Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் விழியின் மொழி அவள் - கதை

விழியின் மொழி 10

வேந்தன் வேல் விழியினை கண்டவுடன் காதல் கொண்டான், அவளை எந்த காரணம் கொண்டும் இழக்க கூடாது என நினைத்தவன், அவளை பற்றிய விவரங்களை அறிய முற்பட்டான்,

கல்லூரியில் இருத்து வாட்ச்மேனிடம் சென்றவன், " கண்ணன், அண்ணா இப்போ போகுதே அந்த பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியுமா அண்ணா" என்று கேட்டான்.

"எது தம்பி அந்த பொண்ண எனக்கு தெரியாது தம்பி என பதில் அளித்தார், அவன் விடாமல் "அண்ணா இங்க பாருங்க என அவரிடம் 500 தாளை காட்ட அவர் வாய் எல்லாம் பல்லாக, கொஞ்சம் பொருங்க" தம்பி என்று கூறி ஒரு அறையின் உள்ளே சென்றவர், கையில் தாளுடன் வந்து அவளின் முழு ஜாதகத்தையும் அவனிடம் கொடுத்தார்.

அவர் அளித்த தாளினை கண்டவனின் மனம் குதி ஆட்டம் போட்டது, பின்பு அவளின் பெயரினை அறியும் பொருட்டு தாளினை படிக்க ஆரம்பித்தான்.

" என்னோட டார்லிங் பேரு வேல்விழி யா, உன்னோட அப்பா அம்மா நல்ல பேரு தான் வச்சு இருக்காங்க டார்லிங், நாட் பாட், உன்னோட கண்ணை பார்த்து தான் பேரு வச்சி இருப்பாங்க போல, ப்பபா, என்ன கண்ணு டி அது சும்மா 1000 வாட்ஸ் கர்ரெண்ட் மாதிரி இழுக்குது, என்ன ஒரு இரண்டு நிமிஷம் பார்த்த இருப்பேனா, அப்படியே சும்மா உள்ளுக்குள என்னமோ பணிட்ட டி , வேல்விழி அகில் வேந்தன், முழு பேரு நல்ல தான் இருக்கு, மாமா கிட்ட சீக்கிரம் வந்துடு, டார்லிங் "மாமா வைட்டிங் பார் யூ"... என தனக்குள் பேசி கொண்டான்.

அந்த தாளில் இருந்த முகவரியை கொண்டு மறுநாள் காலை வேந்தன் வேல்விழியின் வீட்டை கண்டு அறிந்து அவள் வீட்டின் முன்பு தனது தேவதையின் தரிசனத்திற்கு காத்து கொண்டு இருந்தான்.

அவள் வெளியில் வருவதற்கு முன்பு நேற்று போலவே ஒற்றை ரோஜா, மற்றும் தான் காதலின் விழ காரணமாக இருந்த அவளின் கண்களை வரைந்தவன், அவளிற்கு தனது பெயர் தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக தனது பெயரின் ஒரு பாதியை மட்டும் அதாவது அகில் என்பதை மட்டும் அவன் வரைந்த ஓவியத்தின் கீழே எழுதி வைத்தான்.




அவள் இருசக்கர வாகனத்தில் அவன் வரைந்த ஓவியத்தை வைத்தவன் அவளின் வரவை எதிர் நோக்கி மறைவாக காத்து கொண்டு இருத்தான்.

கல்லூரி செல்ல வீட்டை விட்டி வெளியில் வந்த வேல்விழி, வண்டியின் மீது ஏதோ காகிதம் இருக்க, அவள் வண்டியில் வேந்தன் வைத்த காகித்தை பிரித்து பார்த்தாள். சுற்றும் முற்றும் கண்களை சுழல விட்டவள் கண்களில்
வேந்தன் தென்படவில்லை, தன்னை சுற்றி யாரும் இல்லை என்பதை அறிந்தவள்,



அந்த வரைபடத்தை பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது, அதனை தொட்டு தடவியவியவளின் கண்கள் அகில் என்ற பெயரில் நிலைத்தது, "வேல்விழி அகில்", "பேரு பொருத்தம் கூட நல்ல தான் இருக்கு வேல்விழி, பட் அவன் ஆளு எப்படி இருப்பான் தெரியாது, ஊர் தெரியாது, character எப்டின்னு தெரியாது, அவன் நல்லவனா, இல்லை கெட்டவானனு, அவனை பத்தி ஒன்னுமே தெரியாம, எப்படி அவனை லவ் பண்ணறது சோ இந்த ஐடியா வ இபப்டியே ட்ராப் பண்ணிட்டு வேலைய பாரு" என தனக்கு தானே பேசிக் கொண்டு வண்டியில் காலேஜ் நோக்கி கிளம்பினாள்.

மறைந்து இருந்த இதனை கண்ட வேந்தன் அவள் கண்களில் தன் மீது தெரிந்த காதலில் உன்மத்தம் ஆகிப்போனான், அவள் கண்களில் உள்ள கரு விழிகள் என்னும் கடலில் முழுகி முத்து எடுத்து கொண்டு இருந்தான், அவளின் அகில், அவன் தேவதையின் தரிசனம் பெற்றவனின் மனம் இறகை இல்லாமல் காற்றில் பறந்தது.

வேல்விழி கல்லூரி சென்று விட வேந்தன் எதையோ இழந்தது போல சுற்றி கொண்டு இருந்தான், இப்படியே இருந்தால் சரி வராது என நினைத்தவன் அவளின் எதிர் வீட்டில் உள்ள நபர்களிடம் விசாரித்து அதற்கு, அடுத்த நாளே அவளின் எதிர் வீட்டில் குடிபுகுந்தான்.......

இப்படியே இரண்டு நாள்கள் சென்று விட அவள் நெருங்கும் வழி தெரியாது அலைந்தனவனின் மனதில் ஒரு எண்ணம் உதித்தது, " என்ன சொன்ன பேபி என்ன லவ் பண்ட்ரா ஐடியாவா ட்ராப் பண்ட்ரிய, இட் வில் நெவேர் ஹப்பேன் பேபி, என்கிட்ட இருத்து உன்னை யாராலும் பிரிக்க முடியாது, உன்கிட்ட கேட்டா தானே நீ என்னை லவ் பண்ணலைனு தான் சொல்லுவா, உங்க அப்பா அம்மா சொன்ன நான் தானே உனக்கு மாப்பிள்ளை, என்கிட்ட நீ வந்து தானே ஆகணும், இப்பவே உங்க அம்மா அப்பா கிட்ட பேசுறேன்" என நினைத்தான்.

காலை கதிரவன் தனது பொன் நிற கதிர்களை பூமியில் பரப்ப கண்விழித்தவனின் கண்களில் பட்டால் வேல்விழி, அவளை தனது மெய் மறந்து பார்த்தவனின் கண்கள் அவளை விட்டு அகல வில்லை.



உன் இரு விழிகள்
கொண்டு
என்னை
தீண்டதே
பெண்ணே.....

உன் கருவிழிகள்
என்னும் நதியில்
மூழ்கி முத்து
எடுத்தவன்...

கரை சேரும்
வழி தெரியாமலே
தத்தளிக்கிறேனடி....

கரை சேரும்
வழி சொல்வாயா
இல்லை.....

என் காதலை
மறுத்து
என்னை
நீங்கி
செல்வாயா....

மறுநாள் வேந்தன் வேள்விழியின் பெற்றோரிடம் சென்றவன், தன்னை பற்றிய முழு விவரம் தெரிவித்து வேல்விழியினை பெண் கேட்டான்.

அதற்கு வேல்விழி பெற்றோரின் பதில் என்ன பதில் வரும் பதிவில்?......

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
விழியின் மொழி 11


காலை கதிரவன் தனது பொன் நிற கதிர்களை பூமியில் பரப்ப கண்விழித்தவனின் கண்களில் பட்டால் வேல்விழி, அவளை மெய் மறந்து பார்த்தவனின் கண்கள் அவளை விட்டு அகல வில்லை.

வேல்விழி தன்னை விட்டு எப்பொழுதும் விலக கூடாது என்ன செய்யலாம் என யோசித்தவன், அவளின் பெற்றோரிடம் பெண் கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

மறுநாள், வேள்விழியின் பெற்றோரிடம் சென்றவன், வீட்டின் அழைப்பு பொத்தானை அடித்தான், வெளியில் வந்த வேள்விழியின் தந்தை வேத நாயகம்" சொல்லுங்க தம்பி என்ன வேணும் என கேட்டார்.



உள்ளே சென்று பேசலாம் என கூறியவன் அவர் பதில் உரைப்பதற்கு முன்பு அவரை தள்ளி கொண்டு உள்ளே சென்றான்.

"ஹலோ, மாமா எப்படி இருக்கீங்க, நான் எதிர் வீட்டுல புதுசா குடி வந்து இருக்கேன், நேத்து உங்க பொண்ணை பார்த்தேன் ரொம்ப புடிச்சி போச்சி அதன் பொண்ணு கேட்டு கல்யாணம் பணிக்கலாம் வந்தேன்" என் பதில் உரைத்தான்.

"ஏய், யாரு டா நீ எதோ ஹெல்ப் கேக்க வந்தேன்னு பார்த்த என்னோட பொண்ணை கேக்குற", என எதிர் கேள்வி கேட்டார் வேதநாயகம்.

"மாமா என் இப்படி வில்லின் மாதிரி பிஹேவ் பண்ட்ரிங்க, நான் உங்க வீட்டுக்கு வர போற மாப்பிள்ளை, சோ கொஞ்சம் மரியாதையா நடத்துக்கோங்க, மாம்ஸ், மோர் ஓவர் நான் செய்யரது தப்பு தான், பட் என்னால வேள்விழியா விட்டு இருக்க முடியாது, உன்னோட பொண்ணு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாம இருக்கணும்னா நான் அவ கூட தான் இருக்கணும், அவளோட சேப்டிக்குகாக நான் வந்தேன், உங்க பொண்ண பார்த்த உடனே ஐ பெல்ட் இன் லவ் வித் ஹெர்", என்றான்.

"இப்போ என்ன மாமா நான் யாருன்னு தெரியணும் அவ்வளவு தானே, என்று சொன்னவன் சிறிது நேர இடைவெளியில் ஏதோ ஓரு பொருளை அவன் சட்டை பையில் இருந்து வெளியில் எடுத்து அவரிடம் காட்டினான்

அதை பார்த்தவரின் கண்கள் அச்சரியத்தில் இல்லை இல்லை அதிர்ச்சியில், விரிந்தது, "தம்பி நீங்க எங்க இருத்து வரிங்க, எதுக்காக இது எல்லாம் பண்ட்ரிங்க" என அவர் பேச்சி தந்தி அடித்தது.

"கூல் டௌன் மாம்ஸ், நீங்க மூணு வருசத்துக்கு முன்னாடி செஞ்ச மிச்சத்தை முடிக்க தான் நான் வந்து இருக்கேன் மாமா, அன்னிக்கி நீங்க அதை பாதியில் விட்டது மட்டும் இல்லாம அதுல தேவை இல்லாம வேல்விழியை இன்குலுட் பண்ணி இருக்கீங்க, அதோட ரிசல்ட் தான் நான் இங்கே இருக்கேன், என்றான்.

மேலும் அவன் எதற்காக அங்கு வந்தான் என்பதை தெரிவித்தவன், மாமா ஒன்னும் அவசரம் இல்லை நல்ல ஆஹ் யோசிச்சு இன்னிக்கி ஈவினிங்குள்ள பதில் சொல்லுங்க, வரேன் மாமா", என்று அங்கு இருத்து சென்றான் வேந்தன்.

சிறிது நேரம் யோசனையில் கழித்த வேதநாயகம், பூரணியை அழைத்து, தான் செய்த செயலையும் அதனால் வேள்விழிக்கு ஏற்பட போகும் ஆபத்தையும், அது மட்டும் இல்லாமல் வேந்தன் எதற்காக இங்கு வந்தான் என்பதையும் தெரிவித்தவர், இதற்கு மேல் தான் செய்ய போகும் செயலுக்கு காண காரணம் மற்றும் இதனால் ஏற்பட போகும் விபரீதத்தையும் எடுத்து உரைத்தார்.

மாலை யாருக்கோ போன் செய்து வேந்தன் கூறி சென்ற அனைத்தும் உண்மை என கண்டு அறிந்தவர், அவனை காண எதிர் வீட்டு நோக்கி விரைந்தார்.

"அவரை பார்த்த வேந்தன், வாங்க மாமா, என்ன முடிவு செஞ்சியிருக்கிங்க,

" என்னோட பொண்ணுக்காகவும் அவளோட பாதுகாப்புக்கு அவ உங்க கூட இருக்கறது தான் சரி மாப்பிள்ளை என மறைமுகமாக தனது விருப்பத்தை வெளியிட்டார், "ஆன ஒரு விஷயம் மாப்பிள்ளை பொண்ணு ரொம்ப சின்ன பொண்ண இருக்க இப்போ தான் காலேஜ் போறா கொஞ்ச நாள் பொறுத்து கல்யாணம் வச்சிக்கலாம் மாப்பிள்ளை,

ஒன்னும் கவலை படாதீங்க மாமா, அவளுக்காக நான் எத்தனை வருஷம், எத்தனை யுகம் ஆனாலும் காத்துட்டு இருப்பேன், அது வரைக்கும் அவளோட நிழல் மாதிரி அவ கூடவே இருப்பேன், அவளோட உயிருக்கு நான் பொறுப்பு மாமா, என்று அவருக்கு உறுதி அளித்தான்.

ஆயிற்று, இரண்டரை வருடங்கள் கண்களுக்கு தெரியாமலே கடந்து சென்றது, கடந்து வந்த இந்த இரண்டரை வருடத்தில் வேந்தன் தினமும் வேள்விழிக்கு அந்த ஒற்றை ரோஜாவையும் அவளுக்காக அவன் எழுதிய கவிதைகளையும் மறக்காமல், அனுப்பி வைத்தான், தினம் காலையும் மாலையும் அவன் தேவதையின் தரிசனம் பெற அவன் தவறியதே இல்லை, இதை எல்லாம் செய்தவன் அவளிடம் மட்டும் தனது அடையாளத்தையும் முகத்தையும் வெளிகாட்ட மறுத்தான்.

கடந்த வந்த இரண்டரை வருடத்தில் வேல்விழி வேந்தன் மீது அளவு இல்லா காதல் கொண்டாள், அவன் இடம் இருத்து வரும் ஒவ்வொரு ரோஜா மலரையும், அவன் காதல் கவிதைகளையும் பொக்கிஷம் என பாதுகாத்து வைத்தாள், முகம் தெரியாத அவனிடம் கனவிலே காதல் சண்டைகள் செய்தாள், தனக்கு எந்த ஒரு பொருள் வாங்கும் பொழுதும் அவனுக்கும் சேர்த்து வாங்கி குவித்தாள்.

அவள் மனதை கொள்ளை கொண்டனுடன் அவளது எதிர் கால வாழ்வு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை ஒரு புத்தகத்தில் எழுதி வைத்தாள், மொத்தத்தில் வேந்தனுடன் கனவில் ஒரு வாழ்க்கை வாழ ஆரம்பித்து இருத்தாள் வேல்விழி.

இவன் வேல்விழி வாழ்வில் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடி கொண்டு இருக்க விதி இருவர் வாழ்விலும் தனது ஆட்டத்தை ஆரம்பித்தது.

கல்லூரி படிப்பு முடிய இன்னும் 6 மாதம் இருந்த நிலையில் அவளின் போனுக்கு புதிய எண்ணில் இருத்து ஒரு அழைப்பு வந்தது.

"ஹலோ, யாருங்க பேசறது என கேட்டாள் வேல்விழி, எதிரில் இருப்பவன் கூறிய பதிலில் வேல்விழி சிலை என சமைந்து நின்றாள், தனது உலகம் முழுவதும் ஒரே நொடியில் அழகாக மாறி விட்டதாக நினைத்தாள், கண்களில் ஆனந்த கண்ணீர் சுரந்தது, இனிமேல் தான் வாழும் வாழ்வு முழுமை பெற்று விட்டதை போலவும், தான் கனவில் நினைத்த வாழ்க்கை தனது கை சேரும் நேரம் மிக விரைவில் வர போகிறது என அவா கொண்டாள்.

எதிரில் இருப்பவன் கத்திகொண்டே இருக்க, கனவு உலகத்தில் சஞ்சரித்தவள், நிகழ் உலகிற்கு வந்தாள்.

"ஹலோ, வேல்விழி நான் அகில் பேசுறேன், நல்லா இருக்கியா அம்மு, இன்னும் ஒரு வாரத்துல நான் உன்னை பார்க்க உங்க வீட்டுக்கு வரேன், எங்க அப்பா அம்மாவையும் சேர்த்து கூட்டிட்டு பொண்ணு கேட்டு வரேன், ரெடியா இருடி மை பொண்டாட்டி, என்று வேந்தன் சொல்ல கேட்டு கொண்டு இருத்த வேல்விழியின் முகம் சூரியனின் நிறம் இது தானே என ஐயம் கொள்ளும் அளவிற்கு சிவந்தது.

இன்று முதல் முறை,
எனது கேள்விக்கான
விடையை
தேடுகிறேன்....

என் காதல்
கொண்ட
அனைவரும்
வேறு உலகில்
வாழ்கிறார்கள்
என்று நான் நினைத்தது
உண்டு....

விடை கிடைத்தது

நான் உன்னில்
தொலைந்தேன்.....

என் கேள்விக்கான
விடையும்
நீ தான்...

என் வாழ்வின்
ஆதாரமும்
நீ தான்.....

மற்ற விஷயங்கள் குறித்து சிறிது நேரம் பேசிவிட்டு அவள் காதலன் வருகைக்காக தவம் இயற்ற ஆரம்பித்தாள் வேல்விழி.

இங்கு நிலை இப்படி இருக்க வேள்விழிக்கு போன் செய்துவிட்டு தனது போனை கீழே வைத்தவனுக்கு அவன் வீட்டில் இருத்து போன் வந்தது.

அவன் வீட்டில் வேலை செய்யும் கார்குழலி தான் போன் செய்து இருந்தார், எதிரில் அவர் சொன்ன செய்தி கேட்டு வேந்தனின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. ஒரே நாளில் அவன் உலகம் சூனியம் ஆகிப்போனது....

விழிகள் பேசும்.....





நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
விழியின் மொழி 12

வேள்விழிக்கு போன் செய்துவிட்டு தனது போனை கீழே வைத்தவனுக்கு அவன் வீட்டில் இருத்து போன் வந்தது, அவன் வீட்டில் வேலை செய்யும் கார்குழலி தான் போன் செய்து இருந்தார்.

"ஹலோ, குழலி அம்மா சொல்லுங்க, என என்றான் அகில்வேந்தன்.

தம்பி, தம்பி, அம்மா, அப்பா", என மறு பக்கத்தில் விசும்பினார் குழலி,

"சொல்லுங்க குழலி அம்மா, அப்பா அம்மாக்கு என ஆச்சி சொல்லுங்க", என தவிப்புடன் கேட்டான் வேந்தன்,

"தம்பி அம்மா அப்பாக்கு அக்ஸிடெண்ட் ஆகிடுச்சாம் தம்பி, கோவிலுக்கு போய்ட்டு வரும் பொழுது, எதிர்க்க வந்த லாரி இடிச்சி அங்கேயே அம்மாவும் அப்பாவும், இறந்துடங்க தம்பி, நீங்க சீக்கிரமா கிளம்பி ஊட்டிக்கு வாங்க தம்பி என்று கூறினார்.

அவர் சொன்ன செய்தி கேட்டு வேந்தனின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. ஒரே நாளில் அவன் உலகம் சூனியம் ஆகிப்போனது....

சிறிது நேரத்துக்கு முன்பு தான் தனது காதல் பற்றி கூறி அவர்களின் சம்மதம் பெற்றான், 1 மணி நேரத்திற்கு முன்பு தன்னிடம் சிரித்து பேசியவர்கள் இப்பொழுது உயிருடன் இல்லை, தன்னை சிறிய வயதில் இருத்து பாராட்டி சீராட்டி வளர்த்த அன்னை தந்தையும் இனி தன்னுடன் இருக்க போவது இல்லை.

தவறு செய்யும் பொழுது குருவாக, நண்பனாக இருத்து தனது தவறுகளை சுட்டி காட்டும் தந்தை இனி தன்னுடன் பேச போவது இல்லை, பாசம் வேண்டும் என நினைக்கும் பொழுதும், சந்தோஷம் எனும் பொழுதும், துக்கம் எனும் பொழுதும், தூக்கம் வராத பொழுதும் சாய்ந்து கொள்ளும் தாய் மடி இனி தனக்கு கிடைக்க போவது இல்லை.

25 வருட திருமண வாழ்க்கையில் மனம் ஒத்த தம்பதியாராய் இருந்தவர்கள், மரணத்திலும் பிரிய வில்லை போலும், ஆனால் அவர்கள் அன்பின் சின்னமான வேந்தனை வேதனையில் தவிக்க விட்டு விட்டனர் யாழ் வேந்தன் மற்றும் சக்தி தம்பதியினர்.

எல்லாம் முடிந்து விட்டது, சிறிய குருவி கூடாக இருந்த அழகான குடும்பம், ஒரே நொடியில் வேடனின் கையில் சிக்கி சின்னா பின்னம் ஆனது போல வேந்தனின் குடும்பமும் விபத்து என்னும் கோர அரக்கனின் பிடியில் சதியில் சிக்கி அழிந்து போனது.

வேந்தன் தனது நண்பன் ராகவன் உதவியோடு ஊட்டி வந்து அடைந்தான், அங்கு இருத்து நேராக மருத்துவமனைக்கு சென்றவர்கள் யாழ் வேந்தன் -சக்தியின் சடலத்தை கூர் ஆய்வு செய்து பெற்று கொண்டனர். நேற்று மாலை வரை உயிருடன் நடமாடி கொண்டு இருத்தவர்கள் இன்று, உயிர் அற்று சடலமாக வீட்டின் ஹாலில் கிடத்தப்பட்டனர்.

யார் யாரோ வந்து துக்கம் விசாரித்து விட்டு போனார்கள், அவை எதுவும் வேந்தனின் மூளைக்கு எட்ட வில்லை. சடலத்தை இறுதி பயணத்தின் தயார் செய்த பொழுது கூட வேந்தன் கல் என சமைந்து நின்றான்.

இதோ மயானம் வந்து விட்டது, வேந்தன் பெற்றோரின் இறுதி பயணம் நிறைவுறும் தருணம், வேந்தன் தனது கால்களை மண்ணில் மடக்கி அமர்ந்து ஓவென்று சத்தத்துடன் கண்ணீர் சிந்தினான், அவன் அழுகை கல் நெஞ்சம் கொண்டவரையும் கரைய வைத்தது, ஆண்கள் அழுதாள் வெட்கம் என கூறும் சமூகத்தில், தனது பெற்றோரின் மரணத்திற்காக ஒரு மகன் தான் ஆண் என்ற கர்வம் விடுத்து அழுகிறான். அன்று தான் வேந்தன் கடைசியாக அழுதது, அன்று உள்ளுக்குள் மனது அளவில் இறுகியவன் இன்று வரை அவனது இறுக்கம் தளர்வாதாய் இல்லை.

ராகவன் வேந்தனை கண்ணும் கருத்துமாக அவன் பெற்றோரின் காரியம் முடியும் வரை பார்த்து கொண்டான், வேந்தன் உணவு அருந்தமலும், வெளி உலகில் நடப்பது யாதும் அறியாது மனம் போன போக்கில் சுற்றி கொண்டு இருத்தான்.

உலகில் மிகவும் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்று நமக்கு என்று உலகமாக இருத்த குடும்பம் ஒரே நாளில் தனது கண் எதிரிலேயே அழிந்து போவது, பாசத்திற்காக ஏங்கும் நிலைக்கு தள்ளபடுவது, வேந்தன் இப்பொழுது இதே நிலையில் தான் இருத்தான், வேள்விழியின் அருகாமைகாக அவன் மிகவும் எங்கினான்.

வேந்தன் கொஞ்சம் கொஞ்சமாக தனது பெற்றோரின் மரணத்தின் இருத்து வெளியில் வந்து வெளி உலகில் நடமாட ஆரம்பித்தான். வேதநாயகம் பூரணி வந்து இரு முறை பார்த்து சென்றனர். வேள்விழிக்கு இது வரை வேந்தனின் வாழ்வில் நிகழ்ந்தது எதுவும் தெரிவிக்கபடவில்லை, வேந்தன் தன்னை பற்றி எதுவும் அவளுக்கு தெரியவேண்டாம் என்று அவள் பெற்றோரிடம் சொல்லிவிட்டான்.

தனது பெற்றோரின் மரணத்திற்காண காரணம் யாது என அறிய முற்படும் பொழுது தான் வேந்தனுக்கு அந்த மிக பெரிய உண்மை தெரிய வந்தது.

தனது பெற்றோரின் மரணத்திற்கு காரணம், தனது தந்தையின் உடன் பிறந்த சகோதரன், தனது இரத்தம், தான் தனது தந்தையை விட உயிராக நினைத்த தனது சித்தப்பா, என தெரிய வரும் பொழுது அவன் உலகம் சுழல்வது நின்று விட்டது. இவை அனைத்தும் சொத்திற்காக என நினைக்கும் பொழுது அவனுக்கு அவன் சொத்தின் மீது கோபம், வெறுப்பு என கலவையான உணர்வு வந்தது.

வேந்தனின் சித்தப்பா முகில்வேந்தன்
சொத்திற்காக தனது அண்ணனை மிரட்டி கையெழுத்து வாங்கி அவரை கொன்றுவிட்டான், மேலும் அவர்களது மரணத்தை மறைக்க விபத்து போன்று ஏற்பாடு செய்து அவன் செய்த குற்ற செயலில் இருத்து தப்பித்து விட்டான்.

இவை அனைத்து வேந்தனுக்கு தனது தாய் தந்தையின் பிரேத பரிசோதனை முடிவு மூலம் தெரிய வந்தது, யாழ் வேந்தன் மற்றும் சக்தி தம்பதியின் மரணம் அவர்களுக்கு விபத்து ஏற்படுவதற்கு முன்பு அதாவது விபத்து ஏற்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, அவர்களின் கழுத்து நெறிக்கபட்டதால் மூச்சி திணறி இறந்தாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடபட்டு இருந்தது.

உண்மை அறிந்த வேந்தனின் மனம் உலை கலம் போல கொதித்து கொண்டு இருந்தது, தனது உண்மை முகத்தை உலகுக்கு காட்ட வேண்டிய நேரம் நெருக்கிவிட்டதாக உணர்ந்த வேந்தன் அதற்காக பயண ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்தான்....

விழிகள் பேசும்......



நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
விழியின் மொழி 13

காலை நேர செங்கதிர் மெல்ல கீழ் வானில் உதிக்க தொடங்க வேந்தனின் தனி விமானம் நியூ டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கியது.

விமான நிலையத்தில் இருந்து தனி கார் மூலம் வேந்தன் சென்ற இடம் மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation-CBI), இதன் தலைமை அலுவலகம் ஜவாஹலால் நேரு ஸ்டேடியம் என்ற இடத்தில் உள்ளது.

வேந்தன் சிறு வயதில் இருத்தே படிப்பில் படு சுட்டி எந்த அளவுக்கு என்றால் அவன் ஆசிரியர் இவன் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் திணறி அவனை முதல் வகுப்பில் இருத்து டிரெக்ட் ப்ரொமோட்( direct promote) செய்து மூன்றாம் வகுப்பில் சேர்த்து விட்டார்.

வேந்தன் 19 வயதில் கல்லூரி படிப்பை முடித்தவன் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும் பொழுது தான் அவனது தாய் தந்தை அவனை மத்திய அரசு பணிக்கு முயற்சி செய்யும் படி கேட்டு கொண்டார்கள், அவனும் தன் தாய் தந்தை இது வரை தன்னிடம் எதுவும் கேட்டது இல்லை, அவர்களின் முதல் ஆசையான இதனை கண்டிப்பாக நிறைவேற வேண்டும் என வெறி கொண்டு படித்தான்.

மத்திய அரசு பணியான SSC தேர்வு எழுதி அதில் ஒரே வருடத்தில் இந்திய அளவில் முதல் மாணவனாக தேர்ச்சியும் பெற்றான், இந்த தேர்வை பொறுத்த வரை 26 துறைகள் இருக்க வேந்தன் தேசிய பாதுகாப்பு முகமையில்(national security and invegistation agency) இயற்கை வளங்களை பாதுகாக்கும் துறையினை CBI இல் தேர்வு செய்தான். CBI எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation-CBI) நிறுவனம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தின்போது ஊழல் மற்றும் கையூட்டு வழக்குகளை ஆராய்வதற்காக 1941ஆம் ஆண்டு சிறப்புக்காவல் நிறுவனம் (Special Police Establishment-SPE) பிரித்தானிய இந்திய அரசால் அமைக்கப்பட்டது. மேலும் பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகவும் உள்ளது.

அவனது பயற்சி காலத்தினை வெற்றிகரமாக முடித்து தனது 20 வயது முடியும் தருவாயில் சிறப்பு இயக்குனராக(Special director) பதவி அமர்த்தபட்டான். அவனுக்கு அளித்த முதல் இரகசிய பணி( secret mission) செயற்கை சூரியன் எனப்படும் அணுக்கரு இணைவு (atomic fusion) குறித்தும் அதனை கண்டுபிடித்தவரையம் மற்றும் அந்த செயல் முறைக்கு கடவுச்சொல்லாக இருக்கும் நபரையும் பாதுகாக்கும் பணி. இது வரை யாரும் இவ்வளவு சிறிய வயதில் இந்த அளவு உயர்த்த பதவியில் அமர்ந்தது கிடையாது, வேந்தன் தான் முதல் முதலில் இந்த பதவியில் சிறிய வயதில் அமர்த்தவன்.

அவனது பதவியின் படி இந்தியாவில் உள்ள எந்த இடத்திற்கு செல்லவும், யாரையும் கேள்வி கேட்டும் அதிகாரமும், விசாரணை செய்யும்
அதிகாரமும், வேண்டும் என்றால் குற்றவாளிகளை சுட்டு பிடிக்கும் அதிகாரமும், இந்தியாவில் எந்த இடத்திற்கும் எந்த வித தடைகளும் தடங்கலும் இல்லாமல் செல்லும் அதிகாரமும் அளிக்கபட்டு இருத்தது, அவன் அவனது உயர் அதிகாரியான இயக்குனர் மற்றும் உச்ச நீதி மன்றத்திற்கு மட்டும் அவனது செயல்கள் விளக்கம் அளித்தால் போதும்.

அவனது பணியினை வெற்றிகரமாக முடிக்க உறுதி புண்டவன், அவனுக்கு அவன் மேல் அதிகாரி அளித்த பைலை படிக்க ஆரம்பித்தான், அதில் செயற்கை சூரியன் கண்டுபிடித்தவர் வேறு யாரும் இல்லை வேல்விழியின் தந்தை வேத நாயகம், மற்றும் அந்த கண்டுபிடிப்புபிற்கான கடவுசொல் நமது நாயகி வேல்விழியின் கருவிழிகள் தான்.

வேந்தன் தனது பணியினை செய்ய செல்லும் வழியில் தான் வேள்விழியினை சந்தித்தது மேலும் அவள் வேத நாயகத்தின் மகள் என்பதையும் அவன் கண்டு அறிந்தது.

வேத நாயகம் ஊரை பொறுத்த வரை அவர் ஏதோ ஒரு அரசு அலுவலகத்தில் பணியில் இருப்பவர், ஆனால் உண்மையில் அவர் செயற்கை சூரியன் எனப்படும் அணுக்கரு இணைவு செயல் முறையை கண்டு அறிந்தார், அதற்கு எந்த வித ஆபத்து வந்து விட கூடாது என்பதற்காக தனது 15 வயது நிரம்பிய மகளின் கருவிழிகளை கடவு சொல்லாக வைத்தார், எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருத்தது, அவரின் செயல் முறை குறித்து வெளியில் தெரிய ஆரம்பித்தவுடன், அவருக்கு நான்கு திசைகளிலும் இருத்து ஆபத்து ஆரம்பித்தது, அவரது மகளையும் அவர் கண்டுபிடித்த செயல் முறையும் காக்கும் பொருட்டு தனது பதவி தனது அடையாளம் என அனைத்தையும் துறந்து வேல்விழினை அழைத்து கொண்டு சென்னை வந்து எளிய வாழ்க்கை வாழ்கிறார்.

இந்த நிலையில் தான் வேந்தன் வேள்விழியினை பெண் கேட்டு சென்றது, வேந்தனின் அடையாள அடையினை கண்ட வேத நாயகம் பயந்தது, பின்பு வேல்விழினை அவனுக்கு திருமணம் செய்ய ஒத்துக்கொண்டது என அனைத்தும் நடந்தது.

காரில் இருந்து வெளியில் வந்த வேந்தன் பாயும் புலி என உள்ளே நுழைந்து நான்கே எட்டில் தனது எதிரே இருந்த அந்த அறையில் கதவை தட்டினான்.
யெஸ், கம் இன்" என்று எதிர் புறத்தில் இருத்து குரல் கேட்க மிடுக்கான நடையுடன் உள்ளே நுழைந்தன். இயக்குனர், ரிஷி குமார் சுக்லா என்ற பெயர்பலகை அவனை வரவேற்றது.


அறையின் உள்ளே சென்ற வேந்தன் ஒரு விறைப்பாக சலியூட் அடித்து நின்றான். எதிரி இருந்த குமார் "ஹௌ ஆர் யூ மை யங் பாய், டேக் யுவர் சீட், என கூறினார்.

தனது அருகில் இருத்த இருக்கையில் அமர்ந்த வேந்தன் "யா, ஐ அம் பைன் சார் என பதில் உரைத்தான்.

" உங்க அப்பா அம்மா விபத்துல இறந்ததுடங்க கேள்வி பட்டேன், இட்ஸ் இஸ் வெரி ஹிரரிப்ளே, எனிவே உன்னோட ஒர்க் ல கான்சென்ட்ரேட் பண்ணு, உங்க அப்பா அம்மாவோட கனவு , இலட்சியம் எல்லாம் உன்னோட இந்த வேலை தான், சோ நான் சொல்லணும் அவசியம் இல்லை, உன்னோட அப்பா அம்மாவ கொலை செஞ்சவங்க மேல இருக்குற கோவத்தை இந்த வேலையில காட்டு, நீ இந்த வேலையை வாங்க எவ்வளவு கஷ்டபட்டனு உனக்கு தெரியும் நினைக்கிறேன்" என்று முடித்தார்.

"ஐ நௌ இட் சார், யெஸ் சார் ஐ வில் டூ இட்" என்று பதில் அளித்தான்,

"நம்ம ஸிக்ரெட் மிஸ்ஸின் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு என கேட்டவருக்கு தான் இது வரை செய்த அனைத்து நடவடிக்கைகளையும் சொன்னவன், அவரிடம் தான் செல்வதாக குறி விடை பெற்றான்.

பின்பு தனது தனி விமானம் மூலம் ஊட்டியை வந்து அடைந்தவன், முகில் வேந்தனை கைது செய்து, அவன் செய்த குற்ற செயலுக்கு தண்டனையும் பெற்ற தந்துவிட்டே ஓய்ந்தான்.

அவன் செய்த செயல் தான் அவன் வாழ்க்கையை புரட்டி போட போகிறது என அவன் அறியவில்லை, தனது உயிரான தாய் தந்தை இழந்தது மட்டும் இல்லாது தான் உயிராக நினைக்கும் வேள்விழிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவன் அறியவில்லை.....

இவன் நிலை இப்படி இருக்க வேல்விழி இவன் வருவான் என நினைத்து ஓய்ந்து போனால், தனது உயிர் காதல் தோற்றுவிட்டதாக எண்ணி கண்ணீரில் கரைத்தால்....

யாருக்கு நிற்காமல் காலம் அதன் கடமையை சரியாக செய்தது, ஆறு மாதம் யாருக்கும் நிற்காமல் ஓடி இருத்தது. வேந்தன் வேள்விழியையும் காணவும் இல்லை, அவன் அளித்த வாக்கை நிறைவேற்றவும் இல்லை....

வேந்தன் உடனான தனது காதல் முடிந்துவிட்டதாக வேல்விழி நினைத்து கொண்டு இருக்க மீண்டும் வேந்தன் வேல்விழி வாழ்வில் புயலாக நுழைகிறான்......

விழிகள் பேசும்......

( இதில் நான் CBI குறித்து கூறி இருப்பது அனைத்தும் உண்மை, வேந்தன் வேலை தொடர்பான செயல்கள் மற்றும் அணுக்கரு இணைவு வேதநாயகம் கண்டுபிடித்தாக கூறி இருப்பது மட்டும் கதைக்காக நான் ஏற்படுத்தியது)


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
விழியின் மொழி 14


அந்தி சாயும் மாலை நேரம் கலைஞனின் கை வண்ணத்தில் உருவான தேர்ந்த ஓவியம் போல் விரிந்து நின்ற வானத்தின் கீழ் சூரியன் சிவப்பு வண்ணம் பூசி நிற்க மேகங்கள் ஆங்காங்கே ஊஞ்சலாடி கொண்டிருந்தது.....

யாருக்கு நிற்காமல் காலம் அதன் கடமையை சரியாக செய்தது, ஆறு மாதம் கண்ணுக்கும் தெரியாமல் ஓடி இருத்தது.

வேள்விழியையும் பொறுத்த வரை வேந்தன் அவளை காணவும் இல்லை, அவன் அவளுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றவும் இல்லை, ஆனால் உண்மையில் நடந்தது வேறு.

வேல்விழி இவன் வருவான் என நினைத்து ஓய்ந்து போனால், தனது உயிர் காதல் தோற்றுவிட்டதாக எண்ணி கண்ணீரில் கரைந்து, அவனை அவன் அளித்த காதல் என்னும் அன்பு விரிச்சத்தை, தன் மனதில் வேர்விட்டு இருக்கும் அவன் மீதான நேசத்தை, தனது நினைவில் இருந்தும் கனவில் இருந்தும், வாழ்க்கையில் இருத்தும், வேரோடு அகற்றிட துடித்தாள்.



வேந்தன் உடனான தனது காதல் முடிந்துவிட்டதாக வேல்விழி நினைத்து கொண்டு இருக்க, முற்றுபுள்ளியின் மறு தொடக்கமாய் வேந்தன் மீண்டும் வேல்விழி வாழ்வில் புயலாக நுழைகிறான்......

அவன் தாய் தந்தையின் இறப்பிற்கு பிறகு வேந்தன் வேதநாயகம் மற்றும் பூரணி தம்பதிக்கு போன் செய்தான்.

தனது தற்போதைய நிலையையும், தனது தாய் தந்தையின் மரணத்திக்கான காரணம், அதற்காக அவன் எடுக்க இருக்கும் நடவடிக்கை என அனைத்தையும் உரைத்தவன், தன்னால் இந்த செயல்கள் முடியும் வரை அங்கு வர முடியாது என்பதையும் தெரிவித்தான்.

வேல்விழி பாதுகாப்பு குறித்து வேதநாயகம் கேள்வி எழுப்ப, வேள்விழியின் பாதுகாப்பை அவன் பார்த்துக்கொள்ளதாக உறுதியளித்தான்.

வேள்விழியின் பாதுகாக்க வீட்டின் நான்கு மூலைகளிலும் இரசிய கேமரா பொறுத்த ஏற்பாடு செய்தான், பொறுத்துபட்டு இருக்கும் கேமரா வின் மூலம் ரெகார்ட ஆகும் வீடியோவை நேரடியாக தனது லேப்டாப்க்கு வரும்படி பார்த்து கொண்டான், மேலும் தனது நம்பிக்கை பாத்திரமான, தனக்கு கீழ் வேலை செய்யும் இரண்டு காவலர்களை வேள்விழியின் பாதுகாப்பிற்கும் மற்ற இரண்டு காவலர்களையும் வீட்டின் பாதுகாப்பிற்கு நியமிக்க ஏற்பாடு செய்தான். மேலும் வேள்விழிக்கு குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் பச்சத்தில் ஆபத்து விளைப்பவரை சுடவும் அதிகாரம் அளித்து இருத்தான் வேந்தன்.

இந்த அனைத்து செயல்களும் மேலான ஒரு முத்தான செயலை செய்தான் வேந்தன், வேதநாயகத்தின் மூலம் காலையும் மாலையும் வேல்விழி செய்யும் அனைத்து செயல்களும், அவள் அழுவது சிரிப்பது, பல் துலக்குவது முதல் கொண்டு வீடியோவாக அவனது மொபைல் போனுக்கு அனுப்பும் படி கேட்டுக்கொண்டான்.

நேரில் அவனது காதலை காண முடியாதவன், மொபைல் மூலம் அவளை கண்டு அவளுடன் தான் இருப்பது போன்று தனது கனவிலே காதல் வளர்த்தான் அவள் உள்ளம் கொள்ளை கொண்ட காதல் கள்வன்.

வேள்விழியோ இது எதுவும் தெரியாது அவனை நினைத்து தலைவனை பிரிந்த தலைவி பசலையில் வாடுவது போன்று ஊண், உறக்கம் இன்றி காதல் நோயில் பரிதவித்து போனால் பேதை அவள்.

நெடும் புலனில்(கடல்)

நான்

தனிமையை

பெற்று கொண்டேன்....

அன்று

உன்னால்

கவலைகளை

மறந்து சிரிக்க

பழகி

கொண்டேன் ......

இன்று

உன்னால்

கவலைகளுடன்

வாழ கற்று

கொண்டேன் ......

நீ வேண்டும்

என்று யாரிடமும்

கேக்கவும்

முடியாது

உனக்காக

தான்

அழுகிறேன்

என்று

யாரிடமும்

உரைக்கவும்

முடியாது.......

நீ வேண்டாம்

என்று

தனிமையை

பெற்று

உன் நினைவுகளுடன்

உன்னிடம்

இருத்து

விலகி

கொண்டேன்.....

இதே நிலையில் 6 மாதம் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக அவனை மறக்க முயன்று, தனது கவனத்தை கல்வியில் திசை திருப்பி கல்லூரி படிப்பை முடித்தாள் வேல்விழி, மேலும் அவன் காதல் நினைவுகள் அவளை கொல்லாமல் இருக்க அருகில் இருக்கும் சென்ட்ரல் லைப்ரரி லா லைப்ரரியானாக வேலைக்கு சேர்த்தாள்.

முகில் வேந்தனை கைது செய்தவன் தனது தாய் தந்தை மரணத்திற்கு தகுந்த ஆதாரத்துடன் அவனின் குற்ற செயலுக்கு தண்டனை பெற்று தந்தான்.

அனைத்து செயல்களையும் அவசர கதியில் முடித்தவன் தனது காதல் ராணியை பார்க்க சென்னை விரைந்து வந்தான், இன்றோடு வேல்விழி வேலைக்கு சேர்த்து ஒரு மாதம் முடிந்து இருத்தது.

காலையில் கண்விழித்த வேல்விழி வழக்கமான தனது காலை கடமைகளை முடித்து
லைப்ரரிக்கு வேலைக்கு கிளம்பினாள். அவளின் அகில், அவளை காணும் ஆவலில் அனைவரையும் மயக்கும் மோகன புன்னைகையுடன் அவளுக்காக காத்து இருந்தான்.



அவள் லைப்ரரிக்குள் நுழைந்து தனது வருகையை பதிவு செய்துவிட்டு, தனக்குரிய மேசையில் அமர்ந்தாள், அவளின் மேஜையில் ஒரு கடிதமும், ஒரு புதிய புத்தகமும் வைக்க பட்டு இருத்தது.அதை பிரித்து படிக்க ஆரம்பித்தாள், அதில்....

"ஹாய் குலாபூ ( ஹிந்தியில் குலாபூ என்றால் ரோஜா என்று அர்த்தம்), எப்படி இருக்க மாம்ஸ் மேல சரியான கோவதுல இருக்க தெரியுது, சாரி அம்மு, அம்மா அப்பாக்கு அக்சிடெண்ட் ஆகி நம்மள தனியா விட்டு போய்ட்டாங்க, இப்போ நீ நான் என் வாழ்வில் எடுத்த முடிவுகளில் சிறந்த முடிவாக நான் நினைப்பது உன்னை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்தது தான் என எழுதி இருந்தான். அதனை கண்ட வேல்விழி சிரித்து விட்டு அந்த கடிதத்தை மடித்து தனது கை பையில் வைத்தாள், தூரத்தில் இருத்து இதனை கண்ட வேந்தன் சிறு பிள்ளை என துள்ளி குதித்தான்.

வேந்தனும் 2 வருடமாக ஒரு நாள் தவறாது கடிதம், புத்தகமும் அனுப்பி கொண்டே இருக்கின்றான், ஆனால் வேல்விழியிடம் இருத்து அவனுக்கு சரி, என்ற ஒற்றை சொல் மட்டும் கிடைக்கவில்லை.

இவர்களின் காதலின் ஊடல் இப்படியே இரண்டு வருடமாக சென்று கொண்டு வேல்விழி வேந்தனின் மீது மனம் இறங்கி அவளின் பெற்றோரிடம் தனது காதலை உரைத்து திருமணம் செய்ய நினைக்கும் வேலையில் அரணவ் எனும் அரக்கனை வேல்விழியின் வாழ்வில் திருமணம் எனும் பந்தம் மூலம் நுழைய முயல்கிறான்.....

வேள்விழியின் நிலை என்ன.....

விழிகள் பேசும்......



நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

New Threads

Top Bottom