Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL நாரிகை - Tamil Novel

Status
Not open for further replies.
பூவை 5

இரவெல்லாம் நடந்ததை நினைத்துக்கொண்டு தூங்காமல் இருந்தவள், அதிகாலை நேரத்தில் அசந்து உறங்க ஆரம்பித்தாள். கண்மணி நன்றாக உறங்கி கொண்டிருப்பதை சிறிது நேரம் நின்று பார்த்த லதா கொண்டு வந்த காபியை டேபிள் மீது வைத்து மூடிவிட்டு மீண்டும் அறையை விட்டு வெளியே வந்தார். காபி டம்ளரை வைத்து மூடும் சத்தம் கேட்டு கண்மணி மெல்ல விழித்து பார்த்தாள், டேபிள் மேல் இருந்த டம்ளரை லேசாக பார்வைவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். தடார் என யாரோ வாசல் கதவை அடிக்கும் சத்தம் கேட்டு வெடுக்கென்று விழிகள் உறக்கத்தை பறித்து கொள்ள சட்டென்று எழுந்தாள். எதிரே அறையின் நிலையை பிடித்துக்கொண்டு லதா பயம் கலந்த கலக்கத்துடன் நின்று கொண்டு இருந்தார். என்ன? என்பது போல் கண்மணி கண்களால் கேட்டாள். லதா சற்று தள்ளி வராண்டவை காட்ட கண்மணியும் எட்டிப்பார்த்தாள். சத்தியேந்திரன் சோபாவில் அமர்ந்து தலையை குனிந்து கீழே எதையோ தேடியவன் போல் உட்கார்ந்து இருந்தான். சத்தம் இல்லாமல் கண்மணி அவன் எதிரே நின்று கொண்டு இருந்தாள். அவள் கால்கள் தெரிய சத்தியேந்திரன் தலையை நிமிர்ந்து அவளை பார்த்தான். அவள் பார்வையில் அவன் மீதான அக்கறை இருந்தது. இத்தனை காலையிலேயே ஏன் வந்தான், கண்கள் எல்லாம் சிவந்து போய் பேய் அறைந்தவன் போல இருக்கிறானே என்று தான் முதலில் அவளுக்கு தோன்றியது. இருவரும் பேசிக்கொள்ளவில்லை இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே. சின்ன சிறு அமைதியை களைக்கும் படியாக லதாவின் காபி டம்ளர் சத்தம் எழுப்பியது. நங்கென்று காபியை டீப்பாயில் வைத்தார் லதா. சத்தியேந்திரன் டம்ளரையும், லதாவையும் மாறி மாறி பார்த்தார். லதா தலையை குனிந்த படியே மீண்டும் அடுப்பங்கரைக்கு பயணப்பட்டார்.

“நான் நைட்டெல்லாம் தூங்கவே இல்ல..“ அவனே ஆரம்பித்தான். கண்மணி சிறிது நேரம் கழிந்து “ஏன்?“ என்றாள்.

“பிளீஸ்…நம்ம டிவோர்ஸ் பண்ணிக்கலாம்.“ அவன் சுற்றி வளைத்து இதற்கு தான் வருவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அடுத்த கணமே “முடியாது“, என்ற பதிலை பட்டென்று அடித்தாள்.

சத்தியேந்திரன் மிகவும் அமைதியாக இருந்தவன், மெல்ல மெல்ல நிதானத்தை இழந்தவன் போல கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. சோபாவின் கைப்பிடியை கைகளால் திருகு திருகென்று திருவினான். சட்டென்று எழுந்தான், அவளை பார்த்தான். அவனின் கண்கள் முழுவதும் கோபமே தழும்பியது. கண்மணியின் கண்களிலோ காதலும் சிறு கண்ணீரும் தழும்பி நின்றது.

“நீ டிவோர்ஸ் கொடுக்கவே வேண்டாம்.. வேண்டாம்..“ சொன்னதையே சொன்னான். லதாவிற்கு கண்ணீர் பொங்கி கொண்டு வந்தது. தன் மாப்பிளையின் நடவடிக்கைகளால் தன் பெண்ணின் வாழ்க்கை என்னாகுமோ என்ற பயத்தை அவளுக்கு விதைத்து விழிநீராய் வெளியே வந்தது அதை தன் முந்தானையில் துடைத்துக் கொண்டே நின்றார்.

“நான் செத்துடுறேன்..நான் செத்துடுறேன்.. அப்போ என்ன பண்ணுவ..உன்னாலயே நான் சாகபோறண்டி சீக்கிரம் நான் செத்துடுவேன். நீ என்ன செய்வ?“

என்ன பேசுகிறான் என்றே புரியாமல் பேசினான். கண்மணி சத்தியேந்திரனை உற்று பார்த்தாள்.
அவன் சொன்ன வார்த்தைக்கு அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. அவள் சிறிதும் தாமதிக்காமல் உடனே அவனுக்கான பதிலை கொடுத்தாள் “நானும் செத்துடுவேன்..“ அவளின் இந்த பதிலை சிறிதும் எதிர்பார்க்காதவன் கண்மணியை ஒரு முறை பார்த்தான். இப்போது அவன் கண்களில் இருந்த கோபம் எங்கோ தெரியவில்லை ஆனால் வராத கோபத்தை வரவழைத்து எதிரே இருந்த டீப்பாயை தூக்கி ஒரே அடி காபி டம்ளர் பறந்தது. லதா சத்தம் கேட்டு பதற்றமாக வெளியே வந்து பார்த்தார். சத்தியேந்திரன், லதாவையும், கண்மணியையும் மாறி மாறி பார்த்துவிட்டு வேகவேகமாக வீட்டைவிட்டு வெளியே வந்தான். கண்மணி தன் அம்மாவை பார்த்தாள் முகம் வாடிபோய் இருந்தது எதுவும் பேசவில்லை தன் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள்.

************

சத்தியேந்திரன் வீட்டு வாசலில் கால் கடுக்க காத்துக்கொண்டு நின்றாள் மெர்ஸி. நீண்ட நேரமாக நின்று கொண்டு இருக்கிறாள். தன் மொபைலை எடுத்து சத்தியேந்திரன் நம்பரை டயல் செய்து டயல் செய்து பார்க்கிறாள். பலன் இல்லை, கைபேசியை வைத்துவிட்டு வீட்டு வாசலிலேயே இங்கும் அங்கும் நடந்தாள். நீண்ட நேரம் கழித்து கார் வாசலில் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வாசலை எட்டி பார்த்தாள் சத்தியேந்திரன் காரை வாசலிலேயே நிறுத்திவிட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்தான். மெர்ஸி அவனை வித்தியாசமாக பார்த்தாள், “எங்க சார் போனிங்க நான் ரொம்ப நேரமா காத்திருக்கேன்.“ என்றாள்.
அவன் எதுவுமே பேசவில்லை பேசமால் கதவை திறந்தான். அவள் விடுவது போல இல்லை, மீண்டும் உள்ளே வந்து அதே கேள்வியை கேட்டாள். இப்போது அவனால் அந்த கேள்வியை கடந்து செல்ல முடியவில்லை. “கண்மணிய பார்க்கபோனேன்.“ எங்கயோ பார்த்து பதிலை சொன்னான்.

“மேடமையா?? இப்படியேவா?? உங்க டிரஸ்ச பாருங்க“ என்றாள். அவன் இப்போது தான் கவனித்தான் உள் பணியனும், சார்ட்சும் மட்டுமே அணிந்து இருந்தான். தலையை தடவிக்கொண்டு ஏதோ யோசனையோடு விறுவிறுவென்று தன் அறையை நோக்கி சென்றான். கதவை வேகமாக மூடிவிட்டு கட்டிலில் சரிந்தான் விழிகளை மூடிக்கொண்டான். சிறிது நேரம் தான் கழிந்தது. “சா…ர்…“ என்ற மெர்ஸியின் அலறல் வீட்டையே அதிர செய்தது. சத்தியேந்திரன் பதறிபோய் எழுந்தான். கதவை திறந்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான் “மெர்ஸி..“என்று கத்தினான். பக்கத்து அறையில் இருந்து “சார், சீக்கிரம் வாங்க“என்று மீண்டும் அலறினாள். சத்தியேந்திரன் சத்தம் வந்த பக்கம் போனான். பாக்யவதி அறையை பார்த்தான், தூக்கிவாரி போட்டது. பாக்யவதி கட்டிலில் இருந்து கீழே விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். சத்தியேந்திரன் திடீரென்று அறைக்குள்ளயே இங்கும் அங்கும் நடக்க ஆரம்பித்தான். இடம் வலம் என்று நடந்து கொண்டே இருந்தான். மெர்ஸிக்கு அவனின் நடவடிக்கைகள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருந்தது. “சார்..“ என்று கத்தி கத்தி பார்த்தாள், அவன் காதில் எதுவும் ஏறவில்லை. மெர்ஸியே எழுந்து வந்து ஹாலில் வைத்து இருந்த தன் கைபையில் இருந்து மொபைலை எடுத்து அம்புலன்ஸ்சை அழைத்தாள். மீண்டும் அறைக்கு வந்து பாக்யவதி முகத்தில் தண்ணீரை அடித்தாள், எந்த பலனும் இல்லை அசைவற்று கிடந்தார். சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ் வர பாக்யவதியை ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். மெர்ஸி ஆம்புலன்ஸில் ஏறும் முன் திரும்பி சத்தியேந்திரனை பார்த்தாள், அவன் எங்கோ பார்த்து கொண்டு இருந்தான். அவனை அழைப்பதா, இல்லை செல்வதா சிறிது தயங்கினாள். என்ன நினைத்தாலோ அவனை அழைக்காமலே ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டாள். ஆம்புலன்ஸ் காற்றை பிய்த்துக்கொண்டு பறந்தது.​

***********

மருத்துவமனை வளாகத்தில் மெர்ஸி யாருக்காகவோ காத்துக்கொண்டு நின்றாள். ஆட்டோ ஒன்று அவளை நெருங்கி வந்து நின்றது, கண்மணி ஆட்டோவில் இருந்து இறங்கினாள். பணத்தை கொடுத்துவிட்டு ஆட்டோவை அனுப்பி வைத்தாள். பதற்றமாக மெர்ஸியை நெருங்கினாள்.
“மெர்ஸி..“
“மேடம்..“ மெர்ஸி கண்கலங்கினாள். கண்மணிக்கு இன்னும் பயம் அதிகமானது. போனை அடித்து உடனே ஹாஸ்பிட்டலுக்கு வாங்க என்று அழைத்தாளே, ஆனால் காரணம் சொல்லவே இல்லையே, இங்கு அழுதுக்கொண்டு நிற்கிறாளே, சத்தியேந்திரனுக்கு எதுவுமாக இருக்குமோ, சற்று நேரத்திற்குள் கண்மணியின் மனம் எதை எதையோ நினைத்து பயந்தது. பயத்தை மறைத்து “என்ன சொல்லு“, என்றாள்.
“மேடம், அம்மா..“ சொன்னதையோ சொல்லிக்கொண்டு கண்மணி கைகளை பிடித்து அழைத்து மருத்துவமனை உள்ளே சென்றாள். பாக்யவதியை ஐசியூக்கு வெளியே ஸ்டெச்சரில் வைத்து இருந்தனர். நெடுநெடுவென ஒருவன் காவலுக்கு நிற்பது போல அருகே நின்று கொண்டு இருந்தான். கண்மணி தயங்கி தயங்கி அருகே சென்றாள். மெர்ஸி தள்ளியே நின்று கொண்டாள் கண்மணி திரும்பி மெர்ஸியை பார்த்தாள் அவள் கண்கலங்கி கொண்டு இருந்தாள். கண்மணி பாக்யவதி அருகே சென்று அவர் முகத்தை பார்த்தாள். “நீங்க தான் அவங்க டாட்டரின்லாவா“ என்ற குரல் அவளின் முதுகுக்கு பின்னால் ஒலிக்க திரும்பி பார்த்தாள். டாக்டர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். “ஆமாம் டாக்டர்..“ அவள் குரல் மிகவும் பதற்றமாக இருந்தது.
“ஸாரி மேடம் உங்க மாமியார இங்க கொண்டு வரும் போதே உயிர் இல்ல.“ டாக்டர் சொன்னதுமே கண்மணிக்கு விழிகள் இருண்டு வந்தது. மேலும் அவரே சொன்னார், "உடம்பு சரியில்லதவங்கள இவ்வளவு அலட்சியமா கவனிச்சிருக்கிங்க. மேபி அவங்க இறந்து பத்து மணிநேரத்துக்கு மேல இருக்கும் போல முகமெல்லாம் கருத்து போய் இருக்கு. என்ன மேடம் பண்ணிக்கிட்டு இருந்திங்க கவனிக்காம?“

கண்மணியால் எந்த பதிலும் சொல்லவே முடியவில்லை. “சார்..சார்.. நான்..“என்று தயங்கி தயங்கி பதிலை சொன்னாள். “எடுத்துட்டு போங்க..“என்று டாக்டர் அவ்விடம் விட்டு சென்றார். கண்மணி பாக்யவதி அருகே சென்றாள் அடக்கி வைத்து இருந்த கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. “அத்த“ என்று கட்டிபிடித்து அழுதாள்.

“மேடம் டைம் ஆகிடுச்சி“ என்றான் நெட்டையாக நின்று கொண்டு இருந்த வாலிபன். மெர்ஸி ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். பாக்யவதியை மீண்டும் ஆம்புலன்ஸில் கொண்டு வந்து ஏற்றினார்கள்.

“எதும் அமவுண்டு செட்டில் பண்ணனுமா மெர்ஸி..“ கண்களை துடைத்துக்கொண்டு கேட்டாள் கண்மணி.

“இல்ல மேடம் ஆம்புலன்ஸ்கு மட்டும் தான் கொடுக்கனும்.“ இருவரும் அந்த ஆம்புலன்ஸிலேயே ஏறிக்கொண்டனர். கண்மணி வழிநெடுக அவளுக்கும், பாக்யவதிக்கும் இடையே இருந்த சில நினைவுகளை நினைத்து கண்கலங்கி கொண்டு வந்தாள். அவர் உடல்நலம் இல்லாமல் படுத்ததில் இருந்து பிள்ளையை போல பார்த்துக்கொண்டவள் கண்மணி தான். இந்த சிறிது காலமாக தான் கவனிக்காமல் போனாள், அதுவும் சத்தியேந்திரனால் இப்போது உயிரே போய் விட்டது. மெர்ஸியிடம் வந்ததுமே சத்தியேந்திரனை கேட்டு இருப்பாள். அவள் அவன் நடந்துக்கொண்டதை சொன்னதும் அவனை பற்றிய பயம் வேறு அதிகமாக கண்மணியை பற்றிக்கொண்டது. அந்த யோசனையும் ஒரு புறம் அவளுக்கு மண்டை குடைச்சலை கொடுத்துக்கொண்டு இருந்தது. ஆம்புலன்ஸ் சத்தியேந்திரன் காம்பவுண்டுக்குள் நுழைந்து இருந்தது. ஏற்கனவே கண்மணி மருத்துவமனையில் இருந்தபடியே லதாவிற்கு போன் செய்து ஏற்பாடுகளை யாரையேனும் வைத்து செய்ய சொல்லி இருந்தாள். லதாவும் சில உறவுகாரர்களை வைத்து எல்லாம் செய்து கொண்டு இருந்தார். பந்தல் போடப்பட்டு கொண்டு இருந்தது. ஆம்புலன்ஸ் வந்ததும் சிலர் வந்து கூடிக்கொண்டு அழதொடங்கினார்கள்.

பாக்யவதியின் உடல் நடுகூடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. லதா அருகே அமர்ந்து இருந்தார். கண்மணி தலைமாட்டிலேயே உட்கார்ந்து இருந்தாள். சத்தியேந்திரன் தலை வெளியே தெரியவே இல்லை. ஆண்களும், பெண்களும் வந்த வண்ணமாகவும் மாலைகள் விழுந்த வண்ணமாகவும் இருந்தது. வந்த ஆண்கள் சத்தியேந்திரனை கேட்டுகொண்டு இருந்தனர். கண்மணி உடம்பு சரியில்லை என்று சொல்லி சமாளித்தாள். சிறிது நேரம் கழித்து எழுந்து சத்தியேந்திரன் அறைக்கு சென்றாள். சத்தியேந்திரன் பித்துபிடித்தவன் போல உட்கார்ந்து கொண்டு இருந்தான். அவன் அருகே சென்று நின்றாள், அவன் சட்டையை பிடித்து மேலே எழுப்பினாள்.

“என்னதான் உங்க பிரச்சனை சொல்லி தொலைங்களேன்..சொல்லி தொலைங்க உங்கள பெத்தவ செத்து கிடக்குறாங்க, காலம்பூர உங்களுக்காக கஷ்டபட்டவங்க செத்துகிடக்குறாங்க வந்து பாருங்க“ அவனை போட்டு குலுக்கினாள். அத்தனை நேரம் அமைதியாக இருந்தவன் “ஆ..ஆ..“ என்று சத்தம் போட்டு கதறினான்.

“அய்யோஅம்..மா..அய்யோ…கடவுளே“ என்று அழுதான், கண்மணியை கட்டிக்கொண்டான். “எங்க அம்மா..என்ன அநாதையா ஆக்கிட்டாங்களே“ கதறினான். கண்மணி அவனை இறுக்கமாக கட்டி ஆறுதல் சொன்னாள்.

“என்னால இன்னும் எத்தனை பேர் சாகபோறாங்களோ.“ அவன் சொன்னது கண்மணிக்கு தூக்கிவாரி போட்டது.​
 
பூவை 6

பாக்யவதியின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்தது. சத்தியேந்திரன் சிந்தனையற்று அமர்ந்திருந்தான். கண்மணி சத்தியேந்திரனை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்த தாயை தீக்கு கொடுத்து வந்து பேச்சு, மூச்சு அற்று அமர்ந்திருந்தான்.

சத்தியேந்திரனை இப்படி பார்க்க மெர்ஸிக்கு கலக்கமாக இருந்தது, மொட்டை அடித்து ஆள் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. மெர்ஸி மெல்ல எழுந்து வந்து கண்மணி தோள்களில் கைகளை வைத்து ஆறுதல் உரைத்து எழுந்தாள். அவளுக்கு சத்தியேந்திரன் அருகே செல்ல சற்று தயக்கமாக இருந்தது. பெர்னட் சத்தியேந்திரன் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் மெர்ஸி பின்னாலயே சென்றாள்.
மெர்ஸியும், பெர்னட்டும் ஆட்டோவில் வந்துக்கொண்டு இருந்தனர். மெர்ஸி ரொம்பவும் டயர்டாகவும், சோகமாகவும் இருந்தாள். பெர்னட் மெல்ல ஆரம்பித்தான், “மெர்ஸி விடு அவங்களோட ஆயுள் முடிஞ்சிடுச்சி அவங்க கடவுள் கிட்ட போயிட்டாங்க. நல்லா வாழ்ந்துட்டு தானே இறந்துருக்காங்க“.

மெர்ஸி பெர்னட்டை பார்த்து, “நல்ல வாழ்ந்தாங்க சாகும் போதும் நிம்மதியா சாகலையே“ என்றாள்.
ஆட்டோ ஓட்டுபவன் இவர்களுக்கு தெரிந்தவன் போல அவனும் நடுநடுவே, “அம்மாடி மனுசனுக்கு சாவு எப்போ வரும் எதுல வரும்னு யாராலையும் சொல்லவே முடியாது காலம் அப்படி“ என்றான்.

“அண்ணா ஏதாவது கடையில நிறுத்துங்க தண்ணி தாகமா இருக்கு“

“சரிமா..சரிமா..“

“இன்னும் கொஞ்ச தூரம் தானே மெர்ஸி, வீட்டுல போயே சாப்பிடலாமே“ என்றான் பெர்னட்.

“அப்பறம் எனக்கு சாவு தண்ணீயால வந்துட்டுட்டுன்னா“ அவள் சொன்னதும் சின்னதாக கண்டித்தான் பெர்னட். சின்ன பெட்டிகடையில் ஆட்டோவை நிறுத்தினார் டிரைவர். மெர்ஸி இறங்க முற்பட்டாள், அவளை அமர சொல்லிவிட்டு பெர்னட் இறங்கினான். அவன் இறங்கிய பக்கத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் மெர்ஸி, ஆனால் அவன் மெர்ஸியின் முதுகு பக்கமாக நின்று கொண்டு இருந்தான். “ஹோய்..“ அவள் திரும்பி பார்த்தாள்.

ஒரு கையில் கூல்டீரிங்ஸ் பாட்டிலும் இன்னோரு கையில் வாட்டர் பாட்டிலையும் வைத்து நின்று கொண்டு இருந்தான். மெர்ஸி அவன் கைகளையும் பார்த்தாள் அவனையும் பார்த்தாள் அகவாய் மெல்ல மலர்ந்தாள். இரண்டு பாட்டில்களையும் மாத்தி மாத்தி நீட்டி அவளை சீண்டல் செய்தான். அதற்குள் ஆட்டோகாரர் தம்மை போட்டுவிட்டு திரும்பினார். அந்த கம்பிகள் வழியவே உள்ளே நுழைந்தான் கூல்டிரிங்சை அவளுக்கு கொடுத்தான். ஆட்டோவும் நகர தொடங்கியது. பெரிய அப்பார்ட்மென்ட் வாசலில் வந்து நின்றது ஆட்டோ இருவரும் இறங்கினார்கள். ஆட்டோவை கட்செய்துவிட்டு லிப்ட் அருகே வந்தனர்.

லிப்ட்டுக்காக காத்திருந்தனர் ஒரு பக்கம் அவன் மறுபக்கம் இவள் நாக்கை கிண்டலாக சுலட்டினான். லிப்ட் வந்ததும் அதில் யாரோ வயதான பெண்மணி இறங்கியதும் மெர்ஸியின் கன்னங்களை செல்லமாக தட்டி சென்றார்.

லிப்டுக்குள் ஏறியதும் இருவரும் ஒரே நேரத்தில் லிப்ட் பட்டனை அழுத்த செல்ல இருவருக்கும் சிரிப்பு வந்தது. அவனுக்கு சாதகமாக ஒரு பக்கமாக சாய்ந்து நின்று அவளை ரசித்தான். அவனின் போன் ரிங்டோன் பாடல் ஒலித்தது.

“என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே“ ரிசிவ் பட்டனை அழுத்தாமல் வேணும் என்றே ஒலிக்க செய்தான்.

“போதும்..போதும்..“ கையை உயர்த்தி நக்கலாக சொன்னாள். அவன் எங்கோ பார்ப்பது போல் மீண்டும் அவளை பார்த்தான்.

லிப்ட் புலோரை வந்தடைந்தது. இருவரும் லிப்டை விட்டு இறங்கினார்கள் அந்த புலோரில் மொத்தம் மூன்று வீடுகள் அதில் மூன்றாவது வீட்டின் காலிங் பெல்லை பெர்னட் அழுத்தினான். மேரி ஹோம்ஸ் என்ற போர்ட் சின்னதாக இருந்தது. பக்கவாட்டில் நின்றபடியே மெர்ஸி பெர்னட்டை பார்த்துக்கொண்டு இருந்தாள். டர்..கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

“என்னடா இவ்வளவு நேரமா“ கதவை திறக்கும் போதே கேள்விகளோடு வெளியே வந்தார் அந்த பெண்மணி. மெர்ஸி பெர்னட்டை பார்த்தாள். “அம்மா நாங்க என்ன ஊரு சுத்தவா போயிட்டு வரோம். சாவு வீட்டுக்கு போயிட்டு வரோம், போனோம் வந்தோம்னு இருக்க யாரோவா அவரு. மெர்ஸி வேலை பார்க்குற டாக்டர்.“ கடுகடுவென்று பேசினான் பெர்னட்.

“நான் ஒன்னும் சொல்லலடா போ..“ என்று மறைத்தார் அந்த பெண்மணி. இருவரும் உள்ளே சென்றனர். இருவரும் குளித்து முடித்து ரெப்பிரஸ் செய்து கொண்டனர். மெர்ஸி கட்டிலில் அமர்ந்த படியே கால்களை பிடித்து கொண்டு இருந்தாள். பெர்னட் போனை ஆராய்ந்து கொண்டு இருந்தான். “மெர்ஸி என்ன டிபன் செய்ய போற“ ஹாலில் இருந்து குரல் கொடுத்தார் பெர்னட் அம்மா.

“த்தோ வரன்..இட்லி தான் ஊத்தனும்.“ அதற்குள் மறைத்து “தோசை“ என்றான் பெர்னட். கால்களை பார்த்தாள், அவனை பார்த்தாள். அவன் முழு மூச்சாக போனில் டப்ஸ்மாஸ் பார்த்துக்கொண்டு இருந்தான்.

மெல்ல எழுந்து கிட்சனுக்கு வந்தாள். காலையில் சமைத்து போட்டு போன பாத்திரங்கள் எல்லாம் அப்படி அப்படியே கிடந்தது.

“ஏன் இந்த பாத்திரத்த கொஞ்சம் தேய்ச்சி வைக்ககூடாதா..“உரக்க குரல் கொடுத்தாள் மெர்ஸி.

“கால் வலி அதான் நிக்க முடியல“ பதில் வந்தது ஹாலில் இருந்து. டும்..டக்..டுமில் என்று சில சத்தங்களை கொடுத்து பாத்திரங்களை துலக்கி முடித்தாள். ஒற்றை காலில் நின்று தோசையை ஊத்தி சுடசுட டேபிளுக்கு போனது அம்மாவும் பிள்ளையும் நன்றாக சாப்பிட்டு முடித்து தட்டில் கைகளை கழுவினர். தனக்கு தோசை வார்க்க வந்தவள் என்ன நினைத்தாளே அடுப்பை அணைத்துவிட்டு படுக்கைக்கு சென்றாள்.

********

வந்த உறவுகள் எல்லாம் விடைபெற்று கொண்டனர், நண்பர்கள் எல்லாம் களைந்து சென்றனர். லதாவும், கண்மணியும் வீடை துடைத்து சுத்தம் பண்ணிக்கொண்டு இருந்தனர். கண்மணி வீடெல்லாம் துடைத்துவிட்டு ஹாலிற்கு வந்தாள் இத்தனை நேரம் ஹாலில் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்த சத்தியேந்திரனை காணவில்லை. கண்மணிக்கு தூக்கி வாரிப்போட்டது. சுற்றி முற்றியும் பார்த்தாள், பாக்யவதி புகைப்படத்தின் கீழே நின்று எதையோ யோசித்த வண்ணம் இருந்தான். கண்மணி தோளில் ஆறுதலாக கையை வைத்தாள்.

“சாப்பிட வாங்க?“, கண்மணி அழைத்தாள். அவளுக்கு ஏதும் பதில் சொல்லாமல் விடுக்கென்று தன் அறைக்கு சென்றான். லதா சோர்வாக அமர்ந்திருந்தாள், கண்மணி சாப்பாடு எடுத்து வந்து கொடுத்தாள். அதே நேரம் சத்தியேந்திரனின் அறைகதவு படுவேகமாக அதீத சத்தத்துடன் பட்டென்று திறந்தது. லதா ஒரு வாய் சாப்பாட்டை எடுத்து வைக்க நினைத்த போது அவன் தந்த சத்தத்தில் சாப்பாடு சிதறியது.

“கண்மணி கொஞ்சம் வா..“ என்று அழைத்தான் சத்தியேந்திரன்.

அவனை பார்க்கவே லதாவிற்கு ஏனோ கொஞ்சம் பயமாக இருந்தது. தன் உறவுகளை யாரையாவது துணைக்கு வைத்திருக்களாமே, காஞ்சிபுரம் சித்தப்பா கூட இருக்கேன்னு சொன்னாரே இவ தான் வேண்டாம்னு சொன்ன? லதாவின் மனம் எதை எதையோ கணக்கு போட்டது. கண்மணி எழுந்தாள், லதா கைகளை பிடித்து தடுத்தார். கைகளை தட்டி கொடுத்து சத்தியேந்திரன் அறையை நோக்கி சென்றாள். அறை வாசலில் நின்றவள் சற்று திரும்பி “அம்மா சாப்பிட்டு படுங்க“ என்றாள்.

சத்தியேந்திரன் கட்டிலில் அமர்ந்திருந்தான். கண்மணி எதிரே நின்றாள். தலையை குனிந்து அமர்ந்திருந்தவன் அவளை கண்டதும் தலையை நிமிர்ந்தான்.

“நீ வீட்டுக்கு போகலயா?“ என்றான் சத்தியேந்திரன். கண்மணி சற்று அமைதியாக இருந்துவிட்டு அவள் கேட்டாள் “ஊஹீம்..நான் போகவா“.

சத்தியேந்திரன் கண்கள் ஆழமாக அவளை நோக்கியவாறே “வேண்டாமே“ சிறுபிள்ளை கெஞ்சிவது போல கைகளை கூப்பி இருந்தான். கைகளை இறக்கிவிட்டு அருகே சென்று அமர்ந்தாள். அவன் தலையோடு இவள் தலையை மோதினாள். “உன்ன விட்டு போகனும்னா என் உயிர் போனா தான் உண்டு சத்யா. உங்க பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லுங்க நான் சரி பண்ணுறேன்.“ என்றாள். பட்டென்று தலையை விலக்கி கொண்டான். திரு திருவென்று விழித்தான்.

“எனக்கு தூக்கம் வருது“ நகர்ந்து சென்று படுத்துக்கொண்டான் அவளும் நகர்ந்து சென்று அவன் தலை அருகே அமர்ந்து தலையை தடவிக்கொடுத்தாள். சத்தியேந்திரன், கண்மணியின் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டான்.

சத்தியேந்திரன் சிறிது நேரத்தில் அசந்து உறங்கி போனான். கண்மணி அந்த அறையை விரித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் ஏதோ யோசனை அவளுக்குள். முதல் முறை இந்த அறை தானே உன்னையும், என்னையும் வாழ்க்கை பகுதிக்கு பயணம் செய்ய வைத்தது. சில நினைவுகள் அவளுக்கு புன்னகை வரவைத்தது சத்தியேந்திரனை பார்த்தாள். திருமணம் முடிந்த அன்று இரவு சத்தியேந்திரன் கட்டிலில் அமர்ந்திருந்தான்.
கண்மணி அருகே அமர்ந்திருந்தாள்.

“என்ன உங்க அம்மா ஒன்னுமே சொல்லவே இல்ல..“ என்றாள்.

“எத பத்தி?“

“நான் உங்க பேசண்டுக்குற பத்தி“

“ஏய், நீ என்ன பல வருஷமா பைத்தியமா இருந்தியா என் பேசண்ட் என் பேசண்ட்டுன்னு சொல்லிட்டு இருக்க.“ என்று சிரித்தான். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது லாப்டாப்பில் சூம் காலிங் அழைப்பு வந்தது. இந்த நேரத்தில் கால் வந்ததும் யாராக இருக்கும் என்ற யோசனை கண்மணிக்கு எழும்ப. அந்த சத்தம் கண்மணியை திடுக்கிட செய்தது.​
 
பூவை 7

யார் என்பது போல் ஆவலாய் லாப்டாப்பை எட்டிப்பார்த்தபடியே “யாரு இந்த டைம்ல?“ என சத்தியேந்திரனிடம் கேட்டாள். சத்தியேந்திரன் கால் அட்டண்ட் செய்யவில்லை, “ஸாரி உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் மறந்துட்டேன். நான் எம்.எஸ் இன் பாஸிட்டிவ் சைக்காலஜி, லைப் யூனிவர்சிட்டி அட்லாண்டால பண்ண அப்லே பண்ணிருக்கேன். கிளாசஸ் ஆன்லைன்லையே பாத்துக்கலாம்னு சொல்லிருக்காங்க. வீக்லி டுவைஸ் அப்பறம் இந்த இயர் என்டுல ஒன்மந்த் நான் அட்லாண்டா போற மாதிரியும் இருக்கும்.“கண்மணிக்கு அவன் சொல்வது எதுவுமே புரியவே இல்லை எந்த நேரத்தில் என்னத்த உளறுகிறான் என்று எண்ணியபடியே “ஓ..ஏன் இங்கயெல்லாம் காலேஜ் இல்லையா?“

“இருக்கு? நான் எதிர்பார்க்குறது வேற.“

“ஊஹீம்..“

“டு ஹவர்ஸ் கிளாஸ் இருக்கும். நீ தூங்கு அப்படி இல்லனா அதோ செல்ப்ல நிறையா சைக்காலஜிகள் புக்ஸ் இருக்கு எடுத்துபடி“

“நானுமா..சரி..“ இழுத்து கேட்டால். அவன் கட்டிலை விட்டு எழுந்து லேப்டாப்பை தூக்கி கொண்டு தனிஇடம் புகுந்தான். வாழ்க்கை தொடங்க வேண்டிய காதல் இரவில் கணினியோடு போராடிக்கொண்டு இருக்கிறானே என்று எண்ணியவள் கட்டிலில் கிடந்த மலர்களை கைகளால் குவித்து சலித்து விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்படி திரும்பி அமர்ந்தாள், இப்படி திரும்பி அமர்ந்தாள், படுத்து பார்த்தாள், நடந்து பார்த்தாள் உறக்கமும் வரவில்லை எழுந்து அவன் அருகே சென்றாள். சத்தியேந்திரன் காதுகளுக்கு ஹெட்போனை பொருத்திக்கொண்டு ஆழ்சிந்தனையோடு கவனித்துக் கொண்டு இருந்தான். இவள் நிற்பதை பார்த்து கைகளை உயர்த்தி “என்ன?“ என்று ஜாடை காட்டினான்.

“நோட்ஸ் எடுக்க நோட்டு கிடைக்குமான்னு பார்த்தேன்.“
சொல்லிவிட்டு மீண்டும் கட்டிலுக்கு சென்று அமர்ந்துக்கொண்டாள். தட்டில் இருந்த பழங்களை பார்த்தாள். திராட்சையை எடுத்து சுவைக்க அவை புளித்ததும் உதடுகளை சுருக்கி உச்சிகொட்டினாள். அவள் செய்யும் செய்கைகளை அவன் கவனிக்காமல் இல்லை.

நேரம் மலரென உதிர்ந்துக்கொண்டு இருந்தது. ஒருவழியாக அவன் லேப்டாப்பை மூடிவைத்தான். கண்மணி உறங்கிவிட்டாள் என்று அமர்ந்த இடத்தில் இருந்தே எட்டி பார்க்க உறங்கிகொண்டு இருந்தாள். அயர்ந்து உறங்குகிறாள் எந்த தொந்தரவும் செய்துவிடகூடாது என்பவன் போல கவனமாக எழுந்தான் மணியை பார்த்தான் இரண்டாகி போனது. அவள் அருகே சென்று சத்தம் இல்லாமல் படுத்துக்கொண்டான்.

“என்ன உங்க பள்ளிக்கூடத்துல பெல் அடிச்சிட்டாங்களா?“ என்றாள் திரும்பி பார்க்காமலே.

“நீ தூங்கலயா?“

“புது இடம்ல அதான் தூக்கமே வரல“

“அப்படியா சரி ஒரு கேம் விளையாடலாமா?“

“கேமா? இந்த நேரத்துலயா பேபெல்லாம் வாக்கிங் போற நேரம் இது?“ அவள் திரும்ப முனைந்தாள்.

“ஏய், நீ அப்படியே படு கேம்மே உன் முதுகுல தான்.“ வெண்பளிங்கு சிலையோ என்று சில நொடி தோன்றியது அவன் மனதில். எழுதுகோலாய் அவன் விரலை கையேடாய் அவள் முதுகை எண்ணிவிட்டானோ என்னவோ. அவன் விரல் பட்ட நொடி அவள் உயிர் தொண்டைக்குழிக்குள் இருந்து அடிவயிற்றில் சென்று பிரள ஆரம்பித்தது. நாணங்கள் அவளை பிடிங்கி திண்றது. ஏ.சி அறையிலும் அவள் உடல் ‘குப்‘ என்று வியர்த்தது. நா வரண்டு பிரண்டது “எ..என்ன கேம்.“ என்று திணறினாள்.

“நான் சில வேர்ட்ஸ் எழுதுறேன் நீ என்னன்னு சரியா சொல்லனும். நீ ஒரு வேளை தப்பா சொன்னா நான் என்ன சொல்றனோ அத நீ செய்யனும்.“ சரி என்பது போல் அசைந்து கொடுத்தாள் வார்த்தைகள் மௌனமாகிவிட்டது. அவன் எழுத தொடங்கினான். அவள் ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி வாக்கியம் அமைத்தாள்.

“ல.ஒ.வி.இ…லவ்“

“குட், இத சொல்லு?“

“கே.ஐ.எஸ்.எஸ்..கிஸ்“

“வாவ்..சூப்பர். பைனல் இத சொல்லு“

“எஸ்.இ.“ அவள் கடைசி வார்த்தையை சொல்லு முன் நாக்கை கடித்து சொல்லாமலே நிறுத்தினாள். “ஊம்..சொல்லு?“ அவள் சொல்லவே இல்லை கைகளால் கண்களை மூடிக்கொண்டாள். “நீ இப்போ அவுட்டாக போற“

“கேர்ல்.“

“ஏய் அத மீண் பண்ணி நான் கேட்கவே இல்லையே நீ அவுட்“ அவள் தோளை பிடித்து தன் பக்கமாக திருப்பி படுக்க வைத்தான். கண்கொண்டு அவனை பார்க்கவே இல்லை எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தாள். “ஒரு பாட்டு நியாபகம் வருது பாடவா“

“பாடுவிங்களா?“

“பாத் ரூம் சிங்கர்..ஹா..ஹா..சரி நான் பாடுறேன்.“

“வரவா வந்து தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா
அவசரம் கூடாது அனுமதி பெறும் வரையில்
பொதுவா நா பெண்ணா நீ சொன்ன படி கேட்கும் மாது
இது போன்ற விசயத்தில் உன் பேச்சி உதவாது“

அவன் அடுத்த வரி பாடுவதற்குள் விரல்களால் வாயை மூடினாள். விரலை மெல்ல பிரித்துவிட்டான். “ஏன் பாட்டு நல்லாயில்லையா இல்ல நான் பாடுறது நல்லா இல்லையா?“

“ரெண்டும் நல்லாயிருக்கு ஆனா??“ இப்போது அவன் கண்களை இவளின் கண்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. விளக்கினை காற்று அணைப்பதை எரியும் தீபம் அறியுமோ காற்றின் வேகம் அறியாமலே காற்று தீண்ட அல்லாடும் தீபம் போல அவளும் ஆனாள்.

அவன் விரல்கள் அவளின் தேகம் எங்கும் தீண்டல் செய்து கொண்டே இருந்தது. அவளின் நாணமோ அவனுக்கு தடைப்போட்டு கொண்டே இருந்தது. இடைவெளியில்லா முத்தங்களால் அவளின் மூச்சே திணறிப்போனது. மூச்சு திணறி வேகமாக எழுந்தாள், உடலெங்கும் வியர்த்துக்கொட்டியது. சுகம் சேர்க்கவா இந்த நினைவுகள் அரும்பியது, சுமையை அல்லவா சேர்த்து போகிறது. கனவை களைந்து நிஜஉலகில் நினைவு கொண்டாள். அருகே சத்தியேந்திரனை பார்த்தாள் நன்றாக உறங்கி கொண்டு இருந்தான். டேபிள் மேல் இருந்த தண்ணீரை எடுத்து கடகடவென குடித்தாள். மணியை பார்த்தாள் மூன்றாகியது. அவளுக்கு உடல் ஏதோ செய்தது, உணர்வுகளும் தான். பிரண்டு பார்த்தாள் அறைக்குள் இங்கும் அங்கும் நடந்தாள். உறக்கம் வரவே இல்லை, தலையணையை எடுத்து தரையில் போட்டு படுத்துக்கொண்டாள். உறக்கம் இல்லாமலே இரவை கழித்தாள் பொழுதும் புணர்ந்தது.
இரவின் சாயல் சற்று பூசிய வண்ணம் பகலின் சாயலை சிறிது சிறிதாய் தெளித்துக்கொண்டும் பொழுது புணர்ந்து இருந்தது. காபி கப்புடன் அதிகாலை பொழுதை அடுப்பங்கரை ஜன்னல் வழியே ரசித்துக்கொண்டு இருந்தாள் மெர்ஸி. ஏதோ சின்ன சத்தம் கேட்டது பெர்னட் உறங்கி கொண்டு இருக்கும் அறையை சென்று எட்டி பார்த்தாள் உய்ங்..உய்ங்..என்ற பேனின் சத்தத்தை தாலாட்டு போல கேட்டு ரசித்து காலுக்கு ஒன்று தலைக்கு இரண்டு என்று தலையணையை அடுக்கி உறங்கிகொண்டு இருந்தான். மீண்டும் அடுப்பங்கரை வந்தவள் மலமலவென்று டிபன், மதியம் லஞ்ச் என்று எல்லாம் ரெடி பண்ண ஆரம்பித்தாள். கிழக்கில் சூரியன் நன்றாகவே உதித்து மேலே எழும்ப ஆரம்பித்துவிட்டான். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு குளிக்க பாத்ரூம் போக வெளியே வந்தாள். மாமியர் ஒய்யாரமாக நாற்காளியில் அமர்ந்து காலை செய்திகளை கேட்டு கொண்டு இருந்தார். மீண்டும் அடுப்பங்கரை சென்று காபியை கலக்கி கொண்டு வந்து கையில் திணித்துவிட்டு குளிக்க சென்றாள் பரபரப்போடு குளித்துவிட்டு கண்ணாடி முன் வந்து நின்றாள். இப்போதெல்லாம் சற்று நேரம் நின்று கூட கண்ணாடியை பார்ப்பதில்லையே, கல்யாணத்திற்கு முன் கண்ணாடியே கதியேன்று நிற்பவளிடம் அம்மா சொல்வாள், "உன் அழகு எங்கயும் ஓடி போகாது அந்த கண்ணாடிய பாக்குறத நிறுத்து", என்று இப்போது அதை நினைத்து கொண்டாள். தலையை வாரினாள். பெர்னட் எழுந்து சோம்பல் முறித்தான். “குட்மார்னிங்“ என்றான்.

“உம்..“ என்ற பதில் மட்டுமே வந்தது அவள் பக்கத்தில் இருந்து. “ஏன் காலையிலயே டல்லா இருக்க?“

“ஒன்னும் இல்லையே?“

“ஏய், எழும் போதே இப்படி மூஞ்ச தூக்கி வச்சிக்காதடி எரிச்சலா வருது உனக்கு என்ன தான் பிரச்சனை நான் வேலைக்கு இன்னும் போகாதது தானே.“

மெர்ஸி திரும்பி அவனை பார்த்தாள். அவனிடம் சரிக்கு சமமாக நின்று சண்டை பிடிக்க இப்போது நேரம் இல்லை, சத்தியேந்திரன் வீட்டிற்கு சென்று விட்டு பின் ஹாஸ்பிட்டல் வேறு செல்ல வேண்டும். “காபியா, டீயா..“ என்ற கேள்வியை மட்டும் கேட்டாள். அவன் எதுவும் பதில் சொல்லாமல் எழுந்து ஹாலில் சென்று இன்னொரு நாற்காளியில் அமர்ந்துக்கொண்டான்.

அடுப்பங்கரை சென்று அவனுக்கு டீயை கலந்தாள். “பெர்னட் அத்தை குடிச்ச காபி டம்ளர எடுத்துட்டு வாயேன் பிளீஸ்.“ என்று குரல் கொடுத்தாள். இவன் காபி டம்ளரை எடுக்க போன வண்ணம் அவன் மொபைல் சினுங்கியது. டம்ளரை அப்படியே மறந்து மொபைலை பார்க்க சென்றான். டீயை கலந்து கவுண்டர் டாப்பில் வைத்தாள். கொதித்துக்கொண்டு இருந்த இட்டிலியை இரண்டு, மூன்று துண்டுகளை வயிற்றுக்கு போட்டு கொண்டாள். மதிய லஞ்சை கையில் எடுத்து கொண்டு தன் ரூமிற்கு சென்று ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற போனவளிடம் .“டீ எங்க?“ என்றான். மாமியார் காலடியில் இருந்த காபி டம்ளரை ஒரு பார்வை பார்த்தாள், அவனை ஒரு பார்வை பார்த்தாள். விடுவிடுவென்று லிப்டை நோக்கி நடந்தாள். அந்த காபி டம்ளர் அதே இடத்திலேயே அப்படியே இருந்தது. எப்போதும் போகும் ஆட்டோவை தான் அழைத்தாள் “காலை வணக்கம்மா“ என்றார் ஆட்டோகாரர் சிரித்த முகத்துடன்.

“வணக்கம் அண்ணா“

“எங்க அம்மா எப்போதும் போற வீடு தானே.“

“ஆமாம், ஆனா கொஞ்ச நேரம் தான் நான் போய் பார்த்துட்டு வந்துடுவேன் நீங்க என்ன ஹாஸ்பிட்டல்ல டிராப் பண்ணிடுங்க.“

“சரிம்மா..சரி..“ என்று தன் கவனத்தை ஆட்டோ பக்கம் செலுத்திவிட்டார் டிரைவர். ஊதுபத்தி வாசமும், மல்லிகை வாசமும் ஆட்டோவில் காலையிலேயே மங்களகரமாக இருந்தது. அவளுக்கும் சற்று மன அமைதியை தந்தது. பெர்னட் நடந்துக்கொண்டதை நினைத்துக் கொண்டே வந்தாள். இந்த அரென்ஞ் மேரேஜே இப்படி தான் இருக்குமோ ஒரு வேளை காதலித்து திருமணம் செய்து இருந்தாள் நன்றாக இருந்திருக்குமோ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, என்னென்னவோ சிந்தனைகள் மனம் எங்கிலும் ஓடிக்கொண்டே இருந்தது மெர்ஸிக்கு. சாலைகளில் நெழிந்துக்கொண்டும் ஊர்ந்துக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கும் வாகனங்களை பார்த்தாள். அவள் கண்களால் அதை நம்பவே முடியவில்லை மீண்டும் கண்களை நன்றாக துடைத்துவிட்டு பார்த்தாள்.

“சார்..சார்“ என்று கத்தினாள்.

“என்னாச்சிமா..“ஆட்டோ டிரைவர் பதறினார். திருப்புங்க திருப்புங்கன்னா ஆட்டோவ அதோ ஒருத்தர் ஓடுறார் பாருங்க அவர பாலோ பண்ணுங்க என்றாள். என்ன காரணம் என்று அவளுக்கு விளங்கவே இல்லை எதிரே சத்தியேந்திரன் தலை தெறிக்க ஓடிக்கொண்டு இருந்தான்.​
 
பூவை 8

ஆட்டோவை ஓடிக்கொண்டிருக்கும் சத்தியேந்திரனுக்கு அணைப்போட்டு நிறுத்துவது போல எதிரே கொண்டு நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். சத்தியேந்திரன் சற்று நிற்க மெர்ஸி ஆட்டோவை விட்டு இறங்கினாள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை மெல்ல மெல்ல அவன் அருகே சென்று “சார்..நீங்க இங்க எப்படி?“, என்று சிறு படப்படப்புடன் கேட்டாள். சத்தியேந்திரன் முகம் எல்லாம் வியர்வை பெரும் பதற்றத்துடன் காணப்பட்டான்.

“வீட்டுக்கு போகனும்..“ ஒற்றை பதிலை மட்டுமே உதிர்த்தான். இங்கு நின்று பேசுவதற்கு ஒன்றுமில்லை வீட்டிற்கு சென்றால் தான் எதுவும் புரியும் என்று யோசித்துக்கொண்டே சத்தியேந்திரனை ஆட்டோவில் அமர சொன்னாள் மெர்ஸி. இருவரும் அமர ஆட்டோ டூ..டூ.. என்று தன் வேகத்தை கூட்டி சாலையில் பறந்துக்கொண்டு இருந்தது. வழி நெடுகிலும் இருவரிடையே அமைதி நிலவியது. சத்தியேத்திரன் ஒரே இடத்தை விரிக்க பார்த்துக்கொண்டு இருந்தான். மெர்ஸிக்கு அவனின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மிகவும் விசித்திரம் அடைந்துக்கொண்டே போவது கலக்கத்தை தந்தது. டாக்டர் என்றா பழகினான், ஒரு அண்ணன் போலே அல்லவா பழகினான். என் கஷ்டங்கள் எதனையும் முன்கூட்டியே அறிந்தவன் போல அத்தனை உதவிகள் செய்தானே எத்தனை நல்ல குணம் கொண்டவன் அவனுக்கு ஏன் இப்படி நடந்துக்கொண்டு இருக்கிறது. கிட்ட தட்ட ஐந்து வருடமாக இவருடன் தான் வேலை செய்கிறேன், என் கல்யாணம் கூட இவரால் தானே நடந்தது. எந்த கஷ்டம் வந்தாலும் அது தீரும் வரை நான் உங்களுக்கு துணையாக தான் இருப்பேன். அவள் மனம் எதை எதையோ புலம்பிக்கொண்டே இருந்தது. இறுதியாக சத்தியேந்திரன் காம்பவுண்ட் வாசலில் ஆட்டோ நின்றது. ஆட்டோவை கட் செய்துவிட்டு மெர்ஸியும், சத்தியேந்திரனும் காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே சென்றனர். எதிரே காய்ந்து சருகாகி கொண்ட இருந்த அந்த புற்களை உயிர் பெரும் பொருட்டு தண்ணீரை பிடித்துக்கொண்டு இருந்தார் லதா. இவர்கள் இருவரையும் சேர்த்து பார்த்ததும் பெரும் அதிர்ச்சி “இவரு என்ன போலிஸ்சோட போயிட்டு இந்த பொண்ணோட வராரு.“ மனம் ஏதோ புதிர் போட்டு கொண்டு இருந்தது. லதாவையும் கண்டுகொள்ளவில்லை, மெர்ஸியையும் கண்டுக்கொள்ளவில்லை சத்தியேந்திரன் நேராக வீட்டிற்குள் சென்றான்.

“அம்மா கண்மணி மேடம்..“ இழுத்து பேசி இருக்கிறாளா என்று முதலில் தெரிந்து கொள்ளும் பொருட்டு கேட்டாள். லதாவும் தயக்கத்துடன் உள்ளே இருக்கிறாள் என்றார். கண்மணி கிட்சனின் பொருட்களை எல்லாம் ஒதுங்க வைத்துக்கொண்டு இருந்தாள். அவள் இடப்பக்கம் திரும்பிவிட்டு மீண்டும் வலப்பக்கம் திரும்பும் போது சட்டென்று அருகில் சத்தியேந்திரன் நிற்க தூக்கிவாரி போடவும் கையில் இருந்த பாத்திரங்களை கீழே விட்டாள். அவன் அதைபற்றி பெரிதாக நினைக்கவில்லை, குடத்தில் இருந்த நீரை மொண்டு கடகடவென்று குடித்தான். கண்மணிக்கு ஆச்சரியம் இவன் இங்கு என்ன செய்கிறான் என்ற யோசனை. சத்தியேந்திரன் தன் அறைக்கு சென்றான் கண்மணி பின்னாலயே சென்றாள். கட்டிலில் போய் சரிந்தான். அருகே சென்றவள் அவன் பக்கமாக சற்று முன்னேறி “என்ன செய்யுது உடம்புக்கு“ என நெற்றியில் கைகளை வைத்து பார்த்தாள். அதற்குள் பெட்ரூம் வாசற்படியை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் மெர்ஸி. “மேடம்“ என்று தழுதழுத்த குரலில் அழைத்தாள். யார் அழைப்பது என்று சத்தியேந்திரனை கவனிப்பதை விடுத்து திரும்பி பார்த்தாள் அங்கு மெர்ஸி இருப்பது வேறு வேறு எண்ண ஓட்டங்களை அவளுக்குள் பாய்ச்சியது. பயம் ஒரு பக்கம் பற்றியதும் அந்த பயத்துடனே “மெர்ஸி..“ என்றாள்.

இருவரும் அறைகதவை மூடிவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தனர். லதா கிட்சனில் நின்று வேலை செய்வதாலும் தன் சிந்தனையெல்லாவற்றையும் ஹாலில் பொருத்தி இருவரும் பேசுவது என்னவென்று காதுகளை கூர்தீட்டி கேட்டுக்கொண்டு இருந்தார். “நீ எப்படி இவர் கூட..“ முதலில் தோன்றிய கேள்வியை முன் வைத்தாள் கண்மணி.

“சார் ரோட்டுல ஓடிவந்துக்கிட்டு இருந்தாரு, நான் எதிர்ல ஆட்டோல வந்துகிட்டு இருந்தேன். எனக்கு அவர எதிரே பார்த்ததும் பக்குன்னு ஆகிடுச்சி. எங்க சார் இங்கன்னு கேட்டேன் ஆனா அவரு எந்த பதிலுமே சொல்லல வீட்டுக்கு போகனும்னு மட்டும் தான் சொன்னாரு. என்ன நடந்தது சார் எங்க போனாரு.“ மெர்ஸி நடந்ததை சொல்லி முன் என்ன நடந்தது என்பதிற்கான வினாவையும் கேட்டடாள். கண்மணி இரண்டு மணி நேரத்திற்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்து பார்த்தாள்.

நெடுநேரம் இரவில் உறக்கம் இல்லாமல் இருந்தவள் நன்றாக அசந்து உறங்கி கொண்டு இருந்தாள். சூரியன் முகத்தில் பட்டு கண்களை மெல்ல கூச செய்ய அய்யோ நீண்ட நேரம் உறங்கிவிட்டோமோ சத்தியேந்திரன் எங்கே என்ற பயத்துடன் வேகவேகமாக எழுந்தாள். ரூம் கதவை திறந்து வெளியே வந்தாள், சத்தியேந்திரன் சோபாவில் அமர்ந்திருந்தான் டி.வி ஓடிக்கொண்டு இருந்தது. கையில் பேப்பரை வேறு திருப்பிக்கொண்டு இருந்தான். லதா காபி டம்ளரை அவனுக்கு எதிரே இருந்த டீப்பாய் மீது வைத்தார். கண்மணி பார்த்துக்கொண்டே நின்றாள். சத்தியேந்திரன் பேப்பர் படிப்பதன் ஊடே டம்ளரில் இருந்த காபியை சுவைத்தான். காபியை வைத்துவிட்டு திரும்பி சென்று லதாவிடம் “அத்தே காபி நல்லாயிருக்கு நீண்ட நாளைக்கு அப்பறம் இந்த மாதிரி காபி சாப்பிடுறேன்.“ என்று இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தனர். கண்மணிக்கு அவனை நினைக்கும் போது மனம் மிகவும் குழப்பம் கொண்டது. இவன் என்ன நேரத்திற்கு ஒருத்தனாக நிமிஷத்திற்கு ஒருத்தனாக இருக்கிறானே என்று எண்ணியது. சத்தியேந்திரனே முதலில் கண்மணியை கவனித்தவன் போல “எழுந்தரிச்சிட்டியா நல்லா தூங்கிட்டு இருந்த?“ அவன் இப்படி சொன்னதும் அவள் மனத்தில் ஒரு சிந்தனை “அய்யோ இவன் என்ன நினைத்து இருப்பான். நன்றாக படுத்து தூங்கி கொண்டு இருக்கிறேன் என்று தானே, தன் அம்மாவை பறிகொடுத்த இடத்தில் இவள் எப்படி கவலையே இல்லாமல் உறங்குகிறாள் என்று தானே.“அவள் சிந்தித்துக்கொண்டு இருக்கையிலயே “நைட் ரொம்ப நேரமா நீ தூங்கவே இல்லையா?“ அவனே அடுத்த வினாவும் கேட்டான். “அப்போ இவரும் முழிச்சிட்டு தான் இருந்துருப்பாரோ சரியா சொல்றாருன்னா?“ மனதோடு பேசிக்கொண்டு இருந்தாள்.
“நைட் ஒன் டைம் எழுந்தேன் அப்போ நீ உட்கார்ந்து இருந்த. என்னன்னு கேட்போன்னு தான் நினைச்சேன். அப்பறம் உன்ன ஏன் டிஸ்டப் பண்ணனும்னு நினைச்சி நான் படுத்துட்டேன்.“ இப்போது கண்மணிக்கு தெளிவாக புரிந்தது. “ஆமாம்.. எதோ நினைச்சிட்டு இருந்தேன் தூக்கமே வரல சத்யா“ பேசிக்கொண்டே அவன் அருகே வந்து அமர்ந்தாள். “நல்லா தூங்கனும் அப்போ தான் மனசு ஆரோக்யமா இருக்கும்.“ அவன் டாக்டர் புராணத்தை ஆரம்பித்தான்.
“சரி..“ அவள் இன்முகத்தோடு சொன்னாள்.

“கண்மணி எனக்கு பூரி செய்யுறியா? சாப்பிடனும் போல இருக்கு“ சின்ன குழந்தை போல கேட்டான். அவளுக்கு அவன் அப்படி கேட்டதும் பெரும் ஆச்சரியம் மிகுந்த உற்சாகத்துடன் எழுந்தாள். “அறைமணி நேரம் சத்யா“ குதுகலமாக எழுந்து கிட்சனுக்கு சென்றாள். லதாவிடம் மாவு பிசைய சொன்னாள். தான் குளித்துவிட்டு அத்தைக்கு மாலை மாற்றி விளக்கு ஏற்றிவிட்டு வருவதாக சொல்லிவிட்டு குளிக்க சென்றாள். குளித்து முடித்துவிட்டு பாத்ரூமைவிட்டு வெளியே வர சத்தியேந்திரன் கட்டிலில் அமர்ந்திருந்தான். திடீரென்று பதற்றம், சிறிது நாணத்துடன் “நீங்க இங்க என்ன பண்றிங்க?“

“சும்மா..“ குளித்து முடித்த ஈர தலையுடனும், அவசரத்திற்கு சுற்றிய புடவை கட்டுடனும் கண்ணாடியை பார்த்து நெற்றியில் பொட்டை சரி செய்து கொண்டு இருந்தாள். அவன் பின்னால் இருந்து வந்து கட்டிக்கொண்டான். அந்த கண்ணாடியை பார்த்துக் கொண்டே “நீ இல்லாதப்போ இந்த கண்ணாடி என்ன கேட்டுச்சி?“ அவள் தோள்பட்டையில் தன் தாடையை அழுத்தி இருந்தான்.

“என்ன கேட்டுச்சி?“ என்றாள். “ நீ எங்கன்னு தான்?“ என்றான் அவன்.

“நீங்க சொல்ல வேண்டியது தானே நான் தான் வெளியில அனுப்பிட்டேன்னு. அவகிட்டு எந்த காரணமும் சொல்லவே இல்லன்னு“ அவன் முகத்தை பார்த்து கண்மணி சொன்னதும் சத்தியேந்திரன் முகம் மாறியது. அவள் அணைப்பை சற்று விலக்கினான். தலையை குனிந்தபடி ஏதோ யோசனையோடு நின்றான். அவன் கன்னங்களை பிடித்து அவள் பக்கமாக திருப்பினாள். “அதே கண்ணாடிகிட்ட சொல்லுங்க அவள நான் வெளிய போன்னு சொன்னாலும் இல்ல உலகத்தவிட்டே போன்னு சொன்னாலும் திரும்ப உனக்கு முன்னாடி என்கூட வந்து நிட்பான்னு.“ அவன் நெற்றியில் அன்பும், ஆசையும் பொங்க முத்தத்தை பதித்தாள். அவன் கண்கலங்கியது.
மலமலவென்று வேலை நடந்துக்கொண்டு இருந்தது. கண்மணியும் சென்று லதாவுடன் சேர்ந்துக்கொண்டாள். பூரி ஒருபக்கம், பூரிக்கு கிழங்கு ஒரு பக்கம் என்று விரைவாக தயார் ஆகிக்கொண்டு இருந்தது.
அப்போது வாசலில் “சார்..“ என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது. சத்தியேந்திரன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு எழுந்து போய் யார் என்று பார்த்தான். காக்கி உடையில் காவலர் நின்று கொண்டு இருந்தார். யார் என்பது போல் விழித்தான் அவரே அறிமுகப்படுத்தி கொண்டார். “சார் நான் மைதின், சப் இன்ஸ்பெக்டர். நேத்து கால் பண்ணியிருந்தேனே.“ நியாபகப் படுத்தினான் அந்த இளைஞன்.
“ஓ..யேஸ்.. வாங்க..வாங்க“ என்று வரவேற்று அமர சொன்னான். கண்மணி வந்து ஹாலை எட்டி பார்த்தாள். கண்மணியை பார்த்து அவன் மரியாதை நிமிர்த்தமாக தலையை அசைத்தான். பதிலுக்கு அவளும் தலையை ஆட்டினாள். “கண்மணி காபி கொண்டு வாயேன்“ சத்தியேந்திரன் கேட்டான். தலை அசைத்துவிட்டு உள்ளே சென்றாள். லதா அறிந்தது போல காபியை கலந்துக்கொண்டு இருந்தார். அதை வாங்கி கொண்டு ஹாலுக்கு வந்து மைதினிடம் கொடுத்தாள்.

“ரொம்ப கஷ்டமா போயிடுச்சி சார்.“ மைதினே பேச்சை ஆரம்பித்தான் அவனே தொடர்ந்து பேசினான். “நான் நேத்து தான் உங்ககிட்ட பேசுனேன் இன்னைக்கு உங்கள நேர்ல பார்த்து என்ன விவரம்னு தெரிஞ்சிட்டு போகலாம்னு வந்தேன் வந்து பார்த்தா இப்படி? உங்க அம்மா இறந்துட்டாங்கன்னு கேள்விபட்டதும் உங்ககிட்ட வந்து பேசவே என்னவோ மாதிரி? யோசிச்சி யோசிச்சி தான் வந்தேன் சார்.“ அவன் முடித்தான்.

“என்ன பண்றது மரணங்கிறது யார் கையிலயும் இல்லயே அது எப்போ வரும்னு சொல்ல முடியாது. நீங்க தொழில் விஷயமா தானே வந்திங்க தொழில் வேற, குடும்பம் வேற நான் இரண்டையும் சேர்த்து பார்க்குறதே இல்ல.“ அவன் இத்தனை தெளிவாக பேசுவதை கண்மணி நின்று ரசித்துக்கொண்டு இருந்தாள்.

“சார் பிரஷர் மேல பிரஷர் நான் இந்த ஊருக்கு வந்து இரண்டு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள நிறைய பிரஷர் கொடுக்குறாங்க. நான் இந்த கேஸ்ச கிளியர் பண்ணிவிட்டா தான் அடுத்தத மூவ் பண்ண முடியும். இஃப் யூ டோண்ட் மைண்ட் ஜெஸ்ட் உதவியா தான் கேட்குறேன் முடியாதுன்னா வேண்டாம்.“ சத்தியேந்திரன் யோசித்து கண்மணியை பார்த்தான். மைதின் கேட்பதற்கு முன்னமே அவனே சொன்னான் “நான் உங்ககூட வரேன் மைதின்.“ மைதின் முகம் இப்போது தான் மலர்ந்தது ஆனால் கண்மணியின் முகம் அரண்டது. இவனை தனியாக அனுப்புவதா என்ற பயம் அவளை பற்றிக்கொண்டது. சத்தியேந்திரன் எழுந்து உடைமாற்ற தன் அறைக்கு சென்றான் மைதின் காபியை சுவைத்தான். கண்மணி பின்னாலேயே சென்றாள்.

“நீங்க போகனுமா??“ என்றாள்.

“பத்து நிமிஷம் தான் ஆகும் நான் அந்த கேஸ்ச பார்த்துட்டு ஒரு கையெழுத்து போட்டு கொடுத்துட்டு வந்துட்டேன்னா அவங்க ஜி.ஹேச்கு மாத்திடுவாங்க.“ உடையை மாற்றிக்கொண்டே சொன்னான்.

“இருந்தாலும் எனக்கு ஏதோ சரியாபடல வேறயாரையாவது பார்க்க சொல்லுங்களேன்.“ தயக்கத்துடன் சொன்னாள்.
“என் நிலை என்னன்னு உனக்கு தெரியும் இப்போ நான் போகலன்னா என்னோட வேலைக்கே ஆபத்து வந்துடும்.“ சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

“கிளம்பலாமா மைதின்.“ என்றான். காபி குடித்த டம்ளரை கீழே வைத்துவிட்டு எழுந்தான் மைதின். இருவரும் வாசலுக்கு வந்தனர். கண்மணி, “சார் கொஞ்சம் பார்த்துக்கோங்க..“ அக்கறையாக மைதினிடம் சொன்னாள். பேசாதவள் பேசியதும் “சரி சரி மேடம்..“ என்று தலையை அசைத்துவிட்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினர். உள்ளே அவன் ஆசையாக கேட்ட பூரியை லதா சுட்டு அடுக்கி ஆறவைத்து இருந்தாள் கண்மணிக்கு கஷ்டமாக இருந்தது.

நடந்ததை கண்மணி யோசனையோடு மெர்ஸியிடம் சொல்லி முடித்தாள்.

“அப்போ சார் ஏன் தனியா ஓடி வந்துகிட்டு இருந்தாரு?“ என்று கேட்டாள் மெர்ஸி. அதற்குள் பின்னால் இருந்து வந்த குரல் “அத நான் சொல்றேன்“ என்றது.​
 
பூவை 9

வாசல் பக்கம் வந்த குரலை கேட்டு இருவரும் சற்று நெஞ்சு தளதளத்து எழுந்து நின்றனர். சப் இன்ஸ்பெக்டர் மைதின் நின்று கொண்டு இருந்தார். கண்மணிக்கு பேச்சு திணறியது “வா..வாங்க..சார்..“ என்று அழைத்தாள். அவர் இன்ஸ்பெக்டர் என்பது மெர்ஸிக்கு புரிந்தது, ஆனால் மீதியை இவர் எப்படி சொல்வான் என்பது அவளுக்கு புரியவில்லை. சிலை போல நின்று கொண்டு நடப்பதை கவனித்தாள். மைதின் தன் தலையில் இருந்த தொப்பியை கழட்டிவிட்டு அமர்ந்தார். கண்மணிக்கு இப்போது என்ன பேசுவது என்றே புரியவில்லை ஆனால் ஏதாவது பேசி தானே ஆரம்பிக்கவேண்டும்.

“டீ..காபி..எதும் சாப்பிடுறிங்களா“ என்றாள்.

“நோ தேங்ஸ்..“ அவன் சட்டென்று முடித்துவிட்டான். சற்று அமைதி நிலவியது, இப்போது மைதினே ஆரம்பித்தார். “சாருக்கு என்ன பிரச்சனை? “ என்றான்.
கண்மணிக்கு புரியவில்லை, ஆனால் அவளுக்குள் நடந்த சில சம்பவங்கள் நினைவு கூறப்பட்டது. அவளுக்கே எதுவும் புரியாமல் குழம்பிக்கொண்டு இருக்கிறாள், அப்படி இருக்க இவன் கேட்கும் கேள்விக்கு எவ்வித பதிலை அவள் சொல்ல முடியும்.

“சாருக்கு என்ன? ஒன்னும் இல்லையே அவரு நல்லா தான் இருக்காரு?“ என்றாள் கண்மணி. அந்த பதில் மெர்ஸிக்கு குழப்பம் தந்தது ஏன் இவள் இப்படி சொல்கிறாள். அந்த மனிதன் அப்நார்மலா இருக்காரே என்று தனக்குள்ளயே எண்ணிக் கொண்டாள்.

“நீங்க பொய் சொல்றிங்க?“ என்றான் மைதின்.

“நீங்க என்ன சொல்லவறிங்க சார், அத தெளிவா கொஞ்சம் சொல்லுங்க. அப்பறம் நான் பொய் சொல்றேனா மெய் சொல்றேனான்னு பார்ப்போம்.“ கண்மணி சிறிதும் தயங்காமல் பட்டென்று சொன்னாள்.

“சொல்றேன்..“ மைதின் இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் நடந்ததை நினைவுகூர்ந்து சொல்ல ஆரம்பித்தான்.

வீட்டை விட்டு இருவரும் வெளியே வந்தனர். சத்தியேந்திரன் தன் காரை எடுக்க முற்பட்டபோது மைதின் தடுத்தான். “ஏன் சார் இன்னொரு வண்டி என் ஜீப்லையே போயிடலாம், திரும்பி கொண்டு வந்து நானே விடுறேன். எனக்காக தான் இவ்வளவு சிரமபட்டு வறிங்க உங்கள இன்னும் கஷ்டபடுத்த கூடாதுன்னு தான் நான் சொல்றேன்“ என்றான்.
சத்தியேந்திரன் சிரித்தான். “சரி வாங்க..“ என்று இருவரும் ஜீப்பில் பின் சீட்டில் அமர்ந்து கொண்டனர். சாலையில் ஓட ஆரம்பித்த ஜீப்பின் உள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை. சாலையில் வாகன இரைச்சல்கள் மட்டுமே கேட்டுக்கொண்டு வந்தது. பெரிய மீசை வைத்த டிரைவர் ஜீப்பை ஓட்டிக்கொண்டே கண்ணாடி வழியே இருவரையும் கவனித்தான். அமைதியை உடைக்கும் பொருட்டு சத்தியேந்திரன் ஆரம்பித்தான் “அப்பறம் மைதின் சார் முதல எங்க வேலை பார்த்திங்க.“ என்றான்.

“திருச்சி சார்.. அது தான் எங்க சொந்த ஊரும். இது அப்பாவோட வேலை சார் அப்பா டியூட்டில இருக்கும் போதே இறந்துட்டாரு. அவரு புண்ணியத்தால எனக்கு இந்த வேலை கிடைச்சது. அப்பா தான் சப் இன்ஸ்பெக்டரா இருந்தே இறந்துட்டாரே, நம்பளாவது இன்ஸ்பெக்டார் ஆகிடனும்னு நினைச்சி தான் இப்போ உங்கள புடிச்சி படுத்திகிட்டு இருக்கேன்.“

“அப்பறம் ஏன் திருச்சிய விட்டு மாத்திப்போட்டாங்க?“

“ஒரு உதவி செஞ்சென் சார். ஒரு நல்ல மனுசர் மேல தேவையில்லாம கேஸ் போட்டு இருந்தாங்க. அதுல இருந்து அவரு தப்பிக்க உதவி செஞ்சேன் என்ன தூக்கிட்டாங்க.“

ஒரிரு வரியில் அவன் கதையை சொன்னான். அதனை மேற்கொண்டு ஆராய சத்தியேந்திரனுக்கு விருப்பம் இல்லை. “உதவி செய்யுறது கூட இந்த காலத்துல தப்பு தானோ..“என்றான் சத்தியேந்திரன்.
“தப்பு கிடையாது சார்..நம்ம செய்யுற உதவி நம்பள காப்பத்தும்“ என்றான் மைதின். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஹாஸ்பிட்டல் வளாகத்தில் ஜீப் வந்து நின்றது. வந்ததை நியாபக படுத்தும் விதமாக டிரைவர் சீட்டில் இருந்த அந்த நபர் “சார்..“ என்று இழுத்து அழைத்தான்.

“என்ன ராஜன் வந்தாச்சா?“ என்றான் மைதின்.

“ஆமாம் சார்..“ என்று பதில் சொல்லிவிட்டு ஜீப்பை விட்டு இறங்கி கொண்டார் டிரைவர். மைதினும், சத்தியேந்திரனும் இறங்கினார்கள்.

“இந்த ஹாஸ்பிட்டல் தான் சார்..“

“இவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல்ல எப்படி அரஸ்ட் ஆன பேசண்ட வச்சி டிரிட்மெண்ட் கொடுக்குறிங்க.“ என்று வினாவினான் சத்தியேந்திரன்.

“அந்த பொண்ணோட அப்பா கொஞ்சம் பெரிய கைக்கு எடுபுடி போல. இப்பவே பிரசர் வர ஆரம்பிச்சிடுச்சி அநேகமா உங்களுக்கும் பிரசர் கொடுத்து இந்த கேஸ்ச ஒன்னும் இல்லாம முடிக்க நினைப்பாங்க.“

“என்ன மாதிரி கேஸ் மைதின்.“

“வாங்க சார் பேசிகிட்டே போகலாம்“ என்று அழைத்தான் மைதின். இருவரும் ரிசப்சனை கடந்து லிப்டுக்காக காத்திருந்தனர். நர்ஸ் ஒருத்தி “சார் லிப்ட் அவுட்டாப் ஆர்டர் ஸ்டெப்ஸ்ல போங்க.“ என்றாள்.

தலையை ஆட்டிவிட்டு இருவரும் படிக்கட்டுக்களில் ஏறினார்கள். “கள்ளகாதல் கேஸ் சார்..“ என்றான் மைதின். சத்தியேந்திரன் தயங்கி படிகளிலேயே நின்றான். மைதின் ஒரு படி முன்னே நின்று திரும்பி “வாங்க சார்“ என்று அழைத்தான்.

“அப்படின்னு சொல்றாங்க? அந்த பொண்ண பார்த்தா அப்படி தெரியல..சூசைட் அட்டண்ட் பண்ணிருக்கு புள்ளையோட. புள்ளை ஸ்பாட் அவுட் இதுவும் சீரியஸ் கண்டிசன் தான் ஆனா காப்பாத்திட்டாங்க. மெண்டல் மாதிரி பிகேவ் பண்ணுது, அது உண்மையாவே மெண்டலா இல்ல மெண்டல் மாதிரி நடிக்குதான்னு நீங்க தான் செக் பண்ணி சொல்லனும்.“ என்றான் மைதின். பேச்சு சுவாரஸ்யத்தில் வந்ததே தெரியாமல் அறையின் முன்னே வந்து நின்றனர். சத்தியேந்திரனுக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது பேசுவது எல்லாம் எக்கோ அடிப்பது போல இருந்தது. உருவங்கள் இரண்டாக மூன்றாக தெரிந்தது. “சா…ர்..சா..ர்..“ என்று தோளை வெகு நேரமாக குலுக்கி கொண்டு இருந்தான் மைதின். “ஆங்..“என்றான் சத்தியேந்திரன்.

“உள்ள வாங்க“ அழைத்து சென்றான். பெட்டில் படுத்துக்கொண்டிருந்த அந்த பெண் சிறு வயதாக தான் இருந்தாள். இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

“இவரு தான்மா டாக்டர் உன்ன சில கேள்வி கேட்பாரு நீ பதில் சொல்லு“ , என அந்த பெண்ணை பார்த்து மைதின் சொன்னான். அந்த பெண் சத்தியேந்திரனையே உற்று பார்த்தது. சத்தியேந்திரனுக்கு தான் நின்ற இடமே சுழன்றது, கைகள் நடுங்கியது. இதையெல்லாம் மைதின் நோட் செய்து கொண்டு தான் இருந்தான். என்ன நினைத்தான் என்று புரியவில்லை திடீரென்று அந்த அறையை விட்டு ஓட தொடங்கினான், படிகளில் இறங்கி ஹாஸ்பிட்டால் வளாகத்தை கடந்து ஓடினான். “சார்..சார்..“ கத்தி கொண்டு பின்னாலயே ஓடி சென்று பிடிக்க நினைத்தான் மைதின் முடியவில்லை. மூச்சு வாங்க நின்று கொண்டு இருந்தான் அப்போது பின்னால் இருந்து ஒரு கை அவன் தோள்களை தொட்டது.

“எஸ்கியூஇஸ் மீ..“ என்றாவரே. மைதின் திரும்பி பார்த்தான் வேறு ஒரு டாக்டர் நின்று கொண்டு இருந்தான். “ஒடுறது சத்தியேந்திரன் தானே“ என்றான் அந்த டாக்டர்.

“ஆமாம்“ என்றான் மைதின்.

“ஓ.. ஏன் இப்படி ஓடுறாரு“

இவனிடம் தெரியாது என்று சொல்ல கூடாது என்ன நினைத்தானோ என்னவோ மைதின் டக்கென்று ஒரு பொய்யை சொன்னான். “அவரோட ஓய்ப்க்கு ஏதோ எமர்ஜென்ஸி அதான்.“

“ஊஹிம்.. நல்ல டாக்டர் மூனு மாசமா சஸ்பென்சன்ல இருந்தாரே டியூட்டில ஜாயின் பண்ணிட்டாரா“ என்றான் அந்த டாக்டர்.

“என்ன சஸ்பென்சன்?“ மைதினுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“அவரோட கவனிப்புல இருந்த அவரோட பேசண்ட் சூசைட் பண்ணி இறந்துட்டாங்க.“

அந்த டாக்டர் சொன்னது மைதின் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஜீப் முழுக்க அதே நியாபகத்துடன் சத்தியேந்திரன் காம்பவுண்டில் வந்து இறங்கினான்.
மூவரும் மூன்று திசையில் அமர்ந்துக்கொண்டு இருந்தனர். கண்மணி மெர்ஸியை பார்த்தாள்

“மேம் அந்த சூசைட் கேஸ்க்கும் சாருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது அந்த பொண்ணு தான்.“ என்றாள்.

“ஆமாம் சார் எனக்கு அந்த கேஸ் பத்தி அவ்வளவா தெரியல?“ என்றாள் கண்மணி.

“எனக்கென்னவோ சார் மெண்டலி கொஞ்சம் டிஸ்டப்பன்சா இருக்காரோன்னு தோனுது. நீங்க வேணும்னா மெடிக்கல் கவுன்சில்ல பேசி அவருக்கு மெடிக்கல் லீவ் மதிரி எதுவும் கேட்கலாம் இல்ல“ என்றான் மைதின்.

கண்மணி திடுக்கிட்டு எழுந்தாள். “சார்..இப்போ தான் அவரு வேலைக்கு போயிருக்காரு, இந்த வேலை அவரு தொழிலா நினைச்சி செய்யல சேவையா நினைக்கிறாரு. மெடிக்கல் கவுன்சில்ல ஏற்கனவே அவருக்கு வார்னிங் கொடுத்துருக்காங்க அவரு செய்யாத தப்புக்கு. இப்போ திரும்ப எதும் பிரச்சனைன்னா அவர டிஸ்மிஸ் பண்ணிடுவாங்க அது அவரு உயிருக்கே ஆபத்தா முடியலாம்.“ என்றாள் கண்மணி.

“மேடம் எப்படி இருந்தாலும் இந்த கேஸ்ச அவரு ஹேண்ட்ல் பண்ணலன்னா அவங்களே கூப்பிட்டு விட தான் போறாங்க. எனி வே நாளை மறுநாள் இவரு இந்த கேஸ்ச எடுத்துக்கனும் இல்லன்னா நான் சொன்னது நிச்சயம் நடக்கும்.“ என்று எழுந்தான் மைதின்.

“கண்டிப்பா அவரு இந்த கேஸ்ச எடுப்பாரு. நான் உங்களுக்கு கால் பண்றேன் சார்.“

“ஓ.கே. மேடம் என் நம்பர் சார்கிட்ட இருக்கு. முதல வந்து அந்த கையெழுத்த மட்டுமாவது போட சொல்லுங்க.“ என்று வாசலை பார்க்க நடந்தான் மைதின்.

மெர்ஸியும் வாசலோடு வந்து நின்றாள். “நானும் கிளம்புறேன் மேடம்? பர்மிஷன் கூட போடாம வந்துட்டேன்.“ என்றாள்.

“மெர்ஸி இந்த விஷயத்துல நீயும் எனக்கு உதவி செய்யனும்? பிளீஸ்“ என்றாள் கண்மணி.

“என்ன மாதிரி உதவின்னு சொல்லுங்க மேடம். அவரு எனக்கு சார் மட்டும் இல்ல அண்ணன் மாதிரி. நான் என்ன வேணும்னாலும் செய்யுறேன். தயங்காம சொல்லுங்க“

“நான் யோசிச்சிட்டு உனக்கு கால் பண்றேன்.“

மெர்ஸியும் விடைபெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
கண்மணி மீண்டும் வீட்டின் உள் வந்து சத்தியேந்திரன் படுத்து கிடந்த அறைக் கதவை திறந்தாள். வேர்க்க விறுவிறுக்க படுத்துகிடந்தான். ஏதோ ஒரு மூலையை பார்த்துக்கொண்டு பயந்து நடுங்கியது போல கிடந்தான். கண்மணி அருகே சென்று அவன் மேல் கைவைத்த நொடி “ஆ..“ என்று அலறி அடித்து எழுந்து திருதிருவென்று விழித்தான் லதா பயந்து போய் அறைவாசற்படியில் வந்து நின்றாள். கண்மணி உறைந்து போய் நின்றிருந்தாள்.​
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom