Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

என்னை வதைத்திடும் வதனமே (பாகம் 18)
மிகவும் அழகான பதிவு. அச்சோ மித்ரனுக்கும் ஸ்ரீக்கும் நடுவுல எவ்ளோ அழகான ரொமான்ஸ் இருக்கு. யம்மாடியோவ் சரியான கேடி தான் போலீஸ் நீங்க😁😜 எல்லாம் சரி தான். ஆனாலும் இன்னும் மித்ரன் ஸ்ரீ கல்யாண விஷயம் வெளிய சொல்லாம இருக்குறது தான் நல்லது இல்லையோனு தோணுது. அதனால் எதுவும் பிரச்சனை வராம இருந்தா சரி தான். சீக்கிரம் கல்யாண விஷயம் அப்புறம் பிளாஸ் பேக் எல்லாத்தையும் சொல்லிடுங்க HB. செம பதிவு ஹே லெவல் வாழ்த்துக்கள்.☺️👍💐💐💐❤️❤️❤️
 
என்னை வதைத்திடும் வதனமே (பாகம் 19)
சூப்பர் பதிவு HB. ஆனாலும் சின்ன பதிவு தான் போல😜😁 அட கடவுளே! மித்ரனும் ஸ்ரீயும் ஒன்னு சேர்த்துட்டாங்க இனி எந்த பிரச்சனையும் இல்லனு நினச்சா அதுக்குள்ள விரிசல் ஆரம்பிக்குது. அவன் எவ்ளோ அன்பா இருககான் ஆனா இப்போ போய் இப்படி யோசிக்குறியே ஸ்ரீ. அட என்னம்மா நீ, இப்புடி பண்றியே மா. அது சரி கல்யாணமான விஷயமே வெளிய தெரியாது அதுக்குள்ள எவனோ மோப்பம் புடிச்சு மிரட்டுர அளவுக்கு போய்டானே. யாரா இருப்பான் அவன்?🤔🤔🤔 அட HB எல்லா பதிவுலையும் ஒரு ஆர்வம் இருக்கும் ஏதாவது டிவிஸ்ட அ சொல்லிவீங்கனு ஆனா இருக்க இருக்க இடியாப்ப சிக்கல் மாதிரி போய்ட்டே இருக்கு சீக்கிரம் ரகசியத்த எல்லா உடைச்சிடுங்க HB please.😁😜😜😜 மொத்தத்துல செம பதிவு☺️👍💐💐💐❤️❤️❤️
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 20, 21& 22)
அடடே விறுவிறுப்பான அருமையான பதிவு. அட யாருடா இவன் புதுசு புதுசா நம்பர் வாங்கி மிரட்டிக்கிட்டு ஏன் அவனுக்கு இவ்ளோ காண்டு இப்புடி பண்ணிட்டு இருக்கான்? சரியான லூசா இருப்பான் போல.... செம ஸ்ரீ கன்சீவ் ஆ இருக்காளா?😜 அடேய் பிடிக்கல பிடிக்கலனு இப்படி பண்ணிட்டியே மித்ரன் சார். எப்படியோ ஹாப்பி தான். ஆனா பாவம் திவி தான் எப்படி சமாளிப்பாளோ? யாருடா இந்த ராணவ் சரியான அரை வேக்காடா இருப்பான் போல அட பாவி அவ மாசமா இருக்கானு தெரிஞ்சு எவனோ ஒருத்தன கொலை பண்ணிட்டியே டா 😳😳😳 பைத்தியம் 😡 இந்த மதன் வேற என்ன நம்பிக்கை துரோகி னு சொல்லிட்டான். அட லூசு அவ விரும்பின ஆளு தான மித்ரன் அப்புறம் என்னவாம் இவனுக்கு? ஐயோ சுதா இந்த கிறுக்கன பத்தி தெரியாம இப்படி பின்னாடி வந்து மாட்டிக் கிட்டியே மா ஒடீடு இல்ல எதாவது பண்ணிட போறான். என்னடா இது ஆளு ஆளுக்கு இப்படி மெண்டல் மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க?🤔🤔🤔 நினச்சேன் எல்லாருக்கும் ஏற்கனவே தொடர்பு இருக்கும்னு இப்போ கன்ஃபார்ம் ஆயிடுச்சு.

ஐயயோ போச்சு திவ்யா வை கடத்திட்டாங்களா? பாவம் மித்ரன் எவ்ளோ பெரிய மகிழ்ச்சியான விஷயம் ஆனா எவனோ சொல்லி கேட்க வேண்டியதா போச்சே😞 டேய் ராணவ் லூசு நீ பார்த்த வேலை தானா இது? எப்படி டா இப்படி மனசாட்சி இல்லாம நடந்துக்குற பைத்தியமே😡 கடத்தல் பண்ணிட்டு ஏட்டிக்கு போட்டியா பேசிட்டு இருந்த இப்ப மித்ரன் கண்டு பிடிச்சதும் என்னமா நடுங்கிட்டு இருக்க தேவையா உனக்கு இது? அதோ பாருடா நம்ப தல மித்ரன என்ன ஸ்டைல்லா திமிரு வராருனு இனிமே இருக்குடா ராணவ் நீ செத்தடா மவனே. அடடே என்ன என்ன பண்றாரு நம்ப கமிஷ்னர் சார். இந்த ராணவ் மதனையும் விட்டு வைக்கல போல பாவம். ஸ்ரீ இந்த நேரத்துல கூட ஒரே லவ்ஸ் தான். என்ன கமிஷ்னர் சார் பொதுக்குனு இப்படி பண்ணீட்டிங்களே???😳😳😳😳

மித்ரன் எல்லாருக்கும் இப்படி அதிரடியா பீதியை கிளப்பிட்டீங்களே அங்க பாருங்க ராணவ் கண்ணுல மரண பீதி தெரியுது. ஏம்மா சுட்டி டீவி அங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ என்னடானா இப்போ மித்ரன சைட் அடிச்சிட்டு இருக்கியா பக்கி😤😤😤 இதுல வேற இந்த ராணவ்க்கு காண்டு ஏறுது போல. அடப்பாவி டேய் ராணவ் பேசிட்டு இருக்கும் போதே துப்பாக்கிய எடுக்குற நீ. அடே யப்பா சாமி மித்ரன் நீ திவிய காப்பாத்த வந்தியா இல்லயா? அப்படியே போய் அமைதியா உட்காந்துட்ட ஆனாலும் ஏதோ ஒரு காரணம் இருக்க மாதிரி தான் தெரியுது. பார்க்கலாம் பெரிய ஏதும் இருக்குமோ🤔🤔🤔 ஏது திவ்யா மதனோட மச்சினிச்சியா?😳😤 ஆக மிக்ரனுக்கும் இப்போ எல்லா உண்மையும் தெரிந்து போச்சா? 😱 அடேய் பாவி பாவம் டா திவி அவள போட்டு இப்படி கொடுமை படுத்துறியே ராணவ். பாவம் திவி யாரு பக்கம் நிப்பா ரெண்டு பேருமே முக்கியம் தானு சொல்லுறா ஆனா நீ அவ குழந்தைய வச்சு ப்ளாக் மெயில் பண்றியே பக்கி சீ மிருகம் மாதிரி செஞ்சுட்டு இருக்க😡 அடக் கொடுமையே கடைசியா இப்பவும் மிக்ரனுக்கு எதிரா நிக்குறியா ஏன் திவி பாவம் அவன் இன்னும் எவ்ளோ கொடுமை அனுபவிக்கனுமோ😞😞😞
ஏம்மா ரைட்டர் மேடம் ஆக மொத்தம் எல்லாருக்கும் உண்மைய சொல்லிட்டீங்க போல? படிக்குற எங்கள தவிர எல்லாரும், இப்போ மித்ரன் முதல் கொண்டு உண்மைய தெரிஞ்சு கிட்டான். ஆனா எங்கள போட்டு குழப்பறதுலையே இருக்கீங்க. அத எப்படி மித்ரனுக்கு மட்டும் சொன்னீங்க? எங்கள பார்க்க பாவமா இல்ல உங்களுக்கு? மித்ரன் கூட சேர்ந்து கூட்டு சதி பண்ணிட்டீங்களே HB. எப்போ தான் எங்களுக்கு ப்ளாஸ் பேக் சொல்லுவிங்க? சீக்கிரம் செல்றீங்களா? இல்ல சங்கத்துக்கிட்ட கோர்த்து விடவா?😠😠😠😜😜😜👍👍👍👍
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 15).
யம்மாடியோ மிக மிக குழப்பமான பதிவு. ஏற்கனவே 5 வருஷத்துக்கு முன்னாடியே ஸ்ரீக்கு எல்லாரையும் தெரியுமா மித்ரன் உட்பட ? அப்படி என்ன தான் ஆச்சு ஸ்ரீ லைஃப்ல ஆளாளுக்கு இப்புடி முறைக்கிறாங்க? ஏது நிச்சயமா நம்ம மதனுக்கா? அதுவும் வேற ஒரு பெண்ணுக் கூடயா? அது யாரு புது பொண்ணு? அவளுக்கும் ஸ்ரீக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா? அப்போ மதன் ஸ்ரீ க்கு கார்டியன் மாதிரி தானா? ஏப்பா அதான் ஸ்ரீ உன் லவ்வர் இல்லல அப்புறம் எதுக்கு அவள இப்படி முறைக்குற? யம்மா பவித்ரா யாரும் மா நீ??? நீ இந்த தீபக் லாம் வந்த அப்புறம் தான் குழப்பமே. ஆக மொத்தம் ஒன்னு மட்டும் புரியுது இவங்க எல்லாருமே ஏதோ ஒரு விஷயத்துல சம்மந்தபட்டு இருக்காங்க ஆனா அது என்ன விஷயம்னு வெயிட் பண்ணி பார்த்தா மட்டும் தான் புரியும் போல. அது என்னனு சீக்கிரமா சொல்லிட்டுங்க HB. இல்ல மண்டை காஞ்சிடும். மொத்தத்துல இடியாப்ப சிக்கலுனு தான்.🤣😜😜😜 இருந்தாலும் அருமையான பதிவு வாழ்த்துக்கள். 😊👍🤣💐💐💐💐💐
Thank u so much da.. ipo than inga comt parten .. sry for the late rpl😊
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 16).
ஏம்மா ஸ்ரீ நீ அவ்ளோ பெரிய டான்ஸ் ஷோ ல வின் பண்ணி இருக்க, ஆனாலும் அப்ப அப்ப சுட்டி டீவினு நிரூபிச்சிட்டே இருக்கியே உன்ன என்ன தான் பண்றதோ?🤣🤣🤣 ஐய்யோ ஒரே ரொமான்ஸா தான் இருக்கு இந்த பதிவு🤭🤭🤭 போங்க. மித்ரன் சார் என்னது இது புள்ளைய சாப்பிட கூப்பிடு வந்துட்டு இப்படி பண்ணிட்டீயே உனக்கே இது அநியாயமா தெரியல. பாவம் புள்ள உன்ன 5 வருஷத்துக்கு முன்னாடியே லவ் பண்ணதால உன்ன சும்மா விட்டா.... இல்ல அவ்ளோ தான் நீ.😊😜😜😜 ஆமா முதல்ல யாரு இந்த ராணவ் இவனுக்கு ஏன் இப்ப கோபமும், ஆத்திரமும் வருது. அவ்ளோ வா ஆத்மார்த்தமாவா லவ் பண்ணிட்டான் அவன். பார்த்தா அப்புடி தெரியல. ஏதோ பொறாமைல இப்படிலாம் பண்றான். டேய்! ஸ்ரீக்கு மட்டும் ஏதாவது ஆச்சி அவ்ளோ தான் நீ கமிஷ்னர் சார் உன்ன சும்மா விட மாட்டாரு பாத்துக்கோ. மொத்தத்தில் செம பதிவு HB. படிச்சதும் செம வெட்கம் தான் போங்க.☺️ ஆனாலும் டிவிஸ்ட் எல்லாம் சீக்கிரம் சொல்லிட்டா ok. வாழ்த்துக்கள்😊☺️👍💐💐💐
Thank u so much da😍😍
 

New Threads

Top Bottom