Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வசீகரனின் யாழ் நீ!

யாழ்-23
"கண்ணா! வேடனெங்கு போனான்? - உனைக் கண்டேயலறி விழுந்தானோ? - மணிவண்ணா! எனதபயக் குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி!"
பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு ஆஷா உண்மையை சொல்ல தொடங்கினாள்.
"நான்,வசீ,யஸ்வந்த் மூணு பேரும் ஸ்கூல்ல க்ளோஸ் பிரெண்ட்ஸ். ஸ்கூல் முடிஞ்சதும் வசீயும் யஷ்வந்தும் சிவில் பண்ண பிளான் பண்ணாங்க. நா கம்ப்யூட்டர் பண்ண நெனச்சேன். மூணு பேரும் ஒரே காலேஜ்ல ஜாயின் பண்ணிட்டோம். வசீயோட கிளாஸ்மேட் தான் கோகுல். குடும்ப சூழ்நிலை புரிஞ்சி பொறுப்பா படிப்பார்.அமைதியான கேரக்டர். வசீ கூட தான் இருப்பார்.அவரோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். சோ அவரை லவ் பண்ணேன். ஆனா அவர் ஒத்துக்கல. எனக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பிட்டார்.
ஆகாஷ் என் கிளாஸ்மேட் தான். பணக்கார பசங்க, காலேஜ்ல நல்ல இமேஜ் இருக்க பசங்கிட்ட அவனா வந்து வந்து பேசுவான்.ஒரு நாள் என்னை அவன் லவ் பண்றதா சொல்லிட்டான். நான் அவன்கிட்ட இதெல்லாம் வேணாம்னு சொல்லி அனுப்பிட்டேன். அவன் அதோட விடல. என்னை டார்ச்சர் பண்ணிட்டே இருந்தான். நா அவனை கேவலமா திட்டி அனுப்பிட்டேன்.
அதுக்கு அவன், 'நீ க்ளாஸ்ல இருக்கும் போது,உன்னை தப்பான ஏங்கிள்ஸ்ல போட்டோ எடுத்து என் போன்ல வச்சிருக்கேன். என்னை அசிங்க படுத்துன உன்னை நானும் அசிங்க படுத்துவேன். இந்த போட்டோசை எல்லாருக்கும் அனுப்புவேன்'னு சொல்லிட்டு போய்ட்டான்.
நா வசீக்கு போன் பண்ணிட்டேன். வசீயும்,இந்த விஷயத்தை யூஸ் பண்ணி என்னையும் கோகுலையும் சேர்த்து வைக்க முடிவு பண்ணி, கோகுல் கிட்ட சொன்னான். கோகுல் உடனே ஆகாஷை ரோட்டுல மடக்கி பிடிச்சி, கையை ஒடச்சிட்டார்.அவன் போனை பிடுங்கிட்டார். அவரை பாலோ பண்ணி கார்ல போன நாங்க இதை பார்த்துட்டோம். அப்போ தான் இவருக்கு என் மேல இருக்க லவ்வ நா தெரிஞ்சிக்கிட்டேன். அவர் குடும்ப சூழ்நிலையால தான் இவர் என்ன விட்டு விலகி போய் இருக்கார். வசீ தான் இவருக்கு தைரியம் குடுத்து எங்க லவ்வை காப்பாத்தினான்.
அப்புறம் அந்த ஆகாஷ் போனை பார்த்தா,அவன் எல்லா பொண்ணுங்களையும் அப்படி தான் போட்டோ எடுத்து வச்சிருக்கான். அவன காலேஜை விட்டு தொரத்தனும்னு ப்ரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் குடுக்க போறோம்னு சொன்னோம். அவன் என் கால்ல விழுந்து அழுதான்.'கோகுல் என்னை அடிச்சதை கூட நா யார்கிட்டயும் சொல்லல. இனியும் சொல்ல மாட்டேன்.என் படிப்பு போய்டும். வாழ்க்கை போய்டும்'னு சொன்னான்.நாங்களும் அவன் போனை மட்டும் பிடுங்கிட்டு,அவன் கிட்ட மன்னிப்பு கேக்க சொல்லி ஒரு வீடியோ எடுத்துட்டு அனுப்பிட்டோம்.இப்போ கூட என் லேப்டாப்ல அந்த வீடியோ இருக்கும்.
அதுக்கு அப்புறம் இவருக்கு வசீ அவங்க அப்பா ஆபீஸ்லயே வேலை வாங்கி குடுத்துட்டான். அவன் ஹயர் ஸ்டடீஸ் முடிச்சி ரிடர்ன் வந்ததும் அவன் ஆபீஸ்லயே ஜாப் குடுத்துட்டான். எங்க வீட்டுல பேசி 2 இயர்ஸ் முன்னாடி மேரேஜ் பண்ணி வச்சிட்டான். இப்போ எங்க பொண்ணுக்கு 1 இயர் ஆக போகுது. அவ்ளோ தாங்க எங்க ஸ்டோரி " என்றாள்.
தங்கள் காதல் கதையை சொல்லி முடித்த ஆஷா,"எனக்கு பூரிக்கட்டை ப்ரெசென்ட் பண்ண போறதா சொன்னீங்களாம். வசீக்காக இவர் ஏதாவது செய்றார்னா, நா நிச்சயமா இவருக்கு சப்போர்ட் தான் பண்ணுவேன்.அவன் மட்டும் இல்லனா எங்கள் வாழ்க்கை சக்ஸஸ் லவ் ஸ்டோரியா நிச்சயம் மாறி இருக்காது. அதனால தான் உங்க மேரேஜ்கு என்கிட்ட கூட சொல்லாம இவர் ஹெல்ப் பண்ணார். வசீ எங்க லைஃப்ல செஞ்சிருக்க நல்லதுக்கெல்லாம் நாங்க ரெண்டு பேரும் எப்பவும் அவனுக்கு கடமைப்பட்டு இருக்கோம்" உணர்வு பூர்வமாக சொன்னாள்.
"ஹே லூசு பொண்ணே, உன் லவ் ஸ்டோரி மட்டும் சொல்லு. எனக்கு பாராட்டு விழா ஒன்னும் வேணாம்"என்றான் வசீ.
"சாரிடா. எங்க லைப்ல நீ பெரிய ரோல் பிளே பண்ணி இருக்க. அதான் எமோஷனலாகிட்டேன். யாழினி,நீங்க குடுக்குற பூரிக்கட்டையை நா வேற சிச்சுவேசன்ல யூஸ் பண்ணிக்கிறேன்.உங்க கிப்ட் வேஸ்ட் ஆகாது. அதுக்கு நா கேரண்டி",என்றாள்.
யாழினி ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
அவள் முகம் வேதனையை பிரதிபலித்தது. அதை கண்ட வசீகரன்,"இப்போ என்னடி? இவங்க எனக்காக பொய் சொல்றாங்கனு யோசிக்கிறியா?" என்றான் கடுப்பாக.
"சே அதெல்லாம் இல்லங்க. ஆஷா உங்க பிரென்ட்னு அவனுக்கு தெரியும். அப்புறம் எந்த தைரியத்துல என்கிட்ட இப்படி ஒரு கட்டுக்கதையை சொன்னான்? என்னை பாத்தா அவ்ளோ முட்டாள் மாதிரி இருக்கா?" கண்களில் கண்ணீரோடு கேட்டாள்.
"ஏய் இவ்ளோ யோசிக்க வேண்டிய அவசியமே இல்ல. அவனுக்கு கோகுல்-ஆஷா லவ் பத்தி தெரியாது.அந்த பிரச்சினையை புல்லா ஹேண்டில் பண்ணது கோகுல் தான். ஆஷாக்கு கோகுல் சும்மா ஹெல்ப் பண்ணான்னு நினைச்சிட்டு இருக்கான். இவங்க மேரேஜ்க்கு காலேஜ் பிரெண்ட்ஸ் யாரையும் இன்வைட் பண்ணல. அதனால அவனுக்கும் தெரியாது. இவ்ளோ இயர்ஸ்ல ஆஷா மேரேஜ் பண்ணி போய்ட்டு இருப்பானு முடிவு பண்ணி இருப்பான். கோகுல் எங்க அப்பா ஆபீஸ்ல ஒர்க் பண்ண போறான்னு காலேஜ்ல எல்லாருக்கும் தெரியும். கோகுல் கிட்ட அடி வாங்குனதுல ஏற்கனவே கோபம். இப்போ என் மேரேஜ்ல இருக்குற கோபத்துல இப்படி மட்டமா ஒரு கதை கிரியேட் பண்ணி உன்னை கன்ப்யூஸ் பண்ண ட்ரை பண்ணி இருக்கான். நா என் பிரென்ட்ஸ் பத்தி உன்கிட்ட சொல்லாததால நீ குழம்பிட்ட",என்று இணக்கமாக சிரித்தான்.
"ஆனா பாருங்க. யஷ்வந் அண்ணா பத்தி அவன் எதுவுமே சொல்லல",என்றாள்.
"எங்க குரூப்ல அவன் மட்டும் தான் ஆகாஷ்கிட்ட பேசுவான். அதோட இந்த கதைல யஸ்வந்த்கு மேட்ச்சான ரோல் கிடைக்கல போல" என்று சிரித்தான்.
யாழினிக்கு தான் மனது தாங்கவில்லை.
ஆகாஷின் மீது கொலைவெறி வந்தது. "இவனுக்கு போய் பாவம் பார்த்தேனே"என்று புலம்பினாள்.
"ஹே டார்லிங்!! அவனை திட்டுற ஆர்வத்துல உன் ஹஸ்பைண்ட மறந்துடாத. வீட்டுக்கு வந்தா, எனக்கு எதோ இருக்குனு சொன்னியே பேபி. அது என்ன?" கண்சிமிட்டி கேட்டான்.
ஓடிவந்து தன் கணவனை அணைத்துக் கொண்டாள் யாழினி. "ரொம்ப சாரிங்க, அந்த பிராடு ஆகாஷ் சொன்னதை நம்பி உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்,இனி அப்படியெல்லாம் பேசவே மாட்டேன்" என்றவளை தன்னோடு இறுக்கியவன்,"நோ டார்லிங், நீ பீல் பண்ணவே கூடாது. நீ என் லவ்வை புரிஞ்சிக்க இது ஒரு சான்ஸ் ஆகிடுச்சி. சோ டோன்ட் ஒரி.ஹ்ம்ம் அப்புறறறம்... ஈவினிங் நீ என்னை சர்ப்ரைஸ் பண்ணதுக்கு உனக்கு ஒரு கிப்ட் குடுக்கணுமே"என்றபடி அவள் இதழ் நோக்கி குனிந்தான் அந்த வசீகரன்.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 
யாழ்-24
"கூடிப் பிரியாமலே - ஓரிரவெலாம்
கொஞ்சிக் குலவியங்கே,
ஆடி விளையாடியே - உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
நல்ல களியெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
பண்ணிய தில்லையடி! "


சென்னையில் மிக பெரிய நகைக்கடை முன்பு காரிலிருந்து இறங்கினாள் யாழினி. கோகுல்-ஆஷாவின் மகளுக்கு நாளை முதல் பிறந்தநாள். அவளுக்கு வளையல் வாங்க வந்திருந்தாள் யாழினி. வசீகரனிடம் சமாதானமாகி ஒரு மாதம் ஆகிவிட்டது.ஒருவரை ஒருவர் திகட்ட திகட்ட காதலித்து புரிந்து கொண்ட பின் தான் இல்லற வாழ்வில் இணைய வேண்டும் என வசீகரன் ஆசைப்பட்டான். கணவனும் மனைவியும் கண்களாலேயே ஒருவரில் ஒருவர் கரைந்து கொண்டு இருக்கின்றனர்.
வசீகரனின் நண்பர்களோடும் நல்ல நட்பு உருவாகி உள்ளது. யஷ்வந் மனைவி ஓவியாவும், மகன் யுவராஜும் கூட இவளுடன் நன்றாக பழகிவிட்டனர். கோகுல்-ஆஷா அவர்களின் அழகு குழந்தைக்கு வசீகரன் மீது இருந்த மரியாதையால் வசுமதி என்று பெயரிட்டு இருந்தனர். அதனாலேயே யாழினிக்கு அந்த குழந்தை மீது அதிக பாசம்.
குழந்தைக்கான பரிசை வாங்கியவள், வெளியே வரும்போது
அங்கே ரோட்டோர பழவண்டிக்கடையில் பழங்கள் வாங்கிக்கொண்டு இருந்தவனைப் பார்த்தாள். ' ஆகாஷ் மாதிரி இருக்கே' என எண்ணியவள் அவன் மீது இருந்த கோபத்தில் அவன் அருகில் வேக நடையுடன் செல்ல, அதற்குள் இவளை கண்டவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். ஆம் அவனால் வேகமாக நடக்க முடியவில்லை. காலில்,தலையில் கட்டுப்போட்டு இருந்தான். "ஆகாஷ்" என அழைத்தபடி சென்றாள். அவன் இவளை திரும்பியும் பாராமல் ஆட்டோவில் ஏறிப்போய்விட்டான்.யாழினி குழப்பத்துடன் வீட்டுக்கு வந்துவிட்டாள்.

மறுநாள் மாலை ஹோட்டலில் பிறந்தநாள் விழா களைக்கட்டியது. ஆஷாவின் சகோதரனாக வசீகரன் சிறப்பாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தான். நண்பர்கள் நால்வரின் குடும்பமும் உறவினர்கள்
போல் இருந்தனர். அத்தை சீரென வளையல்களைப் போட்டுவிட்டாள் யாழினி. "இன்னைக்கு நீங்க இவளுக்கு வளையல் போடுறீங்க. சீக்கிரமே நாங்க உங்களுக்கு வளையல் போட்டுவிட உங்க வீட்டுக்கு வரணும். ஏற்பாடு பண்ணிடுங்க" என்று ஆஷா யாழினியிடம் கிண்டலாக சொல்ல,வெட்கத்துடன் கணவனை ஏறிட்டவள் அவனின் காந்த பார்வையில்தலைகுனிந்தாள். அவளின் வெட்கத்தை இமைக்காமல் பார்த்திருந்தான் வசீ. வெட்கத்தில் பூத்த அவளின் அழகை விழிவழி பருகினான் அந்த வசீகர காதலன்.
விழா முடிந்து உணவருந்திய பின் விருந்தினர்கள் கிளம்பினர். நண்பர்கள் மூவரும் குடும்பத்துடன் கோகுலின் வீட்டில் தங்க முடிவு செய்து அவன் வீட்டிற்கு சென்றனர். இரவெல்லாம் கதை பேசினார்கள். யஷ்வந்தின் காதல் கதை பேசப்பட்டது. அவனின் அத்தை மகள் ஓவியாவிடம் அவன் காதல் கொண்டது, 24 வயதிலேயே திருமணம் செய்ததையெல்லாம் கூறினான்.
" அண்ணா, 24 வயசுல மேரேஜா?அப்போ எத்தனை வருஷம் லவ்?"என்றாள் கேள்வி கேட்கவே பிறப்பெடுத்த யாழினி.
"எத்தனை வருசமா? 6 மாசம் தான். இவர் லவ் சொன்னதும் வீட்டுல பேசி மேரேஜ் பண்ணிக்கிட்டேன்" என்றாள் ஓவியா.
" ஹோ நா கூட முறைப்பொண்ணுனு சொன்னதால சின்ன வயசுல இருந்து லவ்னு நெனச்சிட்டேன்"
"அதெல்லாம் இல்லப்பா.சின்ன வயசுல சண்டை தான் போட்டுப்போம். நா 3 வருஷம் ஹாஸ்டல்ல தங்கி காலேஜ் படிச்சிட்டு வந்தேன். 3 வருஷம் கழிச்சி என்னை பார்த்ததும் இவருக்கு திடீர்னு லவ் வந்துடுச்சி"
"3 இயர்ஸ்ல நீ திடீர்னு அழகா ஆகிட்ட.என்ன பண்றது? ப்ரபோஸ் பண்ணேன். அப்புறமா லவ் பண்ண நீ டைம் குடுக்கல"என்றான் யஷ்வந் ஆதங்கமாக.
"6 மாசம் நீங்க லவ் பண்ண அழகை தான் நா பார்த்தேனே. முட்டாள்தனமா கர்ச்சீப்ல தண்ணி கொண்டு வந்த ஆளு தான நீங்க?"என்றாள் ஓவியா.
"அது என்ன கர்ச்சீப் தண்ணி?" ஆர்வமாக கேட்டாள் யாழினி.
"இவர் லவ் சொன்னதும் முதல்முறை நாங்க வீட்டுக்கு தெரியாம என்னோட கப்யூட்டர் கிளாஸ் கட் பண்ணிட்டு, அவுட்டிங் போனோம். ஒரு அமைதியான தெருவுல பைக்கை நிறுத்திட்டு ஒரு சின்ன சந்துல நின்னு பேசிட்டு இருந்தோம். வெயில் நேரம் எனக்கு மயக்கம் வந்துடுச்சி. இவர் ஓடிப்போய் தெருகுழாய்ல கர்ச்சீப்பை நனச்சி கொண்டுவந்து என் முகத்தில் தண்ணி தெளிச்சி எழுப்பினார்"என்றாள் கோபமாக.
"ஏங்க நல்லது தானே பண்ணி இருக்கார். சூப்பர்ல? கோபப்படுறீங்க?"
"நீங்க வேற. என் பேக்லேயே வாட்டர் பாட்டில் இருந்துதுங்க. அதை எடுத்து குடுக்காம, என்னை தரையில விட்டுட்டு போய் கோமாளி வேலை பண்ணி இருக்கார். இதுல கொடுமை என்னன்னா, நாங்க கிளம்பும் போது தான் அந்த பாட்டில்ல இருந்த தண்ணிய இவர் பைக் சீட் ஹீட்னு தெளிச்சிட்டு கிளம்பினேன்.அதுக்குள்ள மறந்துடுச்சி இந்த மெண்டல். அப்புறம் இப்படியே விட்டா சரியாகாதுனு வீட்ல சொல்லி மேரேஜ் பண்ணிக்கிட்டேன்" என்றாள்.
"ஹா ஹா வாவ் உங்க ரெண்டு பேர் லவ் ஸ்டோரியும் சூப்பர் அண்ணாஸ். ஒன்னு அதிரடி, ஒன்னு காமடி"என்று சிரித்தாள் யாழினி.
"எங்க லவ் ஸ்டோரி எல்லாம் ஒன்னுமே இல்லமா. இன்னும் ஒருத்தர் லவ் ஸ்டோரி இருக்கு. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்",என்று சொல்லி வசீகரனை பார்த்தான் கோகுல்.
அவன் முகமோ அமைதியாக இருந்தது. "ஒன் மினிட் , ஒரு இம்பார்ட்டன்ட் கால் பண்ணனும்",என்று சொல்லியபடி எழுந்து வெளியே சென்றுவிட்டான். யாழினி மனது குழம்பியது. 'இவர்கள் வசீகரனின் காதலை பற்றி சொல்கிறார்களோ? வசீகரனுக்கும் இது போல் ஒரு காதல் கதை இருக்குமோ? இப்போதும் அந்த காதலின் தாக்கம் அவனுக்குள் இருக்கிறதா? அதனால் தான் அவன் போய்விட்டானா?' குழம்பியபடி பெண்கள் இருந்த அறையில் சென்று படுத்தாள்.
'நான் எப்பவும் சண்டை போடுவதால், அவரின் காதல் பற்றி தெரிந்தால் பிரச்சனை ஆகும் என நினைக்கிறார். அப்படியா சண்டை போடுவ யாழினி?' என தன்னை தானே திட்டியவள், 'அவருக்கு முன்னாடி ஒரு காதல் இருந்து இருந்தாலும் எனக்கு என்ன வந்தது? திருமணத்திற்கு முன்பு காதல் அனுபவம் இல்லாதவர்கள் சொற்பம் தான். அதோடு என் வசீகரரின் காதலுக்கு இப்போ நா மட்டுமே உரிமைக்காரி. அதை அவருக்கு புரிய வைக்கனும்", என எண்ணியவள், அவனுக்கு ,"காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன். சத்தியம் சத்தியம் இது சத்தியமே" என்ற பாடல் வரிகளை மெசேஜ் செய்தாள்.
அவன் அந்த மெஸேஜை பார்த்ததும். "என் மடியில் உனை ஏந்தி, என் தோளில் உன் தலை சாய்க்கிறேன். என் உயிரின் இழைக்கொண்டு காதலால் உனை மீட்டுகிறேன்.இந்த வசீகரனின் யாழடி நீ" என பதில் அனுப்பினான்.
யாழினிக்கு மயக்கமே வந்தது. வசீகரன் கவிதை எழுதுகிறானா?
"உம் கவிதையால் தன் வசம் இழந்து வசீகர காதல் ராகம் வாசிக்கும் யாழானேன் நான்!" என பதில் அனுப்பினாள் யாழினி.
உடனே போன் வந்தது அந்த கள்வனிடமிருந்து,
"ஹேய் டார்லிங், இன்ஸ்டன்ட் கவிதையா? இப்போ என்னால அங்க வர முடியாதுனு தைரியமா? நாளைக்கு நீ நம்ம வீட்டுக்கு தான் வரணும். நியாபகம் வச்சிக்கோ" என்றான் கிசுகிசு குரலில்.
உதட்டை கடித்தபடி," ஐ ஆம் வெய்ட்டிங்" என்று சொல்லிவிட்டு உடனே போனை அணைத்தாள் யாழினி. ஏகாந்த மனநிலையுடனும் இன்ப கனவுகளுடனும் தூங்கினாள் யாழினி. தன் மனதில் உள்ள ரகசியத்தை சீக்கிரமே அவளிடம் சொல்ல வேண்டும் என்ற உறுதியுடன் உறங்கினான் வசீகரன்.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 
யாழ்-25
"கோளுக்கு மிகவும் சமர்த்தன் - பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக்கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்"
இனிமையான காலை நேரத்தில் குளித்துவிட்டு ஈரத்தலையுடன் வெளியே வந்த வசீரனுக்கு அவனுக்கான க்ரீன் டீயை கொண்டு வந்துக்கொண்டு இருந்த யாழினியை கண்டதும் சிரிப்பு வந்தது. அவள் ஏதோ விளக்கு ஏந்தி வருவது போல குனிந்த தலை நிமிராமல் அடி மீது அடி வைத்து கவனமாக வந்தாள்.
"என்ன டார்லிங், அடி பிரதக்ஷணமா?" என்றான் குறும்பாக.
அவனை நிமிர்ந்து பார்த்தவள்,"கொழுப்பா? ஆசையா உங்களுக்காக டீ கொண்டு வந்தேனே, என்னை சொல்லணும்" என்றாள் கோபம் போல.
"ஓ என் டார்லிங் எனக்காக ஆஆஆசையா கொண்டு வந்ததா? ஓகே குடு" என வாங்கிக்கொண்டு அவனது ஈரத்தலையை அவளது முகத்திற்கு நேராக சிலுப்பினான்.
"ஹே என்ன பண்றீங்க?"என்றவளின் குரலிலும் முகத்திலும் கோபம் சுத்தமாக இல்லை,வெட்கம் தான் இருந்தது. அவளின் வெட்கத்தை ரசித்தவன் அவனுக்கான டீயை மறந்துவிட்டு, அவனின் அழகியை விழிகளால் பருகினான். அதில் இன்னும் வெட்கம் தோன்ற,"வசீகரரே சைட் அடிச்சது போதும். கிளம்பி கீழே வாங்க" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
உடனே அவளின் கையைப் பிடித்தவன்,"எங்க ஓடப் பார்க்குற? நான் ஆபீஸ் கிளம்ப ஹெல்ப் பண்ணு"என்றான் கொஞ்சலாக.
"நீங்க என்ன எல்.கே.ஜி பாயா? ஆபீஸ் கிளம்ப நா என்ன ஹெல்ப் பண்ண முடியும்?"
"பக்கத்துல நின்னு சும்ம்ம்மா பேசிட்டு இரு போதும். ப்ளீஸ்",என்றான் கெஞ்சும் குரலில்.
"கெஞ்சி கொஞ்சி உங்களுக்கு வேண்டியதை செய்ய வச்சிடுறீங்க"என்று விட்டு பக்கத்தில் இருந்த ஸ்டூலில் அவனை அமர்த்தி அவன் தலையை துவட்டினாள்.
அவளது அந்த இயல்பான செயலில் ஏதோ உற்சாகம் உண்டாக அவளை இறுக்கி அணைத்தவன்,"ஐ அம் வெரி லக்கி டு ஹேவ் யு டி" என்றான் அவளை நிமிர்ந்துபார்த்து. அவன் குரலில் இருந்த நெகிழ்வு அவளையும் நெகிழ்த்தியது.
மெதுவாக குனிந்து அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். "ஹேய் பேபி, என்னடி இப்படி சர்ப்ரைஸ் கொடுக்குற?எனக்கு சாப்பாடே வேணாம்.இன்னிக்கு புல் டேக்கு தேவையான எனர்ஜி கெடச்சிடுச்சி. இனி டெய்லி நா கிளம்பும் போது ஹெல்ப் பண்ண வாடி," என்றான் குழந்தையின் துள்ளலோடு.
செல்லமாக அவன் முடியைக் கலைத்தவள்,"ஹ்ம் அதை அப்புறம் பார்க்கலாம். போய் கிளம்புங்க"என்றாள்.
அவன் எழுந்து அவள் இடுப்பை இரு கரங்களாலும் அணைத்து நெற்றியில் முட்டியபடி,"என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டதுல நீ ஹேப்பியா இருக்கியா பேபி?"என்றான் கண்களில் காதலுடன்.
"என்ன கேள்வி இது? ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.நான் கெடைச்சதால நீங்க லக்கினு சொல்றீங்க. ஆனா நா தான் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கேன்னு எல்லாரும் சொல்றாங்க தெரியமா? " என்றாள் பெருமையாக.
"யார் சொன்னாங்க?"
"போன வாரம் என் சித்தி பொண்ணு திவ்யா போன் பண்ணா. 'அக்கா நீ செம லக்கி,மாமா ரியல் ஹீரோ.என்னமா உன்னை மேரேஜ் பண்ணாரு? அவர் உனக்கு முன்னாடி என்னை பார்த்து இருக்க கூடாதா? எனக்கு அவர் தாலிக்கட்டி இருக்க கூடாதா? அவரை மாதிரி ஆள் தாலி கட்டப்போறார்னு தெரிஞ்சி இருந்தா, நா ஒரு நாள் முழுக்க கூட கண்ணை மூடிட்டு இருந்திருப்பேனே'ன்னு சொல்றா.நா எதை தப்புனு சொல்றேனோ, அது அவளுக்கு ஹீரோயிசம் போல தோணுது" என்றாள் கிண்டல் சிரிப்புடன்.
வசீகரனின் முகம் இறுகியது. கைகள் அவளை விட்டு விலகின. திரும்பி கண்ணாடியை நோக்கி நடந்தான்.
"என்னங்க? என்ன ஆச்சு?" என அதிர்ச்சியோடு கேட்டாள் யாழினி.
திரும்பி அவளை ஆழ்ந்து பார்த்தவன்," கண்ல கண்டவளுக்கெல்லாம் இந்த வசீகரன் தாலிக் கட்டமாட்டான். வசீகரன் தாலிக்கட்டணும்னா அதுக்கு யாழினி தான் வேணும்.இத உன் தங்கச்சிகிட்ட சொல்லிடு" என்றான்.
"என்னங்க, அவ ஏதோ விளையாட்டா சொன்னா. அதை போய் இவ்ளோ சீரியசா எடுத்துக்குறீங்க?"என்றாள்.
"இதை பத்தி ஆர்க்யூ பண்ண எனக்கு விருப்பம் இல்லை யாழினி. எனக்கு கிளம்ப டைம் ஆச்சு" என்றவன் உடைமாற்றும் அறைக்குள் நுழைந்துவிட்டான்.
அவனை குழப்பமாக பார்த்து, 'இவ்ளோ நேரம் கொஞ்சும் போது டைம் ஆகல. இப்போ மட்டும் டைம் ஆகுதோ? மூஞ்சியை பாரு கோட்டான்'என்று மனதுக்குள் அவனை திட்டியபடி கீழே இறங்கி போனாள் யாழினி.
எப்போதும் போல் அசத்தலாக உடையணிந்து கம்பீரமாக கீழே இறங்கி வந்த கணவனை ரசித்து பார்த்துக்கொண்டே மாமியாரிடம் பேசிக்கொண்டு இருந்த யாழினி அவனின் இறுக்கமான முகத்தை கண்டதும் கோபமானாள்.
'முன்னாடி நா கோபப்பட்டா கூட கொஞ்சுவான். இப்போ ஸீன் போடுறான். நா அவனை கொஞ்சுறேன்ல? அந்த திமிர்' என எண்ணிக்கொண்டாள்.
அவன் அவளை கவனிக்காமல் உணவு உண்ண போனான். அவனுக்கு உணவு பரிமாறினார் பார்வதி.
அவரிடம் சென்ற யாழினி,"அம்மா, நா இன்னிக்கு எங்க வீட்டுக்கு போய்ட்டு வரேன்"என்றாள்.
வசீகரன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் அவனை கண்டுக்கொள்ளாமல் இருந்தாள். பார்வதியோ,"போய்ட்டு வாடா. அண்ணி கூட கொஞ்சநேரம் இருந்துட்டு வா"என்றார்.
"போய் கிளம்பி வா. நானே உன்னை ட்ராப் பண்ணிட்டு ஆபீஸ் போறேன்"என்றான் வசீகரன்.
'அப்படி வாடா வழிக்கு. யாருக்கிட்ட ஆட்டம் காட்டுற?' என்று எண்ணிக்கொண்டே அறைக்கு போனவள் போனும் பர்ஸும் எடுத்துக்கொண்டு வந்தாள்.
பார்வதியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர். வசீகரன் பேசாமல் வந்தான். யாழினிக்கு அவன் அமைதியை தாங்க முடியவில்லை.
"மிஸ்டர்.வசீகரன், என்னை எங்க வீட்லயே நிரந்தரமா விட்டுடலாம்னு எதும் ப்ளானா?" என்றாள்.
"ஏய்!!!" என்றபடி காரை ஓரமாக நிறுத்தினான் வசீகரன்.
"என்னடி ஒளர்ற? நா உன்னை விடுறதா? என் உயிர் போனாலும் உன்னை விடமாட்டேன் டி" என்றான். கடலளவு கோபம் அவன் குரலில்.
அவனது பேச்சில் நெகிழ்ந்தவள்,அவன் கோபத்தை ரசித்தபடியே,"இல்ல, என்னை கண்டுக்கவே மாட்றீங்க, கோபமா இருக்கீங்க. நா எங்க வீட்டுக்கு போறேன்னு சொன்னதும் ரொம்ப தாராளமா 'நானே விட்டுடுறேன்னு' சொல்றீங்க. அதான் டவுட்" என்றாள் இயல்பாக.
அவளின் பேச்சில் சிரித்தவன்,அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டி,"கொஞ்ச நேரமாவது கோபமா இருக்க விடுரியாடி? ஸ்கூல்,காலேஜ், ஆபீஸ் எல்லா இடத்திலும் வசீகரன்னா கோபக்காரன்னு சொல்வாங்கடி. உன்கிட்ட தான் அது எடுபடவே மாட்டேங்குது. வசீயகாரிடி நீ" என்று அவளை அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டான்.
கண்களை மூடி அவன் வார்த்தைகளையும் முத்தத்தையும் ஏற்றுக்கொண்டவள்,"நடு ரோட்டில் கொஞ்சல் வேணாம் வசீகரரே! காரை கிளப்புங்கள்"என்றாள் வடிவேலு பாணியில்.
சத்தமாக சிரித்தபடி தனது மாமனார் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் வசீ.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 
யாழ்-26
"கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்கேலி பொறுத்திடுவான்-எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல் செய்திடுவான்- என்றன் நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்னுணர்வான் - அன்பர் கூட்டத்திலேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுளரோ?"
திடீரென வந்த மகளையும் மருமகனையும் மகிழ்ச்சியாக வரவேற்றனர் யாழினியின் பெற்றோர். "அண்ணா எங்கம்மா?" என்றாள் யாழினி.
"அவனுக்கு இந்த வாரம் முதல் ஷிப்ட். ஆபீஸ் போய்ட்டான்"என்றார் பூரணி.
மாதவனின் அலுவலகத்தில் மூன்று ஷிஃப்ட் உண்டு.ஓரளவு நல்ல சம்பளம் தான் என்றாலும் அவன் செய்யும் வேலைக்கு இந்த சம்பளம் குறைவு தான். ஐடி ஊழியர்களின் அனைத்து கஷ்டங்களும் மாதவனுக்கும் இருந்தது. குடும்ப நிலையை உயர்த்துவதற்காக அத்தனை பாடுகளையும் ஏற்றுக்கொள்கிறான். இதையெல்லாம் எண்ணிய யாழினிக்கு வருத்தமாக இருந்தது.
'அண்ணா வசீகரனின் பிசினஸ் ஐடியாவை ஏத்துகிட்டு இருக்கலாம். அவன் அறிவுக்கும் கடின உழைப்புக்கும் 2 வருஷத்துல முன்னேறிடுவான்' என்று எண்ணினாள்.
யாழினியின் முகத்தை ஆழ்ந்து பார்த்த வசீகரன் ஒற்றை புருவத்தை உயரத்தினான். யாழினி ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள். எல்லோரிடமும் பேசிவிட்டு அலுவலகம் கிளம்பினான் வசீ.
வாசல் வரை வந்து விடைக்கொடுத்த யாழினியின் தோளில் கைப்போட்டவன்,"டார்லிங், ஈவினிங் நானும் இங்கே வந்துடறேன். டின்னர் முடிச்சிட்டு வீட்டுக்கு போவோம். புல்டே அத்தை கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு. ஓகே?" என்று கண்சிமிட்டினான்.
அவன் கிளம்பியதும் தன் அம்மாவை தேடி போனாள் யாழினி. அவருக்கு வேலையில் உதவி செய்தவள், அவருடன் சேர்ந்து சாப்பிட்டாள். அவரது மடியில் படுத்துக்கொண்டாள். பூரணிக்கு மிகவும் சந்தோஷம்.
"யாழி உனக்கு திடீர்னு கல்யாணம் ஆனதும் ரொம்ப பயந்தேன் தெரியுமா? மாப்பிள்ளை,அவங்க குடும்பம் எல்லாம் எப்படி இருப்பாங்களோனு கவலையா இருந்துது. மாப்பிள்ளை குணத்தைப் பார்க்கும்போது நிம்மதியா இருக்குடி. இந்த மாதிரி நல்ல பையன் நாம தேடி இருந்தா கூட கெடச்சிருக்காது. அவங்க குடும்பமும் நல்ல குடும்பம். நா கும்பிட்ட கடவுள் என்னை கைவிடல"என்றார் நெகிழ்ச்சியாக.
அம்மாவின் கன்னத்தை பிடித்து கொஞ்சினாள் யாழினி. 'இந்த வசீகரன் எல்லார் மனசிலயும் இடம் பிடிச்சிடுறான். நா எவ்ளோ கோபமா இருந்தேன் அவன் மேல? என்னையே அவன் பின்னாடி சுத்த வச்சிட்டான்.கல்யாணத்துக்கு காரணம் தெரிஞ்சிக்காமலே அவன ஏத்துக்க முடியுது, அவன் கோபப்பட்டா, என்னால தாங்க முடியல. சரியான ஆள்மயக்கி, இதுல என்னை வசியக்காரினு சொல்றான். கோட்டான்' என மனதுக்குள் அவனை செல்லமாக கொஞ்சியவள் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
மாதவனுக்கு,'அண்ணா ஈவினிங் வீட்டுக்கு வரேன். எனக்கு பிடிச்ச ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்கி வை' என்று மேசேஜ் அனுப்பிவிட்டு உறங்கினாள்.
மாலை மூன்று மணிக்கு மாதவன் வீட்டுக்கு வந்துவிட்டான். யாழினியைக் கண்டவன் உற்சாகமாக, "ஹே, ஈவினிங் தான வரேன்னு சொன்ன?" என்றான்.
"நான் மார்னிங்கே வந்துட்டேன். சும்மா உன்கிட்ட விளையாடுனேன்"என்றவளின் காதைப் பிடித்து திருகியவன்,"என்னையே ஏமாத்துரியா?"என்றான் அன்பாக. யாழினி அண்ணனிடம் செல்லம் கொஞ்சினாள்.
மாலையில் வசீகரன் வீடு வந்ததும் சிற்றுண்டி உண்டுவிட்டு எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தான்."மச்சான், வேலையெல்லாம் எப்படி போகுது?"என்றான் வசீகரன்.
"நல்லா போகுது வசீ" புன்னகையுடன் சொன்னான் மாதவன்.
"எப்போ இந்த ஜாபை விட்டுட்டு சொந்த பிசினசை ஆரம்பிக்க போறீங்க?" என்றான் வசீகரன்.
" இன்னும் ஒரு 5 இயர்ஸ் கழிச்சி பாக்கலாம் வசீ" என்றான் மாதவன்.
"ஹா ஹா நல்லா சொன்னிங்க போங்க. அப்போ அது வரைக்கும் உங்க ஆபீஸை நா என்ன பண்றது? " என்றான் வசீகரன்.
"என்ன என் ஆபீஸா?" அதிர்ச்சியாக கேட்டான் மாதவன். அருகில் இருந்த யாழினியும் அதிர்ச்சியானாள்.
"எஸ் மச்சான். நம்ம இப்போ புதுசா ஒரு காம்ப்ளக்ஸ் கட்டியிருக்கோம். அதுல உங்களுக்கு ஒரு ஆபீசும் சேர்த்து தான் கட்டியிருக்கோம். நீங்க உங்க ஜாபை ரிசைன் பண்ணிட்டு ஆபீஸை டேக் ஓவர் பண்ண வேண்டியது தான் மிச்சம்"என்றான் இயல்பாக.
"நா இப்போதைக்கு பிசினஸ் பண்ற ஐடியா இல்லணு ஏற்கனவே சொன்னேனே மாப்ள! பிசினஸ் பண்ண இன்னும் நா நிறைய ரெடியாகணுங்க " என்றான் மாதவன் உறுதியான குரலில்.
"நீங்க இப்படி யோசிச்சிக்கிட்டே இருந்தா, எப்பவும் உங்களுக்கு பிசினஸ் ஐடியா வராது மாதவன்.உங்களுக்கு தெரிஞ்ச நல்ல டேலண்டான ஆட்களை சேர்த்து ஒரு டீம் ரெடி பண்ணுங்க. உங்களுக்கு இருக்குற டேலண்ட்க்கு நீங்க கண்டிப்பா சக்சஸ் ஆவீங்க" என்றான் வசீ தெளிவாக.
"ஒன் ஆர் டூ இயர்ஸ் கொஞ்சம் காசு சேர்த்துட்டு அப்புறம் பண்றேனே". இப்போது தயக்கம் இருந்தது மாதவன் குரலில்.
அவனுக்கும் தொழில் செய்ய ஆசை உண்டு. வெப் டிசைனிங் கம்பனி தொடங்க திட்டம். ஆனால் அவன் தொழிலை சொந்த பணத்தில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன். வசீகரனிடம் மறுத்து பேசவும் தயக்கமாக இருந்தது.
"அதுவரைக்கும் நா அந்த ஆபீஸை என்ன பண்றது? அதை நா உங்களுக்கு குடுக்க முடிவு பண்ணிட்டேன். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் உங்க பெண்டிங் ப்ராஜக்ட் எல்லாம் முடிச்சிட்டு, நீங்க உங்க டீமோட பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிக்கோங்க.ஆபீசுக்கு ரெண்ட் குடுக்க போறீங்க. இனிஷியல் இன்வெஸ்ட்மெண்ட் நா கடனா தரேன், சோ உங்க காசுல தான் தொழில் பண்ண போறீங்க.பேங்க்ல சீக்கிரம் லோன் சேன்க்ஷன் ஆகும்னு சொல்ல முடியாது. அதனால தான் நானே தரேன். லாபம் வந்ததும் அந்த அமௌண்ட் திருப்பி குடுங்க" முடிவாக பேசினான் வசீகரன்.
மாதவன் முகத்தில் இன்னும் தயக்கம் தெரிந்தது.இருவரையும் இன்ப அதிர்ச்சியுடன் பார்த்திருந்த,யாழினியின்புறம் திரும்பிய வசீகரன்,'நீ சொல்லு' எனும் விதமாய் தலையாட்டினான். யாழினியும் பூரணியும் பேசி மாதவனை சம்மதிக்க வைத்தனர். சந்தோஷத்தோடு வீட்டிற்கு கிளம்பினர் யாழினியும் வசீயும்.
காரில் வரும்போது,"நானும் அண்ணா ஆபீஸ்ல ஜாயின் பண்ணிக்கட்டுமா?"என்றாள் யாழினி.
"நோ டார்லிங், நீ இனிமே நம்ம ஆபீஸ்க்கு வந்துடு. நம்ம பிசினஸை கத்துக்கோ. உனக்கு ஈஸியா தான் இருக்கும். இனி 24 ஹவர்ஸும் நாம ஒண்ணா தான் இருக்க போறோம்",என்று சொல்லிவிட்டு கண்சிமிட்டினான்.
வீடு வந்ததும் வசீகரன் தனது அறைக்கு சென்றுவிட, பார்வதியிடம் காலையிலிருந்து நடந்த கதைகளை எல்லாம் சொல்லிவிட்டு, மாதவனின் பிசினஸ் பற்றியும் சொன்னாள் யாழினி. அவருக்கும் அதில் சந்தோஷம். உற்சாகத்தோடு மாடி அறைக்கு சென்றாள்.
குளித்து முடித்து கழுத்தில் துண்டை மாலை போல் போட்டுக்கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தான் வசீகரன். அவன் அணிந்திருந்த கையில்லா பனியனும் ஷார்ட்சும் அவனுக்கு கூடுதல் வசீகரத்தை தந்தது. அவனை ரசித்தபடியே நின்றிருந்தவளின் அருகில் வந்தவன்,அவள் கரங்களை பிடித்து அருகில் இழுத்து, "என்ன டார்லிங், மாமாவை சைட்டடிக்கிறியா?"என்றான்.
வெட்கத்துடன் தலைகுனிந்தவளின் நெற்றியில் முட்டியவன்,"இப்போ என் பிரின்சஸ்க்கு ஹாப்பியா?" என்றான்.
இன்ப அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவளின் கன்னத்தை வருடி,"மார்னிங் உன் அண்ணனுக்காக தானே மேடம் பீல் பண்ணிங்க? இப்போ சந்தோஷமா?"என்றான்.
"ஆனால் நா உங்ககிட்ட எதுவும் சொல்லலயே!"
"டார்லிங், நீ சொல்லனுமா? உன் முகத்தை பார்த்தாலே தெரிஞ்சிதே. அந்த ஆபீஸ் மாதவனுக்காக தான் பிளான் பண்ணேன். அவன் இப்போதைக்கு பிசினஸ் வேணாம்னு சொன்னதால, வேற யாருக்காவது ரெண்ட்க்கு தரலாம்னு நெனச்சேன். மார்னிங் நீ வருத்தபட்டதும், இன்னிக்கே அவனை ஓகே சொல்ல வைக்கணும்னு நெனச்சேன்,செஞ்சிட்டேன். எப்படி உன் புருஷனோட திறமை?"என்றான் புருவம் உயர்த்தி.
அவனது செயலில் அவளுக்குள் குறும்பு உண்டாக,"பிளான் பண்ணி லாக் பண்ணிட்டு சம்மதம் வாங்குறதுல என் புருஷன் கில்லாடினு எனக்கு தான் நம்ம கல்யாணத்திலேயே தெரியுமே!!!"என்றாள் அவளும் புருவத்தை உயர்த்தி.
வசீகரன் அவளை வேகமாக தன்னிடமிருந்து விலக்கினான். திடீரென்ற அதில் விலக்கலில் தடுமாறி நின்று அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் யாழினி.
"ஏய்!!! என்னை பத்தி என்னடி நெனச்சிட்டு இருக்க? எப்போ பார்த்தாலும் நம்ம கல்யாணத்தை பத்தி சொல்லிக் காட்டிட்டே இருக்க! முன்னாடி போன்ல பேசும்போது சொன்ன, அப்போ உனக்கு என்னை பிடிக்காது,சோ டாலரேட் பண்ணிக்கிட்டேன். ஆனா இப்போ தான் நீ என்னை லவ் பண்றல்ல? இன்னும் உனக்கு என்ன குறை? அன்னிக்கு என்னன்னா, 'எனக்கு தப்புனு தெரியறது, அவளுக்கு ஹீரோயிசமா தெரியுது'ங்கற. இன்னிக்கு பிளான் பண்ணி லாக் பண்றேன்னு சொல்ற! உன் தங்கச்சிக்கு நா பண்ணது ஹீரோயிசம்னா, உனக்கு நா பண்ணது வில்லத்தனமா? என்னை பார்த்தா உனக்கு வில்லன் மாதிரி இருக்கா?"
"நானும் எவ்வளவோ பொறுத்துபோறேண்டி, நீ என்னை விடாம ஹர்ட் பண்ற. என்னடி இப்போ? நா உன்கிட்ட சம்மதம் கேக்காம தாலி கட்டிட்டேன். அதான? ஆமாடி தாலிக்கட்டினேன், என்னை தவிர வேற யாருக்கும் உன்னை விட்டு கொடுக்க முடியாம கட்டினேன். ஒத்துக்குறேன், அது தப்புதான். அதுக்கு தான் ஊரறிய மன்னிப்பு கேட்டேனே! அப்புறமும் என்னை பத்தி விசாரிச்சி தானே உன் வீட்டுல என்கூட அனுப்பினாங்க. ஏதோ கடத்திட்டு வந்த மாதிரி லாக் பண்ணேன்னு பேசுற"
"வெளியே போய் கேட்டு பார். வசீகரன் யார்னு சொல்வாங்க! பொண்ணுங்க விஷயத்துல நெருப்புனு சொல்வாங்க, பிஸினஸ்ல கிங்னு சொல்வாங்க.என் முன்னாடி நிமிர்ந்து நின்று பேசவே பயப்படுவாங்க.
அதையெல்லாம் வீட்டுக்கு வெளியே விட்டுட்டு உன் முந்தானைய பிடிச்சிக்கிட்டு உன் பின்னாடி தானேடி சுத்தி வந்தேன்? நா உன் மேல எவ்ளோ லவ் வச்சிருக்கேன் தெரியுமா? நா வேற எத்தனை பேரை லாக் பண்ணி சம்மதம் வாங்கினேன்? ஏதோ பொண்ணுங்க பின்னாடி சுத்தி, கிடைக்கிற கேப்ல தாலி கட்டுறவன் மாதிரி என்னை ட்ரீட் பண்ற?"
காட்டு சிங்கம் போல் கர்ஜித்தவன் கழுத்தில் கிடந்த டவலை வேகமாக டீப்பாய் மீது வீசி எறிந்துவிட்டு, பக்கத்தில் இருந்த சுவற்றில் வலக்கையால் ஓங்கி குத்திவிட்டு விறுவிறு நடைப்போட்டு அறையை விட்டு வெளியேறினான்.
யாழினி அதிர்ச்சியில் உறைந்தே போய் விட்டாள்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 
யாழ்-27
"காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண்மகிழ் சித்திரத்தில் - பகை
மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண்- உயர்
வேதமுணர்ந்த முனிவருணர்வினில்
மேவு பரம்பொருள் காண் - நல்ல
கீதையுரைத்தெனை இன்புறச் செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன்"
யாழினிக்கு படப்படப்பாக இருந்தது. அருகில் இருந்த தண்ணீரை எடுத்து பருகினாள். படுக்கையில் அமர்ந்து தலையை பிடித்து கொண்டு, அவர்களின் உரையாடலை யோசித்து பார்த்தாள்.
'நா என்ன தப்பா பேசிட்டேன்? விளையாட்டா கேட்ட கேள்விக்கு அதே போல விளையாட்டா பதில் சொன்னேன். அதுக்கு ஏன் இந்த கோபம்?' குழம்பிப்போனாள்.
'நா என்ன தான் அவர்கூட அன்பா இருந்தாலும் என்னை மீறி என் மனசுல ஏதோ ஒரு மூலையில் அவர் மேல வருத்தம் இருக்கு போல. அது தான் என் பேச்சில் வெளிப்பட்டுடுது. அது அவருக்கு புரிஞ்சிருக்கு. இப்படியே போனா வாழ்க்கையில நிம்மதி இருக்காது.இதை சரி செய்யனும். எனக்கு தேவையான எல்லாத்தையும் என் முகத்தை பார்த்தே செய்ற மனுஷனை நா கஷ்டப்படுத்தமாட்டேன் ' என முடிவெடுத்தவள், வசீகரனை தேடி வெளியில் வந்தாள்.
மாடி ஹாலில் அவன் இல்லை. கீழே விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது. 'வெளியே போய்ட்டானா?' என நினைத்தவள், அவன் அணிந்திருந்த உடையை யோசித்து பார்த்து விட்டு மொட்டை மாடிக்கு சென்றாள்.
அவள் எண்ணியபடி வசீகரன் அங்கே தான் இருந்தான். கைகளை முன்னால் கட்டியபடி சாலையை பார்த்தபடி நின்றிருந்தான். அங்கிருந்த குறைவான வெளிச்சத்தில் அவன் முதுகு இறுக்கமாக இருப்பது தெரிந்தது. அருகில் செல்ல பயமாக இருந்தது.
'நோ யாழினி! பயப்படாத. காலையில தான் உன்கிட்ட கோபப்பட முடியலனு சொன்னான். சோ உன்னால முடியும்' என தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்டு அவன் அருகில் மெதுவாக சென்று அவனை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டாள்.
ஒரு நொடி அவன் உடல் அதிர்ந்தது. பின் மெதுவாக அவள் கையை விலக்க முயற்சித்தான். ஆனால் யாழினி கையை விலக்காமல் இன்னும் இறுக்கமாக அவனை அணைத்து அவன் முதுகில் தன் முகத்தை அழுத்தினாள். அவன் இப்போது அவள் கையை விலக்கவில்லை.
"யாழினி நா டென்ஷனா இருக்கேன். என்னை இன்னும் கோபப்படுத்தாத. இங்கிருந்து போ" இறுக்கமான குரலில் சொன்னான். அந்த குரல் அவளை அந்நியப்படுத்தியது.
" முடியாது.என்னை இங்கிருந்து போக சொன்னா, நா இந்த வீட்டை விட்டு போய்டுவேன்" என்றாள் உரிமைக்குரலில்.
பட்டென திரும்பியவன்," என்னடி சொன்ன? வீட்டை விட்டு போவியா? எப்போ என்னை விட்டுட்டு போகலாம்னு காத்துக்கிட்டு இருப்பியா?" என்றான்.அவன் முகத்தில் கோபம் இருந்தது.
அந்த கோபத்தை ரசித்து பார்த்தவள், லேசாக சிரித்தபடி,"நீங்க கோபப்பட்டா உங்களுக்கு எக்ஸ்ட்ரா வசீகரம் வருது மிஸ்டர்.வசீகரன்" என்றாள் ஆசையாக.
வசீகரன் குழப்பமாக பார்த்தான். "உனக்கு என்ன பிரச்சனைடி? கொஞ்சினா ஏதாவது பேசி கோபப்படுத்துற, கோபமானா நீயா வந்து கொஞ்சுற. என் பீலிங்சோட விளையாடுரியா?" என்றான்.
"எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. உங்களுக்கு தான் பிரச்சனை. நா விளையாட்டா பேசினத, சீரியஸா எடுத்துக்குறீங்க. நா நம்ம மேரேஜை எப்பவோ அக்சப்ட் பண்ணிக்கிட்டேன். அதான் அதை என்னால இயல்பா எடுத்துக்க முடியுது. நீங்க தான் அதை தப்புனு உள்ளுக்குள்ள பீல் பண்ணிட்டு இருக்கிங்கன்னு நெனைக்கிறேன். அதான் உங்களுக்கு நா அதைபத்தி பேசினா உங்களை குத்திக்காட்டுறதா தோணுது. கோபம் வருது" என்று இதமான குரலில் பேசினாள் அவன் முகத்தை வருடியபடி.
அவன் அவளையே ஆச்சர்யத்துடன் பார்த்தபடி இருந்தான். "நிஜமா தான் சொல்றியா யாழி?" ஏக்கமாக கேட்டான்.
"நா ஏன் பொய் சொல்ல போறேன்? என்மேல உங்களுக்கு நம்பிக்கையே இல்ல" முக சிணுங்களோடு சொன்னாள்.
"என்ன? எனக்கு உன்மேல நம்பிக்கை இல்லையா? இது என்ன புதுகதை?" என்றான் கண்களை சுருக்கியபடி.
"கதையில்ல உண்மை. என்மேல, என் அன்பு மேல, எனக்கு உங்ககிட்ட இருக்க நம்பிக்கை மேல உங்களுக்கு நம்பிக்கையே இல்ல" என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.
"நா நம்பிக்கை இல்லாம என்ன பண்ணினேன் யாழி? எந்த விஷயத்துல உன்னை நம்பல?" என்றான் மீண்டும் இறுக்கம் அவன் குரலில்.
அவனை விட்டு விலகியவள், அவன் கண்களை உற்றுப்பார்த்தபடி,"நம்பிக்கை இல்லாததால தான உங்க முன்னாள் காதலியைப் பத்தி என்கிட்ட மறைக்கிறீங்க? அன்னிக்கு கோகுல் அண்ணா சொல்ல வந்தப்ப கூட எழுந்து போனீங்க? எனக்கு உங்க லவ் ஸ்டோரி தெரிஞ்சா நா உங்க கிட்ட சண்டை போடுவேன்னு நினைக்கிறீங்க" என்றாள் கண்களில் கண்ணீருடன்.
வசீகரனின் முகம் கனிவாக மாறியது. அவளை இழுத்து தன்னோடு இறுக்கியவன், அவளின் நெற்றியில் முத்தமிட்டான். கட்டை விரலால் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.
"உன்கிட்ட சொல்ல கூடாதுனு நெனைக்கலடி செல்லம். எப்படி ஸ்டார்ட் பண்றதுனு தெரியல.அதான் இவ்ளோ நாள் சொல்லல"என்றான் இதமான குரலில்.
"இப்போ தான் நானே ஸ்டார்ட் பண்ணிட்டேனே, இப்போ சொல்லலாமே!" என்றாள் கொஞ்சல் குரலில்.
அவளது கொஞ்சல் முகத்தை ரசித்துப்பார்த்தவன் அவள் இதழ் நோக்கி குனிந்தான். அதிர்ச்சியில் கண்களை விரித்தாள் யாழினி. அவள் முகத்தில் இருந்து தன் முகத்தை பிரித்தவன் அவளின் இதழை வருடிபடி,"நல்ல விஷயத்தை ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிடணும்னு கேட்பரீஸ் அட்வர்டெய்ஸ்மெண்ட்ல சொல்லி இருக்காங்க"என்று விட்டு கண்சிமிட்டினான். அவன் விரல்களோ அவள் இதழ்களை வருடியபடி இருந்தது. தன் கீழுதட்டை பற்களால் கடித்தவள், வசீகரனின் மார்பில் சாய்ந்துக்கொண்டாள்.
"என்கிட்ட சண்டை போட்டுட்டு மேல வந்திங்க மிஸ்டர். வசீகரன்"என்றாள்.
"நீ தான் மூடையே மாத்திடுறியேடி! வசியக்காரி" கொஞ்சினான்.
"அப்படியே உங்க காதல் கதையை சொல்லுங்களேன்" என்றாள் அப்பாவி முக பாவத்துடன்.
"ஹ்ம்ம் அவ்ளோ ஆர்வம்?"என்றான் கிண்டலாக.
"ரொம்ப நல்லா இருக்கும்னு உங்க பிரெண்ட்ஸ் சொன்னாங்களே",என்றவளின் அவள் தலையை பிடித்து ஆட்டியவன் தன் காதலை பற்றி சொல்ல தொடங்கினான்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

New Threads

Top Bottom