நவி மும்பை,
உயர்த்த கட்டிடங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு நின்றது.....
அரணவ் கான்ஸ்டருக்ஷன் கம்பெனி, அரணவ் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான், கண்களில் கோவம் மின்னியது, அதே நேரத்தில் உள்ளே நுழைத்தார் மத்திய மந்திரி செந்தூர பாண்டியன்,
"எப்படி இப்படி நடந்து டாடி அவ்வளவு perfect ஆஹ் பிளான் பண்ணி அவள marriage பண்ண try பனேன், " everything is waste, என்னோட கண்ணு முன்னாடி அவளை காப்பத்தி தாலியும் கட்டிடான் அந்த அகில்", என்று பொரிந்து கொண்டு இருந்தான்.
"லுக் மை சன்அவனை இப்ப அடிக்க முடியாது , வெய்ட் பண்ணி தான் ஆடிக்கணும், நேரம் வர வரைக்கும் பொறுமையா இரு மை சன், நான் ஒரு மீட்டிங் விஷயமா டெல்லிக்கு வரைக்கும் போறேன் சோ be careful, எது பன்றதா இருந்தாலும் என்ன கேக்கமா பண்ணாதே"... என்று கூறி அவரிடம் விட்டு சென்றார்..
"டேய் , அகில் உன்னை சும்மா விடமாட்டேன், என்னயும் என்னோட தம்பி சாவுக்கு காரணமான உன்னை, அணு அணுவை சித்திரவதை பணி ஏன்டா இந்த உலகத்துல வாழுறோம்னு நீ ஒரு ஒரு நாளும் அழர மாதிரி பண்ணலை என் பேரு அரணவ் இல்லை" என்று சுளுரைத்தான்.
"உன்னை கஷ்டப்படுறதுக்கு னா ஆயுதத்தை நீயே என்னோடு கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டா, அவளை காப்பாத்த தானே இது எல்லாம் பண்ண அனா அளவும் வெஸ்ட், உன்னோட கண்ணு முன்னாடியே அவளை கொல்லறேன், அவ செத்து போறதா பார்த்து நீ கண்ணீர் வடிக்ககணும், என்னோட தம்பி செத்த அப்போ நான் எப்படி அழுதேன் அதே மாதிரி நீ அழனும், அதுக்கு அப்புறம் உன்னை கொல்லறேன் என்று கத்தினான்".
அவனுக்கு தெரியவில்லை அவள் அவனை அழிக்கும் ஆயுதம் இல்லை, அவனை காக்கும் ஆயுதம் என்று, அன்றே அறிந்து இருந்தால் அவன் உயிர் தப்பி இருக்கும், ஆனால் விதி வலியது, அவனது மரணம் அவளால் என்றோ எழுதபட்டுவிட்டது.
அவனுக்கு தெரியவில்லை, அகில் இடம் மோதுவது அவனுக்கு அவனே அடித்து கொள்ளும் சாவு மணி என்று, மரணத்திற்கு அழைப்பு விடுக்கும் செயல் என்று.
அரணவ் அடி பட்ட வேங்கை என்ன இரையை வேட்டை அட தயார் ஆனான்.
அகில் வேந்தன், யாழ்வேந்தன் - சக்தி தம்பதியின் தவ புதல்வன், அவனது பெற்றோரை ஒரு விபத்தில் 21 வயதில் பறி கொடுத்துவிட்டான், அதற்கான காரணம் யார் என்பதை அகில் நன்கு அறிவான், அவர்களை வெற்றி அடைவதற்கான பரம பத விளையாட்டு அவன் என்றோ தொடங்கிவிட்டான். பாவம் ஆட்டத்தின் காய்கள் இதனை இன்னும் அறியவில்லை.
அகில் வேந்தன், வேந்தன் க்ரூப் ஆப் கம்பெனி, M.D, அவன் கால் பத்திகாத துறையே இல்லை எனலாம். Export and important, foods products, leather business, construction company, என்ன எல்லா துறைகளும் கொடி கட்டிபறந்தான்
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவன், கண் அசைவில் கட்டி வைக்க தெரிந்தவன், தன்னை வெற்றி கொள்ள நினை பவர்களை அவர்களுக்கு முன்பு வெற்றிகொள் பவன், மொத்தத்தில் பிசினஸ் ஜாம்பவான், 26 வயதில் தனக்கு என தனி இடத்தை பிடித்தவன்.
ஆனால் அவனின் மற்றொரு முகம் யாரும் அறியாதது, அவனுக்கு மட்டுமே தெரிந்தது. அறிந்தால் உயிர் உறைய செய்ய கூடியது.
ஊட்டி...
திருமணம் முடித்த கையோடு அகில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருத்தான். கருப்பு நிற சேர்வனியில் தனது மனதினை கொள்ளை கொண்ட அவனின் விழியலுக்காக காத்து கொண்டு இருந்தான்.
மதி மயக்கும் அழகுடன், அழகு தேவதை என உள்ளே நுழைத்தாள் வேல் விழி,
வேந்தனின் மனம் பின்னோக்கி சென்றது...
அவனின் மனம் கவர்த்தவளை கண்ட நாள் கண் முன்பு நிழல் ஆடியது....
ஜூலை 7,
கரும்மேகம் திரண்டு மழையின் பூமிக்கு கொண்டு வர தயாராய் இருந்தது, மழை மண்ணுடன் இணையும் நேரம், வேந்தன் அவளின் விழியாளை கண்டான்.
மழையில் நின்று கொண்டு தனது தோழிகளுடன் பேசி கொண்டு இருந்தாள். அவளின் மோகன புன்னகையில் வேந்தன் தன்னை இழந்தான்.
நான் உன்னுள்
என்னை தொலைத்து
உனது காதலை
வரமாக பெற்றேன்....
உன்னை கண்டு
என்னை மறந்தேன்...
உன் கண்களில்
எனது பிம்பம்
கண்டு
காதல் கொண்டேன்
கண்மணி....
நம் உலகம்....
அதில்
நீயும் நானும்
நமக்காக உதிக்கும்
சூரியன் .....
நமக்காக
மட்டுமே
காயும்
நிலவு....
நிகழ் உலகம்
மறந்து காதல்
செய்வோம் வா
பெண்ணே...
முதல் நாள் காலேஜ் செல்வதற்கு நேரம் ஆகி விட்டதால் வேகமா சென்று கொண்டு இருந்தாள் வேல் விழி. அங்க தன் நம்ம ஹீரோ மேடம் பார்த்தது....
அவளின் வருகை வேந்தனை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது, அவளின் கை கோர்க்க துடித்த கரங்களை அடக்கி புன்னகையுடன் அவளை வரவேற்றான்.
வரவேற்பு நிகழ்ச்சி நடந்துக்கொண்டு இருக்கும் பொழுது எங்கோ இருத்து அதி வேகமாக வந்த துப்பாக்கி குண்டு வேல் விழியின் நெஞ்சை துளைத்தது.....
விழிகள் பேசும் ......
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்