர்.
 

New Threads

Top Bottom