Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

Status
Not open for further replies.

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் 9:

நட்புக்குள் பொய்கள் கிடையாது…

நட்புக்கு தன்னலம் கிடையாது…

என்ன பெக்கி பாட்டு பாடறனு பார்க்கிறியா? எனக்கு பிடித்த பாடல் வரிகளில் ஒன்று. எல்லா உறவுகளும் நாடகத்தில் வருகிறபடி ஒரு சோதனையைச் சந்திக்கும். அது இயல்பு. அந்த சோதனை உறவை உறுதிபடுத்தலாம். இல்லை பிளவையும் ஏற்படுத்தலாம்.

அது சூழ்நிலையும் , மனித இயல்பையும் பொறுத்தது.

ஆறாம் வகுப்பில் ஒரு சம்பவம் நடந்து அது அதிருப்தியை கிளப்பியது. வகுப்பில் அனைவரையும் விட பொது அறிவு மிகுந்தவர்கள் நானும் விஷ்வாவும் தான். ஆனால் நான் இரண்டு , மூன்றாம் ரேங்கில்தான் இருப்பேன். எனக்கு முதலிடத்தின் மீது வெறி எல்லாம் கிடையாது. அது மனோவுக்கு உரிய இடம். என் தோழி முதலிடம் எடுத்தால் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் என்னையும் மீறி அந்த சம்பவம் நடந்து விட்டது. ஒரு தேர்வில் நான் மனோவை விட ஒன்பது மதிப்பெண் அதிகம் எடுத்துவிட்டேன். எடுத்தால் கூட பரவாயில்லை. ஆனால் இந்த நிகழ்வு ஒரு மணி நேரத்திற்குள் காட்டுத்தீ போன்று பரவிவிட்டது. சொல்லப் போனால் இதை என்னால நம்பக்கூட முடியவில்லை.

நான் ஒரு பாடத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்ததையும் நம்பவில்லை. எனக்கே அது ஆச்சரியம். ரேங்க் விஷயத்தைப் பற்றி அனைவரும் கேள்வி கேட்க மனோவுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. இதுவரை அவளுக்கு என்று மட்டும் இருந்த ஒன்று என்னால் பறிக்கப்பட்டது. அது நிச்சயமாக வருத்தத்தை ஏற்படுத்தும். இதனால் நாங்கள் பிரிந்தோமா என்றால் அதுதான் இல்லை. ஆனால் அதற்கு அடுத்த வருஷம் எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டது. அதையும் சரி செய்து விட்டோம். ஆனால் அதே ஏழாம் வகுப்பில் இன்னொரு நட்பை நான் தூக்கி எறிந்தேன்.

எஸ்…நான் தான் செய்தேன். காதல் என்ற வார்த்தை செய்ய வைத்தது. அதற்குப்பிறகுதான் மொத்த பள்ளியே என்னை வாய்பிளந்து பார்த்தது. வாயாடி யாழரசிக்குள் இப்படி ஒரு பிடிவாதமா என்று அதிர்ந்து பார்த்த விசயம்.

விஷ்வா என்னை காதலித்தான் என்ற உண்மை உறைய வைத்தது. என்னைப் பற்றி அவன் எழுதிய கவிதை பேப்பர் அஜியின் மூலம் என்னை வந்தடைந்தது.

அன்றைய நாள் , செஞ்சிலுவை சங்கத்தில் இருக்கும் எங்கள் வகுப்பில் உள்ளவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடும் நாள். வழக்கமாக உணவு இடைவேளை முடிந்து அப்பணி நடக்கும். நான் மதிய உணவு உண்ட உடனே நூலகம் சென்று விடுவேன். அன்று விஷ்வாதான் லேட் ஆகிவிட்டது , கிளம்பு என்று சொன்னான்.

அவன் முன்னே சென்றுவிட நான் பின்னால் சென்றேன். தூய்மைப்பணி பள்ளியைச் சுற்றி ஆரம்பித்தது. பெண் மாணவர்கள் ஒரு பக்கமும் , ஆண் மாணவர்கள் ஒரு பக்கமும் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அஜியும் நானும் பேசிக் கொண்டே சுத்தம் செய்தோம். அப்போதுதான் அந்த கவிதைப் பேப்பர் பற்றி அஜி என்னிடம் கூறி காண்பித்தாள். விஷ்வா விரும்பியது என்னை என்று உறுதியும் செய்தாள். மற்றவர்களும் உறுதி செய்தனர். சுத்தம் செய்து முடித்து நாங்கள் அனைவரும் வகுப்புக்குத் திரும்பினோம். எனக்கு கண்மண் தெரியாத கோபம். நேராக முதல் பெஞ்சில் விஷ்வா அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்றேன்.

அவனை பார்த்து , “பிரண்டா இருந்த நீ இப்படி பன்னுவேனு நினைக்கல. இதுக்கு மேல நான் எப்பவும் உங்கிட்ட பேச மாட்டேன்” இந்த இரண்டு வாக்கியங்களை பேசிவிட்டு என் இடத்திற்கு வந்து விட்டேன். வகுப்புகள் தொடங்கியது. எங்கள் நட்பு அதோடு முடிவு பெற்றது. அதற்குப் பிறகு நான் அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. இரண்டு வருடங்கள் தொடர்ந்து அங்கு படித்தேன். எவ்வளவு பேர் அவனிடம் பேச சொல்லி என்னிடம் கூறினார்கள் தெரியுமா? இவ்வளவு ஏன் கண்ணன் சாரை வைத்து அவனிடம் பேச சொன்னார்கள். பள்ளியே பயப்படும் கண்ணன் சாரிடம் “எனக்கு பேச இஷ்டமில்லை. என்னால் பேச முடியாது சார்” என்று பதில் கொடுத்துவிட்டேன்.

யாராலும் என்னை அசைக்கவே முடியவில்லை. நானும் அசரவில்லை. அவனும் என்னிடம் பேச முயற்சிப்பதை நிறுத்தவில்லை.

அஜிதான் “யாழ் நீ பேசுனா பேசிட்டே இருப்ப. நீ பேசறத நிறுத்தினா? யாராலும் உன்னை பேச வைக்க முடியாது “ என்று சொல்வாள்.

விஷ்வாவைப் பற்றி தெரிய வந்தது பிப்ரவரி பதிநான்கு.

என்னுடைய மிகச்சிறந்த ஆண் நண்பனின் நட்பு முறிந்த நாள். இப்பொழுது வரை என்னால் நட்பில் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்றவர்கள் வாழ்க்கை பற்றி எனக்கு கருத்து இல்லை. ஆனால் நான் இப்படிதான். என்னைப் பொறுத்த வரை நட்பு புனிதமானது. அதில் காதல் என்ற வைரஸ் கரப்ட் செய்வது பிடிக்காது.

தேவ் மறுபடியும் “வாட்…???” என்று கத்தி விட்டான். “அப்படி என்ன பிடிவாதம் பேபி உனக்கு. பன்னிரெண்டு வயசுல உனக்கு என்ன ஆட்டியூட். “ பெருமூச்சு விட்டான் தேவ். யாரென்றே தெரியாத விஷ்வாவின் மீது பரிதாபம் தோன்றியது. “பெஸ்ட் பிரண்ட் டர்ண்டு இண்டு அ டிராமா “

எனக்கு புரியுது பெக்கி. எனக்கு முதிர்ச்சி இல்லாத வயது அது. ஆனால் இப்போது என்றாலும் என் முடிவு மாற வாய்ப்பில்லை. ஒரு பதினாங்கு பதினைந்து வயது வரை நான் இப்போது சரி என்று சொல்லும் விஷயங்களை அனைத்தையும் தவறு என்று கூறியிருக்க வாய்ப்பு உள்ளது. அப்போது உலக அனுபவம் குறைவுதான்.

ஆண்களை மேலும் வெறுக்கத் தொடங்கிய காலமது.

“ஓ காட்..வொய்?” தேவ் அவளிடம் பேசுவது போல் காற்றிடம் தனியாகப் பேசினான்.

ஏன் பெக்கி? கொஞ்சம் அதிகமாக யோசிக்கும் பெண்கள் தன்னைச் சுத்தி என்ன நடக்குதுனு பார்ப்பாங்க? இப்படித்தான் தான் நடத்தப்படுவோம் என்பது உரைக்கும். நீ எவ்வளவு சிறந்தவளாக இருந்தாலும் நீ பெண் அதனால் இதற்கு மேல் உனக்கு ஒன்றுமில்லை என்பது புரியும். இங்குதான் பிரச்சினை ஆரம்பம். யோசிக்காமல் அப்படியே இந்த சமூகம் சொல்வதை ஏற்றுக் கொண்டால் எந்த மனக்கஸ்டம் இல்லை என்பது போல சிந்தனை செல்லும். ஆனால் நான் அப்படி இல்லை. எது தவறோ அதை கண்டிப்பாக என் மனம் ஏற்றுக் கொள்ளாது. எதிர்த்து செயல்பட மூளை தூண்டிவிடும்.

சரி நம்ம டிசைன் அப்படி. ஆனால் விஷ்வா விஷயம் என்னை பாதித்தது. நான் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர இதுவும் ஒரு காரணம். “மென் ஆர் டிரபிள் பாஃர் மீ”.

அதுவுமில்லாமல் நான் 13 வயதிலேயே நான் ஒரு முடிவு எடுத்திருந்தேன். எனக்கு என்வீட்டில் சுதந்திரம் இருந்தது. சொல்லப்போனால் என்னை மாதிரி ஒருத்தியை சகித்துக் கொண்டு வளர்த்தற்காக அவர்களுக்கு எப்போதும் நன்றிகடன் பட்டுள்ளேன். எனக்கு ஒன்று தெரியும் . நான் வாழ்நாளில் எதுவும் அவர்கள் இஷ்டபடி செய்யப்போவதில்லை, ஒரு விஷயத்தைத் தவிர. கல்யாணம். ஆமாம் பெக்கி வீட்டில் யாரைப் பார்க்கிறார்களோ அவர்களைத் திருமணம் செய்வேன். காதல் என்று என் வாழ்வில் இருக்காது. அப்படியே நான் யாரையாவது எனக்கு பிடித்திருந்தாலும் அது காதலாக மாற வாய்ப்பில்லை. முரட்டு சிங்கிள் சங்கத்து மெம்பரா அப்பவே உறுதிமொழி எடுத்துகிட்டேன்.

இன்னொன்று சொல்லட்டுமா ? என்னதான் நான் வீட்டுக்கு அடங்காத பிள்ளை என்றாலும் அவங்க பேச்சை நான் சில விஷயங்களைத் தாண்ட மாட்டேன். அப்புறம் எனக்கும் குடும்ப கௌரவம் ரொம்ப முக்கியம். இப்பவும் அப்படித்தான்.

“எப்படி இவ்ளோ நல்லா திங்க் பன்னற நீ இப்படி ஒரு முடிவ எடுத்த? நானெல்லாம் எனக்கு எங்கம்மா முடிவு செய்த ஒருத்திகிட்ட இருந்து தப்பிக்க எவ்ளோ டிரை பன்றேன் தெரியுமா? நான் லவ் மேரேஜ்தான் செய்வேன். இதுவரைக்கும் எந்த பொண்ணைப் பார்த்தும் நான் லவ்ல விழுகல. அதனால்தான் இப்ப எங்கம்மா பார்த்த பொண்ணுகிட்ட மாட்டிட்டு முழிக்கறேன்.” தேவ் அவளிடம் நேரடியாக உரையாடுவதைப் போல் டைரியை பார்த்துப் பேசினான். “சரி நீ வளர்ந்தக்கு அப்புறம் என்ன நடக்குனு பார்ப்போம்?” கேள்வியுடன் மீண்டும் வாசிக்கத் தொடங்கினான்.

எனக்குப் புரியுது பெக்கி. இப்படி ஒரு முடிவு தவறுதான். ஆனால் குடும்பத்தைத் தவிர எனக்கு வேறு எது முக்கியம் ? அதுமட்டுமில்லாமல் நான் முக்கால் வாசி ஆண்களை வெறுத்தேன். பதிமூன்று வயதில் என்னுடைய பஞ்ச் டையலாக்கே “ஆண்களை எனக்கு பிடிக்காது” இதுதான்.

என் அம்மாய் கூட ரொம்ப கவலைப் பட்டார்கள். “ இந்தபுள்ளை இப்படி இருந்தால் எப்படி கல்யாணம் பன்னிட்டு வாழ்வேன்?” இப்படித்தான் கூறுவார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு அப்படி கூறுவதை விட்டுவிட்டேன். ஆனால் மனதில் இன்னும் வெறுப்பு அதிகமாகிக் கொண்டே போனது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் வீட்டினருக்கு இது தெரியாது.

சரி பெக்கி நான் ரொம்ப போர் அடிக்கிறேன். உன்னைத் தவிர நான் யார்கிட்ட பேச முடியும். சில மனித உணர்வுகளுக்கு முகவரி கிடையாது. யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அவை முகவரியற்றவை. யாரையும் போய் சேராது. எனக்கும் உனக்கும் மட்டும்தான் தெரிந்த ரகசியம். இப்படி முகவரியற்ற இன்னும் மூன்று பேர் பற்றி உனக்கு அப்புறம் சொல்றேன்.

ஏழாவது படிக்கும் போது இன்னும் இரண்டு புது ஆசிரியர்கள் வந்தார்கள். ஆசிரியர் மாற்றம் வழக்கமாக வருடத்திற்கு வருடம் நடப்பதுதான்.

அறிவியல் பாடம் எடுக்க ஒரு ஆசிரியை வந்தார். அவர் பெயர் சவிதா. அந்த ஆசிரியை இருக்கும் போது அறிவியல் பாடத்தில் அதிக தடவை நூற்றுக்கு நூறு எடுப்பேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போதெல்லாம் எனக்கு நூலகத்தில் இரு புத்தகங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய கசின் சிஸ்டரின் பிராக்ஸியாக ஒரு புத்தகம் எடுத்தேன். ஒரு நாளுக்கு இரு புத்தகங்கள் படிப்பது வாடிக்கை. மகாபாரதம் , இராமாயணம் முதற்கொண்டு அறிவியல் தொடர்பான என எதையும் விட மாட்டேன். மூளைக்குத் தீனி போட்டுக்கொண்டே இருப்பேன்.

சவிதா டீச்சருக்கு நான் அசிஸ்டெண்ட் மாதிரி. அவர் எனக்கு அறிவியலில் இருக்கும் ஆர்வத்தை உணர்ந்தார். என்னை ஊக்கப்படுத்தினார்.
அறிவியல் ஆர்வம் இருந்தாலும் என்னால் தமிழில் நன்றாக கட்டுரை எழுதமுடியும். ஆறாம் வகுப்பிலிருந்து கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்கிறேன். முதல் தடவை எழுதும் போது எனக்கு உதவியது சாந்தினி அக்கா. அவர்கள் என் ஊர்தான். அப்துல் கலாம் அய்யா கையால் இளம் விஞ்ஞானி விருது வாங்கியவர். அவர்களும் பேச்சு போட்டி , கட்டுரைப் போட்டி என்று கலக்குவார். அக்காதான் எனக்கு உதவியவர். என்னுடைய மெண்டர் அவர்தான். சிறுவயதிலிருந்தே இருவருக்கும் நல்ல பரிச்சயம். ஒரே ஊர் அல்லவா?

கட்டுரைப் போட்டிக்கு நான் காந்தியடிகளைப் பற்றிக எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் நூலகத்தில் எனக்கு காமராஜர் பற்றிதான் புத்தகம் தான் கிடைக்கும். காமராஜரைப் பற்றி பற்றி படிக்க படிக்க அவரை மிகவும் பிடித்தது. அவரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாகவும் அறிவித்திருந்தது அரசாங்கம். கட்டுரை போட்டி, பேச்சு போட்டி , ஓவியப் போட்டி இதில் எல்லாம் நான் பரிசு வாங்கினாலும் , நான் மிகவும் பிரபலமானது வினாடி வினா போட்டிக்குத்தான்.

அந்த டைம்ல யாருமே என்னை வினாடி வினா போட்டியில் தோற்கடிக்க முடியல. நான் இருந்தா அந்த டீம் ஜெயிக்கும். கொஞ்சம் அகம்பாவம் போல தோணாலாம் பெக்கி. ஆனால் உண்மை இதுதான் பேபி.

வினாடி வினா போட்டியில் ஒரு தடவை ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது. விஷ்வா எனக்கு எதிர் டீம்ல இருந்தான். இந்தப் போட்டி நான் அவங்கிட்ட பேசாமல் போனதுக்கு அப்புறம் நடந்தது. ரொம்ப கடுமையான போட்டி. ஆனால் நான் விஷ்வா டீமை தோற்கடித்துவிட்டேன். பரிசும் எங்கள் டீம் வாங்கியது. விஷ்வா பள்ளிக் கட்டிடத்தின் வெளியில் சென்று சுவற்றில் ஓங்கி எட்டி உதைத்தான். அது போட்டியில் தோற்ற கோபமா? இல்லை என்னிடம் தோற்றுவிட்ட கோபமா? என்று எனக்கு இப்போது வரைக்கும் தெரியவில்லை.

ஏழாம் வகுப்பிலும் நன்றாகப் படித்தேன். சைக்கிள் இருப்பதால் அதில் பள்ளி சென்று வந்தேன். பள்ளி செல்லும் போது எனக்கு துணை இருக்காது. ஆனால் வீட்டுக்கு திரும்ப வரும் போது துணை இருக்கும்.

பள்ளிக்கு தார்ச்சாலை வழியை முழுவதுமாக பயன்படுத்த வேண்டியது இல்லை. பாதி தூரம் சென்றதும் காட்டு வழியில் செல்வோம். மனோ வீடு அந்தக் காட்டு வழியில்தான் அமைந்துள்ளது.

உனக்குத் தெரியுமா? நான் படித்த பள்ளியில்தான் என் அம்மாவும் படித்தார்கள். அவர்கள் சென்ற பாதையில் சைக்கிளில் சென்றால் பள்ளிகூடத்திற்குச் செல்லலாம். பேருந்தில் சென்றால் வாய்ப்பில்லை.

பள்ளியில் எங்களின் நட்பைப் பார்த்தால் பொறாமைப் படுவதற்கு ஒரு கும்பல் இருக்க என்னை வியக்க வைத்தது ஒரு குழு. பள்ளி செல்வதற்கு இருக்கும் காட்டுவழியில் எதிரில் இன்னொரு காட்டுவழி இருக்கும். அதன் வழியில் சென்றால் ஒரு ஊர் உள்ளது. ஊர் என்பதை விட தோட்டம் என்பதுதான் பொருந்தும். அந்தத் தோட்டத்தில் நாலைந்து குடும்பங்கள் இருந்தனர். மனோவின் சொந்தக்காரர்கள்தான். அவர்களின் குழந்தைகளும் எங்களோடுதான் படித்தனர். வருண், ராஜ் மற்றும் வேணி இவர்கள் மூவரும் எங்கள் வகுப்புதான். இவர்களின் தங்கைகளும் எங்களுடன் தான் படித்தனர்,

இவர்கள் ஒன்றாக பள்ளி சென்று வருவதுதான் வழக்கம். வருண் , ராஜ் மற்றும் வேணி மூவரும் சைக்கிள் பயன்படுத்துவதால் மாலை வரும் போது அவர்களுடன் சேர்ந்து வருவது வழக்கம்.

அவர்கள் மூவரும் சொந்தக்காரர்கள் , நண்பர்கள் . அவர்களது தம்பி , தங்கைகளும் அதே பள்ளிதான். அதனால் சேர்ந்தே பள்ளிக்குச் சென்று சேர்ந்தே பள்ளிக்கு வருவர். அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை அடித்துக் கொள்ளவே முடியாது. ரொம்ப ஜாலியாக நேரம் செல்லும். அவர்களும் பள்ளியில் ஒரு தனிக்குழு.

ஆனாலும் பல நாட்கள் பள்ளிக்கு பேருந்தில் செல்வேன். அதிலும் எனக்கு சிறிய வகுப்பினர் பலர் நண்பர்கள். எந்த ஒரு விகற்பமும் இல்லாமல் அனைத்து வயதினரிடம் பழகலாம். பெரியவர்கள் மனதில் தவறான எண்ணங்கள் தோன்றலாம். பெரும்பாலான தவறுக்கு குழந்தைகள் அப்பாற்பட்டவர்கள். பெற்றோர்களின் பழக்க வழக்கங்களே அவருக்கும் ஏற்படுகிறது.

காலையில் பள்ளிக்கு தனியார் பேருந்தில்தான் செல்ல வேண்டும். டிக்கெட் காசு எவ்வளவு தெரியுமா? இரண்டே ரூபாய். இன்னொரு பேருந்து ஒன்று உள்ளது. அதற்கு ஒரு ரூபாய் பேருந்து கட்டணம். எனக்குத் தெரிந்து மிகக்குறைவான அளவு கட்டணத்தில் நான் பயணம் செய்தது பள்ளி செல்லும் காலகட்டத்தில்தான்.

ஒரு ரூபாய்க்கு நாலும் ஏ போர் சீட்டும் , நாலனா கொடுத்தும் ஒரு பேனாவிற்கு இங்க் ஊற்றிக் கொள்ளலாம். இப்போது எல்லாம் விலைவாசி ஏறிவிட்டது.

மாலையில் வீட்டுக்கு செல்வதற்கு அரசு பேருந்து உள்ளது. அதற்கு இலவச பாஸ் உள்ளது. பேருந்துக்கு காத்திருப்பதில் ஒரு அரசியலே நடக்கும். ஒரு மளிகைக் கடையின் வெளியில் காத்திருப்போம். அங்கே ஒரு திண்டு இருக்கும். அதில் இடம்பிடிக்க போட்டி நடக்கும். யார் முன்னால் பள்ளிப் பிரேயர் முடிந்ததும் உடனே வருகிறார்களோ அவர்களுக்கு அந்த இடம் கிடைக்கும்.

நான் பலநாட்கள் பிடித்துவிடுவேன். அங்கிருக்கும் மளிகைக்கடையில் அரைத்த கல்லை பர்ஃபி , பால்கோவா வாங்கிச் சாப்பிடுவோம். இவை இரண்டையும் நான் ரொம்பநாள் வாங்கி சாப்பிட்டேன். எனக்கு இனிப்புகள் என்றால் மிகப்பிரியம்.

பிரேயர் பத்தி உங்கிட்ட சொல்லனும் பெக்கி. பிரேயர்ல வாய்ப்பாடு யாரவது காலையில் சொல்லனும். மாலை வகுப்பு தூய்மை செய்வது யாரென்று அறிவிக்கப்படும்.

இதிலும் பாலின பேதம் உண்டு. வகுப்பைப் பெருக்க ஒரு பெண் மாணவியும் , பென்ச் தூக்கி வைக்க இரு ஆண் மாணவர்களும் இருப்பர். இது அரசு பள்ளி அதனால் தனியாக சுத்தம் செய்ய ஆட்கள் கிடையாது. மாணவர்கள் தான் பார்த்துக் கொள்வர். செஞ்சிலுவைச் சங்கத்தில் உள்ளவர்கள் பள்ளியின் சுற்றுப்புறத் தூய்மையைப் பார்த்துக் கொள்வர். எனக்கு முதலுதவி செய்வதில் விருப்பம். அதனால் நான் சர்வீஸ் குரூப்பில் இருந்தேன்.

பிரேயரில் எப்பவும் சிக்கலான வாய்ப்பாடு எனக்கு அமையும். ஒன்பது , பத்தொன்பது இவைதான் அமையும். அதிலும் பத்தொன்பது பெருக்கல் ஒன்பதோ அல்லது பத்தொன்பதோ சொல்லும் போது சரியாகத் தடுமாறுவேன்.

அப்படி என்ன இருக்கிறதோ அந்த பத்தொன்பதில். எனக்கு மட்டும் அதுதான் அதிகமாக வரும். இந்த வழிபாட்டுக் கூட்டங்களை விட . எனக்கு வெள்ளிக் கிழமை நடக்கும் காமன் பிரேயர் பிடிக்கும். அது ஒரு மும்மத வழிபாடு. எங்கள் பள்ளியில் இஸ்லாமியர்கள் படிக்க வில்லை. ஆனால் கிறிஸ்துவர்கள் இருந்தார்கள். காமன் பிரேயரில் இரு மதப் பாடல்களும் இடம்பெறும்.

எனக்கு “ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.” என்ற பாரதியின் பாடலும் , ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே பாடல் இரண்டும் மிகவும் பிடித்தம். நான் ஒரு ஓம் சக்தி பக்தை. தினமும் உறங்கும் முன் ஓம் சக்தியை நினைத்துக் கொண்ட பின்தான் உறங்குவேன். அந்த கால கட்டங்களில் எனக்கு பக்தி அதிகம். அதெல்லாம் ஒரு காலம். வெள்ளிக் கிழமைனா கோயிலுக்குப் போவேன். வயது அதிகமாக சில கருத்துகளும் மாறுகின்றது. எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதில் மூழ்கி அடுத்தவர் உயிரைப் பறிக்கும் அளவுக்கு போகுதல் என்பது கூடாது. கடவுளை உருவாக்கியவனும் மனிதன் தான். இது என்னுடைய கருத்து இல்லை. அறிஞர்கள் சொன்னது. தற்போது வரை ஒன்று மட்டும் நிச்சயம். கோயிலுக்குச் சென்றால் எனக்காக என்னால் வேண்ட முடிவது இல்லை. பொதுவாக அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்று வேண்டிவிட்டு வந்துவிடுவேன். எனக்காக ஏதாவது வேண்டுமென்று நினைத்தால் கோயிலில் அது மறந்துவிடுகிறது.

கடவுளின் சன்னிதானம் ஏதோ ஒரு அமைதியைத் தருகிறது. அங்கு தியானம் செய்வேன். கோயில்லுக்குச் செல்லும் போது மனநிம்மதியைத் தேட வேண்டும். அதைத் தவிர அனைத்தையும் கேட்பது. கடவுள் என்ன கடைக்காரரா? இதைத் தந்தால் அதைத் தருவேன் என்று சொல்வதற்கு? என்னமோ? இப்படி எல்லாம் பேசிட்டு இருந்தா அப்புறம் நம்மளை ஆண்டி இந்துனு சொல்லிருவாங்க. செய்த பாவங்களை நீரில் முழ்குவதால் தீர்க்க முடியுமா என்ன?

கர்மவினையை நம்புகிறவர்கள் எப்படி நீரில் மூழ்கினால் பாவம் தீர்க்கப்படும் என்று நம்புகிறார்கள் தெரியவில்லை. இரண்டும் முரண்கள். எனக்கு எதுக்கு இதெல்லாம் ? நம்ம கொள்கைப்படி எல்லா மதக் கடவுளையும் வணங்க வேண்டியதுதான்.

“நீ சொல்றதும் கரக்ட்தான் அரசி.” தேவ் டைரியின் வழியாக யாழரசியின் எண்ணத்திற்கு வழி மொழிந்து கொண்டிருந்தான்.

இயற்கையை கடவுளாகப் பார்த்தால் நன்றாக இருக்கும். சில பழங்குடியினர் மரத்தினை கடவுளாக வணங்குவார்கள். சூரியன் , மழை ,மரம் போன்ற இயற்கைச் சக்திகள் தான் நம்மைக் காப்பாற்றுகின்றன.

மதர் நேச்சர் ஆகிய இயற்கை அன்னையைத் தொழ வேண்டியதுதான். இயற்கை அன்னை என்று சொன்னதுதான் நியாபகம் வருகிறது. தமிழ்நாட்டில் நீ எந்தப் பக்கமும் திரும்பினாலும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலைப் பார்க்கலாம். ஆராய்ச்சி முடிவுகளின் படி பெண்தெய்வங்கள் அதிகமாக இருப்பதால் தமிழ் மக்கள் பெண்வழிச் சமூகத்தைச் சார்ந்தவர்களாக ஆதியில் இருந்திருக்கிறார்கள்.

இடைக்காலத்தில் அனைத்தும் மாறி அடிமை நிலையில் சிக்கிக் கொண்டனர். நல்ல வேளை மிகவும் பெண்களை அடிமைப் படுத்தும் குடும்பத்தில் நான் பிறக்கவில்லை. என் தாய்க்குலங்கள் புத்திசாலிகள், அவர்கள் படிக்கவில்லை எனினும் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியும். கொள்ளுப்பாட்டியே மிகவும் தைரியமானவர் எனும் போதும் அவரின் நான்காம் தலைமுறை வாரிசான நான் எவ்வளவு சுதந்திரமாகச் சிந்திப்பேன்.

இன்னொன்று தெரியுமா? என் அம்மாவின் மேலும் இரு குணங்கள் எனக்கு உண்டு. ஒன்று நாங்கள் இருவரும் அழ மாட்டோம். பொசுக் பொசுக் கென்று தண்ணீர் குழாய் லீக் ஆகாது. இரண்டாவது யாரவது மிரட்டினால், அடிக்க வந்தால் “உன்னால் அடிக்க மட்டும்தான் முடியும். அடிச்சுக்கோ “ என்று எதிர்த்து அப்படியே நிற்போமோ தவிர எங்கள் கருத்தில் இருந்து மாற மாட்டோம்.

அழுகை என்பது வரம். அழுவது ஒரு தெரபி. எனக்கு மட்டும் ஏன் இந்த கண்ணீர் வராம சதி செய்யுதுனு ரொம்ப நாள் யோசிச்சுருக்கேன். இதுக்கான பதில் ரொம்ப வருஷம் கழிச்சுதான் எனக்குக் கிடைச்சுது. எனக்கு கண்ணீர் கொட்டாவி விட்டால் வரும். இரவில் ரொம்ப நேரம் புத்தகம் படித்தால் வரும். ஆனால் பிரச்சினை ஏதாவது வந்தால் கண்ணீர் வராது. கோபம் வரும். அப்புறம் அதை எப்படி தீர்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.

எளிதாக அழ முடிந்தவர்களும் , தூங்க முடிந்தவர்களும் கொடுத்து வைத்தவர்கள். அழும் பெண்கள் பரிதாபத்திற்கு உரியவர்களாகவும் நல்லவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். என்னை மாதிரி ஆட்கள் என்றும் அவ்வாறு பார்க்கபட மாட்டார்கள்.

இதெல்லாம் விடு நாம ஏன் அழுகை , தூக்கம்னு பேசிட்டு இருக்கோம். மணி பன்னிரெண்டு ஆகப்போகுது. காலையில் வேற சமைக்கனும். நாளைக்கு என்னோட முதல் பாய்பிரண்டு பத்தி சொல்றேன். பாய் பெக்கி.

‘என்னது மறுபடியும் பாய்பிரண்டா? இதுக்கு முன்னாடிதான் காதல்ல விழ மாட்டேன் சபதம் எடுத்தா? குழப்பமா இருக்கே? ஒருவேளை லவ்வே பன்ன மாட்டேனு சொல்றவங்க முதல்ல லவ்வுல விழுவாங்க அந்த மாதிரி லவ் பன்னிட்டாளோ?’ தேவ் யோசனையில் முழ்கிவிட்டான்.

அலைவான்...............
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -10

தன் கைப்பேசியை உயிர்ப்பித்தான் தேவ். சந்தையில் புதிதாக வந்திருந்த பழத்தின் பெயரைக் கொண்ட கைப்பேசி மெதுவாக ஒளிர்ந்தது. தன் முகத்தைக் காட்டி அதனைத் திறந்தான். இணையத் தொடர்பை ஆன் செய்ததும் அதில் நோட்டிபிகேஷன்சஸ் வரிசையாக வரத் துவங்கியது.

பெரும்பாலானவற்றைப் புறக்கணித்துவிட்டான். முக்கியமான சிலவற்றிற்கு பதில் கொடுத்தான். பெருமூச்சுவிட்டவாறே கைப்பேசியைக் கீழே வைத்தான்.

இன்னும் இரண்டு நாட்களில் பணியில் சேர வேண்டும். ஒரு மாதத்தில் தன் அம்மா பார்த்திருக்கும் பெண்ணிற்கு ஒரு பதிலைக் கூற வேண்டும். பணியைப் பற்றிக் கவலையில்லை. அந்த பெண்தான் பாடாய் அவனைப் படுத்திக் கொண்டிருந்தாள். தற்போது மேலும் ஒன்றாக இந்த டைரியும் அவன் மனதை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.

வெளியில் தெரிந்த இருட்டை வெறித்தான். வெளியுலகை விட காடு அவனுக்கு மகிழ்ச்சியை வழங்கும். இயற்கை அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவன் பணியும் இயற்கையை ஒட்டி அமைந்தது மகிழ்ச்சியே.

காபி ஒன்றைத் தயாரித்தவன் தன் பள்ளி நினைவுகளைப் பற்றிச் சிந்தித்தான். பள்ளியில் அமைதியான மாணவன். ஓரளவு நட்பு வட்டம் உண்டு. அவன் தம்பியின் நினைவு அடிக்கடி எழுவதைத் தடுக்க முடியாது. யாழரசி என்பவள் அடிக்கடி அவன் தம்பியை ஏனோ நினைவு படுத்திச் சென்றாள்.

காஃபியைக் குடித்தவன் மீண்டும் மூடிவைத்த டைரியைத் திறந்தான். ‘இப்ப என்னத்த எழுதிருக்கானு தெரியல? படிப்போம்.’

‘பிரேக் அஃப்’ என்ற தலைப்பில் ஆரம்பித்திருந்தாள்.

பெக்கி ஹாய்.. என்னடா இன்னிக்கு மதியம் எழுதிறேனு நினைக்கிற? இன்று என் செட்யூலில் ஒரு மாற்றம். அதனால் இப்போது நான் ஃப்ரீ. சரி இப்ப நான் என் பர்ஸ்ட் பாய் பிரண்ட் பத்தி சொல்றேன்.

இவன் என் அத்தை பையன். அதான் பிறந்திலிருந்தே தெரிந்தவன். பாய்பிரண்ட் என்றதும் நீ வேற மாதிரி யோசிக்காத பெக்கி. அவன் பேரு பிரசாத். முன்னாடி ஒருடைம் அத்தை ஒருத்தர் என்னைத் தொட்டலில் தாலாட்டி, நான் பறந்து விழுந்த கதை தெரியும் உனக்கு. அந்த அத்தையின் மகன் தான் என் முதல் நண்பன். எங்களுக்குள் அப்போதிருந்தே எங்களுக்குள் ஒரு பந்தம் இருந்தது உண்மை. எனக்கு அவனென்றால் மிகவும் பிரியம். அவனுக்கும்தான். அவனைச் சந்திப்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டும்தான். இதுவரைக்கும் நான் பள்ளி பற்றியே சொன்னேன். ஆனால் பள்ளிவிடுமுறை பற்றிச் சொல்லவே இல்லை.

அம்மா வீட்டில் இருந்தால் அம்மாய் வீட்டிற்கும், என் பெரிய சித்தி வீட்டிற்கும் என மே மாதம் இறக்கைக் கட்டி பறக்கும். அம்மாய் வீட்டிற்கு வந்தால் கிராமத்திற்கு உரிய நுங்கு, ஐஸ்கீரீம் , விளையாட்டு என்று பொழுது போகும்.

“இந்தப்பொண்ணு எதப்பத்தி எழுதறனு சொல்றாளோ அதைத் தவிர மத்த எல்லாத்தையும் எழுதறா. எல்லாம் என் நேரம்?” தேவ் புலம்பினான். “வேற வழி இருக்கா என்ன படிச்சுத்தான் ஆகனும்.” திரும்பவும் படிக்கத் தொடங்கினான்.



பெரிய சித்தி ஊரிலும் , அம்மாய் ஊரிலும் மாகாளியம்மன் பொங்கல் சாட்டு விழா அடுத்தடுத்து வரும். ஊரே காப்புக் கட்டி கலகலவென இருக்கும். இரண்டு ஊருக்கும் மாற்றி மாற்றி செல்வோம். எனக்கு அம்மாய் ஊரில் நடக்கும் திருவிழா மிகவும் ஸ்பெஷல். ஏழுநாட்கள் சாட்டு இருக்கும். ஒவ்வொரு நாள் இரவிலும் கோயிலில் மக்கள் கூடுவர். தாரை, தப்பட்டை முழங்க பூசை நடைபெறும். சில முதியவர்கள் எதாவது ஒரு கதையைப் பாட்டாகப் படிப்பார்கள். அதன் பிறகு சலங்கை கட்டிக்கொண்டு பெரியவர்கள் ஆட , சிறியவர்களும் ஆடுவர். பெண் குழந்தைகளும் ஆடலாம். இரவு பத்து பதினொரு வரை ஆட்டம் தொடரும்.

பொங்கலுக்கு முந்தைய நாள் ஊர்க் கிணற்றில் தீர்த்தம் முத்தரித்து இரவு எத்தனை மணியானாலும் கோவிலில் வைக்க வேண்டும். அதிகாலை நாலு மணி கூட ஆகலாம்.

அதற்குப் பிறகு காலையில் மாவிளக்கு எடுத்துச்செல்ல தயாராக வேண்டும். அப்போது எல்லாம் எனக்கு நீள முடி வேறு. மாவிளக்கு நான் தான் எடுப்பேன். தலைக்கு குளித்ததும் அவசர அவரமாக இரு சித்திகள் , அம்மா தயார் செய்வர். ஒருவர் தலைவாரிவிட்டால் , இன்னொருவர் பூ வைத்து வைக்க இப்படி ரணகளமாக இருக்கும். நான் வேறு தூக்கம் கெட்டால் நன்றாக அடம் பிடிப்பேன்.

அதற்குப்பிறகு ஊர்முறைப்படி வீடுவிடாக தாரை தப்பட்டை அடித்து பெண்களை அழைப்பர். மாவிளக்குடன் பெண்கள் கோவிலுக்குச் சென்று பூசையில் கலந்து கொள்வர். அதற்குப்பிறகு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைப்பர். விருந்தினர்கள் பெரும்பாலனோரின் வீட்டிற்கு வந்திருப்பர். கறி விருந்து அவர்களுக்கு நடக்கும்.

வியாழக்கிழமை முக்கியமான நாள். மறுபூசை மற்றும் மஞ்சள் நீராடல் நடக்கும். நான் அவ்வளவாக விளையாடியதில்லை. ஆனால் அம்மா , சித்திகள் காலத்தில் பயங்கரமாக விளையாடுவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

மஞ்சள் நீராடல் என்றால் எனக்கு பெரிய சித்தி ஊர் தான் நினைவு வரும். அங்கு பாரபட்சம் இல்லாமல் யார்மீது வேண்டுமானால் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விடுவர். நான் நாலாவது படிக்கும் போது அப்படித்தான் மாட்டிக் கொண்டேன். ஒரு அண்ணா என் மீது ஊற்ற முயன்றார். நான் வேறு வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தேன். ஓடிப் போய் விநாயகர் கோவிலுக்கு அருகில் ஒளிந்தால் அங்கேயும் துரத்தி வந்துவிட்டான்.

நான் என்ன செஞ்சேன் தெரியுமா? பயங்கரமாகக் கத்திவிட்டேன். அந்த அண்ணா “ சரி பாப்பா . உன் மேல ஊத்துல “ சொல்லிய பின் விட்டுச் சென்றார்.

“உனக்கெல்லாம் மஞ்சள் தண்ணீல மிளகாய் பொடி கலந்து ஊத்தனும். நீ டைரி எழுதிருக்கறது அப்படி இருக்கு. ஆர்டரா எழுதுறியா நீ ?” டைரியில் இருக்கும் யாழரசியை வார்த்தைகளால் வறுத்த எடுத்தபின் படிப்பதைத் தொடர்ந்தான் தேவ்.

கிரேட் எஸ்கேப் பெக்கி. எங்கள் பெரிய சித்தி ஊரில் பொங்கல் சமயத்தில் மரண மாஸான சம்பவத்தை செய்தேன். அதை இன்னும் ஊர் மக்கள் நினைவு வைத்திருக்கின்றனர்.

அது என்ன சம்பவம்னா? நானும் இன்னும் இரண்டு சிறு பெண்களும் சேர்ந்து வேப்பந்தலை எடுத்துக்கொண்டு மைக்செட்டில் ஒலிபரப்பிய சாமி பாடல்களுக்கு ஊரின் நடுவே உள்ள மேடையில் ஆடிய ஆட்டம் அப்படி. நாங்க ஆடிய நடனத்தால் ஊரில் அவ்வளவு பேமஸ் ஆகிவிட்டோம். நான் வேறு வெளியூர் என்பதால் மக்கள் மறக்கவில்லை. நடனமயில் பட்டத்தை அப்பவே வாங்கிட்டோம். சித்தி ஊரில் இன்னும் நடந்த மறக்கமுடியாத சம்பவம் ஒன்று உண்டு. சித்தி ஊரில் மிகப்பெரிய முளைப்பாரி எடுப்பார்கள். விதவிதமாக பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.

திருவிழா என்றால் ஊரில் பொதுவாக ஒரு திரைப்படம் போடுவார்கள். கில்லி படம் என்றதும் குஷியாகி நான் சில குட்டிஸ்களுடன் பார்க்க ஆரம்பித்தேன். மண்தரையில் துணி விரித்து அமர்ந்து பார்ப்போம். நம்ம உயரத்திற்கு பின்னாடி போனா சரியாக பார்க்க முடியாது. அதனால் முன்னாடி வரிசைதான். அப்போது எனக்கு முடி நீளமாக இருந்தது. ஒற்றைச்சடை சித்தி பின்னிவிட்டிருந்தார்கள். படம் பார்க்கும் ஆர்வத்தில் சடையை எடுத்து பின்னாடி வீச அது பின் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு என்னை விட சில வருடங்கள் பெரியவனின் முகத்தில் விழுந்துவிட்டது. அவன் என்னை தீட்டி தீர்த்துவிட்டான். ஒரு பத்து வயசு சிறு குழந்தை என்றெல்லாம் அவன் பார்க்கவில்லை. செம திட்டு. அதிலிருந்து அவன் எனக்கு எதிரி.

பெரிய சித்தி வீடு பொள்ளாச்சியில் இருக்கிறது. சித்தியின் தென்னை மரத்தோப்பில் தென்னஞ்சீப்பை இருக்கும். அது மிகச் சுவையாக இருக்கும். உருண்டையாக வெள்ளை கிரிக்கெட் பந்து போன்று இருக்கும். அம்மாய் ஊரில் பனஞ்சீப்பைதான் கிடைக்கும்.

இப்படி ஏப்ரல் இறுதி , மே மாதத்தின் முதல் இரு வாரங்கள் திருவிழாவில் கழிந்துவிடும்.

மே மாதத்தின் இடைப்பகுதியில் எங்கள் குல தெய்வக் கோயிலுக்கு தீர்த்தம் , காவடி எடுப்பர். கொடுமுடி சென்று தீர்த்தம் எடுப்பர். நான் ஐந்து வயதில் ஒரு தடவை சென்றதோடு சரி. எனக்கு கூட்டம் என்றால் ஆகாது. அதனால் கோவிலுக்கு நேராக அம்மாவுடன் சென்றுவிடுவேன்.

வெள்ளிக்கிழமை ஒரு கோயிலில் காவடியை இறக்கி வைத்திருப்பர், அங்குதான் பெரிய அளவில் அன்னதானம் நடைபெறும். விதவிதமான கடைகள் இருக்கும். வருடம் முழுவதும் பார்க்காத சொந்தக்காரர்கள் அன்று சந்திப்பர். அப்புறம் என்ன ஒரே கல கலதான்.

பிரசாத்தும் எங்கள் கோவில்தான். ஆனால் குலம் வேறு. அவனை மிரட்டி வைப்பேன். கொட்டி வைப்பேன். அவனுடன் இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பேன். சொல்லப்போனால் நான் இரவு அதிக நேரத்தில் பேசிய ஒருவன் அவன் மட்டும்தான். சிறு வயதிலிருந்தே கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு அவனது குடும்பத்துடன் அதிகமாக நேரம் செலவிடுவேன். நானும் அவனும் இரவு நெடுநேரம் வரை பேசியபின் எங்கள் குடும்பம் இருக்குமிடம் சென்று தூங்கி விடுவேன்.

அவனுடைய அம்மா நான் பன்னிரெண்டாவது படிக்கும் போது என்னைப் பார்த்து “நீ பிரசாத்தை கல்யாணம் செஞ்சுக்கிறியானு” கேட்டார்கள்.

இதுவரை பொறுமையாக படித்துக் கொண்டிருந்த தேவ்

“இது சைல்ட் மேரேஜ் . நோ சொல்லு.” என்று கத்தினான். சுயநினைவு பெற்றவன்

“தேவ் கன்றோல் யுவர்செல்ஃப் அண்ட் ரீட் .” என்று தன்னைத் தானே தலையில் அடித்துக் கொண்டான்.

நீ என்ன சொன்னேன் தெரியுமா பெக்கி?

வெரி சிம்பிள் . சரினு சொல்லிட்டேன்.

தேடி அலைவான்....




 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம்-11

“வாட்ட்ட்ட்ட்ட்….?” தேவின் குரல் அறை முழுவதும் எதிரொலித்தது. “ஹவ் குட் யூ? நீ அப்ப குழந்தை. உன்னை நான் புத்திசாலினு நினைச்சேன். “ இப்படி அதிர்ச்சியில் தேவ் திட்டினாலும் அடுத்தது நடந்ததைத் தெரிந்துக் கொள்ள மீண்டும் படித்தான்.

எஸ் இட்ஸ் வெரி சிம்பிள். நான் ஒருத்தன கல்யாணம் பன்னிக்க சம்மதம்னு ஒரு நிமிஷம் கூட யோசிக்காம சொன்னேன். அது எனக்கு ரொம்ப பெரிய விஷயமா தெரியல. அவனுக்கும் எனக்கும் இருக்கும் பாண்ட் அப்படி. அது எப்பவும் காதல் கிடையாது. அவனால் என்னை நல்லா புரிஞ்சுக்க முடியும். ஏத்துக்கவும் முடியும். எனக்கும் அவனுக்கும் வித்தியாசங்கள் உண்டு. அவன் ஸ்கூல் டிராப் அவுட். நான் ஸ்கூல் பர்ஸ்ட் வரக்கூடிய ஆள். ரெண்டு பேருக்கும் கருத்துகள் கூட ஒத்துப்போகாது.

நாங்கள் வளர்ந்ததுக்கு அப்பறம் அவனுக்கு என்னைப் பெண் கேட்டார்கள். அப்போது நான் இரண்டு முதுகலை பிரிவில் பட்டம் பெற்றிருந்தேன். இந்த விஷயம் எனக்கு தெரியாது. என் ஜாதகத்தில் உள்ள தோஷத்தின் காரணமாக என் வீட்டினர் மறுத்துவிட்டனர்.

‘அப்ப கல்யாணம் பன்னிக்கல. அப்புறம் எதுக்கு இந்த பில்டப்?’ தேவ் அவன் மனதில் இன்னும் நன்றாகத் திட்டிவிட்டு படித்தான்.

சில காலத்துக்குப் பிறகு அவன் என்னிடம் ஒரு வார்த்தையை விட்டுவிட்டான். அந்த வார்த்தையில் அவனும் என்னை விரும்பியது போல் தோன்றியது. சில விஷயங்களில் நான் லேட் பிக்கப்தான். ஆனா பிக்கப் பன்னிக்கறதுதான் முக்கியம். ஒரு குளு போதும். அதே மாதிரி நம்முடன் பழகுவர்கள் ஒரு சில வார்த்தைகளில் தன் உண்மை குணத்தை வெளிப்படுத்தி விடுவர்.

நம்மதான் நூல் கிடைச்சா சிலை நெஞ்சிருவோம். இப்படி ஒரு வார்த்தையினால் என்னிடம் சிக்கிக் கொண்டவர்கள் பலர்.

‘இவங்க பெரிய ஸ்படர் மேன். நூல வச்சு சேல செய்வாங்க. பஞ்ச் டயலாக் பக்கம் பக்கமா எழுது பக்கி.’ தேவ் யாழரசியின் பஞ்ச் டயலாக் கேட்டு பதில் பஞ்ச் மனதிலேயே கொடுத்தான்.

என்னோடது ஒரு கொள்கை. சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனக்கே இரண்டு சொந்த அத்தை மகன்கள் உண்டு. அவர்கள் வீட்டில் யாருக்காவது என்னை திருமணம் செய்து கொடுக்கும் நிலையைத் தடுத்ததில் என் தம்பிக்கு பங்கு உண்டு. அவன் என்ன செய்தான் தெரியுமா? அவன் பிறக்கும் போதே கொடிமாலை சுற்றிப் பிறந்தவன். அறிவியல் முறைப்படி அது ஒரு காம்பிளிகேட்டடு பர்த். ஆனால் எங்கள் வழக்கப்படி என் தம்பி இப்படிப் பிறந்ததால் அத்தை வீட்டில் திருமணம் செய்ய இயலாது. இப்படி பிறக்கும் போது என் தம்பி எனக்கு நல்லது செய்துவிட்டு பிறந்துள்ளான். சாத்தான் குட்டி பதிமூன்றாம் தேதி பிறந்து எனக்கு நல்லது செய்துவிட்டது.

என்னோட தனிப்பட்ட நம்பிக்கை. தந்தையின் தங்கை மகனை , அக்கா மகனை அல்லது மகளைத் திருமணம் செய்வதில் உடன் பாடில்லை. எப்படி அன்னையின் உடன் பிறப்புகளின் குழந்தைகள் சகோதர உறவு முறை ஆவார்கள். அதே போன்றுதானே அப்பாவின் உறவு முறைகளும் வர வேண்டும்? என்று தோன்றுகிறது. இரத்த சம்பந்தம் தானே. ஏதோ ஒரு சமூகக் கட்டமைப்பு. ஒவ்வொருத்தர் எண்ணங்களும் மாறுபடும். எகிப்து வரலாறு மாதிரி இல்லாமல் இருந்தால் சரி.

உனக்குத் தெரியுமா? என் தம்பியின் பிறப்பு கொஞ்சம் மேனிபுலேட் செய்யப்பட்டது. சுகப்பிரவசத்தில் இல்லாத நடைமுறை சிசேரியனில் உண்டு. அதாவது நல்லநாள் பார்த்து ஆப்பேரஷன் செய்யலாம். என் தம்பி இரு நாட்களுக்கு முன் பிறந்திருக்க வேண்டியவன். என் அப்பா செய்த அளப்பறையின் காரணமாக ஆப்ரேஷன் செய்ய முடியாமல் போனது. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? என் அப்பா விரும்பிய தேதிக்கு முன்பே அம்மாவுக்கு வலியெடுத்ததால் சிசேரியன் செய்யும் படி ஆகிவிட்டது. ஒரு குழந்தையின் பிறப்பைக் கட்டுப்படுத்த இயற்கையால் மட்டுமே முடியும். நம்ம மனிதர்களுக்கு எதையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைப்பு . என் அப்பாவையும் சேர்த்துதான் சொல்கிறேன். மூட நம்பிக்கையினால் உயிர் போகாமல் இருந்தால் சரி.



நம்ம திருவிழாவைப் பற்றிப் பேசிட்டு இருந்தோம். திரும்பவும் அதுக்கே போலாம். நான் அம்மாய் ஊரில் இருந்து அம்மா ஊருக்கு சென்றால் அங்கேயும் மாரியம்மன் திருவிழா நடக்கும். எனக்கு அது பிடிக்காது. இராத்திரி பன்னிரெண்டு மணிக்கு மாவிளக்கு எடுப்பார்கள். தாவணி வேறு கட்ட வேண்டும். அதே சமயம் அங்கு இருந்தால் இன்னோரு சித்தி வீட்டுக்கு செல்வேன். அம்மாயின் அக்கா மகள் அவர். அங்கு மாகாளி அம்மன் பொங்கல் நன்றாக இருக்கும். அங்கு சந்தித்த இரு நபர்கள் என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தார்கள். இருவரும் சொந்தக்காரர்கள். என் சமவயதினர். துரோகத்தையும் , நட்பையும் பின்னாளில் வாரி வழங்கிய இருவர் அவர்கள். அதைப் பற்றி இப்போது வேண்டாம்.

நாம் பெஸ்டிவல் மூடிலேயே இருப்போம்.

எங்க குடும்பத்தில் கிட்டதட்ட ஒரு நாற்பது வருஷத்துக்கு மேலாக ஒரு பழக்கம் இருக்கிறது. கிடாவெட்டு விருந்துதான். என் அம்மாயின் அக்காவை திருமணம் செய்து கொடுத்த வீட்டில் இந்த விருந்து நடக்கும். அவர்கள் ஊரில் இப்படி அம்மன் சாட்டு வரும் வாரத்தில் நடக்கும். அம்மாயின் அக்கா என்பதால் அவர் பெரிய அம்மாய். அவர்களின் தங்கை வீட்டினர் இருவருக்கும் , மகன் , மகள்கள் , பேத்தி, பேரன்கள் என்று நெருங்கிய சொந்தத்தினர் வருடத்தில் இந்தநாளில் ஒன்று கூடுவர். ஒரு வருடம் கூட இது நின்றதில்லை.

‘யாழ் வீட்டுல நடக்கிற எதுவுமே என் வீட்டினர் கலந்து கொள்ளும் சூப்பர்பிசியல் பார்ட்டி மாதிரி இருக்காது. போலி புன்னகை , பளிச் உடைகள் இல்லாமல் உண்மையான பார்ட்டி இதுதான். ‘ தேவ்வின் மனம் அவன் சர்க்கிளில் நடக்கும் பார்ட்டிகளைப் பற்றி யோசித்துப் பார்த்தான்.

இந்த கேங்கில் நான் ஆட் ஒன் அவுட். கிடாவெட்டு நடக்கும். நான் தயிர்சாதம் சாப்பிடுவேன். வெஜிடரியனுக்கு கிடாவெட்டில என்ன வேலை? சொந்தக்காரங்களைப் பார்ப்பது மட்டும்தான். என்னை கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கிவிடுவாங்க.

தென்னை மரத்தோப்பின் நடுவில் பெரியம்மாயின் வீடு இருக்கும். கிரிக்கெட் , ஓடிப்பிடித்தல் என்று நேரம் அருமையாகக் கழியும் .

எனக்கு பொங்கல் அம்மாய் வீட்டில் கொண்டாடுவது பிடிக்கும். ஏனென்றால் மாட்டுப்பொங்கல் ,பூ பறிக்கப் போதல் என்று ஒரு முழுமையான பொங்கலாக இருக்கும். மாட்டுப்பொங்கலை கட்டுத்தாரையில் கொண்டாடுவோம். ஏழு கன்னிமார்களுக்கு பொங்கல் படையிலிட்டு பொங்கல் வைப்போம். மாட்டுப் பொங்கல் கூட பிரச்சினை இல்லை. பூ பொங்கல் அதான் சூரியப்பொங்கல் அன்று நிலைமை பரிதாபமாகிவிடும். அனைவர் வீட்டிலும் பூ பொங்கல் வைப்பதால் சாமி கும்பிட அழைப்பர். அன்று அடிக்கடி பொங்கல் சாப்பிடும் படி இருக்கும். கரும்பு, பொரி, சுண்டல் இப்படி ஓவராகிவிடும். ஒரு வருஷத்துக்கான பொங்கல் ஒரே நாளில் சாப்பிட வேண்டியதாகிவிடும்.

‘அது சரி. மாட்டுப்பொங்கலாவது மாட்டுக்கு கொடுப்பியா? இல்லை அதையும் விடாம நீயே முழுங்கிருவியா?’ அவள் அருகில் இல்லை என்பதில் சரமாரியாக கிண்டல் செய்தான். அதற்கும் ஆப்பு வைக்குமாறு அவள் அதே டைரியில் எழுதியிருப்பாள் என்று அவனுக்கு தற்போது தெரியவில்லை.

பொங்கலின் மூன்றாவது நாள் இண்டரஸ்டிங்காக இருக்கும். ஊரில் உள்ள குழந்தைகள் சில பெரியவர்களுடன் தீனி எல்லாம் பையில் போட்டு நிரப்பிக் கொள்வர். பூ பறிக்கப் போதல் ஆரம்பிக்கும். எங்க ஊருக்கு பக்கத்தில் இருக்கும் அனைக்கட்டிற்கு அருகே உள்ள தென்னைமரத் தோப்பிற்கு அனைவரும் செல்வோம். தின்பண்டங்களை பகிர்ந்து உண்டபின் விளையாடுவோம். சாப்பிடுவோம் , விளையாடுவோம் , திரும்பவும் சாப்பிடுவோம் , திரும்ப விளையாடுவோம். மதிய நேரத்தில் ஆவாரம் பூ பறித்த பிறகு வீட்டிற்கு திரும்ப வருவோம். அடுத்த நாள் காலையில் மார்கழி முழுவதும் போட்ட கோலத்தில் வைத்த பிள்ளையாரை பூக்களுடன் சேர்த்து பாட்டுப்பாடி ஏதாவது நீரோடையில் கரைப்போம். பொங்கல் ஓவர்.

‘வாவ்.. நம்ம சிட்டில குக்கர்ல பொங்கல் வச்சு சாப்பிட்டு பொங்கல முடிச்சுருவோம். இதுதான் பிளஸ்ட் சைல்ட்குட்’ தேவ்வின் மனதில் யாழுவின் மேல் சிறிய பொறாமை எட்டிப்பார்த்தது என்னமோ உண்மை.’

மற்ற பெண்பிள்ளைகள் மாதிரி நான் எதுவும் அதிகம் செய்யல என்றாலும் நான் நன்றாகக் கோலம் போடுவேன். எனக்கு கோலம் போடப் பிடிக்கும். நாலவது படிக்கும் போதிலிருந்து நான் மார்கழி மாதம் கோலமிடப் பழகிக்கொண்டேன்.

எனக்கு விழாக்களில் இதுதான் மிகவும் பிடித்த ஒன்று கார்த்திகை தீபம். பெஸ்டிவல் ஆஃப் லைட்ஸ். வீட்டுக்கும் , கோயிலுக்கும் தீபமிட்டு அழகுபடுத்துவது. தீப ஜோதியில் மனம் லயித்துப் போகும். எங்கும் ஒளிமயமாக இருக்கும். அதிலும் மக்கள் அதிகம் செல்லாத காட்டுக்கோயிலுக்குச் சென்று தீபம் போடுதல் வேறலெவல்.

‘எஸ் இட்ஸ் பியூட்டிபுள். வாழ்க்கைய ரசிச்சு ரசிச்சு வாழ்ந்திருக்கா!!’ தேவ்வின் மனநிலை ஒரு வகை அமைதியை எட்டியிருந்தது. தீபங்களின் ஒளியை அவனும் நினைத்துப்பார்த்தான்.

ஓக்கே பெக்கி நாம ரொம்ப திருவிழாக்குள்ள முழ்கிவிட்டோம். இப்ப ஹாலிடே முடிஞ்சு ஸ்கூலுக்கு போயிரலாம். மத்தத இன்னொரு நாள் எழுதறேன்.

‘தீபாவளிய விட்டுட்டா? தீபாவளி அப்ப என்ன செஞ்சிருப்பா?’ என்ற கேள்வி தேவின் மனதில் எழுந்தது.

நாங்க படிக்கும் போது ஒரு லெஜண்ட் இருந்தது. நமக்கு நெருங்கியவர்களுக்கு கைக்குட்டை அல்லது கீ செயின் பரிசளித்தால் அந்த உறவு முறிந்துவிடும். நான் செவன்த் படிக்கும் போது மனோவுக்கும் , அஜிக்கும் இருவருக்கும் படிக விநாயகர் கீ செயின் பரிசளித்தேன். என்னிடமும் ஒன்று அதே மாதிரி உள்ளது. இன்னமும் அந்த விநாயகர் என்னிடம் இருக்கிறார். எனக்கு கொஞ்சம் கீ செயின் ,காம்பஸ் , கர்சீஃப் மேல பைத்தியம் உண்டு.

‘நீ பைத்தியம் அப்படிங்கறதுல எனக்கு எந்த விதமான சந்தேகம் இல்லை. உன்னோட டைரிலாக்லயே உன்னைப் பத்தி தெரிஞ்சு போச்சு. இன்னும் என்ன என்ன உனக்கு பிடிக்குமோ?’ தேவ் கலாய்த்துக் கொண்டே படித்தான்.

நாங்கள் மூவரும் பிரிவோம் என்பது தெரிந்த ஒன்று. ஒன்பதாம் வகுப்புக்கு நான் கொங்கு தலைநகர் செல்வது முடிவான ஒன்று. அதைப்பற்றி அப்போது என்ன கவலை?

எங்க மூணு பேருகிட்டேயும் ஒரே மாதிரி கீசெயின், கர்சிஃப் இருக்கும். கர்சீஃப்பும் நாந்தான் கிப்ட் செய்தேன். எங்கள் நட்பு பிரியவில்லை.

ஆனால் நாங்கள் பிரிந்தோம்.

அலைவான்...
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -12

ரொம்ப ஷாக் ஆக வேண்டாம் பெக்கி. மனோவை எட்டாம் வகுப்பிற்கு பிரைவேட் போர்டிங்க் ஸ்கூல்ல அவங்க வீட்டுல சேர்த்துட்டாங்க. பள்ளிக்கூடமே எதிர்பார்த்த எங்கள் பிரிவு இப்படி நடக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. அவள் இல்லாமல் எட்டாம் வகுப்பு ஆரம்பித்தது. ஒரே வருடத்தில் நான் இரண்டு நண்பர்களை இழந்தேன். விஷ்வா என் பக்கத்தில்தான் இருப்பான். ஆனால் பேச மாட்டேன். மனோ என் அருகில் இல்லை. பேச முடியாது. மனோ ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் நான் அவளைச் சென்று பார்ப்பேன். எனக்கு மனோ வீட்டுக்கும் , அஜி வீட்டுக்கும் செல்ல வீட்டில் அனுமதி உண்டு. மனோ கூட என் வீட்டுக்கு வந்துவிடுவாள். அஜியின் அம்மா அவளை எங்கும் அனுப்ப மாட்டார்கள். நாங்கள் தான் சென்று பார்க்க வேண்டும். அவர் மகள் மிகவும் பிரிஷியஸ். எங்கும் விட மாட்டார். வந்தாலும் வீட்டினர் துணையுடன் தான் வருவாள். இப்படி நிறைய வீடுகளில் வழக்கம் உண்டு.

பெண்களை வெளியில் அனுப்ப மாட்டார்கள். அவரின் அந்த வழக்கம் எனக்கு பிடிக்காது. ஆனால் ரொம்பவும் கேரிங்க் அவங்க. எனக்கு சாப்பாடெல்லாம் ஊட்டிவிடுவாங்க. எனக்கு இப்ப வரைக்கும் ஊட்டிவிட ஆளுங்க இருக்காங்க.

இப்ப ஒரு குட்டி ஸ்டோரி சொன்னாங்க. ஒரு தடவை நானும் அம்மாவும் நடந்து போயிட்டு இருந்தோம். நான் நடந்து போகும் போது சில சமயங்களில் கைகோர்த்து நடப்பது வழக்கம். அதே மாதிரி அம்மாவின் கைகளை பிடித்தேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா?

‘வாழ்க்கையில் பல நேரங்களில் நீ தனியாக நடக்க வேண்டும் ‘ என்று சொன்னார். அதுவும் உண்மைதான். அதிலிருந்து நிறைய விஷயங்கள் தனியாக செய்யக் கற்றுக்கொண்டேன்.

நானும் அஜியும் தான் இப்போது . எங்களுக்கு மனோ செல்லும் முன்பே மூன்று பேர் கொஞ்சம் குளோஸ். உஷா, ரம்யா இவங்களும் நாங்களும் நல்ல பிரண்ட்ஸ்.

எங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. சின்ன வயது போட்டோக்கள் உள்ள ஆல்பம் கொண்டுவந்து ஸ்கூல்ல பார்ப்போம். அப்படி ரம்யா ஒரு தடவை கொண்டு வந்தாள். அதில் அவள் அண்ணன் ரஞ்சன் கன்னத்துக்குழியைப் பார்த்து நான் இம்ப்ரஸ் ஆகி ‘உன் அண்ணா அழகா இருக்காங்க’ என்று சொல்லிவிட்டேன். அதனால் மற்ற தோழிகள் ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

நானும் அதை மறுக்காமல் சும்மா விளையாட்டுக்காக கிண்டல் செய்ய ஆரம்பிச்சத அப்படியே விட்டுட்டேன். ரம்யா இதனால் காண்டுபறவையாகி விட நானும் அவள வெறுப்பேத்த முடிவு செய்தேன். அப்புறம் இவங்க என்ன என்னை ஓட்டறது? அதுக்கு நான் விடுவேனா? அவங்க அண்ணா ‘என்னோட குலோப்ஜாமுன் ‘ என்று செல்லமாக அழைக்கப்படுவார். ரம்யாவை வெறுப்பேத்த அவங்க அண்ணனுக்கு ‘என் இனிய குலோப்ஜாமுன்’ அப்படினு லெட்டர் எழுதி அவகிட்டயே கொடுத்து ‘உன் அண்ணாகிட்ட கொடுத்துருனு ‘ சொல்லியிருக்கேன்.

அஜியும் இதுல பார்ட்னர். ரம்யா பயங்கரமா டென்சன் ஆகிருவா. அதுல ஒரு ஆனந்தம். சம்திங்க் சம்திங்க் படத்துல வில்லி கூப்பிட மாதிரி ‘என் குலோப்ஜாமுன்’ இப்படியும் கூப்பிட்டு வெறுப்பேத்துவோம்.

‘உன் வாழ்க்கையில எக்சாட்டா எத்தனை பேருதான் இருக்காங்க? ‘

‘உன் வாழ்க்கையில எக்சாட்டா எத்தனை பேருதான் இருக்காங்க? ‘ தேவ் கன்னத்தில் கை வைத்துக் கொண்டான்.



பெக்கி டீனேஜ்ல காதல் எப்படி ஆரம்பிக்கும் தெரியுமா? முக்கால்வாசி காதல்கள் நண்பர்கள் கேலி செய்வதில்தான் உருவாகிறது. ஒரு பொண்ணு ஏதேச்சையாக ஒரு பையனைப் பார்த்திருக்கும். அதை நண்பர்கள் வைத்து கேலி செய்வர். நாளடைவில் இது ஒரு வித ஈர்ப்பை அந்தப் பெண்ணின் மீது உருவாக்கும் . பெண்களின் பக்கமும் இதுதான் நடக்கும். இந்த அட்டேன்சன் காதல் கிடையாது. இது இல்யூசன். பெரும்பாலும் என்னை நிறைய ஆண்களுடன் வைத்து நிறைய பேர் கிண்டல் அடித்திருக்கிறார்கள். நான் பெரிதாக காதில் போட்டுக்கொள்ள மாட்டேன். அதே சமயம் நானும் இவ்வாறு கிண்டல் செய்ய மாட்டேன். ஒரு பொய்யான மாயத்தோற்றத்தை நான் யாரவது வாழ்க்கையில் உண்டாக்கி அது ஒருத்தர் வாழ்க்கையை பாதிக்கக் கூடாது.

‘யோசித்து பார்த்தா இது கூட உண்மையினு தோணுது. இப்ப தான் நீ புத்திசாலித்தனமா பேசற.’ தேவ் மனமுவந்து பாராட்டினான்.

சரி இப்படியே போயிட்டு இருக்க ஸ்கூல் லைஃப்ல ஒரு டூர் இல்லனா எப்படி? எங்கள் பள்ளியிலும் டூருக்கு ஏற்பாடு செய்தார்கள். ரொம்ப தூரம் கிடையாது. ஊட்டிக்குத்தான் டூர். முதல் தடவை ஊட்டிக்கு போகிறதால் எங்கள் வகுப்பே பரபரப்படைந்திருந்தது. மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் சிறிய வகுப்பிலிருந்தும் சில மாணவர்களைச் சேர்ந்திருந்தனர்.

D DAY. அதான் டூர் போகும் நாள். காலையில் நான்கு மணிக்கே முன்பே அப்புச்சி கொண்டு போய் பள்ளியில் விட்டார்கள். முதல் நாள் இரவே தேவையான பொருட்கள் அனைத்தும் எடுத்து வைத்துவிட்டேன்.

மனோ இல்லை. இருந்தாலும் நாங்கள் உற்சாகமாகக் கிளம்பினேன். பேருந்தில் ஏறி ஜன்னல் சீட்டுக்கு போட்டிப் போட்டுக்கொண்டே அமர்ந்தோம். இதுல எனக்கும் அஜிக்கும் செம போட்டி. ரெண்டு பேரும் பக்கத்தில் உட்கார வேண்டும். ஆனால் ஜன்னல் சீட்டும் வேண்டும்.

‘சுத்தம். அப்புறம் என்னதான் செஞ்சீங்க?’ தேவ் மனதினுள் கேள்வி கேட்டான்.

நான் ஒரு சீட்டில் ஜன்னல் ஓரத்திலும் , அஜி ஒரு சீட்டில் எனக்குப் பின்னால் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தாள். உஷா , ரம்யா எங்கள் அருகில் அமர்ந்து கொண்டார்கள். அதற்குப் பிறகும் இடம் மாற்றிக் கொண்டே இருந்தோம்.

இதெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான் . கேர்ள்ஸ் வழக்கமாக முன்பக்கம்தான் அமர்வார்கள். நாங்களும் அப்படித்தான் முன்பக்கத்தில் இருந்தோம். பூசை செய்து பேருந்து பயணத்தைத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே நாங்கள் உறங்கிவிட்டோம். நானும் நல்லா கும்பக்கர்ணி மாதிரி தூங்கிவிட்டேன். எனக்கு பகலில் தூக்கம் வராது. இரவிலும் பல நாட்கள் தூக்கம் சரியாக வராது. அப்படிப்பட்ட நானே தூங்கிட்டேன். அஜிய சாதாரண நாட்களில் பள்ளிக்குச் செல்ல எழுப்புவதே கடினம். நேரங்கெட்ட நேரத்தில் சொல்லவா வேண்டும்.

‘இதுக்குத்தான் இத்தனை பாடுபட்டு ஜன்னல் சீட்டைப் பிடிச்சீங்க?’ தேவ் சலித்துக் கொண்டான்.



ஆனால் அப்புவும் நான் முழுசா தூங்கல. பேருந்தில் சாமிபாட்டு முடிந்து திரைப்பட பாடல்கள் ஓடத் தொடங்கியது. ரேடியாவில் பாட்டுக்கேட்டு பழகிய காது ‘பூவ எடுத்து ஒரு மாலைத் தொடுத்து வச்ச ஏன் சின்ன ராசா..’ இந்தப் பாட்டைக் கேட்டதும் என் சின்ன கண்களைத் திறந்துவிட்டது. ஆமாம் எனக்கு சிறிய முகம், சிறிய கண்கள் …நானே சிறியவள்தான்.

ஐந்துமணிதான் ஆகியிருந்தது. அப்புறம் என்ன தூக்கம்? ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தேன். சூரியன் உதிப்பது மிக அழகாக இருந்தது.

கிட்டதட்ட காலை எட்டு மணிக்குள் நாங்கள் ஊட்டியே அடைந்தோம். ரெப்ரஸ் ஆகிவிட்டு முதல் ஊட்டி பெட்டானிக்கல் கார்டன் சென்றோம். பச்சை பெயிண்டை கவிழ்த்து வைத்தது போல் எங்கு பார்த்தாலும் பச்சைதான். இட்ஸ் எ ஹூயுமன் மெய்ட் ஹெவன். சிறு சிறு குழுக்களாக ஆசிரியர்களுடன் பிரிந்து சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம்.

இனிதான் சம்பவமே..கார்டனில் சிறிது தூரத்திலேயே பெரிய மரம் ஒன்று இருந்தது. அங்கிருந்த புல்வெளித் தரை வழுக்கும் என்று தெரியாமல் அஜி கால் வைத்து கிளாசியாக வழுக்கி விழுந்துவிட்டாள். திரும்பிபார்த்த நான் அவளைப் பார்த்து விழுந்துவிழுந்து சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். அவளுக்கு ஹெல்ப் பன்ன மனசு ஒரு பக்கம் சொன்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே இருந்தேன். இறுதியில் உஷாதான் கைகொடுத்துத் தூக்கிக் விட்டாள். பிறகுதான் நான் சென்றேன். சாரி கேட்டுவிட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கினேன்.

நண்பனுக்கு ஏதாவது என்றால் ஓடி வந்து உதவினால் பிரண்ட். சிரித்துவிட்டால் பிறகு வந்து உதவினால் பெஸ்ட் பிரண்ட். ஐயம் பெஸ்ட் பிரண்ட்.

‘இவள எப்படி தான் வச்சு சமாளிச்சாங்களோ? ‘ என்பதை ‘ ஷபா இப்பவே கண்ணுகட்டுதே ‘ வடிவேல் பாணியில் தேவ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அதற்குப் பிறகு இயற்கை அழகில் மெய் மறந்து பொட்டானிக்கல் கார்டனைச் சுற்றினோம். எல்லாப் பொருளும் எடுத்து வைத்த நான் ஸ்வெட்டரை மறந்துவிட்டேன். என்னால் குளிர் தாங்க முடியாது. ஆஹா சோலி சுத்தம் என்று நினைத்தேன். நல்ல வேளை ஒரு கம்பளி சால்வை கொண்டு வந்திருந்தேன். அதை வைத்துதான் டிரிப் முழுவதும் சமாளித்தேன். குளிர் தாங்கும் படிதான் இருந்தது.

சின்ன பாக்கெட்டில் கேரட் , ஸ்ட்ராபெரி போட்டு விற்றார்கள். அதை வாங்கிக் கொரித்துக் கொண்டே நடந்தோம். என்னை மிகவும் கவர்ந்தது திரெட் கார்டன். நூலில் உருவாக்கிய நந்தவனம். வாவ்வ்வ்வ்.

அப்புறம் சிம்ஸ் பார்க் , ரோஸ் கார்டன் என்று பொழுது இறக்கைக்கட்டி பிறந்தது.

வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் குன்னூரில் உறங்கி ஊட்டி வர்க்கி வாங்கி வந்தோம். அனைவரும் திரும்பி வருகையில் மிகவும் களைப்பாக வந்தோம்.

வீட்டினர் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

சரி பெக்கி. இன்னைக்கு நேட் வந்து கேம்ப்ல நடந்தை எழுதறேன். பாய்.

‘என் இனிய எதிரியே’ என்ற தலைப்பில் அடுத்தபக்கத்தில் ஆரம்பித்திருந்தது.

‘டைட்டில் பாரு. என் இனிய எதிரியாம் ‘ தேவ் கவுண்டர் கொடுத்தவாறே படிக்க ஆரம்பித்தான்.

எங்கள் பள்ளியில் சுதந்திரதினம் , குடியரசு தினம் கொண்டாடுவது மிகப்பிடிக்கும். கலர் கலராக தோரணங்கள் கட்டி எங்கும் வண்ணமயமாக காற்றில் கொடிகள் அசைந்தாடும். கொடியேற்றி முடிந்ததும் சுதந்திர வீரர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே ஊர்வலம் செல்வோம். பின்பு பள்ளிக்குத் திரும்பி விழா ஆரம்பிக்கும். எனக்கு ஒரு பரிசாவது விழாவில் இருக்கும்.

மனோ இல்லை என்பதால் முதல் ரேங்க் எனக்கு வரத்தொடங்கியது. ஆல்ரவுண்டரான கண்ணன் சார் ஆங்கிலம் , கணிதமும் டீயூசன் எடுத்தார். ஃப்ரி டீயூசன் தான். அவர் பாடம் நடத்தும் விதம் மிகவும் நன்றாக இருக்கும். அவர் எந்தப்பாடம் எடுத்தாலும் நன்றாகப் புரியும். நிறைய மாணவர்கள் சேர்ந்தனர், நானும் பெருமைக்கு போய் சேர்ந்தேன். அவரிடம் ஒரு பையன் அடிவாங்கியதைப் பார்த்துவிட்டு ஒரே நாளில் டீயூசனுக்கு முழுக்குப் போட்டுவிட்டேன். நான் அதுவரை எதற்கும் டீயூசன் சென்றதில்லை, அந்த ஒருநாள் மட்டும்தான். எனக்கு பொதுவாக டவுட் வராது. அப்படி வந்தால் அது கணிதம்தான். பெரும்பாலும் நானே சால்வ் செய்துவிடுவேன். முடியாதபட்சத்தில் பக்கத்துவீட்டு கிருஷ்ணா அண்ணாவிடம் சென்று கேட்பேன். இதுதான் என் வழக்கம்.

;எனக்கும் டீயுசனுக்கும் செட்டாவதில்லை. இப்ப எல்லாம் பிரிகேஜி குழந்தைகள் டீயூசன் போகுது. நான் கேஜி படிச்சதே இல்லை.

தேவ் தான் கேஜி வகுப்புகள் சென்றதை நினைத்துப் பார்த்தான். நிலவு மெல்ல காட்டில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த தொடங்கியிருந்தான். தேவ் நேரத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. டைரியில் மூழ்கிப் போயிருந்தான். தன்னுடைய வாழ்க்கையும் , அவளுடைய வாழ்க்கையும் ஓப்பிட்டுப் பார்த்தான். வித்தியாசங்கள் மலைப் போல் பெரிதாக இருந்தது.

அலைவான்....
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம்-13

தேவ் ஸ்பெஷல் கிளாஸ் , டீயூசன் என தனது குழந்தைப் பருவம் முக்கால்வாசி வகுப்புகளிலேயே கழிந்ததை நினைத்துப் பார்த்தான்.

‘எனக்கு அது ஒன்னும் பெரிய பிரச்சினையா தெரியல. என் தம்பி இல்லாதது எனக்கு நியாபகம் வரக்கூடாதுனு நான் எதாவது செஞ்சுகிட்டே இருந்தேன். சாப்பிட தூங்க மட்டும் வீட்டுக்கு வந்தால் போதும். அப்படித்தான் பல வருஷங்கள் நான் இருந்தேன். என்னோட குழந்தைப் பருவம் துன்பம் அல்லது இன்பம் எதுவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் போயிருச்சு. அதை எல்லாம் இப்ப நினைச்சாலும் திரும்ப வராது.’ என எண்ணியவன் டைரியின் அடுத்த பக்கத்தை படிக்கத் தொடங்கினான்.

எனக்கு அடிக்கடி ஸ்கூல் படிக்கும் போது உடம்பு சரியில்லாமல் போயிரும். சளி பிடித்தால் மட்டும் தாங்க முடியாது. காய்ச்சல்னா கூட சமாளிச்சரலாம். சளி படாய்படுத்தி எடுத்துவிடும்.

ஒரு டைம் டைப்பாய்ட் காய்ச்சல் அதிகாலை நேரத்தில் வந்திருச்சு. உடம்பு தூக்கி தூக்கி போடுது. மூணு பெட்சீட் போர்த்தியும் குளிர் தாங்க முடியல். நான் எப்பவும் வீட்டில் பாரசிட்டமால் போன்ற மாத்திரைகளை வைத்திருப்பேன். அம்மாய் ஹார்லிக்ஸ் அப்படியே படுத்த மாதிரியே குடிக்க வைச்சு மாத்திரை போட்டு விட்டாங்க. அப்படியே காய்ச்சல் குறைஞ்சிருச்சு. அப்புறம் காலையில் கிளம்பி ஹாஸ்பிட்டல் போய் பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம். டைப்பாய்ட் காய்ச்சல் உறுதியாகிவிட்டது. ஒரே நாள் சரியாகிவிட்டது. அடுத்த நாள் ஸ்கூலுக்கு பொனேன்.

டாக்டர் விளையாடக் கூடாது. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க சொன்னதால் நானும் டீச்சர்கிட்ட விளையாடம இருக்க பர்மிஷன் கேட்டேன். காரணம் கேட்டதுக்கு அதையும் சொன்னேன்.

‘அவங்க என் முகத்தைப் பிடிச்சுப் பார்த்துட்டு காய்ச்சல் வந்த மாதிரியே தெரியல’ என்று கூறினார்கள்.

எனக்கு ரொம்ப எக்ஸ்பிரஸ்சிவ் பேஸ். ஆனால் அதே சமயம் நான் ரொம்ப சிக்கா இருக்கறது வெளியில் தெரியாது. இவ்வளவு ஏன் நான் டீரிட்மெண்ட்க்கு போனா பேஷண்ட்டானு எங்க அம்மாவைப் பார்த்து கேட்டுருக்காங்க. தில்லாலங்கடி படத்தில் வரும் சந்தானம் மாதிரி ‘நான் தான் பேசண்ட் , நான் தான் பேசண்ட் ‘ சொல்லிக் கொண்டே சுற்றினால் மட்டுமே நான் பேசண்ட் என்று தெரியும் போல. எனக்கு இன்னும் இரண்டு பிரச்சினை இருந்தது. அல்சர் அதனால் ஹெவி வெயிட் லாஸ், அனிமிக் இது எனக்கு இருந்ததே வெளியில் தெரியாது. முப்பது கிலோ மட்டும்தான் இருந்தேன். டாக்டர் ஒரு கிலோ வெயிட் ஏத்துவதற்கு அவ்ளோ டீரிட்மென்ட் செஞ்சாங்க.

நான் வெளியில் பார்க்கறதுக்கு எப்பவும் நல்லா இருக்கற மாதிரி தெரியும். தட் இஸ் நாட் தி கேஸ் ஆல்வேய்ஸ். சில நேரங்களில் என்னைப் பார்க்கும் போதே ஏதோ சரியில்லை என்று உணரும் ஒருவர் என் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.

ஆனால் ஒன்று , நாம் எதிலும் நன்றாக செயல்பட உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இல்லையென்றால் அதுவே நம்மை கீழே வீழ்த்திவிடும். தற்போது உடல் நலம் மட்டுமில்லை மனநலமும் அவசியம். சொல்லப்போனால் செல்போன் இல்லாமல் என்னோட குழந்தைப் பருவம் புத்தகங்கள் , விளையாட்டு, நண்பர்கள் என்று சென்றது. இப்ப இருக்க குழந்தைகள் போனில் கேம் விளையாடிக் கொண்டே ‘அவனைக் கொல்லுடா.. குத்துடா’ இப்படித்தான் பேசுகிறார்கள். மனசு முழுக்க கொல்வது, சுடுவது இப்படித்தான் பதியும். நேர்மறை வார்த்தைகளை பேசுவது நல்ல சூழலை உருவாக்கும். நல்ல கேம்களும் உள்ளது. அதை விளையாடலாம். கேம் விளையாடி மூர்க்கத்தனம் வளராமல் இருந்தால் சரி.

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு நோக்கியா போனில் இருக்கும் ஸ்னேக் கேம், வீடியோ கேம் விளையாடத் தெரியும். வேற எதுவும் விளையாட வராது. பசில்ஸ் , செஸ் கேம் விளையாடத் தெரியும். அது என்னமோ எனக்கு ரியல் லைஃப் கேம்ஸ்தான் விளையாடப் பிடிக்கும். தெரியும்.

‘கேம் விளையாடத் தெரியாதா? உனக்கு விளையாட வராது அதனால பிடிக்காதா? எனக்கு டவுட்டா இருக்கு. ‘ தேவ் புன்னகையுடன் நினைத்துக் கொண்டிருந்தான்.

கடைசி வருஷம் என்பதால் செஞ்சிலுவை சங்கத்தில் கேம்ப் மஞ்சள் மாவட்டத்தில் நசிந்து போன ஊரில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கேம்ப்க்கு அனைவராலும் செல்ல முடியாது. அதனால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு எடுத்தனர். கண்ணன் சார் இன்சார்ஜ். குலுக்கல் முறையில் முதல் தடவையிலும் என் பெயர் வந்தது. இரண்டாம் தடவையும் வந்துவிட்டது. சிலர் கேம்ப் வர ரொம்ப ஆசைப்பட்டாங்க. அவங்க பேர் வரல. என் பெயர் இரண்டு தடவையும் வந்ததால் அது அப்செட் பன்னிருச்சு. என் மேல் கோபத்தில் இருந்தாங்க. என் வகுப்புதான் அவர்களும். இப்படியே போனதால் மூன்றாம் தடவை குலுக்கல் நடத்தப்பட்டது.

என் பெயர் வரவே இல்லை. நான் கேம்ப் போக முடியாது. லிஸ்ட் என் பெயர் இல்லை. ஆனால் கண்ணன் முடிந்தளவு அனைவரையும் அழைத்துச் செல்வதாக கூறியிருந்தார். எனக்கும் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

என்னோட ஃபேஜ் ரொம்ப ஸ்பெஷல். ஸ்கூலில் மத்த எல்லார்கிட்டேயும் ஜீனியர் ரெட் கிராஸ் தமிழ்நாடுனு இருக்கும். எனக்கும் மட்டும் இந்தியானு லைட்டா டேமேஜா இருக்கும். ஐ ரியலி லவ்ட் ரெட் கிராஸ். நல்ல பண்புகளை வளர்க்க இப்படி ஏதாவது ஒரு ஆர்கனிஷன் தேவை.

வகுப்பில் உள்ள ரெட்கிராஸியன்ஸ் ரொம்ப ஆர்வத்தோட கேம்ப் போக ரெடியானங்க. ஐ வாஸ் லெப்ட் அவுட்.

என்ன பெக்கி? நான் போகலனு நினைச்சியா? அதுதான் இல்லை. கீ பிளேயர் இல்லாம கேம் எப்படி நடக்கும். கடைசி நாளுக்கு முன்னாடி கண்ணன் சார் நானும் கேம்ப்க்கு வரலாம்னு சொல்லிட்டார். இரண்டு நாள் கேம்ப். வடிவேல் ரேஞ்ச்ல பொட்டிய கட்டிட்டு கிளம்பியாச்சு. நானும் அஜியும் குதுகலமாக கிளம்பிட்டோம். உஷாவும் இருந்தாள். முதல்நாள் ஓரியண்டேஷன், யோகா இந்தமாதிரி பிரோகிராம்ஸ் இருந்தது. முதல் நாள் எங்க மூணு பேருக்கும் தூக்கம் வரல. அதனால் நிறைய பேசி சிரிச்சிட்டே இருந்தோம். பயங்கர சேட்டை நைட் செய்திட்டு இருந்தோம். எல்லார்த்த விட லேட்டா படுத்தாலும் எனக்கு நாலு மணி வழக்கம் போல் சதி செய்துவிட விழிப்பு தட்டியது. உஷா பிரச்சினை இல்லை. அஜிய பாடுபட்டு எழுப்பி கேம்ப்ல மற்றவர்கள் எழுவதற்குள் மூவரும் தயாராகிவிட்டோம்.

இரண்டாவது நாள் விதவிதமான காம்படிஷன் இருக்கும். இப்ப நான் கீ பிளேயர். டிராயிங்க் , குருப் எக்ஸிபிஷன் , குவிஸ் இருந்தது. நாங்கள் குழு நடனமும் ஆடினோம்.

டிராயிங்க் போட்டியில் கலந்து கொண்ட பின்னர் , குரூப் எக்ஸிபிஷன். கண்ணன் சார் , ஸ்டூடண்ட்ஸ் நாலு பேர் சேர்ந்து ஏதாவது ரெடி செய்யனும்.

சார் கொடுத்த ஐடியாபடி ஆர்.சி பவுண்டர் ஹென்றி மலையில் போர்க்காட்சியை பார்ப்பதை அமைக்கலாம் என்று முடிவு செய்தோம். நிறைய பள்ளிகளில் இருந்து வந்திருந்தனர், டஃப் காம்படிஷன். எங்களிடம் இருந்த பேக்கை குவித்து , கேர்ல்ஸ்கிட்ட இருந்த வெள்ளைச் சால் போட்டு மூடினோம். பிறகு ஒரு கருப்புத்துணியைப் போர்த்தி மலையைப் போல் வடிவமைத்தோம். பேப்பரில் மனித உருவங்கள் செய்து சிவப்பு இங்க் அடித்து காயம் பட்டதுபோல் செய்தோம்.

முதலில் கண்ணன் சார் விளக்கம் கொடுப்பதாக இருந்தது. எங்கிட்டேயும் ஒரு தடவை ஜட்ஜஸ் கேட்டா எப்படி பேசவேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்.

ஜட்ஜ்ஸ் கேள்வி கேட்டால் பதில் சொல்லும் பொறுப்பு எனக்கு வந்தது. இப்படி பயங்கரமாகத் தயாராகி வைத்தால் கடைசியில் கண்ணன் சாரை ஜட்ஜாக அழைத்து சென்றுவிட்டார்கள்.

எங்க டீமுக்கு சாரே இல்லை. ஸ்டூடண்ட்ஸ் மட்டும்தான். இப்போது எங்க எக்ஸிபிஷன் பத்தி நாந்தான் எக்ஸ்பிளென் செய்யனும். கண்ணன் சாருடன் சேர்த்து இன்னும் இருவர் ஜட்ஜாக வந்தனர். நான் எக்பிளனேஷன் கொடுத்துட்டு கேள்விக்கு பதில் சொன்னேன். ஒரே பாயிண்ட் சொல்லாமல் விட்டுட்டேன். கடைசியில் எங்கள் பள்ளிக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. சாரே ஜட்ஜா இருந்துட்டு முதல் பரிசு கொடுத்தால் நன்றாக இருக்காது. ஆனால் மற்ற போட்டிகளில் ஆறு அல்லது ஏழு பரிசுகள் கிடைத்தது. எனக்கு சரியாக ஞாபகத்தில் இல்லை. ஓவர் ஆல் வாங்குன மாதிரி ஒரு ஃபீல். அப்புறம் காம்படிசன் முடிஞ்சு கிளம்பிட்டோம்.

எங்களுக்கு அடிக்கடி தேர்வுகள் நடக்கும். எட்டாம் வகுப்பு என்பதால் அரசு நடத்தும் காமன் எக்ஸாம் உண்டு. எக்ஸாம் அப்படினு சொன்னதும்தான் எனக்கு ஒன்று நியாபகம் வருது.

லாஸ்ட் பென்ஞ்சர்ஸ் பிட் அடிச்சு பார்த்துருப்ப பெக்கி. ஆனால் பர்ஸ்ட் பென்ஞ்சர்ஸ் அதுவும் முதலிடங்களில் வருபவர்கள் பிட் அடிச்சு பார்த்து இருக்கியா?

எங்களால் படிக்க முடியும். எழுதவும் முடியும். ரேங்கும் எடுப்போம். அதுக்காக பிட் அடிக்க தெரியாதுனு இல்லையே?

மனோ , அஜி , நான் மூவரும் ஏழாம் வகுப்பு படிக்கும் போது பிட் அடித்து இருக்கிறோம். சும்மா ஃப்ன். நாங்களும் பிட் அடிச்சு எழுதிருக்கோம். ஆனால் கொஞ்ச நாள்தான். எனக்கும் மனோவுக்கும் அந்தப் பழக்கம் சரியாப் படலை. அதனால் விட்டுட்டோம். எனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியல. யாரவது ஆன்ஸர் சீட் முன்னாடி வைத்தால் கூட பார்த்து எழுத மாட்டேன். அந்த அளவுக்கு எனக்கு உறுதி இருக்கிறது. எனக்கு என் திறமையால் வந்ததாக இருக்க வேண்டும். ஜிரோ மார்க் என்றாலும் நூறு மார்க் என்றாலும் என் மூளையை உபயோகித்து எழுதிப் பெற்றதாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆப்ட்ர் ஆல் ஒரு ஹோம் ஒர்க் கூட மற்றவர்களிடம் கொடுத்து செய்ய எனக்கு பிடிக்காது.

பர்ஸ்ட் பென்ச்ர்ஸ் நினைச்சா அவங்களும் பிட் அடிப்பாங்க. முகநூலில் லாஸ்ட் பென்ச்ர்ஸ் படிக்கும் மாணவர்களைக் கிண்டல் செய்து பதிவிடுவர். நாம பள்ளிக் கூடம் , காலேஜ் போறது எதுக்காக ?

கண்டிப்பாக படிக்கத்தான் . அதில் ஒரு மினிமம் மார்க் எடுக்க கூட இன்னோருத்தர் உதவி தேவைப் படுகிறது என்றால் நோகமால் நோம்பு கும்பிடும் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு. அடுத்தவர் உழைப்பைத் திருடி வாழ பழகுதலின் வெளிப்பாடு. நன்றாகப் படிப்பவர்களிடம் பிட் அடித்து எழுதிவிட்டு அவர்களையும் கேலி பேசுவது. சிறிய தவறுகளிலிருந்துதான் பெரிய தவறுகளின் முளைக்கிறது.

‘எஸ் இது மறுக்க முடியாத உண்மை. ‘ தேவ் ஒத்துக்கொண்டான்.

சரி பெக்கி பேசுனோம் . போருக்குச் செல்லும் இறுதி நேரத்தில் ஆயுதத்தைத் தொலைத்துவிட்டால் நீ என்ன செய்வாய்?


அலைவான்...
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -14

‘போருக்குப் போகும் போது ஆயுதத்தைத் தொலைச்சா என்ன கிடைக்குதோ அதை ஆயுதமா மாத்திக்கனும். அதை வச்சு யாரவது ஒருத்தர வீழ்த்தி ஆயுதத்தை எடுத்துகனும்.’ டைரியில் உள்ள கேள்விக்கு தன் மனதில் தேவ் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான்.

‘சரி இப்ப எதுக்கு போர் பத்தி மேடம் பேசறாங்க? என்ன பிரச்சினையில் மாட்டிகிட்டாங்க? ‘ யோசனையுடன் அடுத்த பக்கத்தைப் புரட்டினான்.

பெக்கி காமன் எக்ஸாம் எழுதும் முன் மூன்று திருப்புத் தேர்வு நடைபெறும். திருப்புத் தேர்வுனா என்னனு கேட்கறியா? ரிவிஷன் டெஸ்ட் பெக்கி.

எங்களுக்கு செகண்ட் ரிவிஷன் டெஸ்ட் நடக்கறதுக்கு சிறிது நாட்கள் முன்னாடி பள்ளியைச் சீரமைக்கும் வேலை தொடங்கினார்கள். மாலை நேரத்தில் தீடிரென்று ஆட்கள் வந்து விட்டனர். எங்களை வேறு கிளாசில் மாற்றி அமரவைத்தனர். பள்ளியின் மேற்கூரையைப் பிரிக்கும் வேலை ஒரு பக்கம் நடக்க நாங்களும் வகுப்பில் இருந்தனர். பள்ளி முடிய ஆனந்தமாக நானும் கிளம்பி விட்டேன். பேருந்து நிறுத்தம் செல்லும் பாதி வழியில் அனைத்துக் கணக்குகளும் அடங்கிய கணக்கு நோட்டை சீரமைப்பு நடக்கும் கட்டிடத்தில் வைத்தது நினைவு வந்தது.

உடனே அரக்க பரக்க பள்ளிக்கு திரும்பிச் சென்றேன். ஓடினேன் என்றே சொல்லலாம். அந்தக் கட்டிடத்தில் தேடிப் பார்த்தேன். எனக்கு அங்கே வைத்தது நினைவில் சரியாக இருந்தது. உள்ளே வெளியே என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பள்ளி முழுவதும் தேடினேன். பலனில்லை. நோட் மாயமாக மறைந்திருந்தது. மிகவும் வருத்தத்துடன் வீட்டுக்கு நேரமாகிவிட்டதால் கிளம்பி விட்டேன். அன்று இரவு முழுவதும் வருத்தத்தில் இருந்தேன். எனக்கு எல்லாப் பாடமும் நன்றாக படிக்க வரும். ஆனால் கணக்கு மட்டும் பயிற்சி செய்ய வேண்டும்.

‘புரியுது. கண்டிப்பா மேத்ஸ் எக்ஸாம்னா போர்தான்.’

தேவ் பரிதாபப்பட்டான்.

இருந்தாலும் காலை பள்ளியில் விசாரித்தால் ஏதாவது

தெரியும் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் அது பொய்யாகி விட்டது. அடுத்த நாள் தேடியும் கிடைக்கவில்லை.

தேர்வுக்கு கொஞ்ச நாள் இருந்தது. இந்த நேரத்தில் யாரிடமும் நோட் கேட்க முடியாது. கண்ணன் சார் வகுப்பில் ‘யாழரசி நோட் காணாம போயிட்டதால் அவ கிளாஸ் ரூமில் யார் கிட்ட நோட் கேட்டாலும் கொடுத்து ஹெல்ப் பன்னுங்க.’ இப்படி அறிவிப்பு செய்துவிட்டார்.

எனக்கு அஜி உமா எல்லாரும் கொடுத்தார்கள். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் வீட்டிற்கு போய் என்ன செய்வது? யாரிடமும் கையேந்தி நிற்க முடியாது.

எனக்கு ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது. நோட் காணாமல் போகவில்லை. அதை யாரோ எடுத்திருக்கிறார்கள். சீரமைப்பு செய்த வேலையாட்களிடமும் விசாரித்தோம். அவர்களும் நோட்டைப் பார்க்கவில்லை என்று கூறிவிட்டனர்.

எனக்கு வெறி. சோ எனக்கு மார்க் போகனும். நான் கொஞ்சம் மேத்ஸ்ல வீக். மனோ மாதிரி பார்மூலா பார்த்தா எனக்கு கணக்கு போட வராது. மத்த எந்த பாடத்தையும் மூணு தடவை படிச்சா எனக்கு மெமரி ஆகிரும். மேத்ஸ் வொர்க் அவுட் செஞ்சா மட்டும்தான் வரும். நோட் இல்லாட்டி என்ன? கணக்கு புத்தகம் இருந்தது. அதை வைத்து வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்தேன்.



கெஸ் வாட். செகண்ட் ரிவிஷன் டெஸ்ட்டில் என்னோட மொத்த மார்க் நாணூற்று எண்பத்து ஆறு. மேத்ஸ்ஸில் கிளாஸ் பர்ஸ்ட். 486 மார்க் இதுவரை யாருமே எடுத்தது கிடையாது. இரண்டு சப்ஜெக்டில் செண்டம்.

இதை நானே எதிர்பார்க்கவில்லை. என்னை யாரு பழி வாங்க நினைச்சாங்கனு தெரியல. அதுக்கு நல்ல பதிலடி கொடுத்துட்டேன். கண்ணன் சார் ‘நோட்டே இல்லாம புத்தகம் வச்சே மேத்ஸ் போட்டு இவ்ளோ மார்க் எடுத்துருக்கனு ‘ கிளாஸில் அனைவரின் முன்னும் பாராட்டி கைதட்ட சொன்னார்.

‘நீ கொஞ்சம் அமேசிங்க் தான். ஒத்துகிறேன்.’ தேவ் ஒத்துகிட்டான்.

காமன் எக்ஸாமில் நானூற்று எழுபத்தி ஆறு. ஆனால் பள்ளியில் முதலிடம். மார்க்ஸ் சீட் வாங்கிட்டு ,டீசி வாங்க அப்புச்சியுடன் வந்திருந்தேன். அவருக்கு பள்ளியில் முதலிடம் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

பாஸ் மிட்டாய் என்று வருடா வருடம் சிலர் மிட்டாய் எல்லாருக்கும் கொடுப்பர். நான் அதெல்லாம் செய்ய மாட்டேன். அப்புச்சி என்னை கடைக்கு கூட்டிட்டு போய் நிறைய சாக்லேட் வாங்கி என்னை ஊருக்கே கொடுக்க வச்சுட்டாரு.

அன்னிக்கு நான் ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்தது முக்கியம் இல்லை. அப்புச்சி முகத்தில் அவ்வளவு பெருமைய பார்த்தேன். அதுதான் சந்தோஷம். அந்த சம்பவம் அப்படியே கல்வெட்டா பதிந்து போயிருந்தது.

பெக்கி நம்மால் முடியாதுனு மத்தவங்க சொல்லலாம். ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது நாம தான். நம்மளோட எதிரி எப்பவும் நாமதான். நாம நினைச்சா எது வேணாலும் செய்யலாம்.

எட்டாவது முடிந்தது. நான் தாத்தா வீட்டில் இருந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. வேற எங்கேயும் இல்லை. அம்மா வீட்டுக்குத்தான். ஒரு கிறிஸ்துவ மிஷினரி பள்ளி எங்கள் ஊரில் பிரசித்தி பெற்றது. பெண்கள் பள்ளி. அங்கே நுழைவுத் தேர்வு எழுதி அட்மிஷன் வாங்கியாச்சு.

முன்னாடியே சொல்லியிருப்பேன். என் பள்ளியில் எட்டாவது வரை தான் இருந்தது. எட்டாவது முடித்தபிறகு அருகில் உள்ள நகரங்களுக்கு படிக்கச் செல்வர். என்னுடைய தாத்தா கிராமத்தில் இருந்து கொஞ்சம் சிரமம். அதனால் அம்மா வீட்டுக்கே சென்றுவிட்டேன். அம்மா ஊர் சகல வசதிகளும் உண்டு. அதனால் மேற்படிப்புக்கு அதுதான் வசதி. எனக்கு பிடித்த மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இருபாலர் பள்ளியை விட ஒருபாலர் மட்டும் படிக்கும் பள்ளியில் செமையாக எஞ்சாய் என்சாமி இருக்கலாம். நிறைய சுதந்திரம் இருக்கும். பெண்கள் எல்லாம் சேர்ந்து பயங்கரமாக கொட்டம் அடிக்கலாம்.

கிறிஸ்டியன் மிஷனரி பள்ளி விராடபுரத்தில் அமைந்துள்ளது. அது ஒரு கிறிஸ்துவ பள்ளி என்றாலும் இந்துக்களும் , முஸ்ஸீம்களும் பெண்கள் அதிகம். ஒழுக்கம் ரொம்பவும் முக்கியம். பெண்களுக்கு பாதுகாப்பான பள்ளி. அதனால் மாணவிகள் அதிகளவில் படிப்பர். ‘பசங்களுக்கு பொண்ணு கிடைக்கலனு சொல்றவங்க இந்த பள்ளிகூடத்துல எத்தனை புள்ளைங்க படிக்கிறாங்க பாருங்க’ இப்படி சிலர் கூறுவர்.

ஒன்பதாம் வகுப்பு. ஆறு பிரிவுகள் உண்டு. எங்களது பிரிவு அன் அபிஷியல். நான் கடைசிப் பிரிவு. ஆனால் அபிஷியலா நான்காவது பிரிவு. கிட்டதட்ட நூறு மாணவிகளுக்கும் மேல். அதற்குப்பிறகு பலர் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டதால் மாணவிகள் எண்ணிக்கை குறைந்தது.

எனக்கு லீடரா இருக்கனும் ஆசை இருந்தது. அது எட்டாவது வரைக்கும் நடக்கவே இல்லை. ஏண்டா லீடர் ஆனேன்னு யோசிக்க வைத்த இரண்டு வருடங்கள். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், நூலக வகுப்பு, தையற் கலை, ஸ்போர்ட்ஸ், மாரல் இன்ஸ்ட்ரக்ஸ்ன் இப்படி எல்லாப் பாடத்திற்கும் நான் தான் லீடர். வகுப்புக்கும் நான் தான் லீடர். இதனால் பள்ளியின் ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்திற்கு ரன்னிங்க்ல இருப்பேன். அது ஒரு வாழ்க்கை. வகுப்பில் படிக்க நேரம் இருக்காது. வீட்டில் மட்டும்தான் படிக்க முடியும்.

பொண்ணுங்க எங்கிட்ட அதிகமா கேக்கிற ஒரு விஷயம் என்னது தெரியுமா? ‘ நீ கிளாஸ்ல படிக்கறதே இல்லை. அப்புறம் எப்படி ஃப்ர்ஸ்ட் ரேங்க் உன்னால எடுக்க முடியுது.’

இதுக்கு என்ன பதில் சொல்றது ? வீட்டுல படிக்கறது எனக்கு மட்டும்தான் தெரியும் .

என்னோட ஆங்கில அறிவு மேம்பட்டதுக்கு அந்த பள்ளிதான் காரணம். எனக்கு என்னோட கிளாஸ் மிஸ் லேகாவை ரொம்ப பிடிக்கும். அவங்க என்னை திட்டினால் கூட சிரிப்புதான் வரும். அவங்கனா எனக்கு ஒரு தனி பிரியம்.

நான் ரொம்ப அதிகமாக அச்சீவ் செய்யது அந்தப் பள்ளியில்தான்.

அதெல்லாம் விடு. எனக்கு மூன்று பேர் குளோஸ் பிரன்ட்ஸ். மோனா, சுகா, கவுஸ். நாங்கதான் கேங்க். வெரி பவர் புல் கேங்க் இன் தி கிளாஸ். மோனா கூட நான் ரொம்பவும் நெருக்கம். அதே மாதிரி சுகா, கவுஸ் ரொம்ப நெருக்கம். ஆனால் நாங்கள் நால்வரும் நல்ல பிரண்ட்ஸ். செம லூட்டி அடிப்போம். வி லுக் ஆப்டர் ஈச் அதர். கவுஸ் அருமையாக நடிப்பா. சுகா சூப்பரா டேன்ஸ் ஆடுவா. நானும் மோனாவும் படிப்போம். நாங்க நாலும் பேரும் சேர்ந்து ஸ்கூல்ல டிராமா என்னோட டேரக்சன், ரைட்டிங்கில் செய்வோம். பிராக்டிஸ் பன்றோம்னு பர்மிஷன் வாங்கி பொழுது போக்குவோம். அந்த டிராமா ஜாதி உணர்வ பத்தி எழுதிருந்தேன்.

அவங்க கூட ஓரங்க நாடகம் கல்வியோட அவசியம் பத்தி நடிச்சு பிரைஸ் வாங்கியிருக்கேன். அதில் நான் பையன் வேஷம். எங்கப்பாவோட பச்சை பார்டர் இருக்க வேட்டி , காட்டன் வௌயிட் சர்ட் சுட்டாச்சு. மீசைக்கு ஐடெக்ஸ் மை, லாங்க் ஹேர் NCC girls மாதிரி மாத்தியாச்சு. இதுல்லா செஞ்சதுக்கு அப்புறம் வேட்டி கட்டத் தெரியல. அதுக்கு வேற கிளாஸ் பொண்ணு ஹெல்ப் செய்தாள். அப்படி இப்படினு ஒரு வழியா பையனா மாறிட்டேன். வெரி கீயுட் லிட்டில் மேன்.

கொரியன் டிராமல செய்யற மாதிரி ஜெண்டர் ஸ்வாப் நான் அப்பவே செஞ்சிட்டேன். பெக்கி தூக்கம் தூக்கமா வருது. நாளைக்கு எழுதுறேன். குட் பாய்.

‘என்னமோ பத்து வேஷம் போட்ட உலக நாயகன் மாதிரி பில்டப் கொடுக்கறத பாருடா? ஒரு கெட்டப் போட்டதுக்கு ரெண்டு பக்கம் எழுதிருக்கே இந்த பக்கி. இதுல இண்டர்வல் வேற. சலித்துக் கொண்ட தேவ் , நல்ல சோசியலைஸ் பன்னற ஒரு பொண்ணு இவ்ளோ டைரில் எழுதிருக்கான ஒரு விஷயம் தெளிவா புரியுது. இந்த டைரியில் மட்டும்தான் அவளோட உண்மையான முகத்தை எக்ஸ்பிரஸ் பன்னிருக்கா. வெளில நிறைய பேருக்கிட்ட அவளோட போலிமுகத்தைத்தான் காமிச்சுருக்க வாய்ப்பு அதிகம். இப்படியும் இருக்கலாம். இல்லை தன்னோட ஒரு சில குணங்களை மட்டும் காமிச்சு தான் இப்படி என்று ஒரு நிலைப்பாட்டை மத்தவங்க கிட்ட கிரியேட் செய்துட்டா அதுக்கப்புறம் மத்தவங்க வேறு விதமா நினைக்கறது கஷ்டம். இப்படியும் இருக்கலாம். இந்த டைரி எழுதறக்கு ஒரு முக்கியமான காரணம் அவள் யாருகிட்டேயும் சொல்லாத ரகசியங்களை இதில் எழுத நினைச்சிருப்பா? அதுதான் லாக் இருக்கு. ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு ரகசியம் உண்டு. அதில் இவளோட ரகசியம் என்னவாக இருக்கும்?’ யோசித்தவாறே காஃபியைக் குடித்துக் கொண்டிருந்தான் தேவ்.

.........அலைவான்.
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம்-15

பெக்கி நம்ம வாழ்க்கையில் சில நாட்கள் எப்போது நினைத்தாலும் மகிழ்வைத் தரும். ஆனால் சில நாட்கள் நம்ம வாழ்க்கையில் வந்ததுக்கே வருத்தப்படுவோம். சில நாட்கள் பயத்தை தந்தவையாக இருக்கும். அவை நம் வாழ்வை சிறிது சிறிதாக நிழல் போல் படர்ந்து முழுவதுமாக ஆக்கிரமிக்கத் தொடங்கிவிடும். அப்படிப்பட்ட ஒரு நாள் என் வாழ்வில் வரும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை.

நாடகம் முடிந்தது. அதுவரை நன்றாகப் சென்று கொண்டிருந்த நாளே நாடகமாய் மாறி விடும் என்பது எனக்குத் தெரியாது. நாடகத்தை முடித்து வேஷத்தைக் கலைத்து விட்டோம். மாலை ஆறு மணிக்கு மேலாகிவிட்டது. பள்ளியில் இந்த நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். ஹாஸ்டலில் இருப்பவர்கள் ஸ்டடி டைம் என்பதால் வெளியில் வரமாட்டார்கள். மோனா, சுகி, கவுஸ் மூவரும் பேருந்தைப் பிடிக்கக் கிளம்பி விட்டனர். எனக்கு போக்குவரத்து வசதி சிறப்பாக உண்டு. இருபது நிமிடங்களில் சென்று விடலாம்.

என்னுடைய ஸ்கூல் பேக் இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறையில் இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டு கீழே வந்தேன். பர்ஸில் உள்ள பணத்தைச் செக் செய்ய அதைத் திறந்து பார்த்தேன். அப்போதுள்ள பர்ஸ்களில் கண்ணாடி இருக்கும். முகம் பார்த்துக் கொள்ளலாம். நானும் என் முகத்தைப் பார்த்தேன். மீசையிட்ட மை அழியாமல் கொடூரமாக இருந்தது. அப்படியே பேருந்தில் போக முடியாது.

நாடகத்தில் மூடியை அடக்குவதற்காக தேங்காய் எண்ணெய்யும் வாங்கி வைத்திருந்தேன். அதைக் கொண்டே மீசையை அழித்துவிடலாம் என்று ரெஸ்ட் ரூமிற்குச் சென்றேன். எனக்கும் கட்டுமானப் பணிகளுக்கும் நேரம் சரியில்லை. தற்போது இருக்கும் ரெஸ்ட் ஒட்டியே அதிகப்படியான ரெஸ்ட் ரூம்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது.

மாலை என்பதால் ஆட்கள் இல்லை. நான் மீசையை அழித்து விடுவதில் மும்முரமாகிவிட்டேன். தண்ணீர் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது. தண்ணீர் குழாயை நிறுத்தியதும் தான் எனக்கு யாரே முனகுவது போன்ற மெலிதான சத்தம் கேட்டது.

நாங்கள் படிக்கும் போது இந்தப் பள்ளியே சுடுகாட்டின் மீது கட்டப்பட்டது என்ற செய்தி மாணவிகளிடம் பரவியிருந்தது. மாலை வேறு இருட்டத் தொடங்கி இருந்தது. எனக்கு ஏதோ தோன்ற சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தேன். நடந்து கட்டுமானம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன்.

அதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு என்றாலும் அதற்காக நான் வருத்தப்படவில்லை. அங்கு நான் பார்த்தது மனித மிருகம் தான். கட்டிட வேலை செய்யும் ஆட்களில் ஒருவன் ஒரு சின்ன பொண்ணை வாயைப் பொத்தி…அந்த பொண்ணு எங்கள் பள்ளியை ஒட்டி அமைந்துள்ள சிறுவர் பள்ளியில் படிக்கிறது என்பதை உடையைப் பார்த்ததும் அறிந்து கொண்டேன்.

அவனிருக்கும் சைசில் என்னை சுண்டெலி போன்று மிதித்து விடுவான். நான் மெதுவாக நடந்து வந்தேன். கிறிஸ்துவ பள்ளி என்பதால் ஆடம்பர நகைகள் அணிய அனுமதி இல்லை. என் காலில் கொலுசும் இல்லை. சத்தமில்லாமல் கட்டுமான வேலை என்பதால் கிடைத்த ராடு கம்பி ஒன்றை எடுத்து அவன் தலையில் அடித்துவிட்டேன். எனக்கு அந்தப் பாப்பாவைக் காப்பத்தனும் அவ்வளவுதான். அவன் தலையைப் பிடித்தவாறே கீழே விழுந்தான்.

உடனே அந்தப் பாப்பா பயத்தில் தேமத் தொடங்கியது.

“பாப்பா..கண்ணைத் தொடை. இங்கேயிருந்து வேகமாக ஓடி உங்க பள்ளிக் கூட கேட்டுகிட்ட ஓடிரு. எதுக்காகவும் நிக்காத. பயப்படாம போ. யார்கிட்டேயும் எதுவும் சொல்லாத. ஓடு சீக்கிரம்..”

அருகில் கிடந்த பேக்கை எடுத்துக் கொடுத்தேன். ஏற்கனவே பயந்திருந்த குழந்தை வாய்ப்பு கிடைத்ததும் ஓடிவிட்டது.

இப்போது திரும்பிப் பார்த்தால் அவன் மயக்கத்தில் கிடந்தான். கம்பியைக் கீழே போட்டேன். இப்போதுதான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது. கம்பியை அருகில் இருந்த வேஸ்ட் துணியை எடுத்து துடைத்து விட்டேன். கம்பியை அந்த இடத்திற்கு அருகில் இல்லாமல் வேறு இடத்தில் தூக்கிப்போட்டேன். நான் இரத்தத்தைத் துடைத்த துணியை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடினேன்.

என் பேக்கில் துணியைத் திணித்த பின்பு பேக்கை மாட்டிக் கொண்டு ஓடிவிட்டேன். வழக்கமாக உபயோகப்படுத்தும் வழி இல்லை. எங்கள் பள்ளியில் பேக் கேட் ஒன்று உண்டு, அது ஒரு சிறிய கேட். அதன் வழியே சென்றால் சர்ச் இருக்கும். இந்த வழியை பள்ளிக்கு தாமதம் என்றால் மட்டும் சிலர் பயன்படுத்துவர். சர்ச்சிலும் மாலை நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது.

சர்ச்சை அடைந்ததும் ஒரு நிம்மதி பிறந்தது. பேக்கை வெளியில் வைத்துவிட்டு உள்ளே சென்றேன். கர்த்தரின் முன் மண்டியிட்டு அமர்ந்தேன். கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்தது. கண்ணைத் துடைத்தேன். கர்த்தரை வணங்கிவிட்டு பைபிளின் மீது கை வைத்து ஒரு பக்கத்தைத் திறந்தேன். முதல் தென்படும் வரிகளை வாசித்தேன்.

“கர்த்தருக்குக் காத்திருக்ககிறவர்களோ புதுப்பலனடைந்து கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள். –ஏசாயா 40:31”

இந்த வரிகள் இருந்தது. படித்ததும் தைரியம் வந்தது. எனக்கு மனக் கஷ்டம் வரும் போதெல்லாம் சர்ச்சில் தியானம் செய்து பைபிளின் வசனங்களைப் இப்படி எடுத்துப் படிப்பேன். இன்றும் விடை கிடைத்தது போலத் தோன்றியது. சர்ச் வழியாக பேருந்து ஏறும் இடத்திற்குச் சென்று என் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறினேன். வழியில் ஒரு நதிப்பாலத்தைப் பேருந்து கிடக்கும். ஜன்னல் ஓரம் சீட் கிடைத்திருந்தது. வேஸ்ட் துணியை எடுத்து ஆற்றில் போட்டுவிட்டேன். நிம்மதிப் பெருமூச்சுடன் வீட்டிற்குச் சென்றேன்.

‘இடியட்..தேங்காய் எண்ணெய் அங்க இருக்கு. கம்பி அங்கேயே இருக்கு. இதுக்கும் மேல அந்தக் குழந்தை ஐ விட்னஸ்.’ கோபத்தில் காலைத் தரையில் உதைத்தான் தேவ். ‘இவ சின்ன பொண்ணு. அவ்ளோ பலமா அடிக்க முடியாது. அதனால் உயிர் போயிருக்காது.’ இப்படி பல்வேறு கோணத்தில் சிந்தித்த தேவ் மேலும் அறிய டைரியில் மூழ்கினான்.

பெக்கி நான் ஒரு மர்டரர். ஐ கில்ட் சம்படி. ஆனால் இயற்கை என் பக்கம் இருந்தது. அந்த சம்பவத்திற்கு அப்புறம் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. இரண்டு நாட்கள் லீவ் பள்ளி விடுமுறை வேறு. அதனால் என்னால் நிம்மதியாக ஓய்வு எடுக்க முடிந்தது. உடலுக்கு மட்டும் தான். மனது திரும்ப திரும்ப அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தது.

என்னால் மறக்க முடியவில்லை. நான்கு நாட்கள் கழித்துதான் பள்ளிக்குச் சென்றேன். என்னை நலம் விசாரித்த தோழிகள் கூறிய செய்தி அதிர்ச்சி அடையச் செய்தது.

‘நாலு நாளைக்கு முன்னாடி பேஞ்ச மழையில் புதிதாக கட்டிட்டு இருக்க ரெஸ்ட் ரூம் கட்டிடம் இடிஞ்சு விழுந்துருச்சு. மழையினால அடிச்ச காத்துல மரம் கட்டடத்துல விழுந்ததால் இடிஞ்சு போச்சு. அதுக்குல்ல ஒரு ஆள் மாட்டி செத்து போயிட்டான். உனக்குத் தெரியுமா? அந்த ஆள் கட்டிடம் கட்ட ஆரம்பிச்சதுல இருந்து அங்கதான் தங்கியிருக்கான். போலீஸ் எல்லாம் வந்தாங்க.’ சுகா சொல்லியதைக் கேட்ட எனக்கு சந்தோஷப்படுவதா இல்லை துக்கப்படுவதா எனத் தெரியவில்லை.

அவன் இவ்வளவு நாள் தங்கியிருக்கானா எத்தனை குழந்தைங்க அவன்கிட்ட… நான் செஞ்ச கொலை எந்த ஆதாரமும் இல்லாம போயிருச்சு.

சொல்லு பெக்கி. ஒரு குழந்தை வீட்டுக்கு வெளியில விளையாடிகிட்டு இருக்கு. அப்ப அங்க ஒரு விஷப்பாம்பு வருது. நீ என்ன செய்வ? நானும் சராசரி மனுஷங்கள மாதிரி அதைக் கொல்லத்தான் நினைப்பேன். இப்ப நான் செய்திருக்க காரியம் லீகலி தப்பு. எந்த உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதே மாதிரி அவனுக்கும் எந்த உயிரையும் வதைக்க உரிமை கிடையாது. இத என்னால யாருகிட்டேயும் கூட சொல்ல முடியல. கடவுளுக்கு அப்புறமா உன் கிட்டதான் மட்டும் தான் கன்பெஸ் செய்திருக்கேன்.

இதை எழுதி முடித்திருக்கையில் தண்ணீர் பட்டு காய்ந்தது போலத் தாள் இருந்தது. அது கண்ணீராகத்தான் இருக்கும் என்று தேவ்க்கு புரிந்தது. நான் செய்ததை எவ்வளவு ஜஸ்டிபை செய்தாலும் அது தப்புதான். எப்போதும் மறக்க முடியாது. அது காலம் கடந்தாலும் எங்காவது ஒரு மூலையில் என் மனதை அரித்துக் கொண்டே இருக்கும்.

எனக்கு விடிகாலாய் இருந்தது படிப்பும் , பள்ளி வேலைகளும் தான். அதுவே மூச்சு முட்டும் அளவுக்கு இருக்கும். அதற்குப் பிறகு எனது குணம் சிறிது மாறியிருந்தது. முன்பு போல் அதிகமாகப் பேசுவது இல்லை. மாறிவிட்டிருந்தேன். அந்த மௌனம் மெச்சுரூட்டி மாதிரி வெளியில் தெரிந்ததால் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

‘ரகசியம் தெரிந்த நாலாவது நபர் நான். ‘ தேவ்க்கு அதிர்ச்சிதான் அவள் தெரியாமல் ஒரு கொலை செய்து விட்டாள் என்றாலும் அவள் இடத்தில் தான் இருந்திருந்தாலும் இதைச் செய்ய வாய்ப்புள்ளது என்று தோன்றாமல் இல்லை. அவளுக்குத் தைரியம் கொஞ்சம்

அதிகப்படி என்று தோன்றியது. ஏதோ ஒரு இனம் புரியாத அழுத்தம் அவன் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியாமல் இல்லை. டைரியை டேபிளில் வைத்தவன் , பால்கனியில் உள்ள கதவைத் திறந்து வெளியே வந்தான். சில்லென்ற காற்றுடன் மழைச் சாரல் முகத்தில் அடித்தது. தென்றல் விளையாடிய தனது சிகையைக் கோதி அதை அடக்க முயன்றான். அது அவன் மனம் போல் கட்டுப்படாமல் அலைக்கழித்தது. மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியே விட்டான். அவனுக்குத் தெரியவில்லை. அதனால் மட்டும் உணர்வுகளை வெளியேற்றிவிட முடியாது என்று. சிறிது நேரம் நின்றவன் உள்ளே வந்து தனது உடைகளை மாற்றினான். தலையில் துண்டைத் துவட்டிக் காய வைத்தவாறே தொலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதரை என்று காட்டியது. பேனாவை எடுத்தவன் விராடபுரம் , நதி, கிறிஸ்துவ பெண்கள் பள்ளி போன்ற விவரங்களைக் குறித்து வைத்தான்.

‘இன்னிக்கு டைரியைப் படிச்சு முடிக்கனும் ‘ என்று முடிவெடுத்தவன் மீண்டும் படிக்க ஆரம்பித்தான்.

பெக்கி இந்த வாழ்க்கை நம்மள வச்சு செய்யனும் முடிவு செஞ்சதுக்கு அப்புறம் என்ன? செமையா காட்டு காட்டுனு காட்டும். நான் ஹை ஸ்கூலில் ஒரு விஷயத்திற்கு பேமஸ் ஆனேன். அது என்னனு தெரிஞ்சா நீ ஷாக் ஆகிருவ?

‘இதுக்கு மேலேயும் எதாவது இருக்கா என்ன?’

-அலைவான்.
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம்-16

‘ இதுக்கும் மேலயும் எதாவது இருக்கா என்ன? ‘ என்ற கேள்வி தேவின் மனதில் தோன்றாமல் இல்லை.

எனக்கு மாரல் இன்ஸ்ட்ரக்ஸன்ஸ் ஒரு பாடம் இருக்கு, அதான் நன்னெறி கல்வி. எனக்கு அந்தப் பாடம் ரொம்பவும் பிடிக்கும். அதுக்கும் எக்ஸாம் நடக்கும். பெரும்பாலன மாணவிகள் ஜஸ்ட் பாஸ் ஆனா போதும்னு நினைப்பாங்க.

உனக்கு என்னைப் பத்தி தெரியும்ல. அந்த பாடத்தில் நான் மொத்த ஆறு செக்சனிலும் சேர்த்து முதல் மார்க் எடுத்துட்டேன். இங்கதான் டிவிஸ்ட் இருக்குது. இதனால் கொங்கு மறை மாவட்ட அளவில் நடக்கும் போட்டித் தேர்வில் நான் கலந்து கொள்ள வேண்டும். என்னுடன் இரண்டாம் மதிப்பெண் எடுத்த பெண்ணும் கலந்து கொண்டாள். இறுதியில் ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் அவள் முதலிடம் பிடித்தாள். நான் இரண்டாமிடம் பிடித்தேன்.

மாரல் இன்ஸ்ட்ரக்சன்ஸ் எக்ஸாமில் ஒரு மர்டரர் மார்க் எடுத்தது சரித்திரத்தில் அதுதான் முதல்முறையாக இருக்கும். இதை வெளியிலும் சொல்ல முடியாது. எனக்கு நானே வாழ்த்து சொல்லிக்க வேண்டியதுதான்.

நான் என்னதான் தப்பு செஞ்சாலும் இன்னொரு பக்கம் மனசு ‘அது ஒரு ஆக்ஸிடெண்ட். ஒரு விஷப்பாம்பைக் கொன்னதுக்காக என்னோட லட்சியத்தை விட்டுக் கொடுக்க கூடாது. என்னோட குடும்பத்தை முதல்ல நினைச்சுப் பார்க்கனும். இத மறந்துட்டு எதிர்காலத்தை மட்டும் யோசி’ சொல்லியது.

‘கில்ட் அண்ட் ரேசனஷலைசேஷன். இத நான் சொல்லக் கூடாது. மூவ் பார்வார்ட். பர்கெட் எவ்ரிதிங்க்’ தேவ் அறிவுரை வழங்கினான்.

அப்கோர்ஸ் எது பிராக்டிக்கலோ அதத்தான் நான் செஞ்சேன். எனக்கு என்னோட வாழ்க்கை ரொம்ப முக்கியம். அந்தப் பாப்பா நல்லாருக்கானு அடிக்கடி யாருக்கும் தெரியாம பார்த்துக்குவேன். முதல்ல கொஞ்ச நாள் அந்தப் பாப்பா சரியா இல்லை. அதற்குப் பிறகு சரியாகிவிட்டாள். குழந்தைதானே காலப் போக்கில் மறந்து இயல்பாக மாறிவிட்டாள். ஆனால் குழந்தையிலிருந்தே நல்ல மெமரி கொண்ட எனக்கு அது ஹெல்.

ஆனாலும் அந்தக் குழந்தை சிரிக்கும் போது அது நான் செஞ்சது டோட்டலி ஓர்த் இட் அப்படினு தோணுச்சு. அதுவும் நான் கொஞ்சம் கொஞ்சமா என்னோட விஷயங்களில் கவனம் செலுத்த உதவியது.

இதுக்கு மேல நான் இதப் பத்தி எழுத மாட்டேன். ஏனா ஐ பீல் சேட்.

இப்படியே ஸ்கூல் டேஸ் நார்மலாக இருந்தது. அதில் ஒரு பிரேக் கொடுக்கற மாதிரி சேல்ஸ் டே வந்தது.

ஒவ்வொரு வகுப்பில் உள்ள மாணவிகளும் குழுவாகச் சேர்ந்து பணம் சேர்த்தி ஏதாவது ஒரு ஐடியா செய்து பொருளை விற்கனும். சாப்பாடு, மெகந்தி, ஸ்னேக்ஸ், கூல் டிரிங்க்ஸ், ஐஸ்கீரீம், ஸ்போர்ட்ஸ் இப்படி எத வேணாலும் சேல்ஸ் டே விற்கலாம். ஸ்கூல் கிரவுண்டில் மணல் இருக்கும். கிரவுண்ட்டும் ரொம்ப பெரியது. கிளாஸ் ரூமில் இருக்கற டெஸ்க் எடுத்து கிரவுண்டில் போட்டு ஆரேஞ்ச் செய்துக்கலாம். ஹை ஸ்கூல் , ஹையர் செகண்டரி , மிடில் ஸ்கூல் இப்படி தனித்தனியாக வரும். சேல்ஸ் டே அப்படி என்றாலே எல்லாருக்கும் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும்.

மோனா, சுகி, கவுஸ், கூட சேர்ந்து நாங்க ஒரு டீமா ஆனோம். பரோட்டா, ஐஸ் கீரீம் , மெகந்தி இந்த மூன்றும் விற்றோம். நான் அக்கவுண்ட்ஸ் மெயிண்டெயின் செய்தேன்.

கிளாஸ் கிளாஸா போய் பரோட்டாக்கு ஆர்டர் எடுத்துக்கனும். எவ்வளவு ஆர்டர்ஸ் வருதுனு பார்த்துட்டு பரோட்டா கடையில் விலை குறைவாக பேசி வாங்கிடனும். அப்புறம் என்ன சேல்ஸ் டே அன்னிக்கு எல்லாருக்கும் கொடுத்திட்டா சரி. கவுஸ் நல்லா மெகந்தி போடுவா. மெகந்தி போடுவதில் நல்லா சம்பாதிக்கலாம். லோ இன்வெஸ்ட்மெண்ட் ஹை பிராபிட். ஆனால் ரிஸ்க் இருக்கு. முஸ்ஸீம் பொண்ணுங்க சூப்பரா மெகந்தி போடுவாங்க. அரேபியன் டிசைன்ஸ் வெளுத்து வாங்குவாங்க. அவங்கதான் பெஸ்ட். இத டிஸ்கிரிமினேஷன் பன்னறதுக்காக சொல்லல. எங்க ஸ்கூல்ல அப்படிதான். இருந்தாலும் டேலண்ட் ஹேஸ் நோ பாரியர்ஸ்.

எங்க சேல்ஸ்ம் நல்லா நடந்துச்சு. வர்ல லாபத்துல போட்ட பணத்தை எடுத்துட்டு நமக்கு எவ்ளோ தோணுதோ அவ்ளோ டெனேட் செய்யலாம். அது சேரிட்டிக்காக போயிடும். நாங்க நாலுபேரும் டெனேட் பேசி பணம் கிளாஸ் மிஸ்கிட்ட கொடுத்திட்டோம். அப்புறம் நாங்களும் நல்லா பிடிச்சத எல்லாம் வாங்கி சாப்பிட்டோம். என் நண்பிகள் இருக்கும் போது என்ன கவலை? மனோ , அஜி கூட ரொம்ப ரேரா ஆர்கியூ செய்வேன். ஆனால் சுகி, கவுஸ், மனோ இவங்க கூட ஆர்கியூமெண்ட் அடிக்கடி வரும். நாங்க நாலு பேரும் ரொம்ப வித்தியாசமானவங்க. ஆனால் எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும். ரொம்ப ஜென்யூன் அவங்க. காலையில் நேரமே ஸ்கூல் வந்திட்டா போதும். மரத்தடில உட்கார்ந்துக்குவோம். எங்க வகுப்பு இரண்டாவது மாடி என்பதால் முதல்மாடி , இரண்டாம் மாடிப் படிக்கட்டுகள் இணையும் இடத்தில் நின்று பேசுவோம். எனக்கு எப்பவும் மாடி போன்ற உயரமான இடங்கள் மிகவும் பிடிக்கும். உயரத்தில் நின்று சுற்றுப்புரத்தை ரசித்தல் மிகவும் சுகமான ஒன்று.

‘எனக்கும் தான். அதனால்தான் பென்த் ஹவுஸ் எல்லாம் காஸ்ட்லி. ஆனால் பென்த் ஹவுஸ் கூட அவசியம் இல்லை. இயற்கையின் மாடியான மலையே போதும். எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் ஒரு மலையில் டெண்ட் அடிச்சு நைட் நிலா , நட்சத்திரத்தைப் பார்த்துட்டு தூங்கற சுகம் வராது.’ தேவ் தான் இதற்கு முன்பு போட்டோகிராபிக்காக சென்ற இடங்களை நினைத்துப் பார்த்தான்.

அதே மாதிரி நைட் டைம் நிலாவையும் , நட்சத்திரத்தையும் பார்க்க ரொம்ப பிடிக்கும். என்னடா இதுக்கு முன்னாடி வெயில் பிடிக்கும்னு சொன்னா? இப்ப நிலாவ பத்தி சொல்றானு நீ நினைக்கலாம். நான் ஒரு டூ டைமர். எனக்கு சூரியனின் வெம்மையும் , நிலவின் குளுமை இரண்டுமே பிடிக்கும். ஆனா நிலவை விட சூரியன கொஞ்சம் அதிகமாகப் பிடிக்கும். எனக்கு குளிர் ஒத்துக்காது. சாதாரணமாக மழை வரும் போலிருந்தால் கூட என் உடலில் வெப்பநிலை இறங்கி விடும். இயற்கையாகவே கொஞ்சம் வெப்பநிலை அதிகமாக வேண்டும். இதையே பர்சன்ஸ்களுக்கு வச்சுக்கலாம். உனக்கு தெரியும் . நான் கைண்ட் பர்சாலனாலிட்டி என்றாலும் ஐம் டூ கோல்ட் டூ. வாழ்க்கை அனுபவங்கள் என்னைப் போகப் போக ரொம்பவும் கோல்டா மாத்திருச்சு. அதனால் வார்ம் பர்சாலினிட்டி என் பக்கத்தில் இருந்தால் நல்லாயிருக்கும்.

சேல்ஸ் டே முடிஞ்சுது. அப்படியே ஆசிரியர்கள் தினமும் வந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் ரெப் இரண்டாயிரம் பேருக்கு முன்னாடி தன்னோட கிளாஸ் டீச்சருக்காகப் பிரே பன்னனும். என்னதான் மனசுக்குள் விஜய் சேதுபதி மாதிரி நான் பிரே பன்னுவேன் நினைச்சாலும் அன்று வகுப்பு ஆசிரியை நலம் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். பள்ளியில் இருக்கும் அனைத்து மாணவிகளும் , ஆசிரியைகளும் அங்கு குழுமியிருப்பர். எனக்கு வேற என் கிளாஸ் டீச்சர ரொம்ப பிடிக்கும். பிரேயர் எல்லாம் சூப்பரா ரெடி பன்னியாச்சு. இதுக்கு முன்னாடி ஸ்டேஜ்ல பேசியிருந்தாலும் இரண்டாயிரம் பேர் முன்னாடி பேசுவது அதான் முதல் தடவை. எனக்கு பதட்டமாக இருந்தது. நான் எதுக்காவது ரொம்ப டென்சன் ஆனால் வலதுகால் மட்டும் நடுங்கும்.

அன்று அப்படி ஒரு சூழ்நிலை. ஸ்கை பூளு யூனிஃபார்ம், பிளாக் ஷீ, லாங்க் ஹேர பிளாக் ரிப்பனில் கட்டியிருந்தேன் . என் பெயரும் வகுப்பும் அறிவிக்கப்பட்டது. மைக் கையில் வாங்கிக் கொண்டு சென்றேன். மேடையில் நின்று அனைவரையும் பார்த்தேன். பயத்தில் கண்ணை மூடிக் கொண்டே பிரேயரைச் சொல்லி முடித்தேன். பிரேயர் என்பதால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். நான் பயத்தில் கண்ணை மூடிக் கொண்டேன்.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோ என்னோட அக்லியான போட்டோக்களில் ஒன்று . அதை விடு. பிரேயரிலும் பேசுவோம். அதில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் இருக்கமாட்டார்கள். அதனால் இந்தப் பிரேயர் தான் நான் அதிகபட்ச ஆடியன்ஸ் முன்னாடி பேசுனது.



காலம் ரொம்ப வேகமாக ஓடி பத்தாம் வகுப்பும் சேர்ந்துட்டேன். உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் எனக்கு புத்தகங்கள் படிக்க முடியவில்லை. புதிய தலைமுறை மாதிரி பத்திரிக்கைகள் தான் படித்தேன். நான் படிக்கும் போது ரொம்ப பிரசர் இருக்கும். பாட புத்தகங்களைத் தவிர பத்தாம் வகுப்பில், பன்னிரெண்டாம் வகுப்பில் வேறு எதையும் சிந்திக்கக் கூடாது. பன்னிரெண்டாம் வகுப்பை பதினொன்றாம் வகுப்பிலேயே படித்து விடலாம். அப்படி ஒரு பிரசர் இருக்கும். மார்க் எடுத்தால்தான் வாழ்க்கை என்று நிலை இருந்தது. ஆனால் காலேஜ்ல கோல்ட் மெடல் வாங்கினால் கூட பலனில்லை. சும்மா பேருக்கு வைத்துக் கொள்ளலாம். வாழ்வின் எதார்த்தம் வேறு. அதற்கும் நாம் படிக்கும் பாடங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்த விஷயம் பெற்றவர்கள் பாதிப் பேருக்கே புரிவதில்லை.

நான் பத்தாவது படிக்கும் போது பள்ளியில் ஒரு சொல்லத்தகுந்த விஷயம் நடந்தது. இரு பெண்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பில் வேறு பிரிவில் பயில்கின்றனர். பெண்கள் மிகவும் கூர்மையான பார்வை உள்ள ஜீவன்கள். அப்படிப்பட்ட ஏதோ ஒரு ஜீவன் கண்களில் இவர்களின் காதல் தட்டுப்பட அது பள்ளி முழுவதும் பிரபலமானது. அப்போது இந்த மாதிரி உறவுகள் பற்றிச் சரியான புரிதல் இல்லாத காலம். அந்த இரண்டு பேருக்குமே சரியான புரிதல் இருந்திருக்குமா என்றால் தெரியாது . பொது இடங்களில் அவர்கள் அன்பை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் மற்ற மாணவிகளின் புறணி பேசுவதிலிருந்து தப்பித்திருப்பார்கள். அன்புக்கு பாலின பேதம் கிடையாது. இடம் சரியாக இல்லை. இப்படி மாட்டிக் கொண்டார்களே என்று தோன்றியது. என்னைப் பொறுத்த வரைக்கும் யாருடைய காதலுக்கும் பள்ளி சரியான இடம் கிடையாது. எதா இருந்தாலும் வெளியில் பார்த்துக்கனும். இடம், பொருள் , ஏவல் இருக்கிறது.

‘பார்ரா LGBTQ பத்தி கூட அப்பவே தெரிஞ்சுருக்கு.’ புருவத்தை உயர்த்தினான் தேவ்.

பத்தாம் வகுப்பில் நடந்த சம்பவங்களில் ஒன்று. நான் அரையாண்டுத் தேர்வில் கணிதத்தில் வெறும் 45 மார்க்தான் எடுத்தேன். மேத்ஸ் மிஸ் கூப்பிட்டு செம வார்னிங்க். 45 மார்க் எடுத்தாலும் கிளாஸ் பர்ஸ்ட் நான் தான்.

‘வாட் ஃபார்ட்டி ஃபைவ்வா?’ தேவ் அதிர்ந்தான்.

எட்டாவது அதனால் மேத்ஸ் மார்க்க இம்புரூவ் செஞ்சாகனும். என்னிடம் சீனியர்களிடம் வாங்கிய பழைய வினாத்தாள்கள் இருந்தது. என் பேருந்துத் தோழி ஒரு ஆசிரியரிடம் டீயூசன் சென்று கொண்டிருந்தாள். அவள் தான் எனக்கு கண்ணன் சாரைப் பற்றிக் கூறினாள். அப்பவே பிப்ரவரி மாதம் பாதி முடிந்திருந்தது.

அவரிடம் சேர்ந்தேன். அவர் எனக்கு எந்த லெசனும் எடுக்கவில்லை. நான் போவேன். பழைய கொஸ்டீன் வொர்க் அவுட் பன்னுவேன். அவர்கிட்ட காமிப்பேன். அவ்வளவுதான். ஏதாவது சுத்தமா தெரியல அப்படி என்றால் கேட்பேன். அவர் சொல்லுவார். அவருக்கு தெரியும் நான் நல்லா படிக்கிற ஆளு. தனிக்கவனம் தேவையில்லை. எனக்குனு ஒரு ஸ்பேஸ் அவர் கொடுத்திருந்தார். அதனால் தான் என்னால் நிம்மதியாக வொர்க் அவுட் செய்ய முடிந்தது. பொதுத் தேர்வில் 99 மார்க் எடுக்க முடிந்தது. நான் அதிக நாட்கள் சென்ற கடைசி டூயூசன் அதுதான். ஒரு மாதம் போனேன்.

அப்புறம் டென்த் மார்க் சொல்ல மாட்டேன். அது என் வாழ்க்கையைத் தீர்மானிக்கவில்லை. அப்புறம் ஏன் எட்டாவது மார்க் சொன்னேனு கேட்கலாம். எட்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் ஒரு பெரிய விஷயம் கிடையாது.

சரி பெக்கி அடுத்தது நான் காலேஜ் பத்தி தான் எழுதப்போறேன். மேல்நிலைப் பள்ளி நான் வேறுபக்கம் சேர்ந்து விட்டேன். அதிலும் படிப்பு படிப்பு என்றுதான் சென்றது.

-அலைவான்.
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் 17

லிட்டில் வுமன் என்ற தலைப்பில் இந்த அத்தியாயத்தை ஆரம்பித்திருந்தாள் யாழரசி.

கல்லூரி வாழ்க்கை நாம பெரியவங்களாவதற்கு முதல்படி. இங்கயாவது என்னைப் பெரிய பொண்ணா நடத்துவாங்களானு பார்த்தா அதுதான் இல்லை? இங்கேயும் நான் தான் வயதிலும் , உயரத்திலும் சிறியவள். நான் சேர்ந்தது உளவியல் பிரிவு. எட்டாம் வகுப்புப் படிக்கும் போது முடிவெடுத்தது. இறுதி நேரத்தில் விலங்கியலுக்கும் , உளவியலுக்கும் தடுமாறினாலும் உளவியல் பக்கம் என் உள்ளம் சென்றுவிட்டது. இதுக்கு எல்லாம் அந்த சிக்மெண்ட் பிராய்ட் தான் முதல் காரணம். அவரோட கனவுகளின் விளக்கம் புத்தகம் ரொம்ப பிடிச்சு போயி நான் சைக்கலாஜி எடுத்தேன்.

இதுவரைக்கும் தமிழ் மீடியத்தில் படிச்சதால் ஆரம்பத்தில் தடுமாறினேன். எனக்கு புரபசர் சொல்றத புரிஞ்சகிறது அதுக்கு பதில் சொல்றது இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எழுதும் போது கிராமர் மிஸ்டேக் வரும். நான் சேர்ந்தது கோவையில் ஒரு பிரபலமான கல்லூரி. சிபிஎஸ்சி , மெட்ரிக் இப்படி எல்லாவிதத்திலும் என்னை விட எக்ஸ்போசர் ஆன ஸ்டூடன்ஸ் இருந்தாங்க. எனக்கு சைக்காலஜி ரொம்ப நேச்சுரலா வந்தது. கிளாஸ் எடுக்கும் போது எதாவது கொஸ்டீன் கேட்டா எனக்கு பதில் தெரியாம இருக்கறது குறைவு. இண்டர்ல்ஸ் மார்க் எடுத்தேன்.

எனக்கு ஒரு பிரச்சினை இருந்தது. ஹாஸ்டல் ரூம் மேட்ஸ். முதல்ல சிங்கில் ரூமில் இருந்த என்னை ஐந்து பேர் இருந்த ரூமில் மாத்தி விட்டுடாங்க.

எனக்கு காலேஜ் பர்ஸ்ட் இயர் முழுக்க நிம்மதியான தூக்கம் கிடையாது. காரணம் ரூம் மெட்ஸ். எனக்கு லைட் எரிந்தால் தூக்கம் வராது. அப்படியே கண்ணை மூடிட்டு தூங்கினாலும் சத்தம் போட்டுகிட்டே இருப்பாங்க. 12 மணிக்கு தலைசீவிட்டு தூங்குவாங்க.

நான் காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து ரெடியாகி எட்டுமணிக்கே காலேஜ் போயிருவேன். எனக்கு கடைசி நிமிஷத்தில் கிளம்புவது பிடிக்காது. எனக்கும் கம்பெனிக்கு பிரண்ட்ஸ் இருந்தாங்க. ஹாஸ்டல் சாப்பாடு ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. அல்சர் வந்துரும். காலேஜ் டிஸ்கண்டினியூ செய்யலாம் கூட நினைச்சிருக்கேன். ஆனால் ஹாஸ்டல் கட்டிய பீஸ் வீணாகிவிடும். அதனால் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். விடுதியில் முற்றம் என்ற அமைப்பு உள்ளது. ஒரு புத்தகத் திறனாய்வு மன்றம். விடுதியில் வரும் தொகை இதற்கு பயன்படும். வாரம் ஒருவர் புத்தகத் திறனாய்வு செய்வர். நான் தூப்புக்காரி எழுத்தாளர், பாடலாசிரியர் அறிவுமதி இப்படி பலரை அந்த மன்றத்தின் மூலம் சந்திந்திருக்கிறேன். எனக்கு கல்லூரியில் மிகவும் பிடித்த மன்றம். அதற்குப் பிறகு சிந்தனைச் சங்கமம் என்ற ஒரு கிளப் இருக்கிறது. இது கல்லூரியினைச் சார்ந்தது. இதிலும் நான் உறுப்பினர். இது ஒரு தலைப்பை எடுத்து அதை விவாதம் செய்வர். முற்றத்து உறுப்பினர் பெரும்பாலும் இதிலும் இருப்பர். என்னுடைய மாலைப் பொழுதுகளை விடுதி அறைக்குச் செல்லாமல் இருக்க பயன்படுத்திக் கொள்ள உதவியது. எஞ்சிய நாட்கள் நூலகத்தில் கழித்தேன்.

நாலு வருடங்களாக செல்ல முடியாததற்கும் சேர்த்துக் கல்லூரியின் நூலகத்தில் புத்தகம் படித்தேன். நூலகப் பணியாளர்கள் எனக்கு மிகவும் உதவுவர். நான் புத்தகம் தாமதமாகக் கொடுத்தாலும் ஃபைன் கிடையாது.

எனக்கு ஷோசியல் லைஃப்பே இல்லையானு நீ நினைக்கலாம் பெக்கி. என்னோட கிளாஸ்மேட்ஸ் ராஜ் , ஜெய் அண்ணா இருவரும் மிகவும் குளோஸ்.

ராஜ் என்னோட பெஸ்டி. எஸ் பெஸ்டி. இப்போது எல்லாம் அண்ணன், தம்பி என்ற வார்த்தையே தவறாகப் பயன்படுத்துகின்றனர். பெஸ்டியை விட்டு வைத்து விடுவார்களா என்ன?

இந்த இடத்தில் ஜாதியைப் பத்தி நான் பேசியே ஆகனும். என்னோட தாத்தா , பாட்டி எல்லாம் அவங்க அப்பாவை அண்ணா என்றுதான் அழைப்பார்கள். தன்னுடைய காதலரை லவ்வர் என்று சொல்லாமல் அண்ணா, பெஸ்டி …. இப்படி சொல்வது என்னைப் பொறுத்தவரை முற்றிலும் தவறு.

ஸ்கின்ஷிப்பில் உள்ள ஒருவர் நண்பராக இருக்க முடியாது. அந்த உறவின் பெயர் லவ்வ்ர். இப்படி ஒரு சில பலரால் ஆண், பெண் நட்புத் தவறாகப் பார்க்கப்படுகிறது. ஆண்களும் , பெண்களும் நட்பாக இருக்க வாய்ப்பில்லை என்று கூட்டம் திரியும். வெரி சிம்பிள் ஆன்சர் அவர்களால் ஒரு பெண்ணைத் தோழியாகப் பார்க்க முடியாது. பெண்கள் வெறும் போகப் பொருட்கள் என்ற கண்ணோட்டத்தின் மறைமுகமான வெளிப்பாடு அது.

நானும் ராஜ்ஜூம் ஏழு வருடங்களாக நண்பர்கள். என் வீட்டில் அவன் பேசுவான். நானும் அவன் வீட்டில் பேசுவேன். அவன் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். வகுப்பினர் சிலர் என்னையும் அவனையும் சேர்த்து வைத்து அசிங்கமாகப் பேசியுள்ளனர். இதில் ஹைலைட்டே அவன் பெரியப்பா எங்கள் கல்லூரியின் முதல்வர். நாங்கள் ஒன்றாகவே தான் கல்லூரியில் இருப்போம். அவர் எங்களை அறுபது சிசிடிவி கேமராக்களின் மூலம் வாட்ச் செய்ய முடியும்.

என் நண்பனைப் பத்தி சொல்லியே ஆகனும். அவன் ரொம்ப எளிமையானவன். எந்த ஒரு பந்தாவும் இருக்காது. நான் தவறு செய்தால் கண்டிப்பான். அவனிடம் ஏதாவது ஆலோசனை கேட்டால் என்னையே சிந்தித்து முடிவெடுக்கச் சொல்வான். ஐஸ்கீரீம் சாப்பிட விடமாட்டான். கிளாஸ் கட் அடிக்க விட மாட்டேன்.

எனக்கு அவன் எப்போதும் நல்லவற்றையே செய்வான். அவனும் நானும் நண்பர்களானது தமிழ் வகுப்பில். அப்படியே சீக்கிரம் குளாஸ் ஆகிவிட்டோம். ரெண்டு பேரும் முதல் மூன்று மார்க்குகளில் வருவோம்.

ஜெய் அண்ணா , என்னோட வெல் விஷர். அண்ணா எங்களை விட மூத்தவர். ராஜ் , ஜெய் அண்ணா இருவருக்கும் நடுவில் நடந்து சென்றால் நான் நாய் குட்டி மாதிரி சிறிதாகத் தெரிவேன். அவ்வளவு உயரம் அவர்கள். ரெண்டு பேருமே எனக்கு பாடிகார்டு மாதிரி இருப்பார்கள். என்ன செய்யறது

உசரம் அப்படி!!!!!

யூ.ஜி படிக்கும் போது எனக்கு ஒவ்வொரு டிபார்மெண்டிலும் தெரிந்த நபர்கள் இருப்பார்கள். விடுதி வாழ்வே அப்படித்தான். அப்படி இப்படினு நான் பர்ஸ்ட் இயர் முடிச்சுட்டேன்.

இரண்டாவது வருடம் என்னோட விடுதி வாழ்க்கையில் சிறப்பான வருடமாக அமைந்தது. என்னோட ரூம்மேட்டா கவிதா அக்கா வந்தார்கள். அவர் விலங்கியல் மூன்றாம் ஆண்டு படித்தார்கள். நாங்க ரெண்டு பேரும் இன்ஸ்டண்ட் நண்பர்களாகி விட்டோம். அக்காவும் நானும் எதை வேணாலும் பேசுவோம்.

காலேஜ்ல எனக்கு ஒரு எதிரி இருந்தான். அவனுக்கு நான் எதிரியில்லை. எனக்கு அவன் எதிரிதான். அவனை இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு வட்டம் போட்டுத் திட்டுவோம். குத்துப் பாட்டுப் போட்டு விடுதி அறையில் நடனம் ஆடுவோம். ஹாஸ்டல் டேல செம ஆட்டம் போட்டோம். அதெல்லாம் வேற லெவல் என்ஜாய்மெண்ட். அக்கா மாதிரி ஒருத்தர பார்க்கவே முடியாது. அவ்வளவு இன்னசெண்ட் , ஜென்யூன் அவங்க. அக்கா கூட மீயூசியம் , பொருட்காட்சி போயிருக்கேன்.

உனக்குத் தெரியும் ..எனக்கு மூவீஸ்னா ரொம்ப இஸ்டம். காலேஜ் வந்த இரண்டு வருஷத்தில் நான் தியேட்டர் பக்கம் போனதே இல்லை. சித்தி வீடு பக்கத்தில்தான். தியேட்டர் போக வேண்டுமென்றால் அவர்கள் அழைத்துச் சென்று விடுவார்கள்.

எனக்கும் தியேட்டர் சென்று படம் பார்ப்பது பிடிக்காது. வொர்த்தான படமா தியேட்டர் போய் பார்க்கலாம். இப்படி இருந்த நான் தியேட்டர் சென்றது கவி அக்காவுடன் தான். காக்கிச்சட்டைப் படத்திற்குச் சென்றோம். இப்படி எவ்வளவுதான் என்பக்கம் நல்லவர்கள் இருந்தாலும் எனக்கு டிப்ரசன் உண்டாகத் தொடங்கியது. யாருக்கு வேணாலும் டிப்ரசன் வரலாம். எந்தக் காரணமாகவும் இருக்கலாம். கண்டிப்பாக காரணத்தை நான் சொல்ல மாட்டேன்.

அப்நார்மல் சைக்காலஜினு ஒரு பாடம் இருக்குது. அதில் மனவியாதிகள் அனைத்தும் இருக்கும். சில பேர் தனக்கு மனவியாதி இருக்குனு தெரியாம இருப்பாங்க. சில பேருக்கு தனக்கு பிரச்சினை இருக்குதுனு தெரியும். ஆனால் என்ன செய்வது என்று தெரியாது. சில பேருக்கு தனக்கு இந்த பிரச்சினை, இது எல்லாம் எனக்கு நடக்குது என்பது மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் விடுபடுவது மிகக் கடினம்.

நான் அந்த நிலையில் தான் இருந்தேன். அப்நார்மல் சைக்காலஜி படிச்சு என்னை நானே டையக்னோஸ் செஞ்சுகிட்டேன். என் படிப்பு, மற்றவர்களிடம் பழகுதல் இதில் எந்த வித மாற்றமும் இல்லை. தூக்கம் , சாப்பாடு இது எல்லாம் பிரச்சினை ஆனது. சும்மாவே நான் குறைவாகச் சாப்பிடுவேன். மன அழுத்ததிற்கு பிறகு அது இன்னும் குறைந்தது. தூக்கம் சொல்லவே வேண்டியது இல்லை.

உனக்கு தெரியுமா? எனக்கு ஸ்பெஷாலிட்டி இருக்கு. என்னுடம் பேசும் பலர் கூறும் வார்த்தை “உங்கிட்ட பேசுனா ரிலாக்ஸா இருக்கு.” இது என்னை எவ்வளவு பின்னாளில் இழுத்துச் சென்றது எனக்கு மட்டும்தான் தெரியும். உங்கிட்டேயும் சொல்றேன். ஐ வாஸ் நேச்சுரல் சைக்காலஜிஸ்ட். ஜெய் அண்ணா என்னை கிட்ஸ் ஸ்பெஷலிஸ்ட் சொல்லுவாரு. நான் டிப்ரஸ்ன்ல இருந்த சமயம் நான் ஒரு நாலு பேருக்கு ஹெல்ப் பன்னிருக்கேன். அவங்களுக்கு டிப்ரசன். லைஃப் இஸ் சம்திங்க் எல்ஸ்.

நிறைய நபர்கள் தன்னுடைய அந்தரங்கமான பிரச்சினைகள் பலவற்றிற்கு என்னைத் தேடி வந்திருக்கிறார்கள். நானும் உதவியிருக்கிறேன். என்ன பிரச்சினைனு கண்டிப்பா சொல்ல மாட்டேன். ரகசியம் காப்பாற்றுவது ஒரு சைக்காலிஜிஸ்ட் இன் முதல் கடமை. பெக்கி , நீ இமேஜின் செய்ய முடியாத விஷயங்களை நான் கேட்டுருக்கேன். பதினெட்டு வயதில் நான் சந்தித்த நபர்கள் அப்படி.

‘அப்ப இந்தப் பொண்ணோட ஆம்பிஷன் சைக்காலஜிஸ்ட் போல இருக்கு.’ தேவ்க்கு அப்படித்தான் தோன்றியது.

இந்த ஹெல்ப் பன்னற குணம் சில உறவுகளை உருவாக்கும். சில உறவுகளை விட்டு ஓட வைக்கும். என்னையும் ஓட வைத்தது.

இப்படி முடித்திருந்தாள் யாழரசி.

அலைவான்...............
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -18

நரகம்

நரகம் என்பது இறந்த பின் நம் பாவத்தால் கிடைப்பது அல்ல. உயிருடன் இருக்கும் போதே நம்முடன் இருக்கும். அது எப்படி சாத்தியம் ? என்று நீ கேட்கலாம் பெக்கி. நம் மனத்தை விட கொடிய நரகம் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும். உடல் நோய் , மன நோய் இப்படி விதவிதமாய் இருக்கும்.

சில மனநோய்கள் வருவதற்கு காரணங்கள் தேவை இல்லை. ஒரு ஹார்மோன் மாற்றி சுரந்தால் நோய் வாய்பட்டுவிடுவோம். சில நோய்கள் உருவாவதற்குக் காரணமே கிடையாது. அப்படி ஒரு நோய் தான் மனச்சிதைவு நோய் எனப்படும் ஸ்கீசோபெர்னியா.

இந்த கொரியன் டிராமாஸ் எல்லாம் பார்த்திருந்தா தெரியும். ஒரு மருத்துவமனை என்றால் அது தொடர்பான பிரச்சினைகள் , லாயர் என்றால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி நாடகம் நகரும்.

நான் சைக்காலஜி கூட படிச்சு முடிக்கல. அன்ட் தென் ஐ மெட் ஹெர். ஸ்கீசோபெர்னிக் பர்சன் இன் மை ஹாஸ்டல் . அவளுக்கு ஏதோ பிரச்சினை இருந்ததுனு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அது இதுதான் என்று தெரியவில்லை.

அவளை நான் சந்தித்ததும் ஒரு வித்தியாசமான நிகழ்வுதான். நிச்சயம் விடுதியில் தான். ஹாஸ்டல் முதல் வருடத்தில் அவளைப் பார்த்ததில்லை. இரண்டாவது வருடத்தின் இறுதியில் சந்தித்தேன். ஹாஸ்டல் டே’ வை முன்னிட்டு போட்டிகள் நடத்தியிருந்தனர். அதில் பூயூட்டி காம்டிசனும் உண்டு. ஒவ்வொரு விடுதிக்கும் தனித்தனியாக நடக்கும். எங்கள் விடுதியில் மெஸ் பெரியதாக இருக்கும். அதனால் அதை போட்டிக்கு உபயோகப்படுத்தினார்கள். நான் ஆடியன்ஸ்தான் . விடுதிப் பெண்கள் விதவிதமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு ரேம்ப் வாக் செய்தார்கள். அதில் சவுத் இண்டியன் ஸ்டையில் பிரவுன் நிற புடவைக் கட்டிக் கொண்டு அவள் நடந்தாள். அவளின் மஞ்சள் நிறத்திற்கு அந்தப் புடவை அருமையாக இருந்தது. அவள் மற்றப் பெண்களைப் போல் ஐ பூரு டிரிம் செய்யவில்லை. நீ செய்ய மாட்டியானு கேட்கறது புரியுது. ஆமாம் எனக்கு தேவையில்லை. என்னுடைய கண் புருவங்கள் இயற்கையாகவே டிரிம் செய்தது போல்தான் இருக்கும். எனக்கு இயற்கையா இருக்கறதுதான் பிடிக்கும். எந்த காஸ்மெட்டிக்ஸ்ம் முகத்தில் போட மாட்டேன். கண்ணுக்கு மை இட்டது கூட முதல் வருடத்தில் பிரஸ்ஸர்ஸ் டே அன்றுதான். என் சீனியர் மையிட கண்ணெல்லாம் சிவந்து கண்ணீர் வந்துவிட்டது.

சரி என்னை விடு. அவ ஒரு நேச்சுரல் பூயூட்டி. அப்பவும் கூட எல்லாரையும் பார்க்கற மாதிரி பார்த்துட்டு விட்டுட்டேன். போட்டி முடிந்த பிறகு அனைவரும் அவரவர் அறைக்குச் சென்று விட்டனர். நானும் கிளம்பிட்டேன்.

சாப்பிடத் திரும்பி வந்தேன். அப்போதுதான் அவளைச் சந்தித்தேன். அவளும் என்னைப் போலவே சாப்பிட சீக்கிரம் வந்திருந்தாள். செல்ப் சர்வ் என்பதால் பெரிய பாத்திரத்தின் மூடியை எங்கு எடுத்து வைக்கலாம் என்று திணறிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் நான் சென்று கையில் மூடியை வாங்கினேன். அவள் சாப்பாடு போட்டுக் கொண்ட பிறகு என் தட்டிலும் வைத்தாள்.

சாப்பாடு போட்டுக் கொண்ட பிறகு நானும் அவளும் ஒரே நேரத்தில் நன்றி சொல்லிக் கொண்டோம். யூஜி படிக்கும் போது எப்போதும் என் முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும். அவளைப் பார்த்து நானும் சிரித்தேன்.

ஏதோ ஒன்று சிரிப்பை என்னால் விட முடியாது. அழுதே கொண்டிருந்தாலும் யாரவது என்னை நேருக்கு நேர் முகத்தைப் பார்த்து சிரித்தால் நான் சிரித்து விடுவேன். எனக்கு முக்கியமான நேரத்தில் கண்ணீரே வராது. தேவையில்லாமல் புத்தகம் படிக்கும் போதும் , கொட்டாவி விடும் போதும் இந்தக் கண்ணீர் வரும். ஒரு புத்தகத்திலோ அல்லது படத்திலோ சோகமான சீன் என்றால் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டும். இதே எனக்கு ஒரு பிரச்சினை என்றால் கண்ணீர் என்ன விலை என்று கேட்க வேண்டியது தான்!!

எனக்கு சிரிப்பும் , கோபமும் அதிகமாக வரும். ரொம்ப சோகமாக இருக்கும் நேரத்தில் கூட நன்றாகச் சிரிப்பு வரும். அதை விடு. பிறகு அவளிடம் பெயர் கேட்டேன். அவள் பெயர் மைதிலி. அவள் இன்னும் சேலையை மாற்றவில்லை. நான் ரொம்ப ரேராகத்தான் கம்பிளிமெண்ட் செய்வேன். அவளுக்கு சேரியைப் பற்றிக் காம்பிளிமெண்ட் செய்தேன். இப்படித்தான் எங்கள் பழக்கம் ஆரம்பித்தது. நான் உணவு உண்ணும் நேரத்தில் அவளும் வர ஆரம்பித்தாள்.

‘லவ் டெவலப் ஆகுதோ?’ தேவ் மனதில் கேள்வி எழுந்தது….’ச் சே அதுக்கு வாய்ப்பில்லை.’ என்று சமாதானப் படுத்திக் கொண்டான்.

நானும் நன்றாகப் பழக ஆரம்பித்தோம். எனக்கு எப்பவும் ஒருத்தர் உண்மையாக இல்லையென்றால் உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருக்கும். யாருக்காவது மனதளவில் எதாவது பிரச்சினை இருந்தாலும் மனதில் ஒரு அலாரம் வந்து போகும்.

எனக்கு மைதிலியிடம் ஏதோ ஒரு உணர்வு தோன்றிக் கொண்டே இருந்தது. அவளுடன் பழகும் போது ஒரு அசகரியமான உணர்வு இருந்தது. மைதிலிக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி என்னைத் தேடி வருவாள்.

இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால் மைதிலியின் ரூம்மேட் நவ்யாவும் நானும் நல்ல தோழிகள். அவளுக்கும் மைதிலிக்கு ஒத்துப்போகாது. அவளும் ஒரு டிப்பரஸ்ட் பர்சன். அப்பப்ப இவங்க இரண்டு பேருக்கும் நடுவில் நான் மாட்டிக் கொள்வேன்.

மைதிலி எதுவும் சொல்ல மாட்டாள். ஆனால் நவ்யா புலம்பித் தீர்த்து விடுவாள்.

சில சமயம் வெளியில் இருந்து பார்த்தால் நவ்யா ஓவர் ரியாக்ட் செய்வது போலிருக்கும். இப்படியே நாட்கள் நகர்ந்தது.

மைதிலியை எனக்குப் பிடிக்கும். ஆனால் என்னால் அந்த அசவுகரிய உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.

எனக்கு ஒருவரிடம் பழகும் போது உண்மையாகப் பழக வேண்டும். ஹார்ட் அட் ஈஸ் அப்படி ஒரு உணர்வு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அப்படி இல்லையென்றால் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்.

நவ்யாவுக்கும் மைதிலிக்கு சுமுக உறவென்பது இல்லை.

இப்படி இருக்கையில் மைதிலி ஒரு நாள் ஹாஸ்டலில் இருந்து காணாமல் போய்விட்டாள். ஹாஸ்டலில் பயோமெட்ரிக் சிஸ்டம் உள்ளது. பெண்கள் விடுதி என்பதால் ஐந்தரை மணிவரை தான் வெளியே இருக்க முடியும். ஒவ்வொரு தடவை பயோமெட்ரிக்கில் பஞ்ச் செய்யும் போதும் வீட்டினருக்கும் மெசேஜ் சென்றுவிடும். இவள் காணாமல் போனது பகலில். கல்லூரி வேலை நேரத்தின் போது. எப்படி கண்டுபிடிக்க முடியும்?

அதிர்ஷ்டவசமாக விடுதிப் பணியாளர் ஒருவர் இரயில் நிலையம் சென்றிருக்கிறார். அங்கு எந்த வித சுயநினைவும் இன்றி மைதிலி நின்று கொண்டிருந்தாள்.

அவர் கண்ணில் பட்டதால் கல்லூரிக்கு அழைத்து வந்துவிட்டார். இல்லையென்றால் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.

அதற்குப் பிறகு அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதற்குப் பிறகுதான் எங்களுக்குத் தெரிய வந்தது அவளுக்கு ஸ்கிசோபெர்னியா என்று. நானும் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் பார்த்தேன். உனக்குத் தெரியுமா? அவள் வகுப்பில் முதலிடம் பெறுபவள். அவளைப் பார்த்தால் இப்படி பாதிக்கப்பட்டிருப்பாள் என்று தெரியாது. இந்த நோய்க்கு மருந்தும் கிடையாது. எனக்கு நோய் என்று சொல்ல கஷ்டமாக இருக்கிறது. கண்டிசன் அல்லது நிலை அப்படி என்று சொல்லிக் கொள்ளலாம். கட்டுப்படுத்த முடியும். ஆனால் தீர்வில்லை.

முதலில் இருந்தே அவளுக்கு ஏதோ பிரச்சினை இருந்ததை உணர முடிந்த என்னால் என்னவென்று கண்டறிய முடியவில்லை. சொல்லப்போனால் குடும்பத்தினரே அவளுடன் பழகுவது கடினம். அப்படி இருக்கையில் அவள் என்னைத் தேடி வந்தாள். அவளை இன்னும் நன்றாக நான் கவனித்து இருக்க வேண்டும்.

சொல்லப்போனால் நான் ஓடி ஒளிந்தது மாதிரி. பதினெட்டு வயதில் நான் அவ்வளவு ஒன்றும் புத்திசாலி இல்லை.

மைதிலி டீரிட்மெண்ட் முடித்தபின்னர் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டாள். ஆனால் பலர் அவளை ஒதுக்கி வைத்தனர். மனநோய் உள்ளவர்களை உலகம் பொதுவாக பைத்தியம் என்று முத்திரை குத்திவிடும்.

விடுதியில் கூட புதிய விதிமுறை வந்துவிட்டது. மனநலப் பிரச்சினை உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ளபட மாட்டார்கள் என்று.

அவள் மட்டும் அனுமதிக்கப் பட்டாள். கடைசி வருடம் என்பதால் விட்டுவிட்டனர். அனைத்து மனநல பிரச்சினைகளும் மிகவும் தீவிரமானவை அல்ல. சளி , காய்ச்சல் போன்றுதான் அவையும். உனக்கொன்று தெரியுமா பெக்கி ? எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் அப்நார்மல் தான். அதன் லெவலைப் பொறுத்துதான் சிகிச்சை தேவைப்படும். இதுதான் ஃபேக்ட். ஸ்ட்ரஸ் எடுத்துக்குவோம். ஸ்ட்ரஸ் இல்லாத மனிதர்களைப் பார்க்கவே முடியாது. அதே மாதிரி மனிதர்கள் அனைவரும் எதாவது ஒரு கட்டத்தில் மனச்சோர்வுக்கும் உள்ளாகியிருப்பார்கள். எனக்கு நாலு வருடத்திற்கும் மேலாக மனச்சோர்வு இருந்தது.

அதனால் மனநலப் பிரச்சினைகளுக்கும் மனநல டாக்டரைப் பார்ப்பதில் தவறில்லை. சரி நீ பார்த்தியா? என்று கேட்கலாம். என் பிரபசர் இருவரிடம் தீர்வு கேட்டேன். அவர்களும் கூறினார்கள். அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கூறவில்லை. எனக்கே என்னோட கண்டிசன் தெளிவாகத் தெரிந்தது. எப்பவும் போல என்னை நானே சரி செய்து கொள்ள முயற்சி செய்தேன். மனநலப் பிரச்சினைகளும் உடல் நலப் பிரச்சினைப் போன்று மருத்துவரைப் பார்ப்பதில் தவறில்லை. எந்த ஒரு பிரச்சினையும் ரொம்ப காலத்திற்கு தள்ளிப் போட முடியாது. காரணத்தைக் கண்டுபிடிச்சு அதை எதிர்கொள்வதுதான் நல்லது.

The sooner we face the problem , the lessor agony for our mind.

‘எஸ். நீ சொல்றது சரிதான். நான் ஒத்துக்கிறேன். ‘ தேவ் ஆமோதித்தான். டைரியை பேனாவை குறுக்கே வைத்து மூடியவன் எழுந்து கை கால்களை ஸ்ட்ரச் செய்தான்.

தனது தொலைபேசியை எடுத்துப் பார்த்தான். அதில் அவளின் மெசேஜ்கள் வாட்சப்பில் குவிந்திருந்தது.

யாழரசியின் வார்த்தைகள் மனதில் வந்து சென்றது.

‘இவகிட்ட இருந்து நான் தப்பிக்கவே முடியாது போலிருக்கு. லெட்ஸ் ஃபேஸ் இட்’

உடனே அந்த எண்ணுக்கு அழைத்தான்.

“ஹலோ தேவ்..எப்படி இருக்கீங்க?” தேன் குரலில் அவள் மறுமுனையில் பேசினாள். ஆர்வமும் வெளிப்பட்டது.

“ஐ ம் ஃபைன் சஷ்மிதா. நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.”

“ நீ என்ன வேணா சொல்லலாம் தேவ். நீ சொல்றததான் கேட்க நான் இருக்கேனே!”

தேவ்விடம் இருந்து ஒரு சலிப்பான பெருமூச்சு எழுந்தது.

“ஐம் சாரி சஷ்மிதா. என்னால் உன்னைக் கல்யாணம் செய்துக்க முடியாது. நானும் உங்கிட்ட எவ்வளவு தடவை இண்டேரக்டா சொல்ல முயற்சி செய்தேன். நீ புரிஞ்சக்கவே இல்லை. உன் மனசக் கஸ்டப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை. அதே சமயம் பொய்யாகவும் என்னால் நடிக்க முடியாது.”

மறுமுனையில் அவள் அழுதாள்.

தேமியபடி “ஒரு ரீசன் சொல்லு தேவ்.” என்று கேட்டாள்.

அலைவான்.........
 
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom