Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

Status
Not open for further replies.
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 20


"நான் போகத்தான் போறேன் இதுக்கு மேல எனக்கு இங்க என்ன வேலை" காலையிலே ராஜேஸ்வரி ஆரம்பிக்க

"என்ன அத்தை சின்னப்புள்ளை போல பிடிவாதம் பிடிக்கீங்க நாங்க ஊருக்கு போறதுக்கு எப்படியும் நாலஞ்சு நாளாகும் அதுவரை நீங்க எப்படித் தனியா இருப்பீங்க. முதல்ல யார் கூட போகப் போறீங்க எல்லோரும் இங்கதானே இருக்காங்க அனுபமாவும் இரண்டு நாளைக்குப் பிறகுதானே போவா அப்போ எப்படி அத்தை போவீங்க அதையும் விட எவ்வளவு நாள் கழிச்சு நம்ம ஊருக்கு வந்திருக்கீங்க. எங்களோடேயே போகலாமே இருங்களேன்."

"இங்கப்பாரு காயத்ரி எனக்கு உன்னை விட்டா யாருமில்லை என்று நினைச்சுட்டாயா? என் மகளிருக்கா மருமகனிருக்காரு என்னோட ஷனாக் கண்ணு இருக்கா அவங்க கூடதான் போகப்போறேன்." காயத்ரி எவ்வளவு தடுத்தும் பிடிவாதமாக இருந்தார் ராஜேஸ்வரி. அப்போது அவ்விடம் வந்த தனலட்சுமி என்ன நடக்குது என விசாரிக்க நடந்ததைக் கூற அவரும் தன் பங்குக்கு ராஜேஸ்வரியிடம் எடுத்துக் கூறியும் அவர் செல்வதிலே குறியாயிருந்தார். அதற்கு மேல் எதுவும் செய்யமுடியாது சசிகலாவிடம் திரும்பிய காயத்ரி

"சசி அத்தையை கவனாமா பார்த்துக்கோ உங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுங்க நான் வந்ததும் அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டுக்கிறேன்"

"நான் ஏன் அங்க போகனும் நான் என் வீட்டுலதான் இருப்பேன்" ராஜேஸ்வரி அழுத்தமாகக் கூற

"ஐயோ அத்தை ஏன் சின்னப்புள்ள மாதிரி பிடிவாதம் பிடிக்கீங்க, சரி நீங்க நம்ம வீட்டுலேயே இருங்க. சசி நான் வர்ர வரைக்கும் அம்மாகூட இருந்து பார்த்துக்குவாயா?"

"அண்ணி அவங்க உங்களுக்கு அத்தை ஆனால் எனக்கு என்னைப் பெத்தவங்க நாங்க நல்லாவே பார்த்துக்கோம்" முகத்திலடித்தால் போல கூற

"என்ன சசி இப்படிக் கதைக்குற நீயாவது அத்தைக்கு எடுத்து சொல்லியிருக்கலாம்."

"அண்ணி உங்க மகனுக்கு வெளியில பொண்ணு பார்த்தப்போ எங்க மகளுக்கு அந்த பங்கில்ல என்று நாங்க மனசை மாத்திக்கிட்டோம் ஆனால் எங்கம்மாவாலேயும் என் மகளாலேயும் அது முடியல்ல ஏன்னா எங்கம்மாக்கு அது கனவென்றால் என் மகளுக்கு அவ வாழ்நாள் லட்சியம். இங்க நடக்குற கூத்தெல்லாம் பார்த்துட்டு அவங்களால நிம்மதியா இருக்க முடியல்ல நாங்க போறோம் அண்ணி நீங்க உங்க சந்தோசத்தையெல்லாம் முடிச்சிட்டு மெல்லவே வாங்க." அத்துடன் பேச்சு முடிந்ததென பெட்டிகளை அடுக்கத் தொடங்கினாள். தன் வீட்டில் வேலை செய்யும் மரகத்தை அழைத்த காயத்ரி அவரையும் ராஜேஸ்வரியுடன் ஊருக்குப் போகச் சொன்னவர் வீட்டையும் சுத்தம் செய்து வைக்கச்சொன்னார். ராஜேஸ்வரி தன் மகள் குடும்பத்துடன் கொழும்புக்கு புறப்பட்டார்.

தொடர்ந்து உறவிலுள்ளவர்கள் ஒருவர் மாறி ஒருவராய் விருந்து கொடுத்தனர். ஒருவாறாய் அவர்கள் புறப்படும் நாளும் நெருங்கியது அன்று காலையில் மொட்டைமாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஆதித்யனிடம் வந்த காயத்ரி

"ஆதி இன்றைக்கு நயனிவோட வீட்டுல நம்ம எல்லோரையும் விருந்துக்கு வரச் சொல்லியிருக்காங்க. ஆனால் நான் உன்கிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கத்தான் வந்திருக்கேன்."

"இப்போ என்னம்மா அதான் எல்லாம் உங்க ஆசைப்படிதானே நடக்குது"

"இதுவும் என் ஆசை என்றே வச்சுக்கோப்பா ஒன்னுமில்லப்பா நாளைக்கு நாம ஊருக்குப் போயிடுவோமில்ல அதனால நயனிக்கும் அவ குடும்பத்தோட இருக்கனுமென்று தோணுமில்ல அத்தோட ஒருநாளாவது அவங்க வீட்டுல தங்கல்ல என்றால் அவங்களுக்கும் மனசு கஷ்டபடுமில்லை யோசிச்சுப்பாரு அவங்க இங்க ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிருந்தா நயனி அவங்க வீட்டுலதானே இருந்திருப்பா ஆனால் இப்போ நம்ம கூட அவ்வளவு தூரத்துக்கு வரப்போறா அதானால இன்னைக்கு ஒருநாள் மட்டும் ப்ளீஸ்ப்பா அம்மாக்காக" எண்ண நினைத்தானோ அவனும் சரியென ஒத்துக் கொண்டான்.

விருந்துக்கு சங்கரும் வந்திருந்தான் தாரணியையும் அழைத்திருந்தாள் நயனதாரா. வந்ததிலிருந்து தாரணியிடம் தனியாக பேச சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் சங்கர் அதற்கேற்ப தாரணியும் வாழைஇலை வெட்ட தனியாக வர அவளை தொடர்ந்து வந்த சங்கரன்

"ஒரு நிமிஷங்க நான் உங்ககிட்ட இன்றைக்கு கதைச்சுத்தான் ஆகனும் ஏன்னா நானும் நாளைக்கு ஆதிகூடவே ஊருக்குப் போயிடுவேன் அதுக்கு முன்ன உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க நினைக்குறேன். நான் சொன்னதை இப்பவாவது யோசிச்சீங்களா? நீங்க ஓகே சொன்னா இப்பவே உங்க வீட்டுக்கு வந்து கதைக்குறேன் எங்க வீட்டுல எந்தப் பிரச்சனையுமில்லை. ப்ளீஸ் என்ன முடிவு பண்ணிருக்கீங்க"

"ஏங்க உங்களுக்கு ஒரு தடவை சொன்னா விளங்காதோ அந்த மாதிர எந்த ஃபீலிங்சும் எனக்கில்லை என்னை ஆள விட்டுட்டுங்கோ. ஏன் உங்களுக்கு வேற ஆள் கிடைக்கல்லையா? கொழும்புல வேற இருக்கீங்க கலர்கலரா ஆயிரம் புள்ளைங்க இருப்பாங்க அதுல ஒன்றைப் பார்க்க வேண்டியதுதானே"

"கதைச்சு முடிச்சாச்சா? ஆயிரம் பேரோட பழகியிருக்கேன் ஆனால் யாருமேலேயும் காதல் வந்ததுமில்லை பார்த்த உடனே கட்டிக்கத் தோனினதுமில்லை. அது எல்லாமே உங்கள்ல மட்டும்தான் வந்துச்சு உங்க முடிவை நீங்க சொல்லிட்டீங்க என்னோட முடிவையும் நான் சொல்லிடுறேன். என் லைஃப்ல கல்யாணம் என்றால் அது உங்களோட மட்டும் தான் என்னால எக்காரணத்தைக் கொண்டும் உங்களை இழக்க முடியாது" என்றவன் அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் கையிலிருந்த கைப்பேசியைப் பறித்து அதை இயக்க அது லொக் செய்யப்பட்டிருந்தது.

"என் போனைக் கொடுங்க" தாரணி

"பாஸ் வேர்ட் சொல்லு" அவள் முடியாதென மறுக்க அவன் போனைக் கொடுக்காது விடாப்பிடியாய் நிற்க வேறு வழியின்றி பாஸ் வேர்டை சொல்ல போனை இயக்கியவன் அவளது எண்ணிலிருந்து அவன் மொபைலுக்கு ஒரு மிஸ்ட் கோள் கொடுத்தவன் அவள் கைப்பேசியில் அவனுடைய பெயரையும் பதிவேற்றினான். இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நயனதாரா வந்த சுவடு தெரியாமல் அப்படியே திரும்பிச் சென்றாள்.

மதியவிருந்து முடிய ஆதியின் குடும்பம் விடைபெற்றது. ஆதியும் சங்கரோடு பழைய நண்பர்களைப் பார்த்து வருவதாய் கூறி வெளியே செல்ல தாரணியை அழைத்துக் கொண்டு தனது அறையுள் சென்று தாழிட்ட நயனதாரா அவளை முறைத்துக் கொண்டு நின்றாள்.

"ஏய் என்னடி ஆச்சு ஏன் இப்படி பார்க்குற"

"ஆ... உன்னைக் கொன்னுடலாமா என்றிருக்கு. நான் உனக்கு அவ்வளவு முக்கியமில்லையா?"

"என்னடி இப்படிக் கேக்குற நீ என் உசிருடி"

"ஓ.. அதனாலதான் சங்கரோட விசயத்தை உடனே வந்து சொன்னாயாக்கும் என்ன அப்படிப் பார்க்குற இவளுக்கு எப்படித் தெரியும் என்றா?" அவள் கேட்க முதலில் நயனிடம் மன்னிப்புக் கேட்டவள்

"உனகிட்ட மறைக்க நினைக்கல்ல அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கல்ல உன்னோட சொல்லாம மனசுக்கு எவ்வளவு பாரமா இருந்துச்சு தெரியுமா?" என்றவள் அன்று கோயிலில் நடந்ததிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்தையும் கொட்ட அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் நயனதாரா. தாரணி தொடர்ந்தாள்

"அதெப்படிடி ஒருநாள்ல அதுவும் பார்த்த உடனே காதல் வரும் இது நம்புற மாதிரியா இருக்கு. அதோட கண்ணுல இருந்து மறைஞ்சதும் கருத்தவிட்டு மறையுற மாதிரி கொழும்புக்குப் போய் கொஞ்ச நாள்ல அவர் என்னை மறந்துடுவார்"

"தாரு ஒன்னு சொல்லட்டா காதல் வாரதுக்கு ஒருநாள் தேவல்லடி ஒருநொடி போதும். உங்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லுறேன் நான் என்னோட வர்த்தனை முதல்ல போட்டோவில தான் பார்த்தேன் அந்த நிமிஷத்துல விழுந்தவதான். ஆனால் சங்கரண்ணா உன்னை பாதி நாளுக்கு மேல பார்த்துட்டிருந்திருக்காரு. அவர் மனசுல நூறு வீதம் உறுதியானதால தானே உன்கிட்ட கேட்டிருக்காரு அதுவும் கட்டிக்க. ஏன்டி உனக்கு உண்மையில சங்கரண்ணாவைப் பிடிக்கல்லையா?"

"உண்மையச் சொல்லனுமென்றா எனக்கு அவரை ரொம்ப புடிச்சிருக்கு. ஆனால் பயமாயிருக்கு. இந்தக் காதலை எல்லாம் நம்ப பயமாயிருக்கு. எங்க வீட்டை நினைச்சாலும் பயமாயிருக்கு முக்கியமா பெரியம்மாவை. அவங்களாலதான் இன்றைக்கு எங்கக்கா அவ வாழ்க்கையத் தொலச்சுட்டு நிக்குறாங்க."

"இங்கப்பாரு அது நடந்தும் எவ்வளவு காலமாயிடுச்சு உன் பெரியம்மாவும் கொஞ்சமாலும் மாறியிருப்பாங்க. சங்கரண்ணா ரொம்ப நல்லவருடி அவங்க வீட்டுலேயும் உன்னை மாதிரி ஒரு பொண்ணு என்றால் அவங்க அம்மா ஓகே என்றாங்க அது நீதான் என்றால் நிச்சயமாக ஏத்துப்பாங்க. நீ காதலிக்க எல்லாம் வேணாம் ஓகே மட்டும் சொல்லிடு அவர் உங்க வீட்டுக்கு வந்து கதைக்கட்டும்"

"நான் சம்மதிச்சுத்தான் வந்தாங்க என்று தெரிஞ்சா நான் செத்தேன். எங்கக்காவுக்கு நடந்ததும் அதுதானே. பாவம்டி அக்கா ஆனால் ஒன்னுடி அவங்க காதலிச்சவரை மட்டும் கட்டியிருந்தாங்க என்றால் இன்றைக்கு இப்படி யாருமில்லாத அநாதை மாதிரி ஊரை விட்டுப் போய் ஒரு பிள்ளையோட கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லையே. அவங்க காதலிச்சாங்க என்ற ஓரே காரணத்தாலதான் இவ்வளவு கஷ்டமும் அவங்களுக்கு வந்துச்சு. வேணாம்டி இந்தக் காதலே வேணாம். காதலிக்குற அளவு காதலிச்சிட்டு வீட்டுக்கு தெரிஞ்சதும் போராட முடியாம எங்கக்கா மாதிரி மனசுல காதலவச்சுகிட்டு காசுதான் முக்கியம் காதலில்லை காதலிக்கவே இல்லை என்று என்னால யாரையும் பொய் சொல்லி ஏமாத்த முடியாது இது எல்லாமே உனக்குத் தெரியும்தானே நயனி. அந்த அங்கிள் எவ்வளவு பாவமில்லை. இவளை மறக்க முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டாங்க."

"ஓம் டி என்னோட செல்ல அச்சு மாமா அக்காவால ரொம்பத்தான் கஷ்டப்பட்டுட்டாங்க. ஆனால் அக்காவும் வேணுமென்று எதுவும் பண்ணல்ல இல்லை மாமா நல்லாயிருக்கனும் என்றுதானே செஞ்சாங்க பெரியம்மாவும் அண்ணாவும்தான் இதுக்கெல்லாம் காரணம். நான் அதுக்குப் பிறகு அவங்களை காணவேயில்ல அப்பப்போ நினச்சுக்குவேன். ஏன் தாரு இந்த நாளையில என்னோட அச்சுமாமாவைக் கண்டிருக்காயா? இப்போ அவங்களும் ரொம்ப ரொம்ப பெரியவங்களா இருப்பாங்கயில்ல கல்யாணம் கட்டிருப்பாங்களா?"

"இல்லடி நானும் அப்போ கண்டதுதான். எங்க இருக்காங்க என்றே தெரியாது. ஆனால்.... ஒன்னு சொல்லுவேன் தப்பா எடுத்துப்பாயா?"

"என்னடி உனக்கும் வர்த்தனைப் பார்க்குறப்போ நம்ம அச்சு மாமா போல இருக்கா?"

"ஓம் டி அப்போ உனக்கும் அப்படித்தான் தோனிச்சா. அப்போ நீ நேராவே கேட்டிருக்கலாமே"

"கேட்டிருக்கலாந்தான் ஆனால் இப்போதைக்கு அது கஷ்டம்டி. தாரு ஃபெர்ஸ்ட் என்னை மன்னிச்சுடு ஏன்னா உன்னைப் போலதான் நானும் உங்கிட்ட ஒருவிசயத்தை மறைச்சுட்டேன்" என்றவள் ஆதித்யனுக்கும் தனக்குமிடையில் இருக்கும் சவாலைக் கூறிவிட்டு யாரிடமும் கூறக் கூடாதென்று சத்தியமும் வாங்கிக் கொண்டாள். ஒருவழியாய் தாரணிக்கு சங்கரின் காதலைப் புரியவைத்தவள் நன்றாக யோசித்து நல்ல முடிவை எடுக்கச் சொன்னாள்.

மறுநாள் காலை ஆகாரத்தின் பின் கொழும்புக்குச் செல்வதாக ஏற்பாடு இரவு நயனதாரா வீட்டில் தங்கியவர்கள் காலையில் நேரத்தோடே தனம் வீட்டுக்குச் சென்று உணவை முடித்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் விடைபெற்றவர்கள் மீண்டும் நயனதாராவின் வீட்டுக்குச் சென்றனர். சங்கரும் உடன் சென்றான் அவன் கண்கள் தாரணியைத் தேடின அவளைக் கண்டதும் மற்றையவர்களின் கவனத்தை ஈர்க்கா வண்ணம் அவளிடம் நெருங்கியவன்

"தாரு உங்க முடிவுக்காக ஒவ்வொரு நிமிசமும் காத்திட்டிருப்பேன். என்னை ஏமாத்திடாதீங்க" அப்போதும் எதுவும் பேசாது சிலையாக நின்றாள். இதனைப் பார்த்திருந்த நயனி தன் தோழி நல்லதாயொரு முடிவெடுக்க வேண்டுமென கடவுளிடம் பிராத்தித்துக் கொண்டாள்.

நயனதாராவின் வீட்டினரிடமும் விடைபெற்றுச் செல்லத் தயாராக நயனியின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது. அதைப் பார்த்து மற்றையவர்களும் அழ அந்த சென்டிமென்ட் காட்சியைப் பார்த்து உதட்டை சுழித்தான் ஆதித்யன். சும்மா இருக்குமாறு அவனுக்குக் கண்ணைக் காட்டினார் காயத்ரி. ஒருவாறு சமாதானவள் தாரணியிடம் வர தாரணியும் அவளுக்கு விடை கொடுத்தவள் முடியாமல் அவளைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டாள் நயனியின் கண்களும் கண்ணீரில் கரைந்தது. இந்தக் காட்சியைக் கண்ட ஆதித்யன் நண்பனுடன் சேர்ந்து கிண்டலடிக்க எண்ணி சங்கரின் புறம் திரும்ப அவனோ முகமெல்லாம் சோகமப்பிக்கிடக்க வைத்த கண் வாங்காமல் தாரணியையே பார்த்திருந்தான். அப்போதுதான் ஆதித்யனுக்கு சங்கரின் மனம் புரிந்தது. ஒருவாறு தோழிகள் இருவரும் சமாதானமாகி தாரணியிடம் கண்களால் சங்கரைக் காட்டிய நயனி அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக

"நல்லா யோசிச்சு நல்லதொரு முடிவெடுடி உன்னோட நல்ல பதிலுக்காக காத்திட்டிருப்பேன். அதோட அடிக்கடி கோள் பண்ணு நானும் பண்ணுவேன்." என்றவள் மீண்டும் அனைவரிடமும் விடைபெற மற்றையவர்களும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப சங்கரும் தன்னவளிடம் கண்களால் விடை பெற அவ்வளவு நேரமும் எதுவும் விளங்காது நின்றவள் அவன் தன்னைவிட்டுச் செல்லப் போகிறான் என்ற எண்ணம் எழ கண்ணிலிருந்து நீர் வடிய அவளையும் அறியாமல் அவனுக்கு தலையசைத்து விடை கொடுத்தாள். இந்த ஊமை நாடகத்தைப் பார்த்திருந்த நயனிக்கு தோழியின் பதில் அவள் சொல்லாமலே புரிந்தது. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவளும் தன் குடும்பத்துடன் புறப்பட்டாள்.

வளரும்.....

Please share your comments here👇

 
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 21


அந்தி மாலை நேரம் வீடு முழுக்க அலங்கார சருகைகள் தொங்கிக் கொண்டிருக்க அதன் நடுநடுவே பலூன்களும் கதவின் முன்னால் ரிப்பனும் கட்டிவிடப்பட்டிருந்தன. பூஜையறையும் அழகாக அலங்கரிக்கப்பட்டு குத்துவிளக்குகளும் ஏற்றுவதற்கு தயார் நிலையிலிருக்க மரகதத்தின் கை வண்ணத்தில் வீடே கமகமத்துக் கொண்டிருந்தது. அனுபமாவும் ஆரத்தியைக் கரைத்துவிட்டு அவர்களின் வருகைக்காக காத்திருந்தாள். இவை அனைத்தையும் பார்த்திருந்த ராஜேஸ்வரியும் சசிகலாவும் மனம் வருந்த ஷனாவோ கோபத்தின் உச்சியிலிருந்தாள். நல்ல நேரம் பார்த்து வீட்டினுள் நுழைய வந்தவர்களை வாசலிலே நிற்க வைத்து அனுபமா ஆலம் சுற்றத் தயாராக அவளிடம் வந்த விக்‌ஷனா தானும் அவளுடன் சேர்ந்து சுற்றுவதாகக் கூற அவளின் நோக்கம் புரிந்தவர்களாய் காயத்ரியும் நயனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சட்டென்று ஞாபகம் வந்தவளாய் கணவனைப் பார்க்க அவன் விழிகள் மெல்லிய சிரிப்புடன் அந்த ஷனாவையே பார்த்திருந்தது. லேசாக முகம் வாடித் தலை குனிந்த நயனியின் கவலை முகம் அந்தக் கழுகுக் கண்களுக்குத் தப்பவில்லை. தனக்குள் சிரித்துக் கொண்டவாரே அனுபமாவுடன் சேர்ந்து புதுத் தம்பதியருக்கு ஆரத்தி எடுத்தாள். நயனிக்கு மட்டும் கேட்கும் குரலில்

"வந்துட்ட இல்லை என் ஆதி அத்தானை கட்டிக்கிட்டு வந்துட்டல்ல இனிமே இந்த ஷனாவோட ஆட்டத்தைப் பார்ப்ப. என் ஆதி என்னை ஒருநாளும் மறக்கமாட்டார் நான் மறக்கவிடமாட்டேன்."

"ஷனா நயனிக்கிட்ட மட்டும் என்ன கதச்சுட்டிருக்கம்மா" ராகவன் கேட்க

"வாழ்த்து சொல்லிட்டிருந்தேன் மாமா" என்றாள். கதவு ரிப்பனை நயனி வெட்டிய பின் ஆதித்யனும் அவளும் வலதுகாலை எடுத்து வைத்து உள் நுழைந்தவர்கள் நேராக பூஜையறைக்குச் சென்றனர் நயனதாரா அவள் வாழப்போகும் வீட்டில் விளக்கேற்றியவள் தங்கள் வாழ்வு என்றும் நல்லபடியாக அமைய கடவுளிடம் மனமுருகி வேண்டிக் கொண்டாள். பின் அவன் காலில் விழுந்து வணங்கியவள் குங்குமத்தை அவனிடம் கொடுக்க அவனும் நெற்றியில் வைத்துக் கொண்டான் மீண்டும் குங்குமத்தை அவனிடமே நீட்ட அவன் அவளை புரியாமல் பார்க்க

"நான் இன்றைக்குத்தான் இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கேன் நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லாயிருக்கனுமென்று வேண்டிக்கிட்டு இந்தக் குங்குமத்தை எனக்கு வச்சுவிடுங்க."அவன் அவளை முறைக்க காயத்ரியும் அதே சொல்ல வேறு வழியன்றி அவளுக்கு திலகமிட்டான். அதைப் பார்த்த ஷனாவிற்கு உடல் முழுவதும் பற்றியெரிவது போல் இருந்தது. நயனதாராவை காயத்ரி சமையலறைக்கு அழைத்துச் சென்று பால் காச்சிய பின் பயணக் களைப்புத் தீர குளித்துவிட்டு வரச் சொன்னவர் ஆதியை நோக்கி

"ஆதிம்மா நயனாவை உன்னோட ரூமுக்கு கூட்டிட்டுப் போப்பா அவ ஃப்ரெஸாகட்டும் நீயும் ஃப்ரெஸாகிட்டு ரெண்டு பேரும் சீக்கிரம் சாப்பிடுறதுக்கு வாங்கோ" அவளை அழைத்துக் கொண்டு படியேறியவன் அறையுள் நுழைந்ததும் கதவைத் தாழிட்டவன்

"உன் மனசுல என்ன நினைச்சுட்டிருக்க ஓவரா நடிக்குற உன் நடிப்பைக் கொஞ்சம் குறைச்சுக்கோ அம்மாக்கு சந்தேகம் வராதளவு நடிச்சாப் போதும் என்ன விளங்கிட்டா?"

"யாரு ஓவரா நடிச்சாங்க. நான் உண்மையாத்தான் நடந்துக்கிட்டேன் அன்றைக்கே சொல்லிட்டேன் என்னால நடிக்க முடியாது. நீங்க வேணுமென்றா நடிச்சுக்கோங்க. சரி, அத்தை காத்துட்டிருப்பாங்க நான் குளிச்சுட்டு வந்திடுறேன்" என்றவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

இரவு உணவை உண்டவர்கள் அனுபமா செய்து வைத்திருந்த கேக்கை வெட்டி ஆதிக்கு ஊட்டிவிடச் சொல்ல அவளும் அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

"ஆதி நீயும் நயனிக்கு கொடேண்டா அவ தந்ததை மட்டும் சாப்பிட்டுட்டு அப்படியே கல்லு மாதிரி நிக்குற" அஸ்வினி ஆதியிடம் சொல்ல சங்கரும் அவளுடன் சேர்ந்து கொள்ள அவனும் தன்னவளுக்கு ஊட்டிவிட அதனைப் பொறுக்க முடியாமல் ஆதியிடம் வந்த ஷனா

"ஆதி அத்தான் எனக்கு ஊட்டிவிட மாட்டீங்களா?" சிறு குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டதும் நயனி அவளை முறைக்க காயத்ரிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது ஆனால் மனைவியின் முகத்தைப் பார்த்தவனுக்கு அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்பது புரிபட

"ஏய் விக்‌ஷ் ஏன் கவலைப்படுற புதுசா வந்தவங்களுக்கே ஊட்டும் போது உனக்கில்லாமலா நீ என்னோட விக்‌ஷில்ல" என்றவன் அவளுக்கு ஊட்டிவிட கடைக் கண்ணால் காயத்ரியையும் நயனியையும் பார்த்தவள் உள்ளம் குதூகலிக்க நயனியின் உள்ளம் சுக்கு நூறாக உடைந்தது ஆனால் அதனை யாரிடமும் காட்டாமல் சிரித்த முகமாய் நின்றவளின் பக்கதில் வந்த சங்கர் அவள் காதில்

"என்ன நயனி யோசிச்சுட்டு நிக்குற என்னடா இவன் இவளைப்போய் விக்‌ஷ் என்று சொல்லிட்டிருக்கான் என்று நினைக்குறாயா? இவளுக்கு இது கொஞ்சமும் பொருத்தமில்லாதது எங்க அது உன் வீட்டுக்காரனுக்கு விளங்குதா விக்‌ஷ்ட வேலை தலவலிய போக்காட்டுறது இவ வந்தா இல்லாத தலைவலியும் தானா நம்மள தேடி வந்துடும் நியாயமா இவளுக்கு தலவலின்னுதான் பெயர் வச்சிருக்கனும் ஆனால் இவன் நோய குணப்படுத்துற விக்‌ஷ் என்று இவளை கூப்பிட்டுட்டிருக்கான்" அவள் காதில் முணுமுணுக்க பக்கென்று சிரித்துவிட்டாள். அவள் புறம் திரும்பிய ஆதித்யன் 'ஏன் சிரிக்குற' என்று கண்களால் கேட்க அவளோ 'ஒன்றுமில்ல' என்று தலையாட்டினாள்.

"ஏன்ம்மா ஷனா நேரமாயிடுச்சில்ல நீ வீட்டுக்கு போறல்லையா நாங்களும் பயணத்துலயிருந்து வந்தவங்க தூங்க வேண்டாமா அம்மா வேற காத்திட்டிருப்பா அதோட இன்னொரு விசயம் ஊர்உலகம் கெட்டுக் கிடக்கு ஒன்னுகிடக்க ஒன்னு ஆயிடுச்சென்றா ஒரு பொம்பளப்புள்ளை ராத்திரியில இப்படி சுத்திட்டிருக்குறது நல்லாவா இருக்கு இதையெல்லாம் சசி உனக்கு சொல்லித்தரல்லையா? சரி சரி சீக்கிரம் போம்மா" காயத்ரி அவளை விரட்டாத குறையாகப் பேசியைதைக் கேட்டதும் ஷனா அவமானத்திலும் கோபத்திலும் சிவக்க அவள் முகம் போன போக்கைப் பார்த்து இப்போது நயனதாராவின் உள்ளம் குதூகலிக்கத் தொடங்கியது.

"என்ன காயத்ரி இது இப்படித்தான் வீட்டுக்கு வந்த புள்ளைக்கிட்ட கதைப்பையா? பார்த்தாயா ராகவா உன் பொண்டாட்டிய புது மருமக வந்ததுதான் மத்தவங்களை அவமானப்படுத்துற மாதிரி கதைச்சிட்டிருக்கா என்னம்மோ மகாராணியக் கொண்டு வந்த மாதிரி ஒரு எண்ணம் உன் பொண்டாட்டிக்கு. நம்ம அந்தஸ்த்துக்கும் வசதிக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாத சம்மந்தம் வேற ஒன்னுத்துக்கும் வக்கில்லாத பொண்ணக் கொண்டு வந்துட்டு என் பேத்திய விரட்டுறாயா காயத்ரி." ராஜேஸ்வரி கத்த நயனதாரா அவரின் விஷவார்த்தைகளில் கலங்கி நிற்க மருமகளின் அந்த கோலத்தைப் பார்க்க முடியாத காயத்ரி தன் மாமியாரிடம்

"இல்லை அத்தை நான் என்ன பிழையா சொல்லிட்டேன். எல்லோரோட முகத்தையும் பாருங்க களைப்பு அப்பிக் கிடக்கு தூங்கி எழும்பினாத்தானே நல்லது. காலையில வெளிக்கிட்ட பயணம் இப்போ மணி ஒன்பதாகுது அதுக்குத்தான் சொன்னேன். அதுமட்டுமில்ல இந்த நேரத்துல ஒரு பொண்ணு தனியாப் போறது உங்களுக்கோ உங்க மகளுக்கோ சாதாரணமா இருக்கலாம் ஆனால் என்னால அப்படி விட்டுட்டு இருக்க முடியாது நான் என் மகளுங்கள இநம் மாதிரி வளர்க்கல்ல எனக்கு ஷனாவும் ஒரு மகள் மாதிரித்தான் அதுதான் ஒரு தாயா அவளுக்கு எடுத்துச் சொன்னேன். ஏன் ஷனா நான் சொன்னது தப்பா என்னைக் கோவிச்சுக்கிட்டாயா?" காயத்ரியின் நியாயமான பதிலை மறுத்துக் கூற முடியாதவள் 'இல்லை' எனத் தலையாட்டினாள்.

"அத்தை சொல்லுறது சரிதான் நான்தான் அதை புரிஞ்சு நடந்திருக்கனும் சொரி அத்தை சரி நான் போயிட்டு வாரேன்." ஒரு தலையசைப்புடன் அனைவரிடமும் விடைபெற்று அவமானப்பட்ட கோபத்துடன் தன் வீடு நோக்கிப் புறப்பட்டாள். அவள் சென்ற சிறிது நேரத்தில் அவரவர் அறைக்குச் சென்றுவிட்டனர். அறையுள் நுழைந்த நயனதாரா அப்போதுதான் அவனுடைய அறையை முழுதாகப் பார்த்தாள். முதல்தரம் வந்த போது அவனது குற்றச்சாட்டில் கருத்தில்படாத அறை இப்போது அவளை மயக்கியது. உண்மையில் ஒரு நட்சத்திர ஹோட்டலின் சொகுசுகளோடு மிகவும் அழகாக இருந்தது. குளியலறையும் அப்படியே ஏன் மொத்த வீடும் அழகாகவும் அதோடு பணச் செழுமையையும் பறைசாட்டியது. 'காசிருந்தா என்ன என்றாலும் செய்யலாம் போல' என தனக்குள் நினைத்தவள் மீண்டும் அந்த அறையைச் சுற்றிப் பார்க்க அவளின் செயலை பார்த்துக் கொண்டிருந்தவன் 'என்ன இவ அன்னைக்கு ஹோட்டல்லேயும் இதத்தான் பண்ணினா இன்னைக்கும் இதைத்தான் பண்றா. அதுசரி அவ இதுக்காகத் தானே இந்தக் கல்யாணத்தைக் கட்டிக்கிட்டா.' நினைத்த மாத்திரத்தில் அவனுள் தீப்பற்றி எரிய அவள் முன்னால் ஒரு விரிப்பையும் போர்வையையும் தூக்கி வீசினான். அவள் கேள்வியாய் நோக்க

"இங்கப்பாரு ஊருல இதைப் பண்ண முடியல்ல அதனால நீ கதைச்செதெல்லாம் கேட்டு அமைதியா இருந்துட்டேன் ஆனால் இது என் வீடு என்னோட ரூம் அதுல உன்னை மாதிரி ஒருத்தி இருக்குறதே எனக்கு விருப்பமில்லை. இதுல என் கட்டில்ல என் பக்கதுல என் கூட நீ படுத்துப்பாயா? ஆ... இனிமே அதுதான் உன் இடம்" என்றவன் அதிர்ந்து நின்றவளை சிறிதும் கணெக்கெடுக்காது தூங்கத் தொடங்கினான். அவன் வார்த்தைகள் தேள் கொட்டியது போல் இருக்க துடித்துப் போனாள் பெண். விரிப்பை விரித்து படுத்தவளுக்கு தூக்கம் வராமல் புரளத் தொடங்கினாள். ஆனால் அவனோ நிம்மதியாக தூங்கினான்.

காலையில் துயில் கலைந்தவன் திரும்பிப் பார்க்க அவள் ஆழமான தூக்கத்திலிருந்தாள். ஜோக்கிங்குக்கான உடை உடுத்தியவன் கீழே வர அவனைக் கண்ட காயத்ரி

"என்னப்பா இன்றைக்கு சன்டேதானே இன்னும் கொஞ்ச நேரம் நல்லாத் தூங்கியிருக்கலாமே அதோட இவ்வளவு லேட்டா ஜோக்கிங்க்கு போக மாட்டேயேடா சங்கர் வேற ஏற்கனவே போய்ட்டானேப்பா."

"நான் கூட வரமாட்டேன்னு நினச்சிருப்பான் சன்டே என்றதாலதான் இவ்வளவு நேரம் நல்லாத் தூங்கினேன். அதனாலதான் கொஞ்சம் லேட்டாவே போறேன் சரிம்மா நான் வரட்டா" என்றவன் புறப்பட எத்தனிக்க

"நயனா எங்கடா எழும்பிட்டாளாப்பா?" தாயின் கேள்வியில் 'ஆ... அவ எங்க எழும்பினா நல்லாக் குரட்டைவிட்டுத் தூங்கிட்டில்ல இருக்கா' நக்கலாக நினைத்தவனிடம் தாய் மீண்டும் கேட்க

"அவ தூங்கிட்டிருக்காம்மா"

"சரிப்பா அவ எழும்பினதும் நான் டீ கொடுத்துக்கிறேன். நீ போப்பா ஆனால் லேட் பண்ணாம வந்துடு அவளுக்கும் இங்க புதுசில்ல நீ கூட இருந்தா இன்னும் கொஞ்சம் ப்ரீயா பீல் பண்ணுவா" தாயின் பேச்சில் ஞாபகம் வந்தவனாய்

"அம்மா எனக்கு கொஞ்சம் சுடுதண்ணி கொடுக்குறீங்களா? என்னோட போனை மறந்துட்டேன் எடுத்துட்டு் வந்துடுறேன்" என்று அவரை சமயலறைக்கு அனுப்பி விட்டு தன் அறைக்கு சென்றவன் நேராக அவளிடம்தான் வந்தான் அவளை தொடக்கூடாது என்று 'நயனி, நயனி' என எழுப்ப அவள் எழும்பாமல் தூங்கிக் கொண்டேயிருக்க பொறுமை இழந்தவன் அவளைத் தொட்டு எழுப்பத் தொடங்கினான். அதில் அவள் துயில் கலைய மெல்லக் கண்களைத் திறந்தவள் தனக்கருகே ஆதித்யனைக் கண்டதும் அடித்துப்பிடித்து எழுந்தமர்ந்தாள்.

"ஏய் கூல் கூல் இங்கப்பாரு நான் ஜோகிங்க் போகப்போறேன் நீ தூங்கிட்டிருக்க அம்மா ஒருவேள நம்ம ரூமுக்கு வந்தாலும் வருவாங்க நீ இப்படி தூங்குறதைப் பார்த்தாங்க அதுக்குப் பிறகு எல்லாம் கொலாப்ஸாகிடும் ஸோ முதல்ல இதெல்லாம் கிளியர் பண்ணிடு அதோட நீ இன்னும் தூங்கனுமென்றால் மேல பெட்ல தூங்கு என்ன சீக்கிரம் இந்த வேலைய முடி" அவளை எழுப்பி அந்த இடத்தை சரி செய்தவன் அவளை தூங்கச் சொல்ல

"இல்லை நைட் சரியா தூங்கல்லை அதனாலதான் நானும் இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் சொரி. நல்லவேளை நீங்க வந்து எழுப்பினீங்க தைங்ஸ்."

"அது பரவாயில்ல சரி நான் வரேன்" என்று அறையை விட்டு வெளியேறிவன் தாயிடம் விடைபெற்று கிளம்பினான். குளித்து பூஜையை முடித்துவிட்டு நேராக காயத்ரியிடம் வந்து முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர் கொடுத்த டீயை அருந்தியவள் சமையல் வேலைகளில் அவருக்கு உதவி செய்தாள். ஜோகிங்கை முடித்து விட்டு வந்த ஆதியும் சங்கரும் தோட்டத்தில் அமர ராகவனும் நடைபயிற்சியை முடித்துக் கொண்டு அவர்களுடன் அமர்ந்தார். அவர்களுக்கு நயனியே டீயைக் கொண்டு போய் கொடுக்க

"குட் மோர்னிங் சிஸி" அப்போது தான் நயனாவைக் கண்ட சங்கர் அவளுக்கு காலை வணக்கம் கூற பதிலுக்கு அவளும் காலை வணக்கம் கூறி தேநீர் கோப்பையை நீட்ட அவனும் நன்றி சொல்லி பருகத் தொடங்கினான். ராகவனுக்கும் கொடுத்து விட்டு அடுத்ததாக கணவனிடம் சென்றவள் அவனுக்கு காலை வணக்கம் சொல்லி தேநீரைக் கொடுக்க மற்றையவர்கள் முன்னால் எதுவும் செய்ய முடியாதவன் அவளுக்கு பதில் கூறி தேநீரை வாங்கி அருந்தினான். பின் ராகவன் இவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு உள்ளே செல்ல சங்கரும் ஆதியும் அலுவலகம் சம்மந்தமாக சிறுநேரம் பேசிக் கொண்டிருக்க இரவில் சரியாகத் தெரியாத தோட்டம் இப்போது அவள் கண்களுக்கு விருந்து படைத்தது. தன்னையுமறியாமல் ஒரு குழந்தை போல குதூகலித்துக் கொண்டவளை பார்த்தவன் 'என்ன இவ ரூமுக்கு வந்தா அங்க சுத்தி சுத்தி பார்க்குறா இங்கயும் அதேயத்த செய்றாளே இவளுக்கென்ன சுத்திப் பார்க்குற வியாதியா?' ஏதோ கேள்வி கேட்டு விட்டு பதிலுக்காக காத்திருந்த சங்கர் அவனிடமிருந்து பதில் வராமல் போகவே அவன்புறம் திரும்ப அவனோ நயனியைப் பார்த்துக் கொண்டிருந்தான் தனக்குள் சிரித்துக் கொண்ட சங்கர்

"என்னடா ரொம்ப அழகா இருக்காங்களா?"

"என்னடா லூசுத் தனமா உளர்ர"

"இல்லை ரொம்ப நேரமா வச்ச கண்ணு வாங்காம அவங்களைத்தான் பார்த்துட்டிருக்க அதான் கேட்டேன்"

"அதை விடு நீ என்ன கேட்டுட்டிருந்த" தொழில் விசயத்துக்கு மாறியவன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு குளிக்கச் சென்றனர்.

ஆதித்யனும் சங்கரும் எங்கோ வெளியில் சென்றுவிட காயத்ரி தடுத்த போதும் அவருக்கு சமையலில் உதவியவள் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மாமியாரின் உத்தரவில் சிறிது ஓய்வெடுக்க அறைக்கு வந்தவள் வீட்டினரின் ஞாபகம் வர உடனே அழைப்பை ஏற்படுத்தினாள். 'சொல்லுக்கா'என்றவாறே உதயா அழைப்பை ஏற்றாள்.

"உதய் எப்படியிருக்க அப்பா எங்க அம்மா என்ன செய்யுறாங்க அக்காளுங்க வந்தாங்களா? எல்லாரும் நலமாடி?" கேள்விகளை அடுக்க

"அக்கா ஒவ்வொன்னா கேளேன் இப்படி மொத்தமாக் கேட்குற சரி நாங்க எல்லோரும் நல்லாயிருக்கோம். நீ எப்படியிருக்க அதோட நேற்றைக்குத்தானேக்கா போன ரொம்ப காலம் காணாத மாதிரி கேட்டுட்டிருக்க"

"நான் நல்லா இருக்கேன் ஓம் டி எனக்கு அப்படித்தான் தோனுது நிறைய நாள் உங்களை எல்லாம் விட்டுட்டு இருக்குறது போல கடும் கஷ்டமா இருக்குடி."

"உங்க வீடு எப்படியிருக்குக்கா உனக்கு பிடிச்சிருக்கா?"

"சூப்பரா இருக்குடி நம்ம ஊரு கணக்குப்படி ஒரு முழுவளவு இருக்கும்டி கார் வாரதுக்கு ரோடு மாதிரி செஞ்சிருக்காங்க ரெண்டு பக்கமும் கலர்கலரா ஜீனியஸூம் நித்தியகல்யாணியும் வச்சிருக்காங்க அத்தைக்கு கார்ட்டினிங் ரொம்பவும் பிடிக்கும் போல வீட்டுக்கு முன்னால சூப்பரா ஒரு அழகான தோட்டம் வச்சிருக்காங்க ஒரு சைட் முழுக்க எனக்குப் பிடிச்ச ரோசாகன்டு சின்னது பெரிசென்டு எத்தனையோ வகையில அதோட சேர்த்து ஜர்பராஸூம் பல கலர்ல இருக்குடி எல்லா வகையான பூக்கன்றுகளும் அங்கயிருக்கும் போல அந்த தோட்டத்துக்கு நடுவுல கம்பியால கதிரை அமைப்புல ஒரு ஊஞ்சல் இருக்குடி அதைச்சுத்தி கொடி மல்லிகைய படரவிட்டிருக்காங்க. அதோட மணமே வேற லெவல்ல இருக்கு அந்த இடத்துல ராத்திரியில இருந்தா சூப்பரா இருக்குமென்று நினைக்குறேன். அதுமட்டுமில்ல வீட்டுக்குப் பின்னாலேயும் சைட்லேயும் நிறைய காய்கறிகளும் பழ மரங்களும் வச்சிருக்காங்க டி பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு"

"அக்கா நீயும் ஒரு கார்டினிங் பைத்தியமென்று எனக்கு நல்லாத் தெரியும் அதான் இன்னும் வீடு எப்படியிருகென்று சொல்லாம தோட்டத்தைப் பத்தியே சொல்லிட்டிருக்க போதும் வீடெப்படி இருக்குன்னு சொல்லு."

"ஐயோ அது வீடில்ல பங்களாடி ரொம்பப் பெரிசாயிருந்துச்சு முதல்ல வீட்டுக்குள்ள வந்தா பெரிய ஒரு ஹோல் அதுல வெல்வெட் குசன் பண்ணின அழகான ரெண்டு வகையான சோபா போட்டிருக்கு. கீழ மட்டும் ஐஞ்சு அறையிருக்கு அதுவும் வொஷ் ரூமோட சேர்த்து பார்க்குறதுக்கு படங்கள்ல வருமே பணக்காரங்க வீட்டு பெட் ரூம் மாதிரி இருக்குடி அத்தை மாமா பாட்டி அத்தோட அஸ்வினிக்கா அவங்க எல்லோரும் கீழதான். மேலயும் அதே மாதிரிதான் ஆனால் கிச்சன் மட்டும் இல்லை அந்த இடத்துல பெல்கனி மாதிரி இருக்கு அதுலேயும் ஒரு சின்ன பிரம்பால செஞ்ச ஊஞ்சல் இருக்குடி குட்டியா ஒரு தோட்டமும் வச்சிருக்காங்க. அந்த வீட்டுலேயே எங்க பெட்ரூம்தான் ரொம்ப பெரிசு பார்க்குறதுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் ரூம் போல இருக்கும். அதோட மேலதான் சங்கரண்ணாவோட ரூமும் அதுமட்டுமில்ல எல்லா ரூம்லேயும் ஏசி வேற இவங்களோட வசதி அவங்க வீட்டைப் பார்த்தாலே தெரியுது. இந்த மொத்த வீட்டுலேயும் எனக்கு ரொம்ப பிடச்ச இடம் எது தெரியுமா கீழ அந்த தோட்டமும் மேல ஊஞ்சலிருக்குற பெல்கனியும்தான்."

"நீ சொல்லும் போதே பார்க்கனும் போல இருக்குக்கா ஆனாலும் ஒரு நாளைக்குள்ள இவ்வளவு பார்த்திருக்க?"

"அத்தை நேற்றிரவே வீட்டை சுத்திக்காட்டினாங்க இருட்டுல தோட்டம் அவ்வளவா விளங்கல்ல இப்போ காலையிலதான் பார்த்தேன் ப்பா... பார்க்க கோடி கண்கள் வேண்டும் உதய் நீயும் பார்த்த மயங்கிடுவ அந்தளவுக்கு சூப்பரா இருக்கு. கொழும்புல வீடெல்லாம் குட்டி குட்டியா இருக்கும் என்றுதான் நினைச்சேன் ஆனால் அப்படியில்லடி பெரிய வளவுல பெரிய வீடு. கட்டாயம் உனக்கு வீடியோ எடுத்து அனுப்புறேன்."

"கொழும்புல எந்த இடம்க்கா அது?"

"இது வெள்ளவத்தை இங்கன சுத்தி நிறைய தமிழர்கள் தான் இருக்காங்களாம் அத்தை சொன்னாங்க. அதோட எங்க வீட்டுல இருந்து இரண்டு வீடு தாண்டினா பீச்சுமிருக்கு. கோயிலும் நடந்து போர் தூரத்துல தானாம் அதுமட்டுமில்ல ரெயில்வே ஸ்டேசன் கூட பக்கத்துலதானாம் இருக்கு. காலையில இருந்து கடகடன்னு எத்தன தடவை ரயின் போய் வந்துட்டிருந்தது தெரியுமா நல்லாத்தான் இருக்கு அது சரி தாரு வரல்லையா?"

"அப்படியாக்கா ரெயின் பார்த்தே நேரத்தைப் போக்காட்டிடுவ போல தாருக்கா எங்களைப் பார்க்க எப்ப வந்தாங்க நீ இருந்தாத்தானே வருவா நீதான் போயிட்டேயே. அவ இனி எங்க வரப்போறா ஆனால் உன்னைப் பார்க்காம இனி எப்படித்தான் இருக்கப் போறாளோ தெரியல்ல."

"அது என்றா உண்மைதான் எனக்கும் அவளிட்ட கதைக்காம இருக்க முடியாது. நான் பிறகு கோள் பண்ணிக் கதைக்குறேன்"

"ஆ...அக்கா அம்மா வாராங்க அவங்களுகிட்ட கொடுக்குறேன்"

"சரி கொடு" தாயிடம் நலம் விசாரித்து சிறிது நேரம் பேசியவள் தந்தையிடமும் பேசிவிட்டு மனசேயில்லாமல் அழைப்பைத் துண்டித்தவள் சிறிது நேரம் அழுகையில் கரைந்தாள். மொத்தக் குடும்பத்தையும் விட்டுவந்தவளுக்கு ஆறுதலாகவும் அன்பாகவும் இருக்க வேண்டியவன் தன்னை விட்டு மொத்தமாக எட்ட நிற்பதையும் எண்ணி மேலும் ஒரு மூச்சு அழுதாள். அனைத்தையும் நினைக்க நினைக்க கண்ணீர் நிற்காது பெருக்கெடுத்துக் கொண்டிருக்க இது சரிவராது என்றெண்ணியவள் ஒருவாறு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு முகத்தை நன்றாக சோப் போட்டு கழுவி துடைத்துப் பொட்டிட்டவள் தன் நாத்தனார்களைத் தேடிப் போனாள்.

வளரும்.....

Please share your comments here👇❤

 
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு
-22

அன்று மதியம் குடும்பத்திலிருந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்.

"ஏன்ப்பா ஆதி நாளைக்கு ஒபீஸூக்குப் போற ஐடியா இருக்கா?" ராகவன் கேட்க

"ஓம் அப்பா கட்டாயம் போகனும் துபாய் போனது, பிறகு கல்யாணம் என்று கிட்டத்தட்ட இருபத்தஞ்சு நாளாயிடுச்சு லீவெடுத்து. நான் நேரடியா பார்த்து முடிக்க வேண்டிய வேலை ஆயிரம் கிடக்குப்பா அடுத்த ஒரு மாதத்துக்கு நான் கடும் பிஸியா இருப்பேன்."

"ஆதி நான் ஒன்னு சொல்லுவேன் மறுக்காம செய்வாயா?" பீடிகையுடன் ஆரம்பித்தார் காயத்ரி தனக்குப் பிடிக்காத எதையோதான் இவங்க சொல்லப் போறாங்க எனப் புரிந்து கொண்ட ஆதித்யன் அமைதியாக இருக்க

"ஒன்னுமில்லப்பா நீ ஒபீஸ், வேலையென்று வந்துட்டா எதையும் யோசிக்கமாட்ட அதனால நயனாவை இன்றைக்கு எங்கவாவது கூட்டிட்டுப் போப்பா ஈவினிங் போனா டின்னரையும் வெளியே முடிச்சுட்டு வரலாம். என்ன சொல்லுற" நயனதாரா ஒரு எதிர்பார்ப்போடு அவன் முகத்தைப் பார்க்க அவளின் எண்ணத்தை புரிந்தும் அப்போதும் அமைதியாக இருந்தான் ஆதித்யவர்தன்

"என்னப்பா எதுவும் சொல்லாம இருக்க?"

"நாளைக்கு நான் கொஞ்சம் ஏர்லியாவே ஒபீஸூக்குப் போகனும் அதோட நைட் பார்க்க வேண்டிய ஃபைல்ஸூம் இருக்கு அதனால இன்னொரு நாள் பார்க்கலாமே."
அதிலிருந்தே அவனுக்கு அவளை அழைத்துச் செல்வதில் உடன்பாடில்லை என்பதை புரிந்து கொண்டாள் பெண். ஆனால் காயத்ரி விடுவதாக இல்லை. மீண்டும் வற்புறுத்த

"இல்லைம்மா எங்க கூட்டிட்டு போறென்று யோசிக்கிறேன்"

"இவ்வளவுதானா இந்த கொழும்புல போறதுக்கு இடமாயில்ல சரி நான் சொல்லுற மாதிரி செய் முதல்ல ரெண்டு பேரும் கோயிலுக்குப் போங்க. பிறகு கோள்பேஸ், பார்க், பிறகு மூவிக்கும் போயிட்டு லாஸ்ட்டா டின்னர் முடிச்சுட்டு வாங்க"

"இல்லைம்மா மூவி, டின்னருக்கு எல்லாம் போக முடியாதும்மா நான்தான் சொன்னேனே நைட் கொஞ்சம் வேலையிருக்கென்று"

"சரி அப்படியென்றால் இன்னொன்ரு செய் நயனிம்மாவ சோப்பிங் கூட்டிட்டுப் போ அவளுக்கு என்னெல்லாம் புடிக்குமோ வாங்கிக் கொடு" தனக்காக யோசிக்கும் ஒரு மாமியார் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவளின் முகத்தைப் பார்த்து தவறாக யூகித்தவன் 'இதுக்காகத் தானே ஆசைப்பட்ட ஆனால் உன் ஆசையை நிறைவேற விடமாட்டேன்.'

"இல்லை அத்தை சோப்பிங் எல்லாம் வேணாம் இப்போதானே கல்யாணத்துக்கு எல்லாம் எடுத்தோம் இப்போதைக்கு எதுவும் வேணாம். தேவைப்படும் போது வாங்கிக்கலாம் எதுக்கத்தை வேஸ்ட்டா?" மருமகளின் வார்த்தையில் இப்படியுமொரு பெண்ணா என காயத்ரி நெகிழ ஆதித்யனோ 'எதுக்கு இப்போ இந்த நடிப்பு ஓ... அம்மாவை நம்பவச்சு நல்லவளாகப் பார்க்குறாயா? ஆனால் நான் உன்னை ஒருநாளும் நம்ப மாட்டேன். நானிருக்குற வரை உன் எந்த எண்ணமும் நிறைவேறாது.' சூளுரைத்துக் கொண்டான். அன்றுமாலை தாயின் சொற்படி நயனதாராவை முதலில் கோயிலுக்கு அழைத்துச் சென்றவன் பின் கோள்பேஸ் பார்க் என சென்ற போதும் இருவர் இடையே அமைதியே ஆட்சி செய்தது. வானெங்கும் இருள் பரவத் தொடங்க இருவரும் வீடு திரும்பினர் அப்போது என்ன நினைத்துக் கொண்டானோ அவளை அழைத்துக் கொண்டு ஒரு உயர்தர ஹோட்டலுக்குச் சென்றான். 'அட அத்தை சொன்னப்போ முடியாதென்று சொல்லிட்டு இப்போ டின்னருக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார் அப்போ நான் வேண்டிக்கிட்டது உங்களுக்கு கேட்டுடிச்சா கடவுளே. இப்படியே எங்களை நல்லபடியா வாழவைங்க ஆயுசுக்கும் உங்களுக்கு கடமைப்பட்டவளா இருப்பேன்.' தனக்குள்ளே பேசிக் கொண்டு அமர்ந்தவள் முன்னால் சொடக்கிட்டான் அவன். நிமிர்ந்து பார்த்தவளிடம்

"என்ன உனக்கு காது கேக்காதா எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டிருக்கேன். ஏதோ தியானத்துல இருக்குற மாதிரி இருக்குற சரி உனக்கு வேண்டியதை ஓடர் பண்ணிக்க" என்றவன் மெனுகார்ட்டை அவள் புறம் நகர்த்திவிட்டு தனக்கானதை ஓடர் செய்தான். அவன் தன்னை மதித்து தனக்கானதை தெரிவு செய்யும் உரிமையையும் கொடுத்ததை எண்ணி உள்ளூர மகிழ்ந்தவள்

"இல்லைங்க உங்களுக்கு சொல்லுறதையே எனக்கும் சொல்லுங்கோ" என அவன் இடியப்பக் கொத்து சிக்கன் கிரேவி என இரண்டு் பிளேட்டாக ஓடர் செய்தான். உண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது

"என்னங்க ரொம்ப தைங்க்ஸ். உங்கம்மா சொன்னப்போ மறுத்துட்டு டின்னருக்கு கூட்டிட்டு வந்ததுக்கு"

"ரொம்பக் கனவு காணாத எனக்குப் பசிச்சது சாப்பிடுற டைம் வேற அதனாலதான் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனேன் உன்னைப் பார்க்கவச்சுட்டு சாப்பிட முடியாதில்லை அதனாலதான் உனக்கும் ஓடர் பண்ணினேன். உனக்காக இல்லை சும்மா தேவையில்லாத கற்பனைய வளர்த்துக்காத விளங்கிட்டா" அவனின் பதிலில் அன்றைய நாளின் சந்தோசமெல்லாம் வடிந்தது போல் இருந்தது. கண்ணில் நீர் கோர்க்கத் தொடங்க அதை அவனுக்கு மறைப்பதற்காக சாலையின் புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

மறுநாள் அவனுக்கு முன்னமே எழுந்த நயனதாரா தலைக்கு குளித்து காலைப் பூஜையை முடித்தவள் சூடான டீயுடன் கணவனிடம் வர அவளைக் கண்டவன் எரிந்து விழுந்தான்.

"இங்கப்பார் இதெல்லாம் செஞ்சு என் மனசுல இடம் புடிக்க நினைச்சா அது நடக்காது. இந்த மாதிரி கொண்டு வாரது இதுதான் கடைசி நீ போகலாம்." அவன் முகத்திலடித்தாற் போல கூற ட்ரேயுடன் திரும்பிச் சென்றவள் காயத்ரியிடம் ஆதி குளிக்கிறான் என்றும் காலை உணவுடன் டீ குடிப்பதாகவும் சொன்னான் என்றும் கூறியவள் உணவை மேசையில் எடுத்து வைக்க தயாராகி வந்தவன் உண்ண அமர்ந்ததும் அவனுக்கு எடுத்து வைக்கத் தொடங்கினாள் நயனி. தாயின் முன் எதுவும் கூறாது அமைதியாக அமர்ந்திருந்தவன் உணவைக் கண்டதும்

"அட பொல் ரொட்டி சம்பல் இறைச்சிகறி வேற எவ்வளவு நாளாச்சு இதைச் சாப்பிட்டு ம்.... இது என்ன ஆஹா பூரிக் கிழங்கு அட எல்லாமே எனக்குப் புடிச்ச டிஷெஸ் பரவாயில்ல மரகதம்மா ரொம்ப நாள் கழிச்சு என்னோட பேவரானதை செஞ்சிருக்கீங்க." பேசிக் கொண்டே ஒரு வாய் வைத்தவன் எதுவும் பேசாது அமைதியாக உண்ண

"ஏன்ப்பா சாப்பாடு எப்படியிருக்கு எதுவும் சொல்லாம சாப்பிட்டுட்டிருக்க"

"அம்மா ரசிச்சு சாப்பிட்டுட்டிருக்கேன். உண்மைய சொல்லனுமென்றால் மரகதம்மாவோட டேஸ்ட் இன்றைக்கு இன்னும் கொஞ்சம் தூக்கலா வேற லெவல்ல இருக்கு." அவன் கூற கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரித்தனர் என்ன என்பது போல் பார்த்தவனிடம்

"தூக்கலாத்தான் இருக்கும் ஏன்னா சமச்சது மரகதம்மாயில்ல உன்னோட வீட்டுக்காரம்மாதான்" அந்த வார்த்தையில் உண்டு கொண்டிருந்தவனுக்குப் புரையேற அவசரமாக அவன் தலையில் தட்டி நயனி தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்.

"பார்த்து சாப்பிடப்பா, என்னங்க உங்களுக்கு ஒன்னு தெரியுமா? மரகதம்மாவும் நானும் சமைப்போம் நீ சும்மா இரும்மா என்று சொல்லுறேன் கேட்டாத்தானே. அவ வீட்டுக்காரனுக்கு அவதான் சமைக்கனுமென்று ஒத்தக்கால்ல நின்னு சமச்சிருக்கா ஆதிக்கு என்னெல்லாம் புடிக்குமென்று கேட்டு அவளே பார்த்துப் பார்த்து சமச்சிருக்கா"

"அப்படியா நயனாம்மா உண்மையிலே சாப்பாடு சூப்பரா இருக்கு" உடனமர்ந்து உண்டு கொண்டிருந்த ராகவன் கூற

"நயனி சாப்பாடு செம்ம டேஸ்ட்டுங்க. இனிமேல் இன்னும் கொஞ்சம் கூட உடற்பயிற்சி செய்யனும் போல"

"ஏன் அப்படிச் சொல்லுறீங்க அண்ணா?"

"பின்ன என்னம்மா இவ்வளவு டேஸ்ட்டா சமைச்சா. உங்க சாப்பாட சாப்பிட்டா ஒரு மாசத்துலே வெயிட் போட்டுவன் போல அதனாலதான்" அவன் கூற சிரித்தாள் பெண் அவளின் மகிழ்ந்த முகத்தைப் பார்த்து எதுவும் செய்ய முடியாமல் ஆதித்யன் பற்களை கடிக்க

"சங்கர் இனிமே நீ கொஞ்சமில்லப்பா நிறையத்தான் செய்ய வேண்டியிருக்கும். இவ்வளவு நாளும் எனக்கு டிமிக்கி காட்டிட்டு லன்ஞ்ச கேன்டின்ல சாப்பிட்டுப்போம் என்று சொல்லுவீங்க இல்ல இனி அது நடக்காது ஏன்னா இனிமே பகல் சாப்பாடும் வீட்டுல இருந்துதான் அதுவும் நயனி கையால சமச்சதுதான் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது."

"ஐயோ அம்மா நயனி கைச் சமையல் என்றால் ஏன் ஓடனும் ஒளியனும் நான் பத்து தரம் உடற்பயிற்சி செய்யவும் தயாரா இருக்கேன். மறக்காம அனுப்பிடுங்க என்ன மச்சான் நான் சொல்லுறது." ஆதியோ அவனைப் பார்த்து முறைக்க

"உனக்கு வேணாமென்றால் போ நயனிம்மா எனக்கு அனுப்பிடுங்க" அந்தப் புகழ்ச்சியைத் தாங்க முடியாத ராஜேஸ்வரி

"நீங்கெல்லாம் புகழ்றளவு அப்படி ஒன்றுமில்லை, சாப்பாடு பரவாயில்லை. சுமாரா இருக்கு அதோட காலையில ஒபீஸூக்குப் போறவனுக்கு இப்படி கணமான எண்ணெச் சாப்பாடா கொடுப்ப பாரு அவனுக்குப் புரைக்கேறிட்டு" ராஜேஸ்வரியின் பேச்சில் காயத்ரி கடுப்பாக நயனதாராவோ அமைதியா பதிலளித்தாள்.

"அப்படி இல்லை பாட்டி பெரிய லீவு எடுத்தாங்க இல்லையா கட்டாயம் ஒபீஸ்ல இன்னைக்கு நிறைய வேலையிருக்கும் வேலை பிஸியில பகல் சாப்பாடு கூட பிந்தலாமில்லை. அதனாலதான் காலைச்சாப்பாடு கொஞ்சம் ஹெவியா இருந்தா நல்லதுன்னு நினைச்சேன். தப்பா பாட்டி"

"ஆதி பார்த்தாயாப்பா நயனி இப்பவே உனக்கு எது நல்லதுன்னு யோசிக்குறா உண்மையிலே நீ கொடுத்து வச்சவன்தான்" ராகவன் மகிழ்ந்து கூற

"நான் பார்த்த பொண்ணில்லையா அத்தோட என் ஆதிக்கு என்னோட அம்மா பார்த்தவ வேற அன்பானவளா பொறுப்பானவளாத்தான் இருப்பா" காயத்ரி சமயம் பார்த்து தன் பக்கத்தை நியாயப்படுத்த
'இவ எவ்வளவு பேர்பக்ட்டா நடிக்குறா அது தெரியாம இவங்க சந்தோசப்பட்டுக்கிறாங்க' தனக்குள் சிரித்துக் கொண்டான் மைந்தன். ஆனால் அவன் எண்ணத்தை முகத்தில் படித்த பெண்ணவளோ 'வர்தன் நான் நடிக்கவே இல்லை அதை நீங்க சீக்கிரம் புரிஞ்சுக்குவீங்க என்னையும் என் காதலையும் நிச்சயமா ஏத்துப்பீங்க' தன்னோடு பேசிக் கொண்டாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை திருமணத்திற்காக வந்த அவள் நாத்தனார் இருவரும் நாளை வெளிநாடு செல்ல இருப்பதனாலும் ஆதித்யனும் லீவாக வீட்டிலிருந்ததாலும் அனைவருக்காகவும் பார்த்துப் பார்த்து பிரியாணி சமைத்துக் கொண்டிருந்தாள் நயனதாரா. அப்போது வீட்டினுள் நுழைந்தாள் விக்‌ஷனா. சமயலறையிலிருந்தவாறே எட்டிப் பார்த்த நயனதாரா 'இவ எதுக்கு இங்க வந்திருக்கா அதுவும் என் வர்தன் வீட்டுல இருக்குற நாளாப் பார்த்து வந்திருக்கா அவருக்காக ஆசையா சமச்சிட்டிருக்கேன். என்ன குட்டை குழப்ப வந்திருக்காளோ.' எண்ணமிட்டவள் முன்னால் வந்து நின்ற ஷனாவைக் கணெக்கெடுக்காது தன் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவளை வம்புக்கிழுத்தாள் அவள்.

"ம்..... வாசனை சூப்பரா இருக்கே என்ன மேடம் என் அத்தானுக்காகவா இந்த ஏற்பாடு."

"அதுல என்ன சந்தேகம் ஷனா பார்த்தாயா நயனிய, பார்த்துப் பார்த்து சமச்சிட்டிருக்கா எங்க தம்பி கொடுத்து வச்சவனில்ல." அகிலா பெருமைப்பட

"ஓ... அப்படியா அப்போ நமக்கெல்லாம் இல்லையா அவருக்கு மட்டுந்தானா? ம்.... அப்ப கொடுத்து வச்சவருதான்" ஷனா நக்கலாக பதிலளிக்க

"அவனுக்கு ஃபெஸ்ட்டு நமக்கெல்லாம் நெக்ஸ்ட்டு" ரைமிங்காய் பதில் சொன்னாள் அஸ்வினி

"ஐயோ அப்படியில்லை நாளைக்கு அகிலா மதினியும் நீங்களும் கனடா போறீங்க இல்லை அத்தோட அவருக்கும் இன்றைக்கு லீவுதானே அதனாலதான் பிரியாணி சமைக்குறேன்."

"அதானே பார்த்தேன் கேட்டீங்களாக்கா அவரும் வீட்டுல இருக்காராம்" அஸ்வினி மீண்டும் கிண்டலடிக்க

"அதான் அவருக்கு செய்யுறதுல நீங்களும் நனஞ்சுக்கோங்க என்று சொல்லுறா விளங்கிட்டா" அனுபமாவும் தன் பங்குக்கு கிண்டலடிக்க நயனி சிணுங்க அகிலா அவளை ஆறுதல் படுத்த

"என்னங்கடி என் மருமகளை குழற வைக்குறீங்களா?" என வந்த தாயிடம் நடந்ததைக் கூற அவரும் சேர்ந்து கொண்டு மருமகளை கிண்டல் செய்ய சந்தோசமாக இருந்த அந்தக் குடும்பத்தை பார்த்த ஷனாவிற்கு வயிறெரிந்தது. நயனியிடம் தனியாக பேசும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவள் அது கிடைத்ததும்

"நீ என்ன மாயாஜாலம் செஞ்சாலும் என் அத்தான் உன்கிட்ட மயங்கமாட்டாரு. ஏன்னா அவர் மனசுல நான்தான் இருக்கேன் என்றைக்கும் நான் மட்டும்தான் இருப்பேன்." அவளின் வார்த்தைகள் அவளுக்குள் சுருக்கென்று வலியை கொடுத்த போதும் அதனை வெளிக்காட்டாது

"இங்கப்பார் நீங்க ரெண்டு பேரும் காதலிச்சிருக்கலாம் ஒன்றா வாழ ஆசைப்பட்டிருக்கலாம் ஆனால் கடவுள் எங்க ரெண்டு பேருக்கும்தான் முடிச்சுப் போட்டிருக்கார் சட்டப்படி நான்தான் அவரோட மனைவி இனி நீதான் உன் மனசை மாத்திக்கிட்டு நல்ல மாப்பிள்ளை ஒன்றைப் பார்த்து கட்டிக்கோ சரியா" அவளின் திமிரான பதிலில் கோபங் கொண்டவள்

"நான் மாத்திக்குறது இருக்கட்டும் என் அத்தான் மனசை மாத்திக்கிட்டாரா உன்னை ஏத்துக்கிட்டாரா முதல்ல அதை யோசிச்சுப்பாரு மாற வேண்டியதும் போக வேண்டியதும் யாருன்னு விளங்கும்" சரியாக கல்லை எறிந்தவள் தன் பாட்டியின் அறைக்குள் சென்றுவிட்டாள்.

உணவிற்காக அனைவரும் வந்தமர காயத்ரி தான் பரிமாறுவதாகவும் நயனியையும் அமர்ந்து உண்ணும் படியும் கூற அவளும் சரியென்று ஆதியின் பக்கத்திலிருந்த இருக்கையில் அமர வர அதற்குள் முந்திக் கொண்டு வந்து ஷனா அமர்ந்து கொண்டாள். திகைத்து நின்ற மருமகளைப் பார்த்த காயத்ரிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

"ஏய் ஷனா உனக்கு அறிவே இல்லையா இப்படித்தான் நடந்துக்குவாயா? ஆதி பக்கத்துல நயனிதான் இருக்கனும். நீ உட்கார்ந்துட்டிருக்க முதல்ல எழும்பி இந்தப் பக்கம் வந்து உட்காரு. நயனி நீ அங்க போய் இரும்மா"

"சாப்பிட உட்கார்ந்தவளை எழுப்பிவிடுற நல்லாயிருக்கா காயத்ரி உனக்கு" ராஜேஸ்வரியும் கோபமாய் கேட்க

"என்ன அத்தை என் வீட்டுல சோறில்லாமலா நான் உங்க வீட்டுக்கு வந்தேன் இன்றைக்கு அத்தானுக்கு லீவு அவரைப் பார்க்கலாம் என்றுதான் வந்தேன். வந்தவங்களை இப்படித்தான் வரவேற்பாங்களா. அத்தோட என் அத்தானுக்குப் பக்கத்துல எப்பவும் நான்தானே உட்காருவேன். அந்த உரிமைய நான் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்" அவள் ஆணித்தரமாக பேச

"ஆதிக்கு அப்போ கல்யாணமாகல்ல இப்போதான் அவனுக்கென்று ஒருத்தி வந்துட்டாயில்ல அதனால இந்த உரிமையெல்லாம் இனி அவளுக்கு மட்டும்தான் என்ன ஷனா விளங்கிட்டா" காயத்ரி கூற ஷனாவை வெற்றிப் பார்வை பார்த்தாள் நயனதாரா அதற்கு அசருபவளா அந்த விஷப்பாம்பு ஆதியிடமே நயமாகப் பேச நயனியின் பக்கத்தில் அமரப்பிடிக்காதவனுக்கு அதுவே நல்லதொரு வாய்ப்பாக அமைய

"அம்மா சாப்பிட உட்கார்ந்தவளை இப்படி எழுப்பி விடுறது முறையில்லை நம்ம விக்‌ஷ் என்பக்கத்துலே இருந்து சாப்பிடட்டும் அவ அஸ்வி அக்காக்குப் பக்கத்துல உட்காரட்டும். நயனி நீ அக்கா பக்கத்துல உட்காரதுல உனக்கேதும் பிரச்சனையா" எனக் கேட்டவனிடம் மறுப்பாக தலையசைத்தவள் அஸ்வினியின் பக்கத்தில் அமர இப்போது வெற்றிப்பார்வையை வீசுவது ஷனாவின் முறையானது. வாடிய மருமகளின் முகத்தைப் பார்த்த காயத்ரிக்கு மகனை நான்கு அறைவிடலாம் போல இருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டு உணவைப் பரிமாறினார். உண்டு முடித்தவர்கள் எல்லோரும் எழுந்து செல்ல ஆதியிடம் வந்த அகிலா

"தம்பி உன்கிட்ட கொஞ்சம் கதைக்கனும்"

"சொல்லுங்கக்கா என்ன விசயம் ஏதாவது செய்யனுமா?"

"இல்லடா அது எதுவுமில்ல இங்கப்பாரு தம்பி ஒவ்வொரு பொண்ணும் தன் புருஷன் முதல்ல தன்னைத்தான் பார்க்கனும் கவனிக்கனுமென்று நினைப்பா. இன்றைக்கு நீ நடந்துகிட்டது கொஞ்சமும் சரியில்லடா ஷனாவை உன் பக்கத்துல உட்கார வச்சப்போ நயனி முகம் செத்துப் போச்சு எல்லாருக்காகயும் காலையில இருந்து பார்த்துப் பார்த்து சமைச்சா கடைசியில அவளால நிம்மதியா சாப்பிட முடியாம போச்சு. அத்தோட இன்னொரு விசயமும் சொல்லிக்கிறேன். ஷனாவோட நடவடிக்கை எதுவுமே சரியில்ல அவ மனசுல ஏதோ தப்பிருக்கு என்னமோ நயனிய காயப்படுத்தனுமென்று செய்ற மாதிரி இருக்கு. அந்த புள்ளை உன்னை நம்பி வந்திருக்கா நீதான் அவளுக்கு பக்க பலமா இருக்கனும். ஷனாக்கு அளவுக்கதிகமா இடங்கொடுக்காத என்ன விளங்கிட்டா?" சரி என தன் தமக்கையிடம் தலையாட்டியவன் நயனதாராவை காயப்படுத்த இன்னொரு வழி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான்.

காயத்ரியும் சாப்பிட்டு விட்டு மற்றைய வேலைகளை கவனிக்க சமயலறைக்குள் நுழைந்து கொண்டார் நயனி உண்ட இடத்தை துப்பரவு செய்யத் தொடங்கினாள். அவளிடம் வந்த ஷனா

"என்ன நயனி பார்த்தயில்ல என் அத்தான் என்றைக்கும் என்னை விட்டுக் கொடுக்கமாட்டான் என்னம்மோ சொன்ன உரிமையுள்ள மனைவின்னு இப்போ விளங்குதா யாருக்கு உரிமைகூட என்று. இது வெறும் ஆரம்பந்தான்மா போகப் போக இந்த ஷனாவோட ஆட்டத்தை பார்ப்ப என் அத்தானை அடையுற வரை நான் ஓயமாட்டேன். இந்த வீட்டுல இருந்து உன்னை மொத்தமா துரத்திட்டுத்தான் இனி நான் ஓய்வேன் என்ன சொன்னீங்க உன்னால முடிஞ்சதைப் பாருன்னா என்கிட்டேயே அத்தையும் மருமகளும் சவால் விடுறீங்களா? இனி பாருங்க என்னால என்னல்லாம் முடியும்னு" சொன்னவள் ஹாலில் அமர்ந்திருந்த ஆதியின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டாள். இப்படியாக ஷனா வீட்டுக்கு வருவது வர வர அதிகரிக்கத் தொடங்கியது. ஆதியும் அவளின் உள் நோக்கமறியாது அவளது எண்ணத்துக்குத் துணை போகத் தொடங்கினான். அதுவும் அவள் வரும் நேரங்களில் நயனியின் முகத்தில் எழும் பொறாமையைப் பார்த்தவன் மேலும் அவளைக் காயப்படுத்த ஷனாவுடன் நெருங்கிப் பழகலானான். இது அவளை மிகவும் பாதிக்கத் தொடங்கியது.

நயனியின் தொலைபேசி தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது. கைவேலையாக இருந்தவள் திரையைப் பார்க்க அதில் தாரு என்று ஒளிர முகம் முழுக்க சந்தோசமாக கைகளைக் கழுவியவள் மிகுதி வேலையை காயத்ரியிடம் ஒப்படைத்து விட்டு தன் அறைக்குள் சென்று அவள் அழைப்பை ஏற்க

"ஹேய் நயனி என்னடி ரொம்ப பிஸியோடி நான் எதுவும் டிஸ்டொப் பண்ணிட்டேனா ஒவ்வொரு நாளும் உன்னோட கதச்சுப் பழகின எனக்கு இப்படி இரண்டு நாளுக்கொருக்கா கதைக்குறது கஷ்டமாயிருக்குடி ஒவ்வொரு நாளும் உன்கூட கதைக்காம கடும் கஷ்டமாயிருக்குடி" படபடத்துப் பேசிய தாரணியை சமாதானப்படுத்தியவள்

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஈவினிங் டீயோட சாப்பிடத்தான் ஸ்னெக்ஸ் ரெடி பண்ணினேன். பெருமட்டுக்கு முடிச்சிட்டேன் மிச்சத்தை அத்தையும் மரகதம்மாவும் பார்த்துக்குவாங்க. அத்தோட நானும் உனக்கு கோள் பண்ண நினைச்சேன் ஆனால் கொஞ்சம் பிஸியாகிட்டேன்ப்பா சொரிடி. இனி எப்போ டைம் கிடச்சாலும் உனக்கு உடனே கோள் பண்ணிடுவேன் அதே மாதிரி நீயும் டைம் கிடைக்கும் போது கோள் பண்ணு. சரி சரி நீ சொல்லு எப்படியிருக்க?"

"நல்லா இருக்கேன்டி நீ எப்படியிருக்க ஆதி சேர் எப்படியிருக்காங்க காயத்ரிம்மா ராகவன் சேர் எல்லாம் எப்படியிருக்காங்க."

"நாங்க எல்லோரும் நல்லாயிருக்கோம் மேடம் நீங்க எதிர்பார்க்குறவங்களும் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்காங்க."

"நான் யாரையும் எதிர்பார்க்கல்லையே"

"அப்படியா மேடம் சங்கரைப்பத்தி உங்க மனசு கேக்கல்ல"

"அப்படியில்லடி சரி அதவிடு உன்னோட லைஃப் எப்படி போகுதுடி உன் ஆளு என்ன சொல்லுறாங்க"

"அதை ஏன் கேக்குற மனிசன் ரொம்ப மோசம்டி நம்ம வழிக்கு கொண்டு வர முழு முயற்சி எடுக்கனும் போல பார்க்கலாம்டி கடவுள் என்னை கைவிடமாட்டார் என்று நம்புறேன் நிச்சயமா அவர் மாறுவாரென்றும் நம்புறேன் ஆனால் இந்த ஷனாதான் அப்பப்போ குட்டைய குழப்ப வாரா. அவளுக்கு சரியான பாடம் சொல்லிக் கொடுக்கனும் அதுக்குப் பிறகு இந்தப் பக்கம் தலவச்சுப் படுக்க மாட்டா. சரி அது என் பிரச்சனை இப்போ உன்னோட விசயத்துக்கு வா என்ன முடிவெடுத்திருக்க"

"உன்கிட்ட சொன்னேன் தானே எனக்கும் அவரைப் புடிச்சிருக்கு ஆனால் எங்க வீட்ட நினைச்சாத்தான்..... இல்ல நயனி அதுசரி வராது."

"சங்கரண்ணா உண்மையிலே ரொம்ப நல்லவங்கடி மிஸ் பண்ணிடாதே அவ்வளவுதான் சொல்லுவேன். இப்பயும் சொல்லுறேன் நல்லா யோசிச்சு முடிவெடு"
தோழிகள் இருவரும் கொஞ்ச நேரம் அரட்டையடித்துவிட்டு போனை வைத்தனர்.

நாட்கள் அதன்பாட்டில் நகரத் தொடங்கின நயனதாரா தன்னவனை எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கினாளோ ஆதித்யன் அந்தளவுக்கு அவளை விட்டு விலகிப் போனான் அதுமட்டுமல்ல எந்தளவு அவள் மனதைக் காயப்படுத்த முடியுமோ அந்தளவு காயப்படுத்தினான். ஆனாலும் அவன் எவ்வளவு காயப்படுத்திய போதும் அதனை எல்லாம் பொருட்படுத்தாது தன் காதலை மனதில் கொண்டு மீண்டும் மீண்டும் அவனை நெருங்கினாள் ஆனால் அவனோ அவளை எட்டி உதைத்தான். அதற்கு ஷனாவும் ராஜேஸ்வரியும் மேலும் தூபம் போட மற்றையவர்கள் முன் காட்டா விட்டாலும் தங்கள் அறையின் தனிமையில் அவன் வெறி கொண்ட வேங்கையானான். அவள் மனதை சொல்லம்புகளால் காயம் செய்ய இதற்கெல்லாம் ஷனாவின் மேல் வைத்த காதல் தான் காரணம் என தவறாக புரிந்து கொண்டு மனமுடைந்தவள் கடவுளிடம் சரணடைந்தாள் காயப்பட்ட அவள் மனதுக்கு கடவுள் ஒரு ஆறுதல் என்றால் மற்றையது அவள் ஆருயிர் தோழி தாரணிதான்.

வளரும்.....

Please share your comments here👇

 
ஒற்றைநிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு -23

காலம் யாருக்காகவும் காத்திராமல் கரைந்து கொண்டிருந்தது. ஷனாவின் ஆட்டமும் சிறிது சிறிதாக அதிகரிக்கத்
தொடங்கியது. முன்னெல்லாம் வாரம் இரு முறை வந்தவள் இப்பொழுது தினமும் வரத் தொடங்கினாள். அதுவும் ஆதித்யன் வீட்டிலிருக்கும் சமயமாகப் பார்த்து வரத் தொடங்கினாள். அந்த சமயத்தில்தான் ராஜேஸ்வரி குளியலறையில் வழுக்கி விழ அவரைக் கவனிப்பது நயனியின் பொறுப்பானது. அவளும் அவர் காயப்படுத்திய எதையும் மனசில் வைத்துக் கொள்ளாது நன்றாகவே பார்த்துக் கொண்டாள். ஆனாலும் சில சமயங்களில் முக்கியமாக ஷனா வரும் போது ராஜேஸ்வரி சுருக்கென வலிப்பது போல் பேசிவிடுவார்.

"ஐயோ பாட்டி இவ உன்னை ஏமாத்தத்தான் உன்னை கவனிச்சுக்குற மாதிரி நடிக்குறா இவள நம்பிடாதே பாட்டி"

"ஏன் ஷனா இப்படியெல்லாம் கதைக்குறீங்க. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா நான் நல்ல எண்ணத்துலதான் கவனிச்சுக்கிறேன். நான் அவங்கள பார்க்குறது கஷ்டமா இருந்தா நீங்களே உங்க பாட்டிய பார்த்துக்க வேண்டியது தானே"

"என்ன நல்லவ மாதிரி உன் புருஷனுக்கு முன்னால வேஷம் போடுறயா? நீ என்ன மந்திரம் பண்ணினாலும் நானும் சரி என் பேரனும் சரி உன்னை நம்ப மாட்டோம். நீ இந்த காசுக்கு வந்தவ தானே உன்னாலதான் என் பேத்தி வாழ்க்கை பாழாகிடுச்சு நீ நல்லா இருப்பயா? என்ன சொன்ன நல்ல எண்ணதுல கவனிக்கிறயா அப்படி கவனிச்சிருந்தா என் பேத்திய பார்த்து நீ கவனிச்சுக்கோ என்று சொல்லியிருக்க மாட்ட வேணாம்மா நீ என்னைப் பார்த்துக்கவே வேணாம் இனி உன் வேலய நீ பாரு என்ன கவனிக்க என் பேத்தியிருக்கா அவ பார்த்துப்பா" அவரின் வார்த்தையில் துடித்தவள் கண்ணீரோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். அதுதான் சாக்கென்று தன் பெட்டி படுக்கையுடன் காயத்ரி வீட்டுக்கு வந்தாள் அந்த பிசாசு. அப்பொழுதான் ஒபிஸிலிருந்து வந்து உடை மாற்றியவன் படியிறங்கி வர

"ஹாய் அத்தான்"

"ஹாய் என்ன பெட்டி படுக்கையோட வந்திருக்க என்ன விசயம்?"

"அது ஒன்னுமில்ல பாட்டிக்கு சுகமில்லதானே அவங்கள கவனிக்கத்தான் இங்க யாருமில்லையே அதனால அவங்க கூட கொஞ்ச நாள் இருந்து அவங்களப் பார்த்துட்டுப் போகலாம் என்று வந்தேன்"

"அவங்கள பார்த்துக்க இங்க எல்லோரும் இருக்காங்க ஷனா உனக்கு உன் பாட்டியோட இருக்கனும் அவங்களப் பார்த்துக்கனும் என்று நினச்சா நீ தாராளமா வந்து தங்கு அதுக்கு நீ யாருகிட்டயும் பெமிஷன் கேட்க வேண்டிய அவசியமில்ல ஆனால் பார்த்துக்க யாருமில்ல அதுக்குத்தான் வந்தேன் என்று யார் மேலயும் பழி போடாதே சரியா?"

"சொரி அத்தான் நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாதுதான். சரி டீ குடிச்சிட்டீங்களா?"

"இல்லை இனிமேல் தான்"

"ஒபீஸ்ல இருந்து வந்த உங்கள கவனிக்காம அந்த நயனி என்னதான் வெட்டி முறிக்கிறாளோ பாட்டி விசயத்துலயும் இதுதான் நடந்துச்சு அதத்தான் சொன்னேன். இருங்கத்தான் நான் போய் உங்களுக்கு சூடா டீயும் சாப்பிட எதுவும் கொண்டு வாரேன்."

"உனக்கு தாராவோட என்ன பிரச்சனை எப்ப பாரு அவளோட மல்லுக்கு நிக்குற. இங்கப்பாரு விக்‌ஷ் முதல்ல என்ன நடந்ததென்று தெரியாம மத்தவங்கள குற சொல்லுறத நிப்பாட்டு. தாரா முதல்ல வீட்டுல இல்லை அவ அனு அக்கா கூட கோயிலுக்குப் போயிருக்கா. அதோட என்கிட்ட சொல்லிட்டுத்தான் போனா நானும் இப்பதான் வந்தேன் ரெப்ரஸாகிட்டு வாரேன் அம்மா எனக்கு டீ போடத்தான் போயிருக்காங்க. நீயும் டீ குடிக்கிறயா?" தாரா என்ற அவனின் அழைப்பிலே அதிர்ந்து நின்றவள் இல்லை என்பதாய் தலையாட்டினாள். அவன் பேசிய அனைத்தையும் சமயலறையிலிருந்து கேட்டிருந்த காயத்ரி மனமகிழ்ந்தவராய் தேநீரை கொண்டு வந்து மகனிடம் கொடுத்தவர் விக்‌ஷனாவை ஒரு பொருட்டாகவே மதிக்காது சென்று விட்டார். தேநீரை அமைதியாக அருந்திக் கொண்டிருந்தவன் உள்ளமோ சற்று முன் ஷனாவுடன் பேசியதை அசை போட ஆச்சரியமாக இருந்தது.

'இந்த நயனிக்கு நான் ஏன் சப்போட் பண்ணனும் என்னாச்சு எனக்கு. கொஞ்ச நாளாவே என்னமோ அவள பத்தி அடிக்கடி யோசிக்குறேன்.' ஆனாலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அது அவனுக்குப் பிடித்தும் இருந்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஷனாவிற்கு அவனின் உதட்டோரப் புன்னகை சரியாகப் படவில்லை அவர்களின் உறவின் விரிசல் முழுவதாகத் தெரியாவிடினும் இலைமறை காயாக அவளுக்குத் தெரியும் உடனே தான் ஏதாவது செய்யாவிடின் ஆதித்யன் முழுதாக தன் கைவிட்டுப் போய்விடுவான் என்பது அவளுக்கு உறுதியானது. அதற்கான முயற்சிகளை எடுக்கலானாள். அதன்படி ஆதித்யனுக்கான நயனியின் வேலைகளை மெல்ல மெல்ல தன்னகத்தே கொண்டு வரலானாள்.

"ஏன் நயனி அத்தான் ஜோக்கிங் போய் வந்து எவ்வளவு நேரமாகுது நீ ஏன் அவருக்கு இன்னமும் டீ கொடுக்கல்ல இதான் நீ அத்தானைப் பார்த்துக்குற லட்ஷணமா? இந்த அத்தைக்கு எங்க இதெல்லாம் விளங்குது."

"சும்மா தேவைக்கில்லாம கதைக்காதீங்க ஷனா. அவர் எப்பவுமே காலச் சாப்பாட்டோட தான் டீ குடிப்பாரு. அவருக்கு எப்போ என்ன செய்யனுமென்று எனக்குத் தெரியும் இதுல நீங்க தலையிடாதீங்க உங்க வேலை என்னயோ இந்த வீட்டுல எதுக்காக வந்து இருக்கீங்களோ அதமட்டும் பாருங்க சரியா?" என்றவள் தன் வேலைகளை கவனிக்க ஷனாவோ தேநீரைக் கலந்தவள் எடுத்துக் கொண்டு படியேற

"நான்தான் சொல்லுறேனில்ல நீங்க எதுக்காக தேவைக்கில்லாத வேலையெல்லாம் செய்றீங்க"

"நீதானே சொன்ன அதான் என் வேலைய நான் பார்க்குறேன். என் அத்தானை கவனிக்குறத விட எனக்கு வேறென்ன வேலை இங்கப்பார் நயனி, அத்தான் எப்பவும் காலையில எழும்பினதும் டீ குடிச்சிட்டுத்தான் குளிக்கவே போவாரு ஆனால் அதை மாத்திருக்காரென்றா என்னமோ இடிக்குது இப்போ நான் இதக் கொண்டு் போய் என்னோட ஆதிகிட்ட கொடுக்கப் போறேன் மறுவார்த்தை கதைக்காம குடிக்கிறாரா இல்லையா என்று மட்டும் பாரு. என் அத்தான் நான் சொன்னா என்ன வேணுமென்றாலும் செய்வார்." திடமாகக் கூறிவிட்டுச் செல்ல அதுதான் நடக்கப் போகுதா என்ற எண்ணத்தில் அவள் திரும்பி வரும்வரை தடதடக்கும் இதயத்தோடு காத்திருந்தாள். வெற்றுக் கோப்பையுடன் வந்தவள் நயனியை வெற்றிப் பார்வை பார்க்க அவள் சின்ன இதயமோ உடைந்து சுக்கு நூறாகியது. இப்படியே டீயை அறைக்கே கொண்டு்போய் கொடுப்பது காலை உணவை அவனுக்குப் பரிமாறி அவனுடனே தானும் அமர்ந்து உண்ணுவது அலுவலகம் முடிந்து வரும் வேளை சீவி சிங்காரித்து அவனை வரவேற்பது என்று ஒரு உரிமையுள்ள மனைவி போல் ஷனா நடந்து கொள்ள ஆதித்யனும் அவளின் உள் நோக்கமறியாது அவனையறியாமலே அவளை ஆதரிக்க நயனதாரா மேலும் மேலும் உடையத் தொடங்கினாள்.

அதற்கேற்ப ஷனாவும் ஆதித்யனும் ஒன்றாக இருந்தால் அதைத்தாங்க முடியாதவள் அவர்கள் பேச்சுக் குரல் கூட கேட்காத தூரத்துக்கு சென்று விடுவாள். அதுவும் ஷனா தங்கள் அறைக்குள் நுழைந்தால் அடுத்த நொடி அறையை விட்டு வெறியேறினாள். இப்போதெல்லாம் அவள் முகத்தில் மருந்துக்கும் சந்தோசமில்லை முதலில் நயனியின் செயல் புரியாதவன் பின்புதான் இவளின் செய்கை ஷனாவினால்தான் என்பது புரிபட அவன் உள்ளமோ அதை தடுப்பதற்கான வழிகளைத் தேட அவன் அறிவோ அந்த எண்ணத்தையே தடுத்ததோடு அவளின் வாடிய முகத்தைப் பார்த்தும் மகிழ்ந்தது.

"என்ன மேடம் எங்களுக்கு தனிமை தந்து வெளிய போறீங்களா இல்லை நாங்க ஒன்னா இருந்து கொஞ்சிக்குறதப் பார்க்க முடியாம தவிச்சு ஓடுறீங்களா. ஹா.... எது எப்படியோ இந்த ரூம விட்டு ஓடுற உன்னை சீக்கிரமாவே இந்த வீட்டை விட்டும் ஓடவப்பேன் அதுவும் ஆதியோட சேர்ந்து" அவளின் புண்பட்ட மனதிற்கு பெல்கனித் தோட்டம்தான் ஆறுதலாக இருந்தது. இதனை பார்த்திருந்த ராஜேஸ்வரி உள்ளம் மகிழ காயத்ரியோ கவலை கொண்டார். ஆரம்பத்தில் இதைக் கவனிக்காத ஆதித்யனுக்கும் ஏதோ தவறு என்பது புரிபடத் தொடங்கியது. ஷனாவின் எல்லை மீறல்களை பார்த்த காயத்ரி இதற்கு மேலும் பொறுக்க முடியாதவராய் மகனிடம் வந்தவர்

"ஆதி நீ தப்பு பண்ணுற என் வளர்ப்பு தப்பா போயிட்டிருக்கு. உனக்கு கல்யாணமாயிடுச்சு உன்னை நம்பி ஒருத்தி இருக்கா நீ இப்போ செய்யுறது நல்லா இருக்கா ஆ... அந்த ஷனாவோட என்ன வேண்டியிருக்கு அவ கையால டீ குடிக்கிற சாப்பாடு சாப்பிடற என்னமோ அவதான் உன் பொண்டாட்டி மாதிரி நடந்துக்குறா நீயும் இழிச்சிகிட்டு இருக்க அவளத்தான் புடிச்சிருக்குன்னா உன்னக் கேட்டப்பவே சொல்லருக்கலாமே. எதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுத்த சீச்சீ இத நான் உன்கிட்ட எதிர் பார்க்கல்லடா பாவம் அந்த புள்ள அவ முகத்தப் பார்க்கவே முடயல்ல எல்லாம் என்னாலதான்"

"அம்மா நான் எப்பயும் போலதான் ஷனாவோட பழகுறேன். அது ஏன் உங்களுக்கு வித்தியாசமாபடுது ஒருநாளுமில்லாம ஏம்மா திடீரென்று இப்படிக் கேட்குறீங்க. அதுவும் அருவருப்பா வேற என்னம்மா தாராதான் உங்ககிட்ட இப்படிச் சொன்னாளா? அவ புதுசா வந்த அவளுக்கு எங்க உறவு பத்தி என்ன தெரியும் சொல்லுங்க. அவளுக்குத்தான் விளங்காட்டியும் நீங்க விளங்கப்படுத்தி இருக்கலாமே அத விட்டுட்டு என்கிட்ட இப்படி கதைச்சுட்டிருக்கயல். நீங்க கவலப்படுற அளவு இங்க எதுவும் தப்பாகல்ல உங்க வளர்ப்பு எப்பவும் தப்பாகாது. என்னை நம்புங்கம்மா இது உறுதி." என்று அவன் கூறிய பின்தான் காயத்ரி நிம்மதியடைந்தார் அதனோடு சேர்த்து தன் மருமகளுக்கும் புரிய வைத்தார் அவள் கலங்கிய மனதும் மெல்ல தெளிந்தது.

ஒருநாள் காலையிலே ஆதித்யனைத் தேடி அவனுடைய அறைக்குள் நுழைந்த ஷனா அவனைத் தேட ஆதித்யன் அங்கு இல்லை ஆனால் அவள் கண்ட காட்சி அவளை எல்லையில்லா மகிழ்ச்சியடைய வைத்தது. கள்ளுண்ட நரி போல ஆனாள்.
இதுதான் தக்க சமயமென நினைத்தவள்
அந்தக் காலைப் பொழுதிலே காயத்ரியை சத்தமாக அழைத்துக் கொண்டு வந்தாள் விக்‌ஷனாவின் சத்தத்தில் என்னவோ ஏதோ என்று பயந்து வந்த காயத்ரியிடம்

"என் அத்தானுக்கு என்னைக் கட்டி வச்சிருந்தா நான் இந்நேரம் வாந்தி எடுத்திருப்பேன் ஆனால் ரொம்ப நல்லவ வல்லவ என்று அந்த நயனியைக் கட்டி வச்சீங்களே அவ என்ன செஞ்சு வச்சிருக்கா என்று தெரியுமா?"

"ஏன் என்னாச்சு" நிதானமாக கேட்ட காயத்ரியை கொல்லலாம் போல இருந்தது அவளுக்கு

"ஆ... உங்க புள்ளைய கட்டில்ல இருந்து தள்ளி வச்சிருக்கா"

"அது எப்படி உனக்குத் தெரியும்?"

"அதான் நான் பார்தேனே என் கண்ணால பார்த்தேனே" அவள் உறுதியாகக் கூற அவருக்கு பக்கென்றது 'இது என்ன புதுக் கதை' குழம்பியவர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த வேளை படியிறங்கி வந்த நயனதாராவைக் கண்டதும் பாய்ந்து சென்று அவள் கைகளைப் பற்றி சமயலறைக்குள் அழைத்து சென்றார் பின்னோடு விக்‌ஷனாவும் செல்ல கண்கள் முழுக்க ஒரு எதிர்பார்ப்புடன்

"நயனி நான் ஒன்று கேட்பேன் மறைக்காம உண்மைய சொல்லனும்"

"சொல்லுங்கத்தை என்ன விசயம்?" எப்படிக் கேட்பதென்று புரியாமல் தவித்தவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு

"அது... அது வந்து"

"என்ன அத்தை இழுத்துட்டிருக்கீங்க இந்த நல்லவக்கிட்ட கேட்டுட வேண்டியதுதானே? நீங்க கேக்குறீங்களா இல்லை நான் கேட்கவா?" ஷனா இடையில்புக

"நீ கொஞ்சம் சும்மா இரு நானே என் மருமகளுக்கிட்ட கேட்டுக்கிறேன். நயனி நான் இப்படிக் கேட்கிறேன் என்று தப்பா எடுத்துக்காதம்மா உனக்கும் என் புள்ளைக்கும் நடுவுல உ... உறவு எப்படிம்மா?" ஒரு வழியாய் கேட்க அவர் கேள்வியில் அதிர்ந்தவள்

"ஏன் அத்தை ஏன் இப்படிக் கேட்குறீங்க?"

"என் புள்ளை உன்னோட சந்தோசமா இருக்கானாம்மா?"

"ஓம் அத்தை அவர் நல்லா சந்தோசமாத்தான் இருக்காரு அதோட என்னையும் நல்லத்தான் வச்சிருக்காரு ஆனால் ஏன் திடீரென்று இந்தக் கேள்வி அதான் எனக்கு விளங்கல்ல"

"அம்மாடி என் புள்ளைக்கு கல்யாணம் கட்ட விருப்பமில்லை என்று உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன் என் பிடிவாத்துலதான் அவன் கல்யாணத்துக்கு சம்மதிச்சான். பிடிவாதம் என்று சொல்லுறதவிட மிரட்டித்தான் உன்னைக் கட்டி வச்சிருக்கேன். அது தப்புத்தான் ஆனால் எனக்கு வேற வழி தெரியல்ல. என்னோட மிரட்டல்ல ஒரு வழியா ஒத்துக்கிட்டான் இந்த சொத்துக்காகவும் காசுக்காகவும் அவனைக் கட்டிக்க நினைச்சவங்களுக்கிட்ட இருந்து அவனைக் காப்பாத்திட்டேன்" காயத்ரி ஷனாவை வெற்றிப் பார்வை பார்க்க ஷனாவோ அவரை முறைத்துக் கொண்டு நின்றாள் இதனை பார்த்துக் கொண்டிருந்த நயனிக்கு எல்லாம் வெட்ட வெளிச்சமாகியது.
'அப்போ நான் நினச்ச மாதிரி இவங்க காதல் அத்தைக்கு தெரிஞ்சிருக்கு இந்த சொத்துக்காக கல்யாணம் கட்ட நினச்ச இந்த ஷனாவோட எண்ணமும் கேடு கெட்ட குணமும் தெரிஞ்சுதான் அவளை இந்த வீட்டுக்கு மருமகளாக்காம இருந்திருக்காங்க. ஆனால் அத்தை நீங்க இவங்கள பிரிச்சிருக்கலாம் ஆனால் உங்க மகனோட மனசுல இருந்து அவளை எப்படி அத்தை பிரிப்பீங்க உங்களுக்குத் தெரியல்ல அத்தை ஷனாவோட காதல் பொய்யா இருக்கலாம் ஆனால் அவர் இவள உண்மையா நேசிச்சிருக்கார் அதனாலதான் அவரால இந்த ஷனாவ மறக்கவும் முடியாம என்னோட வாழவும் முடியாம என் மேல தேவையில்லாம பழி போட்டுகிட்டு என்னை தள்ளி வச்சிருக்கார். இந்த ஷனா இப்பவும் சுத்தி சுத்தி வரா என்றால் இவர் கொடுக்குற இடந்தானே. அத்தை நீங்க வருத்துப்படாதீங்க இந்த ஷனாவால ஒன்னும் பண்ண முடியாது. அதோட உங்க புள்ள நினைக்குறதும் நடக்காது ஆனால் ஒன்று நிச்சயமா இந்த பந்தத்தை உடைய நான் விடமாட்டேன் அவருக்கு இந்த ஷனாவோட குணத்தை புரிய வச்சு அவர் மனசுலயிருந்தும் அவரோட வாழ்க்கையில இருந்தும் நிரந்தரமா இந்த விஷப்பாம்பை விரட்டுவேன் இது உறுதி.' தனக்குள் சபதமெடுத்தவளை உலுக்கிய காயத்ரி

"என்னம்மா யோசிக்குற"

"ஒன்னுமில்ல அத்தை நீங்க சொல்லுங்கோ"

"எனக்குப் பிறகு அவனை நல்லாப் பொறுப்பா அன்பா பார்த்துக்குற ஒரு நல்லவள அவனுக்கு கட்டி வைக்கனும் என்று நினைச்சேன். நான் நினச்ச மாதிரியே ஒரு தங்கத்தை என் மகனுக்கு கொடுத்திருக்கேன் அந்த சந்தோசம் எனக்குப் போதும்"

"யாரு இவளா? ஏன் அத்தை நான் காசுக்குத்தான் என் அத்தானை கட்டிக்க நினச்சேன் என்றுதானே எங்களப் பிரிச்சீங்க அப்போ இவ மட்டும் ஒழுங்கா இவளும் சொத்துக்கும் காசுக்கும் சொகுசு வாழ்க்கைக்கும்தான் கட்டிக்கிட்டா." கணவனின் அதே வார்த்தைகளை ஷனாவிடம் கேட்ட பொழுது அவள் துடித்துப் போனாள். 'தங்களுக்குள் நடப்பெதெல்லாம் இவளுக்கு தெரியுதென்றால் அவர்தானே சொல்லனும். அப்போ எல்லாமே இவங்களோட பிளான்தானா இல்லாத பொல்லாத பழியைப் போட்டு அதை அத்தையையும் நம்ப வச்சுட்டு என்னை அவரோட வாழ்க்கையில இருந்து விலக்கிட்டு இவளைக் கட்டிக்க நினைக்கிறாரா?' அவள் உள்ளூரக் கலங்க

"சரி அத்தை இவ நல்லவளாவே இருக்கட்டும் இவள எதுக்காக கூப்பிட்டீங்களோ அதை இன்னும் நீங்க கேட்கல்லையே முதல்ல அது என்ன என்று தெரிஞ்சுக்கோங்க பிறகு என்னுல குத்தம் புடிக்கலாம்" நயனி கேள்வியாய் காயத்ரியை நோக்க

"அது வந்து நயனி நீங்க சந்தோசமாத்தான் இருக்கீங்க உங்க உறவும் நல்லாயிருக்கென்று சொல்லுறாய் அப்படியென்றால் ஏன்ம்மா உங்க படுக்கை மட்டும் தனியா இருக்கு" அவரின் கேள்வியில் அதிர்ந்தவள் உடனே தன்னை மீட்டெடுத்து

"அத்தை அது வந்து நான் சுத்தமில்லாம இருக்கேன் அந்த நாட்கள்ல எனக்கு கடும் கஷ்டமாயிடும் அதானால நான் எப்பவும் அந்த நேரத்துல பெட்டெல்லாம் யூஸ் பண்ணிக்க மாட்டேன் நிலத்துல விரிப்பை விரிச்சு படுத்துக்குவேன். அதுவும் முதல் நாள் வேற அதான் கொஞ்சம் கூட நேரமும் தூங்கிட்டேன் மத்தப்படி ஒன்னுமில்ல. அது சரி அத்தை எங்க படுக்க தனியா இருக்குன்னு உங்ககிட்ட யாரு சொன்னாங்க என்று தெரிஞ்சுக்கலாமா?"

"இதோ நிக்குறாளே இந்த ஷனாதான்"
'ஓ அப்போ இதையும் சொல்லியாச்சா' நயனியின் உள்ளம் வலித்தது

"என்ன ஷனா இது, தேவையில்லாத கதையெல்லாம் கதைச்சிருக்கீங்க அதோட எங்க ரூமுக்கு எப்போ வந்தீங்க? அதுவும் இவ்வளவு காலையில இது என்ன பழக்கம்"

"ஏய் ஷனா ஒரு நிமிஷத்துல கதி கலங்க வச்சுட்டாயே. அதுசரி புருஷன் பொண்டாட்டி இருக்குற ரூமுக்குள்ள உனக்கென்ன அலுவல் நீ எதுக்காக அவங்க ரூமுக்கு போன."

"என் அத்தானைப் பார்க்க"

"வெட்கமாயில்லையா உனக்கு. ஒரு ஆம்பளப்பிள்ளட ரூமுக்கு தனியாப் போறதே தப்பு இதுல புருஷன் பொண்டாட்டி இருக்குறப்போ அதுவும் விடியக் காலையிலே போயிருக்க அறிவு வேணாம் இதுக்குத்தான் பாட்டிக்கி உடம்பு சரிய்யில்ல நான் கூட இருக்கப் போறேன் என்று இங்க தங்கினாயா? பாட்டிய கண்ணுங்கருத்துமா நயனி பார்த்துகிட்டதையும் தடுத்துட்டு இங்க வந்து உட்கார்ந்துகிட்டு இந்த வேலையத்தான் பண்ணுறாயா? சசியோட மகளா மட்டும் வாரதென்றால் வா இல்லென்றால் இந்தப் பக்கமே வராதே. என்ன விளங்கிட்டா. இங்கப்பார் இதுவே கடைசியா இருக்கட்டும் இதுக்கு மேல ஏதாவது செஞ்ச தொலச்சிடுவேன்" கோபமாக கத்திய காயத்ரியை முறைத்துப் பார்த்தவள்

"என்னையா தொலச்சிடுவேன் என்று சொன்னீங்க நீங்க கொண்டு வந்த இந்த ஊருல இல்லாத மருமகளை உங்க மகன் கூட வாழவிடமாட்டேன் அவளாவே இந்த வாழ்க்கையையும் என் அத்தானையும் விட்டுப் போகவப்பேன் என் அத்தான் வாயாலே அதைச் சொல்லவும் வைப்பேன் இது நடக்குதா இல்லையா என்று பாருங்கோ"

"இப்பதான் இவ்வளவு சொல்லுறேன் திரும்பயும் அதே சொல்லுற திமிரு புடிச்சவளே. குரைக்குற நாய் கடிக்காது சரிதான் போ இப்பவும் சொல்லுறேன் உன்னால முடிஞ்சத செய்" அவரின் வார்த்தையில் கோபமாக ஷனா அங்கிருந்து செல்ல நயனிடம் திரும்பியவர்

"நயனி அவ சொல்லுறதெல்லாம் கணக்கெடுக்காதே அவளுக்கு ஆதி கிடைக்காத கோபத்துல கத்திட்டுப் போறா அவ்வளவுதான் அதைவிடும்மா உண்மையிலே உங்களுக்குள்ள எல்லாம் நல்லம்தானே"

"ஓம் அத்தை நீங்க ஒன்னும் யோசிக்காதீங்க அவர் என்னை கடும் நல்லா வச்சிருக்கார் நான் கடும் சந்தோசமாத்தான் அத்தை இருக்கேன். நீங்களே பார்க்குறீங்கல்ல அதுக்குப் பிறகும் இந்த கேள்வி தேவையா? அந்த ஷனா ஒராள் என்று அவ கதைய நம்பிக்கிட்டு ஏன் அத்தை சும்மா தேவையில்லாம கவலைப்படுறீங்க."

"அது சரிம்மா இந்த லூசு காலையில டென்ஷன் படுத்திடுச்சு இரும்மா டீ போட்டுத்தாரேன் ஆதி எங்க?" கேட்டுக் கொண்டிருக்கும் போதே

"தாரா எனக்கும் டீ எடுத்துட்டு நம்ம ரூமுக்கு வா" ஆதித்யன் மேலிருந்து குரல் கொடுக்க காண்பது கனவா நனவா என்பது தெரியாமல் நயனி திகைத்து நிற்க காயத்ரியோ மகன் மருமகளுடன் நன்றாகத்தான் இருக்கிறான் என்று பூரிப்படைந்தார்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇❤

 
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 24


ஆதி கூப்பிட்டுட்டு போறான் நீ்என்னமோ காணதைக் கண்டது போல திகச்சு நிக்குற என்னம்மா சரி சரி நான் இப்பவே டீ போட்டுத்தாரேன் எடுத்துட்டுப் போம்மா" மாமியாரின் கேள்வியில் தன்னை சுதாகருத்தவள்

"ஐயோ அதெல்லாம் ஒன்னுமில்ல. அத்தை நீங்க போங்க நானே டீ போட்டு எடுத்துட்டுப் போறேன்" என்றவள் தனக்கும் அவனுக்குமான தேநீரை தயாரித்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றவளை கேள்வியாய் எதிர்கொண்டான் ஆதித்யன். இப்பொழுதெல்லாம் ஆதி நயனியுடன் கோபம் கொள்வதில்லை கடுகடுப்பதுமில்லை தேவைக்காக மட்டும் பேசுவான் அவனின் இந்த சின்ன மாற்றத்தை அவள் கண்டு கொள்ளவுமில்லை. அப்பொழுதே அவள் அதைக் கண்டு கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அவளுக்கு தேவையற்ற எண்ணங்களும் வந்திருக்காது அவனைப் பிரிந்து செல்ல முடிவும் எடுத்திருக்க மாட்டாள்.

"என்னாச்சு கீழ ஒரே சத்தமா இருந்துச்சு என்ன விசயம்"

"ஒன்னுமில்ல"

"என்ன ஒன்னுமில்ல அம்மா கொஞ்சம் சூடா கதைச்ச மாதிரி இருந்துச்சு என்ன என்றுதான் சொல்லேன்"

"அதைத் தெரிஞ்சுட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க?"

"என்ன ஒரு கேள்வி கேட்டதுக்கு ஏட்டிக்கு போட்டியா கதைச்சிட்டிருக்க விசயம் என்ன என்று சொல்லப்போறாயா இல்லையா?"

"ஷனாக்கும் அத்தைக்குமிடையில சண்டையாயிடுச்சு அதான் அத்தை ஷனாவ ஏசிட்டிருந்தா"

"எதனால சண்டை அம்மா எதுக்காக அவளுக்கு ஏசுறாங்க?" 'ஓ... அவளை ஏசினா சேருக்கு வலிக்குதாக்கும்' அவள் அமைதியாக இருக்க

"உன்கிட்டதான் கேட்குறேன்"

"தேவையில்லாத விஷயத்துல மூக்கை நுழச்சா அப்படித்தான்"

"ஆனால் அம்மா உன்னோடதானே ஏதோ கதைச்சிட்டிருந்த மாதிரி இருந்துச்சு அங்க ஷனா இல்லையே"

"ஓ.... நீங்க கீழ வந்தீங்களா? அப்போ எல்லாத்தையும் பார்த்துட்டுத்தானா என்கிட்ட கேட்டுட்டிருக்கீங்க?"

"அப்படியில்ல அவசரமா மெயில் பண்ண வேண்டிய ஒரு பைல் அப்பா ரூம்ல இருக்கு அதை எடுக்கத்தான் வந்தேன். என்னமோ பிரச்சனை ஒன்னு ஓடிட்டிருக்குன்னு விளங்கிச்சு ஆனால் நின்னு என்ன என்று கேட்க எனக்குத்தான் நேரமில்லை அதுக்காகத் தான் உனகிட்ட கேட்குறேன் இப்பவாவது சொல்லும்மா என்னதான் நடந்துச்சு?"

"ம்..... அவங்க மகன் அதான் நீங்க என்னை சந்தோசமா வச்சிருக்கீங்களா என்று கேட்குறாங்க?"

"ஏன் இந்தக் கேள்வி என்னாச்சு நீ ஏதாவது சந்தேகம் வார மாதிரி நடந்துகிட்டாயா?"

"அவங்க சந்தேகத்துக்கு நான் என்ன பண்ண முடியும்"

"அதுக்கெதுக்கு கோபமா கேட்கனும்?"

"ஓ... அதுவா முதல்ல அவங்க கோபப்பட்டது என்னோட இல்லை ஷனாவுலதான். நம்ம ரூம்ல படுக்கை தனியாயிருக்காம் அப்போ எப்படி சந்தோசமா இருக்கீங்க என்று கேட்குறாங்க?"

"என்ன இது எப்படி அவங்களுக்குத் தெரியும். இந்த அம்மாக்கு எதுக்கு தேவைக்கில்லாத ஆராய்ச்சி சரி நீ என்ன சொன்ன"

"அது உங்க அன்பும் ஆசையுமான உங்களோட ஷனா சொரி சொரி விக்‌ஷ் தான் சொன்னா நம்ம ரூமுல நாம எப்படிப் படுத்திருக்கோம் என்று அவளுக்கெப்படித் தெரியும் உங்க ஆசை கா... விக்‌ஷூகிட்ட நீங்கதான் சொன்னீங்களா?"

"நீ என்ன லூசா நான் ஏன் அவளுக்கிட்ட போய் சொல்லனும்"

"நீங்க சொல்லாமலா நம்ம தனித் தனியா படுக்குறது அவளுக்குத் தெரியும்"

"நான் ஒன்றும் அவகிட்ட சொல்லல்ல. அம்மாதான் எப்படியோ தெரிஞ்சுக்கிட்டிருக்காங்க. நான் உனகிட்ட படிச்சுப் படிச்சு சொன்னேன் அம்மாக்காகத் தான் எல்லாம் கவனமா இருன்னு. அவங்களப் பொறுத்தவரை நீ தங்கமான மருமகள் நாம சந்தோசமா இருக்கமா என்று சந்தேகம் போல அவங்களுக்கு நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்தானே அது தப்பில்லையே"

"அவங்களுக்கு தெரியல்ல போல காதலைப் பிரிச்சு கல்யாணம் பண்ணி வச்சவங்க இதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாதுன்னு"

"என்ன உளர்ர யார்ர காதலை யாரு பிரிச்சா?" காதல், பிரிவு என்றதில் தடுமாறியவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு கேட்க அவன் தடுமாற்றம் அவள் கண்களுக்கு தப்பவில்லை.

"உங்க காதலைத் தான், உங்கம்மாதான். பிரிச்சுத்தானே துளியும் விருப்பமில்லாத உங்களை என் தலையில கட்டிருக்காங்க. அவங்களுக்கு சந்தேகத்தை நாம வர வைக்கத் தேவையே இல்லை அவங்களுக்கு அது எப்பவும் இருந்துகிட்டே இருக்கும்."

"நீ என்ன லூசா? என் காதலை அம்மா பிரிச்சாவா கிறுக்குத்தனமா கதைக்காம விசயத்தைச் சொல்லு"

"நீங்களும் ஷனாவும் காதலிக்கல்ல ஒன்னா வாழல்ல....." என ஷனா தன்னிடம் கூறிய காதல் கதையை அவனிடம் கூற அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

"எங்கம்மாதான் எனகிட்ட வந்து விக்‌ஷ கட்டிக்கிறாயா என்று கேட்டாங்க. நான் முடியாதென்று ஒத்த வார்த்தையில மறுத்துட்டேன். நீ என்னடா என்றா மாத்தி சொல்லிட்டிருக்க. அவ உன்கிட்ட வந்து ஏன் அப்படிச் சொன்னா என்று தெரியல்லை. ஒருவேளை அவளுக்கு அந்த மாதிரி எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால் விக்‌ஷ் எனக்கு தங்கச்சி மாதிரி அவளை எப்படி நான் காதலிக்க முடியும் இல்லை கட்டிக்கத்தான் முடியும். அபடி ஒரு எண்ணம் எனக்கு இல்லவே இல்லை நீ என்னை தாராளமா நம்பலாம்" அவன் பேச்சில் உண்மை இருப்பதை புரிந்து கொண்டவள் தன் மாமியார் தன்னிடம் கூறிய அனைத்தும் உண்மை என்பதையும் உணர்ந்தாள். அவனுடைய அந்த வார்த்தைகளில் அவளின் கணத்த மனது அமைதி கண்டது.

"தங்கச்சி மாதிரி என்று சொன்னா மட்டும் போதாது அதுக்கேத்தாப்போல நடந்துக்கவும் வேணும் அப்பதானே நம்பிக்கை வரும். ஒருத்தி சரியான எண்ணத்துல நெருங்குறாளா இல்லையா்என்று கூட தெரியல்ல நீங்கெல்லாம் தொழில் வச்சு நடத்துறீங்க. பார்த்துங்க எவனாவது மொளகா அரச்சிடப்போறான்."

"அவ்வளவு மடையனெல்லாம் இல்லை இந்த ஷனாவோட பிரச்சனைய இன்றைக்கே முடிச்சுவக்கிறேன் அதவிடு அம்மாவோட கேள்விக்கு நீ என்ன பதில் சொன்ன" ஆவலே உருவாக்க் கேட்டவனிடம்

"ஆ... உண்மையைச் சொன்னேன்."

"என்ன உண்மை?"அவனின் அடுத்த கேள்விக்கு அவள் அங்கு இல்லை.

''அடிப்பாவி அதுக்குள்ள போயாச்சா ஒருவேள இவ வடிவேலுக்கு ப்ரண்டா இருந்திருப்பாளோ" வாய் விட்டே புலம்பியவன் தனக்குள் சிரித்துக் கொண்டான் தன் மாற்றத்தை எண்ணி

அன்றும் ஷனாவே காலை உணவை பரிமாற அதைத் தடுத்த ஆதித்யன்

"தாரா இங்க வா இது உன்னோட வேலை என்று உனக்குத் தெரியாதா வீட்டுக்கு வந்த விருந்தாளிய வச்சு செய்விக்குற இது என்ன பழக்கம்"

"ஏன் ஆதித்தான் நான் உங்களுக்கு செய்யக் கூடாதா?"

"ஏன் கூடாது செய்யலாம் அது உன் வீட்டுக்கு நாங்க விருந்துக்கு வரப்போ செய் உன்னை யாரு தடுத்தா இது அவளோட வீடு இது அவளுக்கான அதாவது என் மனைவிக்கான உரிமை அதுல நீ இல்ல யாரும் தலையிடக் கூடாது"
அவனின் வார்த்தைகளில் நயனியும் காயத்ரியும் அகமகிழ்ந்து போக ஷனாவோ கோபமானாள் இருந்தும் அவனருகிலே அமர்ந்து விடாப்பிடியாக அவனுக்குப் பரிமாறத் தொடங்க அதுவரை அமைதியாக அவளுக்குப் புரியும் படி சொல்லிக் கொண்டிருந்த
ஆதித்யன் அவளின் செயல் எல்லை மீறுவதையும் நயனியுடன் போட்டிக்கு நிற்பதையும் ஒரு மனைவிக்கான உரிமைகளை எடுத்துக் கொள்வதையும் கண்டவனுக்கு எல்லையில்லாக் கோபம் வந்தது. அம்மாவினதும் அக்காவினதும் வார்த்தைகள் அவன் காதில் எதிரொலித்தன. கைகளை உதறிக் கொண்டு எழுந்தவன்

"ஏய் ஷனா உனக்கு அறிவில்ல கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிட்டிருக்கேன் திரும்பத் திரும்ப அதையே செய்யுற. நீ பண்ணின தப்புக்கு நாலு அற விட்டு இப்பவே உன் பெட்டி படுக்கையோட இந்த வீட்டை விட்டு துரத்தியிருக்கனும் அதைச் செய்யாம நம்ம அத்தையோட மகள் என்று பாவம் பார்த்தா என்ன ஓவரா பண்ணிட்டிருக்க நான் உன்கூட புருஷனா வாழ்ந்தேன்னு தாராகிட்ட சொல்லிருக்க அசிங்கமா இல்ல உனக்கு அது இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்கம்மா அப்படி என்னை வளர்க்கல்ல என்ன விளங்கிட்டா சீச்சீ உன்னப் பார்க்கவே அருவருப்பா இருக்கு. இங்கப்பார் சசி அத்தையோட மகளா மட்டும் இங்க வாரதா இருந்தா வா இல்ல இந்தப் பக்கமே தலவச்சுப் படுத்துடாத" என்றவன் அலுவலகத்திற்குப் புறப்பட்டுவிட்டான் அதிர்ந்து நின்றவளிடம் வந்த நயனியும் காயத்ரியும்

"என்னம்மா இது போதுமா இல்ல....." காயத்ரி ராகமாய் இழுக்க

"யாரை வீட்ட விட்டு துரத்துறேன் என்று சொன்ன இப்ப விளங்கிட்டா இந்த வீட்ட விட்டும் அவரோட வாழ்க்கைய விட்டும் யாரு போகனும்மென்று" அவமானம் தாங்காமல் அன்றே தன் பெட்டி படுக்கையைக் கட்டிவிட்டாள்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇

 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom