Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் விழியின் மொழி அவள் - கதை

விழியின் மொழி 15


பாபா அணு ஆராய்ச்சி மையம்.....

8 வருடத்திற்கு முன்பு ....

அந்த அதிகாலை வேலையும் அந்த அணு ஆராய்ச்சி கூடத்தில் விஞ்ஞானி பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தனர், ஆம் இன்று அவர்களின் நெடு நாள் உழைப்பான செயற்கை சூரியன் மாதிரி செயல்முறை நடைபெற போகிறது.

நடுநாயகமாக வேத நாயகம் தனது கீழ் பணி புரியும் விஞ்ஞானிகளுக்கு உத்தரவுகளை பிறிப்பித்து கொண்டும், தனது ஆராய்ச்சி குறிப்புகளை சரி பார்த்து கொண்டு பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தார்.



பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும், இது மும்பையில் அமைந்துள்ளது.

இந்தியாவின் முதன்மையான அணுசக்தி ஆராய்ச்சி நிலையமாக இதனை இந்தியாவின் புகழ் பெற்ற அறிவியல் வல்லுனரான ஹோமி பாபா அவர்கள் தலைமையில் செயல்படுத்தியதாகும். இங்கு பல வகையான அணு சக்தியை சாதகமான வழிகளில் பயன்படுத்துவதற்கான அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் உயர்தர ஆராய்ச்சிக்காகவே உருவாக்கியவை ஆகும்.

இந்த ஆராய்ச்சி மையம் 1954 ஆம் ஆண்டில், டிராம்பே அணு சக்தி நிறுவனமாகத் துவங்கியது. அப்போது டாடா இன்ஸ்டிட்யுட் ஆப் பண்டமெண்டல் ரிசேர்ச் என்ற நிறுவனத்தில் பணி புரிந்த பல அறிவியல் வல்லுனர்கள் இந்த நிறுவனத்தில் பணி புரிவதை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். அதன் தலைவராக இருந்த ஹோமி பாபாவின் மறைவுக்குப் பின், 1966 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் 'பாபா அணு ஆராய்ச்சி மையம்' என்ற பெயரில் அறியப்பெற்றது.

இந்த ஆராய்ச்சி மையம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் அமைந்த இந்திய அணு சக்தித்துறையின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

வேத நாயகம் ஆராய்ச்சி பற்றி அறிவதற்கு முன்பு அணுகரு பற்றிய அடிப்படை தெரிந்து கொள்வோம்.

அணுக்கரு பிளவு (atomic division) என்பது கனமான அணுக்களான யுரேனியத்தை நியூட்ரான் கொண்டு தாக்கும் பொழுது அது பேரியம், கிரிப்டான் என்ற இரண்டு சமமான அணு துண்டுகளாக வெடித்து வெளிவரும். அப்போது பேரளவு ஆற்றல் வெளிப்படும்.

அணுக்கரு பிளவைக் கண்டுபிடித்தவர் ஆட்டோஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மான்.

இந்த செயல்முறை தான் அணுகுண்டு வெடித்தலில் பயன்படுகிறது அணுக்கரு பிளவை அறை வெப்பநிலையில் கூட உருவாக்கலாம், இந்த முறையை பயன்படுத்தி தான் கூடங்குளம், கல்பாக்கம் ஆகிய இரு அணுக்கரு உலையில் மின்சாரம் தயாரிக்க படுகிறது. இதில் கட்டுப்பாடான செயலை அணு உலையில் பயன் படுத்துவார்கள். மற்றும் கட்டுப்பாடற்ற செயின் ரியாக்சனை அணுகுண்டில் பயன்படுத்துவார்கள். இதனை பயன்படுத்தி தான் ஹிரோஷிமா நாகசகியில் அத்தனை உயிர்களை பலியாகினார்கள் அமெரிக்கர்கள்.

அணுக்கரு இணைவு என்பது குறைந்த அல்லது எளிய அணுக்கள் இணைத்து அதிக அணு எண் கொண்ட அணுவை உருவாக்குவது ஆகும், அணுக்கரு இணைவு பயங்கர வெப்ப நிலையில் நிகழ்வது ஆகும். இந்த இணைவு வினை 10 ^7 கெல்வின் என்ற உயர் வெப்பநிலையில் மட்டுமே சாத்தியம் ஆகும். இதற்கு சிறந்த உதாரணம் சூரியன் ஆகும். சூரியனின் உள்வெப்பநிலை அதிகமாக உள்ளதால் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றோடு ஒன்றிணைந்து ஹீலியம் அணுக்கரு உண்டாகும்.

அணுக்கரு இணைவானது நட்சத்திரங்களில் இயற்கையாக நிகழுகிறது. மனிதர்களின் துணிகர முயற்சிகளின் மூலமான செயற்கையான இணைவு இது வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் அவை இன்னும் முழுமையான கட்டுப்பாட்டில் வரவில்லை.

இந்த அணுக்கரு இணைவு நுட்பத்தில் உள்ள சக்தி மொத்த மனித குலத்தையே அழிக்கும் அளவு சக்தி வாய்ந்தது. சூரியனில் உள்ள அணுக்கள் என்றெனும் ஒரு நாள் வெற்றிடம் ஆகும் பொழுது முழு விண்வெளியும் அழியும் நிலைக்கு தள்ளப்படும். மேலும் இவ்வாறு நிகழ்வதை தடுக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தது.

சீனா ஈஸ்ட்(EAST - experimental advance super conduction tokamak), என்ற பெயரில் தனது ஆராய்ச்சியை தொடங்கி நடத்தி கொண்டு இருக்கிறது, சூரியனில் நிகழும் அதே நிகழ்வு பூமியில் நடத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறது, 11 மீட்டர் உயரமும் 8 மீட்டர் சுற்று அளவும் 400 டன் எடையும் கொண்ட அணு உலையில் இந்த ஆராய்ச்சி நடை பெற்று கொண்டு இருக்கிறது.

இதே போன்று ஐதேர் (ITHER) என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா முதலிய 35 நாடுகள் புதிய தொழில் முறையை பயன்படுத்தி இந்த செயல்முறையை தொடங்கி உள்ளது, மேலும் இது இயற்கையான முறை, 2025 ஆம் ஆண்டு முடிக்க திட்டம் இடபட்டுத்துள்ளது.

இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் சூரியனில் உள்ள அணுக்கருகள் தீர்ந்து போய்விடினும் செயற்கையான முறையில் வெப்பத்தை உண்டாக்கி பூமிக்கு வெளிச்சத்தை கொண்டு வர முடியும் மேலும், இந்த நிகழ்வு இயற்கையானது, இதில் இருத்து வெளி ஏறும் வெப்பத்தை பயன் படுத்தி நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்க முடியும்.
மேலும் இந்த நிகழ்வு மூலம் கிடைக்கும் பொருட்கள் மூலம் பெட்ரோல், வாகன எரிபொருள், வீட்டு தேவையை மற்றும் தொழில்சாலை தேவைகளை பூர்த்தி செய்ய முடியும், இயற்கையும் பாதுகாக்க முடியும்.

இந்த நிலையில் தான் வேதநாயகம் இந்த செயல்முறையை வெற்றிகரமாக செய்து முடித்து அதற்கு செயற்கை சூரியன் (artificial sun) என்று பெயர் இட்ட

இந்த செயல்முறைக்கு காப்பு உரிமை (patent right) பெற முயற்சி செய்யும் பொழுது தான் இந்த விஷயம் அணு துறை அமைச்சராக இருந்த செந்தூர பாண்டியனும் தெரிய வருகிறது..

உடனே இதனை வெளிநாட்டில் உள்ள அணு மின் ஆராய்ச்சியர்களுக்கு 10,000 கோடிக்கு தாரைவார்க்க ஒப்பந்தம் பேசிமுடித்தார். இதனை அறிந்த வேத நாயகம் அந்த செயல் முறைக்கு தனது மகளின் கருவிழிகளை கடவு சொல்லாக வைத்து, தனது அராய்ச்சியை நிறுத்தி விட்டு தனது அராய்ச்சி குறிப்புகளுடன் தலைமறைவு ஆனார். மேலும் இந்த செயல்முறை வெளியில் வந்தால் மற்ற நாடுகளால் இந்தியாவின் இறையாண்மை மற்றும் அமைதிக்கு ஆபத்து ஏற்படும் என்பதும் வேத நாயகம் இதை செய்ய முக்கிய காரணமாக அமைத்தது.

இந்த நிலையில் தான் இந்திய அரசாங்கம் வேதநாயகம் மற்றும் வேள்விழியை பாதுகாக்கும் பணியினை இரகசிய பணியாக வேந்தனுக்கு அளித்தது.

இதனை அறிந்த பாண்டியன் தனது மூன்று மகன்களான அபிணவ், அரணவ் மற்றும் அஸ்வின் உடன் சேர்த்து தங்களது திட்டத்தை செயல் படுத்த வழி தேடியது....

அகில் வேந்தனுக்கு எதிரி யார் என்று அறிய முற்படும் பொழுது அவர்களின் வழி முகில் வேந்தனின் மூலம் கிடைத்தது.........

செந்தூர பாண்டியன் தனது பணபலம், அதிகார பலம், படைபலம் முதலியவற்றை கொண்டு தனது அதிகாரம் முகில் வேந்தன் செய்த தவறை ஒன்னுமே இல்லாமல் செய்து அவன் வெளியில் கொண்டு வந்தார்.

இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து வேல்விழி வாழ்வில் என்ன செய்ய காத்து உள்ளனர் பதில் வரும் பதிவுகளில்.......

(இந்த பதிவில் வரும் அணுக்கரு இணைவு மற்றும் அணுக்கரு பிளவு குறித்தும் சீனா மற்றும் ரஷ்யா அராய்ச்சி குறித்து நான் எழுதியது அனைத்தும் உண்மை, வேத நாயகம் செயற்கை சூரியனை கண்டு அறிதாக நான் கூறி இருப்பது கதைக்காக நான் ஏற்படுத்திய கற்பனை)

Anyone have doubt in this update pls ask me i will clarify it,



நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
விழியின் மொழி 16
செந்தூர பாண்டியன், அபிணவ் அரணவ், அஸ்வின், ஆகியோர் அகில் வேந்தனுக்கு எதிரி யார் என்று அறிய முற்படும் பொழுது அவர்களின் பழி வாங்கும் படலத்திற்கான வழி முகில் வேந்தனின் மூலம் கிடைத்தது.

செந்தூர பாண்டியன் தனது பணபலம், அதிகார பலம், படைபலம் முதலியவற்றை கொண்டு தனது அதிகாரம் பயன்படுத்தி முகில் வேந்தன் கொலை குற்றத்தை ஒன்றுமே இல்லாமல் செய்து அவனை வெளியில் கொண்டு வந்தார்.

சிறையில் இருத்து வெளியில் வந்த முகில் வேந்தனுக்கு செயற்கை சூரியன் தொடர்பான அனைத்து விவரங்களும் சொல்லபட்டன

இந்த ஐந்து பேரும் சேர்த்து வேள்விழியை கடத்தி அவர்களின் இலக்கை அடைய திட்டம் திட்டினார். அபிணவ் அமெரிக்காவில் இருக்க, அவனுக்கு போன் மூலம் அனைத்து தகவலும் பேசப்பட்டது. வெளியில் வந்த முகில் வேந்தன் தனது பண பலத்தின் மூலம் இந்த சதி திட்டத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்றான். தான் இந்த திட்டத்தில் இருப்பது வேந்தனுக்கு தெரிய கூடாது என்பதற்காக தான் ஐந்தாவது நபராக தலை மறைவாக இருத்து அனைத்து குற்ற செயல்களையும் ஈடுபட்டான்.

செந்தூரபாண்டியன் மத்திய மந்திரி என்பதால் அவர் பெயர் வெளியில் தெரிந்தால் அவர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் மேலும் அவர் பதவியை இழந்து விட்டால் தங்களது சதி திட்டத்தை செயல் படுத்த முடியாது. எனவே அவர் இந்ததிட்டத்தில் வெளியில் இருந்து மறைமுகமாக ஆதரவு அளித்தார்.

இந்த திட்டத்தின் முதல் படியாக அஸ்வின் வேள்விழியை கடத்தி கொண்டு வருவது அரணவ் அதற்கு துணை புரிவது என்று முடிவு செய்தனர்,

வேல்விழி தினமும் காலை வேலைக்கு செல்லும் பொழுது மாலை வீட்டிக்கு திரும்பும் பொழுதும் அவளை பின் தொடர்ந்து கடத்த ஏற்பாடு செய்தனர். அஸ்வின் அவளை தினமும் பின் தொடர்ந்தான்.

இப்படியே ஒரு மாதம் சென்றது, இதற்கு இடையில் அஸ்வின் வேள்விழியை பின் தொடர்வதை அறிந்த அகில் அஸ்வினை அவனுக்கு கீழ் வேலைசெய்யும் இரு காவலர்களுடன் தினமும் தொடர்ந்தான்.

இந்த நிலையில் ஒரு நாள் அஸ்வின் அன்று இரவு வேள்விழியை கடத்த முயற்சி செய்ய அந்த நாள் அவனின் இறுதி நாளாக அமைந்தது.

அன்று அரணவிற்கு போன் செய்த அஸ்வின் அன்று இரவு வேல்விழி வேலையை முடித்து வீட்டுக்கு செல்லும் பொழுது கடத்த திட்டம் வகுத்து இருப்பதாகவும் அதனை எவ்வாறு செயல் படுத்துவது என் விளக்கம் அளித்து விட்டான்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கு இணங்க, செந்தூர பாண்டியன் இது வரை செய்த பாவத்தின் விளைவு அஸ்வின் வாழ்வில் விளையாடியது. அஸ்வின் வேள்விழியினை கடத்த திட்டம் தீட்டி அவள் வீட்டிற்கு செல்ல பேருந்து ஏறும் இடத்தில் தலை மறைவாக காத்து இருந்தான்.

வேல்விழி பேருந்து நிறுத்தத்தில் பேருத்துக்காக நின்று கொண்டு இருக்க அவள் அருகில் சென்ற அஸ்வின் மயக்க மருந்து கொண்ட கைக்குட்டையை அவள் முகத்தை அருகில் கொண்டு சென்ற வினாடி,

அதே நேரத்தில் மின்னல் வேகத்தில் அவன் பின் இருந்து ஓரு வலியகரம் அவனை வளைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இழுத்து சென்றது, மேலும் அவனை தனது காரின் டிக்கியில் தூக்கி போட்டு வேகமாக அங்கு இருத்து மறைந்தது.



அஸ்வினை கடத்தி வந்த வேந்தன், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனது காரினை நிறுத்தி, அவனை காரில் இருந்து இழுத்து கீழே தள்ளி, அவனை தனக்கு கீழ் வேலை செய்யும் காவலர்களை கொண்டு அடிக்க சொல்லி விட்டு, தனது காரில் தனது இரு கால்களையும் மடக்கி வைத்து மேலே ஏறி, அமர்ந்து கொண்டு கையில் ஜூஸ் குடித்து தனது இரு கண்களின் குரூரம் மின்ன அஸ்வின் வதைக்க படுவதை ரசித்து கொண்டு இருந்தான்.

தனது சகோதரன் அங்கு உயிருக்கு போராடி கொண்டு இருக்க அரணவ் பாரில் குடித்து விட்டு, அஸ்வின் அவனுக்கு போன் செய்ததை மறந்து பெண்களுடன் சல்லபத்தில் ஆடி கொண்டு இருந்தான்.

அடிவாங்கி கொண்டு இருத்த அஸ்வினுக்கு உயிர் நடுக்கம் பிறந்தது என்னமோ உண்மை தான், தனது உயிர் இனி தனக்கு இல்லை, என்பதை அவன் அன்று, அவன் வதைக்க படுவதை கொண்டு உணர்ந்து கொண்டான்,

அவன் அருகில் வந்த வேந்தன் "வேல்விழி மேல கைய வைக்கணும் நினைக்குறவன் நிலைமை எல்லாம் இப்படி தான் முடியும், நீ அவள கடத்த ட்ரை பண்ணேனு உன்ன இவ்வளவு ஈஸியா பரலோகம் அனுப்பி வச்சேன், உன்னோட அப்பன், உன்னோட அண்ணனுக இவங்களோட சாவு உன்னை விட மோசமான இருக்கும், எதுக்கும் மேல போய் டிக்கெட் போட்டு வை, உன் பின்னாடியே எல்லாரும் வருவாங்க, என்றான்.

அடியின் வலியும்,வேதனையும் தாங்காமல் அவனின் இரு கண்களின் வழியே வேந்தனை பார்த்து கொண்டே அவனுயிர் பிரிந்தது. தனது உடன் இருந்த காவலர்களை அஸ்வினின் டெட் பாடியை அப்புறபடுத்த சொல்லிவிட்டு அங்கு இருத்து சென்றான்.

அடுத்த நாள் காலை செந்தூர பாண்டியனும் அஸ்வின் மரண விஷயம் தெரிவிக்க பட்டு அவர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்தார், தேள் கொட்டியதை போன்று தனது மகனின் மரணத்திற்கான காரணத்தை வெளியில் கூற முடியாமல், வேந்தனை ஒன்றும் செய்ய முடியாமலும்,அங்கு இருந்த காவலர்களை வறுத்து கொண்டு இருந்தார்.

அஸ்வின் மரணத்திற்கு காரணமானவனோ இதை எல்லாம் தனது வீட்டின் ஹாலில் உள்ள டிவி யில் மகிழ்ச்சியாக, மனதில் திருப்தியுடன், உதட்டில் இகழ்ச்சி புன்னைகையுடன் பார்த்து கொண்டு இருந்தான்.

இதற்கு இடையில் இந்த நால்வர் கூட்டணி வேள்விழியை நெருங்க முயற்சிக்க, வேந்தன், வேள்விழியின் தற்காப்பு கவசகுண்டலம் போல இருந்து அவளுக்கும் வரும் ஆபத்தை எல்லாம் தாங்கி கொண்டான்...

அஸ்வினின்இறுதி காரியங்கள் நடந்து, மூன்று மாதத்திற்கு பிறகு, வேள்விழியை நெருங்க வேறு வழியினை கண்டு அறிந்தது, இந்த நால்வர் கூட்டணி, அது அரணவிற்கு வேள்விழியினை மணம் முடித்து வைப்பது....

வேத நாயகத்தின் வீட்டுக்கு சென்ற செந்தூர பாண்டியன் அரணவ், வேதநாயகத்தை வேள்விழியை கொன்றுவிடுவதாக மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர், இந்த விவரத்தை வேத நாயகம், வேந்தனுக்கு தெரிவிக்க அவன் திருமணத்திற்கு உரிய ஏற்பாடுகளை கவனிக்கும் படி சொன்னான்.

ஆனால் வேந்தன் மனதில் திருமணத்தை நிறுத்த வேறு தீட்டம் உருவானது....

மண மேடை ஏறும் முன்பு வேல்விழி தனது மனைவியாக தேவையான எல்லா ஏற்பாட்டையும் செய்தான் வேந்தன்......

சத்திராடும் உன் விழிகளில்

நான் கட்டுப்பாடு அற்று

கரைந்து போகிறேனடி.....

கரைந்து போகும்

என்னை மீட்க

வழி தெரியாமல்

உன் கண்களுக்குள்

ஒளிய ஏதெனும்

இடம் கிடைக்குமா

என தேடி

பார்க்கிறேன்.....

இடம் கிடைக்க வில்லை

என்றாலும் பாதகம் இல்லை

உன் இதயத்தில்

எங்கேயனும்

ஒரு மூலையில்

ஒளிந்து

கொள்ள

இடம் கிடைக்குமா.....

விழிகள் பேசும்......

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
விழியின் மொழி 17

வேத நாயகத்தின் வீட்டுக்கு சென்ற செந்தூர பாண்டியன் அரணவ், வேதநாயகத்தின் வீட்டின் கதவை தட்டினார். சத்தம் கேட்டு கதவை திறந்த வேத நாயகம் அதிர்ச்சி ஆனார், யாருக்கு தனது இருப்பிடம் தெரிய கூடாது, யார் கையில் தானும் தனது மகளும் கிடைக்க கூடாது என தங்களுது உயிராய் காக்க ஓடினாரோ இன்று அவன் தன் எதிரில், தனது வீட்டின் முன்பு எமன் போன்று நின்று கொண்டு இருக்கிறான், தனது நிலையை எண்ணி நொந்து தான் போனார் வேதநாயகம்.

" என்ன வேத நாயகம் நீ எங்க கண்ணுல மண்ணை தூவிட்டு ஓடி போய்ட்டா எங்களுக்கு தெரியாது நினைகிறிய, கண்டிப்பா இல்லை, உன்னோட ஒரு ஒரு அசைவும் எங்களுக்கு தெரியும், என்ன அந்த வேந்தன் இருக்கான், தைரியமா இருக்க போல, உன்னை கொல்லறதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் போதும், ஆனா அந்த வேந்தன் உன்னோட பொண்ணு கிடைக்காம துடிக்கனும், அவனோட வேலையையும் சரியா செய்யாம அவனோட மேல் அதிகாரி கிட்ட அசிங்கம் படனும், அதனால நீ என்ன பண்ற உன்னோட பொண்ணை என்னோட புள்ளைக்கு கல்யாணம் பண்ணி குடுத்துடு, அப்போ தான் எங்களால் வேந்தன் மூஞ்சில் கரிய பூச முடியும் என்றான் பாண்டியன்.

மேலும் "அவன பழிவாங்கனும் நா அவன் உயிர நினைக்குற வேள்விழியை அவன் கிட்ட இருத்து பிரிச்சி என்னோட புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும், அப்போ தான் அவன் தினம் தினம் கண்ணீர் விடுவான், ஏற்கனவே அவன் கிட்ட இருத்து அவனோட அம்மா அப்பா வா எங்க ஆளுளா ஒருத்தன் கொலை பண்ணிட்டான், .இப்போ இவளையும் அவன் கிட்ட இருத்து பிரிச்சிட்டா அவன் வாழும் போதே நடை பிணம் ஆகிடுவான், என்றான்.

" நீ கல்யாணத்துக்கு ஒத்துக்களை ன உன்னோட பெண்ணையும் உன்னையும் போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்பேன், எங்களுக்கு அந்த செயற்கை சூரியன் கிடைக்கலானாலும் பரவ இல்லை" என்று மிரட்டி சென்றனர்

இந்த விவரத்தை வேத நாயகம், வேந்தனுக்கு தெரிவிக்க அவனுக்கு போன் செய்தார்..

ஹலோ, சொல்லுங்க மாமா என்றான் வேந்தன்.

தம்பி, அந்த பாண்டியனும் அவன் பிள்ளைக்கு நம்ம வேள்விழியை கல்யாணம் பண்ணி தர சொல்லி கேக்குறங்க, அது மட்டும் இல்லாம அப்படி கல்யாணம் பண்ணி தரலை னா நம்ம வேள்விழியையும் என்னையும் கொன்னுடுவேணு மிரட்டறான் தம்பி, இது வரைக்கும் நம்ப பண்ணத்து எல்லாம் வீணா போய்டும் போல தம்பி, இப்போ நான் என்ன பண்ணற்றது தம்பி" என்றார்.

மறுமுனையில் வேந்தன் யோசனையுடன் நெற்றியை நீவி "மாமா கவலை படாதீங்க, எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன், நீங்க நாளை க்கு என்ன பார்க்க வீட்டிக்கு வந்துடுங்க நான் எல்லாத்தையும் சரி பண்றேன், ஹான் அப்புறம் உங்களுக்கு வேள்விழிக்கு கல்யாணத்துல சம்மதம் னு பாண்டியன் கிட்ட சொல்லிடுங்க, என் கூறி போணை வைத்தான்.

வேந்தன், வேல்விழி மற்றும் அரணவ், திருமணத்திற்கு மற்ற ஏற்பாடுகளை கவனிக்கும் படி சொன்னான்.
ஆனால் வேந்தன் மனதில் திருமணத்தை நிறுத்த வேறு தீட்டம் உருவானது....

மண மேடை ஏறும் முன்பு வேல்விழி தனது மனைவியாக தேவையான எல்லா ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்தான்.

அங்கு வேல்விழி அகில் மீதான கோபம் விடுத்து, தனது தந்தை இடம் தனது திருமணம் தொடரப்பாக பேச முடிவு செய்ய வீட்டுக்கு வந்தால் அவளின் தந்தை அவளின் தலையில் பெரிய இடியை இறக்கினார், அவளுக்கும் மந்திரி மகன் அரணவ் திருமணம் ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினார்.

மனதில் கணவனாக ஒருவனை வரித்து, அவனுடன் கனவில் காதல் வாழ்க்கை வாழ்த்தவள், தனது மனம் கொள்ளை கொண்டவனுக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்ய அது பலன் அளிக்காமல் போனது, அங்கு வேந்தன் தனது காதல் இளவரசியுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டு இருக்க, வேல்விழி அவனை தொடர்பு கொள்ள செய்த முயற்சி அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் ஆனது,

வேந்தனை தொடர்பு கொள்ள எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிய காதல் கொண்டவனையும், அவனுடன் 5 வருடம் கனவில் வாழ்ந்த அனைத்தும் கனவு என நினைத்து, தனது மனதிலே அவனின் நினைவுகளுக்கு கல்லறையை எழுப்பி சமாதி காட்டினாள் வேல்விழி.

காதல்

தோற்று விட்டது

மனம் உலை

கலன்

போல.....

எரிமலையின்

நெருப்பு

போல

கொதிக்கிறது.....

ஆற்றுவர்

யாரும் இல்லை

தேற்றுவர்

யாரும் இல்லை ....

கண்ணில்

வழியும்

கண்ணீர்

துடைக்க

கைகள்

இல்லை .....

கனவுகள்

களைந்து

மனமும்

தொலைந்து

வாழ்க்கை

வெறுப்பின்

விளிம்பில்...

வாழ திரணி

அற்று

நான்........

தனது காதல் கோட்டையை இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டு அதன் மீதே தனது திருமணத்தை நிகழ்த்த, தனது பெற்றோரின் கனவு மெய் பட, தனது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள் வேல்விழி.


மறுநாள் வேந்தன் சொன்ன இடத்திற்கு சென்ற வேத நாயகம் அவன் சந்தித்தார், அவரிடம் தனது திருமணம் குறித்து சில பதில்களை அளித்து விட்டு அவரிடம் சில காகிதங்களை நீட்டினான் வேந்தன்.



அந்த காகிதத்தில்....

வேந்தனுக்கு வேள்விழிக்கும் பதிவு திருமணம் செய்ய தேவையான திருமண விண்ணப்பம் தான் அது, மேலும் அந்த விண்ணப்பத்தில் வேள்விழிக்கு தெரியாமல் கையெழுத்து பெற்று வர வேத நாயகத்தை பணித்தான் வேந்தன். மேலும் அவர்களின் திருமணம் ஒரு மாதத்திற்கு முன்பே நடந்தது போன்று தனது அதிகாரத்தை கொண்டு பதிவு செய்ய ஏற்பாடு செய்தான்.

அடுத்த நாள் காலை வேல்விழி வேலை செய்யும் லைப்ரரி க்கு சென்ற வேத நாயகம் அவளிடம் இந்த விண்ணப்பத்தை காட்டி அவள் பெயரில் சில சொத்துகள் வாங்க அவளின் கையெழுத்து வேண்டும் என பொய் கூறி அதில் கையெழுத்து பெற்றார். வேலை பளுவின் காரணமாக அந்த காகிதத்தில் என்ன இருத்தது என படித்து பார்க்காமல் தனது தந்தை மீது இருந்த நம்பிக்கையில் தனது கண்களை முடி கொண்டு கையெழுத்து இட்டாள்.

வேந்தன் மற்றும் வேல்விழி திருமணம் அவளுக்கு தெரிவிக்காமலே வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது, இந்த பதிவு சான்றிதழ் கொண்டு தனது மனைவி என்ற காரணத்திற்காக தனது உயர் அதிகாரியிடம் பேசி அவளுக்கு நாட்டில் வீ ஐ பிக்கு, அளிக்கும் 'z' பாதுகாப்பு பெற்று தந்தான் வேந்தன்.

இதற்கு இடையில் அர்ணவ் வேல்விழி திருமணம் தொடர்பாக விபரம் அபிணவ் க்கு தெரிவிக்க பட்டு அவன் இந்தியா வர ஏற்பாடு செய்ய பட்டது.

திருமண நாள் அன்று, வேந்தன் அரணவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த உடன் இரவோடு இரவாக வேள்விழியை மயக்கம் உறச்செய்து கடத்தி கொண்டு ஊட்டியை வந்து அடைந்தான், அவளை மிரட்டி திருமணமும் செய்தான்.

தனது திருமணம் நின்றது, வேல்வழியை வேந்தன் கடத்தியது, திருமணம் செய்தது, மேலும் தங்களுது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது, என அனைத்தையும் அரணவ் போனில் அபிணவ்க்கு கூற அபிணவுக்கு வேந்தன் மீது கொலை வெறி ஏற்பட்டது.

அமெரிக்காவில்இருந்து வந்த அபிணவ் வேந்தன் வேல்விழி திருமண வரவேற்புக்கு சென்று வேந்தனை சுட முயற்சி செய்ய அந்த குண்டை வேல்விழி தான் நெஞ்சில் தங்கினாள்.

இதற்கு இடையில் அவள் மருத்துவமனையில் பிழைக்க அஸ்வின் மரண செய்தி அறிந்த அபிணவ் வேந்தன் - வேள்விழியை அழிக்க திட்டம் தீட்டி கொண்டு இருந்தான்......

அதே வேலையில் வேல்விழி தங்களது வாழ்வில் நடத்த அனைத்தையும் வேந்தனின் டைரியை படித்து தெரிந்து கொண்டாள், தனது காதல் கை கூடிய சந்தோஷத்தில் அவள், காதல் ராஜா குமரன் வரவுக்காக காத்து கொண்டு இருந்தாள், ஆனால் அவன் அவளை ஏற்க போவது இல்லை என தெரிந்தால் அவளின் நிலை என்ன......

விழிகள் பேசும்....


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
விழியின் மொழி 18

மனிதனின் வாழ்வில் சில சமயங்களில் சில மனிதர்கள் தவறே செய்யாமல் தண்டனை அனுபவிக்க வேண்டியது வரும், இதை தான் விதி என்பதா, இல்லை சிலர் செய்த சதி செயலின் தாக்கம் என்பதா, இதில் யாரும் விதி விலக்கு இல்லை போல புராண காலத்தில் இருந்து இன்று வரை தவறு செய்யாத சில மனிதர்களின் நிலை இது தான்.

தவறே செய்யாமல் சீதை அன்று கூனி செய்த சதி செயலுக்கு கானம் சென்றாள், மீண்டும் மக்களின் பழி சொல்லுக்கு அஞ்சி ராமன் செய்த தவறினால் தனது செல்வங்களை கருவில் கொண்டு காடு நோக்கி பயணத்தை தொடக்கினாள், மீண்டும் வரலாறு திரும்ப திரவுபதி பண்டவர்களின் தவறால் துரியோதனன் சபை தனில் மானபங்கம் செய்யப்பட்டாள்.

மழை விட்டாலும் துவானம்விடாது என்ற கதையாய் தவறே செய்யாமல் கலி யுகத்தில், தனது தந்தையின் மற்றும் தன் மீது உயிர் காதல் கொண்ட கணவன் செய்த தவறால் வேல்விழி அதே நிலை அனுபவிக்கவேண்டியது வந்தது.

இவர்கள் ஆடும் மறைமுக சதுரங்க ஆட்டத்தில் அவளுக்கு தெரியாமலே பகைடை காய் ஆக்கப்பட்டாள் வேல்விழி என்றால் தகும். சீதைக்கு, திரவுபதிக்கும் ஏற்பட்ட நிலை ஒரு நாள் தனக்கும் ஏற்படும் என்பதை அவள் அறிய வில்லை அறிந்து இருந்தாள் தனக்கும் அந்த நிலை ஏற்படும் போகுது கலங்கி இருக்க மாட்டாள்போலும்.

வேல்விழி தங்களது வாழ்வில் நடத்த அனைத்தையும் வேந்தனின் டைரியை படித்து தெரிந்து கொண்டாள், தனது காதல் கை கூடிய சந்தோஷத்தில் அவள், காதல் ராஜா குமரன் வரவுக்காக காத்து கொண்டு இருந்தாள்.

சிகப்பு காஞ்சி பட்டு உடுத்தி, கரும் போர்வை போன்ற கூந்தலை பின்னி ஜடை இட்டு, அவளின் மனம் கொள்ளை கொண்ட மன்னவனின், தவத்தை கலைக்க அவளின் கார்கூந்தல் தனில் வெள்ளை நிற மல்லிகை மலர் தனை சூட்டி, அவன் அவள் மீது காதலில் விழ காரணமாக இருந்த கண்களில் மை தீட்டி, அவன் கட்டிய தாலி மின்ன சங்கு கழுத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக நகைகள் பூட்டி, மலரினும் மெல்லிய புன்னைகை உதட்டில் பூசி, வாழை தண்டு கால்களின் கொலுசு இட்டு, கைகளில் வளையல் அணிந்து, அவனின் ஆண்மையை குலைக்கும் பொருட்டு அவன் வரும் வழி மேல் விழி வைத்து காத்து இருத்தாள் வேல்விழி.



தனது காதல் மனது அறிந்து கொண்ட பிறகு, அவனின் காதலின் ஆழம் உணர்த்த பின்பு, தனக்காக அவன் இது வரை செய்த செயல்களின் வீரியம் உணர்ந்த பின்பு, அவன் மீதான மையலும், காதலும் கூடி தான் போனது வேள்விழிக்கு

அன்று வேந்தன் வேண்டாம் என்று கூறியவன், இன்று அவனின் வரவுக்காக காத்து கொண்டு இருக்கிறாள், இவள் இவ்வாறு காத்து கொண்டு இருக்க அவளின் அகி, அவள் தனக்கு தேவை இல்லை என்று அவள் தலையில் இடியை இறக்கினாள், தங்குவாளா பேதை அவள்.

தங்களுக்குள் நிகழ்ந்த முதல் ஊடலுக்கு பிறகு இன்று தான் அவனிடம் பேச போகிறாள், மேலும் அவன் மீதான தனது காதலை உணர்த்த பிறகு அவனிடம் பேச போகும் முதல் வார்த்தை, அவன் நேரில் சந்திக்கும் முதல் சந்திப்பு, அவளின் இதயம் 10 மடங்கு வேகத்துடன் துடித்து கொண்டு இருந்தது....

அவளுக்கு நேர்மாறான மன நிலையில் காதல் கொண்ட வேந்தனின் மனம் வேள்விழியிடம் தனது முடிவை எவ்வாறு உரைப்பது என யோசித்து கொண்டு இருந்தான்...

அவள் கண்ட நொடி முதல் இது வரை காதலில் அவளுக்காக துடித்த மனம், அவளின் சூடு சொற் கள் தளாது விலகி நின்ற பின்பு கூட அவளை நேரில் காணாமல், இருக்க முடியாமல், அவளுக்கு தெரியாமல் வீட்டில் உள்ள இரசிய கேமரா மூலம் அவளை இந்த 14 நாட்கள் கண்டு கொண்டு தான் இருந்தான்.

அவள் தன்னையும், தனது காதல் கொண்ட மனதையும் தனது டைரி மூலம் கண்டு கொண்ட பின்பு அவளின் கைகளுடன் கை கோர்க்க துடித்த கைகளையும், காண துடித்த கண்களையும், அவள் அருகில் செல்ல கால்களையும், அவளிடம் சேர தவித்த இதயத்தை அடக்க மிகவும் சிரமம் பட்டு தான் போனான் வேந்தன்.

அவளின் காதல் கொண்ட மனத்திடம் எவ்வாறு உரைப்பேன் இனிமேல் நம்மால் சேர முடியாது என்று, காதல் மொழிதனை பேசும் கண்களை நேருக்கு நேராக கண்டால், என்னால் அவளிடம் பொய் உரைக்க முடியுமா ? என அவனின் காதல் கொண்ட மனது தவித்து தான் போனது.

யோசித்து யோசித்து வேந்தனுக்கு தலை வலி வந்தது தான் மிச்சம், அவளை காண துடிக்கும் மனதை மிகவும் கஷ்டப்பட்டு மாலை வரை அடக்கினான்.

காதலர்களின் காதல் கொண்ட மனது போல நேரம் கூட உரைந்து தான் போனது போல, காதல் கொண்ட காதலர்கள் இருவரும் வேறு வேறு மனநிலையில் இருக்கும் பொழுது, நேரம் மிக மெதுவாக கரைந்தது.

வேந்தன் வேல்விழி தலையில் இடியை இறக்கும் நேரம் மாலை 6 மணி...

வேந்தன் அலுவலகத்தில் இருந்து கிளப்பி விட்டதாக வேல்விழிக்கு வேந்தனின் காரியதரிசி மூலம் தகவல் தெரிவிக்க பட்டது.

இதோ வேந்தன், வீட்டின் கேட்டின் அருகில் வந்து விட்டான், வேல்விழி தனது கயல் விழிகளை கண்டு அவனை நோக்கினால்...
இதோ, வேந்தன் அவளுக்கு மிக அருகில் வாசல் இருத்து, அவளை நோக்கி வந்து கொண்டு இருக்கிறான், அவள் இதயம் 1000 மடங்கு வேகத்துடன் ஓடும் குதிரையின் கால்கள் போல வேகமாக துடிக்கிறது.

வெகு வேகமாக உள்ளே நுழைந்த வேந்தன் அவளை கண்ட உடன் மூச்சி விடவும் மறந்து தான் போனான்.

அவளின் நிலை அதுக்கு மேல், முகம் சிவந்து கால்கள் அங்கே வேர் விட்டதை போல அவனை காண வெக்கி தான் போனால் பெண்ணவள்.

அவளின் வெக்கத்தை கண்டவன் நெஞ்சில் அமைதியும், அதற்கு நேர்மாறாக கண்களில் காதலுடன், இதழில் மோகன புன்னைகை சூடி கொண்டான் வேந்தன்.



இந்த நிலை ஒரே நிமிடம் தான், தனது முகத்தை கடுமையுடன் மாற்றி கொண்டான், வேல்விழி அவனை கண்ட உடன் "வேணு", அழைத்து என கண்களில் கண்ணீர் உடன் அவனை கட்டி அணைத்தாள்.

ஓரு நிமிடன் அவளின் அணைப்பில் நின்றவன், மறு வினாடி அவளை தன்னில் இருத்து விலகி கீழே தள்ளினான்,

"குழலி அம்மா, என அவன் கத்திய சத்தத்தில் வேல்விழி பயந்து இருஅடி அமர்ந்த படி பின்னோக்கி நகர்ந்தாள், அவளின் முகத்தில் ஏற்பட்ட வலி வேந்தனின் மனதில் எதிர் ஒளித்தது.

அவன் சத்தம் கேட்டு கீழே வந்த குழலி, வேல்விழி அவன் நிலைமை பார்த்து, நிலைமை சரி இல்லை என்பதை யூகித்து அவன் முன்பு நின்றார்.

"குழலி அம்மா, இவ இன்னும் ஒரு வாரம் தான் இங்க இருக்கணும், அப்பா அம்மா நினைவு நாள் முடிச்சதுக்கு அப்றம் இங்க இருத்து போய்டனும், இப்பவே இவளை அனுப்பிடுவேன், ஆன ஆசிரமத்தில் எனக்கு பேரு கெட்டு போய்டும், கட்டின பொண்டாட்டி கூட வாழலை சொல்லுவாங்க ,அதன் இவளை இருக்க சொல்றேன், அப்றம் இதுல டிவோர்ஸ் பேப்பர் இருக்கு நான் சைன் பண்ணிட்டேன், அவளை பண்ண சொல்லுங்க, கொஞ்ச நேரம் கழிச்சு மேல எனக்கு காபி கொண்டு வாங்க , என கூறி வேள்விழியின் முகத்தில் டிவோர்ஸ் பேப்பரை எறித்து விட்டு அவளின் காதல் மனதை வார்த்தைகளால் கொன்று விட்டு அங்கு இருத்து சென்றான்.

அவளை வார்த்தைகளால் காயப்படுத்தினானே தவிர அந்த வார்த்தைகளால்
அவளை விட அதிகமாக காயப்பட்டது வேந்தன் தான், அவளிடம் அந்த வார்த்தைகளை பேசுவதற் குள் நூறு முறை உள்ளக்குள் இறந்து தான் போனான்.

அவளின் நிலை அதற்கும் மேல் அவன் விட்டு போன இடத்தில் கல் என சமைத்து நின்றாள், அவன் கூறி சென்ற வார்த்தைகளால் காதில் எதிர் ஒலித்து கொண்டே இருத்தது. அவன் பேசிய வார்த்தைகள் கூட வலிக்க வில்லை, அவனை வாழ்வில் பிரிய வேண்டும் என்ற நினைவே அவளுக்கு மரண வலியை அளித்தது.

அவளை வார்த்தைகள் காயப்படுத்திய வேந்தன் அவளை விட வலியில் அதிகமாக துடித்தான், அவனின் தாய் தந்தை இறந்த பிறகு கூட எதற்கும் கலங்காதவன், இன்று தங்களின் பிரிவை எண்ணி கால்களை மடக்கி கிழே அமர்ந்து இதயத்தின் வலி பொறுக்காமல் கண்ணீர் சிந்தினான்.

கார்குழலி கதவை தட்ட தன்னை சரி செய்து கொண்டு அவர்களிடம் இருந்து காபி கப்பை பெற்று கொண்டு அவர்களை செல்லுமாறு பணித்தான்.

கீழே சென்று குழலி வேள்விழியையும் அழைத்து அவள் அறையில் விட்டு, அவளுக்கு சிறிது நேரம் ஆறுதல் கூறி அவளை துயில் கொள்ள செய்தார்.

தன்னை விட அவனின் மனநிம்மதி பெரிது என்று நினைத்த வேல்விழி அவன் அளித்த விடுதலை பத்திரத்தில் கைஎழுத்து இட்டு குழலி இடம் அளித்துவிட்டாள்.

ஆனால் அவள் அளித்த விடுதலை பத்திரத்தை குழலி வேந்தனிடம் அளிக்க வேந்தன் அதனை கோபத்துடன் அவரிடம் இருத்து பறித்து, தூள் தூளாக கிழித்து குப்பை குடையில் எறிந்தான், இதனை கண்ட குழலி, புன்னைகையுடன் அங்கு இருந்து சென்றார்.

வேல்விழி கடத்த திட்டம் திட்டிய அந்த நால்வர் குழு, வேள்விழியை கடத்த வேந்தனின் தாய், தந்தை இறந்த தினத்தை தேர்வு செய்தது.

ஒரு வாரம் யாருக்கும் நிற்காமல் ஓடி விட்டது, அன்று வேந்தனை பார்த்த வேல்விழி அதற்கு பின்பு அவனை பார்க்க வில்லை, அவனும் அவளை பார்க்கவில்லை, அவளை பொறுத்தவரை, ஆனால் அவன் வழக்கம் போல அவளின் நடவடிக்கை இரசிய கேமரா மூலம் அவனின் அறையில் பார்த்து கொண்டு தான் இருந்தான்.

வேல்விழி தான் உணவு, உறக்கம் மறந்து காதல் நோயின் பிடியில் இருந்து துரும்பாக இளைத்தாள்....

அவளின் நோய்க்கு மருந்தான வேந்தன் அவளை நிலை அறிந்தும் அமைதியாக காலத்தை கடத்தினான்......

சேமித்து வைத்த

காதல்

எல்லாம்

உன்னிடம் கொட்டி

தீர்க்க ஆசை கொண்டேனடா...

நான் கொண்ட நேசம்

அனைத்தும் சூரியனை

கண்ட பனி துளி போல

உருகி விட்டது....

நீ சூரியனை போல

வார்த்தைகளால்

சுட்டதால்.......

அன்று வேந்தனின் தாய் தந்தை நினைவு நாள்...

வேந்தன் மற்றும் வேல்விழி காரில் சென்று கொண்டு இருக்க கார் சில அடையாளம் தெரியாத நபர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, வேல்விழி கடத்தப்பட்டாள் ......

விழிகள் பேசும்....

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
விழியின் மொழி 19

அன்று வேந்தனின் தாய் தந்தையின் நினைவு நாள்...

வேள்விழியின் மனது காலையில் இருந்தே அமைதி இல்லாமல் யாருக்கோ தனக்கு சொந்தமான ஒருவருக்கு ஏதோ நிகழ போகிறது என துடித்து கொண்டு இருந்தது.

அகில் அறைக்குள் சென்று பார்த்தாள், அங்கு அவளின் காதல் கள்வன் நிர்ச்சலமாக தலைக்கு தனது கைகளை முட்டு குடுத்து குழந்தையை போல தூங்கி கொண்டு இருந்தான்.

அவன் அருகே சென்றவள் அவனின் களைத்த முடியினை ஒதுக்கி, அவனின் நெற்றியில் தனது முதல் ஆதாரத்தை பதித்தாள், பின்பு நெடு நேரம் அவனை பார்த்து கொண்டே நின்று இருந்தாள், மனதில் அவனிடம் அவன் செய்த செயல்களுக்கு சண்டை இட்டு கொண்டு இருந்தாள், வேந்தனிடம் அசைவு தெரிய விட்டால் போதும் என்று வெளியில் ஓடி வந்தாள், அவள் வெளியில் சென்ற உடன் கண்களை திறந்த அகில் அவள் செய்த செயல்களை எண்ணி சிரித்து கொண்டான்.

மனதில் "இவகிட்ட வந்த என்னோட பீலிங்ஸ் கண்ட்ரோல் இல்லாம போய்டுத்து, இவ கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதை தான் இருக்கணும் போல, குட்டியா இருந்துட்டு என்னமோ பண்ட்ரா பா முடியலை, எவ்வளவு நேரம் தான் நானும் நல்ல புள்ளையா இருக்கறது" என நினைத்தான்.

அவன் அறையை விட்டு வெளியில் வந்த வேல்விழி தனது தாய் தந்தைக்கு போன் செய்து பெற்றோரின் நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து விசாரித்து விட்டு நிம்மதியுடன் தனது வேலைகளை கவனித்தாள்.

பின்பு தனது காலை கடமைகளை முடித்த வேந்தன், தனது அறையில் இருந்து கீழே இறங்கி வந்தான்..

அங்கு வேல்விழி ஆசிரமத்திற்கு, செல்ல தயாராக இருந்தாள். அவர்கள் இருவரும் குழலியிடம் சொல்லவிட்டு தனது காரில் பயணத்தை தொடங்கினார
முதலில் கடல் கரைக்கு சென்றவர்கள் தனது தாய் தந்தைக்கு பிண்டம் அளித்து விட்டு, நேராக ஆசிரமத்திற்கு சென்றனர்.
அரவிந்தர் ஆசிரமம் என்ற பெயர் அவர்களை வரவேற்றது, உள்ளே சென்றவர்கள் தாங்கள் கொண்டு வந்த இனிப்பு, உடைகளை தாய் தந்தை இல்லாத அநாதை குழத்தைகளுக்கு விநியோகம் செய்தனர்,
சிறிது தூரம் நடத்த இருவரும் அருகில் இருந்த சிமெண்ட பெஞ்சில் அமர்ந்தனர், வேந்தன் தனது தாய் தந்தையின் நினைவில் கலங்க, வேந்தனின் மனம் அவன் தாயின் மடியை தேடியது,

அவன் முகம் வாடுவதை பார்த்த வேல்விழி கலங்கி தான் போனாள், அவன் துயரத்தை துடைத்து எறிய உறுதி கொண்டவள், அவன் அருகில் சென்று அவனின் தலையினை தனது மடியில் சாய்த்து கோதி விட்டாள். வேந்தன் தனது தாயின் வாசனையும், தொடுகையும் வேல்விழி மூலம் உணர்ந்தவன், கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

வேள்விழியோ இன்னும் சிந்தித்து சிறிது நேரத்தில் அவனை பிரிய போவதை எண்ணி கலக்கம் உற்றாள்.

பின்பு இருவரும் காரில் தங்களுது வீடு நோக்கி தொடங்கினர், வேந்தன் மற்றும் வேல்விழி காரில் சென்று கொண்டு இருக்க அப்பொழுது, எங்கோ இருத்து வேகமாக நான்கு கார் வேந்தனின் காரை சுற்றி வளைத்தது.

வேந்தன் எவ்வளவோ வேகமாக முயற்சி செய்தும் அவர்களின் கார்களை ஓவர் டேக் செய்ய முடிய வில்லை, இறுதியில் ஒரு திருப்பத்தில் வேந்தனை கரினை அவர்கள் சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்.
நான்கு காரில் இருந்து வேகமாக இறங்கிய 20 பேர் வேகமாக வேந்தனின் கரினை நெருங்கி அவனை இழுத்து வெளியில் தள்ளினர், அவன் அவர்களுக்கு எதிராக சண்டையை ஆரம்பிக்க அனைவரும் தங்களது கையில் இருந்த கட்டையின் மூலம் அவனை அடித்து கொண்டு இருக்க, வேல்விழி அவர்களிடம் இருந்து வேந்தணை காக்க போராடினாள்..

இங்கு வேந்தனுக்கு வந்தவர்களும் இடையேயான போராட்டத்தில் அந்த இடமே போர் களமாக காட்சி அளித்தது, சிறிது நேரத்தில் எங்கோ இருத்து வந்த குரல் வேந்தனை அப்படியே நிற்க செய்தது,

"ஹே, அகில் இங்க பாருடா, இதுக்கு மேல எங்க ஆளுங்க மேல ஒரு அடி விழுந்தாலும், உன்னோட பொண்டாட்டி உயிரோட இருக்க மாட்ட, நியாபகம் வச்சிக்கோ", என்று ஒருவன் வேள்விழியின் கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு மிரட்டினான்.

வேந்தன் சிலை என நிற்க, வேள்விழியுடன் அந்த கும்பல் சிறிது நேரத்தில் தங்களது கார்களுடன் மின்னல் வேகத்தில் அங்கு இருந்து மறைந்தது.

வேந்தன் வேல்விழியை கடத்தியதற்கு கலங்குவதற்கு பதிலாக வெற்றி புன்னைகையுடன்
அங்கு இருத்து தாங்கள் கைதிகளை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் தங்களுது இரகசிய இடத்திற்கு சென்றறான்.

அங்கு அவனது மொத்த டீமும் அவனுக்கு விறைப்பாக சலியூட் அளித்தது, சிறிய தலை அசைப்புடன் அவர்களின் மரியாதை ஏற்றவன் வேல்விழி கடத்த பட்ட வாகனத்தின் பாதையை கண்காணித்து கொண்டு இருந்தான்.

வேள்விழியினை கடத்திய கார் வந்து நின்ற இடம் கல்பாக்கம் அணுமின் நிலையம், அவள் திமிர திமிர இழுத்து வந்தனர்.

அங்கு செயற்கை சூரியனை இயங்க வைக்கும் அனைத்து செயல் முறைகளும் தயாராக இருக்க வேல் விழியை இழுத்து வந்த கடத்தல்காரர்கள் அவளை அந்த இயந்திரத்தின் அருகில் இழுத்து சென்று அவளின் முகத்தினை அந்த இயந்திரத்தின் தொடக்கத்தில் உள்ள இரு துவாரங்களில் அவளின் இரு கரு விழிகள் படும் படி வைத்தனர்.

அவளின் இரு கருவிழிகள் பட்டால் தன் அணுக்கரு இணைவு வினை நிகழ தேவையான நைட்ரஜன் அணு வெளிப்படும். பின்பு இணைவு வினை உயர் வெப்ப நிலையில் நிகழ்ந்து வெப்பம் வெளிப்படும், இதுவே செயற்கை சூரியன் தயாரிக்கும் செயல்பாட்டு முறை.
அவளின் அருகில் வந்த அபிணவ் அவளின் முகத்தினை நிமிர்த்தி அவனின் கண்களை அந்த இயந்திரத்தின் அருகில் கொண்டு சென்றான், ஹ்ம்ம், ஓரு பயனும் இல்லை, அந்த இயந்திரம் வேலை செய்வேன என்றது, தங்களது தீட்டம் வெற்றி அடைந்து விட்டதாக எக்காளம் இட்ட அனைவரும் முகத்திலும் ஈயாடவில்லை,

அங்கு இருந்த விஞ்ஞானிகள் அனைவரும் முயற்சி செய்து பார்க்க ஓரு பயனும் இல்லை, அங்கு நின்று இதனை பார்த்து கொண்டு இருந்த பாண்டியன் வேல்விழியை நோக்கி வர, அவள் பயந்து இரு அடி பின்னால் நகர்ந்தாள், அவளை சுட பாண்டியன் துப்பாக்கி தூக்கிய நொடி, பாண்டியனின் போன்க்கு அழைப்பு ஒன்று வந்தது, எதிரில் இருக்கும் நபர் கூறிய செய்தி கேட்டு, பாண்டியனின் முகம் வெளுப்பை தத்து எடுத்தது.

எதிரில் பேசியது வேறு யாரும் இல்லை, CBI, சிறப்பு இயக்குனர்(special director for natural resources), Mr.அகில் வேந்தன்......

"என்ன Mr. பாண்டியன் உங்க மெஷின் வேலை செய்யலையா, சோ sad, எப்படி வேலை செய்யும் அங்க இருக்கறது வேள்விழியா இருந்த தானே அது வேலை செய்யும்", என்று கூறிய வேந்தன் நக்கல் சிரிப்பை உதிர்த்தான்.

அவன் சொன்ன செய்தி கேட்ட பாண்டியன் அவரது போனை கோபத்தில் தூக்கி போட்டு உடைத்தார். எதிரில் இருந்த வேல்விழி இகழ்ச்சி புன்னகை செய்தாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு,

வேந்தன்ஆசிரமத்தில் இருக்கும் மதரிடன் சென்றவன், தனது இக்கட்டான நிலையினை எடுத்து உரைத்து வேள்விழிக்கு மயக்கம் மருத்து தெளித்த உணவினை கொடுக்கும் படி கேட்டு கொண்டான், அவர்களும் அவன் கூறியது போலவே மயக்க மருந்து தெளித்த உணவினை வேள்விழிக்கு மட்டும் சிறப்பாக செய்த உணவு என அவளின் நலனுக்காக பொய் கூறி கொடுத்தார்.

மதர் கூறியதை நம்பிய வேல்விழி, மயக்க மருந்து தெளித்த உணவினை உட்கொண்டு அங்கே மயங்கி சரிந்தாள், அவளை தாங்கி பிடித்த வேந்தன், அவள் நெற்றில் முத்தம் அளித்து தனது உடன் வேலை செய்யும் தனது நண்பன் ராகவனை அழைத்து வேள்விழியையும் தனி விமானம் மூலம் நியூ டெல்லியில் உள்ள CBI ஹெட் குவட்டர்ஸ் கொண்டு செல்ல பணித்தான். வேல்விழி பத்திரமாக CBI ஹெட் குவட்டர்ஸ்
கரை சேர்க்க பட்டாள்.

அதன் பின்பு தனக்கு கீழ் பணி புரியும் ஒரு பெண் காவலரை உடன் அழைத்து கொண்டு காரில் பயணம் செய்தான்.

இந்த நிகழ்வு நடப்பதற்கு இருவாரத்திற்கு முன்பே அந்த பெண் காவலரை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்ற வேந்தன் வேல்விழி முகத்தை போன்ற செயற்கை முகத்தை அந்த பெண்ணுக்கு பொருத்தும் படி முக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் ஏற்பாடு செய்தான்,

இந்த காரணத்திற்காக தன் வேந்தன் இரு வாரம் அவன் விட்டுக்கு செல்லாமல் இருந்தது, மேலும் அவனது வீட்டில் வேலை செய்யும் யாரோ ஒருவரின் மூலம் தனது வீட்டில் நடப்பது எல்லாம் தனது எதிரிக்கு சொல்லப்படுவதை கண்டு அறிந்தான். தனது எதிரிகள் குழம்ப வைக்க, அவர்கள் வலையில் தான் விழுந்தாக நம்ப வைக்க வேல்விழி இடம் விவாகரத்து கேட்டு படி, நாடகம் ஆடினான், அவன் கையில் கிடைத்த வேல்விழி கையெழுத்து போட்ட விடுதலை பத்திரத்தை கிழித்தும் போட்டான், அவன் நடிப்பதை உண்மை என நம்பிய அந்த வேலை ஆள் எதிரிகளிடம் சொல்ல, அதை நம்பி எதிரிகள் கடத்தலை நிகழ்த்த இதோ, இப்பொழுது தோற்று போய் நிற்கின்றனர்.

பாண்டியனின் செல் உடைந்து விட இப்பொழுது வேந்தன், அபிணவ் செல்லுக்கு அழைத்தான், எடுத்து பேசிய அபிணவ் முகம் மாற தனது போனை அவனது தந்தை இடம் அளித்தான்.

"ஹலோ, யார், பேசறது", என்றார் பாண்டியன்.

"ஹ்ம்ம், உன்னையும் உன்னோட புள்ளைகளை கொல்ல போற எமன் பேசுறேன்" என்றான் வேந்தன்.

"என்ன, Mr. பாண்டியன், மத்திய மந்திரியா இருந்துட்டு மக்களுக்கு நல்லது செய்யாம இப்படி கெட்டது செய்யரது மட்டும் இல்லாம, உங்க பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கிறீங்க போல, அத அனுபவிக்க உங்க பசங்க ஒருத்தனவது இருக்கணும் லா, அல்ரெடி நான் ஒருத்தனை கொன்னுட்டேன், நல்ல பசங்களை பெத்து வைக்க சொன்ன இப்படி ஊர் மேயுற பொறுக்கிகளா பெத்து வச்சி இருக்கீங்க, இவ்வளவு செஞ்சிகளே உங்க பையன் எங்க இருக்கானு யோசிச்சிகாளா உன்னும் கொஞ்ச நேரத்துல உங்க பையன் போன்க்கு வீடியோ ஒன்னும் வரும், உங்க இரண்டாவது பையன் சாகுறத பாருங்க நல்லா கண் குளிர பாருங்க, இது எல்லாத்தையும் கூட மனிச்சிடுவேன், ஆன நாட்டு மக்களோட உயிரலா கைவைக்கணும் நினைச்சிக்கான கண்டிப்பா நான் மன்னிக்க மாட்டேன், என்னோட வேள்விழியை கல்யாணம் பண நினைச்சதுக்கும், என்னோட வேல்விழி மேல கைய வைக்கணும் நினைச்சதுக்கும், உங்க பையனோட நிலைமை இப்படி தான் முடியும், என கூறி போனை வைத்தான்.

மறு புறத்தில் செந்தூர பாண்டியன் மகனின் இறப்பு செய்தி கேட்டு அங்கே மயங்கி சரிந்தார்.

வேந்தன் அபிணவ் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பானா பத்தி வரும் பதிவுகளில்.....

விழிகள் பேசும்...

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

New Threads

Top Bottom