- Messages
- 65
- Reaction score
- 86
- Points
- 18
அத்தியாயம் 9:
நட்புக்குள் பொய்கள் கிடையாது…
நட்புக்கு தன்னலம் கிடையாது…
என்ன பெக்கி பாட்டு பாடறனு பார்க்கிறியா? எனக்கு பிடித்த பாடல் வரிகளில் ஒன்று. எல்லா உறவுகளும் நாடகத்தில் வருகிறபடி ஒரு சோதனையைச் சந்திக்கும். அது இயல்பு. அந்த சோதனை உறவை உறுதிபடுத்தலாம். இல்லை பிளவையும் ஏற்படுத்தலாம்.
அது சூழ்நிலையும் , மனித இயல்பையும் பொறுத்தது.
ஆறாம் வகுப்பில் ஒரு சம்பவம் நடந்து அது அதிருப்தியை கிளப்பியது. வகுப்பில் அனைவரையும் விட பொது அறிவு மிகுந்தவர்கள் நானும் விஷ்வாவும் தான். ஆனால் நான் இரண்டு , மூன்றாம் ரேங்கில்தான் இருப்பேன். எனக்கு முதலிடத்தின் மீது வெறி எல்லாம் கிடையாது. அது மனோவுக்கு உரிய இடம். என் தோழி முதலிடம் எடுத்தால் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் என்னையும் மீறி அந்த சம்பவம் நடந்து விட்டது. ஒரு தேர்வில் நான் மனோவை விட ஒன்பது மதிப்பெண் அதிகம் எடுத்துவிட்டேன். எடுத்தால் கூட பரவாயில்லை. ஆனால் இந்த நிகழ்வு ஒரு மணி நேரத்திற்குள் காட்டுத்தீ போன்று பரவிவிட்டது. சொல்லப் போனால் இதை என்னால நம்பக்கூட முடியவில்லை.
நான் ஒரு பாடத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்ததையும் நம்பவில்லை. எனக்கே அது ஆச்சரியம். ரேங்க் விஷயத்தைப் பற்றி அனைவரும் கேள்வி கேட்க மனோவுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. இதுவரை அவளுக்கு என்று மட்டும் இருந்த ஒன்று என்னால் பறிக்கப்பட்டது. அது நிச்சயமாக வருத்தத்தை ஏற்படுத்தும். இதனால் நாங்கள் பிரிந்தோமா என்றால் அதுதான் இல்லை. ஆனால் அதற்கு அடுத்த வருஷம் எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டது. அதையும் சரி செய்து விட்டோம். ஆனால் அதே ஏழாம் வகுப்பில் இன்னொரு நட்பை நான் தூக்கி எறிந்தேன்.
எஸ்…நான் தான் செய்தேன். காதல் என்ற வார்த்தை செய்ய வைத்தது. அதற்குப்பிறகுதான் மொத்த பள்ளியே என்னை வாய்பிளந்து பார்த்தது. வாயாடி யாழரசிக்குள் இப்படி ஒரு பிடிவாதமா என்று அதிர்ந்து பார்த்த விசயம்.
விஷ்வா என்னை காதலித்தான் என்ற உண்மை உறைய வைத்தது. என்னைப் பற்றி அவன் எழுதிய கவிதை பேப்பர் அஜியின் மூலம் என்னை வந்தடைந்தது.
அன்றைய நாள் , செஞ்சிலுவை சங்கத்தில் இருக்கும் எங்கள் வகுப்பில் உள்ளவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடும் நாள். வழக்கமாக உணவு இடைவேளை முடிந்து அப்பணி நடக்கும். நான் மதிய உணவு உண்ட உடனே நூலகம் சென்று விடுவேன். அன்று விஷ்வாதான் லேட் ஆகிவிட்டது , கிளம்பு என்று சொன்னான்.
அவன் முன்னே சென்றுவிட நான் பின்னால் சென்றேன். தூய்மைப்பணி பள்ளியைச் சுற்றி ஆரம்பித்தது. பெண் மாணவர்கள் ஒரு பக்கமும் , ஆண் மாணவர்கள் ஒரு பக்கமும் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அஜியும் நானும் பேசிக் கொண்டே சுத்தம் செய்தோம். அப்போதுதான் அந்த கவிதைப் பேப்பர் பற்றி அஜி என்னிடம் கூறி காண்பித்தாள். விஷ்வா விரும்பியது என்னை என்று உறுதியும் செய்தாள். மற்றவர்களும் உறுதி செய்தனர். சுத்தம் செய்து முடித்து நாங்கள் அனைவரும் வகுப்புக்குத் திரும்பினோம். எனக்கு கண்மண் தெரியாத கோபம். நேராக முதல் பெஞ்சில் விஷ்வா அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்றேன்.
அவனை பார்த்து , “பிரண்டா இருந்த நீ இப்படி பன்னுவேனு நினைக்கல. இதுக்கு மேல நான் எப்பவும் உங்கிட்ட பேச மாட்டேன்” இந்த இரண்டு வாக்கியங்களை பேசிவிட்டு என் இடத்திற்கு வந்து விட்டேன். வகுப்புகள் தொடங்கியது. எங்கள் நட்பு அதோடு முடிவு பெற்றது. அதற்குப் பிறகு நான் அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. இரண்டு வருடங்கள் தொடர்ந்து அங்கு படித்தேன். எவ்வளவு பேர் அவனிடம் பேச சொல்லி என்னிடம் கூறினார்கள் தெரியுமா? இவ்வளவு ஏன் கண்ணன் சாரை வைத்து அவனிடம் பேச சொன்னார்கள். பள்ளியே பயப்படும் கண்ணன் சாரிடம் “எனக்கு பேச இஷ்டமில்லை. என்னால் பேச முடியாது சார்” என்று பதில் கொடுத்துவிட்டேன்.
யாராலும் என்னை அசைக்கவே முடியவில்லை. நானும் அசரவில்லை. அவனும் என்னிடம் பேச முயற்சிப்பதை நிறுத்தவில்லை.
அஜிதான் “யாழ் நீ பேசுனா பேசிட்டே இருப்ப. நீ பேசறத நிறுத்தினா? யாராலும் உன்னை பேச வைக்க முடியாது “ என்று சொல்வாள்.
விஷ்வாவைப் பற்றி தெரிய வந்தது பிப்ரவரி பதிநான்கு.
என்னுடைய மிகச்சிறந்த ஆண் நண்பனின் நட்பு முறிந்த நாள். இப்பொழுது வரை என்னால் நட்பில் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்றவர்கள் வாழ்க்கை பற்றி எனக்கு கருத்து இல்லை. ஆனால் நான் இப்படிதான். என்னைப் பொறுத்த வரை நட்பு புனிதமானது. அதில் காதல் என்ற வைரஸ் கரப்ட் செய்வது பிடிக்காது.
தேவ் மறுபடியும் “வாட்…???” என்று கத்தி விட்டான். “அப்படி என்ன பிடிவாதம் பேபி உனக்கு. பன்னிரெண்டு வயசுல உனக்கு என்ன ஆட்டியூட். “ பெருமூச்சு விட்டான் தேவ். யாரென்றே தெரியாத விஷ்வாவின் மீது பரிதாபம் தோன்றியது. “பெஸ்ட் பிரண்ட் டர்ண்டு இண்டு அ டிராமா “
எனக்கு புரியுது பெக்கி. எனக்கு முதிர்ச்சி இல்லாத வயது அது. ஆனால் இப்போது என்றாலும் என் முடிவு மாற வாய்ப்பில்லை. ஒரு பதினாங்கு பதினைந்து வயது வரை நான் இப்போது சரி என்று சொல்லும் விஷயங்களை அனைத்தையும் தவறு என்று கூறியிருக்க வாய்ப்பு உள்ளது. அப்போது உலக அனுபவம் குறைவுதான்.
ஆண்களை மேலும் வெறுக்கத் தொடங்கிய காலமது.
“ஓ காட்..வொய்?” தேவ் அவளிடம் பேசுவது போல் காற்றிடம் தனியாகப் பேசினான்.
ஏன் பெக்கி? கொஞ்சம் அதிகமாக யோசிக்கும் பெண்கள் தன்னைச் சுத்தி என்ன நடக்குதுனு பார்ப்பாங்க? இப்படித்தான் தான் நடத்தப்படுவோம் என்பது உரைக்கும். நீ எவ்வளவு சிறந்தவளாக இருந்தாலும் நீ பெண் அதனால் இதற்கு மேல் உனக்கு ஒன்றுமில்லை என்பது புரியும். இங்குதான் பிரச்சினை ஆரம்பம். யோசிக்காமல் அப்படியே இந்த சமூகம் சொல்வதை ஏற்றுக் கொண்டால் எந்த மனக்கஸ்டம் இல்லை என்பது போல சிந்தனை செல்லும். ஆனால் நான் அப்படி இல்லை. எது தவறோ அதை கண்டிப்பாக என் மனம் ஏற்றுக் கொள்ளாது. எதிர்த்து செயல்பட மூளை தூண்டிவிடும்.
சரி நம்ம டிசைன் அப்படி. ஆனால் விஷ்வா விஷயம் என்னை பாதித்தது. நான் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர இதுவும் ஒரு காரணம். “மென் ஆர் டிரபிள் பாஃர் மீ”.
அதுவுமில்லாமல் நான் 13 வயதிலேயே நான் ஒரு முடிவு எடுத்திருந்தேன். எனக்கு என்வீட்டில் சுதந்திரம் இருந்தது. சொல்லப்போனால் என்னை மாதிரி ஒருத்தியை சகித்துக் கொண்டு வளர்த்தற்காக அவர்களுக்கு எப்போதும் நன்றிகடன் பட்டுள்ளேன். எனக்கு ஒன்று தெரியும் . நான் வாழ்நாளில் எதுவும் அவர்கள் இஷ்டபடி செய்யப்போவதில்லை, ஒரு விஷயத்தைத் தவிர. கல்யாணம். ஆமாம் பெக்கி வீட்டில் யாரைப் பார்க்கிறார்களோ அவர்களைத் திருமணம் செய்வேன். காதல் என்று என் வாழ்வில் இருக்காது. அப்படியே நான் யாரையாவது எனக்கு பிடித்திருந்தாலும் அது காதலாக மாற வாய்ப்பில்லை. முரட்டு சிங்கிள் சங்கத்து மெம்பரா அப்பவே உறுதிமொழி எடுத்துகிட்டேன்.
இன்னொன்று சொல்லட்டுமா ? என்னதான் நான் வீட்டுக்கு அடங்காத பிள்ளை என்றாலும் அவங்க பேச்சை நான் சில விஷயங்களைத் தாண்ட மாட்டேன். அப்புறம் எனக்கும் குடும்ப கௌரவம் ரொம்ப முக்கியம். இப்பவும் அப்படித்தான்.
“எப்படி இவ்ளோ நல்லா திங்க் பன்னற நீ இப்படி ஒரு முடிவ எடுத்த? நானெல்லாம் எனக்கு எங்கம்மா முடிவு செய்த ஒருத்திகிட்ட இருந்து தப்பிக்க எவ்ளோ டிரை பன்றேன் தெரியுமா? நான் லவ் மேரேஜ்தான் செய்வேன். இதுவரைக்கும் எந்த பொண்ணைப் பார்த்தும் நான் லவ்ல விழுகல. அதனால்தான் இப்ப எங்கம்மா பார்த்த பொண்ணுகிட்ட மாட்டிட்டு முழிக்கறேன்.” தேவ் அவளிடம் நேரடியாக உரையாடுவதைப் போல் டைரியை பார்த்துப் பேசினான். “சரி நீ வளர்ந்தக்கு அப்புறம் என்ன நடக்குனு பார்ப்போம்?” கேள்வியுடன் மீண்டும் வாசிக்கத் தொடங்கினான்.
எனக்குப் புரியுது பெக்கி. இப்படி ஒரு முடிவு தவறுதான். ஆனால் குடும்பத்தைத் தவிர எனக்கு வேறு எது முக்கியம் ? அதுமட்டுமில்லாமல் நான் முக்கால் வாசி ஆண்களை வெறுத்தேன். பதிமூன்று வயதில் என்னுடைய பஞ்ச் டையலாக்கே “ஆண்களை எனக்கு பிடிக்காது” இதுதான்.
என் அம்மாய் கூட ரொம்ப கவலைப் பட்டார்கள். “ இந்தபுள்ளை இப்படி இருந்தால் எப்படி கல்யாணம் பன்னிட்டு வாழ்வேன்?” இப்படித்தான் கூறுவார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு அப்படி கூறுவதை விட்டுவிட்டேன். ஆனால் மனதில் இன்னும் வெறுப்பு அதிகமாகிக் கொண்டே போனது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் வீட்டினருக்கு இது தெரியாது.
சரி பெக்கி நான் ரொம்ப போர் அடிக்கிறேன். உன்னைத் தவிர நான் யார்கிட்ட பேச முடியும். சில மனித உணர்வுகளுக்கு முகவரி கிடையாது. யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அவை முகவரியற்றவை. யாரையும் போய் சேராது. எனக்கும் உனக்கும் மட்டும்தான் தெரிந்த ரகசியம். இப்படி முகவரியற்ற இன்னும் மூன்று பேர் பற்றி உனக்கு அப்புறம் சொல்றேன்.
ஏழாவது படிக்கும் போது இன்னும் இரண்டு புது ஆசிரியர்கள் வந்தார்கள். ஆசிரியர் மாற்றம் வழக்கமாக வருடத்திற்கு வருடம் நடப்பதுதான்.
அறிவியல் பாடம் எடுக்க ஒரு ஆசிரியை வந்தார். அவர் பெயர் சவிதா. அந்த ஆசிரியை இருக்கும் போது அறிவியல் பாடத்தில் அதிக தடவை நூற்றுக்கு நூறு எடுப்பேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போதெல்லாம் எனக்கு நூலகத்தில் இரு புத்தகங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய கசின் சிஸ்டரின் பிராக்ஸியாக ஒரு புத்தகம் எடுத்தேன். ஒரு நாளுக்கு இரு புத்தகங்கள் படிப்பது வாடிக்கை. மகாபாரதம் , இராமாயணம் முதற்கொண்டு அறிவியல் தொடர்பான என எதையும் விட மாட்டேன். மூளைக்குத் தீனி போட்டுக்கொண்டே இருப்பேன்.
சவிதா டீச்சருக்கு நான் அசிஸ்டெண்ட் மாதிரி. அவர் எனக்கு அறிவியலில் இருக்கும் ஆர்வத்தை உணர்ந்தார். என்னை ஊக்கப்படுத்தினார்.
அறிவியல் ஆர்வம் இருந்தாலும் என்னால் தமிழில் நன்றாக கட்டுரை எழுதமுடியும். ஆறாம் வகுப்பிலிருந்து கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்கிறேன். முதல் தடவை எழுதும் போது எனக்கு உதவியது சாந்தினி அக்கா. அவர்கள் என் ஊர்தான். அப்துல் கலாம் அய்யா கையால் இளம் விஞ்ஞானி விருது வாங்கியவர். அவர்களும் பேச்சு போட்டி , கட்டுரைப் போட்டி என்று கலக்குவார். அக்காதான் எனக்கு உதவியவர். என்னுடைய மெண்டர் அவர்தான். சிறுவயதிலிருந்தே இருவருக்கும் நல்ல பரிச்சயம். ஒரே ஊர் அல்லவா?
கட்டுரைப் போட்டிக்கு நான் காந்தியடிகளைப் பற்றிக எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் நூலகத்தில் எனக்கு காமராஜர் பற்றிதான் புத்தகம் தான் கிடைக்கும். காமராஜரைப் பற்றி பற்றி படிக்க படிக்க அவரை மிகவும் பிடித்தது. அவரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாகவும் அறிவித்திருந்தது அரசாங்கம். கட்டுரை போட்டி, பேச்சு போட்டி , ஓவியப் போட்டி இதில் எல்லாம் நான் பரிசு வாங்கினாலும் , நான் மிகவும் பிரபலமானது வினாடி வினா போட்டிக்குத்தான்.
அந்த டைம்ல யாருமே என்னை வினாடி வினா போட்டியில் தோற்கடிக்க முடியல. நான் இருந்தா அந்த டீம் ஜெயிக்கும். கொஞ்சம் அகம்பாவம் போல தோணாலாம் பெக்கி. ஆனால் உண்மை இதுதான் பேபி.
வினாடி வினா போட்டியில் ஒரு தடவை ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது. விஷ்வா எனக்கு எதிர் டீம்ல இருந்தான். இந்தப் போட்டி நான் அவங்கிட்ட பேசாமல் போனதுக்கு அப்புறம் நடந்தது. ரொம்ப கடுமையான போட்டி. ஆனால் நான் விஷ்வா டீமை தோற்கடித்துவிட்டேன். பரிசும் எங்கள் டீம் வாங்கியது. விஷ்வா பள்ளிக் கட்டிடத்தின் வெளியில் சென்று சுவற்றில் ஓங்கி எட்டி உதைத்தான். அது போட்டியில் தோற்ற கோபமா? இல்லை என்னிடம் தோற்றுவிட்ட கோபமா? என்று எனக்கு இப்போது வரைக்கும் தெரியவில்லை.
ஏழாம் வகுப்பிலும் நன்றாகப் படித்தேன். சைக்கிள் இருப்பதால் அதில் பள்ளி சென்று வந்தேன். பள்ளி செல்லும் போது எனக்கு துணை இருக்காது. ஆனால் வீட்டுக்கு திரும்ப வரும் போது துணை இருக்கும்.
பள்ளிக்கு தார்ச்சாலை வழியை முழுவதுமாக பயன்படுத்த வேண்டியது இல்லை. பாதி தூரம் சென்றதும் காட்டு வழியில் செல்வோம். மனோ வீடு அந்தக் காட்டு வழியில்தான் அமைந்துள்ளது.
உனக்குத் தெரியுமா? நான் படித்த பள்ளியில்தான் என் அம்மாவும் படித்தார்கள். அவர்கள் சென்ற பாதையில் சைக்கிளில் சென்றால் பள்ளிகூடத்திற்குச் செல்லலாம். பேருந்தில் சென்றால் வாய்ப்பில்லை.
பள்ளியில் எங்களின் நட்பைப் பார்த்தால் பொறாமைப் படுவதற்கு ஒரு கும்பல் இருக்க என்னை வியக்க வைத்தது ஒரு குழு. பள்ளி செல்வதற்கு இருக்கும் காட்டுவழியில் எதிரில் இன்னொரு காட்டுவழி இருக்கும். அதன் வழியில் சென்றால் ஒரு ஊர் உள்ளது. ஊர் என்பதை விட தோட்டம் என்பதுதான் பொருந்தும். அந்தத் தோட்டத்தில் நாலைந்து குடும்பங்கள் இருந்தனர். மனோவின் சொந்தக்காரர்கள்தான். அவர்களின் குழந்தைகளும் எங்களோடுதான் படித்தனர். வருண், ராஜ் மற்றும் வேணி இவர்கள் மூவரும் எங்கள் வகுப்புதான். இவர்களின் தங்கைகளும் எங்களுடன் தான் படித்தனர்,
இவர்கள் ஒன்றாக பள்ளி சென்று வருவதுதான் வழக்கம். வருண் , ராஜ் மற்றும் வேணி மூவரும் சைக்கிள் பயன்படுத்துவதால் மாலை வரும் போது அவர்களுடன் சேர்ந்து வருவது வழக்கம்.
அவர்கள் மூவரும் சொந்தக்காரர்கள் , நண்பர்கள் . அவர்களது தம்பி , தங்கைகளும் அதே பள்ளிதான். அதனால் சேர்ந்தே பள்ளிக்குச் சென்று சேர்ந்தே பள்ளிக்கு வருவர். அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை அடித்துக் கொள்ளவே முடியாது. ரொம்ப ஜாலியாக நேரம் செல்லும். அவர்களும் பள்ளியில் ஒரு தனிக்குழு.
ஆனாலும் பல நாட்கள் பள்ளிக்கு பேருந்தில் செல்வேன். அதிலும் எனக்கு சிறிய வகுப்பினர் பலர் நண்பர்கள். எந்த ஒரு விகற்பமும் இல்லாமல் அனைத்து வயதினரிடம் பழகலாம். பெரியவர்கள் மனதில் தவறான எண்ணங்கள் தோன்றலாம். பெரும்பாலான தவறுக்கு குழந்தைகள் அப்பாற்பட்டவர்கள். பெற்றோர்களின் பழக்க வழக்கங்களே அவருக்கும் ஏற்படுகிறது.
காலையில் பள்ளிக்கு தனியார் பேருந்தில்தான் செல்ல வேண்டும். டிக்கெட் காசு எவ்வளவு தெரியுமா? இரண்டே ரூபாய். இன்னொரு பேருந்து ஒன்று உள்ளது. அதற்கு ஒரு ரூபாய் பேருந்து கட்டணம். எனக்குத் தெரிந்து மிகக்குறைவான அளவு கட்டணத்தில் நான் பயணம் செய்தது பள்ளி செல்லும் காலகட்டத்தில்தான்.
ஒரு ரூபாய்க்கு நாலும் ஏ போர் சீட்டும் , நாலனா கொடுத்தும் ஒரு பேனாவிற்கு இங்க் ஊற்றிக் கொள்ளலாம். இப்போது எல்லாம் விலைவாசி ஏறிவிட்டது.
மாலையில் வீட்டுக்கு செல்வதற்கு அரசு பேருந்து உள்ளது. அதற்கு இலவச பாஸ் உள்ளது. பேருந்துக்கு காத்திருப்பதில் ஒரு அரசியலே நடக்கும். ஒரு மளிகைக் கடையின் வெளியில் காத்திருப்போம். அங்கே ஒரு திண்டு இருக்கும். அதில் இடம்பிடிக்க போட்டி நடக்கும். யார் முன்னால் பள்ளிப் பிரேயர் முடிந்ததும் உடனே வருகிறார்களோ அவர்களுக்கு அந்த இடம் கிடைக்கும்.
நான் பலநாட்கள் பிடித்துவிடுவேன். அங்கிருக்கும் மளிகைக்கடையில் அரைத்த கல்லை பர்ஃபி , பால்கோவா வாங்கிச் சாப்பிடுவோம். இவை இரண்டையும் நான் ரொம்பநாள் வாங்கி சாப்பிட்டேன். எனக்கு இனிப்புகள் என்றால் மிகப்பிரியம்.
பிரேயர் பத்தி உங்கிட்ட சொல்லனும் பெக்கி. பிரேயர்ல வாய்ப்பாடு யாரவது காலையில் சொல்லனும். மாலை வகுப்பு தூய்மை செய்வது யாரென்று அறிவிக்கப்படும்.
இதிலும் பாலின பேதம் உண்டு. வகுப்பைப் பெருக்க ஒரு பெண் மாணவியும் , பென்ச் தூக்கி வைக்க இரு ஆண் மாணவர்களும் இருப்பர். இது அரசு பள்ளி அதனால் தனியாக சுத்தம் செய்ய ஆட்கள் கிடையாது. மாணவர்கள் தான் பார்த்துக் கொள்வர். செஞ்சிலுவைச் சங்கத்தில் உள்ளவர்கள் பள்ளியின் சுற்றுப்புறத் தூய்மையைப் பார்த்துக் கொள்வர். எனக்கு முதலுதவி செய்வதில் விருப்பம். அதனால் நான் சர்வீஸ் குரூப்பில் இருந்தேன்.
பிரேயரில் எப்பவும் சிக்கலான வாய்ப்பாடு எனக்கு அமையும். ஒன்பது , பத்தொன்பது இவைதான் அமையும். அதிலும் பத்தொன்பது பெருக்கல் ஒன்பதோ அல்லது பத்தொன்பதோ சொல்லும் போது சரியாகத் தடுமாறுவேன்.
அப்படி என்ன இருக்கிறதோ அந்த பத்தொன்பதில். எனக்கு மட்டும் அதுதான் அதிகமாக வரும். இந்த வழிபாட்டுக் கூட்டங்களை விட . எனக்கு வெள்ளிக் கிழமை நடக்கும் காமன் பிரேயர் பிடிக்கும். அது ஒரு மும்மத வழிபாடு. எங்கள் பள்ளியில் இஸ்லாமியர்கள் படிக்க வில்லை. ஆனால் கிறிஸ்துவர்கள் இருந்தார்கள். காமன் பிரேயரில் இரு மதப் பாடல்களும் இடம்பெறும்.
எனக்கு “ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.” என்ற பாரதியின் பாடலும் , ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே பாடல் இரண்டும் மிகவும் பிடித்தம். நான் ஒரு ஓம் சக்தி பக்தை. தினமும் உறங்கும் முன் ஓம் சக்தியை நினைத்துக் கொண்ட பின்தான் உறங்குவேன். அந்த கால கட்டங்களில் எனக்கு பக்தி அதிகம். அதெல்லாம் ஒரு காலம். வெள்ளிக் கிழமைனா கோயிலுக்குப் போவேன். வயது அதிகமாக சில கருத்துகளும் மாறுகின்றது. எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதில் மூழ்கி அடுத்தவர் உயிரைப் பறிக்கும் அளவுக்கு போகுதல் என்பது கூடாது. கடவுளை உருவாக்கியவனும் மனிதன் தான். இது என்னுடைய கருத்து இல்லை. அறிஞர்கள் சொன்னது. தற்போது வரை ஒன்று மட்டும் நிச்சயம். கோயிலுக்குச் சென்றால் எனக்காக என்னால் வேண்ட முடிவது இல்லை. பொதுவாக அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்று வேண்டிவிட்டு வந்துவிடுவேன். எனக்காக ஏதாவது வேண்டுமென்று நினைத்தால் கோயிலில் அது மறந்துவிடுகிறது.
கடவுளின் சன்னிதானம் ஏதோ ஒரு அமைதியைத் தருகிறது. அங்கு தியானம் செய்வேன். கோயில்லுக்குச் செல்லும் போது மனநிம்மதியைத் தேட வேண்டும். அதைத் தவிர அனைத்தையும் கேட்பது. கடவுள் என்ன கடைக்காரரா? இதைத் தந்தால் அதைத் தருவேன் என்று சொல்வதற்கு? என்னமோ? இப்படி எல்லாம் பேசிட்டு இருந்தா அப்புறம் நம்மளை ஆண்டி இந்துனு சொல்லிருவாங்க. செய்த பாவங்களை நீரில் முழ்குவதால் தீர்க்க முடியுமா என்ன?
கர்மவினையை நம்புகிறவர்கள் எப்படி நீரில் மூழ்கினால் பாவம் தீர்க்கப்படும் என்று நம்புகிறார்கள் தெரியவில்லை. இரண்டும் முரண்கள். எனக்கு எதுக்கு இதெல்லாம் ? நம்ம கொள்கைப்படி எல்லா மதக் கடவுளையும் வணங்க வேண்டியதுதான்.
“நீ சொல்றதும் கரக்ட்தான் அரசி.” தேவ் டைரியின் வழியாக யாழரசியின் எண்ணத்திற்கு வழி மொழிந்து கொண்டிருந்தான்.
இயற்கையை கடவுளாகப் பார்த்தால் நன்றாக இருக்கும். சில பழங்குடியினர் மரத்தினை கடவுளாக வணங்குவார்கள். சூரியன் , மழை ,மரம் போன்ற இயற்கைச் சக்திகள் தான் நம்மைக் காப்பாற்றுகின்றன.
மதர் நேச்சர் ஆகிய இயற்கை அன்னையைத் தொழ வேண்டியதுதான். இயற்கை அன்னை என்று சொன்னதுதான் நியாபகம் வருகிறது. தமிழ்நாட்டில் நீ எந்தப் பக்கமும் திரும்பினாலும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலைப் பார்க்கலாம். ஆராய்ச்சி முடிவுகளின் படி பெண்தெய்வங்கள் அதிகமாக இருப்பதால் தமிழ் மக்கள் பெண்வழிச் சமூகத்தைச் சார்ந்தவர்களாக ஆதியில் இருந்திருக்கிறார்கள்.
இடைக்காலத்தில் அனைத்தும் மாறி அடிமை நிலையில் சிக்கிக் கொண்டனர். நல்ல வேளை மிகவும் பெண்களை அடிமைப் படுத்தும் குடும்பத்தில் நான் பிறக்கவில்லை. என் தாய்க்குலங்கள் புத்திசாலிகள், அவர்கள் படிக்கவில்லை எனினும் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியும். கொள்ளுப்பாட்டியே மிகவும் தைரியமானவர் எனும் போதும் அவரின் நான்காம் தலைமுறை வாரிசான நான் எவ்வளவு சுதந்திரமாகச் சிந்திப்பேன்.
இன்னொன்று தெரியுமா? என் அம்மாவின் மேலும் இரு குணங்கள் எனக்கு உண்டு. ஒன்று நாங்கள் இருவரும் அழ மாட்டோம். பொசுக் பொசுக் கென்று தண்ணீர் குழாய் லீக் ஆகாது. இரண்டாவது யாரவது மிரட்டினால், அடிக்க வந்தால் “உன்னால் அடிக்க மட்டும்தான் முடியும். அடிச்சுக்கோ “ என்று எதிர்த்து அப்படியே நிற்போமோ தவிர எங்கள் கருத்தில் இருந்து மாற மாட்டோம்.
அழுகை என்பது வரம். அழுவது ஒரு தெரபி. எனக்கு மட்டும் ஏன் இந்த கண்ணீர் வராம சதி செய்யுதுனு ரொம்ப நாள் யோசிச்சுருக்கேன். இதுக்கான பதில் ரொம்ப வருஷம் கழிச்சுதான் எனக்குக் கிடைச்சுது. எனக்கு கண்ணீர் கொட்டாவி விட்டால் வரும். இரவில் ரொம்ப நேரம் புத்தகம் படித்தால் வரும். ஆனால் பிரச்சினை ஏதாவது வந்தால் கண்ணீர் வராது. கோபம் வரும். அப்புறம் அதை எப்படி தீர்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.
எளிதாக அழ முடிந்தவர்களும் , தூங்க முடிந்தவர்களும் கொடுத்து வைத்தவர்கள். அழும் பெண்கள் பரிதாபத்திற்கு உரியவர்களாகவும் நல்லவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். என்னை மாதிரி ஆட்கள் என்றும் அவ்வாறு பார்க்கபட மாட்டார்கள்.
இதெல்லாம் விடு நாம ஏன் அழுகை , தூக்கம்னு பேசிட்டு இருக்கோம். மணி பன்னிரெண்டு ஆகப்போகுது. காலையில் வேற சமைக்கனும். நாளைக்கு என்னோட முதல் பாய்பிரண்டு பத்தி சொல்றேன். பாய் பெக்கி.
‘என்னது மறுபடியும் பாய்பிரண்டா? இதுக்கு முன்னாடிதான் காதல்ல விழ மாட்டேன் சபதம் எடுத்தா? குழப்பமா இருக்கே? ஒருவேளை லவ்வே பன்ன மாட்டேனு சொல்றவங்க முதல்ல லவ்வுல விழுவாங்க அந்த மாதிரி லவ் பன்னிட்டாளோ?’ தேவ் யோசனையில் முழ்கிவிட்டான்.
அலைவான்...............