Barani Usha
Saha Writer
- Messages
- 67
- Reaction score
- 37
- Points
- 18
NYD-86
தன் மனையாளை வீடு தேடி வந்து அவமானப்படுத்தியது பெற்றோராகவே இருந்தாலும் சரவணனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் செல்வியை அப்படி காதலித்தான்.
காதலுக்கு கண்ணும் இல்லை, பணம் காசும் தேவை இல்லை. மனம் தான் முக்கியம். கணவன் திருமண நாளைக்கு தங்க வளையும், பெரிய ஹோட்டலில் ட்ரீட்டும் தான் தர வேண்டுமா என்ன? ஒரு முழம் மல்லிகையும் கண்ணாடி வளையலும் இன்பம் தராதா? மனைவியை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அவர்கள் என்னை பெற்றவர்கள், அவர்கள் என்ன சொன்னாலும் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவன் சரவணன் அல்ல. அவனை பொறுத்தவரை யாராக இருந்தாலும் செல்வியை தவறாக நடத்த கூடாது. அவள் ஏற்கனவே யாரும் இல்லாதவள். அவளுக்கு அப்பாவாக, அண்ணாவாக , கணவனாக எல்லாமாகவும் இருக்கவே அவன் விரும்பினான். அவனின் முதல் செல்ல குழந்தையும் அவள்தான். அவள் மீது தன் உயிரையே வைத்திருந்தான். தன் குடும்பத்தில் இருந்து அவளுக்கு அளவில்லா அன்பும் பாசமும் கிடைக்கும் என்று நினைத்தவனுக்கு பெரிய ஏமாற்றமே. தன்னை மகனாக பார்த்தவர்களுக்கு தானே ஒரு பண மிஷினாக்கி பெண் வீட்டாரிடம் பணம் புடுங்க பெற்றவர்கள் நினைதிருந்தது அவனுக்கு தெரியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.
ஒனக்கு குழந்தை இல்லன்னுதானே அவங்க இத்தனை நாளா கரிச்சாங்க! இப்ப நீ புள்ள பெக்க போற! அவங்க சொன்ன வார்த்தையை திரும்பி வாங்க முடியுமா ? ஏதேதோ அவன் கத்தி கொண்டிருந்தான். இவள் எதுவும் பேசவில்லை.
நான் போய் நறுக்குன்னு நாலு வார்த்தை அவங்கள கேட்டுபுட்டு வாரேன் . அப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கும்.
அப்ப நான் உண்டாகினத சொல்ல போறதில்லையா ?
இல்ல.
அவள் முகம் சுருங்கியது. அதை பார்த்த இவன் மனம் சுருங்கியது.
ஏய்! என்ன பாருடி!!! முகம் தூக்கி பார்த்தாள் .
இது நம்மளோட சந்தோஷம்டி. இதை ஒனக்கு யாரு நல்லது நினைக்கறாங்களோ அவங்ககிட்டத்தாண்டி சொல்லணும்.
அவங்க உன்னைய பெத்தவங்கடா .
அதனால?
அவங்ககிட்ட சொன்னா சந்தோசப்படுவாங்கடா !
அப்படியா ?
இல்லையா!
இல்ல.
நீ ஏண்டா அப்படி நினைக்கற ?
சரி, அவங்க சந்தோசப்படறவங்களாவே இருக்கட்டும். ஆனா எனக்கு வேணாம்.
என்னடா இப்படி பேசற ?
வேற எப்படி பேசறது? குழந்தையல்லாம் அப்புறம்தான். எனக்கு முதல்ல நீதான். அவங்களுக்கு நீ வேணாம், ஆனா நீ பெக்க போற புள்ள வேணும். அப்படிப்பட்டவங்க எனக்கு வேணாம்.
நான்தான் உன்னைய அவங்ககிட்டேர்ந்து பிரிச்சுட்டேன். அவங்க சொல்லறது கரெக்ட்டுதான்.
சீ! நான் ஒன்னும் அவங்களுக்கு எதிரி இல்ல. நீ இப்படிலாம் யோசிக்காத.
சரி , நீ என்னவேணா செய். அவங்களுக்கு நான் வேணும் வேணாங்கறது பத்தி எனக்கு கவலை இல்ல. என் குழந்தைக்கு எல்லாரும் வேணும். தாத்தா, பாட்டி அத்தை , சித்தப்பா, எல்லாரும். எல்லாரும் வேணும். ப்ளீஸ் டா..
தீர்மானமாக ஆரம்பித்தவள் கெஞ்சலில் நிறுத்தினாள் .
சரி, இப்ப வேணாம், முதல்ல தங்கட்டும். அஞ்சு மாசமாவது ஆகட்டும். அப்புறமா சொல்லிக்கலாம்.
சரி, உதட்டை கடித்தவள்,
எப்படியும் முத்தண்ணனுக்கு தெரியுமே ?
அவன் நம்மள மீறி யாருகிட்டயும் எதுவும் சொல்ல மாட்டான்.
என்னடி? மண்டைய ஆட்டறதே சரி இல்ல. நான் போய் அவனை பார்த்துட்டு , ஏதாவது காசு கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்.
அரைகுறையாக தலையை ஆட்டினாள்.
ஒன்னும் இல்ல. ஏற்கனவே நம்ம நிலைமை சரி இல்ல, இதுல இது வேற, குனிந்து வயிற்றை தொட்டு பார்த்தாள் .
அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ நல்லா சாப்பிடணும், தூங்கணும், சந்தோசமா இரு. சரியா ?
பதில் இல்லை .
சரியா? அழுத்தி கேட்டான்.
சரி .
சத்து மாத்திரை போட்டுக்கிட்டியா ?
இல்ல .
நீ முதல்ல அத போடு.
நீங்க அத்தை மாமாவை பாக்க போகலியா ?
நாளைக்கு போகிறேன். இப்ப நான் இருக்கற நிலமைல அங்க போனா ஏதாவது பிரச்னை ஆகிடும்.
சரி,
நீ முதல்ல மாத்திரையை போடு.
போன் அழைத்தது ,
என்ன முத்து ?
டேய் சரவணா இங்க அப்பாவுக்கு ரத்த வாந்தியாம். ஒடனே வாடா,
இதோ வரேண்டா
செல்வி! முத்து அப்பாவுக்கு ரத்த வாந்தியாம் . நான் போகிறேன். நீங கதவ சாத்திட்டு பத்திரமா இரு. பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு கூப்பிட்டுக்கோ சொல்லிக் கொண்டே சைக்கிளில் பறந்தான்.
முத்து இவன் வந்ததும், இருவருமாக சேர்ந்து அவசரமாக ஜீப்பில் அவரை அள்ளி போட்டு கொண்டு ஓடினர். அவர் மனைவியும், பின்னாலே ஓடி வந்தார்.
அவரை கண்ணாடியில் பார்த்த சரவணன்,
டேய் , அவங்கள வண்டில ஏத்திக்கோ , நான் சைக்கிள்ல வரேன்.
முத்து சற்று தயங்கியபடியே தன் பாட்டியை பார்த்தான், பயத்துடன்.
டேய் இதெல்லாம் யோசிக்க இது நேரமில்லடா. அவங்கதான் முக்கியம்.
சரி.
அம்மா நீங்க வண்டில ஏறுங்க, நான் பின்னாலேயே வரேன்.
கண்ணீருடன் வண்டியில் ஏறினாள். பிள்ளையை பற்றிக் கூட கவலைப்படாமல், இவர்களையே வயிறு எரிய பார்த்துக் கொண்டிருந்தாள், அந்த கிழவி.
ஆச்சியும் மருத்துவமனைக்கு வந்தார்,
காலையில் இருந்து ஏதேதோ டெஸ்டுகளை எடுத்தனர். யாரும் எதுவும் சொல்லவில்லை. படபடப்புடனே இருந்தார்கள். அவன் சித்தியோ ஒன்றும் சொல்ல முடியவில்லை . கணவனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவர்,
சட்டென,
சரவணா புள்ளைய அங்கேயே விட்டுட்டு வந்துட்டேனே . நீ போய் கொஞ்சம் கூட்டிட்டு வந்துடுப்பா .
மூத்த மகன் தானிருந்தும், சரவணனிடம் அவள் உரிமையாக கேட்பது இவனுக்கு சங்கடமாகத்தான் இருந்தது. தான் எதற்காக பயப்படுகிறோம் என்பதே தெரியாமல் பயந்து கொண்டிருந்தான் முத்து.
அவன் கிளம்பிய சிறிது நேரத்தில்,
சித்தி நீங்க எதையுமே சாப்பிடல. இந்த காப்பியாவது குடிங்க என்று காபியுடன் வந்தான்.
இல்லப்பா பரவால்ல. அவருக்கு என்ன ஏதுன்னு தெரிஞ்சாதான் என்னால எதையுமே சாப்பிட முடியும், மெதுவாக கண்ணீரை துடைத்துக் கொண்டார். முத்துவுக்கு என்ன சொல்வது என்பதே தெரியவில்லை. அவரிடம் அவனால் அன்னையை காண முடியவில்லை. இருந்தாலும் அப்பாவின் மனைவியாக பார்க்க முடிந்தது. அவர் மீது எந்த தவறும் இல்லை என்பதை பெரியவன் ஆனதும் புரிந்து கொள்ள முடிந்தது. தான் சகோதரன் இருந்தும் யாரும் இல்லாமல் வளர்ந்த தம்பியை பார்க்கும்போதுதான் சில சமயங்களில் சங்கடமாக இருக்கும்.இருந்தாலும் அவன் ஆச்சியை சங்கடபடுத்த விரும்பவில்லை. அதனால் தன் மன வருத்தத்தை தன்னுள்ளே மூடிக் கொண்டான்.
சற்று நேரத்தில்,
இங்க ஒக்கார கூட இடமில்லை. நீங்க வீடு போங்க ஆச்சி, நா எதுன்னாலும் போன் பண்ணறேன். இந்தாங்க என்னோடது,என்று தனது போனை அவளிடம் தந்தான்.
சரி, நான் வேணா ராவுக்கு சாப்பாடு கொண்டாறேன் என்று கிளம்பி விட்டார். அவருக்கு மருமகன் மீது எந்த பிடிப்பும் இல்லை என்றாலும் மனதுக்கு கேட்கவில்லை.
வீடு சென்றவர் அடுத்த சில மணி நேரங்களில் திருப்பி வந்தார், சாப்பாட்டு கூடையுடன்.
ஆனால் யாருமே சாப்பிடும் மூடில்தான் இல்லை .
சரவணன்தான் , முத்து நம்ம டாக்டருக்கு சொல்லலாமா ?
எதுக்குடா ?
இல்லடா ,அவங்க வந்து பார்த்தா சரியா இருக்குன்னு தோணுது, சொல்லிக் கொண்டே சத்யாவுக்கு அழைத்தான்.
முதல் ரிங்கிலேயே அவள் எடுத்து விட்டாள் .
ஏண்டா நாந்தான் அவளுக்கு சொல்ல வேண்டான்னு சொல்லறேன், நீ பாட்டுலும் அவளுக்கு போன போட்டா என்னடா அர்த்தம் என்று திட்டிக் கொண்டே காலை கட் செய்தான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் வந்து நின்றாள் கௌசிக்குடன் சத்யா.
முத்து எதிர்பார்த்தபடியே.
மீண்டும் வருவாள் தேவதை.................